சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washingtonn’s crimes against Iran

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் குற்றங்கள்

Peter Symonds
16 January 2012

use this version to print | Send feedback

ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷான் ஜனவரி 11 அன்று கொலைசெய்யப்பட்டது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குற்றம் சார்ந்த தன்மைக்கு மற்றொரு சான்றாகும். ஒபாமா நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ மறுப்புக்கள் இருந்தாலும், இச்செயல் இஸ்ரேல் உளவுத்துறை அமைப்பான மொசாத், அமெரிக்காவுடன் சேர்ந்து நடத்திய செயலின் அனைத்து அடையாளங்களையும் இந்தப் படுகொலை கொண்டுள்ளது.

ஈரானிய ஆட்சி வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதும் அசாதாரண நடவடிக்கையை எடுத்து, இந்தப் பயங்கரவாதச் செயல் CIA இனால் திட்டமிடப்பட்டு, வழிநடாத்தப்பட்டு, ஆதரவழிக்கப்பட்டது என்று அதில் அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட மற்றொரு கடிதம் பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்பான M16 இச்சதித்திட்டத்திற்கு உதவி புரிந்தது எனக் கூறுகிறது.

கடந்த இரு ஆண்டுகளில் கொலைசெய்யப்பட்ட ஈரானிய அணு சக்தி விஞ்ஞானிகளில் ரோஷான் நான்காவது நபராகும்; ஈரானுக்குள் நடத்தப்படும் இரகசிய, ஆனால் அதிகம் மறைக்கப்படாத போரின் ஒரு பகுதி ஆகும் இது. இதில் விளக்கப்படுத்தப்படாத வெடித்தாக்குதல்கள் முக்கிய இராணுவ மற்றும் அணுச்சக்தி நிலையங்களில் நடத்தப்பட்டுள்ளன; தவிரவும் அணுச்சக்தி கருவியை தொற்றுக்கு உட்படுத்திச் சேதப்படுத்தும் வகையில் Stuxnet கணிணி வைரஸ்களும்  பயன்படுத்தப்பட்டன. சமீபத்தியது உட்பட, இப்படுகொலைகளில் பலவற்றில் இதே போன்ற வழிவகைதான் கையாளப்பட்டது அது ஒரு காரின் பக்கப்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றின்மூலம் ஒட்டிக் கொள்ளும் காந்த வெடிகுண்டு ஒட்டப்படும். 

நம்பத்தக்கது அல்ல என்றாலும், ஒபாமா நிர்வாகம் சமீபத்திய படுகொலையில் எத்தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்ற உறுதியான மறுப்பு, ஒரு முக்கியமான சட்ட நோக்கத்திற்கு உதவுகிறது. வெள்ளை மாளிகை அதன் கொலைக்காரத்தன ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல்களை, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இன்னும் மற்ற நாடுகளில் 9/11 க்குப் பின் உடனடியாக காங்கிரஸில் இயற்றப்பட்ட சட்டம் ஒன்று ட்ரோன் தாக்குதலை நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்ததாகக் கூறி நியாயப்படுத்துகிறது. ஈரானிய மக்களைக் கொலை செய்வது, அல்லது மொசாட்டை அவ்வாறு செய்வதற்காக உதவி, உளவுத்துறை உதவி ஆகியவற்றை வழங்குவது என்பவற்றிற்கு அல் குவைதாவிற்கும் தலிபானுக்கும் எதிராக இயற்றப்பட்ட 2001ம் ஆண்டு தீர்மானத்தினால் சட்டபூர்வமாக நியாயப்படுத்தப்படுவது என்பது இயலாத செயல் ஆகும். ரோஷான் மற்றும் பிற விஞ்ஞானிகளைப்  படுகொலை செய்தல் என்பது 1970களில் இயற்றப்பட்ட நிர்வாக ஆணையைத் தெளிவாக மீறுவது ஆகும். அதுதான் உத்தியோகபூர்வமாக படுகொலைகளை செய்வதை உத்தியோகபூர்வமாக தடைக்கு உட்படுத்தி, ஒபாமா நிர்வாகத்தின்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

