சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Tens of millions join one-day protest strike

இந்தியா பல மில்லியன் தொழிலாளர்கள் ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்

By our correspondents
2 March 2012

use this version to print | Send feedback

செவ்வாயன்று காங்கிரஸ் கட்சி-தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் சமூகப்-பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, ஒரு 10- அம்ச கோரிக்கைகள் பட்டியலுக்கு ஆதரவு தருவதற்காக இந்திய முழுவதும் படர்ந்த ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தில் நூறு மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேல் பங்குபெற்றனர்.

தேசியத் தொலைத் தொடர்புத் தொழிலாளர்களின் தொழிற்சங்க அதிகாரி ஒருவர் அணிவகுப்பிற்கு சென்னையில் ஒரு தந்தி அலுவலகத்திற்கு வெளியே உரையாற்றுகிறார்.

11 அரசாங்க அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்சங்க மையங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருந்தன. இவற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகிய இரு ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளுடன் இணைந்து தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான ஹிந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி அல்லது BJP யும் அடங்கியிருந்தன.


வேலைநிறுத்தத்தின் பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும், தொழில்துறையிலும் பரந்து மாறுபட்டிருந்தது.

பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சல் பணிகள், பெரும்பாலான பொதுப் போக்குவரத்து முறை, அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்தியா நெடுகிலும் இருக்கும் துறைமுகங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளை முடக்கியது. நிலக்கரித் தொழிலின் பெரும்பகுதி மூடப்பட்டது; கடந்த ஆண்டு பல தொடர்ச்சியான போர்க்குணம் மிக்க வேலைநிறுத்தங்கள் ஆக்கிரமிப்புக்கள் என்று மாருதி-சுசூகி கார் இணைப்புத் தொழிலாளர்கள் நடத்திய பகுதியான குர்கான்-மனேசர் தொழிற்பகுதி உட்பட பல உற்பத்தி ஆலைகளிலும் வெளிநடப்புக்கள் இருந்தன.

இதற்கு முற்றிலும் மாறாக தேசிய இரயில் வலையமைப்பும் விமானப் போக்குவரத்தும் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

தென்மேற்கு மாநிலமான கேரளாவில் இயல்பு வாழ்வு ஸ்தம்பித்தது. பேருந்துகள் சாலையில் காணப்படவில்லை, கடைகள் மூடப்பட்டிருந்தன; காங்கிரஸ் கட்சித் தலைமையிலுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எல்லா அரச ஊழியர்களுடைய ஊதியமும் நிறுத்தப்படும் என்னும் உத்தரவைத் தொழிலாளர்கள் புறக்கணித்தனர்.

இந்தியாவின் நிதியத் தலைநகரான மும்பையில் வேலைநிறுத்தம் பெரும் பாதிப்பைக் கொண்டது; அதேபோல் மும்பை இருக்கும் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்ட்டிரத்திலும் பரந்த அளவில் பாதிப்பு இருந்தது. அரச வங்கி மற்றும் இந்திய ரிசேர்வ் வங்கி என்னும் நாட்டின் மத்திய வங்கியில் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தது தொழிற்சங்கங்கள் இல்லாத தனியார் வங்கிகளின் செயற்பாடுகளை தீவிரமாகப் பாதித்தது.

வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் வகையில் தெற்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் AIADMK அரசாங்கம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்தது; குறிப்பாக போக்குவரத்துத் துறையில். அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் சாரதிகளும் கண்டக்டர்களும் செவ்வாயன்று வேலை செய்தால் இருநாள் ஊதியம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும்கூட வேலைநிறுத்தம் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது; ஏனெனில் பல மத்திய, மாநில அரசாங்க ஊழியர்கள்,வங்கித்துறை, தொலைத்தொடர்புத்துறை ஆகியவற்றில் இருப்பவர்கள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்திருந்தனர். திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற ஜவுளி உற்பத்தி மையங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.

