சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South Africa: Corruption exposed at Orkney and Grootvlei mines

தென்னாபிரிக்கா: ஓர்க்னே மற்றும் க்ரூட்வ்லேய் சுரங்கங்களில் ஊழல் அம்பலமாகிறது

By Eric Graham 
10 September 2012

use this version to print | Send feedback

ஆகஸ்ட் 16ம் திகதி மாரிக்கானாவில் 36 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்த அமைதியின்மை பரவுகையில், தென்னாபிரிக்காவில் உள்ள ஓர்க்னே மற்றும் க்ரூட்வ்லேய் (Grootvlei) சுரங்கங்களில் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் கொடுக்கமால் உள்ள, திவால் ஆகிவிட்ட AES எனப்படும் Aurora Empowerment Systems உடைய சமீபத்திய  விசாரணைகளை பார்க்கையில், ஆபிரிக்க தேசியக் காங்கிஸுடன் (ANC) தொடர்புடைய செல்வம் படைத்த தன்னலக்குழுக்கள் அனைத்திலும் கறைபடிந்த குற்றவலை பிணைந்திருப்பது, ஊழல் மலிந்திருப்பது ஆகியவைதான் வெளிப்பட்டுள்ளன.

சுரங்கத் தொழிலாளர்களுக்குக் கிட்டத்தட்ட 20 மில்லியன் ராண்டுகள் (US$2.5 மில்லியன்) கொடுக்கப்படாத ஊதிய வழியில் பாக்கி நிற்கின்றன; சில சுரங்கத் தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகளாக ஊதியத்தைப் பெறவில்லை.

ஆகஸ்ட் 31ம் திகதி, ஓர்க்னே மற்றும் க்ரூட்வ்லேய் சுரங்கங்களின் தொழிலாளர்கள் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் ஜோகன்ஸ்பேர்க் கிழக்கு ராண்ட் பகுதியில் உள்ள எகுர்த்துலேனி முனிசிலபல் பகுதியில் மூடும் தங்கள் விருப்பதை அறிவித்தனர். இரு சுரங்கங்களில் இருந்து சீற்றம் கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள், ANC, அதன் தலைவர் ஜாகப் ஜுமா மற்றும் தொழிலாளர்கள் நிலைமை குறித்துப் பொருட்படுத்தாத தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் என்று ANC அரசாங்கத்தின் விசுவாசத் தூணாக இருக்கும் அமைப்பு ஆகியவற்றைக் கண்டித்தனர்.

தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு காரணம் சுரங்கங்களின் முந்தைய உரிமையாளர்கள் Pamodzi Gold Limited தடுமாறியதில் வேர்களைக் கொண்டுள்ளது; 2008ல் நடந்த இந்நிகழ்வு, நிறுவனம் 2009ல் கலைக்கப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. பாம்டோஜி தங்கத்தின் தலைவரும் பாம்டோஜி முதலீட்டு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எல்படா என்செலே2008ல் Ernst & Young World Entrepreneur award பெற்றவர்அரசுக்கு சொந்தமான தொழில்துறை வளர்ச்சி கழகத்தில் இருந்து, நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்ற முன்னறிவிப்பை பெற்றபின் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

Harmony Gold  ஆரம்பத்தில் பாமோட்ஜியின் தங்கச் சொத்துக்களை வாங்க முன்வந்தது, ஆனால் அரசியல் தொடர்புடைய நிறுவனம் AES விரும்பப்பட்ட வாங்குபவராக நியமனம் செய்யப்பட்டபின் அது தான் வாங்கும் திட்டத்தைப் பின்வாங்கியது.

AES  உடைய இயக்குனர் Khulubuse Zuma, ஜனாதிபதி ஜாகப் ஜுமாவின் மருமகன் ஆவார்; நிர்வாக இயக்குனர் நெல்சன் மண்டேலா உடைய பேரரான ஜோண்ட்வா மண்டேலா ஆவார்.

AES இறுதியில் பாமோட்ஜியின் க்ரூட்வ்லேய் மற்றும் ஓர்க்னே தங்கச் சுரங்கங்களை, 215  மில்லியன் ராண்டுகள் (US$26.8 மில்லியன்) ஏலத்திற்கு வாங்கியபின், செயல்படுத்தும் உரிமைகளைப் பெற்றது. AES சுரங்கத்தில் முதலீடு, தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக நலன் காப்பகங்கள் ஆகியவற்றிற்கு 600 மில்லியன் ராண்டுகள் (US$75 மில்லியன்) நிதியைக் கொடுக்கவும் உறுதியளித்தது.

