சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Günter Grass and the German Social Democrats

குந்தர் கிராஸும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினரும்

By Ulrich Rippert
10 May 2012

use this version to print | Send feedback

குந்தர் கிராஸின் கவிதை என்ன கூறப்பட வேண்டும் என்பதின் மீதான தாக்குதுல்கள் பழமைவாத மற்றும் வலதுசாரி வட்டங்களில் இருந்து மட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு பெற்ற The Tin Drum எழுத்தாளர் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய போர்க் கொள்கை பற்றிய தன் விமர்சனத்தை வெளியிட்டவுடனேயே, சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைமையகமான Willy-Brandt-Haus இல் இருந்தும் ஏராளமான அவதூறுகள் வீசப்பட்டன. முக்கிய சமூக ஜனநாயகவாதிகள் தங்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்துகின்றனர். கிராஸ் ஒரு காலத்தில் அவர் சமூக ஜனநாயகக் கட்சியின் மிகமுக்கியமான தேர்தல் பிரச்சாரகராகர்களில் ஒருவராக இருந்தார்.

கவிதை வெளியிட்ட அன்றே, சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்திரேயா நாலஸ் மத்திய கிழக்கில் இருக்கும் நிலைமையைக் காணும்போது, இக்கவிதை வேதனையளிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும் உள்ளது என்ற கருத்தைத் தெரிவித்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், தற்பொழுது ஜேர்மனிய-இஸ்ரேலிய சங்கத்தின் தலைவருமான ரைன்கோல்ட் றொப மத்திய கிழக்கில் இருக்கும் சிக்கல் வாய்ந்த அரசியல் நிலைமை குறித்து கிராஸ் அதிகம் அறிந்திருக்கவில்லை என குற்றம்சாட்டினார். கிராஸின் கருத்துக்கள் பொதுப்படையாகவும், வெற்றுத்தனமாகவும் இருக்கும் நிலையில், இப்போது அவற்றைப் பற்றி விவரமாக கூறுவதில் பயனில்லை. பொருளுரை அற்பமானது, தன்னையே மையமாகக் கொண்டுள்ளது, மேம்போக்குத்தனமானது, வெற்றுத்தனமானது என்று கூறிய றொப, “சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் இனி கிராஸைக் காண விரும்பவில்லை”  என்றும் தெரிவித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளார் றொல்வ் மூட்சனிச் உம் கிராஸ் மோதல்கள் பற்றி தவறான மதிப்பீட்டைக் கொண்டுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூட்சனிச்சின் கருத்துப்படி, போரில் ஈரானுடைய பங்கின் ஆபத்து பற்றி கிராஸ் குறைத்து மதிப்பிடுகின்றார். சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் துணைத் தலைவரான ஹெர்நொட் ஏர்லர், நோபல் பரிசு பெற்றவர் உண்மையுடனும், யதார்த்தத்துடனும் தொடர்பை இழந்துவிட்டார் என்றும் விவரித்தார். சமூக ஜனநாயகக் கட்சியின் வருங்காலத் தேர்தல் பிரச்சாரங்களில் கிராஸின் உதவியைத் தவிர்க்கும் என்றும் எர்லர் கூறினார். கட்சியின் இழிந்த சந்தர்ப்பவாதத் தலைவர் சிக்மார் காப்பிரியேல் ஒரு கதவை திறந்து வைத்திருக்கும் வகையில், விமர்சனங்கள் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் குந்தர் கிராஸ் இடமிருந்து தேர்தலில் ஆதரவு பெறுவதை உடனடியாக ஒதுக்கிவிடக்கூடாது என்றார்.

Berlin Academy of Arts இன் தலைவரும், கிராஸின் நீண்டகால நண்பருமான கிளவ்ஸ் ஸ்ரேக் ஐ தவிர, சமூக ஜனநாயகக் கட்சியில் முக்கியத்துவம், தகுதிபெற்ற வேறு எவரும் கிராஸின் மீதான தாக்குதல்களை நிராகரிக்காததுடன், கட்சியின் முன்னாள் நண்பரை ஆதரிக்கவும் இல்லை. சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுபுற நகர்வை மறைக்கும் வகையில் அறநெறி, முறைகள், அரசியலில் தன்னடக்கம் ஆகியவை பற்றிப் பேசி நீண்டகாலமாக கருத்துடைய கூட்டாட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவர் வொல்ப்காங் தியேர்ச மட்டும்தான் விவாதத்தில் இன்னும் நிதானம் தேவை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிராஸிற்கு ஆதரவு கொடுக்க சமூக ஜனநாயகக் கட்சியின் மறுத்துள்ளது முக்கிய அரசியல் விளைவுகளைக் கொண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள சொற்தாக்குதல்களின் தன்மை கிட்டத்தட்ட முன்னோடியில்லாதது ஆகும். முக்கிய செய்தி ஊடகங்களால் அவர் யூத எதிர்ப்பு அறிவிஜீவியின் முன்மாதிரி என்று தாக்கப்பட்டுள்ளார் (உதாரணம், Henryk M. Broder, Josef Joffe):  அல்லது ஒரு நவ நாஜி, தேசியவாத சொல்லாட்சியை கவிதைப்படுத்துபவர் (Tilman Krause, Malte Lehming). இத்தகைய ஆத்திரமூட்டலை சமூக ஜனநாயகக் கட்சி எதிர்த்தால், அதுவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் பொதுமக்களால் பரந்தளவில் எதிர்க்கப்படும் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்களில் திட்டமிட்டமுறையில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அதன் தாக்கம் உடனடியாகவும், வியத்தகு முறையிலும் இருக்கும்.  

