சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Deep Blue Sea: Love and emotional truth in post-war Britain

The Deep Blue Sea: போருக்குப் பிந்தைய பிரிட்டனில் காதல் மற்றும் உணர்ச்சிகர உண்மை.

By Ruby Rankin and Richard Phillips
25 April 2012

use this version to print | Send feedback

டெரென்ஸ் ரட்டிகனின் மூலநாடகத்தைத் தழுவி டெரென்ஸ் டேவீஸால் இயக்கப்பட்டது

Sea
The Deep Blue Sea

டெரென்ஸ் டேவீஸின் சமீபத்திய வெளியீடான, The Deep Blue Sea, பிரிட்டனில் 1950களின் ஆரம்பகாலத்தின் காதல் மற்றும் பழமையான சமுதாய பழக்கவழக்கங்களை பற்றிய ஒரு மிகவும் திறமையான ஆய்வாகும். இக்கதை, தீவிர ஆனால் இறுதியாக நிர்பந்திக்கப்பட்ட  இளமையான முன்னாள் விமானப்படை விமானி ஒருவருடனான ஆழமான ஆனால் அழிவுகரமான உறவிற்காக, தன் விருப்பமில்லாத திருமணத்தை உதறித்தள்ளியிருக்கும் 40 வயதுள்ள, உணர்வுப்பூர்வமான நடுத்தர- வர்க்கத்தைச் சேர்ந்த ஹெஸ்டர் காலியர் (Rachel Weisz) என்ற பெண்மணி எதிர்கொள்கின்ற துன்பியல் யதார்த்தங்களை மையப்படுத்தியுள்ளது.

டெரென்ஸ் ரட்டிகனின் 1952ம் வருடத்திய நாடகத்தைத்  தழுவிய, இந்த 98 நிமிட திரைப்படம் போருக்குப் பிந்தைய ஆரம்பகால வருடங்களின் கொடூரம் மற்றும் அழிவுகளைச் சித்தரிக்கிறது. 2011ல் நாடக ஆசிரியரின் நூற்றாண்டு பிறந்த தின நினைவு விழாவின் ஒரு பங்களிப்பாக இது தொடக்கப்பட்டது.

ரட்டிகன் 1939லிருந்து 1950களின் மத்தியில், இவரது நாடகங்கள் நடப்புவழக்கு இழந்து போகும் வரையிலும் மிகவும் வெற்றிகரமானவராக இருந்தார். இவரது நன்கு அறியப்படும் நாடகங்களான The Winslow Boy (1946), The Browning Version (1948), The Deep Blue Sea (1952) மற்றும் Separate Tables (1954) உள்ளிட்டவை பெரும்பாலும் நிறைவடையாத உறவுகளில் சிக்கிய, எதற்கெடுத்தாலும் பயந்து சாகும் (claustrophobic)  சமுதாய வழமைகளை துன்பப்பட்டு கண்டுபிடிக்கிற மேலும் அவர்கள் தங்களுக்கு தாங்களே உண்மையாக இருக்கிற சிக்கலான மற்றும் தவறு செய்த தனி நபர்களைப் பற்றியதாக இருக்கின்றன.

The Deep Blue Sea ஒரு சோகமான, மற்றும் மனச்சோர்வுடைய கதையாக இருக்கிறது. 1950ல் லண்டனில், முக்கிய கதாப்பாத்திரமான ஹெஸ்டர் காலியர் எதிர்கொள்கின்ற இரண்டகநிலைக்காக மட்டுமல்லாமல் இதனுடைய தலைப்பு, திரைப்படத்தின் எல்லா  பிரதான கதாப்பாத்திரங்களுக்குமான ஒரு மேற்கோளாக இருக்கிறது. போரின் வலி, பற்றாக்குறை மற்றும் இழப்பு ஆகியவை உண்மையாக வாழ்வதற்கு மாறாக, வாழ்வின் இயங்குமுறைகளூடாக செல்லும்படி அவர்களை விட்டிருக்கிறது.