க்ரூட்வ்லேய் மற்றும் ஓர்க்னே சுரங்கங்களை எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்கு பின், AES தொழிலாளர்களுக்கு ஊதியங்களைக் கொடுப்பதை நிறுத்தியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதிவரை, சுரங்கத் தொழிலாளர்கள் பெப்ருவரி 2010ல் இருந்து ஊதியத்தை பெறவில்லை. ஊதியம் பெறாத தொழிலாளர்கள் தற்பொழுது இஸ்லாமிய அறக்கட்டளை அமைப்பான Gift of the Givers அளிக்கும் அவசரகால உணவு நிதியைத்தான் நம்பியுள்ளனர்.

ஜுமாவும் மண்டேலாவும், ஃபைசல் மற்றும் சுலேமான் பணா என்னும் அரோராவின் நிதிய ஆலோசகர்களுடன் சேர்ந்து தாங்கள் பெற்றுள்ள சுரங்கச் செயல்களை கொள்ளையடித்துள்ளனர் என்பது சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. AES அக்டோபர் 2011ல் கலைப்பில் இருத்தப்பட்டது. மார்ச் 2012 ஐ ஒட்டி, நிறுவனம் வங்கிக் கணக்கில் 2000 ராண்டுகள் -அமெரிக்க டாலர் 250- ஐத்தான் கொண்டிருந்தது. ஆனால் தன் வரைக்காலத்தில் அரோரா 260 மில்லியன் ராண்டுகளை  (US$32.5 மில்லியன்) தனக்கும் தனக்குக் கடன் கொடுத்தவர்களுக்கும் 10 வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுத்துக் கொண்டது.

கலைப்பு மேற்பார்வை அதிகாரிகள் நிறுவனம் வேலையின்மை காப்பீட்டு நிதிக்கு தொழிலாளர்கள் ஊதியத்தில் உரிய விகிதத்தைக் கொடுத்ததற்கு சான்றுகள் இல்லை என்று கூறியுள்ளனர். அதேபோல் அவர்கள் நிறுவனத்தின் தங்கச் செயற்பாடுகளில் கூட்டு மதிப்பு வரிகளையும் கொடுக்கவில்லை.

மிகப் பெரிய அளவிற்கு நிறுவனத்தின் சொத்துக்களை தகர்த்தல் என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. கலைப்பதை மேற்பார்வையிடும் அதிகாரிகள் பல இயந்திரங்கள் வெற்றுத்தனமாக தலைக்கவசம், சுழலும் இயந்திரங்கள், குழாய்கள், நீர்க்குழாய்கள் ஆகியவை நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விட்டன என்று கூறுகின்றனர். 1.8 பில்லியன் ராண்டுகள் (USS225 பில்லியன்) மதிப்புடைய சுரங்கச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, திறமையுடன் தகர்க்கப்பட்டு விட்டன. இப்படிச் சொத்துக்களை தகர்த்தல் குறைந்தப்பட்சம் 2012 மார்ச் வரை நடந்துள்ளது; அதாவது AES கலைப்பிற்குக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்தும்.

கலைப்பு மேற்பார்வை அதிகாரிகள் கிட்டத்தட்ட 240  மில்லியன் ராண்டுகள் (அமெரிக்க$30 மில்லியன்) தங்கத்தின் மூலம் பெற்ற வருமானங்களுக்குக் கணக்கு இல்லை என்று கூறியுள்ளனர். AES  உடைய இயக்குனர்களும் மேலாளர்களும் 122  மில்லியன் ராண்டுகள் (US$15.3 மில்லியன்) மதிப்புடைய தங்கத்தைச் சுரங்கங்களில் இருந்து எடுத்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஊதியத்தை எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு, செயற்பாட்டுச் செலவுகளுக்கு, கடன் கொடுத்தோருக்கு கொடுக்கவில்லை என்றும், AES தங்கத்தை மறைத்து, தங்க விற்பனைகளையும் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

நிறுவனத்தின் நிதிய ஆலோசகர்களில் ஒருவரான சுலேமான் பாணா பல நேரமும் உருக்கி எடுக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகளை அகற்றித் தன் பைகளில் போட்டுச் செல்வதைக் காண முடியும் என்று நேரில் பார்த்த ஒரு சாட்சி கூறியுள்ளார்.

அரோராவின் நிதிய ஆலோசகர்களான சுலேமான் மற்றும் ஃபைசல் பாணா ஆகியோர் சுரங்கத்தின் சொத்துக்களைக் கொள்ளையடித்தலில் முக்கிய உந்துதல் கொடுத்தவர்கள் என்று சிலரால் கருதப்படுகிறது.

