சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Thousands march to demand arrest of Trayvon Martin killer

டிரேவோன் மார்ட்டினை கொன்றவனைக் கைது செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் அணிவகுப்பு

By Andre Damon and C.W. Rogers in Sanford, Florida 
27 March 2012

use this version to print | Send feedback

திங்களன்று புளோரிடா சான்ஃபோர்ட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெற்கு புளோரிடாவின் இளைஞர் டிரேவோன் மார்ட்டினைக் கொன்ற ஜோர்ஜ் சிம்மர்மானைக் கைது செய்யக் கோரினர்.


கூட்டத்தில் ஒரு பிரிவினர்

மார்ட்டின் இறந்து ஒரு மாத நிறைவைக் குறைக்கும் இந்த அணிவகுப்புடன் நாடுமுழுவதும் டஜன் கணக்கான ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற வகையில் நடந்தன. இந்நிகழ்வு மக்களிடையே பரந்த சீற்றத்தையும் தூண்டுவிட்டுள்ளதுடன், சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது

சிம்மர்மான் கைது செய்யப்படவில்லை என்றால், எவரும் எதையும் செய்துவிட்டு  தப்பிவிடமுடியும், எவரும் கொலை செய்துகூடத் தப்பிவிடமுடியும் என்று அணிவகுப்பில் கலந்து கொண்ட ஓர் உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவர் சைலேந்திரியா ரிச்சர்ட்சன் கூறினார்.


அணிவகுப்பில் கலந்து கொண்ட ஓர் உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவரான சைலேந்திரியா ரிச்சர்ட்சன்

அணிவகுப்பினால் பொதுமக்களின் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை மழுங்க வைக்கும் முயற்சியில் சான்போர்ட் பொலிசார் திங்களன்று மார்ட்டின் தன்னைத் தாக்கியதாகவும், தற்காப்பிற்குத் தான் அவரைச் சுட்டதாகவும் சிம்மர்மான் கூறியதாக ஒரு தகவலைக் கசியவிட்டனர். ஒரே நேரடிச் சான்றான 911 அவசர உதவிஇலக்கத்திற்கான சிம்மர்மானின் அழைப்புக்கள் குறித்த பதிவுகள், வெளிப்படையான உத்தரவுகள் அவ்வாறு செய்யப்படக்கூடாது என்று இருந்தும்கூட,  அப்பகுதியில் வெறுமே நடந்துகொண்டு சென்றிருந்த ஆயுதமற்ற மார்ட்டினை சிம்மர்மான் தீவிரமாக பின்தொடர்ந்து சென்றார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

முன்பு மரியுவானா போதைப்பொருள் இருந்த ஒரு பை வைத்திருந்ததால் மார்ட்டின் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் என்ற தகவலை பின்னர் பொலிசார் கசியவிட்டனர்.

அவர்கள் என் மகனைக் கொன்றனர், இப்பொழுது அவனுடைய புகழையும் கொல்ல முயல்கின்றனர் என்று பொலிஸ் தகவல் கசிவைக் கண்டித்த டிரேவவோனின் தாயார் சிப்ரினா புல்ட்டன் கூறினார்.

இதற்கிடையில் அரசாங்க வக்கீல்கள் சிம்மர்மான் மீது குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரக்கூடாது என்ற ஒரு முடிவை பொதுமக்கள் கருத்தாக உருவாக்கும் வகையில் முயன்று வருகின்றனர். புளோரிடாவில் உள்ள உங்கள் தளத்தில் உறுதியாக இருங்கள்என்னும் வலதுசாரிச் சட்டத்தை மேற்கோளிட்ட மாநில அரசாங்க வக்கீல் அங்கெலா கூரே ABC News  இடம், இது ஒரு சாதாரணமான குற்றவியல் வழக்கையும் விடப் பொதுவாக அதிக கடினத்தன்மையாக்குகின்றது என்றார்.


