சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

After veto of UN war resolution Washington steps up drive to overthrow Syrian regime

ஐ.நா. போர்த்தீர்மானத்தின் மீதான தடுப்பதிகாரத்திற்கு பின்னர்வாஷிங்டன் சிரிய ஆட்சியை அகற்றவதற்கான உந்துதலை முன்னெடுக்கின்றது

By Niall Green
23 July 2012

use this version to print | Send feedback

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை எவ்வாறாயினும் நிறைவேற்றிவிடுவதில் தோற்றுவிட்டதைத் தொடர்ந்து, பராக் ஒபாமாவின் நிர்வாகம் சிரியாவிலுள்ள அரசாங்கத்தை அகற்றி, அமெரிக்க ஆதரவிலான ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு விருப்பமுடையோர் கூட்டு ஒன்றைச் சேர்க்கும் தயாரிப்புக்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அத்தீர்மானம் ஐ.நா. பட்டயத்தின் 7ஆம் பந்தியின் படி டமாஸ்கஸிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளைச் சுமத்தியிருக்கும். மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்துவதைக்கூட அவ்விதி இசைவு தருகிறது. அத்தகைய தீர்மானம் குழுவினால் கடைசியாக லிபியாவிற்கு இயற்றப்பட்டபோது, அதை ஆட்சி மாற்றத்திற்கான போரை நியாயப்படுத்த அமெரிக்காவும் நேட்டோவும் பயன்படுத்தின.

ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் மாஸ்கோவையும் பெய்ஜிங்கையும் சிரிய எதிர்ப்பு தீர்மானத்தை, தடுப்பதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியதற்குக் கண்டித்து, வாஷிங்டன் பாதுகாப்புக்குழுவிற்கு வெளியே இருக்கும் பல பங்காளிகளுடன் ஒன்றுபட்டு செயல்பட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு குழிபறிக்கப்போவதாக அறிவித்தார்.

இப்பங்காளிகளில் பிரித்தானியாவும் பிரான்ஸும் உள்ளன; இவை அப்பிராந்தியத்தில் முன்னாள் காலனித்துவ சக்திகளாக இருந்தவை. அவற்றைத்தவிர, சவுதி அரேபியா மற்றும் கட்டாரின் முடியரசுகளும் உள்ளன. இவை மில்லியன் கணக்கான நிதியை ஆயுதங்களாவும் பிற உதவிகளாவும் இஸ்லாமியவாத ஆதிக்கத்திற்கு உட்பட்ட எதிர்த்தரப்புக் கிளர்ச்சியாளர்களுக்குக் கொடுத்துள்ளன.

The New York Times reported Sunday that the White House is “now holding daily high-level meetings” on Syria “to discuss a broad range of contingency plans.”

நியூ யோர்க் டைம்ஸ்  ஞாயிறன்று வெள்ளை மாளிகை இப்பொழுது அன்றாடம் உயர்மட்ட பேச்சுக்களை சிரியா பற்றி நடத்தி வருகிறது, அவற்றில் பரவலான அவரசரக்கால திட்டங்களும் உள்ளன என்று தகவல் கொடுத்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் மூத்த நபர்களும், பென்டகனில் உள்ளவர்களும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் சிரியா மீதான தாக்குதலுக்குத் தயாரிப்புக்களுக்குப் பேச்சுவார்த்தை நடாத்துகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோமஸ் டோனிலோன் பேச்சுக்களுக்காக கடந்தவாரம் இஸ்ரேலுக்கு வந்திருந்தார். பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஜெருசெலத்திற்கு அடுத்த சில நாட்களில் சிரிய நிலைமை பற்றி விவாதிக்க வருகிறார்.

 

2003 ஈராக் மீதான படையெடுப்பிற்கு முன் பயன்படுத்தப்பட்ட போலியான பேரழிவு ஆயுதங்கள்குறித்த பிரச்சாரத்தை எதிரொலிக்கும் வகையில், வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் அதிகரித்தளவில் சிரியாவிடம் இருப்பதாகக் கூறப்படும் இரசாயன ஆயுதக் கிடங்களை மேற்கோளிட்டு, அசாத் அரசாங்கத்திற்கு எதிராப் போர் தொடுக்க அது முக்கிய காரணம் என்கின்றன. சிரியாவிடம் ஏராளமான இரசாயன ஆயுதங்கள் உள்ளன என்று நாங்கள் அறிவோம்என்றார் தூதர் ரைஸ் வெள்ளியன்று தேசியப் பொது வானொலி நிலையத்தில் கூறியதுடன், சிரியா அதைப்பாதுகாத்து வைத்திருப்பதற்கான  ஒரு அறநெறிசார்ந்த மற்றும் சட்டபூர்வ கடமைப்பாட்டை கொண்டுள்ளது... சிரிய ஆட்சியில் எவரேனும் வேறுவகையில் நடந்து கொள்ளமுற்பட்டால், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். என மேலும் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சி செனட்டர் ஜோர் மக்கெயின் ஞாயிறன்று இன்னும் திமிர்த்தனமான அறிக்கைகளை சிரிய ஆயுத அச்சுறுத்தல் பற்றி வெளியிடும் வகையில், CNN உடைய ‘State of the Union’  நிகழ்ச்சியில் அசாத் தன்னுடைய மக்களுக்கு எதிராகவே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்றும், சிரியாவில் இராணுவத் தலையிடுவதற்கான பொறுப்பை அமெரிக்கா கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இஸ்ரேலிய அரசாங்கம் இஸ்லாமிய போராளிகளின் கைகளில் இரசாயன ஆயுதங்களை கிடைப்பதை தடுக்க சிரியா மீது தான் ஒருதலைப்பட்சத் தாக்குதலைத் ஆரம்பிக்க தயார் எனக் கூறியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்,  இரசாயன ஆயுதக் கிடங்கள் இருப்பதாகக் கூறப்படும் சிரிய இராணுவத் தளங்களின் மீது இஸ்ரேலிய இராணுவம் அத்தகைய தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து பரிசீலிக்க தான் உத்திரவிட்டுள்ளதாக கூறினார்.

