சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European elections and the struggle against austerity

ஐரோப்பியத் தேர்தல்களும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமும்

Alex Lantier
8 May 2012

use this version to print | Send feedback

உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தது முதலாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிதி மூலதனங்கள் இரக்கமற்று அமல்படுத்தியிருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆழமான வெகுஜன எதிர்ப்பு எழுந்ததையே ஐரோப்பாவெங்கிலுமான தேர்தல்களின் முடிவுகள் விளக்கியுள்ளது.

இந்த சமூகக் கோபம் பிரான்சின் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை தோல்வியைத் தழுவ இட்டுச் சென்று, சோசலிஸ்ட் கட்சி(PS)வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியிருக்கிறது.

2009 முதலாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளின் பிரதான இலக்காய் இருக்கும் கிரீஸ் இல், 1974 ல் இராணுவக் குழு ஆட்சி வீழ்ச்சி கண்டது முதலாக கிரேக்கத்தை ஆண்டு வந்திருக்கக் கூடிய சமூக ஜனநாயகக் கட்சியான PASOK மற்றும் வலது சாரி புதிய ஜனநாயகம் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஏகபோகத்தை தரைமட்டமாக்கும் ஒரு மறுதலிப்பை இது உருவாக்கியது. அவை இரண்டின் வாக்குகளும் முறையே 13.2 சதவீதமாகவும் 18.9 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டது. தீவிர இடது கூட்டணி (SYRIZA) தனது வாக்குகளை மும்மடங்காகப் பெருக்கி 16.8 சதவீத வாக்குகளைப் பெற்று, கிரீஸின் இரண்டாம் பெரும் கட்சியாக எழுந்தது.

தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், நிதி உயரடுக்கின் அரசியல் மற்றும் பொருளாதார சர்வாதிகாரத்திற்கான ஒரு இடது சாரி மாற்றினையே தாங்கள் எதிர்நோக்கியிருப்பதை தங்களது வாக்குகளின் மூலமாகக் காட்டியிருக்கின்றனர். ஆயினும், மக்களின் மனோநிலையில் ஏற்பட்டிருக்கும் இடது நோக்கிய நகர்வின் அடிப்படையில் ஆதாயம் பெற்றுள்ள கட்சிகள் எதுவும் எந்த முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களையும் அமல்படுத்தும் நோக்கமும் கூட இல்லாமல் இருக்கின்றன, இந்த இலட்சணத்தில் இருக்கின்ற அமைப்புமுறையை தீவிரமாய் சோசலிச அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்வது குறித்தெல்லாம் கேட்கவும் வேண்டாம்.

பிரான்சில், ஹாலண்ட் ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்திற்கு இணங்க நிதிச் செலவினங்களை தான் வெட்டவிருப்பதாகத் தொடர்ந்து கூறியிருந்தார். இலண்டன் வங்கியாளர்களுக்கு தான்ஆபத்தானவனில்லை என்று பிரகடனம் செய்து, ஆதரவான வங்கிகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு மானியமளிக்கும் வகையில் வணிக ஆதரவுவளர்ச்சிக் கொள்கை பற்றிய மேலெழுந்தவாரியான குறிப்புகளைச் செய்து கொண்டே அதே சமயத்தில், ஹாலண்ட், குறைந்த ஊதியங்களுக்காகவும் கூடுதல் தொழிலாளர்நெகிழ்வுத்தன்மைக்காகவும்ஜேர்மன் மாதிரியைப் புகழ்ந்தார். நிதிச் சந்தைகள் ஹாலண்டின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டதாய்த் தெரிகிறது. ஹாலண்ட் வெற்றி பெற்ற முதல் நாளில், பிரான்சின் CAC-40 பங்குச் சந்தைக் குறியீடு 1.6 சதவீதம் அதிகரித்து முடிந்தது