மாறாக, சமூக ஜனநாயகக் கட்சி மிக பிற்போக்குத்தன அரசியல் சக்திகளுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது. வலதுசாரியின் கரங்களில் இது நேரடியாக விழுந்துள்ளது. அதுவோ இந்த அவதூறுப் பிரச்சாரத்தை இராணுவ வாதம், போர் ஆகியவற்றை நோக்கி திரும்புவதை எவர் சவால் விட்டாலும் அவரை மௌனப்படுத்த விரும்புகிறது. அதுவும் கிராஸ் போன்ற பெரும் அறநெறியாளரை மௌனப்படுத்துவதில் அவர்கள் வெற்றி அடைந்துவிட்டால் மத்திய கிழக்கில் மற்றொரு போருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் தைரியம் எவருக்கும் இராது என சமூக ஜனநாயகவாதிகள் நம்புகின்றனர்.

கிராஸிற்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள உறவு எப்பொழுதுமே பதட்டம் நிறைந்ததாகத்தான் இருந்தது. ஒருபுறம், கிராஸ் கட்சியினால் ஈர்க்கப்பட்டிருந்தார். அதனிடம் இருந்து அவர் கூடுதலான ஜனநாயக முறைகள், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்த்திருந்தார். மறுபுறமோ அவர் பலமுறை கட்சி வலதுநோக்கி செல்லும் போதெல்லாம் மோதலுக்கு சென்றார். போருக்குப் பின் இருந்த மற்ற கலைஞர்கள், அறிவுஜீவிகளைப் போல் அல்லாமல், கிராஸிற்கு முன்னாள் ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசான (GDR)  இடம் எந்தக் குறிப்பிடத்தக்க பரிவுணர்வும் இருந்தது இல்லை. கிராஸைப் பொறுத்தவரை, ஸ்ராலினிச ஆட்சி மீதான வெறுக்கத்தக்க பக்கம் எப்பொழுதுமே தேசியமயமாக்கப்பட்ட சொத்து உமைகளால் உருவான சாதகமான விளைவுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நிலைப்பாடு அவரை சமூக ஜனநாயகக் கட்சியின் கைகளை நோக்கி செல்ல வைத்தது.

1961ல் கிராஸ் வில்லி பிராண்ட்டைச் சந்தித்தார் (பின்னர் இவர் ஜேர்மனியின் நான்காவது சான்ஸ்லராக வந்தவர்). அவருடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து ஜேர்மனிய எழுத்தாளர்களின் அரசியல் தேர்தல் அரங்கு என்பதை அமைத்தார். பின்னர் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவர் சமூக ஜனநாயகக் கட்சியிடம் உறுதியான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். பின்னர் 1969ல் மத்திய சான்ஸ்லர் பதவிக்கு வில்லி பிராண்ட்டைக் கொண்டுவந்த தேர்தல் வெற்றிகளில் கணிசமான பங்களிப்பை கொடுத்திருந்தார். அது சமூக ஜனநாயகக் கட்சிக்கு மிகச் சிறந்த தேர்தல் முடிவுகளை (வாக்குப்பதிவில் 46%) மூன்று ஆண்டுகளுக்குப் பின் கொடுத்தது.

பிராண்டின் சமூக, அரசியல் சீர்திருத்தங்களுக்கு கிராஸ் ஆதரவு கொடுத்தார். அத்தகைய சீர்திருத்தக் கொள்கை முதலாளித்துவத்தை மனிதத்தன்மை உடையதாக்கும், இலாப அமைப்புமுறையை சோசலிச வகைப்படுத்தும் என்ற நம்பிக்கையை அல்லது மாறாக அவநம்பிக்கையை வளர்த்திருந்தார். அக்காலத்தில் வந்த தற்காலிக உயர் ஊதிய உடன்பாடுகள், 1968 வசந்த காலத்தில் பிரான்ஸில் பொது வேலைநிறுத்தங்கள் ஜேர்மனியில் கடுமையான ஊதிய மோதல்களை கட்டவிழ்த்தபின் தொழிலாளர்களை அமைதிப்படுத்துவதற்குத்தான் வந்துள்ளன என்பதை அவர் உணரவில்லை.

