சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP concludes its election campaign with Ruwanwella meeting

சோ... தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கூட்டம் ருவன்வெல்லையில் நடந்தது

By our reporter
8 September 2012
use this version to print | Send feedback

செப்டெம்பர் 8 அன்று நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலில், கேகாலை மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சயும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும், கடந்த ஆறு வாரங்களாக முன்னெடுத்த வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை ருவன்வெல்ல நகரின் கூட்டுரவு மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்தன. சோ... கேகாலை மாவட்டத்துக்காக அரசியல் குழு உறுப்பினர் ஆனந்த தவுலகலவின் தலைமையில் 21 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், வறிய விவசாயிகளும், வேலையற்ற இளைஞர்களும், மாணவர்கள் மற்றும் குடும்ப பெண்களும் சோ... பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தேர்தல் அறிக்கையின் 15,000 பிரதிகளும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைகளில் ஒரு தொகையும் இந்த பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்டன. சோ... மற்றும் .எஸ்.எஸ்.. பிரச்சாரகர்களால், இந்த பிரச்சாரத்தின் போது முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நிகழ்கால நெருக்கடியினுள் இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள  தீர்க்கமான அரசியல் பிரச்சினை பற்றி பலம்வாய்ந்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வத்றகு முடிந்தது. சோ... முன்நோக்கை கற்கவும், அதில் உறுப்பினர் ஆவதற்கும் கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் பிரச்சாரத்தின் போது உடன்பட்டனர்.

.எஸ்.எஸ்.. யின் இலங்கை அழைப்பாளர் கபில பெர்ணான்டோ கூட்டத்துக்கு தலைமை வகித்தார். 2008ல் வெடித்த உலக முதலாளித்துவ நெருக்கடியினால், நாட்டினுள் நிதி மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையின் கீழ், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் இந்த மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கபில பெர்ணான்டோ தெரிவித்தார். இந்த தேர்தலை நடத்துவதன் மூலம், ஒரு பக்கம் சம்பளம், சுகாதாரம் மற்றும் கல்வி மீது தொடுக்கப்படும் தாக்குதல்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு முயல்வதோடு, மறு பக்கம் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள, மக்களின் எரியும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்கு எந்தவொரு வெலைத் திட்டத்தையும் முன்வைக்க இலாயக்கற்ற உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகளின் வங்குரோத்தையும் சுரண்டிக்கொண்டு இராஜபக்ஷ அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற எதிர்பார்க்கின்றது, என அவர் தெரிவித்தார். தேர்தலில் வென்ற பின்னர், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஆணை இருக்கின்றது என கூறிக்கொண்டு, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என பெர்ணான்டோ கூறினார்.

குழுவின் தலைவர் ஆனந்த தவுலகல பிரதான உரையை ஆற்றினார். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மாவட்டத்தினுள் இப்போதே அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தின் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்களில் அவசியமான மருந்துகள் இல்லாமை, டசின் கணக்கில் பாடசாலைகள் மூடப்படுகின்றமை மற்றும் சமுர்த்தி கொடுப்பணவு வெட்டப்படுகின்றமை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகளாக அவர் சுட்டிக் காட்டினார். “ரூபா 1000 வரை மாத சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்தித்த வறியவர்கள், மாதத்துக்கு ரூபா 1000 கிடைத்தாலும் தேர்தல் முடிந்த உடன் மீண்டும் அது 100 ரூபாவாக வெட்டிக் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது எனக் கூறினர். சமுர்தி நிதி பெறும் அநேகமானவர்களை அதில் இருந்து அகற்றுவதன் மூலம், அரசாங்கம் வறியவர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக மூடி மறைப்புச் செய்வதாக அவர் தெரிவித்தார்.

