சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German state premier functions as marionette of Morgan Stanley

ஜேர்மனிய மாநிலப் பிரதமர் மோர்கன் ஸ்டான்லி உடைய கைப்பாவை போல் செயல்படுகிறார்

By K. Nesan
25 July 2012

use this version to print | Send feedback

இந்த மாதம் ஜேர்மனிய அரச வழக்குதொடுனர்கள் பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் முன்னாள் பிதரமான ஸ்டீபன் மாப்புஸ் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-CDU) மற்றும் மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு வங்கியில் ஒரு மேலாளராக இருக்கும் அவருடைய நண்பர் மீதும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணையைத் தொடங்கினர்.

அரச வழக்குதொடுனர்கள் இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் இழப்பில் நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துகின்றனர். எரிசக்தி நிறுவனமான EnBW Baden-Wurttemberg என்ற ஜேர்மனியின் மூன்றாம் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனத்திடம் இருந்தும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனக்குழு EDF இடம் இருந்தும் மாநில அரசாங்கம் மறுபடியும் பங்குகளை வாங்கியது குறித்த குற்றச்சாட்டுக்கள் ஆகும். இதே குற்றச்சாட்டு முன்னாள் நிதி மந்திரி வில்லி ஸ்ரேஷில மற்றும் முன்னாள் மாநில மந்திரி ஹெல்மெட் ரௌவ் ஆகியோருக்கு எதிராகவும் வந்துள்ளன.

டிசம்பர் 2010 ல் பிரதமர் மாப்புஸ் அவருடைய சிறுபிராயத்து நண்பர் நோத்தீஸ்  உடன் சேர்ந்து ஒரு சதி போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.  நோத்தீஸ் அந்த நேரத்தில் ஜேர்மனியிலுள்ள மோர்கன் ஸ்டான்லி கிளையின் தலைவர் ஆவார். மாநிலப் பாராளுமன்றத்தில் மாப்புஸ் அரசாங்கம் EnBW, EDF இடம் இருந்து 4.67 பில்லியன் யூரோ (அமெரிக்க $5.63 பில்லியன்) மதிப்பிற்கு 54.01% பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது எனக் கூறி ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். Stuttgarter Zeitung பத்திரிகை மேற்கோளிட்ட தகவல் ஒன்றின்படி, இந்த திரும்ப வாங்கிய விலை குறைந்தப்பட்சம் 840 மில்லியன் யூரோக்களினாலாவது அதிகம் ஆகும்.

இந்த உடன்பாட்டிற்கு ஏற்பாடு செய்த மோர்கன் ஸ்டான்லி தேவையான உள்விவகாரங்களைச் செய்வதற்கு 12.8 மில்லியன் யூரோ மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) என்ற தொகையைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டது. மாநில எதிர்க்கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைவாதிகளும் கொள்கையளவில் இந்த உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தன. ஆனால் இந்த வழிவகை அரசிலமைப்பிற்கு முரணானது என்று கூறின.

முழு வழிவகையும் எப்படி வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் கொள்கையை நிர்ணயிக்கின்றன, அரசியல் தலைவர்கள் நிதிய மூலதனத்தின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது.

மோர்கன் ஸ்டான்லி அமைப்பில் இருந்து ஒரு பாராளுமன்றக்குழு பெற்ற உள் ஆவணங்கள், நோத்தீஸ் இந்த உடன்பாட்டை உருவாக்கியதில் கொண்ட முக்கிய பங்கைக் காட்டுகின்றன. மின்னஞ்சல்கள் மூலம் அவர் மாப்புஸுக்கு வேறு வங்கிகள் இந்த உடன்பாட்டில் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுமாறும், பல வங்கிகளிடம் இருந்தும் உங்களுக்கு அழைப்புக்கள் வரும் (...) அவர்களுக்கு இந்தப் பணி கொடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்படும். ஆனால் அவற்றை நீங்கள் நிராகரித்து ஏற்கனவே முழு ஆலோசனை நுட்பத் தகவலைப் பெற்றுவிட்டதாகக் கூறவேண்டும். எனத் தெரிவித்தார்

மின்னஞ்சல்களைப் பரிசீலித்தபின், Stuttgarter Zeitung பின்வருமாறு எழுதியது: மின்னஞ்சலில் வெளிப்பட்டுள்ளபடி நோத்தீஸின் பங்கு, ஒரு முதலீட்டு வங்கியாளர் செயலை விட அதிகமாக இருந்தது. அவர் உடன்பாட்டை இயக்கியிருந்தார், அதற்குத் திரைப்படக் கதை போல் நிகழ்வையும் எழுதியிருந்ததுடன், அரசியல் மூலோபாயத்தையும் கவனித்துக் கொண்டார். மறுபுறம், மாப்புஸ் ஒரு பெரிய ஆசானுக்கு உகந்த மாணவனைப்போல், கிட்டத்தட்ட ஒரு பேசும் பொம்மை போல் நடந்து கொண்டு, முன்கூட்டிப் திட்டமிடப்பட்ட வார்த்தைகளை கூறினார்.

