சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Left Party defends the German secret service

இடது கட்சி ஜேர்மனிய உளவுத்துறையின் பணிக்கு ஆதரவளிக்கிறது

Christoph Dreier
7 July 2012

use this version to print | Send feedback

ஜேர்மனிய உள்நாட்டு உளவுத்துறைப் பணிக்கும் (அரசியலமைப்புப் பாதுகாப்பு அலுலகம் -Verfassungsschutz-VS) நவ பாசிச பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. ஆயினும்கூட, மக்களில் பரந்த பிரிவினர் கெஸ்டாபோவின் புதிய பதிப்பு ஒன்று வெளிப்படுமோ என அஞ்சும் சூழ்நிலையில், ஜேர்மனிய இடது கட்சி வெளிப்படையாக இரகசிய உளவுத்துறைப் பணிக்கு ஆதரவு கொடுத்து, அதன் செயற்பாடுகளை நேர்த்தியானதாக்கும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் செய்தி ஊடக அறிக்கைகள் தலைமறைவு தேசிய சோசலிஸ்ட்டுக்கள் - National Socialist Underground, NSU- என்ற ஒரு நவ பாசிச அமைப்பு என்பது 2000ம் ஆண்டில் இருந்து ஜேர்மனியில் செயல்பட்டு வருவதாகவும், அதுதான் குறைந்தப்பட்சம் 9 இனவழி நோக்கத்தை கொண்ட கொலைகளுக்குப் பொறுப்பு மற்றும் பொலிஸ் பெண்மணி ஒருவரின் கொலைக்கும் காரணம் என்று கூறின.

இது பற்றிய விசாரணைகள் உளவுத்துறைக்கு NSU பற்றிய செயற்பாடுகள் குறித்து முதலில் இருந்தே தெரிவிக்கப்பட்டது என்பதைக் எடுத்துக்காட்டி, உளவுத்துறைப்பணிப் பிரிவு NSU உறுப்பினர்களைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து வேண்டுமென்றே பாதுகாக்கிறது என்று குறிப்புக்காட்டுகிறது. NSU அமைப்பை சுற்றி உளவுத்துறை தலைமறைவு முகவர்களை நிறுத்தியிருந்தபோதிலும், அது NSU உறுப்பினர்கள் குண்டுத் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சான்றுகளை புறக்கணித்துள்ளதுடன் மற்றும் மேலும் குறைந்தப்பட்சம் ஒரு NSU பயங்கரவாதி ஒரு புதிய கடவுச்சீட்டு பெறுவதற்கு உதவியுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகளுக்கு பின்னரும், எந்தத் தீவிர ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விரிவான விசாரணையை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, ஜேர்மனியப் பாராளுமன்றம் உளவு அமைப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளது. அதனால் இப்பொழுது பொலிஸ் துறையில் மிக முக்கிய கோப்புக்களை பெற்றுக்கொள்ளமுடியும், அதேபோல் அரசாங்க உளவுத்துறையின் கோப்புக்களையும் அணுகமுடியும். ஹிட்லரின் கெஸ்டாபோவின் குற்றங்களின் விளைவாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தகைய பொலிஸ்-உளவுத்துறைப் பிரிவுகள் இணைந்திருப்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மனியில் தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

ஜூன் மாத முடிவில், கடந்த நவம்பர் மாதம் NSU குறித்த ஆரம்ப குற்றச்சாட்டுகளுக்கு ஒரு நாளைக்குப்பின் ஒரு உளவுத்துறை அதிகாரி NSU சூழலில் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரகசிய முகவர்கள் ஏழு பேரின் உத்தியோகபூர்வ தொடர்புக் கோப்புக்களை அழித்தார் எனத் தெரிய வந்துள்ளது. இப்படி வேண்டும் என்றே சான்றுகளை அழித்தல் சென்ற வாரம் வரை மூடி மறைக்கப்பட்டிருந்தது.

