சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

D.N. Wickremaratne 1950—2012
 

Sri Lankan Trotskyist dies

டி.என். விக்கிரமரட்ன 1950-2012

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட் காலமானார்

By the Socialist Equality Party (Sri Lanka)
11 October 2012
use this version to print | Send feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் டி.என். விக்கிரமரட்ன, கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஞாயிற்றுக் கிழமை காலை காலமானார்.


விக்கிரமட்ன

விக்கிரமட்ன செப்டெம்பர் 17 அன்று கடும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் பெரும் குருதி அடைப்பு ஏற்பட்ட பின்னர் அவருக்கு நினைவு திரும்பவே இல்லை. அவர் தனது தாய், மனைவி டான்தா, மூன்று மகள்மார் மற்றும் மூன்று பேரப் பிள்ளைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவர் 62 வயதில் அகால மரணமானது கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரது மரணச் சடங்கு நேற்று அவர் வசித்த நகரான தலிகமவில் இடம்பெற்றது. அதில் சோ.ச.க. உறுப்பினர்களும் கிராமத்தவர்களும் கலந்துகொண்டனர்.

அவரை அவரது தோழர்களும் அதே போல் நண்பர்களும் மற்றும் அயலவர்களும் டி.என். என்றே அழைத்தனர். அவர் வழமையாக கட்சியின் இலக்கிய மேசைக்கு பொறுப்பாக இருப்பதால், சோ.ச.க. பொதுக் கூட்டங்களுக்கு மற்றும் நிகழ்வுகளுக்கு வந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள். புதிய வெளியீடுகளைத் தேடுபவர் புதிய முகமாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட கால தோழராக இருதந்தாலும் சரி அவர் எப்போதும் மார்க்சி இலக்கியங்களை வாசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

விக்கிரமரட்ன 1950 பெப்பிரவரி 2 அன்று, கொழும்பில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எட்டியாந்தோட்டைக்கு அருகில் தலிகமவில் பிந்தார். இன்னமும் ஒரு பெரும் கிராமப்புறமாக இருக்கின்ற இந்தப் பிரதேசத்தில், விவசாயிகளும் அதேபோல் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர். அவரது தந்தை மின்சாரசபை ஊழியராக இருந்தார். தொழிலாள வர்க்க பின்னணியில் இருந்து வந்த விக்கிரமரட்ன, அந்தப் பிரதேசத்தில் மோசமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி நன்கு அறிந்தவராக இருந்தார். வேலையின்மை அதிகமாக காணப்படுவதோடு மின்சாரம், குழாய் நீர் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன.


இறுதி ஊர்வலம்

1930களில் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) ஸ்தாபிக்கப்பட்ட போது அந்தப் பிரதேசம் அதன் கோட்டையாக மாறியது. இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன், ல.ச.ச.க. அதன் தேசியவாத வேலைத் திட்டத்தோடு உடைத்துக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (பி.எல்.பீ.ஐ.) ஸ்தாபித்தது. ட்ரொட்ஸ்கிஸ பதாதையின் கீழ் ஏகாதிபத்தியத்துக்கும் யுத்தத்துக்கும் எதிராக கொள்கை ரீதியான போராட்டத்தை முன்னெடுத்த பி.எல்.பீ.ஐ., தொழிலாள வர்க்க்த்தின் மத்தியில் ஆழமாக வேரூன்றியது.

1950ல் புதுப்பிக்கப்பட்ட, சந்தர்ப்பவாத ல.ச.ச.க.வுக்குள் பி.எல்.பீ.ஐ. கரைத்து விடப்பட்டதை அடுத்து, ல.ச.ச.க. நீண்ட கால அரசியல் பின்னடைவின் பின்னர், சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படை கொள்கைகளை காட்டிக்கொடுத்ததோடு 1964ல் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் இணைந்துகொண்டது.