கூட்டத்தில் ஜேசி ஜாக்சன் உரையாற்றுகிறார்

சார்போர்ட் ஆர்ப்பாட்டத்தில் ஆல் ஷார்ப்டன், ஜெசி ஜாக்சன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிற ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்தை இனவாத அரசியலின் பக்கம் திருப்ப முயற்சித்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர், கொலைக்குப் பின் இருந்த பரந்த சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றிய எவ்விதமான விவாதத்தையும் அகற்ற முற்பட்டனர்.

சான்போர்ட் அணிவகுப்பு நகரமையம் வழியே சென்று நகரவை அலுவலகப் பகுதியில் முடிவடைந்தது. அங்கு நகரவையின் ஆணையர் மார்ட்டினின் பெற்றோர்களைப் பேசுமாறு அழைத்தார். நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தை பார்க்க இடம் பிடிக்க முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் இந்நிகழ்வை வெளியே இருந்த திடலில் இருந்த பெரிய திரைகளில் பார்த்தனர்.

பொலிஸ் திணைக்களம் வழக்கைக் கையாண்ட முறை தவறுஎன்ற செல்வி.ரிச்சர்ட்சன் (19) இப்பொழுது ஒரு மாதம் முடிந்துவிட்டது, இன்னும் சிம்மர்மான் கைது செய்யப்படவில்லை. என்றார்.

அவருடைய பெற்றோர்கள் இதுகுறித்து உறுதியாக இல்லை என்றால், இது ஒவ்வொரு நாளும் நடக்கும். இதுபோல் பல கடந்தகாலத்தில் நடந்துள்ளன. ஆனால் எவரும் டிரேவோன் மார்ட்டின் குடும்பம் போல் வலுவாக இருந்ததில்லை.

இங்கிருக்கும் இளஞர்களில் நானும் ஒரு பாகம். நீதி வேண்டும் என்று கூறுகிறேன். பெரியவர்களில் பலர் எங்களை மனிதப்பிறவிகளாகப் பார்ப்பதில்லை; இன்னும் குழந்தைகளாகத்தான் நடத்துகின்றனர். இன்று நான் பள்ளியில் இருந்தபோது, ஆசிரியரும் பள்ளி முதல்வரும் எங்களிடம் டிரவோன் மார்ட்டின் விவகாரம் பற்றிப் பேச வேண்டாம் என்றனர்.

அமெரிக்காவின் பாசாங்குத்தனம் மிகவும் வெளிப்படையாக உள்ளதுஎன்று புளோரிடா ஜாக்சன்வில்லேயில் இருந்து வந்த ஒரு கல்லூரி மாணவரான 21 வயது எரிக் வில்லியம்ஸ் கூறினார். நான் கூறவருவது நம்மில் சிலர் சலுகைபடைத்தவர்களாக உள்ளனர், சிலருக்கு அது இல்லை என்பதே.

இத்தகைய சரிவை அனுமதிக்கக்கூடாது, ஏனெனில் இது அடுத்து உங்களுடைய குழந்தையாக இருக்கலாம். என்னுடைய நெருங்கிய உறவினர் மகனாக இருக்கலாம்என்று எரிக் கூறினார். இவ்வளவு மக்கள் இங்கு திரண்டு வந்துள்ளதைக் காணும்போது ஊக்கம் பிறக்கிறது. அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒன்றிற்கு உறுதியாகக் கூடியுள்ளனர்,


எல்ட்ரிக் வில்லியம்ஸ், மார்க்கஸ் ஷ்யூலர், அன்டோயின் ஷ்யூலர்

எல்ட்ரிக் வில்லியம்ஸ், மார்க்கூஸ் ஷ்யூலர் மற்றும் அன்ரொயின் ஷ்யூலர்  ஆகியோர் அணிவகுப்பில் தங்கள் வாகனத்தின் பின்புறத்தில் குடிநீர் பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தனர்.


அணிவகுப்பில் ஒரு பகுதியினர்

டிரேவோனுக்கு நடந்தது எவருக்கும் நடக்கக்கூடாது.என்றார் வில்லியம்ஸ். சிம்மர்மான் பொலிசை அழைத்தார். அவர்கள் இந்த நபருடன் குழப்பம் வேண்டாம்.  ஒரு ரோந்துக் கார் வருகிறது என்றனர். அப்படியும் அவரை சிம்மர்மான் தொடர்ந்தார்.

