சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The self-immolation of Moshe Silman

மோஷே சில்மன் இன் தீக்குளிப்பு

Chris Marsden
19 July 2012

use this version to print | Send feedback

மோஷே சில்மன் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டது, இஸ்ரேல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னும் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அரசியல் முன்னோக்கு பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.

சில்மனுடைய செயல் ஒரு பெருந்திகைப்பான செயல் ஆகும்; இதற்கு இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கு முற்றிலும் பொறுப்பைக் கொண்டது. தன்மீது பெட்ரோலைத் தெளித்துக்கொள்ள அவருக்குத் தூண்டுதல் கொடுத்த இழிந்த சொந்தச் சூழ்நிலை, மரணத்திற்கு வெகு அருகே உடலில் 90% தீக்காயங்களுடன் அவரை நிறுத்தியது நன்கு அறியப்பட்டதே ஆகும்.

அவருடைய தற்கொலைக் குறிப்பு இரு விடையங்களுக்கு நேர்த்தியான சான்றாகும்: ஒன்று, சாதாரண சிறு வியாபாரி ஒருவர், நிதானமான வெற்றியும் அடைந்தவர், இஸ்ரேல் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் வறுமையில் அமிழ்த்தப்பட்டது எப்படி; இரண்டாவது அரசியல் வர்க்கம் மற்றும் அரச அதிகாரிகள் இதைச் சற்றும் பொருட்படுத்தாமல் சாதாரணமாக அலட்சியம் கொண்டிருப்பது.

 “இஸ்ரேலிய அரசு என்னிடத்தில் இருந்து திருடிக் கொள்ளையடித்துள்ளது. என்னிடம் அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று அவர் எழுதியுள்ளார்.

என்னால் மருந்துகள் வாங்க முடியவில்லை, வீட்டு வாடகையையும் கட்ட முடியவில்லை. இஸ்ரேலிய அரசாங்கத்தைத்தான்பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தென்யாகு, நிதி மந்திரி யுவல் ஸ்டீனிட்ஸ்நான் குறைகூறுவேன்... வறியவர்களிடம் இருந்து பறித்து செல்வந்தர்களுக்குக் கொடுக்கின்றனர் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

பலரைவிட இன்னும் அதிகம் அவர் சரிந்துபோனாலும், சில்மன்னுடைய அனுபவங்கள் மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்களால் இன்னும் அதிக இடர்களை அனுபவிப்பவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆயினும்கூட, செய்தி ஊடகமும் அரசியல் வாதிகளும் அவருடைய தலைவிதியில் இருந்து பரந்த முடிவுகள் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். நெத்தென்யாகுவை பொறுத்தவரை, சில்மன்னுடையது ஒரு தனிநபருடைய பெரும் சோகம்; எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஷெல்லி யாசிமோவிச், “சில்மன் விவகாரம் நிச்சயமாக ஒரு சமூக எதிர்ப்பிற்கான அடையாளம் என பார்க்கப்படக்கூடாது என வலியுறுத்துகிறார்.

ஜெருசெலம் போஸ்ட்  குறிப்பிடத்தக்க வகையில் டிசம்பர் 2010 அன்று துனிசிய சிறுவியாபாரி மகம்மது பௌவாஜிஜி தன்னைத் தீ வைத்துக் கொண்டு மடிந்ததுடன் இதை ஒப்பிட்டுள்ள கருத்துக்கள்மீது சீற்றம் கொண்டுள்ளது.  பௌவாஜிஜியின் தற்கொலை வெகுஜன இயக்கத்தில் கிரியா ஊக்கப் பங்கைக் கொண்டிருந்தது; அந்த இயக்கம்தான் இறுதியில் ஆட்சியின் வீழ்ச்சியுடன் முடிவுற்று, பின்னர் எகிப்திற்கும் அதற்கு அப்பாலும் பரவியது.

ஜெருசெலம் போஸ்ட்  தலையங்கமாகக் கூறியிருப்பது: இஸ்ரேலின் இயக்கவியல், சுதந்திரமான பொருளாதாரம், ஒப்புமையில் தாராளமான நலன்புரி அரசு, நெரிக்கும் சுயநலத்திற்காக சிலரை ஆதரிக்கும் பைசன்டைன் அதிகாரத்துவம், ஒருதலைப்பட்சத் தடைகள் என்று அப்பொழுது துனிசியாவில் இருந்த ஜைன் எல் அபிடைன் பென் அலியுடைய சர்வாதிகார ஆட்சியுடன் ஒப்பிடப்படலாமா?

இதற்கு விடை, மிகத் தெளிவாக, ஆம் என்பதுதான்.