பாமாட்ஜி தங்க நிறுவனத்தின் கலைப்பாளர் ஜோகன் எங்கிள்பிரெக்ட், AES மற்றும் அதன் வக்கீல்களுக்கு முதலில் இருந்தே நிறுவனம் நிதிய அளவில் ஓர்க்னே மற்றும் க்ரூட்வ்லேய் சுரங்கங்களின் சொத்துக்களை உரிமை பெறுவதற்குத் தேவையான பங்குகளை பெறும் திறனற்றவை என்று நன்கு தெரியும் என்று கூறினார். 2009ல் அரோரா விரும்பும் ஏலதாரர் என அறிவிக்கப்பட்டபோது, அது முழுமையான திவால்தன்மையில்தான் இருந்தது. அவர்கள் அளித்த நிதிய மாதிரி ஒரு மறைப்புத்தான் என்று எங்கிள்ப்ரெக்ட் வடக்கு கௌடெங் உயர்நீதிமன்றத்தில் ஓர் உறுதிப்பிரமாணத்தில் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் AES மோசடித்தனமாக தான் தேவையான நிதிகளை AM Capital  என்னும் மலேசிய நிறுவனம் ஒன்றின்மூலம் பெற்றுள்ளதாக உத்தரவாதங்களைக் கொடுத்தது. பாமோட்ஜியின் கலைப்பாளர்கள் நிதிய வழிவகையில் மற்றொரு நிறுவனமான லாபட் என்பதின் பங்குகளை அரோரா பெறவேண்டும் என உள்ளது என்று கூறப்பட்டனர். பெப்ருவரி 2010ல் அரோரா தொழிலாளர்களுக்கு ஊதியங்களைக் கொடுப்பதை நிறுத்தியபின்அது ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டியதுகலைப்பாளர்கள் அரோராவிடம் போதுமான நிதியம் இல்லை என்பது குறித்துக் கவலை கொள்ளலாயினர்.

AES உடைய வக்கீல் லாபட், பங்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கூறி JSE Securities Regulation Panel  இடம் அரோரா  5.3மில்லியன் ராண்டுகளை (அமெரிக்க$662,500) லாபட்டின் அறக்கட்டளைக் கணக்கில் செலுத்திவிட்டதாக தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மண்டேலா கையெழுத்திட்டுத் தயாரித்த காசோலைகள் நிறுத்தப்பட்டன, பிரச்சினைக்குரிய பங்குகள் வாங்கப்படவே இல்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

இதைத்தவிர, AES மோசடித்தனமாக ஜோஹன்ஸ்பேர்க் பங்குச் சந்தையில் பதிவாகியுள்ள Cenmag Limited  ல்71% வாங்கியுள்ளதாகவும் கூறியது; இதைத்தவிர தெற்குப் பகுதியிலேயே மிகப் பெரிய மர ஆலையான Zambia வின் Redwood Timber Merchants  ஐயும் விலைக்கு வாங்கிவிட்டதாகக் கூறியது.

பாமாட்ஜியின் கலைப்பாளர்களில் ஒருவர் கருத்துப்படி அரோரா நடத்தப்பட் முறை கிட்டத்தட்ட ஒரு Ponzi திட்டம் போல் இருந்தது என்றார்.

சுரங்கங்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தொழிலாளர்கள் ஊதியம் பெறாமல் இருக்கும் நிலையில், குலுபூஸ் ஜுமாவும் ஜோண்ட்வா மண்டேலாவும் நம்பமுடியாத அளவு செல்வம் பெற்றிருப்பவர்களுடைய வாழ்க்கை முறையை அனுபவித்தனர். 19 வாகனங்களை ஜுமா கொண்டிருக்கிறார், அதில் 2.5  மில்லியன் ராண்டுகள் (அமெரிக்க$312,500) பெறுமான கல் விங் மெர்சிடெஸ் அடங்கியுள்ளது என்றும், வாரம் இருமுறை டர்பன் உணவு விடுதிக்கு வருகையில் 3,000 ராண்டுகள் (அமெரிக்க  $375)  இல் இருந்து 15,000 ராண்டுகள் (அமெரிக்க 1,875) வரை செலவழிப்பார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிக் கேட்கப்பட்டதற்கு அவர், ஆடம்பரம் பற்றி எனக்குத் தெரியாது. என் வாழ்வை ஒவ்வொரு நாளும் முழுமையாகக் கழிக்கிறேன், அதற்காக நான் உழைத்துள்ளேன் என்பது மட்டும் தெரியும் என்று விடையிறுத்தார்.

