சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Middle-class protest politics or a socialist orientation to the working class: A critique of the politics of CLASSE

மத்தியதர வகுப்பு எதிர்ப்பு அரசியலா அல்லது தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு சோசலிச நோக்குநிலையா: CLASSE இன் அரசியல் பற்றிய ஒரு விமர்சனம்

By Keith Jones
7 July 2012

use this version to print | Send feedback

CLASSIE செய்தித் தொடர்பாளர் ஜென்னி ரோனால்ட்ஸுடன் WSWS நடத்தி,  வெளியிட்டுள்ள பேட்டி (See: “We have shaken Quebec’s government”) CLASSE உடைய தலைமை போராடும் எதிர்ப்புபோராட்ட முன்னோக்கிற்கு உதாரணம் ஆகும். ஏதேனும் ஒரு வகையில் கியூபெக்கின் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  மாணவர்களிடையே பரவலாக இருக்கும் கருத்துக்கள் பற்றியும் அது வெளிப்படுத்துகிறது.

அதன் போர்க்குணமிக்க, பெருவணிக எதிர்ப்பு வார்த்தைஜாலங்களினால் CLASSE இளைஞர்களின் பரந்த அடுக்குகளிடம் இருந்து ஆதரவைத் திரட்டியுள்ளது. “சமூக அமைதி” என்ற பெயரில் வேலைகள், ஊதியங்கள் மீதான பெருவணிகத்தின் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் மற்றும் கியூபெக்கின் லிபரல், கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கங்கள் நடத்தும் தாக்குதலுக்கான எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்கி வைத்திருக்கும் நிலைமையில் CLASSE சட்டம் 78 மீறப்பட வேண்டும் என்று கொடுத்துள்ள அழைப்பு பரந்துபட்ட சீற்றத்திற்கு ஒரு நெருப்பு வைக்கும் கருவியாயிற்று. இது Charest அரசாங்கம் மற்றும் கனேடிய ஆளும் உயரடுக்கு முழுவதையுமே அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

இவ்வாறு இருந்தாலும்கூட, CLASSE உடைய தலைமை முன்வைக்கும் கருத்துக்கள் பலவும் தவறானவையும், இன்னும் முக்கியமான விடயங்களில் தொழிலாள வர்க்கம் பற்றி இது கொண்டிருக்கும் ஏளனமான பார்வையில் ஆபத்தானதும் கூட.

எவ்வாறுதான் இருந்தாலும், CLASSE உடைய முன்னோக்கு அடிப்படையில் FECQ, FEUQ என்னும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆதரவு தரும் மாணவர் சங்கங்களிடம் இருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. மற்றும் இது வெளிப்படையாக பெருவணிக Parti Quebecois (PQ) கட்சிக் ஆதரவு கொடுப்பாதகும். FECQ, FEUQ போன்றே, CLASSE உடைய அரசியல் முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொண்டதை அடித்தளமாகக் கொண்டது. இது சற்றே சத்தமாகவும், மிக வலுவான எதிர்ப்புக்களை காட்டினாலும் அரசாங்கத்திற்கும் ஆளும்வர்க்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வகையில் CLASSE செய்தித் தொடர்பாளர் ரேனோல்ட்ஸ் ஒரு “சமூக வேலைநிறுத்தத்திற்காக” தொழிற்சங்கங்களின் ஆதரவை பெறுவதில் CLASSE வெற்றி அடைந்தால், அது அரசாங்கத்தை பயிற்சிக் கட்டண அதிகரிப்பைத் திரும்பப் பெறுவதற்கான அழுத்தம் கொடுக்கும் எனவும் இதனால் “நம் அரசாங்கங்கள்.... வங்கிகள், பெருநிறுவனங்களுக்காக மற்றும் 1 விகிதத்தினருக்காக அங்கு ஆட்சி புரியவில்லை, அவை ...அனைவருடைய பொதுநலத்திற்காகவும்தான் ஆட்சி புரிகின்றது” என்று அர்த்தப்படும் என்றார்.

