சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama budget funds war, repression and Wall Street

போர், அடக்குமுறை மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஒபாமாவின் வரவு-செலவுத் திட்டம் நிதியளிக்கிறது

By Patrick Martin
15 February 2012

use this version to print | Send feedback

திங்களன்று ஒபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ள 3.8 ட்ரில்லியன் டாலர் வரவு-செலவுத் திட்டம் பலவற்றை வெளிப்படுத்தும் ஆவணமாக உள்ளது; வெள்ளை மாளிகை வெளியேற்றும் அரசியல் பிரச்சாரங்களையும், அதன் குடியரசுக் கட்சி எதிரிகள் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகங்கள் தொழிலாளர்களின் மீதான பொதுநலச் செலவுகளைப் பெரிதும் வெட்டும் சுமைகளை மறைக்கும் முயற்சிகளையும் மீறித்தான் இது தெரிகிறது.

வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட பாதி சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு மற்றும் பிற உரிமைகள் திட்டமான உணவு உதவி, மருந்துகள் உதவி ஆகியவற்றிற்கு உள்ளன; இப்பிரிவில் கூட்டாட்சி அரசாங்கம் சட்டப்படி தகுதியுடையவர்களுக்கு நலன்களுக்காகப் பணம் அளிக்கும் கட்டாயத்தில் உள்ளது. இப்பட்டியலிலுள்ள எண்ணிக்கை பரந்த வேலையின்மை மற்றும் அமெரிக்க, உலக முதலாளித்துவ நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள இழிநிலையினால் பெரிதும் வளர்ந்துவிட்டது.

மற்றொரு 500 பில்லியன் டாலர் கூட்டாட்சிக் கடனுக்கான வட்டிப்பணம் உள்ளது; இதில் பெரும்பாலானது முக்கிய வங்கிகள் மற்றும் செல்வந்தர்களுக்கும் செல்லும்; இதுதான் நிதியப் பிரபுத்துவத்திற்கு முக்கிய வருமான ஆதாரங்களில் ஒரு கூறுபாடாகும். ஒவ்வொரு ஆண்டும் பெரும் செல்வந்தர்களுக்குக் கொடுக்கப்படும் இந்தக் கப்பத் தொகை பற்றி செய்தி ஊடகமோ, வெள்ளை மாளிகையோ அதிகம் கூறாது; ஆனால் மொத்த வட்டித் தொகையோ பெரும்பாலான கூட்டாட்சித் துறைகளின் செலவுகளை அற்பமாக்கிவிடும்.

வரவு-செலவுத் திட்டத்தில் எஞ்சியிருக்கும் மூன்றாம் பகுதி விருப்புரிமைச் செலவு ஆகும்; இது காங்கிரசில் உரிய ஒதுக்கீட்டு வழிவகையைக் கடக்க வேண்டும். வரவு-செலவுத் திட்டத்தில் இப்பிரிவின் பரந்த கோடிட்டுக்காட்டுதல்கள் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரசில் இருக்கும் குடியரசுக் கட்சியினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்ட வரவு-செலவுத் திட்டம் உடன்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இரு கட்சி உடன்பாட்டின்படி உள்நாட்டு விருப்புரிமைச் செலவு 2013 நிதியாண்டிற்கு, 2012 நிதியாண்டுச் செலவோடு ஒப்பிடும்போது 40 பில்லியன் டாலர் குறைவாக இருக்கும் (ஆனால் கூட்டாட்சி அரசாங்கத்தின் பென்டகன் மற்றும் பிற தேசியப் பாதுகாப்பு/பொலிஸ் செயற்பாடுகளுடைய செலவுகள் விலக்களிக்கப்படும்.)

வரவு-செலவுத் திட்ட ஆவணம் ஒபாமா நிர்வாகத்தின் விருப்பமான 40 பில்லியன் டாலர் வெட்டுக்கள் உள்நாட்டுச் செலவுகளில் பல கூட்டாட்சித் துறைகள், திட்டங்கள் இவற்றிற்கு இடையே பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கிறது. இதுதான் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதிநிதிகள் மன்றம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செனட் ஆகியவற்றுடன் விவாதிக்கப்படுவதற்கு எஞ்சியுள்ளது.

வரவு-செலவுத் திட்டம் வெள்ளை மாளிகையால் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் செய்தி ஊடகத்தில் வந்துள்ளது ஒபாமா நிர்வாகம் செய்யும் அரசியல் விருப்பங்களின் தன்மையை அறிந்து கொள்வது கடினமாக இருக்க வேண்டும் என்ற வடிவமைப்பிலேயே வேண்டும் என அமைக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது. இராணுவம், உளவுத்துறை, உள்நாட்டு அடக்குமுறை, பிற செயற்பாடுகள் என்று இரு பரந்த பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால் வரவு-செலவுத் திட்டத்தில் இன்னும் புரிந்துகொள்ளக்கூடிய வசதி இருந்திருக்கும்.

