சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

Leon Trotsky and the defense of historical truth

லியோன் ட்ரொட்ஸ்கியும் வரலாற்று உண்மையின் பாதுகாப்பும்

By David North 
20 March 2012

use this version to print | Send feedback

உலக சோசலிச வலைத்தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த்,  மார்ச் 16 ம் திகதி லைப்சிக் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையை இங்கு நாங்கள் வெளியிடுகிறோம். சோசலிச இயக்கம் பற்றி ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ள நோர்த் எழுதிய வரலாற்று உண்மையையும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மரபையும் பாதுகார் (In Defense of Leon Trotsky) என்பதில் 2009இல் பிரிட்டிஷ் ஆசிரியர் ரொபேர்ட் சேர்விஸ் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை நூல் மற்றும் இதேபோல் சமீபத்திய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான கருத்துக்களை எழுதிய நூல்களில் உள்ள தவறான போக்குகளை கண்டிக்கும் வகையில் எழுதியுள்ளார்.

 

மேஹ்ரிங் பதிப்பாளர்கள் In Defence of LeonTrotsky என்னும் ஜேர்மனியப் பதிப்பை வெளியிட்ட லைப்சிக் புத்தக கண்காட்சியின் முடிவில் நோர்த் பேசினார். (முழுக்கூட்டத்தைப் பற்றிய விவரத்தை இங்கு காணலாம்Leipzig meeting on Leon Trotsky and the defense of historical truth: 300 hear David North critique Robert Service’s biography of Trotsky)

* * *         * * *        * * *

 


லைப்சிக் கூட்டத்தில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

லைப்சிக்கில் இன்று மாலை பேசுவதற்கு என்னை அழைத்ததற்கு ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சிக்கு (Partei für Soziale Gleichheit) நான் முதலில் நன்றிகூற விரும்புகிறேன்: ஜேர்மன் சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்று மையங்களில் லைப்சிக்கும் ஒன்றாகும். முதல் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில், சமூக ஜனநாயகக் கட்சிக்குள் (SPD) இருந்த வலதுசாரி, சந்தர்ப்பவாதச் சக்திகள் பெரும் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, Leipziger Volkszeitung கட்சியின் புரட்சிகரப் பிரிவின் முக்கிய செய்தித்தாளாக இருந்தபோது, ரோசா லுக்சம்பேர்க்கின் தலைமையில் உண்மையான மார்க்சிசக் கொள்கையை அது பாதுகாத்தது. இரு தசாப்தங்களுக்குப்பின், 1933ல் நாஜிக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கு முந்தைய முக்கிய ஆண்டுகளில், லைப்சிக்தான் ஜேர்மனியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செயற்பாடுகளுக்கு முக்கிய மையமாக இருந்தது. ஜேர்மனிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் சோவியத் ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலும் ஸ்ராலினிச ஆட்சி விளைவித்துக் கொண்டிருந்த பேரழிவுக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிவந்த ட்ரொட்ஸ்கியினால் நிறுவப்பட்ட சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள் என்ற அமைப்புடன் இணைந்திருந்தனர். 1931ல்சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு துருக்கி தீவான பிரிங்கிபோவில் வசித்துவந்த ட்ரொட்ஸ்கி சர்வதேச நிலைமையில் ஜேர்மனி திறவுகோல் போன்றது என்று அறிவித்தார். அதிகரித்துவரும் நாஜிக் கட்சியின் சக்தி, ஜேர்மனிய, சோவியத் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு பேராபத்தை கொடுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். நாஜிகள் வெற்றிபெற்றால் அது முன்னொருபோதுமில்லாத வகையில் பேரழிவைத் தரும் என்றும் கூறினார். மேற்கு ஐரோப்பாவில் மிகச் சக்திவாய்ந்த சோசலிச இயக்கத்திற்கு அது அதிர்ச்சியான தோல்வியைக் கொடுத்து, மிருகத்தனமான சர்வாதிகாரம் நிறுவப்படுவதில் முடிவடைந்து மற்றும் ஒரு இரண்டாம் உலகப் போரிற்கு இட்டுச்செல்லும் ஒரு தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

அப்படியும்கூட, பாரிய அரசியல் பிரச்சனைகள் பணயம்வைக்கப்பட்டிருந்துபோதும், ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்தின் இரு வெகுஜனக் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் (KPD) ஹிட்லரின் வெற்றியின் வழியிலிருந்த தடைகள் அனைத்தையும் அகற்றும் கொள்கைகளைத்தான் தொடர்ந்து வந்தன. அழுகிய பிணமான வைமார் ஆட்சியைத்தான் சமூக ஜனநாயகக் கட்சி விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்து, நாஜிக்கட்சி ஆட்சிக்கு வரும் பாதையைத் தடுக்க அது முதலாளித்துவ அரசைத்தைத்தான் நம்பியிருந்தது. ஸ்ராலினிடம் இருந்து வரும் உத்தரவுகளைப் பின்பற்றிவந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, அறிவற்ற சமூக பாசிசம் என்னும் கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தது. அதாவது, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சிக்கும் பிற்போக்குத்தனமான ஜேர்மன் குட்டிமுதலாளித்துவ வெகுஜனக் கட்சியான NSDAP எனப்பட்ட நாஜிக்கட்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என்று ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.  இந்த அடிப்படையில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ட்ரொட்ஸ்கியின் அழைப்பான பரந்த இரு தொழிலாளர் வர்க்கக் கட்சிகளும் நாஜி ஆபத்துக்களுக்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும் என்பதை நிராகரித்தனர்.

1931 முதல் 1933 வரை ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் அதிகம் அரசியல் நனவான பிரிவுகள் மற்றும் சோசலிச புத்திஜீவிகள் மத்தியில் பாசிசம் காட்டும் பாரிய ஆபத்தைப் பற்றியும், நாஜி வெற்றியைத் தடுப்பதற்குத் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்ட போரட்டத்தை நடத்தவேண்டிய உடனடித் தேவை பற்றிய உணர்வை ட்ரொஸ்கி தட்டியெழுப்ப முற்பட்டார். ஜேர்மனியில் பாசிசம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. வேறு எவரும் இத்தகைய முன்கூட்டிய உணர்தல், துல்லியத் தன்மை மற்றும் பெரும் ஆர்வத்துடன் ஜேர்மனிய நிகழ்வுகளைப் பற்றியும், அவற்றின் உலக வரலாற்று தாக்கம் பற்றியும் எழுதியதில்லை.


கூட்டத்தின் ஒரு பகுதியினர்

இவ்வகையில்தான் ட்ரொட்ஸ்கி தன்னுடைய துண்டுப் பிரசுரமான அடுத்து என்ன? (What Next?)  என்று ஜனவரி 1932ல் வெளியிடப்பட்டதில் பாசிசம் குறித்து வரையறுத்தார்.

ஒடுக்குமுறை, மிருகத்தனமான வன்முறை மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல பாசிசம். முதலாளித்துவ சமூகத்திற்குள் தொழிலாள வர்க்க ஜனநாயகத்தின் அனைத்துக் கூறுபாடுகளையும் வேரோடு அகற்றுவதை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட ஆட்சிமுறைதான் பாசிசம் ஆகும். இந்த இலக்கிற்காக கம்யூனிச முன்னணிப் படையினரை முற்றிலும் அழித்துவிடுதல் மட்டும் போதுமானதல்ல முழுவர்க்கத்தினையும் பிரிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்கவேண்டியிருந்தது.  இதன் இறுதி முடிவாக சுயாதீன, தன்னியல்பான அமைப்புக்கள் அனைத்தையும் உடைத்தெறிதலும், தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்புக் கோட்டைகள் அனைத்தும் சிதைக்கப்பட வேண்டும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் 75 ஆண்டுகள் போராடி சாதித்த அனைத்தும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இறுதிப் பகுப்பாய்வில் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இதே வெற்றிகளைத்தான் அடித்தளமாக கொண்டுள்ளது.

இதே துண்டுப் பிரசுரத்தில், சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்தன்மையையும் மிகச்சிறந்த முறையில் எடுத்துக் கூறியுள்ளார். முதலாளித்துவத்தை நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடி சமூக ஜனநாயகக் கட்சியை நீடித்த பொருளாதார, அரசியல் போராட்டங்களால் சாதிக்கப்பட்ட பலன்களை தியாகம் செய்யும் கட்டாயத்தில் தள்ளுகிறது, இதனால் ஜேர்மன் தொழிலார்களின் வாழ்க்கைத்தரம் அவர்களுடைய தந்தையர், பாட்டனார்கள், முப்பாட்டனார்கள் காலத்திய தரத்திற்குக் குறைக்கப்படுகின்றது. அதன் வெற்றிகள், நம்பிக்கைகள் ஆகியவை சிதைந்திருப்பதின் நடுவே சீர்திருத்தவாதத்தின் மோசமான சீரழிவின் பெரும் துன்பத்தைக் கொடுக்கும் இவ்வாறான வரலாற்றுக் காட்சியைவிட இன்னும் அவலமானது வேறேதும் இல்லை. நவீனப்படுத்துதலுக்கான அதனது முயற்சியில் அரங்கு பித்துப்பிடித்துள்ளது. அது அடிக்கடி Hauptmann உடைய The Weavers நாடகத்தினை காண்பிக்க வேண்டும்: அதுதான் மிக நவீன நாடகங்களில் மிகவும் நவீனமானது. இந்த அரங்கின் இயக்குனர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களுக்கு முன் வரிசைகளை ஒதுக்கட்டும்.

அக்காலத்தில் பாசிசத்தைக் குறித்து எழுதப்பட்ட எதுவுமே ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களுடன் ஒப்பிட முடியாதவை ஆகும். புகழ்பெற்ற செய்தியாளர் குர்ட் ருகோல்ஸ்கி (Kurt Tucholsky) ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாட்டை விட்டு வெளியற்றப்பட்டுள்ள ட்ரொட்ஸ்கி வேறு எவரையும்விட ஜேர்மனியிலுள்ள அரசியல் நிலமை குறித்துத் தெளிவாகவும், ஆழமாகவும் அறிந்துமுள்ளது குறித்துத் தன் வியப்பைத் தெரிவித்துள்ளார். வால்ட்டர் பெஞ்சமின், எமின் ஹெஸ்ஸ-பூறி (Walter Benjamin, Emil Hesse-Burri) ஆகியோருடன் நடத்திய விவாதங்களில் பெர்த்தோல்ட் பிரெஹெட் (Berthold Brecht) அக்காலத்திய மிகப் பெரிய ஐரோப்பிய எழுத்தாளராக ட்ரொட்ஸ்கி நியாயமான முறையில் குறிப்பிடப்படலாம் என்று குறிப்பிட்டார்.

