சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Voters in German state election reject government austerity policy

அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கையை ஜேர்மன் மாநிலத் தேர்தல்களில் வாக்காளர்கள் நிராகரிக்கின்றனர்

By Peter Schwarz
16 May 2012

use this version to print | Send feedback

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் (NRW) ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பெரும் தோல்வியை அடைந்தார். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU)  8.3%  வாக்குகளை இழந்து ஜேர்மனியில் மிக அதிக மக்கள் இருக்கும் மாநிலத்தில் 26.3% வாக்குகள் மட்டுமே பெற்று இதுவரையில் அதன் மோசமான வாக்குப்பதிவைக் கண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கடைசி மாநிலத் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) விடச் சற்றே முன்னணியில் இருந்தது. ஞாயிறுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி 39.1% வாக்குகளைப் பெற்றது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 4.7% அதிகம் ஆகும். இது மீண்டும் மாநிலப் பாராளுமன்றத்தில் முதலிடத்தைப் பெற்ற கட்சியாக நுழைகிறது. 2010 தேர்தல்களுக்கு பின் SPD பசுமைவாதிகளுடன் சேர்ந்துகொண்டு ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. இப்பொழுது இரு கட்சிகளுக்கும் ஒரு தெளிவான பெரும்பான்மை உள்ளது. பசுமைவாதிகள் ஞாயிறு வாக்குப்பதிவில் சற்றே குறைந்த வாக்கிழப்பிற்கு உள்ளானார்கள். அவர்களுக்கு 11.3 சதவிகிதம்தான் கிடைத்தது.

தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) தன் பங்கு வாக்கை 6.7ல் இருந்து 8.6% என உயர்த்திக் கொண்டது. செய்தி ஊடகம் இந்த முடிவைப் பெரும் பரபரப்புடன் வெளியிட்டது. ஏனெனில் சில மாதங்கள் முன்பு FDP கருத்துக்கணிப்பில் 2% மட்டுமே பெற்று வந்தது. FDP க்கு ஆதரவு அதிகரித்துள்ளமை, 2010ல் CDU விற்கு வாக்களித்த 160,000 பேர் இப்பொழுது FDP க்கு வாக்களித்துள்ளனர் என்ற உண்மையால் விளக்கப்படுகிறது. இது FDP பெற்ற மொத்த வாக்குகளில் கால் பகுதியாகும்.

FDP க்கு ஆதரவு கூடுதலானது அதன் முக்கியமான வேட்பாளரான 33 வயது கிறிஸ்டியான் லிண்ட்னரினால் என்றும் கூறலாம். இவர் கட்சியின் தலைமையிலிருந்து தன் பிரச்சாரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டார். லிண்ட்னர்  FDP  உடைய தலைவர் பிலிப் ரோஸ்லருக்கு உறுதியான எதிரியாவார். ரோஸ்லருடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்புதான் லிண்ட்னர் FDP செயலர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

CDU, FDP என பேர்லின் கூட்டாட்சி அரசாங்கத்திலுள்ள இரு முக்கிய கட்சிகளுக்கு மொத்த வாக்கு இழப்புக்கள் 6.4% ஆகும். இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் வாக்களித்தனர். NRW மாநிலத்தேர்தல்கள் பொதுவாக மத்திய அளவில் உள்ள போக்குகளை பிரதிபலிக்கும் எனக் கருதப்படும். 2013ல் அடுத்த கூட்டாட்சித் தேர்தல்கள் நடக்க இருக்கையில் ஞாயிறு வாக்கு முடிவுகள் அரசாங்க மாற்றம் ஒன்று வரலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

NRW தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற இரண்டாம் கட்சி Pirate Party ஆகும். 7.8% மொத்த வாக்குகளை பெற்றுள்ளது இக்கட்சி இப்பொழுது நான்காம் மாநிலப் பாராளுமன்றத்தில் நுழைகிறது. பேர்லின், சார்லாந்து, ஷிலேஷ்விக்-ஹோல்ஸ்ரைன் ஆகியவற்றை அடுத்து இது நான்காம் மாநிலம் ஆகும். SPD யிடம் இருந்து 90,000, பசுமை வாதிகள், இடது கட்சிகள் ஆகியவற்றிடம் இருந்து 80,000, முன்னர் வாக்களிக்காதவர்களிடம் இருந்து 70,000, முன்னாள் CDU வாக்குகள் 60,000 மற்றும் FDP   இடம் இருந்து 40,000 என அனைத்து முகாம்களில் இருந்தும் இக்கட்சி வாக்குகளைப் பெற்றது.