PQ மற்றும் பிற அமைப்புக்கள் வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டு லிபரல்கட்சியினருக்கு பதிலாக வரவிருக்கும் தேர்தல்களில் PQ அதிகாரத்தில் இருத்தப்பட கவனம் காட்டப்பட வேண்டும் என வாதிடுபவற்றைக் ரேனோல்ட்ஸ் குறை கூறுகிறார். அத்தகைய முன்னோக்கு கியூபெக் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் கோஷமான “வீதிகளுக்குப்பின், வாக்குப்பெட்டிக்கு” என்பதினால் வெளிப்படுகின்றது. ஆயினும்கூட, ரேனோல்ட்ஸ் PQ “ஒரு குறுகிய காலத் தீர்வாக” இருக்க முடியும், ஏனெனில் இதன் போக்கில் “குறைந்த கடும்போக்குத்தான் உள்ளது”, இது அழுத்தத்திற்கு அதிகம் உட்படக்கூடியது என்றார். Quebec Solidaire என்னும் கியூபெக் சுதந்திரச்சார்பு “இடது” கட்சியை அவர் பாராட்டுகிறார். ஏனெனில் “வலதை” தோற்கடிக்க அது PQ உடன் தேர்தல் கூட்டணியை கொண்டுவர முன்வந்துள்ளதால்.

பகிஸ்கரிப்பின் ஆரம்பத்தில் இருந்தே CLASSE சாரெஸ்ட் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக ஒரு பரந்த இயக்கத்தை வளர்க்க முற்பட்டுள்ளதாக ரேனோல்ட்ஸ் கூறுகிறார். ஆனால் பெருநிறுவனச் செய்தி ஊடகம் இத்தகவலைச் சிதைத்து நசுக்கிவிட்டது. கேள்விக்கு இடமின்றி, செய்தி ஊடகம் முறையாக மாணவர் வேலைநிறுத்தம் கூறித்து பொய்களைக் கூறியுள்ளது, கல்வி ஒரு சமூக உரிமை என அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் மாணவர்களின் போராட்டத்தை, “தன்னலமானது”, மற்றவர்கள்மீது “சுமையை” ஏற்றுவது என்று சித்தரித்துள்ளது. எவ்வாறியினும்கூட, ரேனோல்ட்ஸுடைய கூற்றுக்களும் தவறானவையும் மற்றும் தங்களையே ஏமாற்றிக் கொள்ளுதல், புரிந்து கொள்ளாத்தன்மை இவற்றின் கலவையாகும்.

“பாரியளவில் அணிதிரண்டு நின்றால், நாம் வெற்றி அடைவோம் (qu’on se mobilise en masse, on gagne), என்னும் கோஷத்தின்கீழ் FECQ, FEUQ உடன் இணைந்து CLASSE, வேண்டுமென்றே பல்கலைக்கழகக் கட்டண உயர்விற்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை சாரெஸ்ட் அரசாங்கத்தின் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள், பணம் கொடுத்து பயன்பெறுக மற்றும் பிற்போக்கான வரி உயர்வுகள் இவற்றிக்கு எதிரான போராட்டங்களில் இருந்து பிரித்துவிட்டது. நாட்டில் உள்ள ஏனையவர்கள் ஒருபுறம் இருக்க, கியூபெக்கில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சி எதிலும் அது ஈடுபடவில்லை

இந்த முன்னோக்கின் வெளிப்படையான தோல்வியை முகங்கொடுக்கையில். அதாவது அரசாங்கம் வேலைநிறுத்தத்தை சட்டம் 78ன் கீழ் குற்றமாக்கிய உதாரணத்தைப் பார்க்கையில் “சமூக வேலைநிறுத்தம்” என்பதற்கான அழைப்பை CLASSE விடுத்துள்ளது.

இந்த அழைப்பு மாணவர்களிடையே எதிரொலியைக் கண்டுள்ளது. அவர்கள் தங்கள் போராட்டத்தை பரந்தளவானதாக்க வேண்டும் என்பதை அங்கீகரிக்கின்றனர். ஏனெனில் பிரச்சினை பயிற்சிக் கட்டண அதிகரிப்புக்களுக்கும் அப்பால் செல்லுகிறது. ஆனால் ரேனோல்ட்ஸின் கருத்துக்கள் தெளிவாக்குவது போல், CLASSE, சமூக வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் ஒரு பெரிய எதிர்ப்பு என்றுதான் கருத்திற் கொண்டுள்ளதே தவிர சாரெஸ்ட் லிபரல் அரசாங்கத்தை வீழ்த்தி, ஒரு சுயாதீன, கனடா முழுவதும் தழுவும் தொழிலாள வர்க்கத்தின் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கான போராட்டம் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

