சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A new stage in the euro crisis

யூரோ நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்

Peter Schwarz
26 July 2012

use this version to print | Send feedback

யூரோ நெருக்கடி குறித்த சமீபத்திய தலைப்புச் செய்திகளைப் படிக்கையில் ஒருவருக்கு ஏற்கனவே கண்டதைப் போன்றவொரு உணர்வு ஏற்படுகிறது. சென்ற கோடையில் போலவே, தரமதிப்பீட்டு முகமைகள் தரமதிப்பீடுகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன, அரசாங்கப் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் வானளாவிய உயரங்களுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன, அரசாங்கங்கள் எல்லாம் புதிய சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே வித்தியாசம் இந்தமுறை கிரீஸ்க்குப் பதிலாக அதன் பொருளாதாரத்தை விட ஐந்து மடங்கு பெரிய ஸ்பெயின் இந்த நெருக்கடியின் கவனப் புள்ளியாக மாறியிருக்கிறது.

பிணையெடுப்புகளில் பில்லியல்கணக்கில் செலவிடப்பட்டும், ஐரோப்பிய மத்திய வங்கியால் டிரில்லியன்கணக்கில் செலுத்தப்பட்டும், அதேபோல் சுற்றுக்கடுத்த சுற்றாக சிக்கன நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வந்தும், யூரோவானது முன்னையும் விட அதிகமாய் பாதாளத்திற்கு அருகில் நிற்கிறது. கணக்கிடமுடியாத அளவுகளிலான ஒரு பேரழிவை நோக்கி ஐரோப்பா தூக்கத்திலேயே நடந்து சென்று கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்று இந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில் ஐரோப்பாவின் முன்னணி பொருளாதார நிபுணர்கள்  17  பேர் எச்சரித்துள்ளனர்.

நெருக்கடி மோசமடைந்ததற்கு, தென் ஐரோப்பிய நாடுகளிலான அரசாங்கக் கடன் அதிகரிப்பிற்கு சந்தைகள் அளித்த முழுக்க முழுக்க தொழில்நுட்பரீதியான மறுமொழியைக் காரணமாகக் கூறுவது வெகுளித்தனமானதாக இருக்கும். பைனான்சியல் டைம்ஸின் புதனன்றான தலையங்கமே ஒப்புக் கொண்டவாறு, ஸ்பெயினின் அரசாங்கக் கடன் ஐரோப்பிய மண்டல சராசரியைக் காட்டிலும் மிகவும் கீழே தான் இருக்கிறது, அத்துடன் ஸ்பெயினின் நிலைமையை ஒரு வாரத்துக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது வித்தியாசமாகக் கருதுவதற்கான பொருளாதாரக் காரணங்கள் ஏதும் இல்லை. இருந்தபோதிலும் பத்தாண்டு கால ஸ்பெயின் பத்திரங்களின் மீதான வட்டி விகிதங்கள் முக்கிய அளவான 7 சதவீதத்தைக் காட்டிலும் மிகவும் அதிகரித்துச் சென்றிருக்கிறது.   

யூரோவின் இந்த தாக்குதலுக்குப் பின்னால் அடிப்படையான வர்க்க நலன்கள் அமைந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சமூக தேட்டங்கள் அத்தனையும் அழிக்கப்படுகின்ற வரை நிதிச் சந்தைகளிலும் பங்குச் சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற சர்வதேச நிதிச் சிலவர் கூட்டம் ஓயப் போவதில்லை. கூட்டாக ஒப்புக் கொண்ட ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளும் சரி, அதேபோல கல்வி, சுகாதாரம், ஓய்வூதியங்கள், பொதுச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிலான அரசாங்கச் செலவினங்களும் சரி தங்களது செல்வத்தின் மீதான முறையற்ற கட்டுப்பாடுகளாக இவர்களது கண்களை உறுத்துகின்றன.

ஒரு வரையறையான செயல்பாணி நிறுவப்பட்டிருக்கிறது. முதலில் தரமதிப்பீட்டு முகமைகள் ஒரு நாட்டின் கடன் தகுதித் திறனை குறைக்கின்றன; கடனுக்கு அந்நாடு செலுத்தவேண்டியிருக்கும் வட்டிவிகிதத்திலான அதிகரிப்பில் இது விளைகிறது. ஒரு கடன் பொறியில் விழுகின்ற இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தையும் சர்வதேச நாணய நிதியத்தையும் நோக்கித் திரும்புகிறது. பெரும் சர்வதேச வங்கிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற இந்த ஸ்தாபனங்கள் எல்லாம் கடன் கொடுத்தவர்களின் கடன்களுக்கு உத்தரவாதத்தை அளித்து விட்டு நாட்டின் மீது திடுதிப்பென சிக்கன நடவடிக்கைகளை உத்தரவிடுகின்றன. அந்நாடு மந்தநிலைக்குள் சரிந்து, கடன் தொடர்ந்து அதிகரிக்கிறது, அதனால் மேலதிக சிக்கன நடவடிக்கை உத்தரவுகள் அதனைத் தொடர்ந்து மந்தநிலை ஆழமடைவது என இந்தச் சுழற்சியானது நலன்புரி அரசு அழிக்கப்பட்டு தொழிலாள வர்க்கம் சீரழிக்கப்படும் வரை தொடர்ந்து நடக்கும்.