அனைத்து கதாப்பாத்திரங்களும் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்ட, ஒரு திடீர்த்தாக்குதல்களின் உடலியில்ரீதியானதும் உளவியல்ரீதியானதும் அழிவுகளினால் இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்ட மற்றும் விவாகரத்து முற்றிலும் சாத்தியமில்லாதிருந்தும், ஒரு விதவை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றதுமான ஓர் உலகில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.


Sea
The Deep Blue Sea
இல் ஹெஸ்டர் காலியர் (ராச்சல் வீஸ்
)

ஹெஸ்டர் தற்கொலைக்கு முயற்சிப்பதிலிருந்தும் அதன்பிறகு தொடர்ச்சியான முன் நிகழ்ச்சிகளின் பதிவுகள் வழியாக கடந்த வருடத்தை நினைவுபடுத்துவது, அது அவளது விருப்பங்களுக்கு இட்டுச் செல்வது ஆகிவவற்றினூடாக இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது.

ஹெஸ்டரின் தந்தை ஒரு பிடிவாதமான, புரட்டஸ்தாந்து மதகுருவாக இருக்கிறார். அவளது கணவரான உயர்நீதிமன்ற நீதிபதி வில்லியம் காலியர் (Simon Russell Beale), அவ்வளவு கடுமையானவராக இல்லாவிடினும், ஒரு கோபக்காரராக இருக்கிறார். சமீபத்தில் யுத்தமுனையிலிருந்து திரும்பிய ஃப்ரெடி பேஜுடன் (Tom Hiddleston) காதலில் விழுந்த பின்னர், ஹெஸ்டரால் வில்லிம்ஸுடன் நீண்டகாலம் தங்க முடியாதிருந்தது.

ஹெஸ்டர் மற்றும் ஃப்ரெடியினுடைய உறவு உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது. ஆனால் அவர்களுடைய உடலுறவு தவிரவும் அவர்களுக்குள் சில ஒற்றுமை இருக்கிறது. ஃப்ரெடீயின் அழுக்கான தொழிலாள-வர்க்க அடுக்கு வீட்டில் வசிப்பதற்காக, அவளுடைய திருமண வாழ்விலிருந்து வெளியேறிய பின்னர், அவளுக்குத் தேவையான அன்பு அல்லது புத்திசாலித்தனமான ஆழத்தை அவனால் தனக்கு வழங்க முடியாது என்பதை அவள் கண்டறிகிறாள்.

ஹெஸ்டர் கலை மற்றும் கவிதைகளில் ஆர்வமுள்ளவராக இருக்கிறாள் ஆனால் அழகான ஒரு பிரிட்டன் போர் விமான விமானியாக இருக்கின்ற  ஃப்ரெடீ, அவ்வாறு இல்லை. போரிலிருந்து மீளாதவனாக அதிகம் குடிப்பதுடன், முக்கியமாக தனது முன்னாள் விமானப்படை மற்றும் கோல்ஃப் விளையாடும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுபவனாக அவன் இருக்கிறான்.

தன்னை போரினூடாக கொண்டுசென்ற, மற்றும் ஹெஸ்டரின் விழிப்பான ஆர்வத்திற்கு உடனடியாக பதிலளிக்க அனுமதித்த ஒரு அணுகுமுறைக்கான தருணத்திற்காக வசிக்கிறான். ஆனால், அவளை வென்றிருக்கையில், அவனால் ஒரு ஆழமாக செல்கிற ஒரு உறவை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை. நெருக்கம் அவனை மதுக்கடைக்கு ஓட வைக்கிறது, அதன் பின்னர் அவளைத் தவிர்ப்பதற்கோ அல்லது கோபத்துடன் அவளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ- அவளை வழிநடத்த முயற்சிப்பதற்கோ அந்த நெருக்கம் பின்னர் சென்றுவிடுகின்றது.