சில்மன் ஜூலை 15ம் திகதி, ஜூலை 14 இயக்கம் என அறியப்பட்டதின்  வெகுஜன சமூக எதிர்ப்புக்கள் உடைய முதலாம் ஆண்டு நினைவைக் குறிக்கும் ஆர்ப்பாட்டத்தன்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்; கடந்த ஆண்டின் எதிர்ப்புக்களோ அதன் உச்சக்கட்டத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் இஸ்ரேலியர்களில், மொத்த 7.75 மில்லியனே இருக்கும் மக்கட் தொகையில், தெருக்களுக்குக் கொண்டு வந்தது.

அதிகரித்துள்ள வீட்டு வாடகை, விலை ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்புக்கள் வெகுஜன ஆதரவைப் பெற்றுள்ளன. அவை தன்னலக்குழுவிற்கு எதிரான இலக்கைக் கொண்டுள்ளன--அதாவது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் 20 குடும்பங்களுக்கு எதிராக; வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளிலேயே மிக அதிக வறுமையும் சமத்துவமின்மையையும் ஏற்படுத்திய முறையில்; 75% தொழிலாளிகள் மாதம் ஒன்றிற்கு $1,700 அல்லது அதைவிடக் குறைவாகச் சம்பாதிக்கும் நாட்டில்.

இந்த எதிர்ப்புக்கள் இஸ்ரேலிய முலாளித்துவத்திற்கு தேவையான ஒரு கற்பனையை செயலற்றுப்போகச் செய்துவிட்டன; அதாவது இஸ்ரேல் பிற மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளில் இருந்து வேறுபட்டது; இங்கு ஜனநாயகம், பொருளாதார வளமை என்னும் பெரும் சிறப்பு நிலைமகள் உள்ளன என என்பதைத்தான் ஜெருசெலம் போஸ்ட் மீண்டும் பயன்படுத்த முற்படுகிறது. உண்மையில் இஸ்ரேலில் நடக்கும் இந்த எதிர்ப்புக்கள் தவிர்க்க முடியாமல் பிராந்தியம் முழுவதும் நடைபெறும் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிகளுடன் பிணைந்துள்ளது, அவையோ உலக முதலாளித்துவ முறையின் மோசமாகும் நெருக்கடியினால் உருவாக்கப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இவை மற்ற இடங்களில் இருப்பதைப் போலவே மத்தியகிழக்கிலும் அடிப்படைப் பிளவு ஒன்றும் தேசம், இனம் அல்லது மதம் சார்ந்தது அல்ல மாறாக வர்க்கம் என்பதைத்தான் நிரூபித்துள்ளது. யூதத் தொழிலாளர்கள், தங்கள் அரபுச் சகோதர சகோதரிகளைப்போலவே, அவர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் மிருகத்தனமான தாக்குதலைத்தான் எதிர்கொண்டுள்ளனர். மற்ற அரபு நாடுகளில் இருப்பதைப் போலவே தொழிலாளர்களின் விரோதிகள் மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் அல்ல, ஆனால் அவர்களின் சொந்த முதலாளித்துவம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் தான். உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வி, இஸ்ரேலிய மற்றும் அரபுத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் சியோனிசத்திற்கும் அரபு முதலாளித்துவத்திற்கும் எதிராக ஐக்கியப்பட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய புறநிலமையை உருவாக்கியுள்ளது.

ஒரு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு தன்னைத்தானே அழித்துக் கொண்டது மட்டும் இல்லாமல், சில்மன் ஆரம்ப நாட்களில் இருந்து ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்த இயக்கத்திற்கு ஒரு புத்துயிர்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அதைச் செய்தார். பௌவாஜிஜியிடம் இருந்து மட்டுமின்றி, கிரேக்க ஓய்வூதியம் பெறுபவர் டிமிட்ரிஸ் கிறிஸ்டௌலஸிடம் இருந்தும் சில்மன் ஊக்கம் பெற்றது தெளிவு; பிந்தையவர் ஏப்ரல் 4ம் திகதி சின்டகமா சதுக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு இறந்தார்; அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் எழுச்சிசெய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சில்மன் குறித்த வீடியோப்படங்களில் அவர் ஒரு புரட்சியின் தேவை பற்றி அறிவித்துள்ளார்.

சில்மன் தீமூட்டிக் கொண்டது  நெத்தென்யாகு மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகப் பல ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்புக் காட்டியதற்கு வழிவகுத்தது. ஆனால் இது ஒன்றும் வெறுமனே ஜூலை 14 இயக்கத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சி அல்ல.

அந்த இயக்கம் கட்டியெழுப்பட்ட முன்னோக்கே சில்மனுக்கும் அவரைப் பின்பற்ற முயன்ற ஏராளமான மற்றவர்களுக்கும் அரசியல் ரீதியாக பொறுப்புடையது; அவர்கள் வெளிப்படையாக நம்பிக்கையற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் என்ற அடுக்குகளின் பரந்த ஆதரவைப் பெற்றாலும், அதன் தலைமை குட்டி முதலாளித்துவத்தின் ஒரு குறுகிய தட்டின் அரசியல் மற்றும் சமூக நலன்களைத்தான் உச்சரிக்கின்றது. இதேபோன்ற கணக்கிலடங்கா அமைப்புக்கள், வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமியுங்கள், சீற்றம் கொண்டவர்கள்  என்று ஸ்பெயின், கிரேக்கத்தில் இருப்பதைப் போல், அரசியல் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது தங்கள் சமூக முன்னேற்றத்திற்காக எதிர்ப்புக்களின் முக்கியக் கூறுபாடுகள் ஒரு பொருளாதார ஒழுங்கிற்கு எத்தகைய அடிப்படைச் சவாலையும் கொடுத்துவிடக்கூடாது என்ற பொருளைத்தான் தந்தது.