மேற்கு வங்கத்தில் வலதுசாரி திருணமூல் காங்கிரஸ் அரசாங்கம் வேலைநிறுத்தத்தை முறிக்க உறுதியான முயற்சியை மேற்கொண்டு, பொலிஸ் மற்றும் குண்டர் குழுக்களைத் திரட்டி வேலைநிறுத்த ஆதரவாளர்களை துன்புறத்த, மிரட்ட முற்பட்டது. வேலைநிறுத்தத்திற்கு முன் அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு செவ்வாயன்று பணிக்கு வராத அரசாங்க ஊழியர்கள் வேலையில் தடை செய்துவிட்டதாகக் கருதப்படுவர் என்று அறிவித்தது. இதன் பொருள் அவர்களுடைய சேகரிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய நலன்கள் அனைத்தும் இழக்கப்பட்டுவிடும் என்பதாகும்.

இந்த அச்சுறுத்தலின் காரணமாக, பெரும்பாலான அரச ஊழியர்கள், இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் கொண்டிருக்கும், மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பணிக்குச் சென்றனர்; அரசிற்குச் சொந்தமான பேருந்து, நிலத்தடி இரயில்வேப் பணிகள் இயல்பாக நடந்தன. ஆனால் மற்றபடி வேலைநிறுத்தம் மாபெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. நிலக்கரி, எரிசக்தி உற்பத்தி, கட்டமைப்பு இன்னும் பல தொழில்துறைகளில் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பெரும்பாலான மத்திய அரசாங்க அலுவலகங்கள், முக்கியமாக வங்கிகள், காப்பீட்டு  நிறுவனங்கள், அஞ்சல், தொலைபேசித் துறைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.

அரசாங்கத்திற்கு சொந்தமான போக்குவரத்து முறை செயல்பட்டாலும், பெரும்பாலான தனியார் பேருந்துகளும், மூன்று சக்கர, பிற டாக்சி செயல்பாடுகள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்திருந்தன. செவ்வாயன்று தங்கள் பேருந்துகளை இயக்காத தனியார் பேருந்து நிர்வாகிகள் வரவிருக்கும் வாரம் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாநில போக்குவரத்து மந்திரி மதன் மித்திரா அச்சுறுத்தியிருந்தபோதும் கூட இந்நிலைமை ஏற்பட்டது.

வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் கூடுதலாக 15,000 பொலிசாரை கொல்கத்தாவில் மட்டும் நிலைப்பாடு கொள்ளச் செய்தது. மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட வேலைநிறுத்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

முதல் மந்திரி மமதா பானெர்ஜி அனைத்து அரசாங்கத் துறைகளும் செவ்வாயன்று வேலைக்கு வராதவர்களில் பெயர்களை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். செய்தி ஊடகத் தகவல்களின்படி, அவர் அச்சுறுத்திய ஓய்வூதிய நலன்கள் வேலைநிறுத்தக்காரர்களுக்கு அளிக்கப்பட மாட்டாது என்பது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அத்தகைய கடுமையான, பழிவாங்கும் பதிலடி ஐயத்திற்கு இடமின்றி பரந்த கோரிக்கைகளை அடிமட்டத் தொண்டர்களிடம் இருந்து உடனடியான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கச் செய்யும்.

பி.ஜே.பி. ஆட்சி நடத்தும் கர்நாடகாவின் தலைநகரான, ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை மையமான பெங்களூரில் பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றின் ஊழியர்களும் மற்றும் மூன்று சக்கர டாக்சி சாரதிகளும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர்.  கடைகளும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை இயல்பாகச் செயல்பட்டாலும், அரசாங்கம் கூடுதலாக பேருந்துகளை விட்டது, வேலைநிறுத்தம் அதிக பாதிப்பைக் கொடுப்பதைத் தடுத்துவிட்டது. இந்தியாவின் பிற பகுதிகள் பலவற்றைப் போலவே கர்நாடகாவிலும் வேலைநிறுத்தத்தின் பாதிப்பில் முக்கியமான கூறுபாடு முறைசாராப் பிரிவில் இருந்து ஏராளாமான தொழிலாளர்கள் பங்கு பெற்றதுதான்; இதில் மூன்று சக்கர வாகன சாரதிகள், கட்டமைப்புத் துறைத் தொழிலாளர்கள், சேமிப்புக் கிட்டங்கிகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூக சுகாதாரப் பிரிவான அங்கன்வாடித் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

