சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Pentagon plans US-backed war against Syria

சிரியாவிற்கு எதிரான அமெரிக்க ஆதரவு கொண்ட போருக்கு பென்டகன் திட்டமிடுகிறது

By Chris Marsden 
10 February 2012

use this version to print | Send feedback

சிரியாவில் இராணுவத் தலையீடு ஒன்றிற்கான திட்டங்களைப் பென்டகன் தயாரித்துள்ளது.

துருக்கி, வளைகுடா நாடுகள் மற்றும் நேட்டோ சக்திகளுடன் ஒருங்கிணைந்து ஒரு இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் முதல் தடவையாக அத்தகைய திட்டங்கள் உள்ளன என்றும் உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பென்டகன் மத்திய கட்டளையகத்தால் உள் பரிசீலனை என்று விவரிக்கப்படும் இத்திட்டம், ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளை மாளிகை இன்னும் ஒரு இராஜதந்திர தீர்வைக் காண முற்படுகிறது என்று பாசாங்கு செய்வதை அனுமதிக்கிறது.

இது மிகவும் முக்கியம். ஏனெனில் இராணுவத் தலையீடு பல மத்திய கிழக்கு உதவியாளர்களால் நடத்தப்பட வேண்டும். அவற்றிற்கு அமெரிக்காவும் நேட்டோவும் பின் விமானப்படை மூலம் ஆதரவு கொடுக்கும். துருக்கியும், சவுதி அரேபியா மற்றும் கட்டாரின் தலைமயில் உள்ள அரபு லீக் நாடுகளும், அமெரிக்காவின் கைக்கூலிகள் என்று தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே அவர்கள் இதை மறுப்பது அமெரிக்கா அதில் முற்றாக  ஈடுபட்டிருப்பதை மறைப்பதற்கு தேவையாகும்.

 

பைனான்சியல் டைம்ஸ், பெப்ருவரி 6ம் திகதிப் பதிப்பில் அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் கொள்கைத் திட்ட முன்னாள் இயக்குனரான ஆன் மேரி சுலோட்டர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் சுன்னி வணிக வர்க்கத்தின் விசுவாசங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ந்த இராஜதந்திர முயற்சிகளுக்கு... இன்னும் சற்று அவகாசம் தேவைப்படுகிறது. என்று வாதிட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு லிபியாவிற்கு எதிரான போரில் இருந்ததைப் போலவே, குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு என்பது இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த மேற்கோளிடப்படும்.  ஆனால் இதன் உண்மையான நோக்கம் வாஷிங்டனுக்கு கட்டுப்பட்ட, வளைகுடா நாடுகளுடன் நட்பு கொண்ட, ஈரானுக்கு எதிரான போக்கை உடைய ஒரு சுன்னி அரசாங்கத்தை நிறுவுவதாகும். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப்பிடம் வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர், சிரியாவில் உள்ள நெருக்கடியை சர்வதே சமூகம் இராணுவமயப்படுத்தும் கட்டாயம் ஏற்படலாம், மேலும் வாஷிங்டனில் விவாதம் இப்பொழுது இராஜதந்திர முறையில் இருந்து நகர்ந்துவிட்டது என்று கூறினார்.

 

வெள்ளை மாளிகையின் செய்தி ஊடகச் செயலர் ஜே காமே, சிரிய மக்களுக்கு மனிதாபிமான உதவி கொடுப்பது பற்றி கவனிக்கிறோம், சிறிது காலமாகவே இது பற்றிய எண்ணம் உள்ளது என்றார். உதவியளிக்கும் திட்டம் அல்லது ஒரு இடைப்பட்ட பகுதியை நிறுவும் திட்டம் என்பது உதவியளிக்கும் வாகனவரிசைகள் அல்லது ஆபத்திற்குட்படக்கூடிய குடிமக்களை பாதுகாப்பதற்கு இராணுவரீதியான பரிமாணத்தை பெறும் என்று டெலிகிராப் கூறியுள்ளது.

 

முக்கிய அமெரிக்க அரசியல் பிரமுகர்களும் பகிரங்கமாக சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆயுதம் கொடுக்கப்பட வெண்டும் என்று கூறியுள்ளனர்.  துருக்கியில் நிலைகொண்டுள்ள இந்த ஒரு பிரத்தியேகமான சுன்னி படை அங்காரா, ரியத் மற்றும் தோஹாவின் ஆதரவையும், நிதியுதவியையும் கொண்டுள்ளது. ஜோ லிபர்மன், ஜோன் மக்கெயின் மற்றும் லிண்சே கிரகாம் ஆகியோர் அக்கோரிக்கையில் அடங்கியுள்ளனர்.