இந்த வாரம் முன்னதாக, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) உறுப்பினர் ஒருவர் உறவுத்துறை இயக்குனர் என்னும் தன் பதவியில் இருந்து இராஜிநாமா செய்தார். ஒரு சில நாட்களுக்குப்பின் துருங்கியா மாநிலத்தின் உளவுத்துறை தலைவரும் இராஜிநாமா செய்தார். இந்த நடவடிக்கைகள் உள்ளே இருக்கும் விமர்சிப்பவர்களை மௌனப்படுத்தும் நோக்கத்தை கொண்டவையே தவிர, என்ன நடக்கிறது என்பது குறித்து வெளிப்படுத்திக் காட்ட உதவவில்லை.

NSU உறுப்பினர்கள் இரகசியப் பொலிஸ் துறையில் இருந்து ஊதியம் பெற்றனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உளவுத்துறை, NSU கட்டமைக்கப்படுவதில் தீவிரமானதும் முக்கியமானதுமான பங்கைக் கொண்டிருந்தது என்பதை பல தகவல்கள் காட்டுகின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள உண்மைள் நவ பாசிஸ்ட்டுக்களுடன் ஒத்துழைப்பு என்பது ஓரிரு முகவர்களின் ஆரம்ப முயற்சி மட்டும் அல்ல என்றும், உளவுத்துறையின் மிக உயர்ந்த மட்டங்களினால் ஒருங்கமைக்கமைக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த உறவுகளை வெளிப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் உளவுத்துறையினால் மட்டுமல்லாது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளாலும் தடைக்கு உட்படுத்தப்படுகின்றன. பாராளுமன்றத்தின் கண்காணிக்கும் அமைப்பான PKGr ல் இக்கட்சிகள் அனைத்தும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பிற்கு ஜேர்மனிய உளவுத்துறையின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் விசாரிக்க அதிகாரமும் மற்றும் அவற்றின் கோப்புக்களை பார்வையிடவும் அதிகாரம் உண்டு. ஆனால் PKGr  உறுப்பினர்கள் எவருமே இந்தத் தகவல் பற்றி வெளிப்படுத்த தயாராகவில்லை. 

மாறாக, அனைத்துக் கட்சிகளுமே உளவுத்துறைப் பிரிவிற்குப் பாதுகாப்புக் கொடுத்து, நடந்தவற்றை வெறும் “தோல்விகள்” அல்லது “தவறுகள்” என்றுதான் குறைமதிப்புக் கொடுத்துக் கூறுகின்றன. அவை முழு விசாரணைக்கு அழைப்புவிடாத்துடன், இப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் கூறவில்லை. மாறாக பசுமைக்கட்சியின் கிளவ்டியா ரோத்தின் வார்த்தைகளில் “கட்டுமானச் சீர்திருத்தம்”, சமூக ஜனநாயக கட்சியின் தோமஸ் ஓப்பர்மான்னின் வார்த்தைகளில் “அடிப்படைச் சீர்திருத்தம்” தேவை என்று கூறுவதுடன் நின்றுவிடுகின்றன.

அத்தகைய சீர்திருத்தத்தின் நோக்கம் உளவுத்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது என்றுதான் இருக்கும். கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லோயர் சாக்சனி மாநிலத்தின் உள்துறை மந்திரி ஊவ ஷூனமான் ஏற்கனவே இத்திசையில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். “உளவுப்பிரிவு இன்னும் அதிகமாக உறுதியான பாதுகாப்பு மற்றும் சட்டத்தைச் செயல்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பது முக்கியமாகும்” என்று அவர் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

ஆனால் உளவுத்துறை குறித்த வலுவான ஆதரவு பாராளுமன்றத்தில் இடது கட்சிப் பிரிவில் இருந்து வந்துள்ளது. PKGr ல் அவர்களுடைய பிரதிநிதி, வொல்ப்காங் நெஸ்கோவிக், ஜேர்மனிய வானொலியில் ஜேர்மனிக்கு உளவுத்துறை அமைப்பு தேவை என்று அறிவித்தார். “அவர்கள் விமர்சிப்பது எனக்குப் புரிகிறது. அது நியாயமானதே, ஆனால் தீயணைப்புப் பிரிவை, அது தீயை அணைக்கவில்லை என்பதற்காகக் கலைத்துவிடமுடியாது” என்றார் அவர்.

