சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Friends of Syria” plan war, regime change at Washington’s behest

சிரியாவின் நண்பர்களின்" யுத்த திட்டமும், வாஷிங்டன் கட்டளையின் பேரில் ஆட்சி மாற்றமும்

Chris Marsden
24 February 2012

use this version to print | Send feedback

"சிரியாவின் நண்பர்கள்" என்பவர்கள், ஆக்கிரமிப்பு காலனித்துவ யுத்தங்களில் போய் முடிந்த தொடர்ச்சியான அனைத்து சீர்குலைப்பு பிரச்சாரங்களில் சமீபத்திய ஒன்றை திட்டமிட துனிசியாவில் கூடிய அரசியல் குற்றவாளிகளின் ஒரு கூட்டமாகும்.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஓர் அரை டஜன் சட்டவிரோத யுத்தங்களைக் கடந்த இரண்டு தசாப்தங்களில் நடத்தியுள்ள அமெரிக்காவின் தலைமையில், 80 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் துனீசிற்குப் பயணிக்கின்றனர். ஒருசமயம் தங்களுக்கிடையில் மத்திய கிழக்கை துண்டுதுண்டாக்கி கொண்ட முன்னாள் காலனித்துவ சக்திகளான பிரான்ஸூம், பிரிட்டனும் அவற்றின் தரப்பில், எண்ணெய் வளம் மிக்க அப்பிராந்தியத்தில் செய்யப்படும் மறு-பகுப்பின் எந்தவொரு கொள்ளைப் பொருட்களிலும் அவற்றின் பங்கைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் துருக்கி மற்றும் வளைகுடா ஷேக்குகளுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன. இவர்களின் "ஜனநாயகம்" குறித்த  அக்கறை, வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸிடமிருந்து வெளிப்பாடுகளிலிருந்து குறைந்ததல்ல.    

மேற்கத்திய சக்திகள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஷாத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியிலிருந்து எழும் மக்கள் போராட்டங்களைப் பாதுகாக்க நோக்கம் கொண்டுள்ளன என்ற வாதத்தின் மீது அந்த துனீஸ் கூட்டம் அடித்தளமிட்டுள்ளது. ஆனால் சிரியாவை ஒரு இரத்தந்தோய்ந்த உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடிக்கும் விதமாக ஆஷாத்திற்கு எதிராக ஒரு பிரிவினைவாத-சன்னி இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஏகாதிபத்திய சக்திகளின் உளவுத்துறை முகமைகளும், சிறப்பு படைகளும் கருவிகளாக உள்ளன என்பதே உண்மையாகும்.      

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க பிரதிநிதி வாலிட் மாலூஃப், லெபனானின் Daily Star இதழுக்கு கூறுகையில், வாஷிங்டன் ஏற்கனவே "இரகசியமாக எதிர்ப்பிற்கு உதவிகளை அளித்து வருவதாக" தெரிவித்தார். எதிர்ப்பை ஒழுங்கமைக்க உதவியமைக்காக சுமார் 50 துருக்கிய அதிகாரிகள் சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, சவூதி அரேபியா மற்றும் கடாரின் செலவில் போராடுவதற்காக 10,000த்திற்கும் மேற்பட்ட லிபியர்கள், சிரியாவிற்குள் நுழைவதற்கு முன்னால் இருக்கும் இரகசிய முகாம்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக ஜோர்டானை மையமாக கொண்ட Al Bawaba இதழ் குறிப்பிட்டது. ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி, ஏற்கனவே பிரிட்டனிலிருந்து M16 உளவாளிகள் அம்மண்ணில் இறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.    

ரஷ்யா மற்றும் சீனாவின் மேலாதிக்கத்தை வெட்டிவிட்டு, அமெரிக்காவின் பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஈரானுடனான சிரியாவின் உறவை முறிக்கக்கூடிய ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தோடு சிரியா இலக்கில் வைக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு இட்டுச்சென்ற மற்றும் ஈராக்கில் வாஷிங்டன் எதன்மூலமாக தலையீடு செய்ததோ அந்த "நலன்விரும்பிகளின் கூட்டணி" என்ற தொடர்பு குழுவின் ஒரு புதிய பதிப்பே சிரியாவின் நண்பர்கள் ஆகும். லிபியாவில் தேசிய இடைக்கால சபை (NTC) மற்றும் அதற்கு முன்னர் முன்னாள் யூகோஸ்லேவியாவில் கொசொவோ விடுதலை இராணுவம் ஆகியவற்றைப் போல, சிரி்ய தேசிய சபை (SNC) மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் (FSA) ஆகியவை ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வாகனமாக முன்வைக்கப்படும் ஒரு கைப்பாவை படைகளாக இருக்கின்றன.    