The deep blue seaல் ஹெஸ்டர் நிலையில்லாமல் இருக்கிறாள் - அவள் அறியாத ஒரு உலகம் மற்றும்பாவத்தில் வசிப்பதற்கானஅவளது தீர்மானத்தை தகர்க்கின்ற ஒன்றாக இருக்கிறது. ஃப்ரெடீ வன்மமற்றவராக நடிக்கவில்லை என்பதை அவள் அறிகிறாள். அவன் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவளுக்கு கொடுத்தான், ஆனால் அவன் அவளை மறந்து பிரியும்போது, அவளால் சிந்திக்க முடிவதெல்லாம், ஒரேயடியாகத் தன் வலியை நிறுத்த முயற்சிப்பது. அதனால் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.

இப்பொழுதும் ஹெஸ்டரை காதலித்து வரும் வில்லியமை இந்த தற்கொலை முயற்சி பற்றிய செய்தி, நேர்மையான முறையில் அவளை விவாகரத்து செய்வதற்கு  கட்டாயப்படுத்துகிறது. அதிர்ந்துபோன ஃப்ரெட்டி தென்னமெரிக்காவில் ஒரு பரிசோதனை விமான ஓட்டி பணியில் சேர்கிறான்.

வாழ்வைத் தொடர வேண்டுமென்று ஹெஸ்டர் உணர்கிறாள். பாரிய அலுப்பை ஏற்படுத்தும் தன் வீட்டு உரிமையாளரிடமும் (Ann Mitchell) நொந்துபோன ஒரு மருத்துவரிடமும் (Karl Johnson) சகிப்புத்தன்மையும் அன்பும் இருப்பதை அவள் அறிகிறாள். உண்மையில், இரண்டு ஆண்களுக்குள் ஒருவரை தேர்வு செய்வது அவள் முடிவல்ல, மாறாக, உடனடியான வலியையோ அல்லது மகிழ்ச்சிகரமான விளைவுகளையோ கவனத்திற்கெடுக்காமல், அவள் தானே தனக்கு உண்மையாக வாழ்வதுதான் அது.

டெரன்ஸ் ரட்டிகனின் நாடகங்கள் ஆங்கில நடுத்தர-வர்க்க மதிப்புகளின் மீது நீடித்த தாக்குதல்; உணர்ச்சிகர கடமைகளின் பயம், விருப்பத்தின் முகத்தினில் பயங்கரம், உடலுறவு குறித்த சந்தேகம்போன்றவற்றை கொண்டிருப்பதாக ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். பெரும்பாலான முதல் அத்தியாயத்தை வெட்டியது மற்றும் அதனுடைய பார்வையை ஹெஸ்டருக்காக மாற்றம் செய்தது என்று டேவிஸ் ரட்டிகனின் மூல நாடகத்தில் பிழையில்லாதிருப்பினும், மரபுக்கு புகழாக மறுவேலை செய்திருப்பது ஒரு கருணையை உருவாக்கியிருக்கிறது.

ஃப்ரெடியுடனான ஹெஸ்டரின் அடக்கமுள்ள தொழிலாள வர்க்க வாழ்வும் அவளது ஆடம்பர ஆனால் சேர் வில்லியம்ஸின் மனைவியாக விருப்பமற்ற வாழ்க்கையும் உயிரோட்டமாக இருக்கிறது. லேடி காலியருடன் மதியவேளை தேநீர்- ஹெஸ்டரை எதிர்ப்போடு நடத்துகின்ற அவளது மாமியார்- எதற்கும் பயந்து சாகும் ஆங்கில நடுத்தர வர்க்க மதிப்புகளை பொருத்தமாக படம்பிடித்துகாட்டுகிறார். ”நவநாகரிகம் பற்றி எச்சரிக்கை”, என்று லேடி காய்லர் ஹெஸ்டரை எச்சரிக்கிறார். “அது எப்பொழுதும் மோசமான விஷயத்திற்குதான் இட்டுச் செல்கிறது”. என்றார்.