மேலும் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வேலைக்கான நடவடிக்கை, ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்குக்கூட தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், CLASSE ஒரு சமூக வேலைநிறுத்தத்திற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் தோற்றுவிட்டது என்பது தெளிவு. ஜூன் 22 மொன்ட்ரீயால் மற்றும் கியூபெக் நகரங்களில் நடைபெற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்களை சமூக வேலைநிறுத்தத்திற்கான தேவை என்பதை முன்னெடுக்கவில்லை. மாறாக  CLASSE, உடைய செய்தித்தொடர்பாளர் Gabriel Nadeau-Dubois நிருபர்களிடம் CLASSE உடைய முன்னுரிமை லிபரல் அரசாங்கத்தைத் தோற்கடிப்பது என்றார். அதே நேரத்தில் PQ விற்கு எதிராக எந்தக் குறையும் கூறவில்லை.

இப்பாதை காட்டிக் கொடுப்பிற்குத்தான் வழிவகுக்கும். CLASSE, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஆளும்தட்டு முழுவதினதும்  தொங்குதசையாகி, சாரெஸ்ட் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான முழு எதிர்ப்பை PQ விற்கு ஆதரவு என்ற செயற்பட்டியலுக்கு திருப்புவதாக அமையும். அக்கட்சியோ, கடைசியாகப் பதவியில் இருந்தபோது, தொழிற்சங்கங்களுடைய ஆதரவுடன் கியூபெக்கின் வரலாற்றிலேயே மிகப் பெரிய சமூகநலக் குறைப்புக்களைச் சுமத்தியது. அதன் பின் சட்டம் 78 ஐப் போன்ற ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி 1999ம் ஆண்டு தாதிமார்  வேலைநிறுத்தத்தை முறிக்கப் பயன்படுத்தியது.

ஏற்கனவே மே கடைசியில், CLASSE, மற்ற மாணவர் சங்கங்களுடன் அரசாங்கத்தின் பிற்போக்குத்தன நிதிய வடிவமைப்பிற்குள் பேச்சுக்களை நடத்த உடன்பட்டது. ஓர் மாற்றுதிட்டமான பயிற்சிக் கட்டண உயர்வில் பெரும்பகுதியை ஒப்புக் கொண்டதற்குத் துணை நின்றது.

பயிற்சிக் கட்டண அதிகரிப்பை எதிர்க்கையில் மாணவர்கள் லிபரல் அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு வந்துவிட்டதுடன், கனேடிய ஆளும் வர்க்கம் முழுவதுடனும் அதன் அரசாங்க அடக்குமுறைக்கருவிகளான பொலிஸ், நீதிமன்றங்கள் ஆகியவற்றையும் எதிர்கொண்டது. இதற்குக் காரணம் மாணவர்கள் வேலைநிறுத்தம் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவம் 1930 பெருமந்த நிலைக்குப் பின்னர் உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம்தான் விலை கொடுக்க வேண்டும் என்னும் உந்துதலுக்கான உட்குறிப்பான சவால் ஆகும்.

கல்விக்கான உரிமை என்பது அரசியல் ஆளும்தட்டிற்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் அடையப்பட முடியாது. தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக திரட்டுவதின் மூலம்தான் முடியும். பெருவணிகம் சமூகப்-பொருளாதார வாழ்வின் மீது கொண்டுள்ள இரும்புப் பிடியை முறிக்கும் ஒரே சமூகச் சக்தி தொழிலாள வர்க்கம்தான். ஒரு வர்க்கம் என்னும் முறையில் அதன் நலன்களை நடைமுறைப்படுத்த, சமூகத்தை தனியார் இலாபங்களுக்காக இல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்திசெய்வதை இலக்காக கொண்ட கொள்கையினால் முற்போக்குத்தனமாக மறுகட்டமைக்கும்.

ஆனால் இந்த முக்கியமான பிரச்சினையில்தான் துல்லியமாக, அதாவது தொழிலாள வர்க்கத்தின் விடுதலைசெய்யும் திறன் பற்றியே CLASSE உடைய முன்னோக்கு பலவீனமானதாகவும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமாகவும் உள்ளது.

ரேனோல்ட்ஸ் தொழிலாள வர்க்க ஆதரவைப் பெறும் வாய்ப்பை உதறித்தள்ளிய வகையில்தான் பேசினார். அவருடன் சேர்ந்தவரும் CLASSE இன் செய்தி ஊடகத் தொடர்பாளரான Ludvic Moquin-Beaudry இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடப்படவேண்டும். ரேனோல்ட்ஸ், மோக்வின் பியோட்ரி இருவருடைய கருத்தின்படியும் தொழிலாள வர்க்கம் அல்லது குறைந்தப்பட்சம் அதன் பெரும் பிரிவுகள் “முதலாளித்துவமாகிவிட்டன” நுகர்வோர் சமூகக் கருத்தை ஏற்றுவிட்டன, “பெரிய கார், பெரிய வீடு என்னும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டுவிட்டன.” என்றே உள்ளது.

