சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament votes for European fiscal pact

ஐரோப்பிய நிதிய உடன்பாட்டிற்கு ஜேர்மன் பாராளுமன்றம் வாக்களிக்கிறது

By Christoph Dreier
2 July 2012

use this version to print | Send feedback

ஜேர்மனியில் பாராளுமன்றம் வெள்ளியன்று மூன்றிற்கு-இரண்டு பெரும்பான்மை உடன் (491-111) ஐரோப்பிய நிதிய உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்து வாக்களித்தது. இதையும்விட, அதிக பிரதிநிதிகள் (493) ஜேர்மனி ஒரு புதிய பிணையெடுப்பு நிதி அமைப்பான ஐரோப்பிய உறுதிப்பாட்டு கருவி (European Stability Mechanism -ESM)  இல் சேருவதை அனுமதித்து தனியே வாக்களித்தது.

வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள், கடன் மட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும்  குறைக்கப்பட வேண்டும் என்று ஆணையிடும் நிதிய உடன்பாடு மற்றும் ESM ஆகியவை ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலின் மத்திய பகுதிகளாகும்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), தாராளவாத  ஜனநாயகக் கட்சி (FDP) உள்ளடங்கிய கூட்டணிக்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளிடம் இருந்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வாக்களித்தனர். அரசாங்கக் கூட்டணிக்குள் அதிக கருத்து வேறுபாடு உடையவர்கள் இல்லை. நடவடிக்கைகளை எதிர்த்து வாக்களித்த ஒரே பாராளுமன்றக்குழு இடது கட்சிதான்.

இந்த முடிவு ஜேர்மனியின் பொருளாதார, அரசியல் சமூக உயரடுக்கிற்குள் ஐரோப்பிய நிதிய ஒன்றியத்திற்கான பரந்த ஆதரவை நிரூபிக்கிறது. இதன் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பதுதான். வளர்ச்சி கொள்கைகள் பற்றிய அவற்றின்  தெளிவற்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைவாதிகளில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் தேசிய வரவு-செலவுத் திட்டங்கள் மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்குத் தங்களது ஆதரவை காட்டிக்கொண்டனர்.

ஜேர்மனி ஏற்கனவே அதன் அரசியலமைப்பில் ஒரு தேசிக் கடன் வரம்பை கட்டுப்படுத்தலை சேர்த்துள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் யூரோப்பகுதியின் அரசாங்கத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ESM  மற்றும் நிதிய உடன்பாடு ஆகியவை ஐரோப்பா முழுவதும் சமூக எதிர்ப்புரட்சி ஒன்றை நடத்துவதற்கான கருவிகள் ஆகும். இவை கிரேக்கத்தின்மீது சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை மாதிரியாகக் கொண்டவை. ஜேர்மனிய ஆளும் வர்க்கம், இந்நடவடிக்கைகளை ஜேர்மனியில் சமூகநலச் செலவுகளை இன்னும் குறைப்பதற்கு திட்டமிடுவது மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுவதையும் ஜேர்மனியத் தொழிற்துறைக்கு ஒரு குறைவூதிய சுவர்க்கமாக மாற்றுவதற்கு முயல்கிறது.

நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதின் மூலம், ஒவ்வொரு நாடும் தன் அரசியலமைப்பில் ஒரு கடன் உச்சவரம்பை எழுதுவதற்கு உடன்படுகிறது. அத்துடன் பற்றாக்குறை இலக்குகள் சந்திக்கப்படவில்லை என்றால் ஒரு தானியங்கும் முறை மூலம் செலவுகள் குறைக்கப்பட்டுவிடும். ஐரோப்பிய ஆணையம் நிர்ணயிக்கும் ஒரு கால அவகாசத்தில், அந்நாடுகள் தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை சமப்படுத்தி, தங்கள் தேசியக் கடன்களைக் குறைக்க வேண்டும்.

இது நடைமுறையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வரவு-செலவுத் திட்ட இறைமையை அகற்றிவிடும். முதலில் மிக அதிக கடன்களைக் கொண்டுள்ள நாடுகள் இதன்கீழ் வரும்.

நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடும் நாடுகள் ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை ஏற்கும். ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மற்றும் ஐரோப்பியக்குழு ஆகியவற்றிற்கு மீறல்கள் குறித்து நேரடியாகக் கூற அவை ஒப்புக் கொள்வதுடன், அவை திருத்தியமைக்கும் நடவடிக்கைகளை முன் வைப்பதற்கும் ஒப்புக் கொள்கின்றன. அவற்றின் செயல்பாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் கடுமையான மேற்பார்வைக்கு உட்படும்.