செவ்வாய் நடந்த எதிர்ப்பு வேலைநிறுத்தம் மற்றும் இந்தியாவின் புதிய பூகோளரீதியில் ஒருங்கிணைந்துள்ள உற்பத்தித் துறையில் கடுமையான வேலைநிறுத்த அலை—Foxconn, BYD Electronics, Hyuandai, Ford, GM நிறுவனத் தயாரிப்புக்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பிற சர்வதேச கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட கொண்டுள்ள ஆலைகள்தொழிலாள வர்க்கத்தினரிடையே உள்ள பெருகிய சீற்றம் மற்றும் போராளித்தனத்திற்குச் சான்றாகும்.

இந்திய உயரடுக்கு மற்றும் ஒபாமா நிர்வாகம் இடைவிடாமல் இந்தியாவின் ஏற்றம் குறித்துப் பெருமை பேசுகின்றன; ஆனால் இந்திய முதலாளித்துவத்தின் கடந்த இரு தசாப்தங்களின் விரிவாக்கம் இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதின் மூலம்தான் சாதிக்கப்பட்டுள்ளது; அதுவும் பெருவணிகத்தின் சந்தைச் சார்பு செயற்பட்டியலினால் நேரடியாக ஏற்பட்டுள்ள விவசாயத்துறை நெருக்கடிக்கு நடுவே.

மேலும் உலகெங்கிலுமுள்ள இதன் இணைப் பிரிவுகளைப் போல், இந்திய உயரடுக்கு உலகப் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைமையிலுள்ள UPA சமூகநலச் செலவுகளைக் குறைக்க வேண்டும், விலை உதவிநிதிகளை அகற்றவேண்டும், பணிநீக்கம், ஆலை மூடல்களின் ஆகியவற்றிற்கு இருக்கும் தடைகளைக் குப்பையில் போட வேண்டும் என்று கோருகின்றனர். எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கு பெரும்பாலான பெருநிறுனச் செய்தி ஊடகம் எதிர்கொண்ட தன்மை, சீற்றம் நிறைந்ததாக இருந்தது; “UPA அரசாங்கம் அதன் இரட்டை நிலைப்பாட்டைக் கடக்கும் நேரம் வந்துவிட்டது.... நீண்டகாலமாக தாமதித்து வரும் தொழிலாளர் துறைச் சீர்திருத்தங்கள் நடத்தப்பட வேண்டும்என்று New Indian Express  இடிபோல் முழங்கியுள்ளது.

ஆனால் செவ்வாய் வேலைநிறுத்தம் தொழிலாளர் போர்க்குணம் பெருகியிருப்பதற்கு நிரூபணம் என்றாலும்கூட, அதற்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்களானது UPA அரசாங்கம் மற்றும் முதலாளித்துவத் திட்டமான இந்தியாவை ஒரு குறைவூதிய உற்பத்தி நிலையமாக உலக முதலாளித்துவத்திற்கு வைத்துள்ள நிலைக்கு தொழிலாள வர்க்கம் சவால் விட வேண்டும் என்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி அரசியல் அளவில் நசுக்குவதற்குத்தான் முயல்கின்றன.

