சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Murdoch press endorses Scottish independence

மேர்டோக் செய்தி ஊடகம் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கு ஆதரவு

By Steve James
10 March 2012

use this version to print | Send feedback

ரூபர்ட் மேர்டோக்கின் முதல் ஸ்காட்லாந்துப் பதிப்பான New Sun ஞாயிறன்று விதியை நிர்ணயிக்கும் நாள்என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைக் கொண்டிருந்தது. எடின்பரோவில் ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி அரசாங்கத்தின் செய்திகள் எடின்பரோவில் அக்டோபர் 18, 2014 ஸ்காட்லாந்தின் சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு சர்வஜனவாக்கெடுப்பிற்கு உகந்த தினம் என்று கூறியதாக பிரத்தியேகமாக தகவல் கொடுத்துள்ளது.

ஸ்காட்லாந்து தேசியக் கட்சி –SNP- யின் தலைவரும், ஸ்காட்லாந்தின் முதல் மந்திரியுமான அலெக்ஸ் சால்மண்ட், மற்றும் நியூஸ் இன்டர்நேஷனலின் பில்லியனர் நிறுவனருக்கும் இடையே உள்ள கூட்டு ஸ்காட்லாந்தின் சுதந்திரத் திட்டத்தின் உண்மையான தன்மைக்கு சான்றாக இருக்கிறது. இந்த முயற்சி நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்காக இயக்கப்படுகிறது. புதிய ஞாயிறு பரபரப்புப் பத்திரிகை, நியூஸ் இன்டர்நேஷனல் தொடர்ந்த முறையான தொலைபேசி ஒற்றுக்கேட்டல் மற்றும் ஊழல்களைப் பற்றி அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களால் மூடப்பட்டுவிட்ட தற்பொழுதுள்ள News of the World க்குப் பதிலாக வெளியிடப்படுவதும் சால்மண்டிடம் இருந்து வந்துள்ள ஒரு கடிதத்தை சிறப்பாக வெளியிட்டுள்ளது.

முகஸ்துதி வழியும் அவருடைய கருத்துக்கள் புதிய பரபரப்பு ஏட்டிற்குத் தடையற்ற ஒப்புதலையும் மேர்டோக்கின் செய்தி ஊடகப் பேரரசிற்கும் தடையற்ற ஒப்புதலைக் கொடுப்பவை ஆகும். புதிய பத்திரிகையை காண்பதில் தான் பெரும் உவகை அடைந்ததாக கூறிய முதலாவது மந்திரியுமாவர். ஏதோ நியூஸ் இன்டர்நேஷனலில் குறிப்பிட்ட நடவடிக்கைகள் வெறும் சிறிய நிகழ்வுகளைப்போல் ஒற்றுகேட்டல் அவதூறை எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட லெவெசன் விசாரணை இத்தொழில்துறை முழுவதிலும் இருக்கும் வழக்கங்களை காண்பதாகவும், அவர் வலியுறுத்தினார்.

“Scottish Sun  என்பது நல்ல செய்தித்தாட்கள் என்ன செய்யமுடியும் என்பதற்கு ஓர் உதாரணம்என்று சால்மண்ட் பெருமிதத்துடன் கூறினார். ஞாயிறன்று Scottish Sun  ஆரம்பிக்கப்பட்டது ஸ்காட்லாந்தின் பொதுவாழ்வு முழுவதிலுமேஒரு முக்கிய தினம், இச்செய்தித்தாள் நம் வருங்காலம் குறித்த பெரும் விவாதத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் என்று அவர் எழுதினார்.

மேர்டோக்கின் தனிப்பட்ட டிவிட்டரில் வெளிவந்துள்ள டிவீட்டுக்களை- tweets -அடுத்து இவருடைய பாராட்டுக்கள் வந்துள்ளன. ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தலைவர் ஐக்கிய இராச்சியத்தில் மிக நுட்பமான அரசியல்வாதி என்பது தெளிவு என்று அதில் கூறப்பட்டு, ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஸ்காட்லாந்து (தனியாகச்) சென்று போட்டியிடட்டும். அனைவருக்கும் இது வெற்றிதான் என்று மேர்டோக் ட்வீட் செய்துள்ளார்.