இந்தச் சூழ்நிலையில்இடது கட்சிகளின் ஒரு அடுக்கு - இதில்சோசலிஸ்ட் எனக் கூறிக் கொள்பவை, ”முதலாளித்துவ எதிர்ப்புஎன்று கூறிக் கொள்பவை அல்லதுகம்யூனிஸ்ட் எனக் கூறிக் கொள்பவையும் அடங்கும் - ஒரு துரோகப் பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது. வங்கிகளது கொள்கைகள் மீதான விமர்சகர்களாக அவர்கள் காட்டிக் கொள்வது ஒரு திட்டமிட்ட மோசடி. பொருளாதார நலன்களின் விடயத்திலும் கலாச்சார உறவுகளின் விடயத்திலும் ஆளும் உயரடுக்குடன் அடையாளப்பட்டுக் கொள்கின்ற நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளில் இருந்து வந்து அந்தப் பிரிவுகளைப் பிரதிநிதிப்படுத்துவனவாக இருக்கும் இவை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கோ, யூரோவுக்கோ அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்ற ஸ்தாபனங்களுக்கோ எழும்புகின்ற எந்த உண்மையான சவாலையும் முடக்குவதற்கு முனைகின்றன.

பிரான்சில், ஹாலண்ட் இத்தகைய பல கட்சிகளின் ஆதரவுடன் தான் அதிகாரத்தைப் பெற்றுள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற ஜோன் லூக் மெலோன்சோனின் இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். இவை ஹாலண்டுக்கு நிபந்தனையற்று வாக்களிக்க அழைத்தன.

கிரீஸில் SYRIZA தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ் பேசுகையில், கிரீஸ் மீது திணிக்கப்பட்ட வங்கிப் பிணையெடுப்புகளுக்கான நிபந்தனைவிதிகளைத் திருத்துகின்ற வகையில்ரூஸ்வெல்ட் பாணி புதிய ஒப்பந்தம் ஒன்றை தனது கட்சி எதிர்நோக்குவதாய் தெரிவித்தார். ”நாங்கள் யூரோவுக்கு எதிரானவர்களில்லை, ஆனால் யூரோவின் பேரால் பின்பற்றப்படும் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்என்றார் அவர்.

இத்தகைய கருத்துகள் எல்லாம் இந்தக் கட்சிகளின் வர்க்கக் குணாம்சத்தை வெளிப்படுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவைக் கொண்டு தந்திருக்கக் கூடிய ஒரு ஒட்டுமொத்தமான முதலாளித்துவ அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை இவை ஏற்றுக் கொள்கின்றன. கிரீஸில், உண்மையான வருவாய்கள் மூன்றில் இரண்டு மடங்காய் குறைக்கப்பட்டிருக்கின்றன, வேலைவாய்ப்பின்மை மும்மடங்காய்ப் பெருகி இளைஞர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோரைப் பாதித்துக் கொண்டிருக்கிறது, அத்துடன் வறுமையும் வீடின்மையும் விண்ணைத் தொடுமளவு உயர்ந்து நிற்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை, யூரோவை மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு இவை முழுமையாக உறுதிபூண்டிருக்கின்றன. அவர்கள் எதையாவது ஆலோசனை சொல்கிறார்கள் என்றால், அது அடையாளச் சீர்திருத்தங்களுக்கான அற்பத்தனமான அழைப்புகளையும் காகிதப் பணத்தை அச்சடித்துப் பெருக்குவதையும் கலந்த ஒரு நவ-ரூஸ்வெல்டியக் கொள்கை பற்றிய கனவுகளைத் தான். அதிகாரத்திற்கான போராட்டத்தையும் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய தொழிலாளர் அரசாங்கங்கள் பற்றிய முன்னோக்கையும் அவை எதிர்க்கின்றன.

