சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Israel launches missile strike against Syria

இஸ்ரேல் சிரியாவிற்கு எதிரான ஏவுகணைத் தாக்குதலை நடத்துகின்றது

By Niall Green
12 November 2012
use this version to print | Send feedback

கடந்த வார அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பாரக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிரான அவற்றின் போர் உந்துதலை முடுக்கி விட்டுள்ளன. மத்திய கிழக்கு நாட்டில் நடக்கும் 20 மாதக் கால மோதலில் மிகத் தீவிரமான விரிவாக்கமாக இஸ்ரேலியப் படைகள் சிரியப் பகுதி மீது ஞாயிறன்று ஏவுகணை ஒன்றைச் செலுத்தின.

ஒரு தொழில்நுட்பரீதியாக அபிவிருத்தியடைந்த நிலையில் இருக்கும் தமுஸ் (Tammuz) வழிகாட்டி ஏவுகணையால் நடத்தப்பட்ட இத்தாக்குதல், 1973 யோம் கிப்பூர்ப் போருக்குப் பின் சிரியா மீது இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய முதலாவது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் ஆகும். இஸ்ரேலியப் போர் விமானங்கள் 2007ல் சிரியாவில் இருப்பதாகக் கூறப்படும் அணுத்திட்ட நிலையத்தின் மீது தாக்கின. ஆனால் இரு அரசுகளுமே உத்தியோகபூர்வமாக அந்த நடவடிக்கைகையை உறுதிப்படுத்தவில்லை.

இஸ்ரேலிய ஏவுகணை ஒரு சிரிய இராணுவத் தளத்தைத் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் டமாஸ்கஸில் உள்ள அரசாங்கம் விளைவிக்கப்பட்டுள்ள சேதம் குறித்த எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையின் தாக்குதல் கோலான் குன்று பகுதியில் விழுந்த ஒரு சிரிய எறிகுண்டிற்கு பிரதிபலிப்பாக  நடத்தப்பட்டது. அப்பகுதியை இஸ்ரேல் 1967ல் இருந்து சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இத்தாக்குதலில், எவரும் கொல்லப்படவும் இல்லை, காயமுறவும் இல்லை. இது 120 mm சிரிய டாங்கி தவறான திசையில் இயக்கப்பட்டதின் விளைவு எனத் தோன்றுகிறது.

தமுஸ் ஏவுகணை சிரியப்பகுதியை தாக்கிய பின்னர் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாகவும் மற்றும் மேலதிக தாக்குதலை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை ஊடாக சிரிய படையினருக்கு ஒரு செய்தி அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தது.

எட்டு சிரிய குண்டுகள் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கோலான் குன்றின் ஒரு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் விழுந்துள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. இவை சிரிய அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்இடையே நடக்கும் மோதலில் தவறாக ஏவப்பட்ட குண்டுகளாகவும் இருக்கலாம். இவற்றிற்கு இஸ்ரேலியப் படைகள் எந்த இராணுவ பதிலடியையும் கொடுக்கவில்லை.

அமெரிக்கத் தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் சிரிய குண்டுகள் தவறாக விழுந்தவை குறித்து இஸ்ரேல் பொருட்படுத்தாமல் இருக்கையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் இப்பொழுது தாக்குதல் நடாத்த எடுத்துள்ள முடிவு வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துடனான மோதலில் ஒரு புதிய கட்டத்தில் நுழைகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

பிரதான சக்திகளுக்கும் சிரிய ஆட்சிக்கும் இடையே வெளிப்படையான மோதலை நோக்கி திரும்புவதற்கான மேலதிக சான்று பிரித்தானியாவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தளபதி சேர் டேவிட் ரிச்சார்ட்ஸினால் கொடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று அவர் பிபிசியிடம் சிரியாவில் பிரிட்டிஷ் படைகள் இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்று வெளிப்படுத்தினார்.

பிபிசி தொலைக் காட்சியின் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் தளபதி ரிச்சார்ட்ஸ் சிரியாவில் மனிதாபிமான நெருக்கடி குளிர்காலத்தில் மோசமடையலாம் என எதிர்பார்ப்பதாகவும் இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தலையீட்டிற்கானஅழுத்தத்தை அதிகரிக்கலாம் என்று கூறினார்.