Fox News Sunday  நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு தன்னுடைய அரசாங்கம் இரசாயன ஆயுதங்கள் ஹெஸ்போல்லா அல்லது பிற பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் செல்லாமல் இருப்பதற்காக இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயார் என்று மீள்உறுதி செய்தார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமியப் போராளிகளின் கைகளில் இரசாயன ஆயுதங்கள் கிடைப்பது குறித்த கவலைகள் பாசாங்குத்தனத்தின் உச்சகட்டமாகும். சிரிய இரசாயன ஆயுதங்களை பயங்கரவாதக் குழுக்கள் கைப்பற்றி எடுத்துக் கொள்ளுதல் என்னும் அச்சுறுத்தல் இருந்தால், அது ஓராண்டு காலமாக டமாஸ்காஸில் உள்ள ஆட்சிக்கு எதிரான ஸ்திரமற்றதாக்கும் நிகழ்வுகளின் விளைவுதான். இதில் அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் மேலைச் சார்பு உடைய பாரசீக வளைகுடா முடியரசுகள்தான் ஆயுதங்கள், பணம் மற்றும் உளவுத்தகவல்களை சிரியாவின் சுன்னித் தீவிரவாத எதிர்த்தரப் போராளிகளுக்கு கொடுத்துள்ளன.

இரசாயன ஆயுதங்களைப் பற்றிய வெற்றுத்தன பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க, சிரியா மீது அமெரிக்காவின் உண்மையான மனப்பாங்கு கடந்தவாரம் Washington Institute for Near East Policy என்னும் செல்வாக்குப் படைத்த அமைப்பின் உறுப்பினரான ஆண்ட்ரூ டேப்லர்தான் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ யோர்க் டைம்ஸ்  அவர், அசாத் ஆட்சி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அகற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளோம் எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியாவிலுள்ள எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்துள்ள ஆதரவே இம்மோதல் கோடையில் முழு உள்நாட்டுப் போராகத் தீவிரமடைந்த தாக்குலுக்குக் பின்னணி காரணமாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த இரு மாதங்களில் இந்த எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதை நாங்கள் காணமுடியும்என்று வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஞாயிறு பதிப்பில் கூறியுள்ளார். இப்பொழுது நாங்கள் விரைவுபடுத்த தயாராக இருக்கிறோம் என்று பெயரிடப்படாத ஆதாரம் கூறியுள்ளது.

இந்த விரிவாக்கம்தான் அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகே செயல்பட்டு, சவதி அரேபியா மற்றும் கட்டார் சிரியாவின் கிளர்ச்சி போராளிகளுக்கு வெள்ளமென அனுப்பும் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துகிறது.

இப்படிப் பெருகும் வன்முறை கிட்டத்தட்ட 125,000 சிரிய மக்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டான், துருக்கி, ஈராக் ஆகியவற்றிற்கு ஓட வைத்துள்ளது. இன்னும் பலர் உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாக, அதிகப் போர் நடக்கும் இரு முக்கிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இருந்து ஓடச் செய்துள்ளது. இவை சமீப காலம் வரை ஒப்புமையில் அதிக வன்முறை அற்று இருந்தன. ஆனால் அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்பாளர்கள் கடந்த சில வாரங்களாக இத்தகைய பெரிய நகரங்களையும் ஆயுதத்தாக்குதல்கள் குண்டு வீசுதல் ஆகியவற்றின் மூலம் நிலைகுலைய வைத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் தலைநகரின் தேசியப் பாதுகாப்புத் தலைமையகத்தில் கடந்த வாரம் வைக்கப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலாகும். இது மிக உயர்மட்ட ஆட்சி அதிகாரிகளைக் கொன்றது.

வார இறுதியில், அலெப்போவின் புறநகரங்களில் கடும் போர்கள் நடந்த அறிக்கைகள் வந்துள்ளன. இதைத்தவிர மோதல்கள் கிளர்ச்சியாளர்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையே தலைநகரில் நடைபெற்றுள்ளன. சனிக்கிழமை அன்று ஜனாதிபதி அசாத்தின் சகோதரருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிரிய இராணுவத்தின் உயரடுக்கான நான்காம் பிரிவு, எதிர்த்தாக்குதல் ஒன்றை டமாஸ்கஸின் புறநகர்களான பர்ஜே, மெஜே ஆகிய இடங்களில் எதிர்ப்பாளர்கள் மீது நடத்தியது. சுதந்திர சிரிய இராணவமும் இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களும் சிரியாவிற்குள் துருக்கி, ஈராக் ஆகியவற்றின் எல்லைகளில் இருந்து வரக்கூடிய சில பாதைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர்.

ஞாயிறன்று, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ உள்ளது. அதில் தற்கால ஆட்சியின் பிரிவுகளும் இருக்கும் என்று நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.