சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Social counterrevolution in Britain

பிரித்தானியாவில் சமூக எதிர்ப்புரட்சி

Chris Marsden
17 March 2012

use this version to print | Send feedback

பிரித்தானியாவில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத்தரங்களில் ஏற்பட்டுவரும் பேரழிவு தரும் சரிவுகளால் பெரும் அவதிக்குட்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சரியும் ஊதியங்கள், உயரும் வேலையின்மை மற்றும் மோசமாகும் கடினநிலை பற்றிய புதுத் தகவல்கள்தான் வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட தாழ்ந்துவிட்டன. New Policy Institute  கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊதியங்களுக்குச் செல்லும் விகிதம் 1978ல் 58 சதவிகிதம் என்பதிலிருந்து இன்று 53.8 சதவிகிதம் எனச் சரிந்துவிட்டது. இது மொத்த ஊதிய இழப்பு 1.3 ட்ரில்லியன் பவுண்டுகள் என்பதைப் பிரதிபலிக்கிறது; அதில் 60 பில்லியன் பவுண்டுகள் 2011ல் மட்டும் ஏற்பட்டுள்ளது அடங்கும். ஊதியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்பது 1978ல் ஏற்கனவே போருக்குப் பின் மிக அதிகாமாக இருந்த 1975ம் ஆண்டு 66.5 சதவிதத்திலிருந்து குறைந்துவிட்டதைத்தான் காட்டியது.

மிக வறிய கீழ்மட்ட ஐந்தில் ஒரு பகுதித் தொழிலாளர்களின் ஊதியங்கள் உண்மையான கணக்கில் 1978 ல்இருந்ததைக் கணக்கில் கொண்டால் 2011ம் ஆண்டு 43% என்று தெரியவந்துள்ளது. நடுத்தர வருமானம் உடைய தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள் மதிப்பில் 36% குறைந்துவிட்டதைக் காண்கின்றனர்.

இப்பின்னடைவு 2008ம் ஆண்டு நிதிய நெருக்கடியின் வெடிப்பிலிருந்து விரைவாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் அப்பொழுது முதல் ஏதேனும் ஒரு நேரத்தில் வேலையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர்இது பத்தில் ஒருவரைக் குறிக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பணிநீக்கத்திற்கு உட்பட்ட 2.7 மில்லியன் பேர்களில், புதிய வேலைகளைப் பெறும் வாய்ப்புப் பெற்றவர்கள் சராசரியாக அதிர்ச்சிதரும் வகையில் 28% ஊதியக் குறைப்பைக்கொண்டுள்ளனர். பலருக்கு வேலை கிடைக்கவில்லை; 30,000 தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வேலைகளை இழந்துவருகின்றனர். உத்தியோகபூர்வ மொத்த வேலையின்மை தவிர்க்கமுடியாமல் 3 மில்லியனை எட்டி உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒரு மில்லியன் இளைஞர்களும் உள்ளனர். அப்படி இருந்தும், இது பெருமளவில் வேலையில்லாமல் இருப்பவர்களுடைய உண்மையான எண்ணிக்கை அல்லது பகுதி நேரம் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துத்தான் காட்டுகிறது.

270,000 பொதுத்துறை வேலைகள் முற்றிலும் நிரந்தரமாகக் கடந்த ஆண்டு அழிக்கப்பட்டன; இது கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் கூட்டணி சுமத்திய 130 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இந்த மொத்தத்தில், 71,000 கல்வித்துறைத் தொழிலாளர்களும், 31,000 தேசிய சுகாதாரத் துறையில் இருப்பவர்களும் அடங்குவர். பொதுத்துறைத் தொழிலாளர் தொகுப்பு 5.94 மில்லியன் என்று சரிந்துவிட்டது; இது அழிக்கப்பட்ட வேலைகளில் 64% ஐ பிரதிபலிக்கிறது.