ஆனால் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், ஜேர்மனியில் ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் செயற்பாடுகளும் சமூகஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் காட்டிக் கொடுப்பின் பலாபலன்களை தவிர்க்க முடியவில்லை. ஜனவரி 1933ல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார், ட்ரொட்ஸ்கி முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த பெரும் துன்பியலும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

30 ஆண்டுகளுக்குப்பின், 1960களின் அரசியல் தீவிரமயப்படுத்தலின் காலத்தில், ஜேர்மனியில் பாசிசம் எப்படி அதிகாரத்திற்கு வர முடிந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்பிய தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ட்ரொட்ஸ்கியின் அரசியல் படைப்புக்கள் மிகவும் அடிப்படையாயிற்று. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவிற்கான அரசியல் காரணங்களைப் பற்றிய இணையற்ற பகுப்பாய்வை லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளில் கண்ட இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நான். பாசிசத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது அல்ல என்பதை ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் தெளிவுபடுத்தின. அதிகாரத்திற்கு ஹிட்லர் வந்தது தடுக்கப்பட்டிருக்க முடியும். பாசிசம் ஒன்றும் அடோர்னோ, கோர்க்ஹைய்மர் (Adorno and Horkheimer) இருவரும் கூறியபடி அறிவொளிமயமாக்கல் இயங்கியலின்” (“Dialectic of Enlightenment”) தடுக்க முடியாத விளைவோ அல்லது வில்ஹெம் ரைஷ் (Wilhelm Reich) வாதிட்டுள்ளபடி, அடக்கப்பட்ட பாலியல் உணர்வின் விளைவோ அல்ல. முதலாளித்துவ ஆட்சியின் மிகப்பெரிய காட்டுமிராண்டித்தமான வடிவமான பாசிசம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையின் தோல்வியினாலும் காட்டிக் கொடுப்புக்களின் விளைவுகளினாலும் அதிகாரத்திற்கு வந்தது.

ஜேர்மனி பற்றிய ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் அவருடைய அசாதாரண அரசியல் மரபியத்தின் ஒரு பகுதிதான்.  கடந்த நூற்றாண்டின் வரலாற்றில் அவருடைய முக்கிய பங்கு தொடர்பாக அவர் இறந்த எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும்கூடத் தொடரும் பொய்கள் மற்றும் சிதைவுகளுக்கு எதிராக அவரைப் பாதுகாத்தல் தேவையாகிறது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் மிக முக்கியமான நிகழ்வுகள் அவருடைய வாழ்வின் பணிகளில் பிரதிபலிக்கின்றன. லெனினுக்கு அடுத்தபடியாக அவர் ரஷ்யப் புரட்சி இயக்கத்தில் முக்கியமானவராக இருந்தார். அந்த இயக்கம்தான் அக்டோபர் 1917ல் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

அக்டோபர் புரட்சிக்கு ஊக்கம் கொடுத்த முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் ஆகியவை ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிதளமாகக் கொண்டிருந்தன. இவர் அதை 1905ம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்குப்பின் அபிவிருத்திசெய்திருந்தார். 1917 அக்டோபர் புரட்சியை தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தில் ட்ரொட்ஸ்கி செம்படையின் தலைவரானார். அவரது தலைமையின் கீழ் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் ஆதரிக்கப்பட்ட எதிர்புரட்சி சக்திகளுக்கு எதிராக சோவியத் யூனியன் பாதுகாக்கப்பட்டது.

ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியின் வெற்றி மற்றும் அதை பாதுகாத்தல் ஆகியவற்றில் ட்ரொட்ஸ்கி தீர்மானகரமான பங்கைக் கொண்டிருந்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக வரலாற்றில் அவருடைய இடம், உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயவாதி மற்றும் முக்கிய பிரதிநிதி என்ற வகையில் கொண்டிருந்த வெற்றிகளானால்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1905ம் ஆண்டிலேயே அவர் ரஷ்யப் புரட்சியை ஓர் உலகப் புரட்சி நிகழ்வுப்போக்கின் ஒரு பாகமாக ஆய்வு செய்திருந்தார். வேறு எவரைக் காட்டிலும் முன்கூட்டியே ட்ரொட்ஸ்கி ஒரு சோசலிசப் புரட்சியின் மூலம் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பைக் கண்டறிந்திருந்தார். ஆனால் ரஷ்யாவின் சோசலிசத்தின் விதி எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வெற்றியைத்தான் நம்பியிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு சோசலிசப் புரட்சி அதன் முதல் வெற்றியை ஒரு தேசிய அரங்கில் காணக்கூடும் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். ஆனால் அது தப்பிப் பிழைப்பதற்கு அது வெற்றி பெற்றுள்ள தேசிய எல்லைகளுக்கு அப்பால் எந்த அளவிற்கு விரிவாக்கம் பெறுகிறதோ அதைப் பொறுத்துதான் உள்ளது. அந்த சோசலிசத்தின் இறுதி வெற்றி உலகளவில் முதலாளித்துவம் தூக்கிவீசப்படுவதன் மூலம்தான் அடையப்படமுடியும் என்றார்.

இறுதிப் பகுப்பாய்வில், 1920களில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வெடித்த மோதலின் அடித்தளத்தில் இருந்த முக்கிய அரசியல் பிரச்சனை சோவியத் ஒன்றியத்தினுள் சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கும், 1917ல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் போல்ஷிவிக் கட்சியின் புரட்சிகர மூலோபாயத்தின் அடித்தளமாக அமைந்திருந்த உலக சோசலிசப் புரட்சிக்கும் இடையே இருந்த உறவு பற்றித்தான். அக்டோபர் 1923ல் போல்ஷிவிக் கட்சி மற்றும் சோவியத் அரசாங்கத்திற்குள் அதிகாரத்துவத்தின் வளர்ச்சி பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்கள் இடது எதிர்ப்பு அமைக்கப்படுவதற்கு வழி வகுத்தது. இது சோவியத் ஒன்றியத்திற்கு மட்டுமின்றி ஜேர்மனிய வரலாற்றிலும் முக்கியமான மாதமாக இருந்தது. 1923 வசந்தக்காலத்தில் ரூர்ப் பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பை அடுத்து ஜேர்மனியில் வெடித்த பாரிய நெருக்கடி விரைவில் ஒரு புரட்சிகர நிலைமை பெருக வழிவகுத்தது. மிகப் பெரிய பணவீக்கம் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் நிலையற்ற தன்மை என்னும் பின்னணியில், ஜேர்மனியத் தொழிலாள வர்க்கம் ஒரு வெற்றிகரமான புரட்சிகர எழுச்சியை நடத்துவதற்கான முன்னோடியில்லாத வாய்ப்பு எழுந்தது. ஆனால் உறுதியான புரட்சிகரத் தலைமைதான் இல்லை. ஜேர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் எழுச்சிக்காகக் கொண்டிருந்த தயாரிப்புக்கள் திட்டமிடப்படாததாகவும், உறுதியற்றதாகவும் இருந்தன. கட்சித் தலைமைக்குள் அதிகரித்தளவில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் எதிரிகளுடைய மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஜேர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முரண்பாடான ஆலோசனைகளை கொடுத்துவந்தது. ஜேர்மனியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய எழுச்சிக்கான அதன் திட்டங்களை கடைசி நிமிடத்தில் கைவிட்டது. அதைத் தொடர்ந்த பெரும் குழப்பத்தில், உள்ளூர் எழுச்சிகள் அடக்கப்பட்டன, முதலாளித்துவ அரசாங்கம் தனது நிலைமையை ஸ்திரப்படுத்திக்கொண்டது. ஜேர்மனிய தொழிலாள வர்க்கம் அது ஒருபோதும் மீளமுடியாத அடியைப் பெற்றது. இது தொடர்ந்த சங்கிலி போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுத்து நாஜிக் கட்சியின் வெடிப்புத் தன்மை நிறைந்த வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

ஜேர்மனியில் தோல்வி என்பது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த பழைமைவாத அதிகாரத்துவப் போக்குகளுக்கு வலுக்கொடுத்தது. உள்நாட்டுப்போர் முடிவிற்கு வந்த நேரத்தில், அரசும் அதிகாரத்துவமும் விரைவில் வளர்ச்சியுற்றன. அவ்வமைப்பில் பதவியை பெறுதல் என்பது பல்லாயிரக்கணக்கான செயலர்களுக்கு தனிப்பட்டப் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் என்ற பொருளைக் கொடுத்தது. இச்செயலர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் என்னும் முறையில் ஸ்ராலினுடைய விரைவில் பெருகிய அதிகாரத்திற்கான சமூகத் தளமாக இருந்தனர். ஸ்ராலினின் அதிகாரத்தினுடைய இரகசியம்பெருகிவரும் அதிகாரத்துவ சாதியின் பொருள்சார் நலன்களை மிகவும் கவனித்தல் என்பதில் இருந்தது; அவர்கள் தங்கள் சொந்த நலன்களை, சோவியத் ஒன்றியம் ஒரு உலக சோசலிசப் புரட்சியின் புதிய மையம் என்பதற்கு மாறாக ஒரு தேசிய அரசாக இருப்பதுடன் அடையாளம் கண்டனர். 1924ம் ஆண்டு தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் வேலைத்திட்டத்தை ஸ்ராலின் வெளிப்படுத்தியபோது அதில் அதிகாரத்துவத்தின் அதிகரித்துவந்த தேசியவாத, பழைமைவாத சார்புநிலை தனது வெளிப்பாட்டைக் கண்டது.

தத்துவார்த்த அளவில், அரசியல் அளவில் மற்றும் நடைமுறையில் இவ்வேலைத்திட்டம் சோவியத் ஒன்றியத்திற்குள் சோசலிசத்தின் வளர்ச்சி என்பதை சர்வதேச சோசலிச புரட்சி பாதையில் இருந்து பிரித்து வளர்த்தது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஆளும் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்கு அடிபணியச் செய்தது. இப்பிரித்தல் விரைவில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கடுமையாக தாக்குவதற்கு வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் தலைவிதி அதன் எல்லைகளுக்கு அப்பால் இருந்த தொழிலாள வர்க்கத்தின் வெற்றியில்தான் தங்கியிருக்கிறது என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியது, சோவியத் அதிகாரத்துவத்தினருக்கும் முற்றிலும் விரும்பத்தகாத தத்துவமாயிற்று.  எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்கள் வருமானம், சிறப்புச்சலுகைகள் ஆகியவை பற்றியே அக்கறை கொண்டிருந்தனர். பின்னர் தன் சுயசரிதையில் ட்ரொட்ஸ்கி எழுதியபடி, நிரந்தரப்புரட்சி மீதான அதிகாரத்துவத்தின் தாக்குதல் சுயநலத்தினால் உந்தப்பட்டது. சோவியத்தின் சிறிய அதிகாரி கூட ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டதைக் கண்டிக்கையில், உலகப் புரட்சிக்காக அனைத்தையும் கொடுக்க முடியாது: எனக்கும்தான் சிறிதளவு வேண்டும் என்று கருதிக்கொண்டார்.

ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே இருந்த மோதல் சொந்த அதிகாரத்திற்காக இரு தனிநபர்களிடையே நடந்த அகநிலைப் போராட்டம் என்ற கூற்றைவிட வரலாற்றுரீதியாக மிகவும் அபத்தமானதும், அரசியல் அளவில் ஏற்கமுடியாததும் இருக்கமுடியாது. 1920 களின் நடுப்பகுதியில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வெடித்த மோதல் சமரசத்திற்கு இடமில்லாத இரு வேலைத்திட்டங்களுக்கு இடையேயான போராட்டமாகும். ஸ்ராலின் தலைமையில் சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத போலி சோசலிசத்திற்கும் ட்ரொட்ஸ்கி தலைமையில் இடது எதிர்ப்பின்கீழ் நடந்த சர்வதேச சோசலிசத்திற்கும் இடையே என்பதுதான் அது. இப்போராட்டத்தின் விளைவு, இருபதாம் நூற்றாண்டின் சோசலிசப் புரட்சியின் தலைவிதியையும், இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் விதியையே நிர்ணயித்தது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில் பிறழ்வு என்பது இலகுவாக அடையப்படவில்லை. சர்வதேச சோசலிசத்தின் உயர் சிந்தனைகளும் இலக்குகளும் சோவியத் தொழிலாள வர்க்கத்தினுள் ஆழ்ந்து பதிந்திருந்தன. மேலும் முன்னேற்றம் அடைந்திருந்த சோவியத் தொழிலாளர்களுடைய சிந்தனையில் ட்ரொட்ஸ்கி ஆதிக்கம் செலுத்தினார். உண்மையில் உலகெங்கிலும் இருந்த சோசலிஸ்ட்டுக்களின் சிந்தனையில் அவருக்கு இருந்த பெரும் மரியாதை, கௌரவம் என்பவை லெனின் மீதிருந்தற்கே ஒப்பிடப்படமுடியும். இதற்கு மாறாக 1920 களின் ஆரம்பத்தில் உட்பிளவுகள் தொடங்கியபோது, ஸ்ராலின் அதிகம் அறியப்படாத ஒருவராகவே இருந்தார். கட்சியினுள்ளும் அரச அதிகாரத்துவத்தினரிடையேயும் இருந்த ஸ்ராலினுக்கும் அவருடைய கட்சி நண்பர்களுக்கும், புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தைக் கைவிடுவதற்கு ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கை அழிப்பது என்பது தேவையாயிற்று. ஆனால் இது அக்டோபர் புரட்சியின் வெற்றியில் ட்ரொட்ஸ்கியின் மிக முக்கியமான பங்கை மறுத்த வகையில் வரலாறு மறுபடி எழுதப்பட்டால்தான் சாதிக்கப்பட முடியும். இங்குதான் 1923ல் ஆரம்பித்த வரலாற்றுத் திரித்தல் பிரச்சாரத்திற்கான அரசியல் மூலத்திற்கான ஆரம்பத்தை காணமுடியும்.

இன்றிரவு நமக்குக் கிடைத்துள்ள நேரத்தில், இந்த இழிந்த திரித்தல் வகையில் அனைத்துக் கட்டங்களையும் விரிவாகப் பார்த்தல் என்பது இயலாது. இப்பொய்கள் 1917க்கு முந்தைய புரட்சிகர இயக்கத்தின் உள்மோதல்களைப் பற்றிய சிதைவுடன் தொடங்கின. இதையொட்டி ஆவணங்களை தவறாக எடுத்துரைத்தல், தேவைக்கேற்ப மேற்கோளிடுதல், மேற்கோள்களைத் திரித்தல் ஆகியவை ஏற்பட்டிருந்தன. வியத்தகு வேகத்தில் ஒரு முற்றிலும் புதிய, கொடூர நபர் என்ற தன்மையை ட்ரொட்ஸ்கி மீது சோவியத் செய்தி ஊடகம் இணைத்தது. ட்ரொட்ஸ்கி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பலரைப்பற்றிய அவதூறுகள் கட்சியை விட்டும் பின்னர் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் இருந்து ட்ரொட்ஸ்கி 1929 ஜனவரியில் வெளியேற்றப்பட்டார். 1932ம் ஆண்டு அவருடைய குடியுரிமைகள் முறையாகப் பறிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்திற்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் பெருகிய முறையில் வன்முறை அடக்குதலால் நசுக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அதிகாரத்துவத்தின் போர், சோவியத் தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் மார்க்சிச அறிவுஜீவிகள் மத்தியிலும் இருந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் கலாச்சாரத்தின் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எதிராக இயக்கப்பட்ட ஒரு அரசியல் படுகொலைச் செயற்பாட்டிற்கு அரங்கமாயிற்று.

ஆகஸ்ட் 1936க்கும் 1938மார்ச்சிற்கும் இடையே நடைபெற்ற மூன்று ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு வழக்குகள் 1923ல் தொடங்கிய இடைவிடா வரலாற்றுத் திரித்தலின் உச்சக்கட்டத்தைக் குறித்தன. இவ்வழக்குகள் நடைபெற்றபோது, போல்ஷிவிக் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஸ்ராலினுக்கு எதிராகச் சதி செய்ததாகவும், சோவியத் ஒன்றியத்திற்கும் நாசம் விளைவிக்கும் செயல்களைச் செய்ததாகவும், ஜேர்மனி மற்றும் ஜப்பானில் உள்ள பாசிச ஆட்சிகளுடன் தேசத்துரோகக் கூட்டுக்களை அமைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். தங்கள் வாழ்நாள் முழுவதும் சோசலிசத்திற்காக அர்ப்பணித்த குற்றம் சாட்டப்பட்டிருந்த முதிர்ந்த புரட்சியாளர்கள் அனைவரும் இக்கொடிய குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர். இவர்களுடைய ஒப்புதல் ஆவணங்களைத் தவிர, குற்றம்சாட்டியவர்கள் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக சாட்சியம் ஒன்றைக்கூட முன்வைக்கவில்லை.

நீண்டகாலமாக அறியப்பட்டதுபோல்,  இந்த ஒப்புதல்கள் குற்றம் சாட்டப்பட்டர்கள் மீது உடல், மனரீதியான சித்திரவதைகள், அவர்கள் குடும்பத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மூலம் அச்சுறுத்திப் பெறப் பெற்றவை ஆகும். கொடூரமான மாஸ்கோ விசாரணை என்னும் செயற்பாட்டில் தங்கள் பங்கை ஒழுங்காகச் செய்தால், அவர்களுடைய உயிர்கள், அவர்களுக்குப் பிரியமானவர்களின் உயிர்களும் காப்பாற்றப்படும் என்னும் இழிந்த, வெற்று உறுதிமொழிகளைக் கொடுத்து ஸ்ராலின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1990களின் தொடக்கத்தில், ஜனவரி 1937ல் நடைபெற்ற இரண்டாம் விசாரணையின்போது ஒரு குற்றம் சாட்டப்பட்டிருந்த மிகைல் பொகுஸ்லாவ்ஸிகியின் மகளுடன் நான் பேசினேன். ரெபேக்கா பொகுஸ்லாவ்ஸ்கி வழக்கு தொடங்குவதற்குச் சில வாரங்கள் முன் மாஸ்கோவில் இருந்து லுபியன்கா சிறையில் தன்னுடைய தந்தையை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். மிகைல் பொகுஸ்லாவ்ஸ்கி ஓர் ஆவி போல் இருந்தார்உடல் வற்றி, கண்களைச் சுற்றிக் கருவளையமிட்டு. பெரும் வேதனையுடன் இருந்த அவர் தன்னுடைய நாற்காலியில் அசைந்தபடி அமைதியற்று உட்கார்ந்திருந்தார். தன்னுடைய தகப்பனார் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார் என்பதை ரெபேக்கா உணர்ந்தார்; தன்னுடைய உடலின் கனத்தைக்கூட அவரால் உட்கார்ந்த நிலையில் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மகளைப் பார்த்து பெரும் வேதனையுடன் பொகுஸ்லாவ்ஸ்கி கூக்குரலிட்டார்: நீ என்னுடனான உறவைத்துண்டித்துக்கொள்ள வேண்டும். நான் வாழ்ந்தேன் என்பதையை மறந்துவிட வேண்டும்.” “அப்பா, ஒருபொழுதும் நான் உங்களுடனான உறவைத்துண்டித்துக்கொள்ள மாட்டேன் என்று ரெபேக்கா விடையிறுத்தார்.

வழக்கு விசாரணையின்போது, பொகுஸ்லாவ்ஸ்கி சற்றே தேறிய நிலையில் இருந்தார். அவருக்கு சிறையதிகாரிகளால் உணவு அளிக்கப்பட்டிருக்கப்பட வேண்டும், அவருடைய தோற்றத்தை தேற்றுவதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ரெபேக்கான ஊகித்தார். ஆனால் விசாரணை முடிந்த சில மணி நேரங்களிலேயே பொகுஸ்லாவ்ஸ்கி சுட்டுக்கொல்லப்பட்டார். ரெபேக்கா பின்னர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் ஒரு சைபீரிய கடும்பணி முகாமில் (Labor camp) கழித்தார். 1992ல் 79 வயதில் அவர் இறந்துபோனார்.

முதல் மாஸ்கோ விசாரணைகள் ஆகஸ்ட் 1936ல் நடத்தப்பட்டபோது, ட்ரொட்ஸ்கி நோர்வேயில் வசித்து வந்தார். மாஸ்கோவில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட சிறிதும் நம்பமுடியாத குற்றங்களுக்கு ட்ரொட்ஸ்கி பதில் கூறுவதைத் தடுக்கும் வகையில், சமூக ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நோர்வேயின் அரசாங்கம் ட்ரொட்ஸ்கி மற்றும் அவருடைய மனைவி நத்தலியா செடோவா இருவரையும் வீட்டுக்காவலில் வைத்தது. டிசம்பர் 1936ல் நோர்வேயில் இருந்து ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டு, மெக்சிகோவிற்கு செல்லவிருந்த ஒரு சரக்குக் கப்பலில் அனுப்பப்பட்டார்.

இறுதியாக மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச ஆட்சியின் குற்றச் சாட்டுக்களுக்கு பகிரங்கமாகப் பதில் அளிக்க முடிந்தது. விசாரணைகள் வேண்டுமென்றே கொண்டுவரப்பட்ட அரசியல் தயாரிப்புக்கள் என்று கண்டித்து, ஒரு சர்வதேச எதிர் விசாரணைஒன்று குற்றம் சாட்டுபவர் என்ற மறைப்பிற்குப் பின் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை அம்பலப்படுத்த நடத்தப்பட வேண்டும் என்று விடையிறுத்தார்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதலாளித்துவத் தாராளவாதிகளுக்கும் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டான மக்கள் முன்னணிக்குஆதரவு கொடுத்தவர்களுடைய இடது பொதுக்கருத்தின் கணிசமான பிரிவினர் மாஸ்கோ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எவ்வித மறுப்புமின்றி ஏற்கத்தயாராக இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். அவர்கள் மாஸ்கோ விசாரணை பற்றி ஒரு சுயாதீன விசாரணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்னும் ட்ரொட்ஸ்கியின் அழைப்பைக் கடுமையாக எதிர்த்ததுடன், கிரெம்ளினுடைய பொய்கள் அம்பலப்படுத்தப்படுவது பாசிசத்திற்கு எதிரான தாராளவாத-ஸ்ராலினிச வெகுஜன முன்னணிக்கு குழிபறித்துவிடுமோ என்று அஞ்சினர். ஏதோ பாசிசத்திற்கு எதிரான போராட்டம் புரட்சியாளர்களை சட்டபூர்வமாகக் கொலை செய்வதின் மூலம் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பது போல்.

தாராளவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் எதிர்ப்பையும் மீறி, விசாரணைகள் பற்றிய விசாரணை ஆணைக்குழு ஒன்று 1937 வசந்தக் காலத்தில் அப்போது வாழ்ந்துகொண்டிருந்த பிரபல அமெரிக்கத் தத்துவஞானியான ஜோன் டுவே -John Dewey- இன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஏப்ரல் மாதம் மெக்சோவிற்குச் சென்றது; அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக அது அவருக்கு எதிரான அனைத்துக் குற்றசாட்டுக்கள் தொடர்பாகவும் ட்ரொட்ஸ்கியிடம் விசாரணை நடாத்தியது. ஒரு 17 வயது இளைஞராக 1897ல் இருந்து தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்திலிருந்து 40 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக நீண்டிருந்த தன்னுடைய செயல்கள் மற்றும் சிந்தனைகளை பாதுகாத்து ட்ரொட்ஸ்கியின் வாக்குமூலம் அடங்கியிருந்தது.

ஐயத்திற்கு இடமின்றி மெக்சிக்கோவில் ஆணைக்குழுவின் பணியின் உச்சக்கட்டம் ட்ரொஸ்கியின் முடிவுரைதான். ஆங்கிலத்தில் அவர் 4 ½ மணி நேரம் பேசினார். உலகிலேயே மிகப் பெரிய பேருரைகளுடன் இது இணையானது என்று கூறும்போது நான் ஒன்றும் ஒரு ட்ரொட்ஸ்கிச ஆதரவாளர் என்னும் முறையில் கூறவில்லை. அந்த உரையின் பல குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஒன்றில் ட்ரொட்ஸ்கி மாஸ்கோ விசாரணைகள் அடித்தளமாக கொண்டிருந்த பொய்களின் மூலங்கள் மற்றும் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விளக்கினார். சோவியத் ஆட்சியின் பொய்கள் ஒன்றும் ஸ்ராலினின் மனரீதியான பாதிப்பு உடைய தனிநபர் இயல்பின் விளைவு மட்டும் அல்ல. மாறாக, ஸ்ராலின் தலைமைப் பிரதிநிதியாக இருக்கும் அதிகாரத்துவத்தின் பொருள்சார் நலன்களில் வேரூன்றின்றியிருந்தவை.

புதிய சலுகை பெற்றுள்ள பிரிவின் இருப்பின் நிலைமையான, எப்பொழுதும் அதிகாரத்திற்கு பேராசை கொண்டிருந்த, பொருள்சார் வசதிகளுக்குப் பேராசை கொண்டிருந்த, தன்னுடைய நிலைமை பற்றிக் கவலைப்பட்டிருந்த, பொதுமக்களைக் கண்டு அஞ்சிய, அனைத்து எதிர்ப்பையும் பேராபத்து வந்துவிடுமோ என்று வெறுத்தமை ஆகிய சூழ்நிலைமைகளில் இருந்து ஆரம்பித்தால்தான் ஸ்ராலினுடைய செயல்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சமூகத்தில் ஒரு வசதிபடைத்த அதிகாரத்துவத்தின் நிலை அந்த அதிகாரத்துவமே அதனை சோசலிச சமூகம் என்று கூறிக்கொள்வதுடன் முரண்பாடுடையது என்பது மட்டுமின்றி, தவறும் ஆகும். அனைத்து சமூகத் தவறுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த அக்டோபர் புரட்சியில் இருந்து தற்போதைய நிலைமைக்கான திடீரென்ற பாய்ச்சலில் திடீரென உயர்நிலைக்கு வந்துள்ள சாதி அதன் சமூக தீயபண்புகளை மூடிமறைக்க வேண்டிய கட்டாயத்திற்குட்படுகின்ற போது தேர்மிடோரியப் பொய்கள்  மிகவும் மோசமானதாகின்றன. இதன் விளைவாக இது ஒரு குறிப்பிட்ட எந்தவொரு நபரின் தனிப்பட்ட இழிந்த தன்மை பற்றிய கேள்வியல்ல மாறாக, பொய்கூறுவது ஒரு முக்கிய அரசியல் தேவையாகிவிட்ட ஒரு முழுச் சமூகக் குழுவின் ஊழல் நிறைந்துவிட்ட நிலையைத்தான் குறிக்கின்றது.

இங்குதான் மாஸ்கோ விசாரணைகள் குறித்த பொய்களை உணர்ந்தறிவதற்கான திறவுகோல் மட்டும் அல்ல, இன்னும்பொதுவாக, அனைத்து வரலாற்றுத் திரித்தல்களின் முக்கியத்துவமும் உள்ளது. வடிவியலின் மூலசூத்திரங்கள் -geometric axioms- பொருள்சார் நலன்களுக்கு பாதகமாக இருக்குமானால், அவற்றை மறுப்பதற்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும்என்று புகழ்பெற்ற முதுமொழி ஒன்று உள்ளது. இதேபோல் ஆளும் வர்க்கம், வரலாற்றுச் சான்றுகள், சமூகத்தில் அது கொண்டுள்ள மேலாதிக்க நிலைமையை நியாயப்படுத்தலுக்கு ஓர் அச்சறுத்தல் என்று கண்டால், அது சிதைத்தல்கள் மற்றும் அப்பட்டமான தவறுகள் இழைப்பதையும் மேற்கொள்ள வேண்டும். ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சியின் கொள்கைகளை அது காட்டிக் கொடுத்தது பற்றி மிகத் திமிர்த்தன, அரக்கத்தன பொய்களைக் கூறும் நிலையை மேற்கொண்டது. மற்றும் சோசலிசத்தின் உண்மை இலக்குகளுக்கும் அதிகாரத்துவம் ஒரு சலுகை பெற்ற சாதி என்னும் முறையில் தன் பொருள்சார் நலன்களைக் பாதுகாப்பதற்கும் இடையே உள்ள அப்பட்டமான முரண்பாட்டை மறைக்கவும் முற்பட்டது.

புறநிலை முக்கியத்துவத்தினதும் மற்றும் வரலாற்றுத் திரித்தல்களின் சமூகச் செயற்பாடுகளையும் குறித்த விளக்கம் நமக்கு ஒரு மிக முக்கியமான வினாவிற்கு விடை கொடுக்க அனுமதிக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பங்கைப் பற்றிய பொய்களைப் பற்றி அணுக நாம் ஏன் இன்னும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்? டுவே ஆணைக்குழு, சற்றும் மாறுதலுக்கு இடமின்றி ட்ரொட்ஸ்கி அவருக்கு எதிராகச் சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தில் இருந்தும் நிரபராதி, மாஸ்கோ விசாரணைகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்று தன் பணியின் முடிவுரையாகக் கூறி எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சோவியத் தலைவர் நிகிடா குருஷ்சேவ் தன்னுடைய பெப்ருவரி 1956 இரகசிய உரையில் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரசின் 20வது மாநாட்டில் ஸ்ராலினை ஒரு குற்றவாளி என்று கண்டித்து, கிட்டத்தட்ட மாஸ்கோ விசாரணைகள் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறி 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் வாழ்வா, மரணமா என்னும் போராட்டத்தை முற்றிலும் நியாயப்படுத்தியுள்ள சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டே 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோவியத் ஒன்றியம் அதிகாரத்துவ ஆட்சியினால் அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவதற்கு ஸ்ராலினிசத்திற்கு எதிரான தன் போராட்டம் அரசியல்ரீதியாகத் தேவை என்று நியாயப்படுத்தினார்.

ட்ரொட்ஸ்கி ஒரு முக்கிய வரலாற்று மனிதர் என்பது வெளிப்படையானதுதான். அதிகாரத்தை அவர் இழந்தபின்பும், தன்னுடைய எழுத்துக்களின் மூலம் அவர் மகத்தான செல்வாக்கைக் கொண்டிருந்தார். ஆகஸ்ட் 1940ல் அவர் படுகொலை செய்யப்பட்டதுகூட, சர்வதேச ட்ரொட்ஸ்கிசத்தின் அச்சுறுத்தலில் இருந்து அதிகாரத்துவத்தை விடுவிக்க முடியவில்லை. ஐசக் டொய்ச்சரின் மூன்று-தொகுப்பு சுயசரிதை உலகம் முழுவதும் ட்ரொட்ஸ்கி குறித்த ஆர்வத்திற்குப் புத்துயிர் கொடுத்தது. சோவியத் அதிகார்த்துவத்தின் ட்ரொட்ஸ்கி குறித்த முடிவிலா அச்சத்தை ஸ்ராலினிச ஆட்சியில் கொல்லப்பட்ட அனைத்து போல்ஷிவிக் புரட்சியாளர்களிலும் ட்ரொட்ஸ்கி ஒருவர்தான் உத்தியோகபூர்வமாக மீள்புனருத்தாரணம் செய்யப்படவில்லை என்ற நடவடிக்கையில் காணப்படலாம்.

