சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka’s defence secretary targets workers and youth

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைக்கின்றார்

By K. Ratnayake
23 January 2012

use this version to print | Send feedback

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ சமீபத்தில் ஆற்றிய உரையில், துனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் போன்று "[அரசியல்] ஸ்திரமின்மையை உருவாக்கும்" முயற்சிகளால் "நமது தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை" சுட்டிக் காட்டினார்.

உயர் பாதுகாப்பு அதிகாரியும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான இவரது கருத்துக்கள், அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராக, கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட, அதன் பொலிஸ்-அரச இயந்திரத்தில் மீண்டும் கவனம் செலுத்துகின்றது என்ற தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றன.

"இலங்கை தேசிய பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்," என்ற தலைப்பில் பாதுகாப்பு செயலாளர் ஆற்றிய உரையானது உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரத்துவத்தினர் மற்றும் ஏனையவர்களின் முன் ஜனவரி 11 அன்று கொழும்பில் நிகழ்த்தப்பட்டது. இது ஜனவரி 13 அன்று அனைத்து தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சி சேவைகளில் பரவலாக ஒளிபரப்பப்பட்டது.

கோடாபய இராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை முன்னெடுத்ததில் பிரதான பொறுப்பாளியாக இருந்தார். சரத் பொன்சேகா, யுத்தம் முடிந்த பின்னர் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதோடு பின்னர் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இராஜபக்ஷ,  அரசாங்கத்தை நடத்திவரும் இராஜபக்ஷ சகோதரர்கள், சிரேஷ்ட ஜெனரல்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய, இராணுவ-அரசியல் குழுவின் பகுதியாவார்.

இந்த உரை நிகழத்தப்பட்ட காலம் குறிப்பிடத்தக்கதாகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ந்து வருகின்றது. அதே வாரத்தில், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கம் பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். தோட்ட தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்புக்கு அழுத்தம் கொடுக்கவும் தனியார் பல்கலைக்கழக மசோதாவுக்கு எதிர்ப்பு காட்டவும் மீண்டும் விதிக்கு இறங்கினர். புதன்கிழமை, மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசாங்கம் இந்த போராட்டங்களை ஒடுக்குவது எப்படி என்று கணக்கிடுகின்றது.

இராஜபக்ஷ, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் புலிகள் புத்துயிர் பெறும் "அச்சுறுத்தல்" இருப்பதாக மீண்டும் குறிப்பிட்டே தனது உரையை தொடங்கினார். இடைவிடாமல் தமிழர்-விரோத இனவாதத்தை தூண்டிவிட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதால், இத்தகைய கருத்துக்கள் அவசியமாவை. தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளை பிரித்து வைக்கவும், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கும் பல தசாப்தங்களாக ஆளும் தட்டினால் தமிழர்-விரோத இனவாதம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் 2006ல் யுத்தத்தை மீண்டும் தொடங்கி 2009 மே மாதம் புலிகள் தோல்வியடையும் வரையும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் வேலைநிறுத்தங்களை நசுக்கியதை நியாயப்படுத்த "பயங்கரவாத அச்சுறுத்தலை" சுரண்டிக்கொண்டது.

புலிகள் இயக்கம் நசுக்கப்பட்டிருந்தாலும் அதனால் மீண்டும் தலையெடுக்க முடியாது என்பதற்கு அதை உத்தரவாதமாக எடுக்க முடியாது" என்று பாதுகாப்பு செயலாளர் தனது பார்வையாளர்களுக்கு எச்சரித்தார். அவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரிட்டிஷ் தமிழர் பேரவை மற்றும் தமிழீழ மக்கள் அவை போன்ற பெயர்களை குறிப்பிட்டு, இலங்கைக்கு வெளியே புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளின் தற்போதைய செயற்பாடுகளை மேற்கோள் காட்டினார்.

இந்த குழுக்களின் நோக்கம் "பல்வேறு பகுதிகளில் இலங்கை மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதும், பிரிவினைவாதத்தின் தேவைக்காக சர்வதேச கருத்துக்களை வென்றெடுப்பதும் மற்றும் 'ஜனநாயக முறையில்' தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முயற்சிகளை கீழறுக்க போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பதுமே," என்று இராஜபக்ஷ அறிவித்தார்.

புலிகள் சார்பு குழுக்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஈழம் என்ற ஒரு தனியான முதலாளித்துவ அரசுக்காக "சர்வதேச சமூகத்தின்" ஆதரவை பெற பயனற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. அமெரிக்க உட்பட பெரும் வல்லரசுகள் அனைத்தும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்தன. அவர்கள் தனி ஈழம் அமைப்பதை நிராகரித்ததோடு யுத்தத்தின் போது இராணுவம் செய்த அட்டூழியங்களை பற்றி ஒரு சர்வதேச விசாரணை தேவை என்ற எந்தவொரு கோரிக்கையையும் கிட்டத்தட்ட விட்டுவிட்டன.

