சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP holds plantation workers’ congress

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டை நடத்தியது

By W.A.Sunil
25 May 2012

use this version to print | Send feedback

இலங்கை மத்திய மலை பகுதியில் உள்ள ஹட்டனில், மே 20 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும் தோட்ட தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தியிருந்தன. நுவரெலியா மற்றும் பதுளை தேயிலை தோட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பல டசின் கணக்கானவர்களுடன் சேர்த்து அதிக தொழிலாளர்களும், அதே போல் யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கொழும்பில் இருந்து வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு முன்னதாக சோ... மற்றும் .எஸ்.எஸ்.. ஆதரவாளர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பல வாரங்களாக சக்திவாய்ந்த பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். "இலங்கை சோசலிச சமத்துவ கட்சி தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றது" என்ற சோ... அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளும் உலக சோசலிச வலை தளத்தின் ஏனைய கட்டுரைகளும் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டதுடன் உள்ளூர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.

இந்த மாநாட்டுக்கு சோ... உறுப்பினர் . சாந்தகுமார் தலைமை வகித்ததோடு சோ... அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆரம்ப அறிக்கையை முன்வைத்தார். இந்த ஒன்றுகூடல் ஒரு சோசலிச முன்னோக்குக்கான போராட்டத்தின் ஒரு பாகமாகும் என தேவராஜா சுட்டிக் காட்டினார். அவர், 2011 சர்வதேச ரீதியில் முதலாளித்துவ அரசாங்கங்கள் வாழ்க்கை தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது என்று விளக்கினார்.

Part of the congress audience
மாநாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர்

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற ஏழைகளதும் பரந்த தட்டினர், இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க முன்னணிக்கு வந்துள்ளனர் என தேவராஜா கூறினார். "இந்த மண்டபத்தில் இருக்கும் பல தோட்ட தொழிலாளர்கள், அதிக பணிச்சுமை மற்றும் ஊதியம் வெட்டுக்களுக்கு எதிராக சமீபத்திய மாதங்களில் இருந்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்." என்று அவர் கூறினார்.

அவர் இந்த அனுபவங்களில் சிலவற்றை சுட்டிக் காட்டினார்: "கம்பனிகள் வேலை இலக்கை அதிகரித்ததை தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கிய நிலையில், பொகவந்தலாவையில் உள்ள கொட்டியாகலை தோட்டம் மற்றும் ஹட்டனில் வெலி ஒயா மற்றும் ஷெனன் தோட்டங்கள் உட்பட, பல தோட்டங்களில் போராட்டம் வெடித்தது. கடந்த வாரம், கொட்டியாகலையைச் சேர்ந்த 14 தொழிலாளர்கள் பல வருடங்களுக்கு முன் சுமத்திய போலி குற்றச்சாட்டுகளின் பேரில் [நீதிமன்றத்தால்] கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கள், இந்த போராட்டங்களில் முன்னணியில் இருக்கும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை வேட்டையாடும் முயற்சியாகும்."

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) தோட்டத் தொழிலாளர்களின்  எதிர்ப்புப் பிரச்சாரத்தை நேரடியாக எதிர்த்தது. மலையக மக்கள் முன்னணி (..மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) இலங்கை தொழிலாளர் முன்னணி (CWA), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (DWC) போன்ற தொழிலாளர்களை ஆதரிப்பதாக பாசாங்கு செய்ததோடு, அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் "அழுத்தம்" கொடுக்குமாறு கூறின.

M. Thevarajah
எம்
. தேவராஜா

"இந்த அமைப்புக்கள் வறிய மட்டத்திலான நாள் சம்பள முறையை சுமத்துவதிலும் தொழிலாளர்களின் நிலைமைகளை அடிமட்டத்திலேயே வைத்துப் பராமரிப்பதிலும் கருவியாக செயற்படுகின்றன. அவர்கள் இலாபத்தை அதிகரிக்கும் பொருட்டு அவ்வாறு செய்கின்றன," என தேவராஜா கூறினார். அனைத்து தொழிற்சங்கங்களும் -அரசாங்கத்தை ஆதரிக்கும் .தொ.கா., ..மு., NUW ஆகியவையும் சரி, வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ஏனையவையும் சரி- "முதலாளித்துவ முறைமைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன."

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து வெளியேற வேண்டும் என அழைப்பு விடுத்த தேவராஜா, இலங்கையிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ முதலாளித்துவ முறைமையினுள் இதற்கு தீர்வு காணப்பட முடியாது என்று எச்சரித்தார. "இலங்கை தொழிலாளர்கள், சோசலிசத்திற்கான போராட்டத்தில் தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகப் போராட வேண்டும்."

