சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Worst factory fire in Bangladeshi history

பங்களாதேச வரலாற்றிலேயே மோசமான ஆலைத் தீவிபத்து

By Peter Symonds
26 November 2012
use this version to print | Send feedback

சனிக்கிழமை இரவு அஷுலியா தொழில்துறைப் பகுதியில் எட்டு மாடி Tazreen Fashions கட்டிடத்தை அழித்த பங்களாதேச வரலாற்றிலேயே மோசமான ஆலைத் தீவிபத்தில் குறைந்தப்பட்சம் 112 தொழிலாளர்கள் இறந்து போயினர், 150 பேர் காயமுற்றனர். நெருப்பு தரைமட்டப் பகுதியில் தொடங்கியது; மேல் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களைப் பொறியில் தள்ளியது. எரியும் தீயில் இருந்து குதித்துத் தப்ப முயன்றவர்கள் சிலர் இறந்துபட்டனர், பலர் காயமுற்றனர்.

தீயணைக்கும் படையினர் பல மணி நேரம் போராடி நெருப்பைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர்; மேல் தளங்களில் இறந்தவர்களின் மோசமாக எரியுண்டிருந்த சடலங்கள் அகற்றப்பட்டன. தீயணைக்கும் துறையின் செயல்துறை இயக்குனரான மேஜர் மகம்மது மஹ்பூப் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் ஆலைக் கட்டிடத்திற்கு வெளியே தப்பிச் செல்லும் கதவுகள் அமைக்கப்படவில்லை என்றார்.

ஆலையில் மூன்று படிக்கட்டுக்கள் உண்டு; அவை அனைத்தும் தரைத்தளத்தின் கீழே சென்றன. எனவே தொழிலாளர்கள் கட்டிடத்தை நெருப்பு சூழ்ந்தபோது வெளியே வரமுடியவில்லை என்றார் மஹ்பூப்.ஆலைக்கு வெளியே வரக்கூடிய ஒரு வெளியேறும் பாதை இருந்திருந்தால்கூட, இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும்.

இந்த ஆலை மே 2010ல் திறக்கப்பட்டது; கிட்டத்தட்ட1,500 தொழிலாளர்களை டி சட்டைகள், போலோ சட்டைகள் மற்றும் கம்பளிச் சட்டைகளை தயாரிக்க நியமித்திருந்தது. தீவிபத்து ஏற்பட்டதற்குத் துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், தீயணைப்புத் துறை இயக்குனர் தளபதி அபு நைம் முகம்மது ஷஹிதுல்லா நிருபர்களிடம் இது ஒரு மின்சார மின்சுற்று கோளாறினால் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

உயர்மட்டத் தளத்தின் மேல்பகுதி மீது முயன்று ஏறியிருந்தவர்களைத் தீயணைக்கும் படையினர் மீட்க முடிந்தது. மற்றவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள் கட்டிட மாறுதல்களுக்குப் பயன்படுத்திய சார மூங்கில்களைப் பயன்படுத்தித் தப்பினர். ஆலையில் நெருப்புப் பிடித்த வேளையில் கூடுதல்மணி நேரப் பணியில் குறைந்தபட்சம் 600 பேர் ஈடுபட்டிருந்தனர்.

தப்பிப் பிழைத்த ஒருவரான மகம்மது ஷபுல் ஆலம் கார்டியனிடம் விளக்கினார்: அப்பொழுது மாலை 6.45; நெருப்பு எச்சரிக்கை மணி ஒலித்தது; நான் வெளியே ஓடிவந்தேன். இரண்டு, மூன்றாம் மாடிகளுக்குச் செல்லும் வழியில் இருந்த கிரில்கள் மூடப்பட்டு இருந்தன என்று கேள்விப்பட்டேன். நான் கீழிறங்கியபோது, மகளிர் பயன்படுத்திய இரண்டு படிக்கட்டுகளிலும் நெருப்பைக் கண்டேன். என்னுடைய மனைவியில் சகோதரியைப் பற்றி இன்னமும் ஏதும் தெரியவில்லை.

மற்றொரு தொழிலாளி அபு தலேப் பங்களாதேசத் தளமுடைய இண்டிபெண்டென்டிடம் ஆலைக்குள் இருந்து தீயணைப்புக் கருவிகள் போதுமானதாக இல்லை என்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு தீ பாதுகாப்புப் பயிற்சி ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் சபினா யாஸ்மின் தன் மருமகள் தீவிபத்தில் இறந்துவிட்டார் என்றும் மகனை இன்னும் காணவில்லை என்றும் கூறினார். ஆலை உரிமையாளர் தூக்கிலிடப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் அவர். அவரால் பலரும் இறந்து விட்டனர், பலரைக் காணவில்லை.