ஈரானுக்குள் படுகொலை மற்றும் சதிவேலைகளில் அமெரிக்க தொடர்பு இருப்பது அமெரிக்க ஆதரவுடன் ஜூன் 2009ல் பசுமை இயக்க எதிர்ப்புக்கள் என்று அழைக்கப்பட்டவை உச்சக்கட்டத்தில் இருந்தபோது நேடா ஆகா ஸோல்டன் என்னும் இளம்பெண் கொலைசெய்யப்பட்டது குறித்து புதிய வினாக்களை எழுப்புகிறது.  அமெரிக்காவும் சர்வதேச செய்தி ஊடகமும் உடனடியாக ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மனிநெஜாட்டைக் குறைகூறி, மேற்கின் நலன்களுக்கு ஆதரவான ஓர் ஆட்சியை நிறுவும்பொருட்டு பொது மக்கள் ஆதரவைத் தூண்டுவதற்காக பாதிக்கப்பட்டவரை ஒரு தியாகி ஆக்கின. அமெரிக்க அல்லது இஸ்ரேலிய முகவர்களால் நேடா கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்பதும் மிகவும் சாத்தியமான விளக்கமே. அஹ்மதிநெஜட்டின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வெறித்தன செய்தி ஊடகப் பரபரப்பிற்கு கூடுதலாக எரியுட்டிய வகையில் அவருடைய இறப்பு பொருத்தமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு குற்றத்திலும் இருப்பதுபோலவே, அமெரிக்க செய்தி ஊடகம் ஈரானுக்குள் நாசவேலை, கொலை ஆகியவற்றை நியாப்படுத்தும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் ஜனவரி 12ம் திகித வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், ஈரானுக்கு எதிரான விரோதிகள் இரகசிய நடவடிக்கைளை முடுக்கிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது என்ற தலைப்பில், அமெரிக்க உளவுத்துறையில் பொதுவாக தெரிந்திருப்பதை பற்றி பின்வருமாறு தகவல் கொடுத்துள்ளது. அதாவது இஸ்ரேல் கொலைக்கு பொறுப்பு எனவும் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணுச்சக்தி திட்டத்திற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை எடுக்கின்றது என எழுதியது.

இந்த நடவடிக்கைகளில் இருக்கும் குற்றத்தன்மை அல்லது பொறுப்பற்ற தன்மையை டைம்ஸ் குறைகூறவில்லை. மாறாக அவற்றை வெளியுறவுக் கொள்கையின் சட்டபூர்வமான கருவி என ஏற்கிறது. கருத்து ஏதும் குறிப்பிடாமல் ஈரான் பாதுகாப்பு  முன்முயற்சி என்று வாஷிங்டன் அருகிலுள்ள கிழக்கு கொள்கை உயர்கல்விக்கூடத்தின் இயக்குனரான பாட்ரிக் கிளாசனை சேதம் விளைவித்தல் மற்றும் படுகொலை செய்தல் ஆகியவை, உங்களால் முடியும் என்றால், செய்யப்பட வேண்டியவைதான் என்று மேற்கோளிட்டுள்ளது.

இவ்வகையில் டைம்ஸ் திமிர்த்தனமாகப் பாதுகாப்பு அளிப்பதும், கிட்டத்தட்ட முழு நடைமுறைச் செய்தி ஊடகமும் அமெரிக்க படுகொலை ஒரு நெறியான தந்திரோபாயம் என்று கூறுவது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குற்றம் சார்ந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து. மேலும் ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக உரிமைகளைப் பற்றிய உணர்வு அல்லது அர்ப்பணிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டதையும் இது புலப்படுத்துகிறது.

செய்தி ஊடகத்தின் பாசாங்குத்தனத்திற்கு வரம்பே இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க செய்தி ஊடகம் முற்றிலும் ஆதாரமற்ற ஒபாமா நிர்வாகத்தின் கூற்றான ஈரான் ஒருபோதும் இயலாத திட்டமான ஒரு மெக்சிக்கோ நாட்டு போதைப்பொருள் குழுவை சவுதிஅரேபியாவின் வாஷிங்டனில் உள்ள தூதரை அமெரிக்க மண்ணில் கொல்ல வாடகைக்கு அமர்த்தியதாக கூறியது.

 

ரோஷான் படுகொலையைக் குறித்த வர்ணனையை போலவே அதிக அளவில் டைம்ஸ் அதன் குற்றம் சார்ந்த தன்மை குறித்து அதிகம் பேசாமல், அமெரிக்க இலக்குகளை இரகசிய நடவடிக்கைகள் மூலம் அடைவதின் திறமை குறித்து எழுதியுள்ளது. ஈரானுக்கு எதிரான இப் பன்முக இரகசியச் செயற்பாடு, ஒரு போருக்கு மாற்றீடு எனத் தோன்றியது. ஆனால் அதிகபட்சமாக இது ஈரான் யுரேனிய செறிவு செய்வதை நிறுத்திவிடவில்லை, தாமதப்படுத்தியுள்ளது என்று கட்டுரை அறிவிக்கிறது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பெயரிடப்படாத ஆதாரங்களின் அடிப்படையில், ரோஷான் உடைய கார் தெஹ்ரானில் பரபரப்பான நேரத்தில் குண்டுவைத்து மோசாட் கவனத்துடன் திட்டமிட்டுத் தாக்கியது குறித்து புள்ளிபுள்ளியாக சகல தகவல்களையும் நேற்று வெளியிட்டுள்ளது. ஒரு இஸ்ரேலிய ஆதாரத்தின்படி, இக்கொலைகள் ஒரு இராணுவத் தாக்குதலுக்கு முன்னோடி ஆகும். வெறும் மாற்று அல்ல. இதையொட்டி ஈரான் குண்டுத்தாக்குதலுக்குட்பட்டால் அணு நிலையங்களைக் கட்டமைப்பது கடினமாகும் என்று கூறப்படுகிறது.