இது இலங்கைக்கு மட்டுமே உரித்தான விடயம் அல்ல. உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துகின்ற சிக்கன வேலைத் திட்டத்தையே இராஜபக்ஷ அரசாங்கமும் பின்பற்றுகின்றது என தவுலகல விளக்கினார். அரசாங்கத்தின் கடன், மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 80 வீதமானதாக இருப்பதோடு குவிந்துள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டுள்ளது என தவுலகல கூறினார். அரசாங்கத்தின் இந்தக் கடனைப் பெறும் போது, சர்வதேச நாணய நிதியம் திணிக்கின்ற நிபந்தனைகளை, விசேடமாக நூற்றுக்கு 9 வீதமளவில் உள்ள வரவு செலவு பற்றாக்குறையை 6.2 வீதமாகக் குறைக்க உடன்பட வேண்டும். இதன் அர்த்தம், எதிர்வரும் சில மாதங்களுள் சமூக சேவைகளில் பெரும் வெட்டுக்கள் எற்படுத்தப்படும் என்பதே ஆகும், என அவர் சுட்டிக் காட்டினார்.

உலகின் அநேகமான பகுதிகளில், தனது சமதரப்பினருக்கு சமாந்தரமாக, 1977ல் ஜே.ஆர். ஜயவர்தன தனியார் துறையை அபிவிருத்தி இயந்திரமாக மாற்றிய முறையை தவுலகல விளக்கினார். லண்டனைத் தளமாகக் கொண்ட டெக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வேர்க்கின் ஜூலை மாத புள்ளிவிபரங்களின் படி, அபிவிருத்தியடைந்து வரும் 139 நாடுகளில், உயர்மட்ட அதிக இலாபம் பெறும் நபர்கள் கடந்த 40 ஆண்டுகளில் 7.3 மற்றும் 9.3 ரில்லியன் டொல்களுக்கிடைப்பட்ட தொகையை, வரிச் சலுகை சுவர்க்கமான சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளில் சேமித்துள்ளதாகவும், இந்த சொத்துக்கள் அவர்களது நாடுகளின் அரச கடன்களை விட அதிகமானவை என்றும் தெரிவித்துள்ளது. ஜயவர்தனவின் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், தனியார்மயமாக்களை விரிவாக்குவதற்கு இராஜபக்ஷ சர்வதேச நிதி நிறுவனங்களுடன் உடன்பட்டிருக்கின்றார் என அவர் விளக்கினார்.

சர்வதேச உயர் செல்வந்தர்களின் அங்குள்ள சொத்துக்கள் 2005ல் 11.5 ரில்லியன் டொலர்களாக இருந்தன என்றும் அதன் பின்னர் அவற்றின் பெறுமதி இருமடங்காக அல்லது மூன்று மடங்காக ஆகியுள்ளது என்றும் தவுலகல விளக்கினார். இன்று உலக ஜனத்தொகையில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் ஒட்டு மொத்த உலக செல்வத்தில் நூற்றுக்கு 84 வீதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் வேலைத் திட்டத்தினால், இலங்கையில் போலவே அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் சமூக சமத்துவமின்மை முன்னெப்போதுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது என தவுலகல குறிப்பிட்டார்.

சமூக சமத்துவமின்மை சம்பந்தமாக காணப்படும் ஆழமான எதிர்ப்பு வெளிப்பட்டிருந்தாலும், வோல் ஸ்றீட் உள்ளமர்வு இயக்கமானது வறியவர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு இடையிலான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் உலக முதலாளித்துவ இலாப முறைமையை எதிர்க்கவில்லை. தமது கோபத்தை வெளிப்படுத்துவதும் சமூக சமத்துவமின்மையை அகற்றுமாறு ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் மட்டுமே அவர்களின் இலக்காகும், என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தைப் பற்றிக்கொண்டிருந்த தொழில் வல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட மத்தியதர வர்க்கத்தின் செல்வந்த தட்டினர், 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் வலது பக்கம் பயணித்துள்ளதாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிதிரண்டு பெரும் செல்வத்தை திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தவுலகல குறிப்பிட்டார். இலங்கையில் அவர்களின் சம சிந்தனையாளர்களாக இருப்பவர்கள்  “போலி இடதுகளான நவசமசமாஜக் கட்சியும் (ந.ச.ச.க.) ஐக்கிய சோசலிசக் கட்சியும் (ஐ.சோ.க.) ஆகும். இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை தடுக்கின்றன என அவர் தெரிவித்தார்.