வேலைநிறுத்தத்தின் தலைமை CPI மற்றும் CPM ஆகியவற்றிடம் அவற்றின் தொழிலாளர் கூட்டமைப்புக்களான, அதாவது  அனைத்து இந்திய தொழிற்சங்கங்கள் காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மூலம் நடத்தப்பட்டது. கடந்த இரு தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் 14 ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களை இந்தியப் பெருவணிகத்தின் செயற்பட்டியலை சுமத்துவதில் தங்கள் முக்கிய பங்கை அரசியல் முறையில் மறைப்பதற்காக நடத்தியுள்ளனர். பலமுறையும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மத்திய அரசாங்கங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தியுள்ளன; இதில் தற்பொழுதைய UPA அரசாங்கத்திற்கு நான்கு ஆண்டுகள் ஆதரவு கொடுத்தது அடங்கும்; தவிரவும் தாங்கள் பதவியில் இருந்த மாநிலங்களில் அவர்கள் வெளிப்படையாக முதலீட்டாளர் சார்புக் கொள்கைகளைத்தான் தொடர்ந்தனர்.

காங்கிரஸ் மற்றும் BJP தொழிற்சங்கங்கள் செவ்வாய் வேலைநிறுத்தத்தில் சேர எடுத்த முடிவை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வரலாற்றுத்தன்மை உடையது எனப் பாராட்டியுள்ளன. செவ்வாயன்று AITUC  ன் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா காங்கிரசுடன் இணைந்துள்ள INTUC  மற்றும் ஒரு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான ஜி. சஞ்சீவ ரெட்டியை நம் கூட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சாயன போராளி என்று புகழ்ந்தார்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள், காங்கிரஸ் மற்றும் BJP தொழிற்சங்கங்களைத் தழுவியிருப்பது, ஸ்ராலினிஸ்ட்டுக்களின் தலைமையில் உள்ள இடதுமுன்னணியும் இந்தியப் பெருவணிகத்தின் பகிரங்கக் கட்சிகளுக்கும் இடையே பிற்போக்குத்தன அரசியல் கூட்டமைப்புக்கள் என்ற அடுத்த சுற்றிற்கு ஒரு படிக்கல் என்பது தெளிவு.


தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செவ்வாயன்று வேலைநிறுத்தத்திற்கு ஆதரவான அணிவகுப்பு

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் செவ்வாயன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களுடன் சென்னையில் உரையாடினர்.

ஓர் அஞ்சல் துறைத் தொழிலாளியான சேகர் கூறினார்: பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகங்களில் புதிதான பதவி நியமனங்களே இல்லை. இதன் விளைவாக இருக்கும் தொழிலாளர் தொகுப்பு பெரும் பணிச் சுமையைக் கொண்டுள்ளது. இதைத்தவிர இன்னும் ஏராளமான, ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர்; பல ஆண்டுகள் பணியாற்றியும் அவர்கள் பணிகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

தந்தி அலுவலகத் தொழிலாளி ஸ்ரீதர் WSWS இடம் கூறினார்: தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர். ஆனால் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பங்குபெறவில்லை; ஏனெனில் அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்கள் [அமெரிக்க $20] இழப்பது குறித்துக் கவலை கொண்டுள்ளனர்; ஏனெனில் உழைக்கவில்லை என்றால் ஊதியம் இல்லைஎன்று அரசாங்கம் கூறியுள்ளது.” WSWS  நிருபர்கள் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற விரும்பாததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினர்; உதாரணமாக இதற்கு அழைப்பு விடுத்த அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களும் சந்தைச் சார்பு சீர்திருத்தஙகள் செயல்படுத்தப்படக் காரணமான அரசியல் கட்சிகளுடன் இணைந்தவை என்ற உண்மை உள்ளது. இக்கருத்திற்கு உடன்பட்ட ஸ்ரீதர், அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைத்தான் செயல்படுத்துகின்றன; ஆனால் எதிர்க்கட்சியில் அவை இருக்கும்போது அவற்றை எதிர்ப்பதாகக் கூறுகின்றன. இது ஏமாற்றுத்தனம்.என்றார்.