சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament supports austerity for Greece

ஜேர்மனிய பாராளுமன்றம் கிரேக்கத்தின் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்கிறது

By Peter Schwarz
29 February 2012

use this version to print | Send feedback

திங்களன்று ஜேர்மனியப் பாராளுமன்றம் கிரேக்கத்திற்குப் புதிய நிதிய பொதிக்கு மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஒப்புதலை வழங்கியது. சமூகமளித்திருந்த 591 பிரதிநிதிகளில் 496 பேர் ஆதரவாக வாக்களித்து, நிதி வழங்குவதுடன் பிணைக்கப்பட்டுள்ள பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைவாதிகள் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU), சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (FDP) பெரும்பாலான ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களுடன் வெட்டுக்களுக்காக வாக்களித்தனர். சர்வதேச நிதிய நெருக்கடியின் சுமையை கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது சுமையை மாற்றுவது என வரும்போது அவர்கள் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) இன் அரசாங்கத்திற்கு முற்றிலும் ஆதரவாக உள்ளனர்.

இடது கட்சி ஒன்றுதான் ஒருமனதாகப் பொதிக்கு எதிராக வாக்களித்தது. கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று விரும்பும் அரசாங்கக் கூட்டணியில் இருக்கும் 17பிரதிநிதிகள் இதை நிராகரித்தனர். அரசாங்க முகாமில் 9 பிற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை, அல்லது வாக்களிப்பிற்கு வரவில்லை. இத்தகைய முக்கியமான வாக்களிப்பில் முதல் முறையாக மேர்க்கெல் சான்ஸ்லரின் பெரும்பான்மை என அழைக்கப்படுவதை இழந்தார். ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் ஆதரவினால் இதற்கு நடைமுறை அரசியல் விளைவுகள் ஏதும் கிடையாது.

நிதியப் பொதியில் 130 பில்லியன் ($175 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வருவது அடங்கியுள்ளது. இது கிரேக்கத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய, வட்டியுடன் கூடிய கடனை அளிக்கிறது. இதைத்தவிர இதுவரை கொடுக்கப்படாத முன்னைய நிதி உதவிப்பொதியிலிருந்து 34 பில்லியனும் மற்றும் பழைய கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை புதிதாக மாற்றிக் கொள்வதற்கு 35 பில்லியனும் கொடுக்கப்படும்.

இப்பேச்சு எப்பொழுதும் கிரேக்கத்திற்கு உதவி, அல்லது மீட்புப் பொதி என்று பேசப்பட்டாலும், கிட்டத்தட்ட 200 பில்லியன் யூரோக்கள் நேரடியாக வங்கிகளின் கருவூலங்களைத்தான் சென்று அடையும். கிரேக்க வரவுசெலவுத்திட்டத்திற்கோ மற்றும் கிரேக்க மக்களுக்கு இதில் இருந்து எந்தப் பயனும் கிடைக்காது.

Financial Times Deutschland (FTD) , கருத்துப்படி €93 பில்லியன் உடனடியாக தனியாகக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் தள்ளுபடி செய்வதை உறுதி செய்யவும் இன்னும் ஈர்ப்புத்தன்மை ஆக்குவதற்காகவும் தேவைப்படுகிறது. €35 பில்லியன் ஐரோப்பிய மத்திய வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள தனியார் வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களுக்கு உத்தரவாதம் செய்ய ஒதுக்கப்படும். €23 பில்லியன் கிரேக்க வங்கிகளுக்கு மறுமூலதனத்திற்காக ஒதுக்கப்படும். €30 தங்கள் பத்திரங்களைப் புதிய பத்திரங்களாக மாற்றிக் கொள்வதற்கு இனிப்பூட்டவழங்கப்படும். €5.5 பில்லியன் பழை கடன்களுக்கான வட்டிக்குச் செல்லும்.

கடன்கொடுத்த வங்கிகளைப் பொறுத்தவரை, இது பெரிய உடன்படிக்கையாகும். கிரேக்க அரசாங்கப் பத்திரங்களின் பெயரளவு மதிப்பில் பாதிக்கும் மேலானவற்றை அவை தள்ளுபடி செய்யும் (ஏற்கனவே சந்தையில் அவை அதையும்விட குறைந்த மதிப்பு உடையவை). அதற்கு ஈடாக அவர்கள் புதிய சர்வதேச உத்தரவாதம் உடைய பத்திரங்களைப் பெறும்.

