சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan state bank engaged in a corrupt share market deal

இலங்கை அரச வங்கி ஒன்று பங்குச் சந்தை வியாபார மோசடியில் ஈடுபட்டுள்ளது

By Saman Gunadasa
25 May 2012

use this version to print | Send feedback

நாட்டின் பிரதான சேமிப்பு வங்கியான தேசிய சேமிப்பு வங்கியின் (என்.எஸ்.பி.) தலைவர் மற்றும் நிர்வாகச் சபையும் பல பத்துலட்ச ரூபாய்களுக்கு மோசடியான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஏப்பிரல் 27 இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டு மூன்று வாரங்களின் பின்னர், மே 21ம் திகதி, என்.எஸ்.பி. தலைவர் பிரசாத் காரியவசம் தனது இராஜனாமாவை அறிவிக்கத் தள்ளப்பட்டார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரான காரியவசம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் 2010ல் என்.எஸ்.பி. தலைவராக நியமிக்கப்பட்டார்.

த பினன்ஸ் நிறுவனத்தின் 80 இலட்சம் பங்குகளை, அல்லது மொத்த பங்குகளில் நூற்றுக்கு 13.2 வீதத்தை, 390 மில்லியன் ரூபா என்ற உயர்ந்த பெறுமதியில், விற்பனையாளர்கள் குழுமத்திடமிருந்து விலைகொடுத்து வாங்குமாறு தெப்ரோபன் செகியூரிடீஸ் புரோகர்ஸ் நிறுவனத்துக்கு என்.எஸ்.பி. அறிவித்திருந்தது. ஒரு பங்கிற்கு என்.எஸ்.பி. கொடுக்கவிருந்த விலை 49.75 ரூபாவாக இருந்த போதிலும் அது அந்த பங்கின் சந்தை விலையான 30 ரூபாவை விட நூற்றுக்கு 65 வீதம் அதிகமானதாகும். புரோகர்ஸ் நிறுவனத்தின் சில அதிகாரிகளும் தமது சொந்த பங்குகளை இவ்வாறு உயர்ந்த விலைக்கு என்.எஸ்.பி.க்கு விற்பதில் கிடைக்கும் இலாபத்துக்காக வரிசையில் நின்றனர்.

இந்த கொடுக்கல் வாங்கலில், என்.எஸ்.பி.க்காக த பினன்ஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையாளர்களுக்கு விலை கணக்குகளை சம்பத் வங்கி தீர்த்துக் கொடுத்தது. இந்த கொடுக்கல் வாங்கலின் வெளிப்படைத் தன்மை பற்றி வியாபாரிகள் வட்டாரத்தில் கேள்வி எழுப்புமளவுக்கு அது மிகவும் மோசடியானதாக இருந்தது. கொடுக்கல் வாங்கல் நடந்து ஐந்து நாட்களின் பின்னர், இந்த கொடுக்கல் வாங்கலை நிறுத்துமாறு கட்டளையிட்ட நிதியமைச்சருமான ஜனாதிபதி இராஜபக்ஷ, அதை மூடி மறைக்கும் உபாயமாக அது பற்றிவிசாரணை நடத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்த நாற்றமடிக்கும் கொடுக்கல் வாங்கல் அம்பலத்துக்கு வந்த பின்னர், அறிக்கை ஒன்றை வெளியிட்ட என்.எஸ்.பி. நிர்வாகக் குழு, “இந்த கொடுக்கல் வாங்கலை தொடர்ந்தும் மேற்கொள்ளுமளவுக்கு இந்த முதலீட்டில் பெருமளவு நன்மை கிடைக்காது என நிர்வாகக் குழு நினைப்பதனால் இந்த கொடுக்கல் வாங்கலுடன் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளை செலுத்தாமல் இருக்க முடிவு செய்ததாக தெரிவித்தது. ஒப்பந்தமொன்றுக்குச் சென்று, பின்னர் செலுத்தவேண்டியதை கைவிடுவது என்பது, கொழும்பு பங்குச் சந்தையினுள்ளான சட்டங்களை பகிரங்கமாக மீறுவதாகும்.