அவருடைய அரசியல் நோக்கங்களின் தன்மை காரணமாக ட்ரொட்ஸ்கி ஆழ்ந்த விவாதத்திற்குரிய மனிதராக இருப்பார் என்பது எதிர்பார்க்கப்படுவதுதான். ஆனால் அவருடைய செயல்களும் சிந்தனைகளும் மிகவும் அறிவார்ந்த முறையில் உணர்மையுடன் கற்கப்படும் தகுதி உடையவை என்பது பற்றி ஏதாவது ஐயுறவு இருக்க முடியுமா? ஆனால் இது நடைபெறவிவில்லை என்றால்இதற்கு மாறாக நாம் கடந்த தசாப்தத்தில் பொய்ப்பிரச்சாரங்கள் புதுப்பிக்கப்படுதல், தீவிரப்படுத்தப்படுதல் என்பவற்றைக் காண்கிறோம் என்றால்அவருடைய வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கூறுபாட்டையும் இடையாறாமல் திரிபுபடுத்துவதற்கு உந்துதல் கொடுக்கும் அரசியல், சமூகத் தேவையை கண்டுபிடித்து விளக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ட்ரொட்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரம் அதன் முனைப்பை, இரண்டு ஒன்றுடன் ஒன்றுதொடர்புடைய  வரலாற்று, அரசியல் தன்மையுடைய காரணிகளில் இருந்து பெறுகிறது என்று நான் நம்புகின்றேன். முதலில் நாம் வரலாற்றுக் காரணியைக் காண்போம். கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவை முதலாளித்துவ வெற்றிக்கூச்சலுக்கு எழுச்சி கொடுத்தன. 1989க்கு முன்பு ஸ்ராலினிச ஆட்சிகள் உடைகின்ற நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்ற கணிப்புக்கள், ட்ரொட்ஸ்கிச வெளியீடுகளில் மட்டுமே காணப்பட முடியும். ஒரு முக்கிய முதலாளித்துவ வரலாற்றாளரோ, செய்தியாளரோகூட கிழக்கு ஐரோப்பிய, சோவியத் ஆட்சிகளின் கலைப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஆட்சிகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், முதலாளித்துவ அரசியல் வாதிகள், உயர்கல்விக் கூடத்தினர் மற்றும் செய்தியாளர்கள் அவற்றின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று அறிவித்தனர். அவர்கள் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பது 1917 அக்டோபர் புரட்சி தொடக்கத்தில் இருந்தே தோல்வியடைந்துவிடும் தன்மையைக் கொண்டிருந்தது என்பதைத்தான் நிரூபித்ததுஎன்றனர். ஆரம்பத்தில் இருந்தே  1917 சோசலிசப் புரட்சி முதலாளித்துவத்தை மீளமைக்கும் ஒரு திசையில்தான் செல்கின்றது என்றனர். அதாவது, இந்த நிகழ்வுகள் கிட்டத்தட்ட 75 ஆண்டுக்காலம் நீடித்தது என்பது விளைவின் தவிர்க்க முடியாத தன்மையை கேள்விக்குட்படுத்தவில்லை. நிகழ்வுகள் வேறு எந்த திசையில் செல்வதற்கும் சாத்தியமில்லை. ஸ்ராலினிச ஆட்சி அக்டோபர் புரட்சியைக் காட்டிக் கொடுத்தன் விளைவல்ல. அது 1917ம் ஆண்டு நிகழ்வுகளால் தோற்றுவிக்கப்பட்ட தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று முட்டுச் சந்துதான். அதில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி முதலாளித்துத்தை மீட்பதுதான் என்றும் அவர்களால் கூறப்பட்டது.

இவ்வாறு சோவியத் வரலாற்றை இயந்திரகதியில் விளக்குவது என்பதற்கு சோவியத் ஒன்றியம் ஒரு வேறுவிதமான, சர்வாதிகாரமற்ற, சோசலிச வளர்ச்சியைக் காணும் சாத்தியத்தை கொண்டிருந்தது என்பது மறுக்கப்பட வேண்டும் என ஆயிற்று. நிகழ்வுகளுக்கான வேறு எந்த மாற்றீடும் தீவிரமாக கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தேவையில்லை. இந்த நிலைப்பாடுதான் ட்ரொட்ஸ்கி நடத்தப்பட்ட முறையை தீர்மானித்தது. அவர் ஸ்ராலினிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் தன்மை மிகவும் குறைமதிப்பிற்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது முடிந்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும். எந்தவகையிலும் அவர் ஸ்ராலினுக்கு எதிராக ஒரு சாத்தியமான ஒரு மாற்றீடு என்று எவ்வகையிலும் முன்வைக்க அனுமதிக்கப்படக்கூடாது. இதுவே அவர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால் புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடாக ட்ரொட்ஸ்கியின் முக்கியத்துவத்தை மறுப்பதற்கு தேவையாக இருந்த வரலாற்றுப் பிரச்சினைகள் புதிய அரசியல் கவலைகளினால் சூழப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டால் தோன்றிய வெற்றிகர உணர்வு ஏற்கனவே இருபதாம் நூற்றாண்டு முடிவடையத் தொடங்குகையில் சிதையத் தொடங்கியது. 1998ல் ஆசிய நெருக்கடியில் ஆரம்பித்த பொருளாதார அதிர்ச்சிகள் சோவியத் ஒன்றியத்தின் முடிவு முதலாளித்துவத்தினுள் ஆழமாக வேரூன்றியுள்ள அதன் சிக்கலைகளை குணப்படுத்திவிடவில்லை என்பதை மிகவும் தெளிவாக்கின. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கை நிலைமை, 2008 பொருளாராச் சரிவிற்கு முன்னரே, நிலையாக இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மோசமாகி, இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலும் சரிந்தது. வீழ்ச்சியடையும் பொருளாதார நிலைமைகளின் பின்னணியில், ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கினரின் தடையற்ற இராணுவவாதம் 9/11 நிகழ்வுகளுக்குப் பின் பயங்கரவாதத்தின்மீதான போர்  என்பதன் மூலம் ஒரு ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட தன்மையை அடைந்து படிப்படியாக பெருகும் மக்கள் எதிர்ப்பைத்தான் எதிர்கொண்டது. சமூக அழுத்தங்கள் இன்னும் தெளிவாக வெளிப்படுகையில், முதலாளித்துவ மூலோபாய வல்லுனர்களான Zbigniew Brzezinski போன்றோர், நன்கு படித்த ஆனால் கௌரவமான வேலைகள், பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற முடியாமல் அதிருப்தி கொண்ட இளைஞர்கள் உலகெங்கிலும் விரைவாகப் பெருகுவதில் உள்ள புரட்சிகர தாக்கங்களின் சாத்தியப்பாடு குறித்து எச்சரிக்கைக் குரல் கொடுக்கத் தலைப்பட்டனர்.

இத்தகைய உறுதியற்ற நிலைமையில், முதலாளித்துவம் 1960களின் அரசியல் சூழ்நிலையை நினைவுகூர்ந்தது; அப்பொழுது பல தசாப்தங்களாக நசுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் திடீரென தீவிரமயப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இன்றியமையாது படிக்கும் நூல்கள் என்று ஆயின. புதிய நூற்றாண்டில் இன்னும் அதிக உறுதியற்ற பொருளாதாரச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டைக் காண முற்படுகையில், ட்ரொட்ஸ்கி மீண்டும் ஒரு புதிய தலைமுறை, புரட்சிகரப் போராட்டத்திற்கு நுழையும் வகையில் தத்துவார்த்த மற்றும் அரசியல்ரீதியான வழிகாட்டலை கொடுக்கும் ஆபத்தாக இல்லையா? என கருதுகின்றனர். எல்லாவற்றிற்கும்மேலாக, முதலாளித்துவ நலன்களின் உயர்கல்விக்கூட பாதுகாப்பாளர்கள் ரஷ்யப் புரட்சியின் வரலாறு, காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி, எல்லாவற்றிற்றும் மேலாக, ட்ரொட்ஸ்கியின் கவர்ச்சிகரமான சுயசரிதையான எனது வாழ்வு போன்ற ட்ரொட்ஸ்கியின் எத்தனை நூல்கள் அச்சில் உள்ளன என்று ஆர்வத்துடன் கேட்டனர். ட்ரொட்ஸ்கியின் மகத்தான இலக்கியவகைப் புரட்சி விரிவுரைகளை எதிர்க்க என்ன செய்யப்படலாம்? என்று கேட்டனர்.

முன்கூட்டித்தாக்குதல் போர் என்னும் புதிய காலம் ஒரு புதிய இலக்கிய வகையைத் தோற்றுவித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு சற்றே அதிகமான காலத்தில், குறைந்தபட்சம் மூன்று தவிர்க்கமுடியாத ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை நூல்கள் பிரசுரிக்கப்பட்டன. முதல் வாழ்க்கை நூல், பேராசிரியர் இயன் தாட்சர் எழுதியது, 2003ல் வெளியிடப்பட்டது. இரண்டாவது வாழ்க்கை நூல், பேராசிரியர் ஜெப்ரி ஸ்வைன் எழுதியது 2006ல் வெளியிடப்பட்டது. இந்த இரு நூல்களைக் குறித்தும் நான் எழுதிய மிக நீண்ட விடை 2007ல் வெளிவந்தது. நயமற்ற திரித்தல்கள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முன்பு தயாரித்திருந்த பழைய பொய்களைப் பெரிதும் தளமாகக் கொண்டவை, இந்த இரு பிரிட்டிஷ் வரலாற்றாளர்களால் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை நான் விரிவாக அம்பலப்படுத்தினேன். பிரிட்டிஷ் உயர்கல்விக்கூட நடைமுறையின் ட்ரொட்ஸ்கி-விரோத நிலைப்பாட்டு முயற்சியை நான் மௌனப்படுத்திவிட்டேன் என்று கொண்டிருந்த நம்பிக்கை விரைவில் மறைந்துவிட்டது. ரொபேர்ட் சேர்விஸ் எழுதிய வாழ்க்கை நூல் 2009ல் வெளிவந்தது.

எனவே ட்ரொட்ஸ்கியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட மற்றொரு நூலை விரிவாக மறுக்கும் கட்டாயத்தில் நான் தள்ளப்பட்டதை அறிந்தேன். என்னுடைய தாட்சர் மற்றும் ஸ்வைன் ஆகியோரின் வாழ்க்கை நூல்கள் பற்றிய முந்தைய பகுப்பாய்வுடன், ட்ரொட்ஸ்கியின் படைப்பிலுள்ள தற்காலத்திய பொருத்தத்தை விளக்க முற்பட்ட என்னுடைய மற்ற இரு குறுகிய கட்டுரைகளுடன், சேர்விசைப் பற்றிய விமர்சனம் ஒரு தொகுப்பாக லியோன் ட்ரொஸ்கியை பாதுகார் -In Defense of Leon Trotsky- என்ற நூலாக பதிப்பிக்கப்பட்டது. தாட்சர், ஸ்வைன் மற்றும் சேர்விஸ் ஆகியோரின் நூல்களைப் பற்றிய என் மறுப்புக்களை இங்கு விரிவாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய முயற்சியின் தரமும், நேர்மையும் வரலாற்றாளர் பெயட்ரன்ட் படனோட்- Bertrand Patenaude- எழுதிய விரிவான ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டன என்று நான் நம்புகிறேன். அவருடைய கட்டுரை கடந்த ஜூன் மாதம் American Historical Review *அமெரிக்க வரலாற்று மறுஆய்வு- என்பதில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் படனோட் ஐயத்திற்கு இடமின்றி சேர்விஸின் நூலை இழிந்த படைப்பு என நான் விவரித்ததற்கு ஒப்புதல் கொடுத்தார். மேலும், 14 புகழ்பெற்ற ஐரோப்பிய வரலாற்றாளர்கள் சேர்விஸின் நூலை நான் அம்பலப்படுத்தியது குறித்து ஒப்புதல் அளித்து எழுதிய, மற்றும் ஜேர்மனிய மொழியில் அது வெளியிடப்படுவதற்கு எதிர்ப்புக்காட்டி Suhrkamp வெளியீட்டாளர்களுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை நான் வரவேற்கிறேன். 14 தலைசிறந்த வரலாற்றாளர்கள் சேர்விஸின் நூல் வெளியிடுவதை எதிர்த்து எதிர்ப்பும் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளனர் என்பதே சேர்விஸின் படைப்பில் உள்ள முற்றிலும் இழிந்த தன்மைக்கு உறுதியான சான்று ஆகும்.