பொதுவாக ஆரம்பகட்ட பிரிட்டன் போருக்கு-பிந்தைய இயக்குனரின் முத்திரை பதிக்கும் காட்சிகள் வலுவாக இருக்கின்றன. ஹெஸ்டரின் ஒத்த பரிமாணமுள்ள கடைசி காட்சிகள், பின் இருண்ட அடுக்குமாடியின் சன்னலுக்கெதிராக நிழல்போன்று, அவர்கள் திரைச்சீலைகளை நோக்கி மேலே செல்வதுபோன்று காட்டப்படும் ஃப்ரெடியின் காட்சிகள், சமீபத்திய எந்த திரைப்படத்திலும் இல்லாத ஒருவேளை, அதிக புலனுணர்வு சார்ந்த மற்றும் கலையுணர்வுமிக்க உடலுறவுக் காட்சிகள், அவர்களுடைய முதல் காதல் காட்சிகளில் இருப்பது பிரகாசிக்கின்றன. மண்டலா-போன்ற இரு உருவப்படங்கள் இணைவது ஆச்சர்யமாக இருக்கிறது.  

இந்த காட்சிகள் மனக்கண்களின் பல நாட்கள் நீடித்திருக்கும்போது, மற்ற அம்சங்கள் உணர்வுரீதியாக மற்றும் கலைரீதியாக பொருந்த மறுக்கின்றன.

ஃப்ரெடி பேஜ் கதாப்பாத்திரம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அவரும் ஹெஸ்டர் போன்றில்லாமல், போர் ஆண்டுகள் குறித்த அவரது மனரீதியான தாக்கங்கள் பலகீனமாக இருக்கிறன. கலைக் கண்காட்சியில் ஜோடிகள் கோபத்துடன் கத்தும் விளையாட்டு ஒரு தவறான குறிப்பைத் தருகிறது. போர் வருடங்கள் பற்றிய முன்னிகழ்வுகளின் பதிவுக்காட்சிகள் மற்றும் விமானக் குண்டுவீச்சின்போது லண்டன்வாசிகள் நிலவடிக்குழாயில் தங்கியிருப்பதை நீண்ட நேர தேடும் காட்சிகள் மற்றும்மாலி மலோன்என்று பாடுவது ஆகியவை இயல்பற்றதாக உணரவைக்கின்றன. 

The Deep Blue Sea 2000ல் The House of Mirth லிருந்து, டேவியின் முதல் திரைப்படமாக இருப்பதால், நீண்ட தாமதம் சந்தேகமின்றி ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்ததுOf Time and the City (2008) லிருந்து இவரது சினிமாத்தன சுயவரலாற்று poem to Liverpool வரை, இயக்குனர் பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிர சினிமாவுக்கான நிதிச் சிக்கல்கள் மற்றும் பொதுவான நிதிப் பற்றாக்குறையால் தடுக்கப்பட்டிருந்தார்.        

பால்களுக்கு இடையிலான தொழிற்பிரிவு இனியும் அந்த அளவுக்கு கடுமையில்லாதிருந்தாலும், முன்பிருந்ததுபோல் விவாகரத்து ஒரு பேசப்படாத விடயமாக இல்லாதிருப்பதாலும், The Deep Blue Sea மற்றும் அது வெளிப்படுத்துகின்ற பிரச்சனைகள் முக்கியமானதாக இருக்கின்றன.

ரட்டிகனின் முதல் தயாரிப்பில் ஆறுபதாண்டுகளுக்கு பின், டேவிசினுடைய திரைப்படம் புத்திசாலித்தனமான மற்றும் உண்மையான செயல் விளக்கமாக இருக்கிறது. அடிப்படை வர்க்க அழுத்தங்கள் மற்றும் மூல நாடகத்தை இயக்குகின்ற உணர்ச்சிகர பிரச்சினைகளாக இருப்பதால், இது குரல்கொடுக்கிறது.  இத்திரைப்படத்தின் முடிவுக் காட்சி அதிகம் அழுத்தம்மிக்க தருணங்களுள் ஒன்றாக இருக்கிறது. மேலும் ஹெஸ்டரின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டும் இல்லாமல், அது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. பகல் வெளிச்சம் வருகிறது மேலும் வாழ்க்கை அதனுடைய எல்லா முரண்பாடுகளுடனும் சாத்தியக் கூறுகளுடனும் தொடர்கின்றது.