நிதிய உடன்பாடு என்பது ஒரு கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கை ஆகும். இது கையெழுத்திட்டுள்ள நாட்டில் தேர்தல் ஒரு புதிய பாராளுமன்றப் பெரும்பான்மையை ஏற்படுத்தினாலும் ஒருதலைப்பட்சமாக நிறுத்தப்பட்டுவிட முடியாது.

ESM என்பது இப்பொழுதுள்ள ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு (EFSF) என்னும் மீட்புக் கருவிக்கு மாற்றாக இருக்கும். 500 பில்லியன் யூரோக்கள் நிதியைக் கொண்டு, ESM மூலதனச் சந்தைகளில் இனி கடன் வாங்க முடியாத யூரோப்பகுதி நாடுகளுக்குக் கடன் கொடுப்பதற்கு ESM  உரிமையை பெறும்.

ஜேர்மனி 190 பில்லியன் அளித்துள்ள பிணையெடுப்பு நிதிகள், சர்வதேச வங்கிகள் வைத்திருக்கும் இருப்புக்களுக்குப் பாதுகாப்பைத் தொடரும். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ESM நேரடியாக ஸ்பெயினின் வங்கிகளுக்கு மூலதனம் வழங்க அனுமதித்தது.

ESM  கொடுக்கும் நிதிகள் கடுமையான விதிகளுடன் பிணைந்திருக்கும். அவற்றின்படி நிதியுதவி பெறும் நாடுகள் கிரேக்கம், போர்த்துக்கல், அயர்லாந்து ஆகிய நாடுகள் தாங்கள் பெற்ற பிணையெடுப்பு நிதிக்குச் செய்தது போல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு முற்றிலும் பொறுப்புக் கூறத் தேவையற்ற இரண்டு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புக்கள் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை செயல்படுத்தி, ஒரு ஆளுனர்கள் குழு, ஒரு இயக்குநர் குழுவும் மேற்பார்வையிடும்.

நிதிய உடன்பாட்டின்கீழ் ஜேர்மனி மத்திய வரவு-செலவுத் திட்டம் அடுத்த ஆண்டிற்குள் 25 பில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட வேண்டும். இத்தொகை வேலையின்மை நலன்கள்-II அனைத்திற்கும் வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து பெறும் நிதியை அண்ணளவாக ஒத்திருக்கும். ESM பத்திரங்களுக்குப் பணத்தைக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், செலவுகளில் குறைப்பு விரைவான ஏற்றம் பெறும்.

இத்திட்டம்தான் அனைத்துப் பாராளுமன்றக் கட்சிகளும் கடந்த புதன் அன்று நடந்த விவாதத்தின்போது ஒப்புக் கொண்டது ஆகும். சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் பிராங்க் வால்டெர் ஸ்ரைன் மையர் தன் பாராளுமன்றக் குழுவின் ஒப்புதலை அடையாளம் காட்டினார். நிதிய உடன்பாடு நேர்த்தியானது என்றார் அவர்; ஏனெனில் அவருடைய கட்சி, பசுமைவாதிகளுடன் இணைந்து அத்துடன் இணையான ஒரு வளர்ச்சி உடன்பாட்டையும் நிதியப் பரிமாற்ற வரியையும் கொண்டுவந்துள்ளது.

இதே அடிப்படையில் பசுமைவாத கட்சியின் நிர்வாகக் குழு, பாராளுமன்றப் பிரிவை நடவடிக்கைகளை ஆதரிக்க வலியுறுத்தியது. கட்சியின் மாநிலங்கள் குழுவும் அதன் ஆதரவைக் கொடுத்துள்ளது. பசுமைவாதிகளின் பாராளுமன்றப் பிரிவுத் தலைவர் யூர்கன் ரிட்டீன் பொதிக்கான ஒப்புதலுக்கு ஆதரவு கொடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் இதை ஏற்காவிடில் முறிநதுவிடும் என்றார். சர்வதேச நிதியச் சந்தைகளில் என்ன நடக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அவர் பிரதிநிதிகளைக் கேட்டார்.

பசுமைவாதிகளின் பாராளுமன்றக் குழுவிற்குள் உள்ள எதிர்ப்பாளர்கள் நிதிய உடன்பாட்டிற்கு கொள்கையளவிலான எதிர்ப்பை எழுப்பவில்லை. அவர்கள் இத்துடன்கூட பழைய கடன்கள் மீட்பு நிதி என்பதை கடன்பட்டுள்ள நாடுகளுக்கு இடைக்கால நிவாரணம் போல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்பினர்.