“கியூபெக்கில் தொழிலாள வர்க்கம் உண்மையில் கடினமானகாலத்தில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார் ரேனோல்ட்ஸ். அதன் பின் வர்க்கப் போராட்டம் என்ற கருத்து குறித்து எச்சரித்தார். குறைந்தப்பட்சம் மரபாரந்தவகையில் விளங்கிக்கொள்ளப்பட்ட வர்க்கப்போராட்டம் காலம் கடந்து விட்டது என்றார். இத்தகைய கருத்து கால் நூற்றாண்டு காலமாக அனைத்து முக்கிய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒரு பக்க வர்க்கப் போர் நடைபெற்ற பின்னரும், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகவாத, ஸ்ராலினிசக் கட்சிகள் உடைய காட்டிக்கொடுப்பால் தொழிலாள வர்க்கம் சமூக நிலையில் பெரும் சரிவைச் சந்தித்த பின்னரும் இதைக்கூறுகின்றார்.  

தன்னுடைய சொந்த ஊரான தென்மேற்கு கியூபெக்கில் இருக்கும் தொழில்நகரம் Valleyfield பற்றிப் பேசிய ரேனோட்ஸே ஆலை மூடல்களால் ஏற்பட்ட சமூகப் பேரழிவைப்பற்றிக் குறிப்பிட்டார். முன்னதாக அவர் பொதுத்துறை ஊழியர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு சில மணி நேரம் கூட போராடினால் தமது சலுகைகளை இழக்கக்கூடிய வகையில் உள்ள கடுமையான சட்டங்களை எதிர்கொள்ளும் நிலைமை பற்றிக் குறிப்பிட்டார்.

CLASSE இன் தலைமை தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டுள்ள இகழ்வுணர்வு ஒரு பலவகைப்பட்ட அரசியல் சக்திகளினாலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது, வளர்க்கப்படுகிறது; இதில் பல “இடது” மற்றும் அனார்க்கிச போக்குகளும் உள்ளன.

தொழிலாள வர்க்கம் “அகற்றிவிடுதல்” என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து எழும் ஜனநாயக கேள்விகளை வேண்டுமென்றே துண்டிக்கும் பிரச்சாரத்தின் மையத்தானத்தில் உள்ளது. இப்பிரச்சாரம் அடையாள அரசியலை நெறிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது; அதுதான் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்குத் தாழ்த்தி வைத்து, சலுகை பெற்ற பிரிவினர் “முதலாளித்துவ ரொட்டியில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு” “இடது மறைப்பை” கொடுக்கிறது. இந்த நோக்கத்திற்கு உடன்பாட்டு நடவடிக்கைகள் (ஒருவகையில் கறுப்பினத்தவரை இழிவுபடுத்தல்) மற்றும் கியூபெக்கைப் பொறுத்தவரை, தீவிர நாட்டுப்பற்றுவாத மொழிச்சட்டங்கள், கியூபெக் சுதந்திரம் என்பவை துணைபுரிகின்றன.

CLASSE தலைவர்கள் தொழிலாளர்கள் பற்றிப் புகார் கூறுகையில், இதில் உள்ள உண்மை இன்றுவரை வேலைநிறுத்த மாணவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான அழைப்பை முன்வைக்கக்கூட இல்லை என்பதுதான். அத்தகைய அழைப்பு வேலைநிறுத்தத்தின் உட்குறிப்பான முதாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு சவால் என்பதை வெளிப்படையாக்கியிருக்கும்; வேலைநிறுத்தத்தை அடக்குவதில் தொழிற்சங்க அதிகாரத்துவம் கொண்டிருக்கும் உண்மையான பங்கையும் அம்பலமாக்கியிருக்கும்.

