சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

On the eve of the French presidential elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முன்னைய பொழுதில்

Alex Lantier
5 May 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் நடப்பு ஜனாதிபதியான வலது-சாரி மக்கள் பெரும்பான்மை ஒன்றியத்தைச்(UMP)சேர்ந்த நிக்கோலோ சார்க்கோசிக்கும் சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டுக்கும் இடையில் நாளை நடைபெறவிருக்கும் தீர்மானகரமான தேர்தல் சுற்று பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு மேடை அமைத்திருக்கிறது.

சார்க்கோசியின் ஐந்தாண்டு கால ஆட்சி அவரை தீவிர வெகுஜனக் கோபத்திற்கும் ஏளனத்திற்குமான பொருளாக மாற்றியிருக்கிறது. அவரது சமூகச் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் அவருக்கு அவப்பெயரை கொண்டுவந்திருந்தபோதிலும், வெளிநாட்டுப் போர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்-விரோத மற்றும் சட்டம்-ஒழுங்கு அரசியலை அடிப்படையாகக் கொண்ட பேரினவாதத்திற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனக்கான ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டிருக்கின்றன

சார்க்கோசியின் கொள்கைகளுக்கு இத்தகைய வெகுஜன எதிர்ப்பு இருந்தபோதிலும் கூட, இத்தேர்தலில் யார் வென்றாலும், சார்க்கோசியின் அதே கொள்கைகள் தான் தொடரவிருக்கின்றன. ஏனென்றால் ஹாலண்ட் எந்த வகையிலும் ஒரு மாற்றினை முன்வைக்கவில்லை.

பிரெஞ்சு நிதி மூலத்தின் ஒரு சிடுமூஞ்சித்தனமான பிரதிநிதியாக இருக்கும் ஹாலண்ட், சார்க்கோசியினது கொள்கைகளில் இருந்து பிரித்தறிய முடியாத கொள்கைகளை அளித்துக் கொண்டே, “மாற்றம் இப்போதுஎன்ற சுலோகத்தைக் கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார். பிற்போக்குத்தனமான ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்திற்கு மரியாதை அளித்து 2017 ஆம் ஆண்டிற்குள் பிரான்சின் நிதிநிலை பற்றாக்குறையை பூச்சியமாக்குவதற்கான திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார். செலவினங்களில் சுமார் 115 மில்லியன் யூரோக்கள் வெட்டப்பட இருக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும். செலவு மற்றும் செயல்திறனைச் சேமிப்பதன் மூலம் (ஊதியங்களையும் நல உதவிகளையும் வெட்டுவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வார்)பிரெஞ்சுப் பொருளாதாரத்தை ஜேர்மனியுடனான போட்டித் திறன் சமநிலைக்குக் கொண்டுவரவும் அவருக்கு இலக்கு இருக்கிறது.

பிரான்சின் இப்போதைய வெளியுறவுக் கொள்கையின் மீது தனக்கு எந்த விமர்சனங்களும் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம், லிபியா மீது சார்க்கோசி 2011 இல் நடத்திய போர் மற்றும் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான பிரான்சின் நடப்பு போர் முயற்சிகள் இவற்றை அவர் மறைமுகமாய் ஆதரித்து நிற்கிறார். சார்க்கோசியின், புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான கொள்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார், பர்தா தடையை ஆதரிப்பதோடு ஹலால் மாமிசத்தைக் கண்டனம் செய்கிறார்.

எப்படியிருந்தபோதிலும், ஜோன் லூக் மெலன்சோனின் இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), மற்றும் இவற்றையொத்த சக்திகள் என்னும் பிரான்சின் குட்டி முதலாளித்துவஇடதின்ஆதரவு ஹாலண்டுக்கு இருக்கிறது.