அரசாங்கம் தயாரித்துள்ள இரகசிய அறிக்கையில் இருந்து மோர்கன் ஸ்டான்லி பரிவர்த்தனையில் இரு புறத்திலும் தொடர்பு கொண்டு, பாடன் வூர்ட்டெம்பேர்க் மாநிலத்தின் இழப்பில் தன்னுடைய வணிகச் செயற்பாடுகளை மேற்கோண்டது என்பது தெளிவாகிறது.

மோர்கன் ஸ்டான்லி உடைய சேவைகளை மாப்புஸ் பயன்படுத்தியது மட்டுமல்லாது, EDF உம் முதலீட்டு வங்கியாளரை தனது பணியில்  இருத்தியிருந்தது. அரச அறிக்கை பிரெஞ்சுப் பக்கத்தில், மோர்கன் ஸ்டான்லியின் பிரெஞ்சுக்கிளையின் René Proglio உம் இதில் தொடர்பு கொண்டிருந்தார் என ஏற்பதற்கான தொடர்புக்கடிதங்கள் உள்ளன என்று கூறுகிறது.  René Proglio EDF இன் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரி புரோக்லியோவின் இரட்டைச் சகோதரர் ஆவார்.

ரெனே புரோக்லியோ நோத்தீஸுடன் வாடிக்கையாகத் தொடர்பு கொண்டு, EDF  இல் நடக்கும் நிகழ்வுகள் பற்றிக் கூறி வந்தார். EDF உடைய வக்கீல்கள் ஸ்ருட்கார்ட்டில் அமைச்சரவை முடிவு எதும் இல்லையென்பதால் உடன்பாட்டிற்குத் தயக்கம் காட்டியபோது, நோத்தீஸ் அவர்களிடம் இது ஒரு பிரச்சினை இல்லை என்றும், பாடன் வூர்ட்டம்பேர்க் பாராளுமன்றத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் அத்தகைய முடிவை எடுக்க அது கூட்டப்பட்டதில்லை என்றார். அவ்வாறான ஒரு அமைச்சரவை ஒப்பந்தமும் வெறும் சம்பிரதாயம்தான் என்று கூறினார். EDF விரைவில் முடிவெடுக்கவில்லை என்றால், தான் எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான உண்மை பற்றிய சான்றுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்கத் தணிக்கை அலுவலகம் தயாரித்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை முன்னாள் அரசாங்கத்தைக் கடுமையாகக் குறைகூறும் வகையில், ஒப்பந்தம் நடப்பதற்கு முந்தைய கட்டத்தில் வழிவகை கணிசமாக மாநிலத்தின் அரசிலமைப்பு, நிதிய விதிகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று அறிவித்துள்ளது.

மத்திய அரசாங்கத்தையும் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியையும் தங்கள் திட்டத்தில் தொடர்புபடுத்த வங்கியாளர்கள் முயன்றனர். தன்னுடைய சக ஊழியர்களிடம் நோத்தீஸ் மாப்புஸின் செல்வாக்கை குறைமதிப்பிட வேண்டாம் என்றார். தேவையானால் அவர் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு முறையிடலாம், எலிசே அரண்மனையுடனும் நேரடியாகப் பேசலாம் என்றார். மாப்புஸ் CDU கட்சிய பிரதிநிதிகளில் 30% ஐக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்றும் தேவையானால் தன்னுடைய ஆதரவாளர்களைப் பயன்படுத்தி அங்கேலாவின் செல்வாக்கைத் தகர்த்துவிடலாம் என்றும் கூறினார்.

மாப்புஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், நோத்தீஸ் ஹென்ரி புரோக்லியோவிற்கு முன்னதாக  சார்க்கோசி, மேர்க்கெல் ஆகியோர் எலிசே அரண்மனையில் பேச்சுக்கள் நடத்துகையில் அழைப்புக்களை விடுத்தார் என்று தெரிவிக்கிறார். இல்லாவிடில் அவர் உங்களுக்காக இதைச் செய்வாரா என்று அம்மையாரை கேளுங்கள்.

