சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Netanyahu’s war ultimatum at the UN

ஐக்கிய நாடுகள் சபையில் நெத்தென்யாகுவின் போர் பற்றிய இறுதி எச்சரிக்கை

Barry Grey
1 October 2012
use this version to print | Send feedback

ஐ.நா.வின் பொதுச்சபையில் கடந்த வியாழன் அன்று இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவினால் வழங்கப்பட்ட ஆக்கிரோஷமான, ஆத்திரமூட்டும் தன்மை நிறைந்த உரை ஈரான் மீதான தூண்டுதலற்ற இராணுவத் தாக்குதலுக்கான திட்டம் மிக முன்னேறிய நிலையில் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

நவம்பர் மாதம் அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்தபின் போரைத் தொடக்குவதற்கு நெத்தென்யாகு நான்கு முதல் ஒன்பது மாதங்கள் காலக்கெடு விதித்துள்ளார்; இது ஈரானின் யுரேனிய அடர்த்தி நிலையங்களை அழிப்பதற்கு எனக் கூறப்படுகிறது. ஒரு நயமற்ற வெடிகுண்டு, எரிக்கப்படும் நிலையில் உள்ள படத்தைக் காட்டிய அவர், அடுத்த வசந்த காலத்தை ஒட்டி, தற்பொழுது அடர்த்தி விகிதத்தைக் காணும்போது அதிகப்பட்சம் அடுத்த கோடை காலத்தை ஒட்டி, அவர்கள் நடுத்தர அடர்த்தியை முடித்துவிட்டு, இறுதிக் கட்டத்தை அடைவர் ... இப்பொழுதே சிவப்புக்கோடு போடப்படவேண்டும், இது ஈரான் அணுகுண்டுத் தயாரிப்பிற்குத் தேவையான அணு அடர்த்தியின் இரண்டாம் கட்டத்தை முடிப்பதற்கு முன்பாக என்றார்.

இது ஈரான் அதன் அணு அடர்த்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் இல்லாவிடின் பெரும் பதிலடியை இஸ்ரேலிடமிருந்தும் அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்க நேரிடும் என்னும் இறுதி எச்சரிக்கையாகும். ஒபாமா நிர்வாகத்தை ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தாமதப்படுத்துவதற்காக குறைகூறும் நெத்தென்யாகு, அவருடைய ஐ.நா. உரையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே உடன்பாட்டுப் பிணைப்பையும் வலியுறுத்தினார்.

அவர், “ஈரானின் அணுவாயுதங்கள் தயாரிப்புத் திட்டத்தை நிறுத்தும் இலக்கு ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினரை ஒன்றுபடுத்துகிறது என்றார். ஜனாதிபதி ஒபாமா பொதுச்சபையில் பேசிய இரு நாட்களுகுப் பின் நெத்தென்யாகு பேசினார்; ஒபாமா அணுவாயுதம் கொண்ட ஈரான் கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் கூடிய சவால் அல்ல... ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்கு தேவையானவற்றை அமெரிக்கா கண்டிப்பாகச் செய்யும் என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு வாஷிங்டன் போரை தொடக்கும் என்னும் தெளிவான உறுதிப்பாடு வந்தால் இஸ்ரேலும் அமெரிக்கத் தேர்தல்களுக்கு முன் ஈரான் மீது தாக்குவதை கைவிடத்தயார் என்ற உணர்வை நெத்தென்யாகு ஏற்படுத்த முற்பட்டார்.

அவருடைய உரை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் உள்ள குற்றம் சார்ந்த தன்மைக்கு உதாரணம் ஆகும். பாலஸ்தீனத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது மற்றும் அனைத்து அருகிலுள்ள அரபு நாடுகளையும் அதன் ஒப்புமையில் குறுகிய கால வரலாற்றில் தாக்கியுள்ள இஸ்ரேல் ஒரு பாதிக்கப்பட்ட நாடு என்றும் இஸ்ரேலை ஒரு பொழுதும் தாக்காத ஈரானை ஆக்கிரமிப்பு நாடு என்றும் அவர் விவரித்துள்ளார்.

அணுவாயுத பரவா உடன்படிக்கையின்படி முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்ட அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று அவர் கோரினார்; அதே நேரத்தில் இஸ்ரேல் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளதுடன் சட்டவிரோதமாக 400 அணுச்சக்தி போர் ஆயுதங்களைக் கட்டமைத்துள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலோ, அமெரிக்காவோ அல்லது சர்வதேச அணுச்சக்தி நிறுவனமோ, தான் அமைதியான பொதுமக்கள் நோக்கத்திற்குத்தான் அணுசக்தியை வளர்க்கிறேன் என்னும் ஈரானின் கூற்றை மறுப்பதற்கு எந்தச் சான்றையும் கொடுக்கவில்வில்லை. அமெரிக்கா ஈரானிடம் அணுவாயுதம் ஏதும் தற்பொழுது இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறது, ஆனால் ஈரான் அதைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது என்றும் கூறுகிறது.

