சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

FBI entraps Bangladeshi student in fake terror plot

பங்களாதேஷ் மாணவரை FBI போலிப் பயங்கரவாத சதிப்பொறியில் சிக்கவைக்கின்றது

By Bill Van Auken
19 October 2012
use this version to print | Send feedback

நியூயோர்க் நகரத்தில் ஒரு பங்களாதேஷ் மாணவனை மத்திய அரசின் அதிகாரிகள் கைதுசெய்து பேரழிவு ஆயுதங்களை உபயோகப்படுத்தும் சதித்திட்டத்திலும், நியூயோர்க்கில் உள்ள மத்திய வங்கிக் கூட்டமைப்பை வாகன குண்டு வைத்துத் தகர்ப்பதற்காக அல்குவைதாவிற்கு பொருள் உதவி வழங்கியதாகவும் குற்றங்களைச் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவிலா தொடர் நடவடிக்கைகளில்சமீபத்தியதுதான். இவற்றில்  பாதுகாத்துக் கொள்ள முடியாத தனிநபர்கள் FBI தூண்டிவிடுவோரால் பயங்கரவாதத் திட்டங்கள் என்று கூறப்படுபவற்றின் பொறியில் தள்ளப்படுகின்றனர். இவை முற்றிலும் கூட்டாட்சி அதிகாரிகள் தோற்றுவிக்கும் கற்பனை நிகழ்வுகள்தான்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை வாரங்கள்தான் உள்ளன என்ற நிலையில், இந்த வழக்கு அமெரிக்கப் பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தும் உறுதியான அரசியல் செயற்பட்டியலுக்கு உதவுகிறது. இதனால் நிர்வாகம் வெளிநாட்டில் அமெரிக்க இராணுவவாதம் மற்றும் உள்நாட்டில் இடைவிடா பொலிஸ் அரச அதிகாரங்களைக் கட்டமைத்தல் ஆகியவற்றிற்காக முற்றிலும் போலித்தனமான பயங்கரவாத அச்சுறுத்தலை உருவாக்குகிறது.

21 வயதான காசி மகம்மது ரெஜ்வனுல் அஷான் நபிஸ் பிணை கொடுக்கப்படாமல் காவலில் வைத்திருக்கப்பட வேண்டும் என்று ஒரு குறுகிய விசாரணைக்குப் பின் ப்ரூக்லின் கூட்டாட்சி நீதிமன்றம் புதன் அன்று உத்தரவிட்டது. இவர் அமெரிக்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் மாணவர் வதிவிட அனுமதியில் கணினி விஞ்ஞானம் படிப்பதற்கு நுழைந்தவர். இவர் மத்திய வங்கிக் கூட்டமைப்பு கட்டிடத்தைத் தகர்க்க முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து இரண்டு கட்டிடம் தள்ளி உள்ளது. அக்கட்டிடத்தை 1000 இறாத்தல் குண்டை ஒரு வாகனத்தில் வைத்துத் தகர்க்க இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உண்மையில் இக்குண்டு, 20 முதல் 50 இறாத்தல் நிறையான வெடிமருந்துகள் இருப்பதாகக் கூறப்படுவது ஒரு போலிக் குண்டு ஆகும். அதைப் பற்ற வைக்கும் போலிக் கருவி, அதைச் செலுத்த இருந்த வாகனம் போல் அனைத்துமே நியூயோர்க் நகரத்தின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பணிப்பிரிவின் இரகசிய முகவர்களால் வழங்கப்பட்டவை. அப்பிரிவிற்கு FBI மற்றும் நியூயோர்க் பொலிஸ் துறை ஆகியவற்றின் முழு ஆதரவும் கிடைக்கும்.

இக் கைது பற்றி அறிவிக்கையில், பொதுமக்களுக்கு இதில் ஆபத்து ஏதும் வந்திருக்க வாய்ப்பில்லைஏனெனில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பணிப்பிரிவு நியூயோர்க் மக்களுடைய..... பாதுகாப்பின் நிமித்தம் முழுச் செயற்பாட்டையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தது.என்று FBI  உறுதியளித்துள்ளது.

உண்மையில் சதி எனக் கூறப்படுவதில் மேலாதிக பங்கு ஒரு இரகசிய FBI முகவர், அல்குவைதாவிற்கு உதவுபவர் என்று காட்டிக் கொண்ட தன்மையில் இருந்தது. போலிக் குண்டை கைப்பற்றப்பட்ட மத்திய வங்கிக் கூட்டமைப்பு கட்டிடத்தில் சேர்ப்பதுகூட FBI இரகசிய முகவரால் செய்யப்பட்டது. ஏனெனில் நபிஸிக்கு வாகனம் ஓட்டத் தெரியாது.

