சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The bankruptcy of Kodak

கோடாக்கின் திவால் தன்மை

Joseph Kishore
20 January 2012

use this version to print | Send feedback

வியாழன் காலை ஈஸ்ட்மன் கோடாக் திவாலான நிலையில், மற்றொரு அமெரிக்க பெருநிறுவனப் பெருமிதச் சின்னம் நீதிமன்றப் பாதுகாப்பை நாடியுள்ளது. இரு தசாப்தங்களாக பணிநீக்கம், ஆட்குறைப்பு ஆகியவற்றின் உச்சக்கட்டமாக திவால் பதிவு நடந்துள்ளது. ஒரு காலத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்த புகைப்படக்கருவித் தயாரிப்பு நிறுவனம் தன்னாலே உருவாக்கப்பட்ட நிழல்போலாகிவிட்டது.

எப்பொழுதும் போல், நீதிமன்றம் கண்காணிக்கும் நடைமுறைகள் தொழிலாளர்கள் மற்றும் அதன் பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியம் பெறுவோர் மீது தாக்குதலை அதிகரிப்பதற்கு வாய்ப்பாக நிறுவனத்தால் பயன்படுத்தப்படும். இவர்கள் தங்கள் சுகாதார நலன்கள் வெட்டப்படுதல் அல்லது முற்றிலும் அகற்றப்படுதலைக் காண்பர். தற்பொழுது கோடாக் 47,000 வேலைகளைக் குறைத்து, 2003ல் இருந்து 13 உற்பத்தி ஆலைகளை குறைத்த நிலைமையில் கிட்டத்தட்ட 18,800 தொழிலாளர்களைத்தான் வேலையில் வைத்துள்ளது.

திவால் தன்மையில் இருந்து நிறுவனம் ஒருவேளை மீண்டால், அப்பொழுது அது மிகச் சிறிய, மறு கட்டமைக்கப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கும். இதனால் அதன் முக்கிய முதலீட்டாளர்களுக்கு முதலீடு மீது போதுமான ஆதாயங்கள் உறுதி செய்யப்படும்.

கோடாக்கின் குறிப்பிடத்தக்க சரிவு கடந்த இரு தசாப்தங்களில் ஏற்பட்டதற்குப் பின்னணியில் இருந்த உடனடிக் காரணிகளில் மின்னியல் புகைப்படக்கலையில் (Digital photography) அது போட்டியிடமுடியாமல் தோல்வியுற்றது ஒன்றாகும். ஆனால் நிறுவனத்தின் ஏற்றமும் சரிவும் ஒரு நிறுவனத்தின் நெருக்கடியை மட்டும் பிரதிபலிக்காமல், அமெரிக்க முதலாளித்துவம் முழுவதையும்தான் பிரதிபலிக்கின்றன.

நியூ யோர்க் மாநிலத்திலுள்ள ரோசெஸ்டர் என்னும் தொழில்துறை நகரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த கோடாக் 1880களில் நிறுவப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் வேகமாக வளர்ச்சியுற்று, நுகர்வோர் புகைப்படத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கி, அமெரிக்காவில் கார்த்தயாரிப்பு இன்னும் பிற வெகுஜனத் தொழில்களின் ஏற்றத்துடன் இணைந்த முறையில் இருந்தது. ஒரு சுருளில் புகைப்படம் முதன்முதலாக சேகரித்துவைப்பதை அது வளரச் செய்தது. அதேபோல் முதன்முதலில் கையடக்கப் புகைப்படக்கருவியையும் (காமெரா) தயாரித்ததுஅதன் ஒரு பதிப்பு நுகர்வோருக்கு $1 விலையில் கிடைத்தது. மேலும் 1935ல் 35மி.மி. வண்ணப் புகைப்படத்தையும் கண்டுபிடித்தது.

1927இல் கோடாக் 20,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்த வளர்ச்சியைப் பெற்றது. இது 1946ல் 60,000 என்றும், 1973ல் 120,000 என்றும் அதிகரித்தது. அச்சிடுதல், மருத்துத் தோற்றத் தயாரிப்பு ஆகியவற்றை செய்த பல துணை நிறுவனங்களை வாங்குவதன் மூலமாக உற்பத்தி விரிவாக்கம் அதிக அளவில் இடம் பெற்றதனால் 1980களிலும்கூட அது தொடர்ந்து வளர்ச்சி பெற்றது. ஆனால். வேலையளித்தல் 1988ல் உச்ச நிலையை 145,300 தொழிலாளர்கள் என்று அடைந்தது. இரண்டே தசாப்தங்களில் அதன் தொழிலாளர் தொகுப்பு கிட்டத்தட்ட 83% சரிந்துவிட்டது.

1980களின் நடுப்பகுதியை ஒட்டி, கோடாக் ஆசியாவில் படச்சுருள் உற்பத்தியாளர்ளிடம் இருந்து குறிப்பாக ப்யூஜி பில்ம் –Fujifilm-  இடம் இருந்து ஆழ்ந்த போட்டியை எதிர்கொண்டது. 1990களில் இது இன்னும் அதிகமாக சந்தையில் தன் பங்கை மின்னியல் காமெரா உற்பத்தியாளர்கள் கானன், சோனி, நிகோன் ஆகியவற்றிற்கு இழந்தது. போதுமான ஆதாயத்தை கொடுக்காததால் முதலீடு பின்நோக்கி சென்றதை எதிர்கொண்ட நிறுவனம், அதன் செயற்பாடுகளில் பெரிய பிரிவுகளை விற்கவும், ஆலைகளை மூடவும் செய்தது.