ஆயினும் அவர்களுக்கு இரண்டு முக்கியமான முட்டுக்கட்டைகள் தோன்றுகின்றன. ஒன்று உலக முதலாளித்துவ நெருக்கடியின் யதார்த்தம், இன்னொன்று நிதிப் பிரபுத்துவத்தின் சக்திவாய்ந்த வர்க்க நலன்கள். சுருங்கும் உலகச் சந்தைகளுக்காகவும் மற்றும் மலிவான பொருட்கள் மற்றும் உழைப்புக்காகவும் நடக்கின்ற இழுபறிகளுக்கு இடையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ஒரு பொதுக் கொள்கையை ஒத்துக் கொள்கின்றன என்றால் அது தங்களது நெருக்கடியை தொழிலாளர்களின் முதுகில் ஒன்றுகூடி எப்படி இறக்கி வைக்கலாம் என்று சிந்திக்கிற மட்டத்திற்குத் தான்.

நடுத்தர வர்க்கஇடதுகட்சிகளின் ஆட்சி அதிகாரக் கொள்கைகள் விடயத்தில் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்திற்கு மோசமான அனுபவங்கள் இருக்கின்றன குறிப்பான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், இத்தாலியில் பிரதமர் ரோமோனோ பிராடியின் அரசாங்கத்தைச் சொல்லலாம். Rifondazione Comunista இதில் இடம்பெற்றிருந்தது. வலதுசாரிக் கட்சிகளைப் போலவே Rifondazioneவும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அதே தாக்குதல்களை - ஓய்வூதிய மற்றும் நிதிச் செலவின வெட்டுக்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனானிலான தலையீடுகள் ஆகியவை - ஆதரித்து நின்றது.

போலி இடது கட்சிகள் எல்லாம் இன்று அரசாங்கத்தில் சேருமானால், நிலவுகின்ற உலக முதலாளித்துவத்தின் மிகத் தீவிரமான நெருக்கடிக்கு இடையில், அவற்றின் கொள்கைகள் இன்னும் மிகப் பிற்போக்குத்தனமானவையாக மட்டுமே இருக்கும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை முறிக்காமல் பொருளாதாரத்தை அவர்களின் பிடியில் இருந்து பிரித்தெடுக்காமல் எந்த அர்த்தமுள்ள சமூக மாற்றமும் சாத்தியமில்லை. இதற்கு முதலாளித்துவத்தை தூக்கியெறிகின்ற ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சர்வதேச மூலோபாயமும் முன்னோக்கும் அவசியமாய் உள்ளது.

பிரான்சில் ஹாலண்டின் பிற்போக்குத்தனமான அரசாங்கத்தை, கிரேக்கத்தில் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான சக்திகளைக் கொண்டு கோர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அரசாங்கத்தை, அல்லது ஐரோப்பாவெங்கிலுமான இதேபோன்ற ஆட்சிகளை ஆதரித்து நிற்கின்ற சக்திகளுக்கு தொழிலாளர்கள் எந்த ஆதரவையும் வழங்க முடியாது

ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிதிநிலைக் கொள்கைகள் மற்றும் யூரோ நாணய மதிப்பு ஆகியவற்றின் பேரால் கோரப்படும் எந்த தியாகத்திற்கான அழைப்புகளையும் தொழிலாளர்கள் மறுக்க வேண்டும். ஐரோப்பாவில் பெரும் வளமைக்கும் அமைதிக்கும் இட்டுச் செல்வதற்கெல்லாம் எட்டாத வெகு தொலைவில், பல்வேறு தேசிய முதலாளித்துவ வர்க்கங்களும் தங்களுக்குள் பெருகி வரும் கருத்து வேறுபாடுகளை தொழிலாள வர்க்கத்தை சீரழிப்பதன் மூலம் சரி செய்து கொள்ள முயலுவதற்கான ஒரு தலைமை மன்றமாகத் தான் இந்த ஸ்தாபகங்கள் எல்லாம் எழுந்துள்ளன

பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை சீர்திருத்துவதோ அல்லது அதற்காக மறுபேச்சுவார்த்தை நடத்துவதோ அல்ல, மாறாக அதனைத் தூக்கியெறிந்து விட்டு ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்டத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தையும் சர்வதேசரீதியாக அணிதிரட்டுவதே ஆகும்