2007 தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி வெற்றி பெற்றதில் இருந்து சால்மண்ட் மேர்டோக்கிடம் முறையாக ஆதரவை நாடியுள்ளார். அப்பொழுது மேர்டோக் இன்னமும் தொழிற்கட்சிக்குத்தான் ஆதரவைக் கொடுத்து வந்திருந்தார். இத்தன்னலப் பிரபுவிற்கு உவப்பான அழைப்புக்களை மாநிலத்தின் விளையாட்டு, அரசாங்க நிகழ்வுகளுக்கு ஏராளமாகக் கொடுத்ததுடன், நியூஸ் இன்டர்நேஷனலின் நிர்வாகிகளுடன் பல பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.

1992லேயே அப்பொழுது ஸ்காட்டிஷ் சன் உடைய ஆசிரியராக இருந்த பாப் பேர்ட் செய்தித்தாளின் மரபார்ந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவைக் கைவிட்டு, மேர்டோக்கை ஸ்காட்லாந்து தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தொழிற் கட்சியின் ஆதரவை 1997லும், மீண்டும் 2007லும் அது கொண்டிருந்தாலும், சால்மண்ட் ஆண்டு ஒன்றிற்கு £15,000 ஐ 1998ல் இருந்து 2003 வரை செய்தித்தாளில் வாரந்திரக் கட்டுரை எழுதுவதற்காகப் பெற்றார்.

நியூஸ் இன்டர்நேஷனலின் விமர்சகர்கள் சால்மண்ட் பற்றி மேர்டோக் கொண்டிருந்த ஆர்வம் உண்மையிலேயே கடந்த 12 மாதங்களாக அதிகரித்துள்ளது என்றும், இன்னும் துல்லியமாக தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் அவதூறு மேர்டோக்கின் போட்டிப் பதிப்பீடுகள் அனைத்திலும் பத்தி, பத்தியாக வந்த நேரத்தில் இது ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். மேர்டோக்கின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதும் மைக்கேல் வுல்ப் இத்தன்னலப் பிரபுவை தொழிற்கட்சி மீதும் (அவருடைய பாராளுமன்ற அங்கத்தவர் டோம் வில்சன் நியூஸ் இன்டர்நேஷனலுக்கு எதிரான பிரச்சாரத்தில் முக்கியமாக இருந்தார்) வெஸ்ட்மின்ஸ்டர் முழுவதின் மீதும் பழிவாங்க முற்படுகிறார் என்று விவரித்துள்ளார். மேர்டோக், அவருடைய மகன் ஜேம்ஸ் இன்னும் நிறைய நியூஸ் இன்டர்நேஷனலின் நிர்வாகிகள் லெவெசன் விசாரணை முன் தோன்றவேண்டியதாயிற்று; ஏனெனில் ஆளும் உயரடுக்கினால் நியூஸ் இன்டர்நேஷனலின் சட்டவிரோத நடவடிக்கைகளை இனியும் மறைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

ஆனால் வெறும் பழிவாங்குதலைவிடக் கூடுதலான விடயம் பணயத்தில் உள்ளது.

