சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washington’s proxy terrorist war in Syria

சிரியாவில் வாஷிங்டனின் பினாமி பயங்கரவாதப் போர்

Chris Marsden
20 July 2012

use this version to print | Send feedback

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அசாத் கலந்து கொண்டிருக்க வேண்டிய அமைச்சரவை கூட்டத்தை இலக்கு வைத்து, மூன்று முக்கிய சிரிய அரசாங்க அதிகாரிகள் டமாஸ்கஸில் அரசாங்கத்தின் தேசியப் பாதுகாப்புக் கட்டிடத்தில் பயங்கரவாதப் படுகொலை செய்யப்பட்டனர். அதில் அசாத்தின் மனைவியுடைய சகோதரரும் ஆயுதப் படைகளின் துணைத் தலைவருமான அசீப் ஷக்வத், பாதுகாப்பு மந்திரி தாவுத் ரஹ்ஜா மற்றும் நெருக்கடிகால செயற்பாடுகள் பிரிவுத் தலைவர் ஹசன் டர்க்மனி ஆகியோர் கொல்லப்பட்டனர். உள்துறை மந்திரி மகம்மது ஷார், உளவுத்துறைத் தலைவர் ஹிஷம் பெக்தியார் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் காயமுற்றனர்.

இதற்கு சுதந்திர சிரிய இராணுவமும் (FSA) லிவா அல்-இஸ்லாம் (இஸ்லாமின் படைப்பிரிவு) இரண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. சக்திவாய்ந்த குண்டுகள் அசாத்தின் உள்வட்டத்தில் பணிபுரியும் வாகனசாரதிகள் மற்றும் மெய்க்காவலர்களை பயன்படுத்தி வைக்கப்பட்டன என்று சுதந்திர சிரிய இராணுவம் கூறியுள்ளது.

பாத்திஸ்ட் ஆட்சியின் மூலோபாய மையத்தில் இத்தகைய குண்டுத்தாக்குதல் மிக உயர்மட்ட உளவுத்துறைத் தகவல்கள், தொடர்புகள், பயிற்சியுடைய செயலர்கள் இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், எழுச்சியை நடாத்துவோரின் அறிவிற்குத் தெரியாமலும் தீவிர உடந்தை இல்லாமலும் இது நடந்திருக்கும் என நம்புவது மிகவும் கடினமாகும். இன்று சிரியாவில் அமெரிக்கா, சவுதி அரேபியா, கட்டார், துருக்கி இவற்றால் நூற்றுக்கணக்கான மில்லியன்கள் நிதியளிக்கப்படும் மிகப் பெரியளவில் நவீன ஆயுதங்களாலும், இராணுவப் பயிற்சியாளர்களாலும், உளவுத்துறை முகவர்களாலும் நிறைந்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த முக்கிய அரசியல் இராணுவ நபர்களின் கணக்கிலடங்கா அறிக்கைகள் இக்குண்டுதாக்குதல் அசாத் ஆட்சிக்கு எதிரான ஒரு வரவேற்கத்தக்க தாக்குதல் என்றுதான் நோக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக்குகின்றன.

பிரித்தானியாவும் பிரான்ஸும் பாசாங்குத்தனமாக குண்டுத்தாக்குதலைக் கண்டித்தன. ஆனால் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் ஏழாம் அத்தியாயத்தின் அடிப்படையில் சிரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தேவை என வலியுறுத்தின. ஏழாம் அத்தியாயத்தின் விதிகள் இராணுவப்பலம் பயன்படுத்த அனுமதி கொடுக்கின்றன. இது கடைசியாக லிபியா மீதான போருக்கு வழிவகுத்த ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது.

அமெரிக்க நிர்வாகம் எதிர்ப்பு என்னும் போலித்தனத்தைக் கூடக் காட்டவில்லை. வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் பின்வருமாறு கூறினார்: அமெரிக்கா சிரியாவில் இன்னும் குருதி கொடுப்படுவதை வரவேற்கவில்லை. ஆனால் இந்த நபர்கள்தான் சிரிய மக்களுக்கு எதிரான அசாத் ஆட்சியின் தாக்குதலுக்கு முக்கியமாக காரணமானவர்கள் என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

ஜனாதிபதி பாரக் ஒபாமா அப்பட்டமாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எச்சரித்து ரஷ்யா இறுதியில் வரலாற்றின் தவறாக பக்கத்தில் முடிவடையும்.... ஏனெனில் சிரியாவின் வருங்காலத்தில் அசாத் இருக்க மாட்டார். என்றார்.