14 சிறந்த வரலாற்றாளர்களின் பகிரங்கமான கடிதம் ரொபேர்ட் சேர்விஸை இழிவுபடுத்தியதின் விளைவாக, எந்த தீவிர வரலாற்றாளரும் அவர் சார்பில் குறுக்கிடமாட்டார் என்று நாம் நினைக்கக்கூடும். சொல்லப்போனால், சேர்விஸின் வாழ்க்கை நூலுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு அது அடிப்படையான அறிவார்ந்த தன்மைப் படைப்பின் தரங்களை மீறியது என்பதுதான். பல உண்மைளைப் பற்றிய தவறுகள் இருந்தன, ஆவணங்கள் ஆதாரம் ஏதும் இல்லாமல் சேர்விஸ் வாதங்களை முன்வைத்தார். ட்ரொட்ஸ்கி கொண்டிராத கருத்துக்கள், நிலைப்பாடுகளை அவர்மீது சேர்விஸ் சுமத்தினார்: அதிலும் உண்மையில் ட்ரொட்ஸ்கி எழுதியதற்கு முற்றிலும் மாறான வகையில் அவர் கருத்து என்று கூறினார். மேலும் சேர்விஸ் ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணி குறித்த என்னுடைய ஆட்சேபனைகளை இவ்வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொண்டனர். இவை அவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் யூத எதிர்ப்புக் கருத்துக்கள் மற்றும் அவதூறுகளை நியாயப்படுத்தும் போக்கில் உள்ளன என்று நான் கூறியதை ஏற்றனர்.

வரலாற்றாளர்களுக்குப் பதில் ஏதும் கொடுக்காமல் Suhrkamp வெளியீட்டாளர்கள் சேர்விஸின் நூலை வெளியிடுவதைத் தாமதப்படுத்தியது. அதே நேரத்தில் ஒரு வெளிப்பிரிவு வல்லுனரைநூல் பற்றி ஆராயுமாறும் மிக அப்பட்டமான உண்மைத் தவறுகளைத் திருத்துமாறும் கோரியது. இவ்வழியில் Suhrkamp ஒரு புத்தக வெளியீட்டுரீதியான பேரழிவுத் தன்மையை கிட்டத்தட்ட இலக்கியவகையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு ஒப்பானமுறையில் குறைக்க முற்பட்டது. ஆனால் இது எதிர்கொள்ளும் பிரச்சினையில் உள்ள இணங்காத தன்மை சேர்விஸின் நூலை அறிமுகப்படுத்தும் Suhrkamp வலைத் தளத்தில் இருக்கும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1879ல் தெற்கு உக்ரைனில் லெவ் டேவிடோவிச் புரோன்ஸ்ரைன் என்னும் பெயரில் பிறந்த நபர்என்று Suhrkamp இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு கூட சேர்விஸின் கூற்றான ட்ரொட்ஸ்கியின் உண்மையான முதல் பெயர் லெய்பா மற்றும் அவர் இந்த யூதப் பெயரால் இளமைப் பருவம் முழுவதும் அறியப்பட்டிருந்தார் என்பதை முரண்படுத்துகிறது. தன்னுடைய வாழ்க்கை நூலின் ஆங்கிலப் பதிப்பின் முதல் 40 பக்கங்கள் சேர்விஸ் இளம் ட்ரொட்ஸ்கியை லெய்பாஎன்றுதான் குறிப்பிடுகிறார். அதன்பின் 18 வயதான பிறகுதான் இளம் புரோன்ஸ்ரைன் லெவா என்ற பெயரை எடுத்துக் கொள்ள முடிவேடுத்தார் என்று சேர்விஸ் கூறுகிறார். இதனால் தன்னுடைய புரட்சிகர இயக்கத்தில் உள்ள தோழர்கள் போல் ரஷ்யரை போல் காட்டும் பெயரை எடுத்தார் என்று கூறுகிறார். இந்த ட்ரொட்ஸ்கியின் முதல் பெயர் மாற்றத்தில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்த சேர்விஸ் பின்வருமாறு எழுதுகிறார்: மொழி அடிப்படையில் இது யூதப் பெயரான லெய்பாவுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை....

நான் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளபடி, இந்த முழுக்கதையும் சேர்விஸின் கண்டுபிடிப்புத்தான். ட்ரொட்ஸ்கியின் முதல் பெயர் லெவ், இப்பெயரில்தான் (லயோவா என்பதின் சுருக்கமான பெயர்) அவர் மிகக் குழந்தைப் பிராயத்தில் இருந்து அறியப்பட்டிருந்தார். ஆனால் இளம் ட்ரொட்ஸ்கிக்கு லெய்பா என்னும் தவறான பெயரைக் கொடுத்திருப்பது சேர்விஸ் எழுதிய வாழ்க்கை நூலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது அவருடைய யூத எதிர்ப்பாளர்கள் அடிக்கடிப் பயன்படுத்துவதுபோல் ட்ரொட்ஸ்கியின் யூத அடையாளத்தைப் பெரிதுபடுத்திக்காட்ட உதவுகிறது. இரண்டாவதாக, சேர்விஸின் கூற்றான அவருடைய உண்மையான முதல் பெயரை ட்ரொட்ஸ்கி மறைக்க முற்பட்டார் என்பது பலமுறையும், அவர் தன் யூதப் பின்னணியைக் குறைத்துக்காட்டும் முயற்சிகளுக்கு உதாரணம் என்று மட்டும் இல்லாமல், ட்ரொட்ஸ்கியின் சுயசரிதையில் தான் கண்டுபிடித்துள்ள முக்கிய பிழைகளில் ஒன்று என்றும் கூறுகிறார்.

ஆனால் இளம் ட்ரொட்ஸ்கிக்கு லெய்பா என்னும் பெயரைக்கொடுத்த சேர்விஸின் தவறு Suhrkamp நியமித்த வல்லுனரால் திருத்தப்பட்டது என்று தோன்றுகிறது. இவ்வகையில், நாம் ஒரு விசித்திரமான இலக்கியப் புதிரைக் கொண்டுள்ளாம். சேர்விஸின் வாழ்க்கை நூலின் பொருளாக உள்ளவர் ஆங்கிலப் பதிப்பில் ஒரு பெயரையும் ஜேர்மனியப் பதிப்பில் முற்றிலும் வேறு ஒரு பெயரை கொண்டுள்ளார்!

Suhrkamp வலைத் தளம் சேர்விஸின் வாழ்க்கை நூல் ஜூலையில் வெளியிடப்படும் என்று கூறுகிறது. ஆனால் 14 வரலாற்றாளர்களின் பகிரங்கக் கடிதம் மற்றும் புத்தக வெளியீட்டில் நீண்ட தாமதம் வலதுசாரி வட்டங்களில், மற்றும் மார்க்சிச எதிர்ப்பு வரலாற்றாளர்களிடமும் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. தீவிர வலதுசாரிச் செய்தித்தாளான Junge Freiheit சேர்விஸிற்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது; ட்ரொட்ஸ்கி சித்தரிக்கப்படுவதில் எந்தவிதப் பரிவுணர்வும் தேவையில்லை என்று உள்ள அவருடைய புத்தகத்தைப் பாராட்டியுள்ளது. லண்டனில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் சேர்விஸ் கூறிய கருத்தான பனிக்கோடாரி அவரைக்கொலை செய்யும் வேலையைச் சரிவரச் செய்யவில்லை என்றால், நான் அதைச் செய்துவிட்டேன்என்பதை ஒரு ஈர்ப்புடைய கருத்து என்று பாராட்டியுள்ளது.

Junge Freiheit தனது பக்கங்களில் சேர்விஸை ஆதரித்திருப்பது குறித்து வியப்பு ஏதும் இல்லை. இன்னும் கூடுதலான ஆர்வத்தை கொடுப்பது Neue Zürcher Zeitungல் வந்துள்ள சேர்விஸிற்கு ஆதரவான இரு கட்டுரைகள்தாம். அவற்றை எழுதியவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் எம் ஷ்மித் ஆவார். இவர் வரலாறு, தத்துவம், இலக்கியம், பண்பாடு குறித்து பரந்த முறையில் எழுதியுள்ளதுடன் செயின்ட் காலென் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளர். பல்கலைக்கழக வலைத் தளத்தில் வந்துள்ள அவருடைய வாழ்க்கைக் குறிப்பு 600 கட்டுரைகளுக்கும் மேலாக அவர் எழுதியுள்ளதை குறிக்கிறதுஇது ஒரு வியத்தகு எண்ணிக்கைதான். அவருடைய கட்டுரைகள் அடிக்கடி Neue Zürcher Zeitung இல் வெளிவருகின்றன.

முதல் கட்டுரை டிசம்பர் 28, 2011ல் Neue Zürcher Zeitung இல் வெளியிடப்பட்டது. எதிர்பார்க்கும் வகையில்தான் அதன் தலைப்பு ஸ்ராலினுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என இருந்தது. 68 தலைமுறையினால் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடு எனக் கருதப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் கட்டுரை தொடங்குகிறது:

லெனினுடைய மரணத்திற்குப் பின் ஸ்ராலினுக்குப் பதிலாக ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தின் தலைமையை எடுத்துக் கொண்டிருந்தார் என்றால் வாதம் செல்லும் வகை அப்படித்தான் உள்ளது சமூகத்தில் சோசலிச வடிவமைப்பிற்கான பரிசோதனை என்பது ஒரு மனிதாபிமானமற்ற சர்வாதிகாரமாக மாறியிருக்காது.

பல மேற்கத்தைய சோசலிஸ்ட்டுக்கள் ட்ரொட்ஸ்கியின் அறிவுச்சிறப்பின் மேன்மையினால் கண்கள் மறைக்கப்பட்டு, சோசலிசம் என்பதை ஒரு மனிதமுகம் கொண்ட உயர் சிந்தனை என்பதால் ட்ரொட்ஸ்கி உந்தப்பட்டிருந்தார் என்பதால் ஸ்ராலின் மீதான அவரின் விரோதப் போக்குடன் விரைவாக இணைந்துகொள்கின்றனர்.

சேர்விஸின் அணுகுமுறையை தொடர்ந்து, ஷ்மித் இத்தகைய ட்ரொட்ஸ்கி பற்றிய சாதகமாக கருத்தை மறுக்கும் முயற்சியில் அவரை ஓர் அரக்கனாக, மோசமான செயல்களைச் செய்யும் திறனுடையவராக பின்வருமாறு சித்தரிக்கிறார். அவர் எழுதுகின்றார்:

போர் ஆணையாளர் என்னும் பதவியின் ஆரம்பத்தில் இருந்தே, ட்ரொட்ஸ்கி தன்னுடைய முழு அரக்கத்தனத்தையும் நிரூபித்துள்ளார். அவர் ஜாரின் அதிகாரிகள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய குடும்பங்களை பணையக் கைதிகளாக எடுத்துக் கொண்டார்.