 இந்த விடயங்களை அனைத்தையும் கவனிப்பதற்கு எங்களிடம் அவசரத் திட்டங்கள் உள்ளன என்பது வெளிப்படை. இந்த விருப்பத் தேர்வுகள் தொடர்ந்து ஆராயந்து உறுதிபடுத்துவதுதான் எனது பணி. இதனால் நாங்கள் அவற்றில் ஈடுபடமுடியும், அவை நம்பகத் தன்மை உடையனவாக இருக்கும்என்று தளபதி ரிச்சார்ட்ஸ் கூறினார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் உயர்மட்ட அதிகாரி தன் கருத்துக்களை மனிதாபிமானவார்த்தைகளில் தெரிவித்தாலும், பிரித்தானிய மற்றும் நட்புப் படைகள் சிரியா மீது படையெடுப்பது ஒரு போராகிவிடும். அது சிரிய மற்றும் முழுப் பிராந்தியத்தையும் இன்னும் ஆழ்ந்த கொந்தளிப்பில் தள்ளுவதுடன், டமாஸ்கஸை எதிர் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத்தூண்டும்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தங்கள் நேட்டோ மற்றும் மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் அத்தகைய இராணுவத் தலையீட்டைக் மேற்கொள்வது ஈரான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் பரந்த மோதலைத் தூண்டும். அந்நாடுகள் அசாத் ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதுடன், அப்பிராந்தியத்தில் வாஷிங்டன் தலைமையில் நடக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு வெடிப்பினால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கின்றன.

சிரியாவிற்கு எதிரான அத்தகைய பெரும் தாக்குதலுக்குத் தயாரிப்பாக, ஒபாமா நிர்வாகம் இதுவரை அது நம்பியிருந்த போருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புச் சக்திகள் சிலவற்றிடம் இருந்து தந்திரோபாயமாக விலகிச்செல்லத் தொடங்கியுள்ளது.

அக்டோபர் 31ம் திகதி குரோஷியாவில் ஷாக்ரெப்பில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வெளிவிவகார செயலாளர் கிளின்டன் அமெரிக்கா அதன் ஆதரவை சிரியத் தேசியக் குழுவிடம் (SNC)  இருந்து ஒரு புதிய எதிர்ப்புத் தலைமைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது என அறிவித்தார்.

சிரிய தேசியக் குழுவை ஓராண்டிற்கும் மேலாக சிரிய மக்களின் சட்டபூர்வமானபிரதிநிதி என்று ஆதரவு கொடுத்தபின், கிளின்டன் அக்குழுவினரை எதிர்த்தரப்பின் சாத்தியமான தலைமையாக இனி கருதப்பட முடியாதுஎன்றார்.

சிரிய தேசிய குழு ஒரு பெரிய எதிர்த்தரப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம்என்று கிளின்டன் அனுமதித்துள்ளார். ஆனால் அந்த எதிர்த்தரப்பில் சிரியாவிற்குள் இருக்கும் மக்களும், தாங்களும் ஒரு சட்டபூர்வமான குரல் அதுவும் கேட்கப்பட வேண்டும் என்பவர்களும் அடங்கியிருக்க வேண்டும்.என்றார் கிளின்டன்.

CIA மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் நெருக்கமான பிணைப்புக்களை உடைய வசதிபடைத்த துருக்கியை தளமாகக் கொண்ட வெளிநாடுகளில் உள்ள சிரியர்களின் கூட்டான சிரியத் தேசியக் குழு மிகவும் மதிப்பிழந்திருப்பதுடன், சிரியாவினுள்ளும் அதிக செல்வாக்கையும் பெற்றிருக்கவில்லை. வாஷிங்டன் உடனடியாகவும், ஒருதலைப்பட்சமாகவும் சிரிய தேசிய குழுவை கைவிட்டிருப்பதானது, சிரியாவில் சமாதானத்தையும்  “ஜனநாயகத்தையும் பாதுகாக்க தாம் இயங்குவதாக கூறுவதன் போலித்தன்மையை வெளிப்படுத்திக்காட்டுகின்றது

வெளிவிவகார செயலாளர் கிளின்டன் இதன்பின் ஒரு புதிய சிரிய எதிர்த்தரப்பு முகாம் அமைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளிவிவகாரத்துறை, பெயர்கள் மற்றும் அமைப்புக்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளதாகவும், இவர்கள் எந்தத் தலைமைக் கட்டமைப்பிலும் உள்ளடங்கியிருக்க வேண்டும்என்றும் அவர் கூறினார்.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் ஆடம்பர ஓட்டல் ஒன்றில் வாஷிங்டன் விரைவில் செயல்பட்டுத் தன் சிரிய வாரிசுகளின்  கூட்டத்தை நடத்தியது. ஞாயிறன்று முடிவடைந்த நான்கு நாட்கள் கூட்டத்தில் அமெரிக்கா, கட்டார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு, 5560 பேர் அடங்கிய மன்றம் ஒன்றில் பல எதிர்த்தரப்புக் குழுக்கள், தனிநபர்களை கொண்ட ஒரு தற்காலிக உடன்படிக்கைக்கான முயற்சிகள் நடைபெற்றன.

