சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe sees unprecedented social polarisation

முன்னோடியில்லாத வகையிலான சமூகத்துருவப்படுத்தலை ஐரோப்பா காண்கிறது

Julie Hyland
28 September 2012
use this version to print | Send feedback

மிகப் பெரிய நுகர்வோர் பொருள் நிறுவனமான யூனிலீவர் தான் மூன்றாம் உலக விற்பனை மூலோபாயத்தை ஐரோப்பாவில் பயன்படுத்தத் ஆரம்புத்துவிட்டதாக அறிவித்து. இது கண்டத்தை சூழுகின்ற பெருகும் சமூக சமத்துவமின்மைக்கு பாரிய சான்றாகும்.

அந்நிறுவனத்தின் ஐரோப்பியச் செயற்பாடுகளின் தலைவரான Jan Zijderveld இந்த முடிவு ஐரோப்பாவிற்கு மீண்டும் வறுமை வந்து கொண்டிருக்கிறது என்பதால் எடுக்கப்பட்டுள்ளது என்று அப்பட்டமாகக் கூறினார்.

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் அது விற்கும் சிறிய, மலிவுப் பொருட்தொகுப்புக்களை உற்பத்தி செய்ய, அவற்றை ஐரோப்பியச் சந்தையில் விற்பதற்கு இக்குழு ஆரம்பிக்கும். இந்தோனேசியாவில் நாங்கள் தனித்தனி ஷாம்பு பாக்கெட்டுக்களை இரண்டு அல்லது மூன்று சென்டுகளுக்கு விற்கிறோம், அப்படியும் ஓரளவிற்கு இலாபம் ஈட்டுகிறோம் என்றார் ஜிடெர்வெல்ட். அதை எப்படிச் செய்வது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் ஐரோப்பாவில் நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அதைப் பற்றி மறந்துவிட்டோம்.

இந்த மூலோபாயத்தை யூனிலீவர் ஏற்கனவே கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் பயன்படுத்தியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் முக்கூட்டின் (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்தி வங்கி) கடுமையான சிக்கன நடவடிக்கைக்கு இலக்கானவை. முக்கூட்டின் சிக்கனக் கொள்கைகள் இந்நாடுகளின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்து, பெரும் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 53.8 சதவிகிதம், 52.9 சதவிகிதம் என்று முறையே கிரேக்கத்திலும், ஸ்பெயினிலும் உள்ளது.

ஆனார் பாரிய வறியநிலை தெற்கு ஐரோப்பாவுடன் நின்றுவிடவில்லை. பிரித்தானியாவிலும், ஜேர்மனியிலும் உள்ள நிலைமைகள் பற்றிய இரு சமீபத்திய தகவல்கள் ஐரோப்பாவின் மையத்தானத்தில் இருக்கும் தீவிரச் சமூக துருவப்படுத்தல் நிலையைத்தான் வெளிப்படுத்தியுள்ளன.

Institute for Fiscal Studies (IFS), மற்றும் Institutefor Economic Research (IER) ஆல் எழுதப்பட்ட Who Gains from Growth (வளர்ச்சியினால் எவர் பயன்பெறுகின்றனர்?)   என்னும் ஆய்வுக் கட்டுரை, இயற்றியது பிரித்தானியாவில் குறைந்த மற்றும் நடத்தர வருமானம் உடைய இல்லங்களில் வாழ்க்கைத் தரங்கள் தீவிரமாக அடுத்த எட்டு ஆண்டுகளில் சரியும் என்று கணித்துள்ளது. அதன் தற்பொழுதைய இரட்டை இலக்க மந்த நிலையில் இருந்து நாடு மீளமுடிந்தாலும் இந்நிலைதான் இருக்கும்.

இத்தகைய இல்லங்கள் தங்கள் வருமானங்கள் 2020 ஐ ஒட்டி 15% சரிவைத்தான் காணும். ஒரு சாதாரண குறைவூதியக் குடும்பம், தற்பொழுது 10,600 பவுண்டுகள் என்று ஆண்டு வருமானத்தில் திணறுகையில், அதன் நிகர வருமானம் தசாப்தத்தின் முடிவில் 9,000 பவுண்டுகள் என்று ஆவதைக்காணும். 22,900 பவுண்டுகள் ஆண்டு வருமானத்தைக் கொண்ட ஒரு நடுத்தர வருமானக் குடும்பம் 3% குறைவைக் காணும். இதற்கு மாறாக செல்வந்தர்கள் வாழ்க்கைத் தரங்களில் ஏற்றத்தைக் காண்பர்.