இராணுவத் தளபதி என்னும் முறையில் ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் குறித்த இத்தகைய சீற்றம் நிறைந்த கண்டனங்களைப் படிக்கும்போது, வரலாற்று அரங்கில் ட்ரொட்ஸ்கி தோன்றுவதற்கு முன் உள்நாட்டுப் போர்கள் அகிம்சைத் தன்மை நிறைந்து குருதியற்ற விவகாரங்களாக இருந்தன, ஒவ்வொரு எதிர்த்தரப்பினரும் மற்றவர்களை பிரியமுடனும் குற்றம்கூற இயலாத கருணையுடனும் நடத்தின என்றுதான் கிட்டத்தட்ட நம்பமுடியும். ஆனாலும், நாம் அனைவரும் அறிந்துள்ளபடி, வரலாறு முற்றிலும் மாறுபட்ட கதையைத்தான் கூறுகிறது. ஆனால் ஷ்மித், ட்ரொட்ஸ்கியின் செயல்களை பரந்த வரலாற்றுப் பின்னணியில் வைத்து அவருடைய நடவடிக்கைகளை விளக்குதல், நியாயப்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கத்தான் முற்பட்டுள்ளார்.

1918க்கும் 1921க்கும் இடையே சோவியத் அரசை எதிர்ப்புரட்சிச் சக்திகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி காப்பாற்றுகையில், ஒரு போல்ஷிவிக் தோல்வி ஏற்பட்டால் எத்தகைய விளைவுகள் வரக்கூடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மே 1871ல் பாரிஸ் கம்யூன் அடக்கப்பட்டதைத் தொடர்ந்த நிகழ்வுகள் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் ஒரு பகுதியாக இருந்த ஒரு புரட்சிவாதிகளின் தலைமுறையை சேர்ந்தவர் அவர். முதலாளித்துவ ஆட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த வெற்றிபெற்ற தேசியப் பாதுகாப்புப் படை, கம்யூன் தோற்றுவிட்டதை தொடர்ந்த வாரத்தில் 30,000 முதல் 50,000 தொழிலாளர்கள் வரை படுகொலை செய்தது. முதலாளித்துவ அரசின் தலைவரான அடோல்ப் தியேர்ஸ் நிலைமையைப் பற்றிக்கூறினார்: தரை முழுவதும் அவர்களது சடலங்கள் பரவிக்கிடந்தன. இந்தக் கொடூரக்காட்சி ஒரு பாடமாக இருக்கட்டும்.

ஆனால் ட்ரொட்ஸ்கிக்கு பாரிஸ் கம்யூன் உதாரணம் ஒன்றும் போல்ஷிவிக் ஆட்சி மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்ப்புரட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் என்பது பற்றி அறிந்துகொள்ளத் தேவையில்லை. 1905 புரட்சி தோல்வி அடைந்தபின் நடந்த குருதிக் களரி பற்றி போல்ஷிவிக்குகளும், தொழிலாளர்களும், விவசாயிகளும் நன்கு நினைவு கொண்டிருந்தனர். அப்பொழுது ஜாரிச ஆட்சி புரட்சிக்கு ஆதரவைக் கொடுத்திருந்த மக்கள் நிறைந்த சிறுநகர்கள் மற்றும் கிராமங்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் இராணுவத்தை அனுப்பி வைத்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்கள் வசித்துவந்த சிறு நகரங்களிலும் கிராமங்களிலும்  இரக்கமின்றி ஜாரின் படைகளால் கொல்லப்பட்டனர்.

சேர்விஸைப் போலவே, ஷ்மித்தும் மற்றொரு முக்கியமானதையும் கவனிக்கவில்லை: அக்டோபர் புரட்சி, முதலாம் உலகப் போர் பின்னணியில் நடைபெற்றது. அதில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் அர்த்தமற்ற இரத்தக்குளியலில் இறந்து விட்டனர். இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் உலகப்போரின் பல முன்னணிகளிலும் இறந்தனர். அம்மோதல் ஒரு வரலாற்றாளரின் சொற்றடொரில், முப்பதாண்டுப் போருக்குப் பின் ஐரோப்பாவில் மிகப் பரந்த கலாச்சார பேரழிவு மற்றும் படுகொலைகளை நிகழ்த்தியது.ரஷ்யப் புரட்சி தோற்றுவித்த வன்முறையும் உலகப் போரில் ரஷ்யா பங்கு பெற்றதால் தோற்றுவிக்கப்பட்டிருந்த கொடூரமான சமூக, பொருளாதாரக் நிலைமைகளினால் பெரிதும் நிர்ணயிக்கப்பட்டது. தன்னுடைய அழிவின் இயக்கவியல்: முதலாம் உலகப்போரின் கலாச்சாரமும் பாரிய கொலைகளும் -The Dynamic of Destruction: Culture and Mass Killing in the First World War- என்னும் நூலில் அலன் கிரேமர் (மேலே மேற்கோளிடப்பட்டுள்ள சொற்றடரை எழுதியவர்) எழுதினார்:

அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இயல்பு ஆழ்ந்த முறையில் ரஷ்யா போரில் கொண்ட அனுபவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது, குறைமதிப்பான கருத்தாகும். இது ஏழு ஆண்டுகள் நடைபெற்ற பேரழிவு தந்த போர் ஆகும்; அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டுப் போர் ஆகியவை இருந்தன. இவைதான் அடுத்துவரவிருந்த தசாப்தங்களில் போல்ஷிவிக் ஆட்சியின் முழு அரசியல் கலாச்சாரத்தையும் வடிவமைத்தன.

ட்ரொட்ஸ்கியை அறநெறி வகையிலும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஷ்மித், ட்ரொட்ஸ்கியின் அரக்கத்தனம் என்று கூறப்படுவதற்கு மேலும் உதாரணங்களைக் கொடுக்கிறார். அவர் எழுதுவதாவது:

அவருடைய செம்படைப் பிரிவு 1918ல் காசான் முன்னணியில் எதிரிகளிடம் இருந்து பின்வாங்கியபோது, ட்ரொட்ஸ்கி, தளபதி மற்றும் 40 படையினரை சுட்டுத் தள்ளப்பட வேண்டும், அவர்களுடைய சடலங்கள் வொல்கா நதியில் எறியப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட செம்படையின் தலைவிதி ஊசலாடும் ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில், துப்பாக்கிச் சூடுகளுக்கு அஞ்சி ஓடிய சிப்பாய்களை சுடுமாறு உத்தரவிட்டார் என்பது உண்மையே. இந்தத் தீவிர நடவடிக்கையை ட்ரொட்ஸ்கி எடுத்ததற்குக் காரணம் ஒழுங்குமுறையை  நிலைநிறுத்துவதற்குத்தான்; இந்நிகழ்வு பற்றித் தன் சுயசரிதையில் அவர் எழுதியுள்ளார். போர்ப்பின்னணியில்தான் ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட முடியும். ஷ்மித்திற்கு நன்கு தெரிந்தபடி, ஜேர்மனி, பிரெஞ்சு, பிரிட்டஷ் இராணுவங்களில் முதலாம் உலகப் போரின்போது தப்பி ஓட முயன்ற படையினருக்கு மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி மரண தண்டனையை பயன்படுத்தியது குறித்துத் தான் கண்டித்ததின் தாக்கம் குறித்து அவர் சந்தேகப்பட்டதால், ட்ரொட்ஸ்கி கொலைசெய்யப்பட்ட தப்பி ஓட முயன்ற சிப்பாய்களின் சடலங்கள் வொல்கா நதியில் எறியப்பட வேண்டும் என உத்தரவிட்டதாக ஷ்மித் ஒரு விந்தையான, உளைச்சல் தரும் விவரத்தைச் சேர்த்துக் கொள்கிறார்.

இந்தத் தகவல் வாசிப்பவருடைய உள்ளத்தில் ஒரு பயங்கரமான தோற்றத்தை ஏற்படுத்தும். ட்ரொட்ஸ்கி தப்பி ஓடியவர்களைச் சுட்டார் என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு முறையான கல்லறை அடக்கத்தையும் மறுத்துவிட்டார். அவர்களுடைய சடலங்களை ஓர் ஆற்றில் வீசி எறிந்துவிட்டார்! இந்தக் கொடூர விவரம் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இக்குற்றச்சாட்டு குறித்து எத்தகைய ஆவணச் சான்றை அவர் கொண்டுள்ளார்? இந்த மனிதாபிமானமற்ற செயல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து எங்கு அவர் கண்டுபிடித்தார் என்பதை பேராசிரியர் ஷ்மித் எமக்கு கூறவேண்டும்.

ட்ரொட்ஸ்கியின் கொடூரமான தன்மை எனக் கூறப்படுவது பற்றிய மற்ற நன்கறிந்த குற்றச் சாட்டுக்களையும் ஷ்மித் மேற்கோளிடுகிறார்: அதாவது 1921ல் குரோன்ஸ்ரட் எழுச்சி போன்றவற்றை. மீண்டும் இந்நிகழ்வுகள் அவை நடைபெற்ற அரசியல், வரலாற்றுப் பின்னணியை பற்றிய தீவிர பகுப்பாய்வு ஒருபுறம் இருக்க, அது நிகழ்ந்த உள்ளடக்கத்தைப்பற்றிக்கூட கூறாமல் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய முன்வைப்புக்கள் பற்றியோ அவற்றில் ட்ரொட்ஸ்கி பங்கு பற்றியோ அதிகம் கூறுவதில்லை. அவற்றின் ஒரே நோக்கம் ஷ்மித்தின் சொந்த அரசியல் உந்துதலான கம்யூனிச-விரோதப் பிரச்சாரத்தை முன்னேற்றுவிப்பதுதான். தன்னுடைய முதல் கட்டுரையில் ஷ்மித் மீண்டும் கூறும் புகார்:

ட்ரொட்ஸ்கியின் சர்வாதிகாரப் போக்குகளைப் பற்றி இப்பொழுது சந்தேகங்கள் ஏதும் இல்லை என்றாலும், இன்னும் கம்யூனிசத்தை ஆர்வத்துடன் நினைத்துப் பார்ப்பவர்கள்உள்ளனர்; அவர்கள் ஸ்ராலின் மற்றும் உலக முதலாளித்துவம் இணைந்து ஒரு சதித்திட்டம் மூலம் தியாகியாக்கப்பட்டுவிட்டார் என்று நினைக்கின்றனர். அப்படிப்பட்ட கூட்டு பற்றிய இத்தகைய அபத்தமான கருதுகோளே எந்த அளவிற்குப் பொது அறிவில் இருந்து இந்த எழுத்தாளர்கள் விலகிச்சென்றுவிட்டனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இத்தகைய அபத்தமான முன்கருத்துகூட ட்ரொட்ஸ்கியும் அவருடைய ஆதரவாளர்களும் ஒரே நேரத்தில் ஸ்ராலினிச, பாசிச, முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்களால் துன்பறுத்தப்பட்டனர் என்ற உண்மையினால் நிராகரிக்கப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபின், ட்ரொட்ஸ்கி பிரித்தானிய மற்றும் ஜேர்மனிய அரசாங்கங்களால் தஞ்சம் மறுக்கப்பட்டார். பின்னர் அவர் பிரான்சில் அரசியல் செயற்பாடுகளில் கடுமையான தடைகளை ஏற்க வேண்டும் என்பது மட்டுமின்றி நாட்டிலும் செல்வதற்குப் பல தடைகள் என்ற நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார். 1936ல், நோர்வே நாட்டு அரசாங்கம், நான் ஏற்கனவே கூறியதுபோல், அவரை மாஸ்கோவின் போலி விசாரணைகளை பகிரங்கமாக அம்பலப்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, அடைத்துத்தான் வைத்திருந்தது. மாஸ்கோ விசாரணைகளுக்கு ஐரோப்பாவில் இருந்த முதலாளித்துவ தாராளவாதிகள் ஆதரவு மற்றும் அமெரிக்கா கொடுத்த ஆதரவு என்பது அவர்கள் அரசியல்ரீதியாக ஸ்ராலினிசக் கட்சிகளுடன் கொண்டிருந்த உடன்பாட்டை ஒட்டி வந்தது ஆகும்; அதுதான் 1930களின் மக்கள் முன்னணி இயக்கத்தின் தளமாக இருந்தது. ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஒரு ஸ்ராலினிச-ஏகாதிபத்தியக் கூட்டு என்று எழுதுபவர்களை ஏளனம் செய்கையில், ஷ்மித் 1930களின் அரசியல் இயக்கவியல் குறித்துத் தன் அறியாமையைத்தான் புலப்படுத்துகிறார்.