தவிர்க்க முடியாத போர் என அழைக்கப்படும் இப்போர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் கூட்டாக திட்டமிடப்படும் ஓர் ஆக்கிரமிப்புப் போர் ஆகும்இது 1930, 1940களில் நாஜிக்களின் மூன்றாம் ரைய்கின் ஆட்சியால் வெளிப்படையாக ஏற்கப்பட்டது; ஆனால் நூரெம்பேர்க் நீதிமன்றத்தில் ஒரு போர்க்குற்றம் என்று கண்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் ஸ்தாபக ஆவணங்களிலேயே இது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டுள்ளது.

நெத்தென்யாகுவின் உரையைத் தொடர்ந்து அவரும் ஒபாமாவும் ஈரானைச் சந்திப்பதில் தங்களுடைய அடிப்படை உடன்பாட்டை அறிவித்தனர். குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னியும் உரையைப் பாராட்டினார்.

சனிக்கிழமை அன்று இஸ்ரேலிய பிரதம மந்திரி இஸ்ரேலிய செய்தி ஊடகத்திடம் தான் ஒபாமாவுடன் ஒரு நீண்ட உரையாடலில் ஈடுபட்டதாகவும் அதைத்தொடர்ந்து வெளிவிவகாரச் செயலர் கிளின்டனுடன் உரையாடியதாகவும் கூறினார். எங்கள் குழுக்கள் மிக உயர்மட்டத்தில் பேச்சுக்களை நடத்துகின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா விமர்சகர்கள் நினைக்கக்கூடியதைவிட உருப்படியான புரிந்து கொள்ளுதல்களை அடையமுடியும் என்றார் அவர்.

இந்த அறிக்கைகள் ஒபாமா நிர்வாகம் கொடுத்துள்ள உறுதி மொழிகள், குடியரசுக் கட்சியுடன் சேர்ந்து கொடுத்துள்ள இரு கட்சி உறுதிமொழிகள், அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரம் முழுவதும் ஈரானுக்கு எதிராகப் போர் நடத்தப்படலாம் என்பது பற்றிய தீவிர விவாதம் ஏதும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது; அதேபோல் அத்தகைய போரின் தாக்கங்கள் அமெரிக்கா, ஈரான் மற்றும் உலகிற்கு எப்படி இருக்கும் என்பது பற்றியும் கூறப்படவில்லை.

மத்திய கிழக்கில் மற்றொரு போருக்கு எதிரான பரந்த வெகுஜன எதிர்ப்பை, இரு அரசியல் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் பராமரிக்கும் முறை ஒரு மௌனமான சதியாகும். இப்போரோ அமெரிக்க மக்களை துல்லியமாக ஒரு பேரழிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.

இதற்கிடையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பேர்சிய வளைகுடாவில் ஓர் இராணுவத் தாக்குதலுக்காக போர்ப் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த வியாழன் அன்று 25 நாடுகளில் இருந்து கடற்படைப் பிரிவுகள் வளைகுடாவிலேயே மிகப் பெரிய இராணுவப் பயிற்சி என்னும் முறையில் ஒரு 12-நாள் போலிப் போரை நடத்தி முடித்தன. இதில் அமெரிக்க போர்க்கப்பல்களுடன், பிரித்தானியா, பிரான்ஸ், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் பல நாடுகள் இணைந்து செயல்பட்டன.

இந்த மாதம், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மற்றும் சிரியா மீது உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போர் விளையாட்டுகள் குறித்துப் பேச்சுக்களை நடத்தும். இஸ்ரேலிய செய்தித்தாள் Maariv கூற்றுப்படி இந்த விளையாட்டிற்கு ஒத்திகை எனப் பெயரிடப்படும்.

பல செய்தி ஊடகத் தகவல்களின்படி, அமெரிக்கத் தாக்குதல் ஒன்றும் குறுகிய குவிப்பைக் கொண்டிருக்காது; ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலிய செய்தித்தாட்கள் அமெரிக்க தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் தோமஸ் டோனிலோன் இஸ்ரேலிடம் அமெரிக்கத் திட்டங்களைப்பற்றிக் கூறியுள்ளார் என்றும், அதில் முதலில் நூற்றுக்கணக்கணான க்ரூஸ் ஏவுகணைகள் ஈரானின் வான் பாதுகாப்பு முறைகள், உளவுத்துறைத் தளங்கள், ராடர் நிலையங்கள் ஆகியவற்றை அழிக்கும் ஆரம்பத்திட்டம் உண்டு என்றும் கூறியதாக வந்துள்ளது. இதைத்தொடர்ந்து B-52 குண்டு வீசும் விமானத் தாக்குதல்கள் வரும் என்றும் அவை நிலவறையை அழிக்கும் குண்டுகளை ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் அனைத்தின் மீதும் போடும் என்றும் கூறப்படுகிறது.