இக்கணிப்புக்கள் அனைத்தும் கூடுதலாக மோசமாகவே இருக்கும் ஏனெனில் இந்த அறிக்கை 2020 வரை ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.5 முதல் 2.5% வரை இருக்கும், அத்துடன் பொதுநலச் செலவு வெட்டுக்கள் இருக்காது என்பதை கருத்தில் கொண்டுள்ளது.  உண்மையில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்.

கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி சமீபத்தில் தான் சுகாதார நலன்கள் மீது இன்னும் தாக்குதல் நடத்த இருப்பதை அடையாளம் காட்டியுள்ளது. சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் பொதுநலச் செலவுகளில் இன்னும் 10 பில்லியன் பவுண்டுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள 18 பில்லியன் பவுண்டுகளைத் தவிர மேலதிகமாக செயல்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கைகள் 2.5 மில்லியன் மக்கள் உத்தியோகப்பூர்வமாக வேலையின்மையில் உள்ளபோதும், பெரும்பாலான தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கள், தேக்கங்களைச் சந்திக்கின்றனர் என்ற நிலையில் வந்துள்ளன. கிட்டத்தட்ட 3.6 மில்லியன் குழந்தைகள் உத்தியோகப்பூர்வமாக வறுமையில் வாழ்பவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முன்னதாக நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்று ஐந்துக்கு நான்கு ஆசிரியர்கள் குழந்தைகள் உணவின்று இருப்பதாக தகவல் கொடுத்துள்ளதாகக் காட்டுகிறது.

இதற்கு மாறாக, இந்த ஆண்டின் சண்டே டைம்ஸ் கொடுத்துள்ள செல்வந்தர் பட்டியல் 1,000 பெரும் செல்வந்தர்களின் இணைந்த சொத்துக்கள் மிகப் பெரிய அளவிற்கு 414.260 £பில்லியன் என உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

 

ஜேர்மனியின் தொழிலாளர் துறை அமைச்சரகம் தயாரித்துள்ள நான்காண்டுகளுக்கு ஒருமுறை வரும் அறிக்கையான செல்வம் மற்றும் வறுமைக்கான அறிக்கை -The Wealth and Poverty Report- செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவு அதிகரித்துள்ளது எனக்காட்டுகிறது. இந்நாடுதான் ஐரோப்பாவில் ஒரேயொரு பொருளாதார வெற்றிக் கதையைக் கொண்டுள்ளது எனச் சாதாரணமாகப் பிரகடனம் செய்யப்படுகிறது.

மக்களில் மிக அதிகச் செல்வம் படைத்த 10 சதவிகிதத்தினர் நாட்டின் மொத்தச் சொத்தில் கொண்டுள்ள பங்கு 1998ல் 45% என்பதில் இருந்து 2008ல் 53% என உயர்ந்துள்ளது. அரைவாசி மக்கள் தொகையினர் 1.0% த்தான் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட மக்களில் 16% வறுமை என்னும் அபாயத்தை எதிர்கொள்ளுகையில், மணிநேரக் கணக்கில் கொடுக்கப்படும் ஊதியங்கள் போதுமானதாக இல்லை. ஒரு நபர் இருக்கும் வீட்டிற்கு உணவு கொடுக்க ஒருவர் முழு நேர வேலை பார்த்தாலும் வறுமை இடர்களை அதிகப்படுத்துவதுடன் சமூக ஒருங்கிணைப்பிற்கும் குழிபறிக்கின்றது.

செய்தி ஊடகத்தின் பிரிவுகளில் கவலைக்குரிய எதிர்கொள்ளலை இரு அறிக்கைகள் கொண்டிருந்தன. பிரித்தானியாவில் The Observer  செய்தித்தாள், பிரித்தானியாவில் இத்தகைய சமூக துருவப்படுத்தலை  தவிர்க்க வேண்டும். என ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

இத்தகைய துருவப்படுத்தல் மற்றும் ஏற்கனவை நடுத்தர பிரித்தானியாவை வெற்றுத்தனமாகப் போராட வைத்திருக்கும் நிலைமையில், தனிப்பட்ட குடிமக்களுக்குப் பெரும் சேதங்களை விளைவிக்கிறது. தவிர நாட்டு அரசியல், சமூக ஒழுங்கு மற்றும் எதிர்கால சுகாதாரம், செல்வம் மற்றும் பிரித்தானியாவின் பொது நலம் ஆகியவை சேதம் அடையும். இப்படி ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று அது எச்சரித்துள்ளது.