ஏப்ரல் 2011ல் ஜுமா 1 மில்லியன் ராண்டுகள் (அமெரிக்க $125,000) ஐ ANC க்கு நன்கொடையாகக் கொடுத்தார்; இதைத் தயக்கமின்றி ANC ஏற்றுக் கொண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அரோரா சுரங்கத் தொழிலாளர்களுக்கு 4.3  மில்லியன் ராண்டுகள் ( அமெரிக்க $537,500) ஐக் கொடுக்குமாறு வந்த நீதிமன்ற உத்தரவை மீறினார்.

பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தென்னாபிரிக்கா மோசாம்பிக், லெசோதோ மற்றும் ஸ்வாசிலாந்து ஆகியவற்றில் இருப்பவர்கள். செய்தித்தாள் தகவல்கள்படி, சுரங்கங்களில் வேலை நின்றதில் இருந்து ஐந்து தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுவது நின்றுவிட்டது, மகளிர் கணவர்களைவிட்டு நீங்குகின்றனர், மக்களுக்கு உணவு ஏதும் இல்லை என்று ஒரு சுரங்கத் தொழிலாளி கூறினார்.

AES சுரங்கப் பகுதிகளில் இருந்து அமில நீரை வெளியேற்றவில்லை, இது அப்பகுதியில் இருக்கும் ஈரப்பத சுற்றுச் சூழல் அழிவுறுவதற்கு காரணமாகிவிட்டது என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

பாமோட்ஜியின் இடைக்காலக் கூட்டுக் கலைப்பாளர்கள், அரோராவுடன் உடன்படிக்கையை மே 2011ல் இரத்து செய்தனர். அரோரா இறுதியாக வடக்கு கௌடெங் உயர்நீதிமன்றம் 9 மில்லியன் ராண்டுகள் (அமெரிக்க $ 1.1மில்லியன்) கலைப்பு விண்ணப்பம், நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவற்றில் ஒன்றான Copper Eagle க்கு ஒப்புதல் கொடுத்த உடன் கலைத்துவிட்டது. பாமோட்ஜி தங்கச் சுரங்கங்களின் கலைப்பாளர்கள், கலைப்பு ஆய்வு முடிவுற்றபின் அரோராவின் நான்கு இயக்குனர்களான Zondwa Mandela, Khulubuse Zuma, Thulani Ngubane (அதன் வணிக இயக்குனர்) மற்றும் மைக்கேல் ஹுல்லே (ஜனாதிபதி ஜுமாவின் வக்கீல்) ஆகியோர் மீது 1.7 பில்லியன் ராண்டுகள் (அமெரிக்க $212.5 மில்லியன்) கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஹுல்லே ஜனாதிபதி ஜுமாவின் சட்ட ஆலோசகராக பகுதி நேர அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்காலக் கூட்டுக் கலைப்பாளர்கள், மண்டேலா மற்றும் நிறுவனத்தின் வக்கீலான அஹ்மத் அமோத் ஆகியோர்மீது குற்றவியல் குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அவர்கள் மண்டேலா, ஜுமா, எல்குபனே மற்றும் பனஸ் ஆகியோர்மீது தனிப்பட்ட முறையில் திருடப்பட்ட பில்லியன்களை மீட்பதற்காக வழக்குத் தொடர அனுமதியும் கோரியுள்ளனர். பெருநிறுவன நிர்வாகத்திற்கு அந்த நேரத்தில் அரோராவால் நியமிக்கப்பட்ட மைக்கேல் ஹுல்லே (ஜனாதிபதி ஜுமாவின் ஆலோசகர்) மீதும் வழக்குத்தொடர தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன.

ஓர்க்னே மற்றும் க்ரூட்வ்லேய் சுரங்கங்கள்அழிக்கப்பட்டது, அத்துடன் 5,300 வேலைகள் தகர்க்கப்பட்டது ஆகியவை தென்னாபிரிக்காவின் புதிய நிதிய உயரடுக்கின் குற்றம் சார்ந்த தன்மை, அது பணம் சேமிக்கும் வழிவகை இவற்றின் பிரதிபலிப்பு ஆகும். தொழிலாளர்களுக்கு எதிராக நின்று, உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் ஆதரவிற்கு உட்பட்ட இந்த உயரடுக்கு தென்னாபிரிக்க நாட்டின் உயர்மட்ட அடுக்குகளின் ஆதரவைக் கொண்டிருப்பதோடு அத்துடன் இயைந்த உறவுகளையும் கொண்டிருக்கிறது.

ஆபிரிக்காவின் அடர்ந்த தீமைகளைக் கொண்ட குற்றம் சார்ந்த உயரடுக்கை அகற்றுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை கொண்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்தால்தான் முடியும்.