சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany takes hard line in advance of EU summit

ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மனி ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்கின்றது

By Stefan Steinberg
29 June 2012

use this version to print | Send feedback

வியாழன் அன்று பிரஸ்ஸல்ஸில் ஆரம்பமாகிய இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பாவிற்கும் வாஷிங்டனுக்கும் இரும்புகையுறையை கொடுத்துள்ளார். செய்தி ஊடகத் தகவல்களின்படி, செவ்வாயன்று மேர்க்கெல் அவருடைய ஆளும் கூட்டணியின் உட்கூட்டம் ஒன்றில் யூரோப் பத்திரங்களைத் தான் ஒரு பொழுதும் தன் வாழ்நாளில் ஏற்பதற்கில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

முந்தைய தினம் ஐரோப்பியக் குழுவின் தலைவர் ஹார்மன் வான் ரொம்பே யூரோ நாணயத்தை பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை மறுகட்டமைக்கும் திட்டங்களை வெளியிட்டது குறித்து புதன் அன்று ஜேர்மனிய பாராளுமன்றத்தில் மேர்க்கெல் ஒரு கடுமையான விமர்சனத்தை தெரிவித்தார். ரொம்பையின் அறிவிப்பு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மானுவல் பரோசோ, யூரோக்குழுத் தலைவர் ஜோன் குளோட் யங்கர், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராகி மற்றும் வான் ரொம்பேயின் பெயரில் வந்துள்ளது உச்சிமாட்டில் ஒரு முக்கியமான தலைப்பாக விவாதப்பட்டியலில் உள்ளது.

அறிக்கையில் கடன் குறித்த பரஸ்பர ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் என்ற நிலைப்பாடு இருப்பது குறித்து நான் ஆழ்ந்த வேறுபாடு கொண்டுள்ளேன். இன்னும் அதிகக் கட்டுப்பாடு, செயல்படுத்தக்கூடிய உறுதிப்பாடுகள் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன் அவை மிகவும் தெளிவற்ற முறையில் கூறப்பட்டுள்ளன என்று மேர்க்கெல் கூறினார்.

யூரோப் பத்திரங்கள் மற்றும் பொதுக் கடன் திருப்பிச்செலுத்தலுக்கான நிதி ஆகியவை பொருளாதார அளவில் தவறு, எதிர்மாறான விளைவுகளைக் கொண்டது மற்றும் ஜேர்மன் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இந்த அறிக்கைகள் பிரஸ்ஸல்ஸ் கூட்டத்தில் விரைவாகப் பெருகிக் கொண்டிருக்கும் யூரோ நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்த உடன்பாட்டிற்கான சாத்தியப்பாட்டை முற்றிலும் அகற்றிவிடுகின்றன.

யூரோப் பத்திரங்கள் அறிமுகம் மற்றும் தனித்தனி ஐரோப்பிய நாடுகளுக்கு பொதுக்கடன் திருப்பிச்செலுத்தும் நடவடிக்கைகள் என்பவை பிரஸ்ஸல்ஸில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய கோரிக்கைகளாக இருக்கும். யூரோப்பத்திரங்களுக்கான அழைப்பு, சமீப மாதங்களில் அதிகரித்த வலியுறுத்தலுடன் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றால் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த வாரம் முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டிக்கு யூரோப் பத்திரங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் பலவீனமாக இருக்கும் ஐரோப்பிய வங்கிகளுக்கு நிதியளிப்பதற்கு குறுகியகால நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்க ஜேர்மனிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஆலோசனை கூறினார்.

பெருகும் பொருளாதார நெருக்கடி, பல முக்கிய ஐரோப்பிய நாடுகளில் நிதிய ஸ்திரமின்மை ஆகியவற்றின் பின்னணியில் உச்சிமாநாடு நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்பெயினின் பலவீனமான வங்கி முறைக்கு 100 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதாக ஐரோப்பியத் தலைவர்கள் உறுதிமொழியளித்தும், ஸ்பெயினின் பத்து ஆண்டுப் பத்திரங்கள் மீண்டும் நெருக்கடி அளவான 7% ஐ எட்டிக் கொண்டிருக்கிறது. இத்தாலிய பத்திரங்களின் வட்டி இந்த ஆண்டு அவற்றின் உயர்ந்த நிலையை அடைந்துவிட்டன; இந்த வாரம் தீவு நாடான சைப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிணையெடுப்பிற்கு விண்ணப்பிக்கும் ஐந்தாம் நாடாக, தான் இருக்கும் என அறிவித்துள்ளது.