கிட்டத்தட்ட ஞாயிறு அதிகாலை 3 மணியை ஒட்டி டோஹா பேச்சுக்கள் சரிவில் விளிம்பில் இருப்பது போல் தோன்றின. சிரிய தேசிய குழுவின் பிரதிநிதிகள் புதிய எதிர்த்தரப்பு முகாமில் தங்கள் செல்வாக்கைத் தக்க வைக்க முயன்றனர். பேச்சுக்களில் கலந்துகொண்ட ஒரு  நபர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சிரிய தேசிய குழு இறுதியில் புதிய மன்றத்தில் பின் இருக்கையை பங்கை ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கிறது. ஒரு குடைக்குழு நிறுவப்பட்டு அமெரிக்காவின் அங்கீகாரம் பெறும், அதில் சிரிய தேசிய குழு இருக்கலாம் அல்லது இல்லாமற்போகலாம் என்ற அச்சுறுத்தல் வந்தபின்தான் இந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இப்புதிய எதிர்த்தரப்புத் தலைமைக்கு, சிரிய தேசிய எதிர்த்தரப்பு கூட்டணியும் புரட்சிகர சக்திகளும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வெளிவிவகாரத்துறை, பென்டகன் மற்றும் CIA உடைய உத்தரவுகளுக்கு இன்னும் நேரடியாக கீழ்படிந்து செயல்படும்.

புதுப்பிக்கப்பட்ட எதிர்த்தரப்பு முகாம் இன்னும் ஒன்றுபட்ட முகத்தை, அமெரிக்கத் தலைமையிலான மறைமுகப்போரில் சிரியாவிற்கு எதிராக வழங்கும் என்றும் வாஷிங்டன் நம்புகிறது. மதிப்பிழந்துவிட்ட சிரிய தேசிய குழு போல் இல்லாமல் நாட்டிற்குள் கூடுதலான செல்வாக்கைச் செலுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

பல மதப்பிரிவுகள், நாட்டைவிட்டு வெளியே இருக்கும் உயர்கல்வியனர், அதிருப்யடைந்த வணிகர்கள், அசாத் ஆட்சியில் இருந்து நீங்கியவர்கள் மற்றும் இஸ்லாமியப் இராணுவக்குழுக்களின்  தளபதிகள், புதிய சிரிய எதிர்த்தரப்பு மற்றும் புரட்சிகரப் படைகளின் கூட்டணியினர் ஆகியோர் பழைய சிரியத் தேசியக் குழுவைவிட செல்வாக்கு பெற்றிருப்பர் என்று நம்பப்படுகிறது.

சிரிய எதிர்த்தரப்பு மன்றத்தின் புதிய தலைவர் மோவஸ் அல்-கதிப் ஆவார். இவர் ஒரு சுன்னி முஸ்லீம் மதகுரு ஆவார். டமாஸ்கஸில் உமயத் மசூதியின் முன்னாள் இமாமாக இருந்த கதிப் ஆட்சிக்கு  எதிராகப் பலமுறை குறைகூறியதாக சிரிய அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டபின் ஜூலை மாதம் சிரியாவில் இருந்து வெளியேறிவிட்டார்.

அரசியல்ரீதியாகவும், மதத்திலும் மிதவாதிஎன்று கருதப்படும் கதிப் சிரிய எதிர்த்தரப்பின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையே ஒரு சமரச வேட்பாளர் ஆவார். அனைத்துப்பிரிவுகளும் வெளிநாட்டினருடைய ஆதரவைப் பெறுவதற்குப் போட்டியிடுகின்றன. அசாத் ஆட்சி கவிழ்ந்தால் வெற்றியில் கிடைக்கும் ஆதாயங்களில் பங்கைப் பெறுவதற்கும் போட்டியிடுகின்றன. டோஹா மாநாட்டில் வெளிப்படையாகத் தெரிந்த இப்பிளவுகள் இருக்கையில், எதிர் சக்திகள் அனைத்தையும் கதிப் ஒன்றுபடுத்துவாரா என்பது சந்தேகம்தான்.

ஒரு முக்கிய டமாஸ்கஸ் மசூதியின் தலைவர் என்ற முறையில் கதிப்பின் நிலை மிதவாத சுன்னிகள் மற்றும் சிரியத் தலைநகரின் நகர்ப்புற மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கம் உடையது. அசாத்தின் சர்வாதிகாரத்திற்குப் பரந்த மக்கள் வெறுப்பு இருந்தபோதிலும்கூட, சுன்னி குறுங்குழுவாத அடித்தளமுடைய கிளர்ச்சிஇராணுவக் குழுக்கள் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் அசாத்தின் படைகளை வலுவிழக்கச் செய்து உறுதிகுலைக்க நம்பும் அதிரச்சி படைகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு பல சிரிய மக்கள் ஆழ்ந்த விரோதத்தைக் கொண்டுள்ளனர்.

ஆனால் கதிப் திடீரென ஏற்றம் பெற்றதின் முக்கிய நோக்கம் வாஷிங்டனுக்கு மற்றொரு முகத்தை காட்டுவதற்காகும். இதற்கும் பரந்த ஆதரவு இல்லாமல் சிரியத் தேசியக் குழு போல் அகற்றப்பட்டுவிட முடியும். அது வாஷிங்டனுக்குப் பின்னால் நின்று சிரிய மக்களின் சமூகக் கோரிக்கைகளை அடக்கி, மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய நலன்களைச் செயல்படுத்தும்.