போலி இடதுகளுக்கு எதிராக பலம்வாய்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்காமல் தொழிலாளர்களுக்கு அல்லது இளைஞர்களுக்கு தமது சுயாதீன அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப முடியாது என சுட்டிக் காட்டிய தவுலகல, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதோடு இணைந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்தப் போராட்டத்துக்குத் தோள்கொடுத்துள்ளன எனத் தெரிவித்தார்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் பொலிஸ்-அரச திட்டங்களுக்கும் எதிராக, சோசலிச பொருளாதார திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காகப் போராடும் சோ.ச.க. உடன் இணையுமாறு அவர் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

அதைத் தொடர்ந்து, சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் டபிள்யூ. ஏ. சுனில் கூட்டத்தில் உரையாற்றினார். வாக்குறுதி பட்டியலை முன்வைக்கும் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சிகளதும் தேர்தல் பிரச்சாரத்துக்கும் சோ.ச.க.யின் பிரச்சாரத்துக்கும் இடையில் உள்ள ஆழமான வேறுபாட்டை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தினதும், அமெரிக்காவில் சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் ஜெரீ வைட்டினது இலங்கை விஜயத்தினதும் குறிக்கோள், ஏகாதிபத்திய காலனித்துவவாதத்துக்கும், இராணுவவாதத்துக்கும், யுத்தத்துக்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படியில் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும் என அவர் தெரிவித்தார்.

உலக நிதி நெருக்கடியின் அழுத்தம் இலங்கைக்கு கிடையாது என மீண்டும் மீண்டும் இராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலத்தில் கூறிய போதிலும், அதன் விளைவாகவே இலங்கை ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என இப்போது இராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார். தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் உலக வல்லரசுகளிடம் அரசாங்கம் தங்கியிருக்கின்றமை போன்றவற்றை நியாயப்படுத்தவே இராஜபக்ஷ அதை ஏற்றுக்கொண்டார் என சுனில் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இலங்கை ஜனத்தொகையில் நூற்றுக்கு 27 வீதமானவர்கள் நாளொன்றுக்கு 1.25 டொலரையும் விட குறைந்த வருமானத்தையும், மற்றும் 54 வீதமானவர்கள் 2 டொலருக்கும் குறைவான வருமானத்தையும் பெறுகின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார். நூற்றுக்கு 9.2 வரை அதிகரித்துள்ள பணவீக்க வீதம், வேகமாக அதிகரித்து வருகின்றது என்றும், உலகின் ஏனைய பாகங்களைப் போலவே ஆசியாவிலும் வறுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிய ஜனத்தொகையில் 900 மில்லியன் பேர் 1.25 டொலரையும் விட குறைந்த வருமானம் பெறுகின்றனர் என அவர் கூறினார்.

2008 பொருளாதார வீழ்ச்சியுடன், தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக உலக மட்டத்தில் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய அவர், முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் சம்பள மட்டத்துக்கு சமப்படுத்திவருவதாக தெரிவித்தார். சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக உலக முதலாளித்துவத்தால் தயார்படுத்தப்பட்டு வரும் சமூக எதிர்ப் புரட்சியை தோற்கடிக்க முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.

கூட்டத்தின் அவதானத்தை எகிப்தில் மக்கள் புரட்யின் பக்கம் திருப்பிய அவர், புரட்சிகரத் தலைமை ஒன்று இல்லாமையினால் அதை சோசலிசப் புரட்சிவரை முன்கொண்டு செல்ல எகிப்தியத் தொழிலாள வர்க்கத்தால் முடியாமல் போனது என்பதை விளக்கினார். ட்ரொட்ஸ்கிஸ நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டு மிகச் சரியானது என்பது அதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சோ.ச.க.யின் முன்நோக்கை கற்குமாறும் சோ.ச.க.யில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.