ஆயினும், பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் போலவே, பி.எல்.பீ.ஐ. நாட்களில் இருந்து ல.ச.ச.க.வையும் சார்ந்ததாக இருந்த புரட்சிகர போராட்ட வரலாற்றால் விக்கிரமரட்ன ஈர்க்கப்பட்டிருந்தார். ஆயினும் அவருக்கு சந்தேகங்கள் இருந்தன. அவரது 21 வயதில், ல.ச.ச.க.யை உள்ளடக்கிய கூட்டணி அரசாங்கத்தால் கிராமப்புற இளைஞர்களின் எழுச்சி கொடுரமாக நசுக்கப்பட்டதை கண்டார். பாதுகாப்பு படையினரால் சுமார் 15,000 இளைஞர்கள் கொன்றுதள்ளப்பட்டனர். 

காஸ்ட்ரோவாதம் மற்றும் மாவோவாதத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட, ஆயுதப் போராட்டத்தின் மூலமான குட்டி முதலாளித்துவ சீர்திருத்த முறையை அடிப்படையாகக் கொண்ட, முரட்டுத்துணிச்சலான எழுச்சிகளை ஏற்பாடு செய்த மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பீ.) விக்கிரமரட்ன இணையவில்லை. ல.ச.ச.க., கட்சிக்குள் வழங்கிய ஒரு தொழிலையும் நிராகரித்த அவர், அதில் இருந்து தூர விலகியிருந்தார்.

1980களின் பிற்பகுதியில், அவர் சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) சிங்கள மொழி வெளியீடான கம்கறு மாவத பத்திரிகையை வாசிக்கத் தொடங்கியதோடு கொழும்பில் நடந்த பு.க.க. கூட்டங்களில் இரு நெருக்கமான ஆதரவாளர்களுடன் பங்குபற்றினார். அவர் 1990ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் இராணுவத்தின் கொலைப் படைகளும் முன்னெடுத்த படுகொலைத் தாக்குதல்களுக்கு எதிராக கிராமப்புற இளைஞர்களைப் பாதுகாக்க கட்சி போராடிக்கொண்டிருந்த போதே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்தார். 

இந்த காலகட்டம் அசாதாரணமான அரசியல் கொந்தளிப்பு காலகட்டமாகும். வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் உக்கிரம் கண்டதுடன், தெற்கில் கிராமப்புற வறியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சிகண்டதற்கும் பதிலிறுப்பாக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சுற்றிவளைக்கப்பட்ட அரசாங்கம், 1987ல் இந்தியாவுடன் ஒரு இந்திய-இலங்கை உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்காகவும் மற்றும் ஒரு பிராந்திய சுயாட்சித் திட்டத்தை மேற்பார்வை செய்வதற்காகவும் வடக்குக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது.

சிங்கள ஜனரஞ்சகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பீ. இந்த உடன்படிக்கைக்கு எதிராக பிற்போக்கு பேரினவாத பிரச்சாரத்தை முன்னெடுத்ததோடு அதில் பங்கெடுக்க மறுத்த அரசியல் எதிர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியான பாசிசத் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஜே.வி.பீ. மூன்று பு.க.க. உறுப்பினர்களைக் கொன்றது. பு.க.க.வும் உடன்படிக்கையை எதிர்த்த போதிலும், அது கொழும்பு அரசாங்கத்துக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தின் பாகமாகவே அன்றி, தேசத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்து அல்ல.

அரச ஒடுக்குமுறைக்கும் ஜே.வி.பீ.யின் துப்பாக்கிதாரிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தொழிலாள வர்க்க அமைப்புக்களின் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக ஒரு சக்திவாய்ந்த சர்வதேச பிரச்சாரத்தை பு.க.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்னெடுத்தன. ஜே.வி.பீ. உடன் சூழ்ச்சிகளை கையாண்ட பின், ஜனாதிபதி ஆர். பிரேமதாச தலைமையிலான யு.என்.பீ. அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பி, அதன் தலைமைத்துவத்தை கொன்றழித்ததோடு சுமார் 60,000 இளைஞர்களைக் கொன்றதன் மூலம் கிராமப்புற அமைதியின்மையை நசுக்கியது.