இடது கட்சியும் நெஸ்கவிக்கும், இவ்வகையில் NSU உடன் உளவுத்துறையின் ஒத்துழைப்பை ஒரு வருந்தத் தக்க தவறு, மற்றபடி திறமையானதுடன், சட்டரீதியான அதிகாரத்தை கொண்டுள்ளது என்னும் அனைத்துக் கட்சி கொடுக்கும் முயற்சிக்கு ஆதரவாகத்தான் உள்ளனர்.

உண்மையோ ஆரம்பத்தில் இருந்தே உளவுத்துறை தீயணைக்கும் வீரர் என்பதை விட தீ வைப்பவர் என்னும் பங்கைத்தான் செய்துள்ளது. இது 1955ம் ஆண்டு ஹூபேர்ட் ஷ்ருபேர்ஸ் ஆல் இது நிறுவப்பட்டது. அவரோ நாஜி ஆட்சியில் அதிரடிப்பிரிவான SA பிரிவில் உறுப்பினராக இருந்ததுடன் நாட்டின் தலைமை வக்கீலாகவும் இருந்துள்ளார். விக்கிபீடியா எழுதியுள்ளபடி, முன்னாள் SS உறுப்பினர்களை அவர் இரகசியப் பிரிவுகள் பலவற்றில் ஏராளமான பதவிகளில் இருத்தியுள்ளார். அதேபோல் அதன் உளவுத்துறையான SD க்கும் ஒத்துழைத்துள்ளார்.

1990 களின் தொடக்கத்தில் இருந்து, உளவுத்துறை முகவர்கள் குறித்துப் பெரும்பாலும் இரகசிய முகவர்கள் ஜேர்மனியில் நவ பாசிச பிரிவினரிடையே ஒரு முக்கிய பங்கு கொண்டிருக்கின்றனர் என பல அறிக்கைகள் வந்தன. அப்பிரிவில் தண்டனைக்கு உட்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அடங்குவர். தீவிர வலதுசாரி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NPD) ஏழு செயற்பாட்டாளர்களில் ஒருவர்  உளவுத்துறையிடம் இருந்து ஊதியம் பெறுகின்றார் என்பது வெளிப்பட்டது.

நிறுவப்பட்டதில் இருந்தே, இப்பிற்போக்குத்தன அமைப்பு இடதுசாரி அமைப்புக்கள், தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன இயக்கத்திற்கு எதிராகத்தான் முற்றிலும் இயக்கப்பட்டது. 1972ம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சியின் சான்ஸ்லர் வில்லி பிராண்ட், Radical Decree சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்தே உளவுத்துறையின் முகவர்கள் பெரும்பாலும் இளைஞர்களான பொதுப்பணிக்கு வர ஆர்வம் காட்டிய 1.4 மில்லியன் பேரின் கோப்புக்களை ஆராய்ந்து, இடதுசாரி அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களுக்கு வேலைகள் கிடைப்பதை தடுத்துவிட்டனர். இத்தடை இடதுசாரிகள் அரசியலமைப்பின் விரோதிகள் என்ற கூற்றின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது, அதாவது, பொதுவாக நாட்டுத் துரோகம் செய்யக்கூடியவர்கள் என.

இதே வாதம் இப்பொழுது நெஸ்கோவிக்கினால் உளவுத்துறையை எதிர்ப்பவர்களை மௌனப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. உளவுத்துறைப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்னும் அழைப்புக்கள் நிராகரிக்கப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் “அரசியலமைப்பைக் பாதுகாத்தல் என்னும் கடமையைத் தடுத்து நிறுத்த முற்படுவதே ஓர் அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும்” என்றார். ஜேர்மனியில் சொற்களை தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் முக்கியம்; அரசியலமைப்பைக் பாதுகாத்தல் என்னும் பெயரில், அரசாங்கம் தனிப்பட்ட நபர்கள் சில பணிபுரிவதை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் முழு அரசியல் அமைப்புக்களையும் தடைக்கு உட்படுத்தும் அதிகாரத்தை பெறுகின்றது.