அமெரிக்க முதலாளித்துவ அரசின் அடிப்படைப் பங்கிற்கும் முந்தைய வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நிறுவப்பட்ட மற்ற உள்நாட்டுத் திட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள இது ஒரு கடின வழிவகையைத் தருகிறது; மேலும் அரசாங்கத்தின் அடக்குமுறைப் பங்கை மறைக்கவும் மக்களிடையே போலித் தோற்றங்களை வளர்க்கவும் இது உதவுகிறது.

அரசாங்கத்தின் இராணுவ, அடக்குமுறைச் செயற்பாடுகள் 2013 வரவு-செலவுத் திட்டத்தில் விருப்புரிமை நிதியத்தில் 901.8 பில்லியன் டாலரை கொண்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு 525.4 பில்லியன் டாலர், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற அயல்நாட்டு அவசரத்தேவைகளுக்காகஇராணுவ நிதி 88.5 பில்லியன் டாலர், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்காக 39.3 பில்லியன் டாலர், சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உட்பட உளவுத்துறை அமைப்புக்களுக்காக 52.6 பில்லியன் டாலர், எரிசக்தித் துறை (பெரும்பாலும் அணுவாயுதங்களுக்க) 27.2 பில்லியன் டாலர், அரச அலுவலகத்திற்கு 54.3 பில்லியன் டாலர், நீதித்துறைக்கு (எப்.பி.ஐ., கூட்டாட்சிச் சிறைகள் உட்பட) 36.5 பில்லியன் டாலர், கருவூலத்துறைக்கு 14 பில்லியன் டாலர், மூத்த இராணுவ படையினர்கள் பிரிவிற்கு 64 பில்லியன் டாலர் ஆகியவை இதில் அடங்கும்.

பாதுகாப்புத்துறை/உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இல்லாத விருப்புரிமைச் செலவினம் 333.5 பில்லியன் டாலர் என 2013 வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளது: சுகாதாரம், மனிதப் பணிகள் 76.4 பில்லியன் டாலர், கல்வித்துறை 69.8 பில்லியன் டாலர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு 8.3 பில்லியன் டாலர், வீடுகள், புறநகர் வளர்ச்சித் துறை 35.3 பில்லியன் டாலர், உள்துறை அமைச்சரகம் 11.4 பில்லியன் டாலர், தொழிலாளர் துறை 12 பில்லியன் டாலர், தேசிய விமானம், வான்வெளி நிர்வாகம் 17.7 பில்லியன் டாலர், போக்குவரத்துத் துறை 74 பில்லியன் டாலர், வேளாண்மைத்துறை 23 பில்லியன் டாலர், வணிகத்துறை 8 பில்லியன் டாலர், தேசிய விஞ்ஞான அறக்கட்டளை 7.4 பில்லியன் டாலர் ஆகியவை இதில் அடங்கும்.

இச்சுருக்கம் நிரூபிப்பதுபோல், உளவுத்துறை அமைப்புக்கள் மட்டும் உள்நாட்டு சமூக வேவைகளை அளிக்கும் துறைகளில் மூன்றைத் தவிர மற்றவை அனைத்தின் மொத்தச் செலவுகளைப் போல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. அயல்நாட்டு அவசர தேவை இராணுவச் செலவு என்பது மற்ற பாதுகாப்பு அற்ற அமைப்புகளுக்கான விருப்புரிமைச் செலவுகளைவிட அதிகம் ஆகும்.

இப்படிக் கிட்டத்தட்ட 3-1 என்ற விகிதத்தில் விருப்புரிமைச் செலவுகள் இராணுவ-பொலிஸ் கருவிகளுக்கு சமூகப் பணிகளைக் காட்டிலும் அதிகம் என்பது வேறுபாட்டை உண்மையில் குறைத்துக் காட்டுகிறது. சுகாதாரம், கல்வி, வீடுகள் போன்றவற்றிலுள்ள செலவுகளில் அதிகமானவை உண்மையில் பெருநிறுவன நலன்களுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்படும் உதவித்தொகைகள்தான்; அதில் மருந்துத்தயாரிப்பு நிறுவனங்கள், பள்ளிகள் தனியார் மயமாக்கப்படுதலின் செலவுகள், விவசாயத்துறை வணிகங்கள், சுரங்க நிறுவனங்கள், சேரிப்பகுதிகள் மற்றும் டிரக் நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். ஆனால் சாதாரண உழைக்கும் தொழிலாளிக்கு உண்மையில் சேரும் பணம் அதையொட்டிக் குறைந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்காக செலவழிக்கப்படும் பணத்தின் பாதியைவிட அது குறைவாகத்தான் இருக்கும் என்பது உறுதி.

ஒபாமா நிர்வாகம் முக்கியஇராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் 6 பில்லியன் டாலர் வெட்டுக்கள் என்பதை முன்வைக்கிறதுஇது ஆப்கானியப் போர் அல்லது பிற வெளிநாட்டில் நடக்கும் செயல்களை உள்ளடக்கியிராது. இதில் பெரும்பகுதி இராணுவத்தினருக்குக் கொடுக்கப்படும் கூடுதல் சுகாதாரக் காப்பீட்டு நிதியான 4பில்லியன் டாலர்களிலிருந்து வரும்; எனவே உண்மையான இராணுவச் செலவு மதிப்பீட்டில் குறைவு ஏதும் இருக்காது.