இப்பிரச்சினை இந்த வாரம் வாஷிங்டனில் சுதந்திர சிரிய இராணுவத்தின் போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் ஷேக் ஜுகிர் அபாசியுடன் விவாதிக்கப்பட்டது. அவர் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு சிந்தனைக்குழு ஒன்றுடன் புதன் அன்று ஒரு வீடியோ மாநாட்டில் பங்கு பெற்றார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அரபு லீக் ஆகியவை ஏற்கனவே ஐ.நா.வின் வடிவமைப்பிற்கு வெளியே சிரியாவின் நண்பர்கள் கூட்டணி என்று செயல்பட்டுவருகின்றர். இது லிபிய மாதிரியிலான தலையீடு பற்றி ரஷ்யா, சீனா எழுப்பியுள்ள எதிர்ப்பைக் கடந்து செல்லும் உத்தியாகும்.

கட்டாரும் சவுதி அரேபியாவும் சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆயுதம் வழங்குகின்றனர். மேலும் லிபியாவில் அனுப்பியதுபோல் களத்தில் தங்கள் இராணுவப் பிரிவுகளையும் ஆலோசகர்ளையும் அனுப்பியுள்ளன என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை வலைத் தளமான Debka-File படி, பிரிட்டிஷ் மற்றும் கட்டாரி சிறப்புப் படைப்பிரிவுகள் ஏற்கனவே டமாஸ்கஸில் இருந்து 162 க.மீ. மட்டுமே தொலைவில் உள்ள சிரிய நகரான ஹோம்ஸில் இரகசியமாகச் செயல்படுகின்றன... இரு வெளிநாட்டுப் பிரிவுகள் வடக்கு ஹோம்ஸ் மாவட்டமான கால்தியாவில், கிழக்கே பாப் அம்ரோவில், வடக்கே பாப் டெரிப் மற்றும் ரஸ்டான் இல் நான்கு செயற்பாட்டு மையங்களை நிறுவியுள்ளதாக நம் ஆதாரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட கால் மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

ஆனால் வளைகுடா நாடுகள் அசாத் ஆட்சியைக் கவிழ்க்க போதுமான இராணுவபலத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கு துருக்கிதான் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பிரித்தானிய மற்றும் கட்டாரி துருப்புக்களின் பிரசன்னம்செவ்வாய்க்கிழமை பெப்ருவரி 7 அன்று அங்காராவில் பாராளுமன்றத்தில் அவர் கொடுத்த புதிய திட்டத்தில் துருக்கியப் பிரதம மந்திரி தயிப் எர்டோகனால் தமக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது என Debka-File தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய-கட்டார் இராணுவப் பிரிவுகள் சிரிய பாதை மூலம் முதலில் வெளிநாட்டுக் காலடியை வைக்கச் செய்தபின் அவருடைய திட்டம் அப்பிரிவுகளின் பாதுகாப்பின்கீழ் ஒரு புதிய துருக்கிய-அரபுப்படையை அங்காரா வழியே ஹோம்ஸிற்கு அனுப்புதலாகும். பின்னர் அவை கூடுதலான எழுச்சிகள் நடக்கும் நகரங்களுக்குச் செல்லும் என்று  Debka-File  குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பான உறைவிடங்கள், மனிதாபிமான உதவிப் பாதைகள் ஆகியவற்றை நிறுவி, அவற்றின் அடிப்படையில் இராணுவத் தலையீட்டை நடத்துவது குறித்து துருக்கி பகிரங்கமாக விவாதிக்கிறது. வெளியுறவு மந்திரி அஹ்மத் டவுடோக்லு இந்த வாரம் வாஷிங்டனுக்கு சென்று சிரிய அகதிகளுக்கு துருக்கியின் கதவுகள் திறந்திருக்கும் என்று கூறிச் சென்றார்.

பெப்ருவரி 9 அன்று New Republic ல் எழுதிய சோனர் ககக்படே, ஒரு நடவடிக்கைக்கு தலைமைதாங்க வாஷிங்டன் தயக்கம் காட்டுவது துருக்கி கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள இடத்தை விட்டுக்கொடுக்கும் ஆசியாக அமையலாம்..... பிராந்திய சக்தி என துருக்கிய, அரபு இராணுவங்களினால் வழிநடத்தப்படும் வரை ஐ.நா. குறிப்பிடும் பாதுகாப்பான உறைவிடங்களை பாதுகாப்பதற்கு ஒரு வான்வழித் தலையீட்டிற்கு துருக்கி ஆதரவு கொடுக்கும். எதிர்ப்பாளர்களுக்கு நிதியளிக்கும் கட்டாரும் சவுதி அரேபியாவும் தங்கள் புதிய நட்பு நாடான அங்காராவுடன் பாதுகாப்பான உறைவிடங்களைக் பாதுகாக்க உழைப்பதில் மகிழ்ச்சி அடையும். வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் அதன் பின்னணியில் இருந்து வெற்றியை உறுதியாக்க செயற்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கலாம் என்று வாதிட்டுள்ளது.