தாம் என்.எஸ்.பி.க்காகக் கொடுத்த நிதியை என்.எஸ்.பி.யிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக, சம்பத் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியிருந்தது.  இந்தச் சூழ்நிலையில், கொழும்பு பங்குச் சந்தையை மேற்பார்வை செய்யும் பங்குபத்திர மற்றும் நாணய மாற்று ஆணைக்குழு, இந்த சட்டவிரோத வியாபாரக்காரர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, குறிப்பிட்ட தரப்பினருக்கு சந்தைக்கு வெளியில் கொடுக்கல் வாங்கலை செய்துகொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளது.

அண்மையில் மிக மிக மோசமாக செயற்படுகின்ற ஒரு பங்குச் சந்தை என்ற பெயரைப் பெற்ற கொழும்பு பங்குச் சந்தையினுள், இத்தகைய கொடுக்கல் வாங்கலால் ஏற்படுத்தப்பட்ட பெரும் தாக்கத்தை பற்றி ராய்ட்டர் பின்வருமாறு கூறியது: தற்போது விதிமுறைகள் சம்பந்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள த பினன்ஸ் நிறுவனத்தின் கைவிடப்பட்ட கொடுக்கல் வாங்கல் பற்றிய பீதியில், முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்றுத்தள்ளுவதனால், வெள்ளிக்கிழமை அளவில் (மே 11) பங்குச் சந்தை ஒன்பது சுற்றுக்கள் ஊடாக நூற்றுக்கு 6.34 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரதான நிதி குழுமமான செலிங்கோ கூட்டுத்தாபனத்தின் பிரதான அங்கமான கோல்டன் கீ பினன்ஸ் நிறுவனத்தில் 2009ல் செய்யப்பட்ட மிகப்பெரும் மோசடியினால், அந்தக் குழுமம் பொறிந்து விழுந்தது. அப்போதிருந்தே த பினன்ஸ் நிறுவனம் பிரச்சினைகளை எதிர்கொண்டதோடு அதன் பங்குப் பெறுமதிகளும் சுருங்கிப் போயின. சில மதிப்பீடுகளின் படி, என்.எஸ்.பி. வங்கியின் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற போது, த பினன்ஸின் பங்கு பெறுமதி 15 ரூபா என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கக் கூடும்.

இரண்டு கோடி மக்கள் வாழ்கின்ற நாட்டில், என்.எஸ்.பி.யிடம் உள்ள சேமிப்புக் கணக்குகளின் தொகை 1.6 கோடியைத் தாண்டும் அதே வேளை, மக்களின் பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களாவர். மொத்த வைப்புத் தொகை 400 பில்லியன் ரூபாவைத் தாண்டுகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், என்.எஸ்.பி.யில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி அல்லது ஸ்திரமின்மை, ஏனைய வங்கிகளுக்கும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மோசமடைந்துவரும் ஊழல், மோசடி கொடுக்கல் வாங்கல் மற்றும் ஊகிப்பு மூலம் பெருமளவு இலாபத்தை குவித்துக்கொள்வது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் சேதத்தை வெளிப்படுத்துகின்ற சர்வதேச நிலைமையாகும். ஊழல் இலங்கைக்கு புதியதாக இல்லாவிட்டாலும், இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அது முறையாகி உள்ளது. அரசாங்க அமைச்சர்களின் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசியல் முகவர்களின் நீண்ட பட்டியல், இந்த சதிகளின் பிரதான பாத்திரங்களுடன் சம்பந்தப்பட்டவை.

கடந்த காலங்களில் அரசாங்க நிதிகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் பல அம்பலத்துக்கு வந்தன. நாட்டின் பிரதான நிதி நிறுவனமான, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியுடன் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் அதில் விசேடமானதாகும்.

கடந்த அக்டோபரில் வெளியான அத்தகைய ஒரு கொடுக்கல் வாங்கலில், லாஃப் கேஸ் பீ.எல்.சீ. நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கு 8 வீதம், 8 பில்லியன் ரூபாவுக்கு ஊழியர் சேமலாப நிதியின் மூலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சந்தைகளில் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தாலும், விலைக்கு வாங்கிய பங்கின் விலை 48 ரூபாவாகும். அதில் இருந்து சில வாரங்களுக்குள் நிர்வாகத்தின் பகுதியினரே லாஃப் ஹோல்டிங்கின் பங்கை நூற்றுக்கு 20 வீதம் குறைந்த விலையில் வாங்கினர். பெரும் வர்த்தகப் பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய பல கொடுக்கல் வாங்கல்கள் வெளியாகின.

பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியுடன் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் பற்றி, எதிர் தரப்பினர் கடந்த அக்டோபரில் இருந்து எழுப்பிய கேள்விகளுக்கு ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் பதில் அளிக்கவில்லை.

அரச வங்கித் துறையில், பெரும் வர்த்தகர்கள் கடன்களை செலுத்தாமல் விட்ட மோசடிகளும் அண்மையில் அம்பலத்துக்கு வந்துள்ளது. மே 11 அன்று, பிரதான இரு அரச வங்கிகளான, இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும், பாராளுமன்றத்துக்கு முன்வைத்த இரண்டு அறிக்கைகளின் படி, கடந்த பத்து வருடங்களுள் இந்த வங்கிகளுக்கு திரும்பக் கிடைக்காத கடன் தொகை பிரமாண்டமானவையாகும். அவை 170 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாகும்.

2011 ஆண்டில் இலங்கை வங்கிக்கு திரும்பக் கிடைக்காத கடன் 11.3 பில்லியன் ரூபாவாக உள்ள அதே வேளை, மிகவும் வறிய மட்டத்தினருக்கு கொடுக்கும் அற்பத் தொகையான சமுர்தி நிதிக்கான அரசாங்கத்தின் செலவு கிட்டத்தட்ட 9 பில்லியன் ரூபாவாகும்.

அரசாங்க ஊழல் பற்றி கூச்சல் எழுப்பும் விமர்சகர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான டி.யூ. குணசேகரவிடம், எதிர்க் கட்சியினர் இந்த கடன் திருப்பிச் செலுத்தாமை பற்றி கேட்ட போது, அவர் சில வங்கிச் சட்டங்களினால் கடன் செலுத்தத் தவறுபவர்களை அம்பலப்படுத்த முடியாது என வெட்கமின்றி கூறினார்.  

சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் தொடர்ச்சியாக துன்பப்பட்டு கடன் செலுத்த முடியாமல் சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளத் தள்ளப்படுகின்ற நிலையிலேயே, பெரும் வர்த்தகர்களின் மோசடிகள் இவ்வாறு மூடி மறைக்கப்படுகிறன.

கோப் என்றழைக்கப்படும் அரச நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற கமிட்டியின் தலைவர் குணசேகரவே ஆவார். இந்த கமிட்டி உயர்மட்ட ஊழல் மற்றும் மோசடி பற்றி பல அறிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும், அவை அனைத்தும் குப்பையில் வீசப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் மோசமான மூடிமறைப்புகளோடு, எதிர்க் கட்சியினரும் வேண்டுமென்றே போலி விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பூச்சரித்த மூட்டையை மூடி வைக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு வயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிடப்படுகின்ற அதே வேளை, அரசியல்வாதிகளின், அவர்களின் முகவர்களின் மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் சட்டைப் பைகளுக்குள் பில்லியன் ரூபாய்கள் நுழைகின்றன.

மோசடி கொடுக்கல் வாங்கலுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து என்.எஸ்.பி. வங்கியின் தொழிறச்சங்கம் எதிர்ப்பு பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தது. முதலாளித்துவ அரசின் மற்றும் அரசாங்கத்தின் சீரழிவு பற்றி தொழிலாளர்கள் பரந்தளவில் தெரிந்துகொள்வதையிட்டே தொழிற்சங்கங்களும் அதன் அதிகாரிகளும் பிரதானமாக கவலைகொண்டுள்ளனர். தொழிற்சங்கத்தால் பிரேரிக்கப்படுவது போல், முகாமைத்துவத்துக்காக புதிய முகங்களை நியமித்துக்கொள்வதன் மூலம் இந்த முறைமையை துப்புரவு செய்ய முடியாது. இதில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி, சோசலிச சமூக முறைமை ஒன்றை ஸ்தாபிப்பதே ஆகும்.