செல்வாக்குப் படைத்த வாஷிங்டன் DC உடைய இராணுவ மற்றும் உளவுத்துறைச் சிந்தனைக் குழுவான Center for Strategic & International Studies என்னும் அமைப்பு கடந்த மாதம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலின் பரிமாணங்கள் எப்படி இருக்கக் கூடும் என்பது குறித்து விரிவான பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை எட்டு ஏவுகணைத் தளங்கள், 12 தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் மீது எப்படி குண்டுபோடப்படும் என்பது பற்றியும், இவற்றைத் தவிர ஈரானின் ஐந்து முக்கிய அணுச்சக்தி நிலையங்கள் தாக்கப்படுவது குறித்தும் கூறுகிறது.

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற உண்மையான ஆபத்தும் உள்ளது. ஒரு செய்தித்தாள் கொடுத்துள்ள தகவல்படி இஸ்ரேல் அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது; அவற்றில் அணுவாயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

ஞாயிறன்று Iran Project  பற்றி வெளியிட்டுள்ள ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலின் உட்குறிப்புக்கள் குறித்துக் கையெழுத்திட்ட பலர், வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டு எந்த இராணுவ நடவடிக்கை குறித்தும் முன்னதாக பொது விவாதம் வேண்டும் எனக் கோரியுள்ளனர். இக்கட்டுரையை இயற்றியவர்களில் அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற அட்மைரல் William Fallon, முன்னாள் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் Chuck Hagel, முன்னாள் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் லீ ஹாமில்டன் மற்றும் மற்றொரு அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற மரைன் தளபதி Anthony Zinni ஆகியோர் உள்ளனர்.

இக்கட்டுரை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல், விரைவில் அமெரிக்க தரைப்படைகள் மிகப் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படும், ஒரு பிராந்தியப்போர் சிரியா, ஹெஸ்போல்லா, பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு நாடுகள், பயங்கரவாதக் குழுக்களுடன் என்பதையும் தூண்டிவிடக்கூடும் என எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிற்குப் பின்னர் மீண்டும் ஒரு குற்றம் வாய்ந்த போர், போலிக் காரணங்கள் பொய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்க மக்களிடையே திணிக்கப்படுகிறது. இம்முறை முந்தைய போர் இலக்குகளைவிட பல மடங்கு மக்கட்தொகையைக் கொண்டுள்ள, இன்னும் அதிக வெடிப்புத்தன்மை நிறைந்த அழுத்தங்களுக்கு இடையே சமூக, தேசிய, மத, குறுங்குழுவாத மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் நடைபெறும்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் முந்தைய போர்களில் இருந்ததைப் போலவே, போரின் உண்மையான நோக்கங்கள் மறைக்கப்படுகின்றன. ஈரான் அதன் அணுத்திட்டத்தினால் ஒன்றும் இலக்கு வைக்கப்படவில்லை; மாறாக அதன் பரந்த எண்ணெய் இருப்புக்களை ஒட்டித்தான்; மேலும் இது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மிகப் பெரிய பிராந்தியத் தடை எனக் கருதப்படுகிறது.

அமெரிக்கா அதன் உலக பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளவும் மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான, முதலிலும் முக்கியமானதுமாக சீனாவின் நிலைப்பாட்டை வலுவிழக்க செய்யும் வகையில் உலகின் எண்ணெய் வளங்களை தனது ஏகபோக உரிமையின்கீழ் கொண்டுவருவதற்கும் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு தங்கள் முதுகுகளுக்குப்பின் எத்தகைய வெற்றிகள், பாரிய படுகொலைகளுக்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உண்டு! அவர்கள் தங்கள் அரசாங்கத்திடம் இருந்தும் இரு பெரும் வணிக ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இருந்தும் பொறுப்பைக் கூறுமாறு கோரவேண்டும்.

போர் வெறியர்களை நிறுத்தி, அவர்களை ஆயுதம் களையச் செய்யக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். போருக்கு எதிரான போராட்டத்திற்கு போரையும் அடக்குமுறையையும் வளர்க்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குக்கு பரந்த சோசலிச சர்வதேசிய இயக்கம் ஒன்று கட்டமைக்கப்பட வேண்டும்.