பங்களாதேச அதிகாரிகள் பொலிஸ், இராணுவ சிப்பாய்கள் மற்றும் எல்லைக்காவல் படையினர்களை அனுப்பி வைத்தனர்; இழிவுற்ற விரைவு நடவடிக்கைப் பிரிவும் இதில் அடங்கும்; இவர்கள் அனைவரும் ஆலைக்கு வெளியே ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று கூடியிருந்த ஆயிரக்கணக்கான கவலையும் கோபமும் கொண்ட உறவினர்களைக் கட்டுப்படுத்தினர். தொழில்துறை பொலிஸ் அதிகாரி மொக்தர் ஹொசைன் பிடிநியூஸ்24.காமிடம் பாதுகாப்புப் படையினர் கூட்டத்தின் மீது தடியடி நடத்திக் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர் என்றார்; இது உறவினர்கள் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகளை கண்டித்ததை அடுத்து ஏற்பட்டது.

அரசாங்கம், முதலாளிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஏற்கனவே சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடக்கியுள்ளனர்; இது பங்களாதேச மக்கள் சீற்றத்தைத் திசை திருப்பவும் நாட்டிற்கு நிறைய நிதியளிக்கும் ஆடைத் தொழிலின் மீதான பாதிப்பைக் குறைக்கவும் பயன்படும்; இது பலமுறை அதில் உள்ள குறைவூதியங்கள், வறிய சுகாதார, பாதுகாப்பு முறைகளுக்காகவும் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5000 அடிமை உழைப்பு நிலையங்களை கொண்டுள்ள இத்தொழில்துறை அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்காக ஆடைகளை தயாரிக்கிறது. பங்களாதேச ஏற்றுமதிகளில் ஆடைகள் கிட்டத்தட்ட 80% என்று உள்ளன; ஒரு நிதியாண்டிற்கு இத்துறையில் இருந்து கிடைக்கும வருமானங்கள் கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மகளிர் அடங்கிய 2.2 மில்லியன் மக்களுக்கு மேலானவர்கள் இத்தொழிலில் பணியில் உள்ளனர்

BGMEA எனப்படும் பங்களாதேச ஆடைகள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் 100,000 பங்களாதேச டாக்கா ($1,200) இழப்பீட்டுத் தொகையை ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஹாங்காங் தளமுடைய பெரிய நிறுவனமான லி & புங், முக்கிய நிறுவனங்களுக்காக ஆடைகளை இந்த ஆலையில் இருந்து வாங்கும் நிறுவனம், தான் பெரிதும் வருந்துவதாகவும் ஒரு ஒத்த தொகையைத் தானும் தருவதாகவும் கூறியுள்ளது. இந்த அற்பத் தொகைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மௌனமாக்குவதற்காகக் கொடுக்கப்படுபவை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

BGMEA  தலைவர் ஷபியுல் இஸ்லாம் மொகியுதின் பெரும்பாலான வாங்குபவர்கள் வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகளை  மேற்கொள்கின்றனர் என்று கூறினார். தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளில் நாங்கள் இணங்கவில்லை என்றால் நாங்கள் எங்கள் வணிகத்தை இழந்துவிடுவோம் என்றார் அவர். இக்கருத்துக்கள் போலியானவை. சோதனை ஆய்வாளர்கள் பற்றாக்குறை என்பது நாட்டின் தீயணைப்பு விதிகள் வாடிக்கையாகப் புறக்கணிக்கப்படுகின்றன என்ற பொருளைத்தான் தரும்.

தங்கள் பொதுத் தோற்றத்தை பற்றிக் கவலைப்படும் மேலை நிறுவனங்கள், பாதுகாப்புத் தணிக்கை முறைகளைத் தொடக்கியுள்ளனர்; ஆனால் அவற்றின் வெற்றுப் பூச்சுத்தன்மை சனிக்கிழமை தீவிபத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளபடி மே 2011 ல் வால் மார்ட்டிற்காக அறநெறி ஆதாரம் உடைய மதிப்பீட்டாளர் நடத்திய தணிக்கை Tazreen Fashions அமைப்பிற்கு ஆரஞ்சு நிற அல்லது மிக ஆபத்தான தரத்தை கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 2011ல் மற்றொரு ஆய்விற்குப் பின், நிறுவனம் மஞ்சள் அல்லது நடுத்தர இடர்தரம் கொடுக்கப்பட்டது; இன்னும் ஒரு தணிக்கை ஓராண்டிற்குள் நடத்தப்படும்.