கிராஸ் ஆதரவு கொடுத்திருந்த பிராண்ட் அரசாங்கத்தின் முக்கியக் கல்விச் சீர்திருத்தம் இடைநிலைப் பள்ளிப் பட்டதாரிகளை 5 என்பதில் இருந்து 30% என உயர்த்தியது. இச்சீர்திருத்தம் தெருக்களுக்கு இளைஞர்கள் எழுச்சியுடன் வராமல் தடுக்க உதவியது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க வகையில் தீய கீழ்நோக்கிய தன்மை இருந்தது. பிராண்ட் அரசாங்கம் “Radicals Decree” என்னும் சட்டத்தை இயற்றியிருந்தது. இச்சட்டம் தொடர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுவோரை அரசதுறையில் பணிபுரிவதை தடைக்கு உட்படுத்தியது.

பிராண்டின் வெளியுறவு விவகாரக் கொள்கைகளில் இயல்பாக இருந்த முரண்பாடுகளையும் கிராஸ் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருந்தார். முன்னாள் ஜேர்மனி, இப்பொழுது போலந்து நகரமான டான்சிக்கில் பிறந்த கிராஸ் புதிய கிழக்குக் கொள்கை (Ostpolitik)” குறித்து பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். வார்சோவில் யூதர்கள் கொலை செய்யப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தின் முன் வில்லி பிராண்ட் வணங்கி நின்றது குறித்து அவர் குறிப்பிடத்தக்க வகையில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். அதேபோல் ஜேர்மனிக்கும் போலந்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டது குறித்தும் மகிழ்ச்சி அடைந்திருந்தார். ஆனால் பழமைவாத வட்டாரங்களில் ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்பைத் தூண்டியிருந்த பிராண்டின் கிழக்குக் கொள்கை, ஜேர்மனியப் பொருளாதாரத்திற்கு கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த புதிய சந்தைகளுக்கு உடனடி அணுகும் வாய்ப்பைக் கொடுத்தது. ஒரு நீண்டக்காலத் தன்மையில் கிழக்குக் கொள்கை கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குழிபறித்து, முதலாளித்துவ மறுபுனருத்தானத்திற்கு வழிவகுத்தது; கிராஸைப் பொறுத்தவரை இப்போக்கை அவர் தீவிர விமர்சனத்துடன் அணுகியிருந்தார்.

1974 ஆரம்பத்தில் பிராண்ட் அகற்றப்பட்ட போது, கிராஸ் சமூக ஜனநாயகக் கட்சியிடம் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டார். பிராண்டிற்குப் பதிலாக ஹெல்முட் ஷ்மிட் பதவிக்கு வந்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக ஆதிக்கத்தை பறிப்பதற்காக தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். 1981 வரை, சமூக ஜனநாயகக் கட்சியின் வலுவான அழுத்தத்தின் கீழ் வந்தபின்தான், கிராஸ் இறுதியில் கட்சியில் சேர்ந்தார்.

ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப்பின், அவர் மீண்டும் சமூக ஜனநாயகக் கட்சியின்  உடன் மோதலைக் கொண்டார். மறுஇணைப்பு வழிவகை பற்றி இருந்த பெரும் பரப்பை அவர் எதிர்த்து, இரண்டு ஜேர்மனிய நாடுகளின் கூட்டிணைவிற்குத்தான் (confederation) வாதிட்டார். இரண்டும் படிப்படியாகத்தான் இணைய வேண்டும் என்று நம்பிய அவர், ஜேர்மனிய அரசியலமைப்பு குறித்து மக்கள் வாக்கெடுப்பு தேவை என்றார். நாட்டின் மேற்கு அல்லது கிழக்குப் பகுதியில் இது மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்படவே இல்லை.

தேசியவாதத்தின் வளர்ச்சிக்கு எதிராக கிராஸ் எச்சரித்திருந்தார். வெளிநாட்டவர்கள்மீது வலதுசாரித் தாக்குதல்களுக்கு நடுவே, கிறிஸ்துவ ஜனநாய ஒன்றியத்தின் ஹெல்முட் ஹோலின் பழமைவாத அரசாங்கம், அரசியலமைப்பை திருத்தி புகலிடம் கோருவோர் உரிமையைக் கணிசமாக குறைத்தபோது கிராஸ் பெரும் சீற்றம் கொண்டார். 1992ல் கட்சியில் இருந்து இராஜிநாமா செய்ததின் மூலம் தன் எதிர்ப்பைக் காட்டினார்.