CLASSE தலைவர்கள் தொழிலாள வர்க்கத்தின்மீது கொண்டிருக்கும் இகழ்வுணர்வு, கியூபெக் தேசியப் பார்வை என்னும் குறுகிய தன்மையுடன் இணைந்து செல்கிறது. CLASSE உடைய தலைமை தன்னை தீவிரமானதாக கருதுவதுடன், சட்டம் 78 ஐ மீறுவதில் உண்மையான தைரியத்தைக் காட்டியுள்ளது. பகிஸ்கரிப்பை அரசியல்-அரசியலமைப்பு வடிவமைப்பின் நெறிக்குள் முற்றிலும் கட்டமைத்துள்ளதுடன், கியூபெக் உயரடுக்கின் தேசியவாத சிந்தனைப்போக்கை உள்ளுணர்வுடன் ஏற்றுக்கொள்கின்றது.

கனடா முழுவதும் ஆளும் வர்க்கம் சாரெஸ்ட்டிற்கு ஆதரவு கொடுத்து நிற்கையில், அதன்அடிப்படை வர்க்க நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை உணர்ந்திருக்கையில், CLASSE கியூபெக்கிற்கு வெளியே இருக்கும் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, மாணவர்களுக்கு கூட அழைப்பு ஏதும் விடவில்லை. மாணவர் பகிஸ்கரிப்பு அதிகரிக்கையில், மத்திய கன்சர்வேடிவ் அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் பில்லியன்களை குறைத்துள்ள ஒரு மிருகத்தனமான வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட CLASSE உடைய தலைவர்கள் அதிகப்பட்சம் ஹார்ப்பர் அரசாங்கம் பற்றி எப்பொழுதாவதுதான் பேசுகின்றனர். அவர்கள் NDPயின் போலிக்காரணமான அது மாநில அளவிலான விடயமானதாலும் மற்றும் மத்திய கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தான் கவனம்செலுத்த  விரும்புவதால் மாணவர் போராட்டத்தை ஆதரிக்காததுடன் சட்டம் 78 க் கண்டிக்கவில்லை என்பதையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை.

கியூபெக் தேசியவாதத்தில் முற்போக்கான கருத்து ஏதும் இல்லை. இவ்வாறு கூறுவது, கனேடிய ஆளும் வர்க்கத்தின் கூட்டாட்சி அரசு அல்லது அதன் கனேடிய தேசியவாத சிந்தனாவாதத்திற்கு ஆதரவு என ஆகாது. கூட்டாட்சி மற்றும் கியூபெக் சுதந்திர அல்லது இறைமைவாதிகளுக்கு இடையே உள்ள முதலாளித்துவப் பிரிவுகளின் மோதல் கியூபெக்கிலும் கனடா முழுவதும் தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதற்கும் மற்றும் வர்க்கப் பிளவை மறைப்பதற்குத்தான் பயன்படுகிறது. நாட்டின் அனைத்துப் பகுதியிலும் இருக்கும், உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களைப் போலவே, பொதுப் பிரச்சினைகளைத்தான் க்யூபெக் தொழிலாளர்களும் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் உண்மை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்க அதிகாரத்துவம் க்யூபெக்கில் எழுந்த ஒரு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க எழுச்சியை பெருவணிக PQ விற்கு ஆதரவாகத் திசைதிருப்புவதில் வெற்றி பெற்றது. இது கனடா முழுவதும் தொழிலாளர்களுக்குப் பேரழிவு தரும் விளைவுகளைத்தான் கொடுத்தது.

மாணவர் பகிஸ்கரிப்பை போர்க்குணமிக்க எதிர்ப்பு இயக்கத்துடன் நிறுத்திக் கொள்வது, அதுவும் கியூபெக்கின் எழுச்சிக்கு ஏற்றம் கொடுப்பதுடன் என்ற முறையில், CLASSE கியூபெக் மற்றும் கனடா முழுவதும் உள்ள ஆளும் வர்க்கத்தை வலுப்படுத்துகிறது. முழு நனவுடன் இதைச் செய்கிறதோ இல்லையோ, இது முதலாளித்துவத்தை கியூபெக்கில் உள்ள எதிர்ப்பு இயக்கம் ஹார்ப்பர் அரசாங்கத்திற்கு எதிரான சவாலை தொழிலாள வர்க்கம் கொடுப்பதைத் தடுப்பதற்கு உதவுகிறது. அதேபோல் கியூபெக்கிற்கு வெளியே இருக்கும் தொழிலாளர்கள் கியூபெக் மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்க வருவதையும் தடுக்கிறது.