Neue Zürcher Zeitung  இல் பெப்ருவரி 21, 2012 ல் வெளிவந்த தன் இரண்டாம் கட்டுரையில், ஷ்மித் சேர்விஸின் நூலைப்பற்றிய என்னுடைய விமர்சனம் பேராசிரியர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பெயட்ரன்ட் படனோட்டால் ஆதாரமளிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார். மேலும் Helmut Dahmer, Hermann Weber, Bernhard Bayerlein, Heiko Haumann, Mario Kessler, Oskar Negt, Oliver Rathkolb and Peter Steinbach ஆகியோர் பெயர்களைக்கூறி பதினான்கு வரலாற்றாளர்களின் பகிரங்கக் கடிதம் பற்றியும் கவனத்தில் எடுத்துள்ளார். இந்த வரலாற்றாளர்கள் அனைவரும் பாரிய மதிப்பைப் பெற்றுள்ள அறிஞர்கள் என்பதை ஷ்மித் உறுதியாக அறிவார். ஆனால் சேர்விஸ் எழுதிய வாழ்க்கை நூல் வெளியிடப்படக்கூடாது என்று எதிர்த்துக் கையெழுத்திட்டவர்களில் பேராசிரியர் ஹீகோ ஹௌமானின் பெயரைக் கண்டது அவரை அமைதியற்றதாக்கி இருக்கவேண்டும். பேராசிரியர் ஹௌமான் -Heiko Haumann- 1998-99 ல் ஷ்மித்திற்கு அவருடைய habilitationsschrift [பேராசிரியர் பதவி தகுதிக்கான டாக்டர் பட்டத்திற்கும் அடுத்த ஆய்வுக்கட்டுரைக்கு] தயாரிப்பில் உதவினார். இப்பணிக்காக ஷ்மித் தன்னுடைய நன்றியறிதலைப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது ஷ்மித் தன்னுடைய சொந்த ஆசான்களில் ஒருவருடைய தீர்ப்பைச் சவால் விடும் சங்கட நிலையில் தன்னைக் காண்கிறார்.

சேர்விஸின் புத்தகத்தைக் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு ஷ்மித் ஒரு வினோதமான மூலோபாயத்தைக் கையாள்கிறார். சில தவறுகள் இருக்கின்றன என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார், ஆனால் இந்தப் பிழைகள் அதிக முக்கியத்துவம் அற்றவை என்று உதறித் தள்ளுகிறார். பெரும் கபடமாக சிறிய தவறுகள், தவறான பிறந்த தேதிகள்....சரியில்லாத வரலாற்று நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள்... நம்பகத்தன்மையற்ற அடிக்குறிப்புக்கள் .... குடும்ப உறவுகளில் குழப்பங்கள்.... குறைக்கப்பட்டுவிட்ட  மேற்கோள்கள் .... ட்ரொட்ஸ்கியை பாதகமாக காட்டும் நினைவுக் குறிப்புக்களுக்கு உகந்த முறையில் விருப்பம் காட்டுதல்... போன்றவை இத்தவறுகளில் அடங்கும் என்று குறிப்பிடுகிறார். சேர்விஸ் அறிவுசான்ற தன்மையின் அடிப்படைத் தரங்களில் இருந்து வெளியேறி நிற்கும் பட்டியலை நாம் வியப்புடன்தான் படிக்க வேண்டியிருக்கிறது. இத்தவறுகளில் ஏதேனும் ஒன்றுகூட ஒரு தொழில்நேர்த்தி உடைய வரலாற்றாசிரியரின் நூலில் இடம் பெறக் கூடாது. இத்தகை பிழைகளையும் அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு வரலாற்று நூலில் காண்பது என்பது முக்கிய அறிவுத்துறை குறித்த பெரும் ஊழல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இத்தகைய படைப்பைத் தோற்றுவிக்கும் பதிப்பகம் தன்னுடைய தொழில்நேர்த்தி மற்றும் அறிவார்ந்த கருத்துக்களின் நேர்மையை நிலைநிறுத்தும் அறநெறிப் பணியை மீறுகிறது.

உயர்கல்விக்கூட நெறிகளைப் பின்பற்றுவதில் சேர்விஸ் தோற்றுள்ளதின் முக்கியத்துவத்தைப் பற்றி பேராசிரியர் ஷ்மித்திற்கு தெரியாமல் போகாது. அவர் நிறைய எழுதுபவர், அவருடைய வெளியிடப்பட்டுள்ள உயர்கல்விப் படைப்பில் இருந்து ஒரு பகுதியைச் சுருக்கமாக நான் பார்த்தவரையில், அவர் தொழில் நேர்த்தித் தரங்களைக் கடைப்பிடிக்க முற்படுகிறார் என்று கூறமுடியும். அப்படியும்கூட அவர் அறிவார்ந்த படைப்பின் விதிகள் எவற்றையும் பொருட்படுத்தத் தேவையின்றி சேர்விஸ் அனுமதிக்கப்படலாம் என்று நம்புகிறார் போலும். சேர்விஸ் எழுதியுள்ள வாழ்க்கை நூலில் ஏற்பட்டுள்ள உண்மை பற்றிய தவறுகள்அவை ஏராளமாக இருந்ததால்தான் Sukrkamp ஒரு சுயாதீன வல்லுனரை முழுப் பொருளுரையையும் பரிசீலிப்பதற்கு நியமிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது பெரும் முக்கியத்துவம் அற்ற பிரச்சினை அல்ல என்று தன் வாசகர்களை ஷ்மித் நம்ப வைக்கிறார். ஆம், ஏதோ ஓரிடத்தில் உண்மை பற்றிய தவறு மிகவும் தளராத வரலாற்றாசிரியரின் நூலில் கூடக் காணப்படலாம். ஆனால் ஏராளமான உண்மைத் தவறுகள் ஒரே நூலில் என்பது முற்றிலும் வேறு விடயம். இத்தகைய தவறுகள் இருப்பது படைப்பாசிரியர் தான் எழுதப்போவது பற்றி முற்றிலும் அறிந்தவர் அல்ல, அவர் நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் விளக்கங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்பதைத்தான் காட்டுகின்றன.

ஆனால் சேர்விஸுடைய நூலில் இத்தவறுகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும்கூட, ஷ்மித் அதன் வெளியீடு தடையின்றி நடத்தப்படலாம் என்கிறார். அவர் எழுதுவதாவது.

ஜேர்மனிய மொழிபெயர்ப்பு ஜூலை 2012 ஆரம்பத்தில் திருத்தம் செய்யப்பட்ட  பதிப்பாக வெளியிடப்பட உள்ளது. ஆனால் பொருளுரையின் கட்டமைப்பில் மிக அதிக மாற்றங்கள் இராது. பதிப்பகத்தின் முடிவு சரியானதுதான்: நோர்த்தோ அல்லது படனோட்டோ ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர வெறித்தன்மை, மற்றும் வன்முறையை அவர் பயன்படுத்தத் தயாராக இருந்தார் என்னும் சேர்விஸின் அடிப்படை விமர்சனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வாதங்களை முன்வைக்க முடியவில்லை.

சேர்விஸ் பாதுகாக்கும் முழு அடித்தளமும் ஷ்மித்தின் சிந்தனைப் போக்கு மற்றும் அரசியல் ஈடுபாடுகள்தான் என்பதை மேற்கூறிய பத்தி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பிழைகள், திரித்தல்கள், உயர்கல்விக்கூடத் தரங்கள் மீறல்கள் இருந்தாலும், சேர்விஸின் நூல் ஷ்மித்திற்கு முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரே அளவுகோலைத் திருப்தி செய்கிறது. அதாவது இந்நூல் ட்ரொட்ஸ்கி மற்றும் சோசலிசப் புரட்சிக்கு எதிராக உள்ளது என்பதே அது. வேறு எதையும் பொருட்படுத்த வேண்டிய தேவை இல்லை.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவருடைய மரபியம் கடுமையான பிரச்சினைக்குரிய பொருளாக இன்னும் உள்ளது. நடுநிலை உணர்வுடைய வரலாற்று கல்வித்துறையின் உலகினுள் செல்லுவதற்கு அவர் இன்னமும் உரிமை மறுக்கப்படுகிறார். ஒரு முக்கிய தற்காலத்திற்குரிய மனிதராகத்தான் ட்ரொட்ஸ்கி இப்பொழுதும் இருக்கிறார். வரலாற்றில் அவர் வாழ்கிறார்20ம் நூற்றாண்டின் மிகப் பெரிய புரட்சியின் தலைவர் என்று மட்டும் இல்லாமல், வருங்காலப் புரட்சிகளுக்கு அரசியல் மற்றும் அறிவார்ந்த ரீதியாக பெரும் ஊக்கம் அளிப்பவராகவும் உள்ளார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னரும்கூட, முதலாளித்துவம் நெருக்கடிச் சகதியில் சிக்கியுள்ளது. பிரான்ஸிஸ் புகுயாமா உறுதிமொழி அளித்திருந்த வரலாற்றின் முடிவு என்பது இன்னும் சாதிக்கப்படவில்லை. நாம் காண்பது மீண்டும் வரலாறு திரும்பி வருவதைத்தான்பொருளாதார நெருக்கடி, ஜனநாயக உரிமைகளின் மீது இடையறாத் தாக்குதல், மற்றும் ஏகாதிபத்தியப் போர்களின் வெடிப்பு என. இந்நிலைமையில், தொழிலாள வர்க்கம் இன்றைய உண்மையை அறிந்து கொள்வதற்கு வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாற்றுத் திரித்தல்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியை பாதுகாத்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் படிப்பினைகளுக்கு இன்றியமையாத கூறுபாடு ஆகும்; மேலும் ஒரு புதிய புரட்சிகரப் போராட்ட சகாப்தத்தின் அரசியல் கோரிக்கைகளுக்கான தயாரிப்பும் ஆகும்.