ஆனால் இன்னும் மனிதாபிமானமுடைய சமூகத்தை வளர்க்க சமூக ஜனநாயகக் கட்சியின் செயல்படும், அதற்குத் தான் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர் நம்பினார். சமூக ஜனநாயகக் கட்சியினதும் அதேபோல் தொழிற்சங்கங்களின் வலதுசாரிப் போக்கிற்கும் ஆழமான புறநிலைரீதியான வேர்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளத் தவறினார். ஏற்கனவே பூகோளமயமாகிய உற்பத்தி முறை முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் தீவிர சீர்திருத்தக் கொள்கைகள் சாத்தியமில்லை என்றாக்கப்பட்ட நிலையில், அவர் சமூக-ஜனநாயக சீர்திருத்தங்கள் சாத்தியம் என்று நம்பினார். 1990களின் கடைசிப் பகுதியில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிராஸ் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆதரவு கொடுத்தார். இதனால் முதல் சிவப்பு-பச்சை கூட்டரசாங்கம் (சமூக ஜனநாயகம்-பசுமைக்கட்சி) ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD), ஜோஸ்கா பிஷ்ஷர் (பசுமைவாதம்) தலைமையில் வந்தது. 2003ல் அவற்றின் ஈராக் போர் பற்றிய விமர்சனத்திற்கு அவர் ஆர்வத்துடன் ஒப்புதல் கொடுத்தார். இது ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய சமூகநலச் செலவு வெட்டுக்களை சுமத்தியிருந்தபோதிலும்கூட. அந்த நேரத்தில் World Socialist Web Site  கிராஸின் மனப்பாங்கு பற்றிக் கருத்துக்கூறி: இந்த அரசாங்கத்தை வெளியுறவுக் கொள்கையில் நல்லது, சமூக கொள்கையில் மோசமானது என பிரித்துப் பார்க்க முடியாது. என எழுதியிருந்தது.

போர்ப்பிரச்சினை சமூகப் பிரச்சினைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாது, ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கம் தன் மக்களுக்கு எதிராகத்தான் உண்மையான போரை நடத்துகிறது என்று நாம் எச்சரித்தோம். வேலையற்றோர் பெறும் உதவி மீதான தண்டனை போன்ற Hartz சட்டத்தைச் செயல்படுத்தியதின் மூலம், அரசாங்கம் ஒரு முழுத் தலைமுறையில் பெரும் பிரிவுகளை நிதியப் பேரழிவுப் பக்கம் தள்ளியது. சமூகத்தின் கீழ்மட்டத் தட்டுக்களை இப்படி வறிய நிலையில் தள்ளுவது முற்றிலும் சமூக எதிர்ச்செயல் என்பதுடன் அரசியல்ரீதியாக குற்றத்தன்மை உடையதும் ஆகும். இது சமூக அழிவை விரைவுபடுத்துவதுடன், இராணுவாதம் மற்றும் போரை எதிர்க்கும் போராட்டம் அடித்தளமாகக் கொண்டிருக்கும் சமூக சக்திகளான தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரை  பலமிழக்கச்செய்கின்றது.

2005ம் ஆண்டு குந்தர் கிராஸ் மீண்டும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்றார்: இம்முறை ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டின் மாநிலத்தில் ஹெய்ட சிமோனிஸ் தலைமையில் நடந்த சமூக ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவழித்தார். ஆனால் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது சொத்து வரி விதித்தல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அவருடைய கோரிக்கை கட்சித் தலைமையினால் அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டது.

Willy-Brandt-Haus, வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரகார் மீது சமீபத்திய மிருகத்தனத் தாக்குதல்களுடன் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் கிராஸிற்கும் இடையே உள்ள மோதல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இவை சமூக ஜனநாயகக் கட்சியின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது நீண்டகாலத்திற்கு முன்னரே தொழிலாள வர்க்த்துடன் அதன் பிணைப்புக்களை துண்டித்துக்கொண்ட, தற்பொழுது சமூகநலச் செலவுகளில் கடுமையான வெட்டுக்களைச் சுமத்த ஒத்துழைக்கும் மற்றும் சிரியா மற்றும் ஈரான் ஆகியவற்றிற்கு எதிராக பரந்த மக்கள் எதிர்ப்பை மீறி எதிர்கால இராணுவச் செயற்பாடுகளுக்குத் தயாரிப்புக்களை கொண்டுள்ள ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி என்பதை காட்டுகின்றது.