வலதுசாரி இஸ்லாமியவாதிகளுடன் ஒரு நடைமுறைக்கூட்டை அமெரிக்கா கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க இராணுவ உளவுத்துறை அதிகாரியும் இப்பொழுது Institute of the Study of War இல் இருக்கும் ஜோசப் ஹாலிடே நியூ யோர்க் டைம்ஸிடம் சிரியாவின் எதிர்த்தரப்பு திறமையுடன் நவீன வெடிக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பது சிரிய எழுச்சியாளர்கள் கிழக்கு ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது கற்ற அனுபவத்தின் ஒரு பகுதியில் இருந்து வருகிறது என்றார்.

பல CIA கைக்கூலிகள், முன்னாள் ஆட்சியாளர்கள் ஆகியோருடன், சிரியத் தேசியக் குழு (SNC) மற்றும் சிரிய சுதந்திர இராணுவம் ஆகியவை முஸ்லிம் சகோதரத்துவம் இன்னும் அதிக தீவிர சலாபிஸ்ட்டுக்களைப் போன்ற இஸ்லாமியக் குழுக்களின் மேலாதிக்கத்தில் உள்ளன. ஜேர்மனிய செய்தித்தாள் Der Spiegel இந்த வாரம் சிரிய தேசியக் குழு உறுப்பினரான ராண்டா காசிசைப் நேர்காணல் செய்தது. அவர், எதிர்ப்புக்குழு இராணுவரீதியாக முன்னேற்றம் காணமுடியாததற்கு ஓரளவு காரணம் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதுதான். என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். இஸ்லாமியக் குழுக்கள், மிகச் சிறந்த முறையில் வளைகுடா நாடுகளால் நிதியளிக்கப்பட்டு, ஆயுதங்களையும் பெறும் நிலையில், இரக்கமற்ற முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தாங்களே பற்றி எடுத்துக் கொள்கின்றனர். என்றார்.

அவர் தொடர்ந்து கூறியது: அரபு வசந்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கர்கள் தங்கள் பணத்தை முஸ்லிம் சகோதரத்துவத்திடம் அள்ளிக் கொடுத்துள்ளனர். அவர்கள் இவ்வமைப்பு எதிர்காலத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக வரக்கூடும் என நினைக்கின்றனர். அவர்கள் அதற்கேற்ப  தம்மை ஒழுங்குபடுத்திக்கொள்கின்றனர்.

ஆப்கானிய மாதிரியை தொடர்ந்து, நேற்றைய பயங்கரவாதிகள் இன்றைய சுதந்திரப் போராளிகள் என வாஷிங்டனால் சித்திரிக்கப்பட்டு, அசாத்தின் அலவைட் ஆட்சிக்கு எதிராக ஒரு குறுங்குழுவாதப்போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது பயங்கரமான இரத்தம் சிந்தலுக்கே இட்டுச்செல்லும்.

இத்தகைய குற்றம் நிறைந்த வழிவகைகள் வாஷிங்டன் மத்திய கிழக்கில் கொண்டுள்ள கொள்ளைமுறையில் இருந்து பிரிக்க முடியாதவை ஆகும். லிபியாவிற்கு எதிரான போரைப் போலவே, ஜனநாயக வார்த்தைஜாலங்கள் மற்றும் சிரிய மக்கள் குறித்த அக்கறை காட்டும் போலித்தனத்தால் மத்திய கிழக்கிலும் அதன் பரந்த எண்ணெய் இருப்புக்களிலும் அமெரிக்க மேலாதிக்கம் அடையப்பட வேண்டும் என்னும் நோக்கம் மறைக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தாக்குதல் ரஷ்யா மற்றும் சீனா மீது ஐ.நா பட்டயம் ஏழிற்கு ஆதரவு கொடுக்க அதிக அழுத்தம் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவும் பெய்ஜிங்கும் இதை எதிர்ப்பதற்கு காரணம் அவற்றிற்கு அசாத்தின் வீழ்ச்சி அந்நாட்டில் அமெரிக்க சார்பு ஆட்சி ஏற்படுத்தப்படும், இதனால் ரஷ்யா அதன் அப்பிராந்தியத்தில் உள்ள ஒரே இராணுவத் தளத்தையும் இழக்க நேரிடும் என்பது தெரியும். மேலும் இது ஷியைட் ஈரானைத் தனிமைப்படுத்தி, அநேகமாக இஸ்ரேல் பெபனானில் இருக்கும் ஹெஸ்போல்லாவிற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும். இது அமெரிக்காவிற்கு அதன் வணிக, இராணுவ மேலாதிக்கத்தை அடைய பல நட்பு சுன்னி ஆட்சிகள் மீதும் அதன் இராணுவ வலுவுடைய இஸ்ரேலின் மீதும்  நம்பிக்கைகொள்ள வைக்கும்.