உச்சிமாநாடு மீண்டும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் மக்கள் எதிர்ப்பு  ஏற்படும் என எச்சரிக்கை விடுத்த மொன்டி செய்தியாளர்களிடம் அரசாங்கம் மற்றும் ஐரோப்பியக் கொள்கைகள் குறித்து ஏமாற்றம் ஏற்படுவது அரசியல் சக்திகளைக் கட்டவிழ்த்துவிடக்கூடும். அது ஐரோப்பிய ஒருமைப்பாடு மற்றும் யூரோவை கைவிடு, இந்நாடு அல்லது அந்தப் பெரிய நாடு நரகத்திற்கு செல்லட்டும் எனக் கூறும், அத்தகைய போக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்தும். என்றார். உச்சிமாட்டைப் பற்றி விவரிக்கையில் ஜேர்மனிய நாளேடு Die Welt ஐரோப்பாவை பனிப்பாறையை நோக்கிச் செல்லும் டைட்டானிக் கப்பலுடன் ஒப்பிட்டுள்ளது.

நிதிய நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து வங்கிகளுக்கு புதிய நிதிகளை உட்செலுத்தும் குறுகியகால நடவடிக்கைகளுக்கு வந்துள்ள ஒருங்கிணைந்த அழுத்தத்தை முகங்கொடுத்த மேர்க்கெல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு விரைவான, எளிதான தீர்வுகள் இல்லை, மந்திரச் சூத்திரம் ஏதும் இல்லை என மீண்டும் அறிவித்தார்.

யூரோப் பத்திரங்கள் பற்றிய அவருடைய முந்தைய அறிக்கைகளில், மேர்க்கெல் அவை அறிமுகப்படுத்தப்படத் தான் ஆதரவு கொடுக்கத் தயார் என்றார் ஆனால் ஐரோப்பாவில் நிதிய, அரசியல் ஒன்றியம் குறித்துக் கணிசமான செயற்பாடுகளுக்குப் பின்னர்தான் என்றார். அதாவது தனி நாடுகள் தங்கள் வரிவிதிப்பு, வரவுசெலவுத்திட்ட கொள்கைகளை பிரஸ்ஸல்ஸின் கட்டுப்பாட்டிற்கு மாற்றிவிட ஒப்புக் கொண்டால்தான்.

இந்த வாரத்திய மேர்கெலின் கருத்துக்கள் ஜேர்மனிய அரசாங்கம் தன் நிலைப்பாட்டைக் கடினமாக்கிக் கொண்டுள்ளது, எச்சூழலிலும் யூரோப்பத்திரங்ளுக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. இதற்கு அது எதிர்த்தரப்பு சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவைக் கொண்டுள்ளது. இது முன்னதாக யூரோப்பத்திரங்களுக்கு உறுதியாக வாதிட்டதிருந்தது. சமீப காலத்தில் இப்பிரச்சினையைக் கைவிட்டு விட்டது.

அடிப்படை உடன்பாட்டிற்கான நிலைமைகள் இல்லை என்ற நிலையில், ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே எதிர்பார்ப்புக்கள் மீது அவநம்பிக்கையை விதைத்துவிட்டனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பரோசோ இக்கூட்டம் ஒரு நோக்குநிலை, ஒரு பாதையை வழங்கினால் போதும் என்று அறிவித்து, சந்தைகளை ஒரு உச்சிமாநாடு அமைதிப்படுத்தும் என நம்புவது ஒரு தவறாகிவிடும் என்றும் அறிவித்தார்.

பரோசோவின் கருத்துக்கள் பொதுவாக மக்களுக்காக கூறப்பட்டவை. திரைகளுக்குப் பின்னால், ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் தீவிரமாக வங்கிகளுக்கு உதவ உழைக்கின்றனர். குறிப்பாக இருக்கும் ஐரோப்பிய பிணையெடுப்பு நிதிகள் நேரடியாக அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்கு அனுமதிக்கும் திட்டங்களை ஒட்டி விவாதங்கள் உள்ளன. தற்போதைய வழக்கம் பிணையெடுப்புக்கள் நாடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்படலாம் என்பதாகும். இத்தாலி, ஸ்பெயின் இரண்டும் பிணையெடுப்பு நிதிகள் தங்கள் வங்கிகளை பாதுகாக்க வழங்க விரிவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. வியாழன் அன்று மேர்க்கெல் இத்தாலியப் பிரதமரின் கோரிக்கைகளை அப்பட்டமாக நிராகரித்தார்.