மொத்த ஐரோப்பாவுக்கான உதாரணமாக கிரீஸ் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் எச்சரித்தது. இப்போது ஸ்பெயினின் முறை வந்திருக்கிறது.

இந்த வாரத்தில் மூடிஸ் நிறுவனம் ஜேர்மனிக்கான மூன்றுதரமதிப்பீட்டை எதிர்மறைக்குக் குறைத்திருக்கிறது. அதேபோல நெதர்லாந்து, லுக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய பிணையெடுப்பு நிதி (ஐரோப்பிய நிதி ஸ்திரப்படுத்தல் வசதி - EFSF) ஆகியவற்றுக்கான மதிப்பீட்டு மட்டத்தையும் குறைத்திருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் ஸ்பெயின் அல்லது இத்தாலி எல்லையுடன் நிற்கப் போவதில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமானது சீனா மற்றும் மலிவு-ஊதிய நாடுகளின் வாழ்க்கைத்தர மட்டத்திற்குச் சரியும்வரை நிதிச் சந்தைகள் ஓயாது.

ரஜோய் அரசாங்கத்தின் சமீபத்திய சுற்று வெட்டுகளுக்கு ஸ்பெயின் தொழிலாள வர்க்கம் காட்டியிருக்கக் கூடிய வெகுஜன மக்கள் எதிர்ப்புக்கு வங்கிகளும் ஹெட்ஜ்ஃபண்டுகளும் ஸ்பெயினின் அரசாங்கப் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கின்றன. சென்ற சனிக்கிழமை அன்று 80 நகரங்களில் மில்லியன்கணக்கான மக்கள் VAT விற்பனை வரி அதிகரிப்புக்கும் மற்றும் பொதுத் துறை ஊதிய வெட்டுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வீதிகளில் இறங்கினர். (காணவும்: ”அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கு எதிரான ஸ்பெயின் முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்கள்”) 1939 இல் உள்நாட்டுப் போரில் பாசிஸ்டுகள் வெற்றி பெற்ற பின்னர் பல தசாப்தங்களுக்கு நாட்டில் ஆதிக்கம் செலுத்திய வறுமை மற்றும் ஒடுக்குமுறையின் நிலைமைகளுக்குத் திரும்ப தங்களுக்கு விருப்பமில்லை என்பதை ஸ்பெயினின் தொழிலாள வர்க்கம் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.

இந்த எதிர்ப்பு வெற்றிபெற வேண்டுமென்றால், ஸ்பெயின் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலுமான தொழிலாளர்கள் கிரீஸ் நிகழ்வுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கும் மில்லியன்கணக்கான மக்கள் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் தமது சொந்த அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளுக்கு எதிராகப் போராடினர். பொது வேலைநிறுத்தங்களும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் நாட்டை மறுபடியும் மறுபடியும் முடக்கின. ஆயினும் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

கடந்த இரண்டாண்டு காலங்களில், கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரம் 50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை வரலாற்றில் கண்டிராத அளவுகளை எட்டியிருக்கிறது. வறுமையும் வீடின்மையும் வெடித்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமூகச் சூழல் பெருந்துயரமுடையதாக இருக்கிறது. 2009 இலையுதிர் காலத்தில் அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி மீண்டும் அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. முதலாளித்துவ வலதினால் தலைமை கொடுக்கப்படுகின்ற ஒரு தேசிய ஐக்கிய கூட்டணி அரசாங்கத்தின் நிலைமைகளின் கீழ் அரசு திவால்நிலையின் ஆபத்து பெரிதாகி நிற்கிறது

இது எவ்வாறு நடக்க முடிந்தது?