இந்தப் பரிமாற்றத்திற்கு நிதியளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை பயன்படுத்தும் 93 பில்லியன் கிரேக்க அரசாங்கத்திடம் இருந்து வசூல் செய்யப்படும் என்பதால், “€110 பில்லியனுக்கும் மேல் தள்ளுபடி செய்யப்படுவது கிரேக்கத்தின் புதிதாய் வெளியிடப்படும் கடனில் 93 பில்லியன் யூரோக்களுக்கு மேல் இருக்கும் என்று FTD முடிவுரையாகக் கூறுகிறது. இப்புதிய மீட்புநிதி கிரேக்கக் கடனை 17 பில்லியன்தான் குறைக்கும். அதுவும் கடன் கொடுத்தவர்கள் தாமாகவே 110 பில்லியனைத் தள்ளுபடி செய்தால். FTD கருத்துப்படி, மீட்புப் பொதியில் எஞ்சியிருக்கும் பில்லியன்கள் முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொது வங்கிகளில் இருந்து வாங்கப்பட்ட பழைய கடன்களுக்கு சேவைகளுக்காகவும் வட்டிக்காகவும் ஒதுக்கி வைக்கப்படும். துல்லியமான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 

எனவே கிரேக்கத்திற்கு நிதியப் பொதி என்பது வங்கிகளுக்கான உதவிப் பொதியாகின்றது. இதற்கு கிரேக்கம் பொறுப்புக் கொள்கிறது, பேரழிவு தரும் விலையையும் கொடுக்கிறது. கிரேக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகள், ஒவ்வொரு தவணையும் அதற்குக் கொடுக்கப்படுவதற்கு முன் பரிசீலனைக்கு உட்பட்டவை, போருக்குப் பிந்தைய ஐரோப்பிய வரலாற்றில் முன்னோடியில்லாதது ஆகும். சிலியில் இருந்த பினோசேயின் சர்வாதிகார ஆட்சி, நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருமுன் வைமார் குடியரசின் இறுதிக்காலத்தில் இருந்த ப்ரூனிங்கின் நெருக்கடிகால அரசாங்கம் போன்றவைதான் இதே போன்ற நடவடிக்கைகளைச் சுமத்தியுள்ளன.

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏதென்ஸ் பொதுப்பணித் தொழிலாளர்கள் 150,000 பேரைப் பணிநீக்கம் செய்யும். குறைந்தப்பட்ச ஊதியம், வேலையற்றோருக்கான உதவிகளில் கால்பகுதியை குறைத்துவிடுவதுடன், தனியார்துறை ஊதியங்களை 15% குறைத்துவிடும். ஓராண்டிற்குள் ஒரு பில்லியனை மருந்துகள் வாங்கும் செலவினங்களில் குறைத்துவிடும். பொதுப் போக்குவரத்துச் செலவை 25% உயர்த்திவிடும். பல அரசாங்க நிறுவனங்களைத் தனியார்மயமாக்கிவிடும். பல கிரேக்க மக்களை பொறுத்தவரை இது அப்பட்டமான வறுமை, பட்டினி, ஏன் இறப்புக் கூட எனலாம்.

நிதியப் பொதி சாதிக்கக் கூடியதெல்லாம் நாட்டைச் சுற்றி ஒரு தீயரண் கட்டமைப்பதுதான். அதையொட்டி இன்னும் அரசாங்கத் திவால்கள் மற்றும் சர்வதேச அளவில் நிதிய நெருக்கடிகள் ஏற்படுவதைத் தூண்டிவிடாமல் நாடு திவாலாக அனுமதிக்கப்படும் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது இதேபோல் வரக்கூடியத் தாக்குதல்களுக்கு கிரேக்கம் ஒரு முன்னோடி ஆகும். பெப்ருவரி 22 அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராகி பகிரங்கமாக அறிவித்தார்: ஐரோப்பிய சமூக மாதிரி ஏற்கனவே போய்விட்டது. நிதிய உறுதிப்படுத்தலுக்கு வேறு மாற்றீடு இல்லை, இது குறுகியகாலத்திற்கு பொருளாதார சுருக்கத்திற்கு இட்டுச்செல்லும் தன்மையுடையது என்பதை நாம் மறுக்க முடியாது. 

ஜேர்மனியில் செய்தி ஊடகம் அரசாங்க முகாமிற்குள் இருக்கும் வேறுபாடுகள் குறித்து அதிகம் எழுதியுள்ளது. இது சான்ஸ்லர் மேர்க்கலுக்குப் பெரும்பான்மை இழப்பை ஏற்படுத்தியது பற்றி ஆகும். ஆனால் இந்த வேறுபாடுகள் கிரேக்கம் திவாலாகலாமா, எப்பொழுது என்னும் பிரச்சினையைச் சுற்றித்தான் முற்றிலும் இருந்தன. ஆளும் கூட்டணி மற்றும் சமூக ஜனநாயக கட்சி, பசுமைவாதிகள் அனைவருமே சமூக சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஒப்புக் கொள்கின்றனர்.