அத்தகைய நிதியம் ஒரு மோசடியாகும்; எப்படி வளர்ச்சி உடன்பாடும் நிதியப் பறிமாற்ற வரியும் உள்ளனவோ அதுபோல். வளர்ச்சி உடன்பாடு, ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது, எத்தைகைய கூடுதல் நிதியையும் சேர்க்கவில்லை. இது வெறும் நீண்டக்கால திட்டச் செலவுகளைத்தான் ஒதுக்குகிறது. 130 பில்லியன் யூரோக்கள் அதிகப்பட்சம் என்று இருக்கையில், இது நிதிய உடன்பாட்டின்கீழ் தகர்க்கப்படும் நிதிகளை விடப் பல மடங்கு குறைவாகும்.

நிதியப் பறிமாற்ற வரி என்பது அனைத்து நிதியப் பறிமாற்றங்களையும் கருத்திற் கொள்ளாது. எனவே வருவாய்கள் அதற்கேற்றமுறையில் குறைவாகத்தான் இருக்கும்.

எப்படிப்பார்த்தாலும், இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது உறுதியாகவில்லை.  ஏனெனில் இது மற்ற ஐரோப்பிய நாடுகளின் ஒப்புதலை நம்பியுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததைத் தவிர, அரசாங்கக் கூட்டணியின் சில பிரதிநிதிகளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர். CSU  துணைத்தலைவர் பீட்டர் ஹவைலர் ஏற்கனவே தலைமை நீதிமன்றத்தில் புதிய சட்டத்திற்கு எதிரான ஒரு முறையிட்டுக் கொடுத்துள்ளார்: யூரோ மீட்பு என்பது கட்டற்ற விகிதங்களை அடையக்கூடும் என்று அவர் காரணம் காட்டியுள்ளார். கிரேக்கத்தை யூரோப் பகுதியில் இருநது ஒதுக்குவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவும் ஒரு சட்ட நடவடிக்கையைப் பதிவு செய்துள்ளது. அவர்கள் நிதிய உடன்பாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகளுக்கு நெருக்கமான ATTAC, Young Friends of Nature ஆகியவற்றுடன் இணைந்து நடத்தினர். பாராளுமன்றத்தின் முன் 100க்கும் குறைவான மக்கள் கூடினர்.

நடவடிக்கைகளுக்கு எதிரான பாராளுமன்ற வாக்களிப்புகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடது கட்சியால் வங்கிப் பிணையெடுப்புக்கள், மற்றும் நிதிய ஒன்றியத்திற்கான பரந்த எதிர்ப்பை தீமை பயக்காத வகைக்குத் திருப்பப் பயன்படுத்தப்பட்டன. பேச்சாளர்கள் ஒரு சிறிய விமர்சன சொல்லைக்கூட ஐரோப்பிய ஒன்றியம், அதன் அமைப்புக்கள் பற்றிக் கூறவில்லை; இவைதான் ஐரோப்பா முழுவதும் சமூகத் தாக்குதல்களுக்கு உறைவிடம் ஆகும.

மாறாக, இடது கட்சியின் தலைவர் கிரிகோர் ஹீஸி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தம் வருமானங்கள், சொத்து ஆகியவற்றின்மீது அதிக வரிவிதிப்பு, நிதி உதவிகள் அகற்றப்படுதல் ஆகியவற்றின் மூலம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். Neues Deutscheland  என்னும் செய்தித்தாளிடம் அவர், மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை செலவு வெட்டுக்களைச் செயல்படுத்தும் அமைப்பு என்று காண்கின்றனர் என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது ஏற்கனவே இருக்கும் குறைவான ஆர்வம் மறைந்தே விடும். என்றார்.

இடது கட்சி வங்கிப் பிணையெடுப்புக்களுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத்தாக்குதல்களுக்கும் கொள்கையளவில் எதிர்ப்பை முன்வைக்கவில்லை. அதன் வாக்குகள் தேவைப்படும்போது எல்லாம், பேர்லினில் வரவு-செலவுத் திட்டத்தை இயற்றவோ, பாராளுமன்றத்தில் விரைவான பங்கு மீட்பிற்கான ஆதரவு என்னும்போதோ இடதுகட்சி வங்கிகள் நடத்தும் கொள்ளைக்கு ஆதரவு கொடுக்கத் தயங்குவதில்லை.