வால் மார்ட்டின் செய்தித் தொடர்பாளர் கெவின் கார்ட்னர் இந்த ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டதா அல்லது வால் மார்ட்டிற்காக ஆலை இன்னும் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை என்றார். இரண்டு ஆண்டுக் காலத்தில் ஒரு ஆலை ஆரஞ்சுநிறத் தரத்தை மூன்று முறை எய்தினால் வால் மார்ட் தற்காலிகமாக அங்கிருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தும். மே 2011 ஆய்விற்குப்பின் மீறல்கள் சரிசெய்யப்படனவா என்பது பற்றி குறிப்பு ஏதும் இல்லை. டஜ்ரீனின் உரிமையாளரோ டுபா குழு அதிகாரிகளோ கருத்தறியத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளது.

ஆம்ஸ்டர்டாமை தளம் கொண்ட Clean Clothes Campaign உடைய சர்வதேச ஒருங்கிணைப்பாளர் இனகே ஜெல்டன்ரஸ்ட், Tommy Hilfiger, Gap போன்ற உலகளாவிய ஆடை முத்திரைச் சின்ன நிறுவனங்களில் இருந்து வால் மார்ட் ஆடைகள் வாங்கி விற்கிறது என்றும் பல ஆண்டுகளாக அதற்கு பல ஆலைகளும் மரணப் பொறிகளுடன் வேலை செய்ய விரும்புகின்றன என்பது தெரியும். நடவடிக்கை எடுப்பதில் அவற்றின் தோல்வி, குற்றம் சார்ந்த பொருட்படுத்தாத் தன்மை ஆகும் என்றார்.

Tazreen Fashions பெருந்தீ குறைவூதியத் தொழிலாளர் அரங்குகள் உள்ள பங்களாதேசம் மற்றும் பிற நாடுகளில் ஏறபடும் மோமான ஆலைத் தீக்களில் சமீபத்தியும் மோசமானதும் ஆகும். Clean Clothes Campaign கூற்றுப்படி, 500 க்கும் பங்களாதேச தொழிலாளர்கள் 2006ம் ஆண்டில் இருந்து ஆலைத் தீக்களில் இறந்துள்ளனர்.

2006 பெப்ருவரியில் சிட்டக்காங்கில் ஒரு ஜவுளி ஆலை தீப்பற்றி எரிந்தபோது குறைந்தப்பட்சம் 54 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் மோசமாக காயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்கள அல்லது மோசமாகக் காயம் அடைந்தவர்களில் பலர் தப்பிக்க முடியவில்லை; ஏனெனில் முக்கிய வாயிலும் பிற கதவுகளும் பூட்டி மூடப்பட்டிருந்தன. செப்டம்பர் மாதம் கிட்டத்தட்ட 300 தொழிலாளர்கள பாக்கிஸ்தானில் கராச்சி நகரத்திலுள்ள அலி என்டர்பிரைசஸிற்குச் சொந்தமான ஆடை அலையில் இறந்து போயினர். இந்த அதிக இறப்பு எண்ணிக்கை மூடப்பட்ட வெளிக்கதவுகள், அடைக்கப்பட்ட சன்னல்கள் ஆகியவற்றால் விளைந்தது.

பங்களாதேசப் பிரதம மந்திரி ஷேக் ஹசினா வஜெட்டின் உதவியாளர் ஒருவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் வாடிக்கையான அதிர்ச்சி தெரிவிப்பை, ஆலைத் தீயில் இறந்தவர்களுடையதைக் குறித்துள்ளார். ஆனால் அவருடை அரசாங்கம் பாதிப்பு அடைந்தவர்களை பற்றிக் கவலை அடையவில்லை; ஆனால் தொடர்ந்து பங்களாதேசத்தின் போட்டித்தன்மை: தொழில்துறையில் அதன் குறைவூதியத் தொழிலாளர் அரங்கு போட்டிகளில் இருந்து தொடர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதில்தான் இருந்தது.

பாதுகாப்புப் படைகள் பலமுறையும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் என்று ஜவுளித் துறைத் தொழிலாளர்கள் நல்ல ஊதியம், நிலைமைகளுக்காக நடத்துகையில் அவற்றை அடக்குவதற்குப் பயனபடுத்தப்பட்டுள்ளன. அஷுலியா தொழிற்பேட்டையில் 300 ஆலைகள் தொழிலாளர்களுக்கும் பொலிசுக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டபின் யூன் மாதத்தில் மூடப்பட்டன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் மாத ஊதியத்தை வெறும் 38 டாலர் மட்டுமே உயர்த்தியதுடன் அரசாங்கம் பந்த வேலைநிறுத்தங்களை நசுக்கியது.

சமீபத்திய தீவிபத்து குறித்த அரசாங்கத்தின் எதிர்கொள்ளல் பங்களாதேச ஆடைத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவது என்றுதான் இருக்கும்; இதை ஒட்டி இன்னும் பல மனிதக் கொடூரநிகழ்வுகள்தான் விளையும்.