குடிமக்கட் புரட்சிபற்றிய மெலன்சோனின் வார்த்தை ஜாலம் (அதே பாதைக்கு NPAவும் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது)எல்லாம் இருந்தாலும் கூட, குட்டி முதலாளித்துவக் கட்சிகள் PS இன் பின்னால் அணிவகுத்திருக்கின்றன. ஹாலண்டின் கொள்கைகள் சார்க்கோசியினது கொள்கைகள் அளவுக்கு வலதுசாரித் தன்மையுடையதாக இருக்கும் என்று முழுமையாய் நன்கறிந்தும் அவை எல்லாம் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஹாலண்டுக்கு எதிரான தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களை தாங்கள் ஆதரிப்போம் என்பதாக அவர்கள் கூறித் தப்பித்துக் கொள்ள முனைவதெல்லாம் சிடுமூஞ்சித்தனமானதாகவும் அரசியல் வெறுமையுற்றதாகவும் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் ஹாலண்டுடன் ஊதிய மற்றும் சமூகநல உதவிகளை வெட்டுவது பற்றி பேச்சுநடத்த தான் ஆயத்தமாக இருப்பதை தொழிற்சங்க அதிகாரத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் ஜனாதிபதிக்குநெருக்குதலளிக்கதொழிற்சங்கங்களையும் ஹாலண்டின் பிற்போக்குத்தனமான திட்டநிரலை ஆதரிக்கும் கட்சிகளையும் நம்பியிருப்பது அவரது கொள்கைகளுக்காய் எழுகின்ற தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு முட்டுக்கட்டையாக மட்டுமே அமையும். இதனால் வரவிருக்கும் தாக்குதல்களுக்கு தொழிலாளர்கள் தயாரிப்பற்ற நிலையில் இருப்பதே நிகழும்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இத்தகைய கொள்கைகளின் பின்விளைவுகளைக் கணிப்பதென்பது சிரமமானதல்ல. சமூக எதிர்ப்பை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரே அரசியல் புள்ளி நவ பாசிச தேசிய முன்னணியின் (FN)தலைவரான மரின் லு பென் மட்டும் தான். குட்டி முதலாளித்துவஇடதுகளின் திவாலான அரசியல் கொள்கைகளின் காரணத்தால், வெகுஜன சமூக அதிருப்தியின் ஒரே பிரதிநிதியாக இவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.

அமைப்புமுறைக்கு எதிரான ஒரே வேட்பாளர்எனப் போட்டியிட்ட இவர் "UMPS”(UMP மற்றும் PS இரண்டின் ஒட்டு) ஐயும் மற்றும்தீவிர சுதந்திரச் சந்தைக்கு ஆதரவான, எல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதாய் இருக்கின்ற, மற்றும் அராஜகவாத இடதுகளையும் கண்டனம் செய்தார். குடியேற்றத்தை நிறுத்துவதற்கும் புலம் பெயர்ந்தவர்களுக்குக் கிடைக்கும்படி இருக்கின்ற சமூக நல உதவிகளை வெட்டுவதற்கும் அவர் வாக்குறுதியளித்தார். நாளை வெற்று வாக்கினை அளிப்பதற்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.   

ஹாலண்ட் வெற்றி பெற்றால், UMP உள்முகமாய் நொறுங்கச் செய்வதற்கு லு பென் உறுதி பூண்டிருக்கிறார். இதன் மூலம் இறுதியில் FN பிரான்சின் முன்னணி வலதுசாரிக் கட்சியாக எழுவதற்கான மேடையை அவர் அமைத்திருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அக்கட்சி நிறைய இடங்களை வெல்லுகின்ற ஒரு நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 22 அன்று நடந்த வாக்கெடுப்பில், பிரான்சின் 577 சட்டமன்ற மாவட்டங்களில் 23 இல் இக்கட்சி வென்றது, அத்துடன் 93 இடங்களில் இரண்டாமிடம் பிடித்தது, அத்துடன் 353 இடங்களில் இரண்டாம் சுற்று சட்டமன்றப் போட்டிகளுக்கு தாக்குப் பிடித்து நிற்க அவசியமான 12.5% சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகள் எல்லாம் ஹாலண்டை வழிமொழிவதற்கும் லு பென் "UMPS" (UMP மற்றும் PS இரண்டும்) ஐ கண்டனம் செய்வதற்கும் இடையிலான வித்தியாசம் இதைவிட கண்ணை உறுத்துவதாய் இருக்க முடியாது. ஹாலண்ட் வெற்றி பெற்று அவர் ஏற்கனவே விவரித்திருக்கக் கூடிய வகையில் தொழிலாளர்கள் மீதும் சிறு வணிகங்களின் மீதும் தாக்குதல்களை நடத்துவாரேயானால், அப்போது அவரை எதிர்ப்பதாகக் கூறும் குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகளின் கூற்றுக்கள் எல்லாம் மக்களின் பரந்த அடுக்குகள் இடையே முழுக்க மதிப்பிழந்து போய்விடும்.