ஆனால் வேலை இழப்புக்களில் மூன்றில் ஒரு பகுதி உற்பத்தித் துறையில் ஏற்பட்டவை ஆகும். மூன்றாம் ஆண்டு பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தேக்கம், உண்மை ஊதியங்களில் 13% சரிவைக் கொண்டுவந்தது, தனியார் துறை முழுவதும் ஊதியக் குறைப்புக்களோடு இயைந்து நிற்கிறது. தொழிலாளர்கள் ஊதிய ஊயர்வு பெறும் விகிதம் என்பது 2008ல் மூன்றில் இரு பகுதியிலிருந்து பாதிக்கும் கீழே என்று 2011ல் ஆகிவிட்டது; இது சராசரித் தொழிலாளிக்கு ஆண்டு ஒன்றிற்கு 3,000 பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பணவீக்கத்தால் இன்னும் மோசம் அடைந்துள்ளது; அது உண்மையில் தொழிலாளர்கள் செலவு செய்யும் சக்தியை மேலும் குறைத்துள்ளது. ஊதிய உடன்பாடுகளில் முழுமையாக 99% இப்பொழுது உத்தியோகபூர்வ பணவீக்க விகிதத்தைவிடக் குறைவு ஆகும்; இது உண்மை ஊதியங்களில் கூடுதலாக 7% குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்னும் பிற தேவைகளின் விலைகள் முக்கியமாக இருக்கும் பணவீக்கத்தைவிட அதிக அளவில் உயர்வதால், உண்மை ஊதியங்களில் 20% என்பது இன்னும் துல்லியமான புள்ளிவிபரமாக இருக்கும். சராசரியாக வீடுகள் ஆண்டிற்கு மேலதிகமாக 1,300 பவுண்டுகள் செலவழித்தால்தான் கடந்த ஆண்டு இருந்த வாழ்க்கைத் தரத்தில் இருக்க முடியும்.

பெரும்பாலான மக்கள் இப்பொழுது நிரந்தரக் கடனில் வாழ்கின்றனர். 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (மக்கள் தொகையில் 35%) கடந்த 12 மாதங்களில் கடன் வாங்கியுள்ளனர்; கால்வாசிக்கும் மேலானவர்கள் (27%) சம்பளம் வாங்கி 15 நாட்கள் முடிந்தவுடனேயே கடன் வாங்க நேரிடுகிறது. ஒரு சாதாரணமாக வாழும் பிரிட்டன் குடும்பம் மாதம் ஒன்றிற்கு 200 பவுண்டுகள் அது வாங்கும் கடன்களுக்கு வட்டியைக் கட்ட மட்டும் செலவழிக்கும் நிலை இருக்கிறது; இது செலவழிக்கக் கூடிய வருமானத்தில் கால் பகுதியாகும். சராசரி வீட்டு அடைமானக் கடன் கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்டு ஒன்றிற்கு 20,000 பவுண்டுகளுக்கு மேல் உயர்ந்துவிட்டது; மேலும் கிட்டத்தட்ட  ஒரு மில்லியன் மக்கள்,  முடக்கிவிடும் உயர்ந்த வட்டியை சம்பளம் வாங்கும் அன்று கொடுத்துத் தங்கள் வாடகை, அடைமானச் செலவுகளுக்கான பணத்தைப் பெறுகின்றனர்.

ஏற்கனவே 2010ல் வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 13 மில்லியனுக்கும் மிக அதிகமாக இருந்தது; இதில் பாதிப் பேர் ஆழ்ந்த வறுமையில் உள்ளனர். மக்களில் மிக அதிக செல்வம் படைத்த 10 சதவிகிதத்தினர், மிக உயர்ந்த 0.1 சதவிகிதத்தினருடன் வீட்டிற்கு அவர்கள் 1940களில் எடுத்துச் சென்றது போல் தேசிய வருமானத்தின் அதிக பங்கைக் கொண்டு செல்லுகின்றனர். தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், அவைகள் விரைவாகும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது, 2025 ஐ ஒட்டி மிக உயர்மட்ட 0.1 சதவிகிதம் மட்டுமே தேசிய வருமானத்தில் 10% ஐ எடுத்துக் கொள்ளும். 2030க்குள் பிரிட்டன் விக்டோரியா காலத்திற்குப் பின் காணப்படாத சமத்துவமின்மை நிலையைத்தான் காணும்.

இக்கடினமான புள்ளிவிபரங்கள் சித்திரத்தின் ஒரு பகுதிதான். பொதுத்துறை ஊழியங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது சமூகநலன்புரி அரசில் எஞ்சியிருப்பதைத் தகர்த்தலையும் இறுதி வடிவத்திற்குக் கொண்டுவரும் உந்துதலுடன் பிணைந்துள்ளது; இது குறிப்பாக கல்வி, தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவற்றைத் தனியார்மயமாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. பொதுநிதியில் நடக்கும் மருத்துவமனைகளில் பாதிக்கும் மேல் தனியார் துறைக்கு விட்டுவிடப்படுவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. தனியார் துறை ஏற்கனவே முழு NHS மருத்துவமனைகளையும் எடுத்துக் கொண்டுவிட்டது.