இங்கும் தவறு மீண்டும் CLASSE காலடிகளில் மட்டும் விட்டுவிடப்படமுடியாது. Quebec Solidaire அமைப்பில் அனைத்துவித போலி மார்க்ஸிஸ்ட்டுக்களும் காணப்படலாம். இவர்கள் பல தசாப்தங்களாக கியூபெக் சுதந்தி தேசியவாதம் முற்போக்கானது என்ற கருத்தை வளர்ப்பவர்களாவர். 1995 கியூபெக் சர்வஜன வாக்கெடுப்பின்போது இச்சக்திகள் PQ வின் திட்டமான NAFTA, NATO மற்றும் NORAD ஆகியவற்றைச் சேர்ந்ததாக இருக்கும் ஒரு முதலாளித்துவ கியூபெக் குடியரசு என்பதற்கு ஆதரவு கொடுத்தன.

NDP மற்றும் கனேடிய தொழிலாளர் காங்கிரசும் இதற்கிடையில் பல தசாப்தங்கள் கியூபாவின் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்ற நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. அவை பிற்போக்குத்தன கனேடிய தேசியவாதத்திற்கு ஆதரவு கொடுத்து கனேடிய அரசையும் பாதுகாக்கின்றன. NDP ஐப் பொறுத்தவரை கியூபெக் மாணவர்களுக்கு அவை ஆதரவு கொடுக்க மறுப்பது மற்றும் இவர்களின்  தோல்விக்கு பகிரங்க ஆதரவு கொடுப்பது பிரெஞ்சு மொழிபேசும் கியூபெக் மற்றும் ஆங்கிலம் பேசும் தொழிலாளர்களுக்கு இடையே பிளவை அதிகரிக்கும் பாத்திரத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது

ஐயத்திற்கு இடமின்றி பல CLASSE தலைவர்கள் –ரேனோல்ட்ஸிற்கு 20 வயதுதான் ஆகிறது—தங்கள் அரசியல் கருத்துக்களின் மூலாதாரம் மற்றும் சமூக முக்கியத்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள். ஆனால் இதன் பொருள் இக்கருத்துக்கள் குறைந்த ஆபத்தை உடையவை என்று பொருளாகிவிடாது.

இறுதிப்பகுப்பாய்வில், இந்த கருத்துக்கள்தான் சமீப தசாப்தங்களில் பெருவணிகம் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு செல்வத்தையும் அதிகாரத்தையும் சிறு வணிகர்கள், முதலாளித்துவ பொதுநல அரசின் நிர்வாகிகளுடைய இழப்பில் மறு பங்கீடு செய்யப்படுவதற்கு மத்தியதர வகுப்பின் சலுகை பெற்ற தட்டுக்களிடையே இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டும் குரல் ஆகும். தங்கள் சொந்தச் சலுகைகள் குறித்து கவலை கொண்ட இந்தத்தட்டுக்கள் முதலாளித்துவத்திற்கு வரும் உண்மையான சவாலுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கு உடையவை, அதாவது தொழிலாள வர்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்திற்கு. இவை தேசியவாத மற்றும் அடையாள அரசியலைத்தான் வளர்ப்பதுடன், PQ போன்ற கட்சிகளினதும் மற்றும் சமூக ஜனநாயக NDP, தொழிற்சங்கங்களினது  அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன.

Charest  அரசாங்கத்தின் பயிற்சிக் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான மாணவர்களின் உறுதியான போராட்டம் தடம்புரளாமல் இருக்கவேண்டும் என்றால், இன்னும் முக்கியமாக சமூக சமத்துவத்திற்கு அது நிலையான பங்களிப்பைக் கொடுக்க வேஏண்டும் என்றால், அது  கனடா முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தைத் திரட்டுவதற்கான ஊக்கியாக இருக்க வேண்டும். அது சாரெஸ்ட் லிபரல் மற்றும் ஹார்ப்பர் அரசாங்கங்களை வீழ்த்த வேண்டும், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான வெகுஜன இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிடம் இருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் முறித்துக் கொள்வதற்கு மாணவர்கள் முக்கிய பங்கைக்கொள்ளலாம். அதேபோல் தொழிலாள வர்க்கம் தங்கள் வர்க்க நலன்களை மேம்படுத்தவும் புதிய போராட்ட அமைப்புக்களை நிறுவுவதற்கும் உதவலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் பொருள் உண்மையான புரட்சிகரத் தலைமையைக் கட்டமைப்பதற்கு போராடுவதுதான். அதாவது ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் புரட்சிகரத் தொழிலாளர்கள் கட்சியை அமைப்பதுதான்.