சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

New bid for UN resolution aimed at Syrian regime-change fails

சிரிய ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்த ஐக்கிய நாடுகள் சபையின் புதிய  தீர்மானத்திற்கான முயற்சி தோல்வி அடைகிறது

By Chris Marsden
14 March 2012

use this version to print | Send feedback

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழுவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை கண்டித்து, அதையொட்டி சிரிய எதிர்த்தரப்பினருக்கு ஆதரவாக இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த உதவும் ஒரு புதிய தீர்மான வரைவு ஒன்றில் திங்களன்று ரஷ்யாவும் சீனாவும் கையெழுத்திட மறுத்துவிட்டன.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவும் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்தியும் கூட இந்நிலை ஏற்பட்டுள்ளது. கிளின்டன், பிரித்தானியாவில் வில்லியம் ஹேக் மற்றும் பிரான்ஸில் அலன் யூப்பே ஆகியோர் அனைவரும் மாஸ்கோவையும் பெய்ஜிங்கையும் அரபு வசந்தம் பற்றிய பாதுகாப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் கடுமையாகக் கண்டித்தனர்.

ஐ.நா. ஆணையானது ஆட்சிமாற்றத்திற்கான ஒரு திட்டத்தின் சக்திகளின்  சமநிலைமையில் உடனடி மாற்றத்தை எற்படுத்தும் என்பதை ரஷ்யாவும், சீனாவும் நன்கு அறியும்.

பூகோள அரசியல் நிலைப்பாட்டில் இடர் நிறைந்த தீர்வுகள் மோதலை விரிவுபடுத்துவதில்தான் முடியும் என்று லாவ்ரோவ் கண்டித்தார். சீனாவின் ஐ.நா.தூதரான லி பாவோடோங், வெளித்தரப்பினர் எவரும் சிரியாவில் இராணுவத் தலையீட்டில் ஈடுபடக்கூடாது, ஆட்சிமாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றார்.

சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்த எந்த முயற்சியும் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்கள் வந்துள்ளன. ஆனால் வாஷிங்டனின் அனைத்து முயற்சிகளும் தற்போதைய தேக்கநிலையை கடப்பதில்தான் கவனம் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சிரிய ஆட்சியை அரசியல், இராணுவ, பொருளாதாரரீதியில் நிலைகுலைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அறநெறி வகை நிலைப்பாடு மற்றும் இராஜதந்திர முன்னெடுப்புகள் என்ற தோற்றத்தின் பின்னே, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய, பிராந்திய நட்பு நாடுகளும் தலையீட்டிற்குத் தேவையான கையாட்படைகளை உருவாக்க விரும்புகின்றன. அதே நேரத்தில் சிரியாவைப் பொருளாதார முறையில் அழிக்கவும், சிரிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவை முறித்துத் தன் வயப்படுத்திக்கொள்ளவும் முயல்கின்றன. அப்பிரிவுடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு அசாத்தை அகற்றி, தமக்கு சார்பான ஒரு அரசாங்கத்தை நிறுவலாம் என்னும் நோக்கத்துடன்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அசாத்தை அகற்றுவது என்பது அவருடைய முக்கிய நட்பு நாடான ஈரானுக்குப் பெரும் பாதிப்பு எனக் கருதப்படுகிறது. இது தெஹ்ரானிலும் இராணுவத் தலையீடு, ஆட்சி மாற்றத்திற்கு வழிசெய்யும்.

அசாத்திற்கு எதிரான இராணுவத் தலையீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடை சிரிய எதிர்தரப்பினரான தேசியக் குழு என்னும் SNC மற்றும் FSA  எனப்படும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகியவற்றின் வலுவற்ற தன்மைதான். இது சிரியாவில் குறுங்குழுவாத சுன்னி எழுச்சிமீது உள்ள பரந்த விரோதப் போக்குடன் பிணைந்துள்ளது ஆகும்.

இதைத்தவிர, துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளின் தலைமையிலான பிராந்திய சிரிய எதிர்ப்பு சக்திகளிடையே கவலைகள் எழுந்துள்ளன. அவை பிளவுற்றிருக்கும் அமெரிக்க அரசியல், இராணுவ உயரடுக்கை தாக்குதலுக்கு தேவையான ஆதாரங்களைக் கொடுக்கும் என்பதை  கவனத்திற்கு எடுக்க முடியாதுள்ளது.

கடந்த வாரம் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவும் கூட்டுப் படைகளின் கூட்டுத் தலைவருமான மார்ட்டின் டெம்சேயும் காங்கிரசிடம் இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன என்றாலும், அமெரிக்காவில் ஒருதலைப்பட்ச தலையீட்டிற்கு எதிராக எச்சரித்தனர். அதாவது எத்தகைய இராணுவ முயற்சியும் கடந்த ஆண்டு லிபியாவில் கடாபி ஆட்சியை அகற்றுவதற்கான அமெரிக்க-நேட்டோ தலையீட்டைவிடக் கடினமாக இருக்கும் என்றனர்.