இங்கு, புளோரிடாவில் உயிர்வாழ்வதே கடினம். வேலைகள் பற்றியும், பொது நிலைமையும் அவ்வாறு உள்ளது என்று அவர் சேர்த்துக் கொண்டார். எங்களை வேலைக்கு வைத்துக் கொள்ள ஒருவரும் விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. என்றார்.

ஜாக்சர்வில்லேயைச் சேர்ந்த ஓர் ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளரான பிரெடெரிக் பிரஸ்டன் மேற்சட்டைகளை அணிவகுப்பில் விற்றுவந்தார். கறுப்பர்களாகிய நாங்கள் எல்லா நேரத்திலும் அநீதியை எதிர்கொள்கிறோம் என்றாலும்கூட, இது ஒரு கறுப்பு வெள்ளை சம்பந்தமான விவகாரம் அல்ல.


பிரெடெரிக் பிரஸ்டன்

இந்த நாட்டில் பெரும் சமத்துவமற்ற தன்மையும் அநீதியும்தான் நிறைந்துள்ளன. கல்வியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளிகளில் சமத்துவமின்மை உள்ளது, பாடப்புத்தகங்களில் சமத்துவமின்மை உள்ளது, ஆசிரியர்களிடையே சமத்துவமின்மை உள்ளது, கட்டிடங்களில் சமத்துவமின்மை உள்ளது. என் கருத்தில், பெரும்பாலான குழந்தைகள் ஒன்றும் தாமாகவே பள்ளியே விட்டு நீங்குவதில்லை. அவர்கள் இச்சூழ்நிலையினால் பள்ளியில் இருந்து வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அரசியல்வாதிகள் அனைவரும் இதைப்பற்றி அறிக்கைகள் விடுகின்றனர். ஏனெனில் இது ஒரு தேர்தல் ஆண்டு. ஆனால் இத்தகைய செயல்கள் எப்பொழுதும் நடைபெறுகின்றன. டிரேவோன் மட்டுமே பாதிக்கப்பட்டவர் அல்ல. பெப்ருவரி மாதம் கூட பாதிக்கப்பட்ட ஒரே நபர் அவர் அல்ல. அடுத்த திங்கள் காலை வந்தால், கூட்டங்கள் கலைந்தபின், கூச்சலும், கைதட்டலும் நின்றபின், அனைத்து விவகாரங்களும் வழமைக்கு திரும்பிவிடும். வாக்குளைச் சேகரிப்பதற்காக இப்பொழுது அனைவரும் நீதிமான்கள் போல் பேசுகின்றனர்.

ஒபாமா ஒன்றும் மாறுபட்டவர் அல்ல. இப்பொழுது ஓர் அறிக்கையை விடுகிறார், ஆனால் உண்மையில் என்ன மாறப்போகிறது? திங்கள் வந்தால் மீண்டும் விவகாரங்களும் வழமைக்கு திரும்பிவிடும்.

 “எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனவே எளிதில் டிரேயோன் உடைய பெற்றோர்களுடைய நிலையில் என்னை நிறுத்திக் கொண்டு பேசமுடியும். இளைஞர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படுவதை அவர்களுடைய உடைகளைக் கொண்டோ, தோலின் நிறத்தைக் கொண்டோ, முடிவெடுக்கப்படுவது குறித்துப் பெரிதும் வேதனைப்படுகிறேன்.

 “இந்நிகழ்வு அனைவருக்குமே எல்லாமே போதுமென்ற அளவிற்கு நடந்துவிட்டதுஎன்பதைக் காட்டுவதாக உள்ளது. எரிபொருள் விலைகள், வீட்டு விலைகள், வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், வேலைகள் இல்லை என இது அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பொழுது அவற்றிற்கெல்லாம் மேலாக, நீங்கள் எங்களைச் சுடலாம். இதில் அச்சத்தைத் தருவது என்னவென்றால், இது பொலிஸ் அல்ல, ஒரு சாதாரணக் குடிமகனின் வேலை. என்மீது எப்படி எளிதில் இது நடத்தப்படலாம் என்று நான் நினைத்துக் கொள்ளுகிறேன்.