கூட்டாட்சி அதிகாரிகள் தங்கள் குற்றப் பத்திரிகையில் நபிஸின் செயற்பாடுகள் அமெரிக்காவில் அல் குவைதா தொடர்புகளை தீவிரமாகத் தேடியடைய முற்பட்டனஎன்பதையும் கொண்டுள்ளது என்றாலும், அவர் இதை எப்படிச் செய்தார், அது எப்படி எதிர்பார்த்துக்கொண்டிருந்த FBI கரங்களுள் நேரே அவரைக் கொண்டுவந்தது என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

இணைய தளத்தை ஆராயும், குடியேறியுள்ள முஸ்லிம் சமூகங்களிடம் இருந்து ஏதேனும் தகவல்கள் பெறமுடியுமா என்று நினைக்கும் கூறுபாடுகள், பங்களாதேஷ்க்காரர் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை குறித்து சீற்றத்தை வெளியிடுவது பற்றிக் கண்டு, அவரை ஒரு பயங்கரவாதி என்று தயாரித்துக் காட்ட முயன்றன.

பங்களாதேஷின் அதிகாரிகள் அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் நபிஸ் தொடர்பு கொண்டதற்கான குறிப்புக்கள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

டாக்காவில் ஒரு வங்கியில் மூத்த துணைத் தலைவராக இருக்கும் இந்த இளைஞரின் தந்தை காசி மகம்மது அஷ்ஸனுல்லா, தன்னுடைய மகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஓர் இனவாத சதித்திட்டம் என்று கண்டித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை நாங்கள் உயர்கல்விக்காக அனுப்பியுள்ள ஒரு சிறுவனுடன் விளையாடுகிறதுஎன்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். என்னுடைய மகனுக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மையே அல்ல. அவனுக்கு ஒரு கார் கூட ஓட்டத்தெரியாது. எப்படி ஒரு வாகனத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்க முடியும்?

ஒரு பொறியில் அவன் விழுந்துவிட்டான் என்று தந்தை கூறினார்.

பாரக் ஒபாமா ஜனாதிபதி பதவி ஏற்றதில் இருந்து, தனித்தனியே கிட்டத்தட்ட 50 வழக்குகளில் தனிநபர்கள் மீது பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை FBI மூலம் அல்லது ஏனைய பொலிஸ் துறைக்கு தகவல் கொடுப்போர்/ஆத்திரமூட்டும் முகவர்கள் ஆகியோரால் முன்வைக்கப்பட்டவை ஆகும்.

கடந்த தசாப்தத்தில் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த வழக்குகளில் மூன்று மட்டும்தான் FBI இன் வேண்டுமென்றே மாட்டிவைக்கும் செயலினால் உருவாக்கப்படவில்லை.

கடந்த மாதம்தான் ஒரு மொரோக்கோ நாட்டில் இருந்து வந்து குடியேறியவர் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டார். இந்த வழக்கில் FBI முகவர்கள் அவருக்கு ஒரு போலிக்குண்டு, செயல்படாத துப்பாக்கி ஆகியவற்றை தயாரிக்கப்பட்ட பயங்கரவாதச் செயலை நடத்துவதற்கு கொடுத்தனர். அது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தலைநகர கட்டிடத்தைத் தகர்க்கும் நோக்கமுடைய செயல் என்றனர்.

ஓரேகோன் போர்ட்லாந்தில் இன்னும் விசாரணையை எதிர்நோக்கி இருப்பவர், முகம்மது முகமட் ஆவார். நவம்பர் 2010ல் 19 வயது இருக்கும்போது கைது செய்யப்பட்ட இவர் ஒரு FBI செயற்பாட்டில், கிட்டத்தட்ட நியூயோர்க் நகரத்தில் நபிஸ் மீது குற்றம்சாட்டப்பட்டதை ஒத்த செயலுக்காக கைதானார். போர்ட்லாந்து கிறிஸ்துமஸ் மர அலங்கார விளக்குகள் இடத்திற்கு அருகே ஒரு வாகனத்தில் போலி வெடிகுண்டை வெடிக்க முயற்சித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் தொடர்புடைய பொருட்கள் அனைத்துமே FBI உடையதாகும். இது தன்னால் தயாரிக்கப்பட்ட சதித்திட்டத்தில் இழுப்பதற்கு முன், இந்த இளைஞரை 17 வயதில் இருந்து கண்காணித்து வந்தது.

இத்தகைய இழிந்த போலி செயல்களில் ஒன்று நியூயோர்க் நகரத்தில் 2009ம் ஆண்டு நான்கு அமெரிக்கக் கறுப்பின முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. நியூயோர்க்கில் இருந்த இவர்கள் 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானி-அமெரிக்க தூண்டிவிடும் முகவர், அந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு  250,000 அமெரிக்க டாலர் கொடுத்து ஒரு யூத ஆலயத்திற்கு வெளியே போலி குண்டுகளை வைப்பதற்கான நம்பகத்தன்மையைக் கொடுத்தார். மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர் அவருடைய இறந்து கொண்டிருக்கும் சகோதரர் ஓர் உயிர்த்த கல்லீரல் மாற்று பெறுவார் என்றும் அதற்கு ஈடாக அவர் இச்செயலில் பங்கு பெற வேண்டும் என்றும் கூறப்பட்டார். மற்றவற்றைப் போலவே இந்த வழக்கிலும் பொறியில் அகப்பட்டுக் கொண்டவர்கள் எவருக்கும் நிதிவசதி கிடையாது, அத்தகைய செயலைப் பற்றிய அறிவும் கிடையாது. FBI இனால் தூண்டிவிடுமுன் இது போன்ற செயல்களை நடத்த வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு கிடையாது.