கடந்த வாரம் வெளிவந்த செய்தி ஊடகத் தகவல்கள் மேர்டோக் நியூஸ் இன்டர்நேஷனல் மற்றும் அதன் துணைக்கோள் பிரிவான BskyB  யின் தலைமையகத்தை ஸ்காட்லாந்தில் நிறுவுவதாகக் கூறியுள்ளார். சால்மண்ட் பெருநிறுவங்கள்மீது விதிக்கப்படும் வரியை 10 முதல் 15க்கு இடையே நிர்ணயிக்கும் வகையில் அளிப்புக் கொடுத்தால். இதற்கு ஈடாக மேர்டோக் சுதந்திரம் மற்றும் “devo-max” எனப்படும் பெருநிறுவன வரிவிதிப்புக் குறைப்பு அதிகாரங்கள் ஸ்காட்லாந்தின் நிர்வாகத்திற்கு ஹோலிரூட் பாராளுமன்றத்தில் கொடுக்கப்படுவதற்கு பிரச்சாரம் செய்யத்தயார் என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேர்டோக்கும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த செல்வச் செழிப்புடைய தட்டினரும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியுடைய திட்டங்களை சமூகநலத் திட்டங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் வேலைநிலைமைகளை அழித்தல் மூலம் மதிப்புமிக்க முன்னோடியாகத் தாங்கள் இன்னும் அதிக செல்வச்செழிப்பிற்கு வகை செய்யும் என்றும் காண்கின்றனர்.

ஸ்காட்லாந்து தேசியக் கட்சி நீண்டகாலமாக தன் சுதந்திரத்திற்கான திட்டத்தின் பலன்களில் ஒன்றாக பெருநிறுவன வரிகள் குறைப்பு என்பதை அளித்து வந்துள்ளார். அயர்லாந்தின் 12.5 % விகிதம் இலக்காக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இக்கட்சி பெரு வணிகத்திலும், நிதியத் துறையிலும் உள்ள தன் ஆதரவாளர்களுக்கு வரிக் குறைப்புக்களையும் கொடுக்கும். அதே நேரத்தில் தன்னை தொழிலாள வர்க்கத்தினருக்கு சமூக சீர்திருத்தங்கள் தேவை என வாதிடும் அமைப்பாகவும் முன்னிறுத்துக் கொள்ளும்.

இந்த ஏமாற்றுத்தனத்தில் அதற்கு உடந்தையாக பல போலி இடது போக்குகள் உள்ளன. இவை அனைத்தும் இத்தகைய நடவடிக்கைகளைதேசிய வருமானங்களில் இருந்து ஸ்காட்லாந்திற்கு தற்பொழுது அளிக்கப்படும் கூடுதல் நிதியத்தையே முற்றிலும் நம்பியிருக்கும் இலவச மருந்து மற்றும் குறைந்த பல்கலைக்கழக செலவுகளை முழுச் சுதந்திரம் என்பதுதான் இன்னும் பரந்த, முன்னேற்றகரமான சமூக சீர்திருத்தத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று பாராட்டுகின்றன.

அப்படியும்கூட, கட்சியின் முக்கிய முன்னோக்குகளான அயர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளைப் பின்பற்றுதல், வளமை வட்டத்தின்ஒரு பகுதியாக இருத்தல், ஐரோப்பாவிற்குள் சுதந்திரம் அடைதல்ஆகியவை உலக நிதிய நெருக்கடியை ஒட்டிப் பெரும் பாதிப்பை அடைந்தன.  அதைத்தவிர யூரோப் பகுதியில் வெளிவரும் அச்சுறுத்தல்களும் பாதித்துள்ளன. இது சால்மண்டை இன்னும் வெளிப்படையாக அவருடைய பெருவணிக ஆதரவாளர்களுக்கு ஸ்காட்லாந்து தேசியக் கட்சி சிக்கன நடவடிக்கைகள் குறித்து முழு உறுதிப்பாட்டுடன் இருப்பதாக உத்தரவாதம் அளிக்கச் செய்தது. BBC இன் Sunday Politics நிகழ்ச்சியில் பேசிய அவர் ஆண்ட்ரூ நீலிடம் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ஸ்டெர்லிங் பகுதிக்குள் ஓர் உறுதிப்பாட்டு உடன்பாட்டிற்குஆதரவு  கொடுக்கும் என்றார். அதே போல் பாங்க் ஆப் இங்கிலாந்தின் வட்டி விகிதங்களையும் ஏற்கும் என்றார். நீங்கள் நிதிய முறையில் செய்யும் தந்திரஉத்தி தற்கால உலகில் எப்படியும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறதுஎன்று சால்மண்ட் வலியுறுத்தி ஒரு உறுதிப்பாட்டு உடன்பாடு நீண்டகாலக் கடன் வாங்குதலை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3% க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளும் என்றும் கூறினார்.