அமெரிக்காவிடம் பரந்த வாய்ப்புக்கள் உள்ளனவான்வழித் தாக்குதல்கள், எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் கொடுத்தல், துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளின்கீழ் நிறுவப்படும் மனிதாபிமான பாதைகளை பாதுகாத்தல் என்ற வகையில். ஆனால் கடந்த வார சாட்சியத்தில் பானெட்டாவும் டெம்சேயும் குடியரசுக் கட்சியின் செனட்டர் மக்கெயின் தலைமையில் உடனடி வான்வழித்தாக்குதல்கள் குறித்த கோரிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

ஓர் இராணுவத் தலையீட்டிற்கு பறக்கக்கூடாது பகுதிகள் நிறுவப்படுவதில் இருந்து என்னென்ன தேவை என்பது குறித்த ஆரம்ப மதிப்பீடுகள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்குக் கேட்டுக் கொண்டதில் பேரில் அனுப்பப்பட்டுள்ளன என்று டெம்சே கூறினார். ஆனால் நல்ல ஆயுதங்களைக் கொண்ட சிரியா, லிபியாவைவிட ஐந்து மடங்கு வான் பாதுகாப்புக்களை கொண்டுள்ளது என்றும் அவர் விளக்கினார். எனவே தலையீடு என்பது விரிவான அவகாசத்தை எடுத்துக் கொள்ளும், கூடுதல் எண்ணிக்கையில் விமானங்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜாக் ரீட் பாதுகாப்புப் புகலிடங்களைத் தோற்றுவித்தல் என்பது அங்கு எவரேனும் சென்று உண்மையில் ஒரு இராணுவத்தை அமைத்து, பயிற்சி கொடுத்து, ஒழுங்குபடுத்துதல் என்பதை உட்குறிப்பாகக் கொண்டுள்ளது என்றார்.

ஒரு மூத்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி வார இறுதியில் பாதுகாப்புப் புகலிடங்களை அமைத்தல் என்பது அமெரிக்கத் தரைத் துருப்புக்களின் தீவிரப் பிரிவு ஒன்று அங்கு இருக்கவேண்டும் என்னும் பொருளைத்தரும் என்றார்.

பென்டகனின் ஒரு முன்னாள் உயர்மட்ட அதிகாரியான மைக்கேல் ஏ.பிளவர்னீ பின்வருமாறு எச்சரித்தார் ஒரு பரந்த மூலோபாயம் இல்லாத நிலையில், நாம் முற்றிலும் இராணுவக் கருவிகளை மட்டும் நம்பிக் குதித்தால், பிறரிடம் இருந்து, அதாவது ஈரான், ரஷ்யா போன்றவற்றில் இருந்து விரைவான விடையிறுப்புக்களைப் பெறுவோம்; அவை ஆட்சிக்கு ஊக்கம் கொடுக்கலாம், நாம் கூடுதலான மோதலுக்கான பாதையில் செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத மூன்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசினர்; அவர்களும் சிரியா ஒரு சக்திவாய்ந்த இராணுவ வலிமை கொண்டது, 330,000 படையினர் தீவிர பயிற்சியில் உள்ளனர், நாட்டில் ஆளற்ற கண்காணிப்பு விமானங்களும், நவீன தொழில்நுட்பம் உடைய வான்பாதுகாப்புக்களும் உள்ளன என்றனர். மேலும் இராணுவத்திடம் 4,500 டாங்குகளும் 500 விமானங்களும் உள்ளன; அவற்றில் ஆயுதம் இயக்கும் திறனுடைய ஹெலிகாப்டர்களும் உண்டு என்றும் தெரிவித்தனர்.

அசாத்தின் ஆட்சில் இருந்து வெளியேறியுள்ள எவரும் அதன் உள்வட்டங்களில் இருந்தவர்கள் அல்லர் என்பதையும் பகுப்பாளர்கள் ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பரந்த வகையில் ஆதரவு இருப்பது குறித்த பிரதிபலிப்பு ஆகும் இது. அதில் அலாவிட் வணிக உயரடுக்கு இருப்பதோடு மட்டும் இல்லாமல், கிறிஸ்துவ, குர்திஸ் மற்றும் ட்ரூஸ் சிறுபான்மையினரும் உள்ளனர். அவை அனைத்தும் ஒரு சுன்னி இனத்தவரின் ஆட்சியின் துன்புறுத்தலுக்கு அஞ்சுகின்றனர்.

சிரிய எதிர்ப்பாளர்கள் குறித்தும் பகுப்பாய்வாளர்கள் சீற்றம் கொண்டுள்ளனர்; அதை அவர்கள் நூறுக்கும் மேலான மாறுபட்ட கருத்துக்களை உடைய, பிளவுகளைக் கொண்ட குழுக்கள் நிறைந்தது என்றுதான் விவரிக்கின்றனர்.