இத்தாக்குதல்கள் தொழிற்சங்கங்களிலிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகின்றன. மாறாக தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியின் அரசியல் நட்பு அமைப்புக்களுடன் தங்கள் இடங்களைக் கொண்டுள்ளனஅதாவது தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சியை சுமத்த முற்படுவோரின் முன்னணியில் இருப்பதற்கு.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, தொழிற்கட்சி அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை இடைவிடாமல் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. ஆனால் இன்று காட்டிக் கொடுப்புக்கள் முறையாக நடந்து வருவது, மில்லியன் கணக்கான மக்கள் சமூகக் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்பக்கூடிய அச்சுறுத்தல் என்னும் வரலாற்றுத்தன்மை மிகுந்த நிலையை வெள்ளப்பெருக்கு போல் மீண்டும் கொண்டுவரக்கூடும்.

இது ஒன்றும் பிரித்தானியாவில் மட்டும் பிரத்தியேகமாகக் காணப்படுவது இல்லை. இதே நிலைமை அல்லது இதைவிட மோசமான நிலைமைதான் கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஆதிக்க நிலயமான ஜேர்மனியிலும் உள்ளது. அமெரிக்கா வேறுபட்டிருப்பது அங்கு தொழிலாளர் இயக்கம் எப்பொழுதுமே மிக அழுகிய நிலையில், ஊழல் மலிந்து இருப்பதால், ஐரோப்பியத் தொழிலாளர்களைப் போல இலவச சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள் அமெரிக்கத் தொழிலாளர்களால் ஒருபோதும் அடையப்பெறவில்லை.

இந்தக் கசப்பான அனுபவங்களில் இருந்து மிக அடிப்படையான படிப்பினைகள் பற்றி எடுக்கப்பட வேண்டும்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்திருந்த ஏற்றம் நிறைந்த ஆண்டுகளில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் கணிசமான சமூக சீர்திருத்தங்களையும் ஊதியங்கள், பிற நலன்களில் ஆதாயங்களையும் பெற முடிந்தது. ஆனால் இது எப்பொழுதுமே தொழிலாளர்கள் நடத்திய போராளித்தன போராட்டங்களை பொறுத்துத்தான் இருந்தது. அதையொட்டி தொழிற்சங்கங்கள் தங்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. எனவேதான் 1975ம் ஆண்டு, கன்சர்வேடிவ் எட்வார்ட் ஹீத் அரசாங்கத்தை வீழ்த்திய வெகுஜன வேலைநிறுத்த இயக்கத்தை உடனடியாகத் தொடர்ந்த காலத்தில் ஊதியங்கள் உயர்ந்த அளவை எட்டின.

அத்தகைய நாட்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே கடக்கப்பட்டுவிட்டன. அப்பொழுது முதல் வலதிற்குக் கட்டாயமாக நகருதல் என்பது அனைத்துப் பழைய கட்சிகள், இடதில் இருப்பவை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றில் வந்துவிட்டது. உலக நிதிய உயரடுக்கின் ஆணைகளுக்கு விடையிறுக்கும் வகையில், அதிகாரத்துவம் அதன் தேசிய பொருளாதாரக் கட்டுப்பாடு, வர்க்க சமரசம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டிருந்த முந்தைய மூலோபாயங்களை, சந்தைக்கு தடையற்ற ஆதரவைக் கொடுப்பதற்கும், நேரடியாக ஊதிய வெட்டுக்கள், பணிநீக்கங்கள் ஆகியவற்றைச் சுமத்துவதற்கும் ஆதரவாகக் கைவிட்டுவிட்டது.

தொழிற்சங்களின் செயற்பாடுகளால், வேலைநிறுத்தங்களும் மிக மிக அபூர்வமாகத்தான் உள்ளன. அவையும் காட்டிக் கொடுக்கப்படாமல் போவதென்பது இப்பொழுதெல்லாம் அரிய நிகழ்வு ஆகும்.

கன்சர்வேடிவ்களை விட ஒன்றும் தொழிற்கட்சி வேறுபட்ட கட்சியாக இல்லை. இன்று தொழிற்சங்கங்களின் ஒரே செயற்பாடு தங்கள் உறுப்பினர்களைக் கண்காணித்து, மூலதனத்திற்கு எதிராக சமூக, அரசியல் இயக்கம் வெடிப்பதைத் தடுப்பதுதான்.

இது எதிர்க்கப்படாமல் தொடர்ந்து நீடிக்கக் கூடாது. 1930 களுக்குப் பின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, வெடிப்புத்தன்மைமிக்க புதிய வர்க்கப் போராட்டத்திற்கான சூழலைத் தோற்றுவித்துள்ளது. இதற்கு ஒரு புதிய வர்க்கப் போராட்ட அமைப்புக்களை கட்டமைப்பது தேவைப்படுகிறது. அது சுயாதீனமாகவும், பழைய தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு புதிய கட்சியாகவும் இருக்க வேண்டும்.