இப்படி பல பிரிவுகளிடம் இருந்து வந்துள்ள ஆதரவு கட்சியின் வேலைதிட்டத்தில் பிரதிபலிக்கிறது. Pirate Party நடைமுறைக் கட்சிகள் மீது இருக்கும் பரந்த அதிருப்தியினால் ஆதாயம் அடைந்துள்ளது என்றாலும், உள்ளடக்கத்தை பொறுத்தவரை Pirate Party தனது போட்டியாளர்களிடம் இருந்து அதிகம் வேறுபாடு கொண்டிருக்கவில்லை. கட்சியின் பொதுத் வேலைத்திட்ட நிலைப்பாடு இன்னும் கூடுதலான வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் வேண்டும் என்று கூறுகிறது. மற்ற விதங்களில், Pirate Party திட்டங்கள் பசுமைவாதிகள், FDP, CDU, SPD, Left Party ஆகியவற்றின் திட்டங்களில் இருக்கும் கோரிக்கைகளின் தொகுப்பு என்று கூறலாம். ஏற்கனவே Pirate Party மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் ஹெனலோர கிராவ்ட் (SPD)  உடன் ஒத்துழைக்கத் தயார் என்று அறிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஒவ்வொரு பிரச்சினை அடிப்படையிலும் அது அரசாங்கத்திற்கு ஆதரவு வாக்கு கொடுக்கும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

NRW ல் மிக அதிகளவில் இழப்பைக் கண்டுள்ள மற்றொரு கட்சி இடது கட்சியாகும். இது தன் வாக்குகளில் பாதிக்கும் மேல் இழந்துவிட்டது (பார்க்க “Collapse for Left Party in North Rhine-Westphalia vote”). இடது கட்சியின் இழப்புக்களுக்கு முக்கிய காரணம் அதன் வலதுசாரிக் கொள்கையின் விளைவும் மற்றும் SPD   இடம் அது சந்தர்ப்பவாத முறையில் சார்பு கொண்டிருப்பது ஆகியவைதான். ஞாயிறன்று முன்னாள் இடது கட்சியின் வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் SPD  க்கு மாறினர். மற்றும் ஒரு ஐந்தில் ஒரு பகுதியினர் Pirate Partyக்கு ஆதரவு அளித்தனர். சிறிய பகுதியினர் பசுமைக்கட்சியை நோக்கி திரும்பினர்.

மொத்தத்தில் NRW தேர்தல், மேர்க்கெலுடைய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஐயத்திற்கு இடமின்றி நிராகரிப்பதைப் பிரதிபலிக்கிறது. கிரேக்கம் மற்றும் பிரான்ஸில் ஒரு வாரத்திற்கு முன் நடந்த தேர்தல்களில் காணப்பட்ட போக்கைத்தான் இது தெளிவாகப் பின்பற்றியுள்ளது.

மேர்க்கெல் மந்திரிசபையில் சுற்றுச்சூழல் மந்திரியாக இருக்கும் CDUவின் முக்கிய வேட்பாளர் நோர்பேர்ட் றொட்கென், SPD-பசுமைவாதச் சிறுபான்மை அரசாங்கத்தை பொதுச்செலவுகள் குறைத்தலுக்கு விருப்பமின்மை என்பதற்காக தாக்கி இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களுக்குத் தன் பிரச்சாரத்தில் கவனத்தை காட்டினார்.

அவர்கள் புதிய கடன்களைச் சேர்க்கின்றனர் என்று கூறுவது றொட்கெனின் தேர்தல் மந்திரமாக இருந்தது. தேர்தலுக்குச் சற்றுமுன்பு அவர் NRW வாக்கு என்பது மேர்க்கேலின் சிக்கனக் கொள்கைகள் பற்றிய மக்கள் கருத்துக் கணிப்பைப் பிரதிபலிக்கும் என்று அறிவித்தார். தோல்வி உறுதி என்பதை அறிந்த, பீதியுற்ற CDU  தலைமையகம் பேர்லினில் அவர் தன் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

றொட்கென் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியிருப்பது அதிக வேலையின்மை, நீண்டகாலமாக நிதிப் பிரச்சினைகளை உடைய ஒரு மாநிலத்தில் பெரும் எதிர்ப்பைத்தான் சந்தித்துள்ளது. NRW இல் உள்ள வாக்காளர்கள் பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை ஆணையிட்டு கிரேக்கம், ஸ்பெயின் இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பேரழிவு விளைவுகளைக் கவனிக்கத் தவறவில்லை.