சிரி்ய தேசிய சபை (SNC) மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் (FSA) இரண்டுமே, அங்குள்ள அல்கொய்தா வகை துருப்புகளின் அடித்தளத்தில் அமைந்த பிரிவுகளின் ஒரு குறிப்பிடத்தக்க பிரசன்னம் உட்பட முற்றிலும் வெவ்வேறு பிரிவுகளை கொண்ட சிரியாவின் ஓர் எதிர்ப்பாளர்களை முழுமையாக அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் கையாளக்கூடிய விதத்தில் ஒரு ஒத்திசைவான மற்றும் அதிகாரப்பூர்வ கட்டளை வடிவமைப்பை உருவாக்க அவை உத்தரவுகளின்கீழ் உள்ளன. இது அமைக்கப்பட்டு, அவர்கள் சிரிய மக்களின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், “மனிதாபிமான பாதைகளை" அறிவிக்கவும், துருக்கி மற்றும் அரேபிய லீக்கை முன்னிலையில் வைத்து ஒரு நேட்டோ நடவடிக்கையை நடத்தவும் அதுவொரு சுருக்கமான வழியாக உள்ளது. தகவல்களின்படி, “உண்மையில் இந்த இராணுவ தலையீடு மட்டுமே ஒரே தீர்வாக நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது,” என்று சிரி்ய தேசிய சபை செய்தி தொடர்பாளர் பாஸ்மா கோட்மாணி புதனன்று அறிவித்தார்

இந்த நன்கு-ஒத்திகைப் பார்க்கப்பட்ட காட்சியானது லிபியாவைவிட மிக அதிகமாக இரத்தந்தோய்ந்த ஒரு மோதலில் முடியக்கூடிய மற்றும் ஒரு பரந்த பிராந்திய அல்லது ஒரு உலக யுத்தத்தையே கூட தூண்டிவிடக்கூடிய அச்சுறுத்தலை முன்வைக்கிறது. இந்த அச்சுறுத்தலின் முன், தொழிலாளர்களும் இளைஞர்களும் உத்தியோகப்பூர்வ யுத்த-எதிர்ப்பு இயக்கத்தின் பரிதாபகரமான தோல்வியை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும்

2003இல், ஈராக்கிற்கு எதிராக உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் யுத்தத்தை எதிர்த்தனர். ஆனால் இந்த பரந்த மக்கள் போராட்டத்திற்குத் தலைமை அளித்த சக்திகள் அதை மண்ணைக் கவ்வச் செய்தன. ஐக்கிய நாடுகள் சபை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை அமெரிக்காவிற்கு எதிர்பலமாக செயல்பட முடியுமென சர்வதேச அளவில் குட்டி-முதலாளித்துவ முன்னாள்-இடது மற்றும் ஸ்ராலினிய குழுக்கள் வலியுறுத்தின. ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், குற்றத்தில் அவை மூன்றுமே வாஷிங்டனின் கூட்டாளிகளாக செயல்படுகின்றன.   

அவ்வமைப்புகள் முஸ்லீம் சகோதரத்துவத்தோடு இணைந்த அமைப்புகளை மத்திய கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக ஊக்குவித்து வருகின்றன. இன்று முஸ்லீம் சகோதரத்துவம் ஏகாதிபத்திய தலையீட்டை மிக வெளிப்படையாக பாதுகாப்பதோடு, எகிப்திய தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டகங்ளையும் வாஷிங்டனுக்கு சார்பாக ஒடுக்குகிறது. லிபியாவில் ஓர் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை அமைக்க செய்வதில் கருவியாக இருந்த அது, ஏகாதிபத்திய-சார்பிலான சிரிய எதிர்ப்பின் முதுகெலும்பாகவும் அமைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக, யுத்த-எதிர்ப்பு போராட்டத்தின் பொறிவானது முன்னாள்-இடது போக்குகளின் தலைமையில் அவற்றின் வலதுசாரி பரிணாமத்தின் மற்றும் ஏகாதிபத்தியத்தைக் குறித்து அவற்றின் சொந்த துதிபாடலின் விளைவாகும்.