உண்மையில், உயர்மட்ட அணுச்சக்தி விஞ்ஞானிகளைக் கொலை செய்தல், நிலையங்களை நாசப்படுத்துதல் ஆகியவை ஈரானின் அணுச்சக்தி திட்டங்களை நிறுத்தவோ கணிசமாகத் தடைக்கு உட்படுத்தவோ செய்யாது; பலமுறையும் தெஹ்ரான் அதன் அணுச்சக்தி அமைதியான நோக்கங்களுக்காகத்தான் என்று வலியுறுத்தியுள்ளது. மாறாக, இக்கொலைகள் தெஹ்ரானைப் ஆத்திரமூட்டிவிடும் தன்மையையும் அதையொட்டி போருக்கான போலிக்காரணத்தை அளிக்கவும் ஈரானை இன்னும் அரக்கத்தன்மை உடையதாகச் சித்திரக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

இக்கொலைகள் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஈரானுக்கு எதிராக இராணுவக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரப் போர் தீவிரமடைதல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன. தன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள்மீது நடைமுறையில் தடை என்பதைச் சுமத்தும் வழிவகையில் உள்ளது. இது ஈரானிய பொருளாதாரத்தை சரியச் செய்யும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. சமீபத்தியப் பொருளாதாரத் தடைகள் ஒருதலைப்பட்சமாக சுமத்தப்படுகின்றன, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானம் என்னும் போலிமறைப்புக் கூட இல்லாமல். அமெரிக்கா ஈரானை மிரட்டுவது மட்டும் இல்லாமல், சீனா போல் பொருளாதாரத் தடைகளை எதிர்க்கும் நாடுகளையும் அபராதம்  செலுத்த நேரும் என்று அச்சுறுத்துகிறது.

அதே நேரத்தில், பென்டகன் பாரசீக வளைகுடாவின் மிக அண்மைப்பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி  போர்க்கப்பல்களின் எண்ணிக்கையையும் இரு மடங்கா க்கிவிட்டது. இது ஈரானுக்கு எதிராக பேரழிவு தரும் வான் மற்றும் கடற்படைப் போரை நடத்தும் திறனை அதிகப்படுத்தியுள்ளது.

ரோஷான் கொலைசெய்யப்பட்டுள்ளது, ஈரானிய ஆட்சியை உறுதிகுலைத்து அதற்குப் பதிலாக இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்ட ஒரு மாற்றீட்டு ஆட்சியை நிறுவுவதற்கு எதையும் செய்யும் என்ற உண்மையைத்தான் காட்டுகிறது. மத்திய கிழக்கில் வாஷிங்டனின் கொள்ளைமுறை செயல்கள் அமெரிக்கா அதன் உலகப் பொருளாதார நிலையில் பரந்த முறையில் அழிக்கப்பட்டதால் உந்துதல் பெற்றுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் செய்ததைப் போல், தன்னுடைய முக்கிய போட்டியாளர்களின் பொருளாதார, மூலோபாய நலன்களை இது அமெரிக்கா தன் இராணுவ வலிமையைக் கொண்டு குழிபறிக்க முயல்கிறது.

தெஹ்ரானுக்கு எதிராக சதித் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வெள்ளை மாளிகையில் இருக்கும் தே அரசியல் கும்பல்தான், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பேரழிவிற்கு உட்படுத்துவதற்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் விரிவாக்கம் மற்றும் ஒரு புதிய போர் தோன்றும் ஆபத்து உயர்ந்துள்ளதும், இப்பொழுது உள்நாட்டின் தீவிரமாகியுள்ள வர்க்க அழுத்தங்களில் இருந்து வசதியான அரசியல் திசைதிருப்பவும் உதவும்.

அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எத்தகைய போரையும், இரகசியமானது அல்லது வெளிப்படையானது என்று எதுவானாலும், ஈரானுக்கு எதிராக நடத்துவதை ஒரு சர்வதேச, சோசலிச மூலோபாயத்தின் மூலம், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ முறையை அகற்றும் இயக்கத்தைக் கொண்ட வகையில் எதிர்க்க வேண்டும்; முதலாளித்துவ முறை வாழ்க்கைத்தரங்களை அழிக்கவும் ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்லும் நிலையையும்தான் ஏற்படுத்தும்.