குறைந்த பெருநிறுவனத்திற்கான வரிகள், குறைந்த கடன் வாங்குதல்கள் என்று பாங்க் ஆப் இங்கிலாந்துடன் நிர்ணியக்கப்படும் விதிகளின் இணைப்புத்தான் தொழிலாள வர்க்கத்தின் மீது மிருகத்தனமாக நடத்தப்படும் தாக்குதல்களின் செயற்பட்டியல் ஆகும். இது ஸ்காட்லாந்து தேசியக் கட்சியுடைய கொள்கைகளான வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள கன்சர்வேடிவ் தலைமையிலான கூட்டணி மேற்கொண்டுள்ள செலவினக் குறைப்புக்களை சுமத்தும் இன்றைய கொள்கைகளுடன் இயைந்து இருக்கிறது.

ஸ்காட்லாந்து தேசியக் கட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் இன்னும் 18% செலவினக் குறைப்புக்கள் அடுத்த 7 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படலாம். இது மொத்தம் 51 பில்லியன் பவுண்டுகள் என்று ஆகும், கடந்த இலையுதிர்காலத்தில் அறிவிக்கப்பட்ட 39 பில்லியன் பவுண்டுகளுடன் இது ஒப்பிடப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. நகரவை வரிவிதிப்பு முடக்கத்தின்மூலம், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி உள்ளூராட்சிகளின் ஆண்டுச் செலவுக் குறைப்புக்களை சுமத்தியுள்ளது.

லண்டனையும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸுடன் ஒன்றியம் என்பதையும் ஸ்காட்லாந்தில் சமூகநலத் திட்டங்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதைக் குற்றம்சாட்டும் வகையில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தன்னுடைய சொந்ததிட்டங்களை மறைக்க முயல்கிறது. சால்மண்டின் உதவியாளரான நிக்கோலா ஸ்டர்ஜன் கிளாஸ்கோ பல்கலைக்கழக சட்டப் பயிலகத்தில் பேசியபோது கூறிய வகையில், பலர், வெஸ்ட்மின்ஸ்டருடனான ஒன்றியம்தான் மதிப்புக்களுக்கும் ....பார்வைக்கும் போருக்குப் பிந்தைய சமூகநல அரசாங்கத்திற்கு அச்சுறுதலை அளிக்கிறது எனக் காண்கின்றனர்என்றார். சுதந்திரம்தான் நம் கௌரவம் மற்றும் சமூக இணைக்கத்திற்கு பாதிப்புத் தரும் கொள்கைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேர்டோக் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி மற்றும் அதன் சுதந்திரத்திற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது இத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் பிழையானவை என்பதையே காட்டுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகவோ, ஒரு சுதந்திர நாடு என்று பார்த்தாலோ, முதலாளித்துவ ஆட்சி ஸ்காட்லாந்தின் தொழிலாளர்களுக்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து தொழிலாளர்கள், மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அதே பேரழிவுத் தாக்குதல்களைத்தான் உத்தரவாதப்படுத்தும். இதற்கு தக்க அடையாளமாக இருப்பது 2008க்கு முன்பு இருந்த ஐஸ்லாந்து அல்ல, 2012ல் இருக்கும் கிரேக்கம்தான்.

இத்திட்டங்களை எதிர்த்தல் என்பதின் பொருள், தொழிலாளர்களுக்கு இடையே தேசியப் பிளவுகள் என்பதையும், ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுடன் ஒற்றுமை தேவை என்று மத்தியதர வர்க்கத்தின் கல்விக்கூடத்தின் சலுகைபெற்ற பிரிவுகள் கூறுவதையும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அவர்களின் முன்னாள் இடது வக்காலத்து வாங்குபவர்களின் கருத்துக்களையும் நிராகரிப்பதுதான்.