இடது கட்சி ஏற்றுள்ள நிலைப்பாடு அது ஒரு முதலாளித்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் கட்சி என்ற பங்கைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. இடது கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆதிக்கம் கொண்டிருந்த தொழிலுக்கும் சமூக நீதிக்குமான தேர்தல் மாற்றீடு (WASG) மற்றும் ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (PDS-கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிச ஆளும் கட்சியின் பின்தோன்றல்) இவற்றின் இணைப்பில் தோன்றியது. எனவே இது தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதில் நீண்டகாலப் பொலிஸ் அரசாங்க அடக்குமுறை வரலாற்றை கொண்டது ஆகும்.

ஸ்டாசி -Stasi- இரகசியப் பொலிஸ் என்னும் இழிந்த அமைப்பைத் தோற்றுவித்த ஸ்ராலினிசக் கட்சியில் இருந்து வெளிப்பட்ட PDS சுயாதீன வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஜேர்மனியுடன் முதலாளித்துவ மறுஇணைப்புக்காலத்தில் நசுக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. கட்சியின் மூத்தோர் குழுத் தலைவரான ஹான்ஸ் மோட்ரோ பல முறையும் அந்தக் கொந்தளிப்பு நிறைந்த மாதங்களில் “சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுவதில்” கட்சிக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்றார்.

இடது கட்சி இப்பொழுது உளவுத்துறை விவகாரத்தில் அதன் வேர்களுக்கு தெளிவாகத் திரும்பி விட்டதுடன் மற்றும் “அரசியலமைப்பின் விரோதிகளுக்கு எதிரான” போராட்டத்திற்கு உறுதியளிக்கிறது என்னும் உண்மை சமூக சமத்தவமின்மையின் வளர்ச்சி, தொழிலாள வர்க்கத்தின் மீதான பெருகிய தாக்குதல் ஆகியவற்றுடன் இணைத்துள்ளது. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர், அதே நேரத்தில் வங்கிகள் நூற்றுக்கணக்கான பில்லியன்களை பொது நிதிகளில் இருந்து பெறுகின்றன.

இது தவிர்க்க முடியாமல் சமூக எழுச்சிகள் மற்றும் வர்க்கப்போராட்டங்களின் வெடிப்புத் தன்மை நிறைந்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஜேர்மனியிலுள்ள ஆளும் வர்க்கம், ஐரோப்பா, அமெரிக்க, மற்றும் சர்வதேசரீதியாக இருப்பதைப் போலவே, இந்த நிலைமைக்குத் தயாரிக்கும் வகையில் அரசாங்கத்திற்கு ஒடுக்கும் கடுமையான அதிகாரங்களைக் கட்டமைக்கின்றது.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் இப்பொழுது முதலாளித்துவ அரசாங்கங்களின் கீழுள்ள அனைத்து வகை அரசியல் முறைகளிலும் இல்லாதொழிக்கப்படுகின்றன. எங்கு தேவைப்பட்டாலும், கிரேக்கம், இத்தாலி போல், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்படாத தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படுவதுடன், தீவிர வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்திற்குள் நுழைய ஆதரவு கொடுக்கப்படுகின்றன. ஜேர்மனியில் உளவுத்துறையின் பணி பாசிச பயங்கரவாதிகளை வளர்த்து பாதுகாத்தல், கொலைகாரர்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்தல் என்பது ஆளும் உயரடுக்கு எந்த அளவிற்கு இது குறித்துத் தயாராக உள்ளது என்பது பற்றிய ஒரு காட்சியைத் தருகிறது.

வர்க்க சக்திகளின் துருவப்படுத்தல் ஒவ்வொரு அரசியல் போக்கையும் அதன் உண்மை நிறத்தைக் காட்டவும், அதன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தவும் நிர்ப்பந்திக்கின்றது. இது தெளிவாக இடது கட்சியின், வலதுசாரி முதலாளித்துவத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.