எந்த சான்றுகளும் இல்லாமல், இராஜபக்ஷ "பயங்கரவாதிகள் இந்த நாட்டிற்குள் மீண்டும் ஒழுங்கமைவதற்கான வாய்ப்பு உள்ளது ...." என்று கூறினார். வெளிநாட்டில் உள்ள புலிகள் சார்பு குழுக்கள் "இலங்கைக்குள் ஒரு ஆயுத போராட்டத்தை மீண்டும் தொடங்க ஊக்குவிப்பும் வசதியும் கொடுக்க முயற்சிக்கின்றன. பயங்கரவாத எண்ணங்கள் மாறாமலேயே இருக்கக் கூடியவர்கள் உட்பட புனர்வாழ்வழிக்கப்பட முடியாத கைதிகள் இருக்கின்றனர், என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த "பயங்கரவாத அச்சுறுத்தலை" பரப்புவதன் நோக்கம், நாட்டின் பிரமாண்டமான இராணுவ இயந்திரம் மற்றும் பொலிஸ்-அரச இயந்திரத்தை பராமரிப்பதை நியாயப்படுத்துவதே ஆகும்." புலிகளால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ஒரு வலிமையான [இராணுவ] இருப்பை பராமரிக்க வேண்டியது தீர்க்கமான முக்கியத்துவமுடையதாகும்" என பாதுகாப்பு செயலாளர் அறிவித்தார். அவர் மேலும் கூறியது: "ஒரு கணிசமானளவு இராணுவத்தை பராமரிப்பது மற்றும் இலங்கை முழுவதும் உள்ள மூலோபாய இடங்களில் முகாம்களை நிறுவுவது அவசியம்."

இராஜபக்ஷ பின்னர், அரசாங்கத்தின் உண்மையான அக்கறை ஆயுதமேந்திய புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவது பற்றியது அல்ல, மாறாக வளர்ச்சிகாணும்  சமூக அமைதியின்மையே என்பதை தெளிவாக்கினார். மறைமுக முறைகள் மூலம் இலங்கையில் "ஸ்திரமின்மையை உருவாக்க, குறிப்பிட்ட சில குழுக்கள் செயற்படக் கூடிய சாத்தியமே நமது தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று அவர் அறிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் தொடர்ந்தார்: "துனிசியா, எகிப்து மற்றும் லிபியா போன்ற நாடுகளில் எழுச்சிகள் ஊடாக அரசியல் மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டதை பார்த்த சில தரப்பினர்... இங்கும் கூட அது போன்ற நடவடிக்கைகளை நாடக் கூடும் ... அண்மை காலமாக பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களில் மாணவர்கள் தெருக்களில் இறங்குவதற்கு ஊக்கப்படுத்தும் சில குழுக்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம்."

துனீஷியா மற்றும் எகிப்தில் எழுச்சிகள் பற்றி குறிப்பிட்டமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக எகிப்தில் புரட்சிகர எழுச்சிகள், கெய்ரோ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சி முறைகளுக்கு எதிராக மட்டுமன்றி, சிக்கன திட்டத்தை சுமத்துவதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் பரந்த மட்டத்தில் வீதிக்கு வந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில், எகிப்து போன்றே, ஏழை மற்றும் பணக்காரர் இடையே ஒரு ஆழமான சமூகப் பிளவு உள்ளது. இராஜபக்ஷ அரசாங்கமானது தனியார்மயமாக்கம், பொது செலவுகளை கடுமையாக வெட்டிக் குறைத்தல் மற்றும் சம்பளம் மற்றும் நிலைமைகள் தாழ்த்துதல் போன்றவற்றைக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை திணித்துவருகின்றது. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை தூண்டி வருகின்றன.

தொழிற்சங்கங்கள் மேலும் மேலும் தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாதவையாக உள்ளன என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அதே நேரம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பிரதான எதிர் கட்சிகள் மதிப்பிழந்து வருகின்றன. அதனாலேயே அரசாங்கம் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க முன்கூட்டியே அரச இயந்திரத்தை தயார் செய்கின்றது.

பாதுகாப்பு செயலாளர், இலங்கை ஒரு "ஜனநாயக நாடு" என்று அறிவித்தாலும், தமது நலன்களை பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறுகின்றார். உண்மையில், இலங்கை ஒரு பொலிஸ் அரசாகவே உள்ளது. நாட்டின் அவசரகால நிலை உத்தியோகபூர்வமாக அகற்றப்பட்டிருந்தாலும், எதேச்சதிகாரமாக கைது செய்தல் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைத்தல் உட்பட யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து ஜனநாயக விரோத அதிகாரங்களும் அமுலில் உள்ளன. யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதிலும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் குற்றச்சாட்டுக்கள் எதவும் இன்றி இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிராக பாதுகாப்பு இயந்திரத்தை பயன்படுத்த எந்த தயக்கமும் காட்டாது என்று சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. எதிர் கட்சிகள் உள்நாட்டு போரை ஆதரித்தது போலவே, முதலாளித்துவ ஒழுங்கை அச்சுறுத்தும் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களை நசுக்கும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அணிசேர்ந்துவிடும்.

யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் மூல வேரான முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தக் கூடிய தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கம் எதிர்வரும் போராட்டங்களுக்குத் தயாராக வேண்டும். திட்டமிடப்பட்ட உலக சோசலிச பொருளாதாரத்துக்காக மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள உழைக்கும் மக்களுடன் இலங்கையின் உழைக்கும் மக்களின் போராட்டங்களை இணைத்தால் மட்டுமே அத்தகைய முன்னோக்கு சாத்தியமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டம் இதுவே.