செய்தி ஊடக விமர்சகர்கள் ஒருமனதாக யூரோ கரைப்பைத் தடுக்கும் எந்த உடன்பாட்டிற்கும் ஒரு முன்நிபந்தனை கண்டத்தில் இரு பெரிய பொருளாதாரங்களான பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றிற்கு இடையே உடன்பாட்டுத் தரம் இருப்பது என்று கூறியுள்ளனர். புதன் மாலை உச்சிமாநாடு தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் மேர்க்கெல் பாரிசுக்குப் பறந்து வந்து ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை பேச்சுக்களுக்காகச் சந்தித்தார். பேச்சுக்களின் விவரங்கள் கசியவிடப்படவில்லை. ஆனால் உச்சிமாநாட்டின் செயற்பட்டியலில் உள்ள முக்கிய கருத்துக்களை மேர்க்கெல் உறுதியாக நிராகரித்திருப்பது இரு தலைவர்களிடையே உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்பதைத்தான் குறிக்கிறது.

பல விமர்சகர்கள் பாரிஸ், பேர்லினுக்கு இடையே உள்ள கொள்கை வேறுபாடுகள் வளர்ச்சிக்கும் சிக்கனத்திற்கும் இடையே உள்ள மோதல் எனக் காண்கின்றனர். இதைவிட உண்மையில் இருந்து  அந்நியப்பட்டது வேறு எதுவும் இருக்க முடியாது.

உச்சிமாநாட்டில், இரு நாட்கள் விவாதங்களுக்குப் பின் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பிரெஞ்சு வெற்றி என்பது வளர்ச்சி உடன்பாடு பற்றி இருக்கும்; இது ஏற்கனவே பிரெஞ்சு, ஜேர்மனிய, ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கங்களின் தலைவர்களால் கடந்த வெள்ளியன்று ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. 120 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய பொதி செய்தியாளர்களுக்கு சிக்கனத் திட்டங்கள், சமூகநலன் வெட்டுக்களின் எதிர்மறை விளைவுகளுக்கு மாற்றான கணிசமான ஆரம்ப முயற்சி என முன்வைக்கப்பட்டது; இதில் உள்ள வளர்ச்சிக் கூறுபாடு வேலைகளைத் தோற்றுவிக்கவும், நலிந்த பொருளாதாரங்களை புதுப்பிக்கும் நோக்கத்தையும் கொண்டது எனக்கூறப்படுகின்றது.

உண்மையில், Der Spiegel ல் ஒரு சமீபத்திய கட்டுரை சுட்டிக் காட்டியிருப்பது போல், இந்த உடன்பாடு முக்கியமாக வெற்று உறுதிமொழிகளையும், போலிக்கருத்துக்களையும், கணக்குத் தந்திரங்களைத்தான் கொண்டிருக்கிறது. இதன் நோக்கம் வேலைகள், பொருளாதார வளர்ச்சியை தோற்றுவிப்பதில் எந்தவித சாதகமான விளைவுகளும் இல்லாது சாதாரணமாக வாக்காளர்களை ஈர்ப்பதற்காகும். ஐரோப்பிய உட்பகுப்பாய்வு ஒன்று உடன்பாடு புதிதாக எதையும் கொள்ளவில்லை என்றும், முக்கியமாக பிரெஞ்சு ஜனாதிபதி தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் பயன்படும் என்றும் கூறியுள்ளது.

ஹாலண்ட், மேர்க்கெல் இருவருமே நிதிய உயரடுக்கின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் கண்டம் முழுவதும் சிக்கன நடவடிக்கைகளை விரிவாக்குவதிலும்தான் தீவிரமாக உள்ளனர். பலவீனமான பொருளாதாரத்தையும் தெற்கு ஐரோப்பாவில் அதிக நிதியத் தொடர்பை கொண்டுள்ள பிரான்ஸ், ஜேர்மனி அதன் பணத்திரட்டைத் திறந்து ஐரோப்பிய வங்கிகளுக்கு நிதிப் பிணையெடுப்பு கொடுக்கும் என உறுதிப்படுத்த முனைகின்றது.

தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனி, பிரான்ஸும் ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் தங்கள் பொருளாதாரங்கள் மீதான இறைமைக் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்க வேண்டும்; அதற்கு ஈடாகத்தான் நிதிய ஆதரவு கொடுக்கப்படும் என வலியுறுத்துகிறது. அத்தகைய சலுகையை அளித்தல் பிரான்சிற்கு ஏற்கத்தக்கதல்ல; அது ஜேர்மனியிடம் இருந்து குறுக்கீடு இல்லாமல் தன்னுடைய சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் உரிமையைக் கோருகிறது.

உச்சிமாநாட்டின் இறுதியில் ஒரு சம்பிரதாய அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வெளியிடலாம். அதில் நெருக்கடியைத் தீர்க்க அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு வலியுறுத்தப்படும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும், மற்றும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையேயும் பதட்டங்கள் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றன.