ஆனால் கோடாக்கின் குறிப்பான செயற்பாடுகள் எப்படி இருந்தாலும், அதன் வரலாறு அமெரிக்க உற்பத்தித் தொழிற்துறை முழுவதின் தன்மையைத்தான் நெருக்கமாகப் பின்பற்றியுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தித்துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1940ம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் என்று இருந்தது. இது 1970களின் கடைசியில் உச்சநிலையைக் கிட்டத்தட்ட 20 மில்லியன் எண்ணிக்கையில் அடைந்தது. இன்றோ அத்தொகுப்பு 12 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் மக்கட்தொகை தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது.

அதிகரிக்கும் உலகப் போட்டிக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம், தொழிற்சங்கங்களுடைய ஆதரவுடன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல் மூலம் விடையளித்தது. கடந்த மூன்று தசாப்தங்களாக ஈட்டப்படும் பெரும் நிதியங்கள் உற்பத்தியை விரிவாக்குவதுடன் பிணைந்திருக்கவில்லை. மாறாக ஊக வணிகம் மூலம், பெருநிறுவனச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல் மூலம், ஆலைகளைத் தகர்த்தல் மூலம் மற்றும் பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கைத் தரங்களை கடுமையாகக் குறைத்தல் மூலம் வந்தன.

தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஒபாமா நிர்வாகத்தின் கீழும் தொடர்கிறது. அமெரிக்காவில் உற்பத்தியைப் புதுப்பிக்கும் வகையில் ஏதேனும் முயற்சி இருந்தால், அது நலன்களைக் குறைத்து, மரபார்ந்த செலவுகளான ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு அகற்றப்படுதல் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்களை வறுமைத் தரங்களுக்கு குறைத்தல் என்பவற்றின் மூலம் நடைபெறுகிறது.

கோடாக்கின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி, அன்டோனியோ பெரஸ், ஜெனரல் எலெக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி ஜேப்ரி இம்லேட்டின் தலைமையிலான வேலைகள் மற்றும் போட்டித்தன்மைக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆவார். பெரும்பாலும் பெறுநிறுவன அதிகாரிகளும் AFL-CIO தொழிற்சங்க பிரதிநிதிகளும் இருக்கும் இக்குழு புதன் அன்று ஓர் அறிக்கையை, புதுப்பித்தலுக்கு ஒரு சாலை வரைபடம் என்ற தலைப்பில் வெளியிட்டது. வேலைகளை அதிகரிப்பதற்கு இதன் மூலோபாயம் கட்டுப்பாட்டு விதிகளை அகற்றுதல், பெருநிறுவன வரிகளைக் குறைத்தல் என்பதாகும்.

இத்தகைய மீட்புமுறையின் மாதிரியாக கார் தயாரிப்பு தொழில்துறை உள்ளது. இது ஒபாமா நிர்வாகம் மற்றும் திவால்பிரிவு நீதிமன்றங்களின் வழிகாட்டு நெறிகளில் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுபவர்களின் ஊதியங்களைப் பாதியாகக் குறைத்து, ஓய்வூதிய நலன்களை வெட்டி, பல்லாயிரக்கணக்கான வேலைகளையும் அகற்றியது. அதே நேரத்தில் நிறுவனங்களின் இலாபங்களும் முதலீட்டாளர்களுக்கு ஆதாயங்களும் உயர்ந்துவிட்டன.

கடந்த ஒரு தசாப்தமாக, அமெரிக்க உற்பத்தித் துறையில் ஒரு அலகிற்கான தொழிலாளர் தொகுப்புச் செலவினங்கள் 10% க்கும் அதிகமாகச் சரிந்துவிட்டன. ஜப்பானில் 3%, ஜேர்மனியில் 41% சரிவு என்பதுடன் இது ஒப்பிடத்தக்கது. பைனான்சியில் டைம்ஸ் புதன் பதிப்பில் வெளிவந்த கட்டுரை ஒன்றின்படி, தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொருளாதார வல்லுனர் சட் மோட்ரேயேயை டைம்ஸ் மேற்கோளிடுகிறது: எங்கள் உறுப்பினர்களில் பலர் எங்களிடம் அமெரிக்காவில் உற்பத்தி செய்வது மலிவாக இருக்கும், ஏனெனில் தொழிலாளர் செலவினங்கள் குறைவு. நிர்வாகம் இந்த நிகழ்வுப்போக்கை விளக்குவதற்கு தொழில்களை உள்ளே கொண்டுவருதல்” –insourcing- என்னும் சொற்றொடரை ஏற்றுள்ளது.

அரசியல் ஆளும்வர்க்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வங்கிகளுக்கு பாரிய நிதியளிப்புக்கள் மூலம் கொடுத்துள்ளது; அதே நேரத்தில் வெகுஜன வேலையின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத் திட்டம் எதையும் உறுதியாக நிராகரித்துவிட்டது. புதன்கிழமை அன்று வேலைகள் குழுவை பாராட்டிய ஒபாமா பொருளாதார மீட்பு தனியார் துறையினால் உந்துதல் பெறவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் சமூகப் பொருளாதார நிகழ்வுப்போக்கின் சரிவு என்று கோடாக் திவால் வெளிப்படுத்தியுள்ள தன்மை பொருளாதார மீட்சிக்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கவில்லை. இது தொழிலாளர்களை பொறுத்தவரை முற்றிலும் கட்டுக்கதைத்தான். ஆனால் வர்க்கப் போராட்டம் பாரியளவில் புதுப்பிக்கப்படுவதற்கான நிலைமைகளையே உருவாக்குகின்றது.