அடிப்படையில் மேர்க்கெலின் சிக்கனத் திட்டத்தை நிராகரிக்கும் ஒரு கட்சி இல்லாத நிலையில், SPD  ஐ இடதில் இருந்து அதன் நிலைப்பாட்டிற்கு குறைகூறல் இல்லாத நிலையில், SPD கூட்டாட்சி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பில் இருந்து இலாபம் அடைய முடிந்தது. பிரதமர் கிராவ்ட் சிறந்த மாற்றீடு எனக் காட்டிக் கொள்ள முடியும்அவருடைய கொள்கைகள் றொட்கென் உடைய கொள்கைகளில் இருந்து அதிக வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றாலும். றொட்கெனை போல் கிராப்ட் கடன் தடையை ஏற்க உறுதி கொடுத்துள்ளார். ஆனால் வெட்டுக்களை சற்று தாமாதமான முறையில் கொண்டுவர இருப்பாதகவும், குழந்தைகள், கல்வி தொடர்பான வெட்டுக்களை ஒதுக்கிவிடப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இவ்வகையில் SPD யிடம் வாக்காளர் தொகுப்பு கொண்டுள்ள விருப்பம் ஒவ்வொரு கட்சியின் திறமை பற்றிய ஒரு மதிப்பீட்டை பிரதிபலிக்கின்றது. அக்கருத்துக்கணிப்புப்படி, CDU, SPD  இரண்டும் ஒப்புமையில் ஒன்றான தரங்களை கடன் பிரச்சினைகளைத் தீர்த்தல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் பெறுகின்றன; ஆனால் சமூக நீதி என்று வரும்போது CDU பெற்ற 16% உடன் SPD  பெற்ற 55% ஒப்பிடத்தக்கது.

SPD வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது வாக்காளர்களில் புதிய அடுக்குகள் இதற்குத் திரட்டப்பட்டுள்ளன என்ற பொருளைத்தராது. வாக்குப் பதிவு கிட்டத்தட்ட 2010க்கு ஒப்பானதாகத்தான் இருந்தது. அதாவது 60%க்குச் சற்று குறைவாக. இது மாநிலம் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து மிகவும் குறைந்த விகிதம் ஆகும். SPD க்கு கிடைத்த மொத்த 3 மில்லியன் வாக்குகளில் 110,000 முன்னாள் வாக்களிக்காதவர்களிடம் இருந்து வந்தது. சாராம்சத்தில், நடைமுறைக் கட்சிகளுக்கும் Pirates களுக்கும் இடையே வாக்குகளில் மறுபகிர்வு ஏற்பட்டது. வாக்களார்களில் 60% இதைச் செய்துள்ளனர். 40% வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டனர்.

NRW தேர்தல் வெற்றி SPDஇற்கு இருந்தபோதிலும்கூட, இக்கட்சிதான் 2010 சமூகநல விரோத செயற்பட்டியல், ஹார்ட்ஸ் விதிகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பு கொண்டது என்பதைத் தொழிலாளர்கள் மறந்துவிடவில்லை. வரவிருக்கும் மாதங்கள் விரைவில் கிராவ்ட்டின் மிக நிதானமான உறுதிமொழிகள் கூட சூடான காற்றுப் போல்தான் என்பதை வெளிப்படுத்தும். ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தீவிரம் எவ்வித சமூக சலுகைக்கும் இடம்விட்டு வைக்காது. கிராவ்ட் முதலிலும் முக்கியமானதாகவும் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய தாக்குதல்களைச் சுமத்துவதற்கு SPD தொழிற்சங்கங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான பிணைப்புக்களை நம்பியிருப்பார். கடுமையான சமூக மோதல்கள் தவிர்க்க முடியாதவை.