நியூயோர்க் வழக்கில், தலைமை நீதிபதி கொல்லீன் மக்மஹோன் பின்வருமாறு அறிவித்தார்: சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி குற்றம் ஏதும் நடந்திருக்காது என்று நான் நம்புகிறேன்; அரசாங்கம்தான் இதைத் தூண்டிவிட்டது, திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தியது.

இன்னும் சமீபத்தில் அரசாங்கம் இதேபோன்ற வழிவகைகளை வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு, போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பிரிவினர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. இரகசிய முகவர்கள் க்ளீவ்லாந்தில் இருந்த ஐந்து இளைஞர்களை அராஜகவாதிகள், பாலம் ஒன்றை FBI இரகசிய முகவர் கொடுத்த போலிக் குண்டுகளால் தகர்க்க முற்பட்டனர் என்று பொறியில் அகப்பட வைத்தனர். சிக்காகோவில் மே 2012 நேட்டோ உச்சிமாநாட்டின்போது நடந்த எதிர்ப்புக்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக பயங்கரவாதக் குற்றங்கள், சதித்திட்டங்கள் ஆகியவை இரகசிய பொலிஸ் தகவல் வழங்குவோரால் முன்வைக்கப்பட்டன.

பயங்கரவாதச் சதித்திட்டம் ப்ரூக்லினில் அறிவிக்கப்பட்டு, வெகுஜன செய்தி ஊடகத்தில் பரபரப்புடன் வெளியிடப்பட்ட அன்றே, மற்றொரு பயங்கரவாதப் போலி செயல்பாடு இன்னும் அமைதியான முறையில் மன்ஹாட்டனில் நடத்தப்பட்டது. அங்கு முன்னாள் டெக்சாஸ் பழைய கார் விற்பனையாளர் மன்சூர் அர்பப்சியார் அரசாங்கம் தயாரித்த விந்தையான சதித்திட்ட வழக்கில் குற்றம் செய்தவர் என்ற குறைந்த குற்றங்களை ஒப்புக் கொண்டார். இதில் ஈரானிய அரசாங்கம் மெக்சிகோவில் இருக்கும் ஜேடாஸ் போதை மருந்துக் கும்பலில் இருந்து ஒரு கையாளைத் தேர்ந்தெடுத்து வாஷிங்டன் டி.சியில் சவுதி அரேபியத் தூதரைப் படுகொலை செய்ய முற்பட்டார் என்ற தகவலை முன்வைத்தது.

இச்சதித்திட்டத்தின் கெட்டித்தனம் சந்தேகத்தினை உருவாக்க கூடாது, மாறாக விழிப்பு உணர்வைத்தான் தோற்றுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்க வக்கீல் பிரீத் பரரா குற்றம் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அறிவித்தார். இது இக்கதை நம்பகத்தக்கது அல்ல என்பதைத்தான் முற்றிலும் ஒப்புக் கொள்ளுகிறது.

எதற்காக அர்பப்சியார் ஓர் உயர்மட்ட அரசியல் படுகொலையைச் செய்வதற்கு போதைக் கும்பல் ஜேடாஸ் போன்றவற்றின் உறுப்பினரை (இதில் அமெரிக்க  முகவர் அவ்வாறாக காட்டிக்கொண்டார்) நாட வேண்டும். இன்னும் வேடிக்கை ஈரானிய அரசாங்கம் எதற்கு அத்தகைய பணியைச் செய்வதற்கு முன்னாள் பழைய கார் விற்பனை செய்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதும் சரியாக விளக்கபடவே இல்லை. இந்த வழக்கில் அவரின் மன உறுதிப்பாடும் ஒரு தீவிரப் பிரச்சினையாயிற்று. அர்பப்சியார் தன்னுடைய உடன்பாட்டுக் கடிதத்தில் அமெரிக்க முகவரிடம் இருந்துதான் தூதரைக் கொல்லும் திட்டம் முன்வைக்கப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதவில்லை.

வழக்கின் கூறுபாடுகள் அனைத்தும் அப்பாவி அர்பப்சியார், போதை மருந்து வழக்கில் பொறியில் அகப்பட்டுக் கொண்டார் என்பதைக் காட்டுகிறது. அதன் பின்னர் அவர் அரசாங்கத்தால் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்தலை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆத்திரமூட்டும் செயலில் பயன்படுத்தப்பட்டார்.