 

ஈரானை தனிமைப்படுத்துதல் என்பது அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளின் வெளிப்படுத்தப்பட்ட நோக்கம் ஆகிவிட்டது; இதற்கு தாராளவாதச் செய்தி ஊடகம், ஈரானிய எதிர்ப்பு உணர்வை மனிதாபிமானம் பற்றிய உயர் பேச்சுக்களுடன் இணைத்து சிரிய மக்களின் விதி பற்றியும் கவலையைக் காட்டும் முறையில் பிரச்சாரத்தை நடத்துகிறது.

 

இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பாதுகாப்புப் படையான மொசாட்டின் இயக்குனராக 1998 முதல் 2002 வரை இருந்தவருமான எப்ரைம் ஹாலெவி, பெப்ருவரி 7ம் திகதி நியூ யோர்க் டைம்ஸில்  சிரியாவை ஈரானின் உயிர்நாடி என்று விவரித்தார்.

 

சிரியாவில் ஈரான் காலடி பதிப்பது தெஹ்ரானில் உள்ள முல்லாக்களுக்குத் தங்கள் பொறுப்பற்ற, வன்முறை நிறைந்த பிராந்தியக் கொள்கைகளை தொடர உதவும்அங்கு அதன் நிலைப்பாடு முடிக்கப்பட வேண்டும்... இது அடையப்பட்டுவிட்டால், பிராந்தியத்தின் முழு சக்திகளின் சமநிலை என்பது பாரிய மாற்றத்தைப் பெறும். என்று அவர் எழுதுகிறார்.

 

நியூ யோர்க் டைம்ஸின் பிரித்தானிய சம ஏடான கார்டியன் இத்தகைய ஈரானிய-எதிர்ப்பு உணர்விற்கு ஒப்புதல் கொடுக்கும் பணியை சைமன் டிஸ்டால் என்பவருக்கு கொடுத்துள்ளது. அவர் எதிர்தரப்பிற்கு ஆதரவாக வெளிநாட்டுத் தலையீடு உள்ளது என்று அசாத் கூறியிருப்பதை ஹில்லாரி கிளின்டன் கேலிப்படுத்திருப்பதைச் சாதகமாக மேற்கோளிட்டுள்ளார்: வருந்தத் தக்கவகையில், முற்றிலும் நியாயப்படுத்தப்படக்கூடியதே என்று கூறி, தீவிரமாக சிரியாவில் ஈடுபட்டுள்ள வெளிச்சக்தி என்பது அமெரிக்காவோ, பிரித்தானியாவோ, பிரான்ஸோ, துருக்கியோ அல்ல. ரஷ்யாவோ சவுதி அரேபியாவோ அல்லது அதன் வளைகுடா நட்பு நாடுகளோ அல்ல. அது ஈரான்தான்இருக்கும் நிலையை தக்க வைத்துக் கொள்ள அது கடுமையாகப் போராடுகிறது.

சிரியாவிற்கு எதிராக ஒரு அமெரிக்க போரின் தீய விளைவுகள் அதன் லிபியத் தலையீட்டை அற்பமாக்கிவிடும். ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு பிரச்சாரத்தில் சிரியா முதல் இலக்காக இருப்பதுடன் அப்பிரச்சாரம் இலக்குக் கொண்டிருப்பது இன்னும் தெளிவாக ரஷ்யா, ஒருவேளை சீனாவைக் கூட என்பதும் தெளிவாக உள்ளது.

கடந்த மாதம் மாஸ்கோ ஒரு விமானந்தாங்கி கப்பல் உட்பட மூன்று போர்க்கப்பல்களை அதன் மத்தியதரைக்கடல் பகுதியில் இருக்கும் ஒரே கடற்படைத் தளமான டார்டஸ் துறைமுகத்திற்கு அனுப்பிவைத்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரசு ஆகியவை ஆதரித்த தலையீட்டிற்கு வழிவகுக்கும் பாதையான அரபு லீக் தீர்மானத்தை தடுக்க, வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை அசாத்துடன் பேச்சுக்களை நடத்த டமாஸ்கஸிற்கு அனுப்பி வைத்தது. லாவ்ரோவுடன் ரஷ்யாவில் வெளி உளவுத்துறை அலுவலகத்தின் தலைவரான மிகைல் பிரட்கோவும் சென்றிருந்தார்.

பிரதம மந்திரி விளாடிமீர் புட்டின் அசாத் அகற்றப்படுவதற்கு அங்கு நடக்கும் எதிர்த்தரப்பிற்கு கொடுக்கப்படும் ஆதரவு என்னும் முயற்சிகளை ரஷ்யாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு நேரடி மேற்குநாடுகளின் அச்சுறுத்தல் என்று தொடர்புபடுத்தி மறுநாள் கூறிய கருத்துக்கள் இன்னும் முக்கியத்துவத்தைக் கொண்டவை. கடந்த தசாப்தத்தில் சர்வதேச விவகாரங்களில் வன்முறைச் கலாச்சாரம் என்பது முன்னணிக்கு வந்துள்ளது. இது கவலையைத்தான் அளிக்கும்.... நம்நாட்டில் இது போன்ற செயல்களை நாம் அனுமதிக்கக்கூடாது. என்றார் அவர்.