உள்நாட்டு சமூகநலப் பணிகளை அளிக்கும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒரு சில பெயரளவு செலவு அதிகரிப்புக்கள் உள்ளன; ஆனால் அவைகள் பெரும்பாலும் பிற்போக்குத்தன அரசியல் நோக்கங்களுக்குத்தான்.

இவ்வகையில், கல்வித்துறை உயரே செல்லுவதற்கான போட்டி என்னும் திட்டத்திற்கு 60 சதவிகிதம் கூடுதல் நிதியைப் பெறுகிறது; இது மாநில அரசாங்கங்களுக்கு கூட்டாட்சி நிதிக்காகப் போட்டியிட ஊக்கம் அளிக்கிறது; அதையொட்டி வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகள் என்று பொதுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான தாக்குதலில் ஆக்கிரோஷமான அணுகுமுறை ஏற்பட்டுள்ளது; இது பள்ளிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதின் மூலம் நடைபெறுகிறது.

மற்றும் ஒரு இணையான உயரே செல்லுவதற்கான போட்டித் திட்டம் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் என்ற வகையில் ஒபாமா மற்றும் ஒரு 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதைத்தவிர ஒரு 8 பில்லியன் டாலர் நிதி, 4பில்லியன் டாலர் கல்வித்துறையில் இருந்தும், 4பில்லியன் டாலர் தொழிலாளர் துறையில் இருந்தும் சமூகக் கல்லூரி பயிற்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்; இவைகள் அமெரிக்க பெருநிறுவனங்களின் ஆணைகளின் பேரில் நடத்தப்படும். இந்நிதியின் சில பிரிவுகள் பிற வேலைப் பயிற்சித் திட்டங்களில் இருந்து மாற்றப்படும்.

வீடுகள் மற்றும் புறநகர் வளர்ச்சித் துறை அதன் திட்டங்களான தேசிய வீட்டுத் தொகுப்பை குறைத்தலை நிர்வகிப்பதற்கு பெறுகிறது; இது துணை முக்கிய அடைமானச் சரிவை அடுத்து வந்துள்ளது; இதில் வீட்டுச் சந்தை நெருக்கடியினால் காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகளை அழிக்கும் முயற்சிகளும் அடங்கும்.

மிக முக்கியமான உள்நாட்டுச் செலவு அதிகரிப்பு சாலைகளுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் உள்ளது; அதற்குக் கணிசமான குடியரசுக் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது; ஏனெனில் பெரும்பாலான நிதி கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் பிற தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கும் செல்லும்; திறமையுடன் டிரக் தொழிலுக்கு இது உதவித் தொகை அளிக்கும். போக்குவரத்து உள்கட்டுமானத் திட்டங்களில் மொத்தம் 50 பில்லியன் டாலர்கள் தேவை என்று ஒபாமா அழைப்புவிடுத்துள்ளார்; இது அமெரிக்க வேலைகள் சட்டம் என்று கடந்த இலையுதிர்காலத்தில் வந்த அவருடைய சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்; இது போக்குவரத்துத்துறையின் வரவு-செலவுத் திட்டத்தில் ஆறாண்டுக்கால 476 பில்லியன் டாலர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

வேளாண்மைத்துறைச் செலவுகள் 700 மில்லியன் டாலர் குறைக்கப்படும்; இது கிட்டத்தட்ட 260 பிராந்திய அலுவகங்கள் கிராமப்புறங்களில் இருப்பவை மூடப்படுவதின் மூலம் நடக்கும்; அதுவோ USDA யின் பெருநிறுவன விவசாய வணிகத்துடன் தொடர்ந்து மறுசார்பு கொண்டிருக்குமே ஒழிய சிறிய விவசாயிகளுடன் அல்ல.  உள்துறை மற்றும் EPA நடத்தும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் திட்டங்களுக்கு செலவுத்தரங்கள் குறைப்பு, சிறிய அளவில்தான் இருக்கும்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்துள்ள மிகக் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்று இன்னும் அதிக ஊதிய உயர்வு இராணுவத்தினருக்கு என்று உள்ளது; கூட்டாட்சி சிவிலிய ஊழியர்களை விட 1.7 சதவிகிதம் அதிகமாக இது இருக்கும். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 0.5 சதவிகிதம்தான் உயர்வு பெறுவர்; அதுவும் மொத்த ஊதிய விகிதங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில். வரவு-செலவுத் திட்டத்தில் 1.2 சதவிகிதம் அதிகரிப்பை கூட்டாட்சித் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு மூன்றாண்டு காலத்திற்கு அளிப்புக்களில் கொடுத்துள்ளதால், இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒரு கையால் கொடுத்து, மறுகையால் திருப்பி எடுத்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்.