பு.க.க.வின் சிங்கள மற்றும் தமிழ் வெளியீடுகளான கம்கறு மாவத மற்றும் தொழிலாளர் பாதையும் இளைஞர்களின் படுகொலைகளை அம்பலப்படுத்தியதோடு கிராமப்புற இளைஞர்களை பாதுகாக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலைலயில், இந்த கடினமான காலத்திலேயே விக்கிரமரட்ன பு.க.க.யில் இணையும் உற்சாகமான முடிவை எடுத்தார். இந்தக் குற்றங்களைப் பற்றி விசாரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் சென்ற பு.க.க. உறுப்பினர்கள் பொலிஸ், ல.ச.ச.க., ஸ்ராலினி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களதும் உக்கிரமான எதிர்ப்புக்கு முகங்கொடுத்தனர்.

அந்தக் காலம் முதல், அந்தப் பிரதேசத்தில், குறிப்பாக இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில், பு.க.க. மற்றும் சோ.ச.க. முன்னெடுத்த பிரச்சாரங்களில் விக்கிரமரட்ன முன்னிலை வகிப்பவராக அறியப்பட்டிருந்தார்.

விக்கிரமரட்ன 1998ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்றார். பூகோள அபிவிருத்திகள் மற்றும் மார்க்சி பகுப்பாய்வுகளை தொழிலாளர்களை புரிந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கையை ஆழப்படுத்துவதற்கான ஒரு பிரதான செயற்பாடாக அவர் அதைக் கருதினார்.

பெப்பிரவரியில் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட விக்கிரமரட்ன, மார்ச் மாதம் மார்புச் சிகிச்சைக்கு உள்ளானார். சுகம் பெற்ற பின்னர், அவர் செப்டெம்பரில் கேகாலை மாவட்டத்தில் மாகாண சபை தேர்தலில் சோ.ச.க.யின் பிரச்சாரத்தில் பங்குபற்றினார். உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகளுக்கு, அனைத்துலக சோசலிச முன்நோக்குக்காகப் போராடுவது மட்டுமே ஒரே தீர்வு என அவர் உறுதியாக நம்பினார்.

கட்சி வேலைகளில் விக்கிரமரட்னவின் உறுதியான, ஒழுக்கமான மற்றும் கொள்கைப்பிடிப்பான அணுகுமுறையையிட்டு அவர் நினைவுகூப்படுவார். தோழர்களையும் கட்சி தலைமைத்துவத்தையும் பெரிதும் மதித்த அவர், எப்போதும் அவர்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை காட்டுவார். அவர் அடக்கம், சிநேகிதம் மற்றும் பொறுமை, அதே போல் வரும் தோழர்களுக்கு விருந்தோம்பல் செய்தல் போன்றவற்றில் பெயர்பெற்றவர்.

இந்த நீண்டகால ட்ரொட்ஸ்கிவாதி, தன்னை உயர்வாக மதித்து அன்புகாட்டிய மகள்மார், அதே போல் மருமகன்மாரையும் கட்சியின் இலக்கியங்களை வாசிக்குமாறும், கட்சிக் கூட்டங்களில், குறிப்பாக மேதினக் கூட்டத்தில் பங்குபற்றுமாறும் ஊக்குவித்தார்.

விக்கிரமரட்ன கடந்த இரு தசாப்தங்களாகப் போராடிய சோசலிச அனைத்துலகவாத கொள்கைகள், பூகோள முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைகின்ற, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெருமளவு அவதானிகளை இப்போது ஈர்த்துக்கொண்டிருக்கின்றது. நாம் தோழர் டி.என். விக்கிரமரட்னவின் நினைவுகளுக்கு எப்போதும் மதிப்பளிப்போம்.