பல தொழிலாளர்கள் உற்சாகமாக மாநாட்டில் உரையாற்றினர். ஒரு தோட்ட இளைஞர் கூறியதாவது: “நாங்கள் தேர்தலில் நமது தலைவர்களுக்கு வாக்களிப்பதோடு அவர்களை ஆதரிக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளுக்காக அவர்களை சந்திக்கும் பொழுது, அவர்கள் நீங்கள் யார் என்று கேட்கின்றனர். நமது லயன் அறைகள் [வீடுகள்] 150 வருடங்கள் பழமையானவை. பல இடங்களில் அவை தீ பற்றி எரிந்துள்ளன. நாம் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு [முதலாளித்துவ கட்சிகள்] வாக்களிக்கத் தள்ளப்பட்டால், எங்களுக்கு இதில் இருந்து வெளியேறுவதற்கு வழி கிடையாது.”

ஒரு பெண் தொழிலாளி, தான் சாதாரண தரம் வரை கல்வி கற்று ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக மாநாட்டில் கூறினார். அவர் திருமணம் செய்த பின்னர், வீட்டில் தங்கி தையல் வேலை செய்தார். அரசாங்கம் நடைபாதை வியாபாரிகளை தடை செய்த போது அவருடைய கணவர் வேலையை இழந்தார். அவரால் தையல் வேலையை நம்பி இருக்க முடியாத நிலையில், தோட்டத்தில் வேலை செய்யும் அதே நேரம், கனவர் கொழும்பில் வேலை செய்கின்றார்.

 "நாங்கள் தோட்டத்தில் பணிச்சுமை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தோம். ஆனால் .தொ.கா. எங்கள் வேலைநிறுத்தத்தை எதிர்த்தது," என அவர் விளக்கினார். தனது வாழ்க்கை தரம் சரிந்து வருவது பற்றி குறிப்பிட்ட அந்த பெண், அவரது குடும்பம் பால் மா விலை அதிகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்தாக கூறியதோடு, தோட்டப் பகுதியில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதுஒரு பெரும் சுமை என விளக்கினார்.

"நான் சமீபத்தில் ஒரு வேலையில்லாத, படித்த இளம் பெண்ணை சந்தித்தேன். இன்னமும் ஒரு தொழில் கிடைக்காத நிலையில், ஏன் இவ்வளவு படித்தேன் என்று கூட கவலையாக இருக்கின்றது என அவள் சொன்னாள். எங்கள் பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒரு உண்மையான தலைமையை பெற வேண்டும்." என அந்த பெண் தோட்டத் தொழிலாளி கூறினார்.

வெலி ஓயாவில் ஒரு தொழிலாளி பேசும் போது, தோட்ட ஊழியர்கள் பணிச்சுமை அதிகரிக்கப்பட்டது பற்றி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் தொழில் ஆணையரிடம் புகார் செய்ததாக கூறினார். "அவர்கள் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று எங்ளை அனுப்பிவிட்டனர். அது பிரயோசனமற்றது. "நாங்கள் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தில் உள்ளோம். நாம் ஒன்றுபட வேண்டும். நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும் என நான் ஒப்புக்கொள்கிறேன்," என அவர் விளக்கினார்.

.எஸ்.எஸ்.. சார்பில் பேசிய கல்ப பெர்னான்டோ, "இலங்கை சமுதாயத்தில் தோட்ட இளைஞர்கள் மிகவும் பின்தங்கிய பகுதினராவர்" ஆனாலும் அவர்கள் இராஜபக்ஷ நிர்வாகத்தின் கல்வி செலவு வெட்டு மற்றும் சமூக மானியங்கள் வெட்டுக்களுக்கு இலக்காகி உள்ளனர் என விளக்கினார். இலவச கல்வியை பாதுகாக்கவும் மற்றும் வேலையின்மைக்கு எதிராக போராடவும் ஒன்றுபட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு .எஸ்.எஸ்..யில் சேர வேண்டும் என பெர்னாண்டோ தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 மத்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் M.W. பியரத்ன உரையாற்றும் போது, வங்கி ஊழியர்களதும் தோட்டத் தொழிலாளர்களதும் வேலை நிலைமைகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், "நாங்கள் அனைவரும் இப்போது ஒரே விதமான தாக்குதல்களேயே எதிர்கொள்கின்றோம்." என்றார். "முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் இந்த தாக்குதல்களில் இருந்து மீள முடியும்,” என அவர் மேலும் கூறினார்.