முதலும் முதன்மையானதுமான பொறுப்பு சமூக ஜனநாயக PASOK கட்சிக்கு உரியதாகும். மூன்றாண்டுகளுக்கு முன்பாக சமூக சீர்திருத்தங்களை வாக்குறுதியளித்து தேர்தலில் வென்ற இக்கட்சி மூவரணியால் (ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) உத்தரவிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை இரக்கமற்றுத் திணிப்பதற்கு முன்வந்தது. ஆயினும் தொழிற்சங்கங்கள் எனும் எந்திரத்தில் இருந்த தனது உடந்தையாளிகளையே PASOK பெரிதும் நம்பியிருந்தது. இச்சங்கங்கள் தொழிலாள வர்க்க எதிர்ப்பினை மட்டுப்படுத்தவும் கலைக்கவும், அத்துடன் தொழிலாளர்களின் எதிர்ப்பினை ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் பயனளிக்காத போராட்டங்களுடன் மட்டுப்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாக்கவும் திட்டமிட்டு வேலை செய்தன. தப்பித்தவறி தொழிலாளர்களின் ஒரு போராட்டம் தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டுப்பாட்டிற்குத் தப்பி தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அணிதிரட்டுகின்ற அச்சுறுத்தல் எழுந்து விட்டால், அப்போது இந்தத் தொழிற்சங்கங்கள் அப்போராட்டத்தைத் தனிமைப்படுத்துவதற்கும் கழுத்தை நெரிப்பதற்கும் கிளம்பி விடும். போராட்டத்தை நசுக்குவதற்கு அரசு தலையீடு செய்கையில் அதன் பக்கத்தில் பார்த்து நிற்கும்

தொழிற்சங்கங்கள் தம் பங்கிற்கு, தீவிர இடதுகளின் கூட்டணி (SYRIZA) மற்றும் அதன் எண்ணற்ற போலி-இடது பாதுகாவலர்களில் உள்ள தனது கூட்டாளிகளை நம்பியிருந்தது. தொழிலாளர்கள் தங்களை தொழிற்சங்க எந்திரத்துக்குக் கீழ்ப்படியச் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இவை தொழிற்சங்கக் காட்டிக்கொடுப்புகளை மூடிமறைத்தன.

தன்னையும் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரு எதிரியாகக் காட்டிக் கொண்ட SYRIZA அதன் மூலமாக சமீபத்திய தேர்தலில் நாட்டின் வலிமை பெற்ற கட்சிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. அதே நேரத்தில், கிரீஸை யூரோ மண்டலத்தில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் கிரீஸின் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட உத்தரவாதமளிப்பதற்கும் சர்வதேச நிதிப் பிரபுக்களுக்கு அது உறுதி கொடுத்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு முறிவினை SYRIZA திட்டவட்டமாக எதிர்த்தது.

SYRIZAவின் இடது வாய்வீச்செல்லாம் இருந்தபோதிலும், அது கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் நலன்களையே தாங்கிப் பிடிக்கிறது. PASOK மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியுடனான அதன் கருத்து வேறுபாடுகள் எல்லாம் முற்றிலும் தந்திரோபாய வித்தியாசங்களே. ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்படுகின்ற சிக்கன நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணர்கின்ற, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பில் அதனினும் பெரிய அச்சுறுத்தலைக் காண்கின்ற உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகை படைத்த பிரிவுகளே SYRIZA வின் அடித்தளம். தொழிலாள வர்க்க எதிர்ப்பை பலவீனப்படுத்துவதிலும் ஒடுக்குவதிலும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தங்களது சேவைகளை வழங்குவதின் மூலம் தங்களது சலுகைகளைப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கு இந்த அடுக்குகள் முனைகின்றன. இந்த சேவைக்குப் பிரதிபலனாக தமக்கு மேம்பட்ட சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இவற்றின் நம்பிக்கை. சோசலிசப் புரட்சிக்கான தீர்மானமான எதிர்ப்பும் கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதும் தான் SYRIZA வின் அடிநாதமான அம்சமாக இருக்கிறது.

தொழிற்சங்கங்களுடன் மற்றும் SYRIZA போன்ற போலி-இடது அமைப்புகளுடன் முறித்துக் கொள்வதன் மூலமாகவும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை நோக்கித் திரும்புவதன் மூலமாகவும், மற்றும் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் உரிமைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும் கடந்த காலத்தில் வென்ற சமூகப் பலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்பதையே கிரீஸ் எடுத்துக்காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதென்பது சாத்தியமற்றதாகும். ஐரோப்பாவை நிதிச் சந்தைகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படுத்துவதற்கான பிரதான கருவியாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வங்கியாளர்களின் ஒன்றியத்தையும் அதன் முதலாளித்துவ உறுப்பு அரசாங்கங்களையும் தூக்கியெறிந்து ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிக்க ஒட்டுமொத்த ஐரோப்பியத் தொழிலாள வர்க்கமும் அணிதிரட்டப்பட வேண்டும்.