சார்க்கோசியுடனான சமீபத்திய தொலைக்காட்சி விவாதத்திற்குப் பின்னர், ஹாலண்ட், தனது திட்டநிரலின் குணாம்சத்தினை நன்கு தெளிவாக்கி விட்டிருக்கிறார். கிரேக்க பிரதமர் ஜோர்ஜ் பாப்பான்ட்ரூ தனக்கு முன்னால் இருந்தவர் விட்டுச் சென்ற பரிதாபகரமான பொருளாதார நிலைமைகளுக்குப் பதில்வினை செய்யும் பொருட்டு, வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட பேரழிவான சமூக வெட்டுக்களை நடத்துவதற்கு எடுத்த முடிவை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாக அந்த விவாதத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த கருத்தை ஹாலண்ட் உதிர்த்திருந்தார். கிரீஸில் PASOK சமூக ஜனநாயகக் கட்சியினர் அல்லது ஸ்பெயினில் PSOE யினர் நடத்திய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஆதரித்த குட்டி முதலாளித்துவஇடதுகளில் இருந்து ஹாலண்டை ஆதரிக்கும் இக்கட்சிகள் எந்த வகையிலும் வேறுபட்டவையல்ல.

தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழமான தாக்குதல்களை, முஸ்லீம்-விரோத மேலாதிக்கத்தை, மற்றும் ஏகாதிபத்தியப் போரை ஆதரிக்கிற ஒரு முதலாளித்துவ வேட்பாளரின் பின்னால் இந்தக் கட்சிகள் எல்லாம்  அணிவகுத்து நின்று கொண்டு, அதே சமயத்தில் இடதுகள் என நாடகமாடுவது என்பது அதிகமான பிற்போக்குத்தனமும் ஆபத்தானதும் ஆகும். வரவிருக்கும் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முடக்குவதில் அவர்கள் வெற்றி கொள்ளுவார்களானால், அரசியல் அமைப்புமுறையில் உள்ள மிகப் பிற்போக்குவாத மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு சக்திகளுக்கு மூடுதிரை வளங்குவதற்கு இணங்கிப் போவார்கள். இவை பிரான்சில் FN ஒரு பிரதான அரசியல் சக்தியாக எழுச்சி பெறுவதற்கான முன்நிபந்தனையாகும்.   

உலகம் முழுவதிலும் போலவே பிரான்சிலான அரசியல் சூழ்நிலையும், எல்லாவற்றுக்கும் மேலாய், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையில் நிலவும் நெருக்கடியாலும், மற்றும் இடதின் பக்கத்திலான ஒரு அரசியல் வெற்றிடத்தாலும் குணாம்சம் காட்டப்படும் நிலையில் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் சமூகப் போராட்டங்கள் நிச்சயம் இருக்கும், ஆனால் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராய் ஒரு உண்மையான, புரட்சிகர மற்றும் சர்வதேசிய எதிர்ப்பை கட்டியெழுப்பாமல் போகுமானால், இந்தப் போராட்டங்கள் எல்லாம் இறுதியில் தோல்வியையே தழுவும். அத்தகையதொரு எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்படுகின்ற போராட்டமாகும்.