தன்னலக்குழுவுடன் அவர்களுடைய உண்மையான வாதம் கடந்த காலத்தைப் போல் அது மத்தியதரவகுப்பின் உயர்மட்ட, நடுத்தரப் பிரிவுகளுடன் ஆதாயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்பதுதான். அவர்கள் இருக்கும் நிலையை இன்னும் உயர்மட்டத்திற்கு நெருக்கமாக ஒரு இடத்தைப் பெற வேண்டும் என்ற அளவிற்கு தாங்கள் மாற்ற வேண்டும் என்பதுதான்.

இந்த இயக்கங்கள் அனைத்தும் மிக அதிக அளவில் ஒரு சரிவைச் சந்தித்துள்ளன; இதற்குக் காரணம் பல முக்கிய நபர்கள் உண்மையான மூலங்களை பெருகிய முறையில் தனிமைப்படுத்திவிட்டு அவர்கள் கோரிய ஒரு நல்லிடத்தைப் பெற்றுள்ளனர்.

ஜூலை 14 இயக்கத்தை முக்கியமாகத் தூண்டிய இருவர், டாப்னி லீப் மற்றும் ஸ்டாவ் ஷபிர் இப்பொழுது இலாபம் எதிர்பாரா அமைப்பை நடத்துகின்றனர்; இதன் நோக்கம் முன்னுரிமை ஒழுங்குகளை மாற்றுதல், சமூகத்தில் நகரும் தன்மையை மீண்டும் தோற்றுவிப்பது என்பதாகும். ஷபிரின் சொற்களில், கடந்த கோடை முழுவதையும் நாம் இழந்துவிட்டோம். அது பெரும் வியப்பானது. ஆனால் பக்குவம் அடைந்து முன்னேறும் நேரம் வந்துவிட்டது.

பலரும் இதைப் பின்பற்றி, உத்தியோகபூர்வ அரசியலில் நுழைந்துள்ளனர், அல்லது வணிகங்களைத் தொடங்கியுள்ளனர். Haaretz அதன் ஜூலை 1 பதிப்பில் கூறியது: கடந்த கோடையின் வாழ்க்கைச் செலவு குறித்த எதிர்ப்பின் தலைவர்கள் வணிக சமூகத்தின் உறுப்பினர்கள் அல்லது உயர்கல்விக்கூட உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஒரு புதிய சமூக நீதி விதிகளை ஒருங்கிணைக்கின்றனர். அவர்கள் அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தில் படிப்படியாக அதிகரிப்புக்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.... வளர்ச்சியின் சக்கரங்கள் நகர வேண்டும் என்பதற்குத்தான் என்பது ஹிஸ்டட்ருட் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஒபெர் ஐனி மற்றும் பல பேராசிரியர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது.

 பொருளாதாரத்தில் முடிந்த அளவு குழுக்களைச் சேர்க்க முடியும் என்று நம்பினோம்அதாவது எதிர்ப்பாளர்கள், அரசியல் முறையின் உறுப்பினர்கள், மேலும் முதலும் முக்கியமானதுமான சிவில் சமூகத்தில் பங்கு உடையவர்கள் என என்று யுரி மடோகி கூறினார்.

2011 எதிர்ப்புக்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் வங்கிகளின் கொடுங்கோன்மை, தீவிரமாகும் சமூக வறிய நிலை இவற்றிற்கு எதிராக வெளிப்படும் வெகுஜன இயக்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரந்த தெளிவான முன்னோக்கு இல்லாத தன்மை ஆகியவற்றின் ஆரம்ப வெளிப்பாடுதான்.

ஓராண்டிற்குப் பின்னரும், துனிசியா, எகிப்து மற்றும் பிற இடங்களின் அரசியல் அனுபவம் இத்தகைய சமூகச் சீற்றத்தின் தன்னெழுச்சியான வெடிப்புக்கள், எழுச்சி வகை என்று வைத்துக் கொண்டாலும்கூட, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களைக்கூறும் ஒரு தலைமை, சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் இவற்றின் தேவையைக் குறைத்துவிடவில்லை என்பதுதான். இப்பொழுது தேவைப்படுவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் பிராந்தியம் முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்ட போராட்டம் ஆகும்; ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பின் பகுதியாக இலாபமுறையை அகற்றி, மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுதலுக்கான போராட்டமாகும்.