ஒரு பல்கலைக்கழக கல்விசார ஊழியரான தேஹிந் வசந்த கூறியதாவது: "தோட்ட தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியனர் என்பது உண்மை, ஆனால் தற்போதைய நெருக்கடி நிலைமையின் கீழ் உழைக்கும் மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.” அது தொழிற்சங்கங்கள் என்று வரும்போது, தோட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது நகர்ப்புற பகுதியாக இருந்தாலும் சரி, அவர்களது பிற்போக்கான நடவடிக்கையில் எந்த வித்தியாசமும் கிடையாது, என அவர் தெரிவித்தார்.

Wije Dias speaking with M. Thevarajah translating
விஜே
டயஸின் உரையை தேவராஜா மொழிபெயர்க்கின்றார்.

சோ... பொது செயலாளர் விஜே டயஸ் மாநாட்டை முடித்தார். "தொழிலாள வர்க்கத்தினுள் தற்போது ஒரு முக்கியமான, ஆழமான தேசிய அளவிலான அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருவதையே இந்த மாநாடு சமிக்ஞை செய்கின்றது," என்று அவர் கூறினார்.

டயஸ் 2011ல் வெடித்த வெகுஜன போராட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். "புரட்சிகர மக்களால், எகிப்து மற்றும் துனீஷியாவில் தசாப்தங்களாக நீண்டிருந்த சர்வாதிகாரங்களை கவிழ்க்க முடிந்தது," என்று கூறிய அவர், சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நனவுகொண்ட ஒரு தொழிலாள வர்க்க இயக்கம் இல்லாததால், அந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தால் ஏகாதிபத்திய சக்திகளின் உதவியுடன், தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது, என்றும் விளக்கினார். "உழைக்கும் வர்க்கம் இப்போது அந்த போராட்டங்களில் இருந்து அரசியல் படிப்பினைகளை பெற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

சோ...யின் தோட்டத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய பலரும், தாம் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமைகளின் கீழ் தொடர்ந்து வாழ முடியாது என்பதை வெளிப்படுத்தினர் என்று அவர் குறிப்பிட்டார். இது இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. "நிலைமைகள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு அரசியல் வெடிப்பை நோக்கி வளர்ச்சியடைகின்றது," என டயஸ் விளக்கினார். "இராஜபக்ஷ அரசாங்கம் அதையிட்டு விழிப்படைந்துள்ளது." அதனாலேயே அது முழு நாட்டையும் இராணுவமயப்படுத்துகிறது. இலங்கையில் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்க போரைக் கட்டவிழ்த்து வருகிறது.

தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தோட்ட முதலாளிகளதும் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது என டயஸ் அந்த கூட்டத்தில் கூறினார். அதனாலேயே தொழிலாளர்களுக்கு மாற்று அமைப்பு வேண்டும்: "அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தங்கள் உரிமைகளை காக்க ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்ய, ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்."

"தோட்ட தொழிலாளர்களும் முழு தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் நிலைமை, அனைத்துலக சோசலிசத்திற்காகப் போராடும் ஒரு அமைப்பு மூலம் மட்டுமே மாற்றலாம். சோ... மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை பாதுகாக்க கொள்கை ரீதியாக போராடும் ஒரே கட்சியாகும். எங்கள் கட்சியின் புரட்சிகர பாரம்பரியத்தை ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியிலிருந்து காணமுடியும், மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தையே நாம் அடிப்படையாகக் கொண்டுள்ளோம். சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், லங்கா சமசமாஜ கட்சி 1964ல் பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டு காட்டிக்கொடுத்ததற்கு எதிரான அரசியல் போராட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிசத்திற்கான போராட்டத்தில் கறைபடியாத வரலாற்று பதிவுகொண்ட ஒரே கட்சி நாம் மட்டுமே," என கூறி அவர் உரையை முடித்தார்.

வருகை தந்திருந்தவர்கள் சோ...யில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்ட டயஸ், அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றப்பட்டன: தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகளை வெளியேற்று, மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், ஆகிவையே அந்த தீர்மானங்களாகும். பிரதிநிதிகள் தமது தோட்டங்களில் நடவடிக்கை குழுக்களை உருவாக்கவும், ஏற்றுக்கொண்ட முன்நோக்குக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் உடன்பட்டனர்.