ஆனால் ஒபாமா நிர்வாகம் அதன் நோக்கத்திலிருந்து விட்டுச்செல்லாது. அதன் அதிகாரிகள் சிரியாவுடன் தாங்கள் போரில் ஈடுபட்டிருப்பதைத் தெளிவுபடுத்தி, அசாத்தை எப்படியும் பதவியில் இருந்து இறக்க முற்படுவர். நேற்று நியூ யோர்க் டைம்ஸ் சிரிய அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான அவசரத் திட்டங்களைத் தயாரிக்கும் அதிகாரிகளை மேற்கோளிட்டுள்ளது. அசாத் இரசாயன ஆயுதங்கள் எதிர்த்தரப்புப் படைகள், குடிமக்கள் மீது பயன்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவும் அதன் பிராந்திய நட்பு நாடுகளான இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, கட்டார் ஆகியவை இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூறப்படுகின்றன. டைம்ஸ், பென்டகன் அதிகாரிகள் இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிரியாவின் ஆயுத நிலையங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றிப் பேச்சுக்கள் நடத்துகின்றனர்.... எனக் கூறியுள்ளது.

அமெரிக்கா அதன் நவ காலனித்துவவாத நோக்கங்களை தொடர்கையில், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள மக்கள், உலகின் மிகச் செல்வம் மிக்கவர்கள் ஒருகாலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத தங்கள் ஆடம்பர வாழ்வைத் தொடர்வதற்கு அமெரிக்கப் பெருநிறுவனங்கள், வங்கிகள் உலகின் இருப்புக்களைக் கொள்ளையடிக்கும் உரிமைக்குக் குருதி மூலம் விலை கொடுக்கின்றனர்.

சிரியாவிற்கு எதிரான அறிவிக்கப்படாத அமெரிக்கப் போர் இன்னும் விரைவில் இராணுவத் தலையீட்டிற்கு வழிவகை செய்யும். இது பரந்த பிராந்திய மோதல் என்னும் அபாயத்தை எழுப்புகிறது. இறுதியில் ஈரானை இலக்குக் கொண்டு, சுன்னி, ஷியா பிரிவுகளுக்கு இடையே மத்திய கிழக்கு முழுவதும் குறுங்குழுவாத விரோதப் போக்குகளை எழுப்பி அதனால் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏகாதிபத்திய சக்திகளின் சதித்திட்டத்தில் பல போலி இடது போக்குகள் முக்கிய அரசியல் பங்கு வகிக்கின்றன. அவை சிரிய எதிர்ப்பு பிரிவிற்கு ஆதரவாக நிற்பதுடன், அதன் இராணுவ நடவடிக்கையை புரட்சி என்று சித்தரிக்கின்றன. அது ஒருபொழுதும் அவ்வாறான ஒன்றல்ல. அசாத் ஆட்சியுடன் கணக்குதீர்ப்பது என்னும் பணி சிரியத் தொழிலாள வர்க்கத்திடம்தான் உள்ளது. அதுவும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின்கீழ். ஏகாதிபத்திய சார்பு எதிர்தரப்பிற்கு ஆதரவு என்பது அத்தகைய அரசியல் போக்கை ஒதுக்குகிறது. வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ் சிரியாவில் தலையிடுவது சிரியத் தேசியக் குழு, சுதந்திர சிரிய இராணுவம்  என்னும் முதலாளித்துவத் தலைமையின் கீழ் நேரடியாக நடத்தப்படுகிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முன் உள்ள எரியும் பிரச்சினை ஒரு புதிய வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதாகும். அது ஆழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச நம்பிக்கைகள் இவற்றினால் உந்துதல் பெற வேண்டும். ஒபாமா, காமெரோன், மேர்க்கெல், ஹாலண்ட் ஆகியோர் சிரியாவின் நண்பர்கள் என்று இழிந்த முறையில் காட்டிக் கொள்வதை இகழ்வுடன் நோக்குவதுடன், பொது விரோதிக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும். உடனடிக் கோரிக்கை சிரியாவில் கைவைக்காதே என்பதாக இருக்க வேண்டும்.