தன்னுடைய கட்சியினரிடையே உள்ள எதிர்ப்பாளர்களை சாதகமாகக் கொண்டு மேர்க்கெல் சர்வதேசக் கோரிக்கைகளை ஒதுக்குகிறார். அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவநாடுகள் மற்றும் சர்வதேச நாணயநிதியம்  ஆகியவை  ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு அமைப்பு (ESM) அரை மில்லியனில் இருந்து ஒரு டிரில்லியன் யூரோக்கள் மூலதனம் என உயர்த்தப்பட வேண்டும், அது வருங்கால அரசாங்கத் திவால்களுக்கு எதிராக வங்கிகளை பாதுகாக்கும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜேர்மனிய அரசாங்கம் இதுவரை இதை நிராகரித்துள்ளது. ஏனெனில் அதுதான் தேவைப்படும் நிதியில் பெரும்பகுதியைக் கொடுக்க நேரிடும். அத்தகைய கோரிக்கைகளை நிராகரிப்பதற்குத் தன் கட்சியினரின் உள் எதிர்ப்புக்களையே சுட்டிக் காட்ட முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பரபரப்புச் செய்தித்தாளான Bild கிரேக்கத்திற்கான நிதியுதவி குறித்துப் பரந்த சமூகத் தட்டுக்கள் மத்தியில் எதிர்ப்பிற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், தேசியவெறி வாதங்களைப் பயன்படுத்துகிறது. பாராளாமன்ற வாக்கெடுப்புத் தினத்தன்று அது நிறுத்துக என்னும் பெரிய தலைப்புடன் தோன்றியது. 

இதே செய்தித்தாள் முன்னாள் சான்ஸ்லர் ஹெல்முட் கோல் (CDU) எழுதிய கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அவர் நிதியப் பொதிக்கு வலுவான ஆதரவு கொடுத்துப் பேசியுள்ளார். இப்பொதி நிராகரிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தான போர், சர்வாதிகாரம் ஆகியவை பற்றி கோல் எச்சரிக்கிறார். இரண்டு கொடூராமான உலகப் போர்களுக்குப் பின் ஓர் ஒன்றுபட்ட ஐரோப்பாதான் நீடித்த சமாதானத்தையும் சுதந்திரத்தையும் அளிக்கும் என்ற உணர்வு பெறப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்தார். கடந்த காலத்தின் தீய தன்மைகள் இன்னும் ஒதுக்கப்பட்டுவிடவில்லை; அவை மீண்டும் மீண்டும் வரக்கூடும். எனவேதான் மாபெரும் ஐரோப்பா என்னும் கருத்து” “நலிந்த இதயம் உடையோர், சந்தேகமுடையோருக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

நிதியப் பொதிக்காக கோலின் வாதமும், எதிர்மறைத் தலையங்க நிலைப்பாடு என்று Bild எடுத்துள்ளதற்கு இடையே உள்ள முரண்பாடு வெளிப்படையாக உள்ளது. உண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகள்தான் கடந்தகால அரக்கத்தனத்தை மீண்டும் எழுப்புகின்றன”—அதாவது, சமூக வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போர் என்பவற்றை. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அரசாங்கங்கள், நிதிய நலன்கள் என அவற்றிற்குப் பின் நிற்பவை ஆகியவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்தினால் தான் ஐரோப்பா ஒன்றுபடுத்தப்பட முடியும்.

இடது கட்சி நிதியப் பொதியை முற்றிலும் தந்திரோபாயக் காரணங்களுக்காகத்தான் நிராகரித்துள்ளது. மீட்புப் பொது வங்கிகளையும் ஊக வணிகர்களையும்தான் மீட்கிறது, சமூக விரோத, பொருளாதாரச் சேதம் கொடுக்கும் திட்டங்கள் கிரேக்கத்தை இன்னும் பெரிய நெருக்கடியில் தள்ளுகிறது என்று அது கூறுகிறது.   ஆனால் அது ஒருவேளை ஏற்படக்கூடிய ஐரோப்பிய ஒன்றியம் சீர்திருத்தம் பற்றிய நப்பாசைகளை எழுப்பும் நிலைப்பாட்டில்தான் இவ்வாறு செய்கிறது. பெருகும் சமூக சீற்றத்தைத் பாதிப்பற்ற பாதைகளில் தள்ளுவதற்கும் அது பயன்படுத்தப்படுகிறது. நடைமுறையில் இடது கட்சி நெருக்கமாக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் செயல்பட்டு, சிக்கன நடவடிக்கைக்கு பெரும்பான்மை தேவை என்றால் அதற்கு ஆதரவு கொடுக்கிறது.