ஐக்கிய செயலகம் (United Secretariat) மற்றும் சர்வதேச சோசலிஸ்டுகளோடு இணைந்தவை உட்பட, பல்வேறு முன்னாள்-இடது குழுக்கள் அனைத்தும் லிபியாவில் தேசிய இடைக்கால சபையைப் பாதுகாத்தன. இத்தகைய கட்சிகளுக்குள் இருந்த கில்பெர்ட் அச்சார் போன்ற முக்கிய பிரமுகர்கள் பகிரங்கமாகவே நேட்டோ குண்டுவீச்சு தாக்குதலை ஆதரித்தனர்

இதே காட்சி சிரியாவில் மீண்டும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பிரிட்டனில் உள்ள சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி, யுத்தத்தை எதிர்க்கும் கூட்டணியை (Stop the War Coalition) ஸ்தாபிக்க அது உதவியதில் என்னவெல்லாம் மிஞ்சியுள்ளதோ அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பிரச்சாரத்திற்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றது. துனீஸ் மாநாட்டிற்கு முன்னர் வெகுசமீபத்தில், சோசலிச தொழிலாளர் கட்சி –SWP- அதன் "முரண்பாடான பாத்திரத்தை" எடுத்துக்காட்டும் விதத்தில், அரேபிய லீக் உடன் தம்மைத்தாமே ஐக்கியப்படுத்தி கொண்டது.  

அது எழுதுகிறது: “அரபு லீக் தற்போது எதிர்ப்பிற்கு ஆயுத உதவி அளிக்கவும் மற்றும் சிரியாவின் நண்பர்களோடு இணைந்து இயங்கவும் ஆலோசித்து வருகிறது. பராக் ஒபாமாவின் பல ஆலோசகர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்து வருவதால், இது ஒரு சிக்கலான நிலைமைக்கு அமெரிக்காவை பின்தள்ளும்.”

அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை நடத்துவதற்கான சிறந்த சூழ்நிலைகளை உருவாக்க, இத்தகைய சொற்களோடு சோசலிச தொழிலாளர் கட்சி, அரேபிய அதிகாரங்கள் மற்றும் சிரி்ய தேசிய சபை  மற்றும் சுதந்திர சிரிய இராணுவத்தில் உள்ள அவற்றின் முகவர்களின் முயற்சிகளுக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது.

முன்னாள்-இடது குழுக்கள், அவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சோசலிஸ்ட் வாய்ஜம்பங்களுக்கு இடையில், முதலாளித்துவ கட்சிகளாக உள்ளன. இளைஞர்களைத் தீவிரப்படுத்துவதை நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்ட வயதான மத்தியதட்டு வர்க்க அடுக்குகளில் தங்கியுள்ள அவை, மத்தியகிழக்கிலும் உள்நாட்டிலும் தற்போதிருக்கும் சமூக அமைப்புமுறையைக் காப்பாற்றுவது, நிலவிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் புரட்சிகர போராட்டங்களுக்கு மத்தியில் அவற்றிற்கு இருக்கும் தனிச்சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவசியமாகும் என்று தீர்மானித்துள்ளன.

முதலாளித்துவத்திற்கு முடிவு கட்ட, ஒரு சோசலிஸ்ட் வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே, நிலவும் யுத்த அபாயங்களை எதிர்க்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக உள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இத்தகையவொரு புதிய யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவர்கள் அவர்களின் அரேபிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு செய்யக்கூடிய மிகச் சிறந்த உதவியாகும். அது, ஏகாதிபத்திய தலையீட்டிற்கு எதிரான ஒரு போராட்டத்தின் அடித்தளத்தில், மத்தியகிழக்கின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதோடு, அது அப்பிராந்தியத்தின் அழுகிப்போன மற்றும் ஊழல்நிறைந்த அனைத்து ஆட்சிகளுக்குமே கூட முடிவு கட்டும்