சிரியாவிற்கு எதிரான போலித்தலையீட்டிற்கு தலைமை தாங்குவதற்கு துருக்கிதான் முக்கிய நாடாக உள்ளது. திரைக்குப்பின் அது அமெரிக்க ஆதரவை நம்பியிருக்கும்; ஆனால் வாஷிங்டனுடன் வெளிப்படையான தொடர்பு என்பது அதன் பிராந்திய நலன்களைப் பெறுவதில் ஆபத்தைக் கொடுக்கும் என்றும் அஞ்சுகிறது.

இந்த அரசியல் ஆபத்தை ஈடு செய்யும் வகையில், துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல்லும் துனிசிய ஜனாதிபதி மொன்செப் மர்ஜோகியும் கடந்த வாரம் பிராந்தியத்திற்கு வெளியே இருந்து வரும் தலையீட்டைஎதிர்த்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ஆனால் அரபு லீக் அல்லது இரகசிய நடவடிக்கைகளுக்காக மறைப்பு போல் வாஷிங்டன் சேர்த்துள்ள சிரிய நண்பர்கள் குழுவின் ஒப்புதலைத் தான் ஏற்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வெளியுறவு மந்திரி அஹமத் டவுடௌலு, தன் தேசியப் பாதுகாப்பைக் பாதுகாப்பதற்கு அனைத்து விருப்பத் தேர்வுகளையும் விவாதிக்க துருக்கி தயாராக உள்ளது என்று அறிவித்தார்.

துனிசியாவின் ஜனாதிபதி மார்ஜௌகி துனிசியா அரபு சமாதான படைகளின் ஒரு பிரிவாக சிரியாவிற்குப் படைகளை அனுப்பத்தாயர் என்றார்.

கட்டாரும் சவுதி அரேபியாவும் அரபு லீக் தலைமையில் ஒரு தலையீடு என்னும் தங்கள் அழைப்புக்கள் குறித்து உறுதியாக உள்ளன. சனிக்கிழமை அன்று கட்டாரின் பிரதம மந்திரி ஹமத்பின் ஜசிம் அல்-தனி லீக்குடைய வெளியுறவு மந்திரகளிடம், லாவ்ரோவும் கலந்து கொண்ட கெய்ரோக் கூட்டத்தில் சிரியாவிற்கு அரபு மற்றும் சர்வதேசத் துருப்புக்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டதுஎன்றார்.

நாம் பாதுகாப்புக் குழுவிற்கு சென்றிருந்தபோது, தீர்மானத்தை இயற்றமுடியவில்லை; இதற்குக் காரணம் ரஷ்ய-சீனத் தடுப்பு அதிகாரம்தான்; அது சிரிய ஆட்சிக்கு தவறான செய்தியைக் கொடுத்துள்ளதுஎன்றார் அவர், நம், மற்றும் உலகத்தின் பொறுமை தீர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி சௌத் அல்-பைசல் திட்டம் குறித்து வெற்றுத்தனத் தீர்மானங்கள் மற்றும் .... முதுகு எலும்பு இல்லாத நிலைப்பாடுகள் என்று கண்டித்தார்.

அசாத் பதவியில் இருந்து கீழிறங்க வேண்டும் என்னும் அழைப்புக்களை லாவ்ரோவ் நிராகரித்தார்; லீக்கின் மந்திரிகள் சிரியாவில் வெளிநாட்டுத் தலையீடு கூடாது என்னும் கூட்டறிக்கையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். இந்த அறிக்கை அதன் ஆதாரம் எங்கு இருந்தாலும்வன்முறைக்கு முற்றுப்புள்ளி தேவை என்று கூறியதுடன், தடையற்ற மனிதாபிமானச் செயப்பாடுகள் தேவை, அது அரபு லீக்கின் தலையீட்டிற்கு மேற்கோளிடப்படலாம் என்ற அழைப்பை விடுத்துள்ளது.

சிரிய தேசியக்குழு அறிக்கை ஒன்றை வெளயிட்டு, உடனடியான இராணுவக் தலையீட்டை நாடியுள்ளது; அதில் பறக்கக் கூடாது பகுதி, பாதுகாப்பான பாதைகள், இடைப்பகுதி ஒன்று, ஏகாதிபத்திய சக்திகளின் கண்காணிப்பிற்கு உட்பட்டது ஆகியவை இருக்கும்; அவற்றுடன் சுதந்திர சிரிய இராணுவத்திற்கு ஆயுதம் கொடுப்பதற்கான விரைவான, முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.வாஷிங்டனுடன் நெருக்கமான உறவைக் கொண்ட சிரிய தேசியக் குழுவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரட்வன் ஜியடே, அமெரிக்க இனி பிரிந்திருக்கும் எதிர்த்தரப்பு குறித்து கவலைப் பட வேண்டியதில்லை. பிளவுகள் முடிந்துவிட்டன என்று நான் நினைக்கிறேன் என்றார் அவர்.