ஜேர்மனிய தொழிலாளர் துறை அறிக்கை பற்றி Frankfurter Rundschau  பத்திரிகை எழுதுகையில், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கீழிருந்து மேலே சொத்துக்கள் மறு பங்கீட்டிற்கு உட்படுகின்றன எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. இதைச் சீராக்கும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த அறிக்கை செல்வம் குறித்த இடைவெளி இன்னும் அதிகமாகும் எனத்தான் போகும் என்றும் கணித்து, எத்தனை காலம் சமூகம் செல்வந்தர் இன்னும் அதிக செல்வத்தைப் பெறுவதைப் பொறுத்துக்கொள்ளும்? எவருக்கும் இதற்கு விடை தெரியாது. என்று கூறியுள்ளது.

ஆனால் வாடிக்கையான குறைகூறல்களைத் தவிர இரண்டு செய்தித்தாட்களில் எதுவும் சீரமைப்பதற்குக் கருத்துக்களைக் கூறவில்லை. Frankfurter Rundschau  “நம்மிடத்தில் இப்பொழுது தீர்வுகள் ஏதும் இல்லை, என்பதாக் நாம் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். நாம் முயற்சி செய்யவேண்டும்; பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவநம்பிக்கையுடன் கூறியுள்ளது.

ஒரு புதிய சமூக ஒப்பந்தம் குறித்து.... தேசிய விவாதம் தேவை என்று The Observer  தெரிவிக்கிறது. ஆனால் இது தெளிவற்றதாகவும், குறைந்தப்பட்ச திட்டங்களான தொழிலை ஒட்டிய கல்வி, குழந்தைப் பாதுகாப்பு, கௌரவமான ஊதியம் என்பவற்றைத்தான் பேசுகிறது.

இத்தகைய அழைப்புக்கள் பொருளற்றவையும், திவால்தன்மை உடையதும் ஆகும். உலகப் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி ஐரோப்பா முழுவதும் சமூக எதிர்ப்புரட்சியைச் செயல்படுத்தும் அதே ஆளும் உயரடுக்குக்குத்தான் இவை கூறப்படுகின்றன.

ஜேர்மனி மற்றும் பிரித்தானிய முதலாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்தப்படும் நிலத்தை எரிக்கும் மூலோபாயம், சமீபத்திய அறிக்கைகள் தெளிவாக்குவது போல், உள்நாட்டில் தொழிலாளர்களுக்குத்தான் பொருந்துகிறது என்பதுடன், தெற்கு ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது போல் இங்கும் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.  பெரிய சமூகவர்க்க மோதல்களுக்கும் சமூக வெடிப்புக்களுக்கும் இது இரை போன்றது என்று The Observer உம் Frankfurter Rundschau  உம் சரியாகவே கூறியுள்ளன. ஆனால் ஆளும் உயருடுக்கு நல்ல உணர்வுடன் சில தேவையான நிவாரணங்களை வர்க்க அழுத்தங்களைக் குறைப்பதற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருவருக்கும் கேட்கப்போவதில்லை.

ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் சமூகச் சீர்திருத்தம் குறித்த எக்கருத்தையும் நிராகரித்துவிட்டனர். கன்சர்வேடிவ், லிபரல் அல்லது சமூக ஜனநாயகவாதி என்று எப்படி இருந்தாலும், அவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்கள் சார்பு உடையவர்கள், வர்க்கப்போர் என்னும் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களாவர். இப்பொழுது ஐரோப்பிய  சமூக மாதிரி என்பது வரம்பிலா வறிய நிலை, தொழிற்சங்கங்களின் கண்காணிப்பு, இவற்றிற்குப் பொலிஸ் வன்முறை, அரசாங்க அடக்குமுறை என்ற நிலையில்தான் உள்ளது.

எத்தனை காலத்திற்குச் சமூகம் இந்நிலையை பொருத்துக் கொள்ள முடியும் என்பது பிரச்சினை இல்லை. தொழிலாளர் வர்க்கம் இதை மாற்றுவதற்கு எதைச் செய்யலாம், செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள பேரழிவைத் தீர்ப்பதற்கான உண்மையான தீர்வு தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வர்க்க நடவடிக்கை, வேலைத்திட்டம் ஆகியவற்றில்தான் தங்கியுள்ளது.

நிதியப் பிரபுத்துவம் பொருளாதார, சமூக வாழ்வின்மீது கொண்டுள்ள இறுக்கமான பிடி, முதலாளித்தவத்தை அகற்றுவதற்காக தொழிலாள வர்க்கம் முழு உணர்வுடன் கூடிய புரட்சிகர போராட்டத்தின் மூலம்தான் முறியடிக்கப்படுவதுடன், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை அமைப்பதற்கான போராட்டத்தை, சோசலிசக் கொள்கைகளை அடித்தளமாக கொண்டு தொழிலாளர் அரசாங்கங்களை அமைப்பதின் மூலம்தான் சாத்தியமாக்கப்பட முடியும்.