Stuttgarter Zeitung பத்திரிகை அத்தகைய கூட்டம் நடக்கவே இல்லை என்று எழுதியுள்ளது. ஆனால் செய்தித்தாள் நோத்தீஸின் நெருக்கமான நண்பர் ஒருவர், பிரெஞ்சு விக்கல் (பிரெஞ்சு மந்திரி ஒருவர் பற்றியகுறிப்பு), சார்க்கோவிடம் இருந்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது என்றார். அதாவது முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியிடம் இருந்து. பின்னர், நோத்தீஸின் மற்றும் ஒரு நெருக்கமான நண்பர் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு விட்டன என்ற தகவலைக் கொடுக்கிறார்.

கடந்த ஆண்ட அக்டோபரிலேயே பாடன் வூர்ட்டம்பேர்க் மாநில நீதிமன்றம் EFG பங்குகள் வாங்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பு அளித்துள்ளது. பசுமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மாப்புஸ் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டிருக்கக்கூடாது என்று பெற்ற தீர்ப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. டிசம்பர் 2011ல் ஒரு பாராளுமன்ற விசாரணைக்குழு பின்னர் பசுமைக்கட்சியின் ஆரம்ப முயற்சியின் பேரில் நிறுவப்பட்டது.

அரச சட்ட ஆலோசகர் மார்ட்டின் ஷோக்கன்கொவ் இக்குழுவிடம் மாப்புஸ் பாராளுமன்றத்தில் இருந்து சுயாதீனமாகச் செயல்படக்கூடாது என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தார் என்று கூறினார். இதன்பின் நோத்தீஸ் ஷோக்கன்கொவ் இடம் தொலைபேசித் தொடர்பு கொண்டு இதற்குத் தக்க காரணம் கிடைத்தால் மாப்புஸ் பாராளுமன்றத்தை இவ்வுடன்பாட்டுடன் தொடர்பற்றதாக்கவேண்டும் என விரும்புகிறார் என்றும் சேர்த்துக் கொண்டார். “EDF மற்றவர்க்கு விற்றுவிடக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் நோத்தீஸ் அவருக்குத் தெரிவித்தார்; பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக ஒரு ரஷ்ஷியருக்குச் சென்றுவிடும் என்றும் கூறினார்.

பாடன் வூர்ட்டம்பேர்க்கில் மாநிலத் தேர்தல் முடிந்த உடன், இந்த உடன்பாடு உடனே முடிக்கப்பட்டது. மாப்புஸ் ஆதரவு கொடுத்த ஸ்ருட்கார்ட் 21 என்ற மற்றொரு திட்டத்திற்கு எதிராகப் பரந்த எதிர்ப்புக்கள் என்ற அழுத்தங்கள் வந்தன. இது ஸ்ருட்கார்ட்டிற்கு நடுவே ஒரு புதிய ரயில் பாதை போடுவதும், ரயில் நிலையைம் கட்டுவதும் குறித்தது ஆகும். கருத்துக் கணிப்புக்கள் CDU தோல்வி அடையும் என்று கணித்தன. மாப்புஸ் EnBW உடன்பாடு அவருடைய தோற்றத்திற்கு ஏற்றம் கொடுக்கும் என நம்பினார். ஆனால் இது நடக்கவில்லை. மார்ச் 27, 2011 அன்று அவர் தேர்தலில் தோற்று அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் மாநில அரசாங்கத்தின் தலைமையை ஏற்றார்.

அரசியல்வாதிகளுக்கும் உயர்நிதிய நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஊழல்மிகுந்த இணைப்புக்கள் ஒன்றும் பாடன் வூர்ட்டம்பேர்க்குடன் நின்றுவிடவில்லை. இங்கு கடந்த 58 ஆண்டுகளாக CDU ஆட்சி நடத்தியது. Frankfurter Rundschau சமீபத்தில் அரசியல்வாதிகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு என்றே முக்கிய வங்கிகள் முழுக்குழுக்களை அமைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

Deutsche Bank எப்பொழுதுமே முக்கிய, உயர்மட்ட தொடர்புடைய அரசியல்வாதிகளை நாடுகிறது. இதில் கடந்த ஆண்டு அது உயர்மட்ட தூதர் தோமஸ் மற்றுஸெக்கை 2006ம் ஆண்டு விலைபேசி அமர்த்தியது. 2008ஆம் ஆண்டு முன்னாள் மாநில மந்திரி கையோ கொக்-வேஸர் இதே நிலைக்கு உட்படுத்தப்பட்டார். நாட்டின் வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிரிவில் உயர்மட்டத்தில் 2007 வரை இருந்த ஹெல்முட் பவர் மற்றும் 2007இல் ஒரு சுயாதீன ஆலோசகரான எர்ன்ஸ்ட் ஊவலவ் என்போர் அடங்குவர். 2011 இல் மத்திய உளவுத்துறைக்குத் தலைவராகப் போகும் வரை ஊவலவ்  இத்தொடர்பில் இருந்தார்.