சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Anti-US protests spread throughout Muslim world

முஸ்லிம் உலகு முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பரவுகின்றன

By Alex Lantier
18 September 2012
use this version to print | Send feedback

ஒரு வாரத்திற்கு முன் எகிப்திலும் லிபியாவிலும் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு YouTube வீடியோவிற்கு எதிராகத் தொடங்கிய எதிர்ப்புக்கள் இப்பொழுது முஸ்லிம் உலகம் முழுவதும் விரைவாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் அலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் கொள்கைகளுக்கு எதிரான நூற்றுக்கணக்கன மில்லியன் மக்களின் சீற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. வார இறுதியில் எதிர்ப்புக்கள் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் கிட்டத்தட்ட 20 நாடுகளில் பரவின.

அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் பொலிஸ் அதிகாரிகள் பல ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரான காபூலில் அணிவகுத்துச் சென்றனர் எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அரசாங்கத்தின் கார்களை எரித்தனர், அருகில் Camp Phoenix இருந்த அமெரிக்க இராணுவத் தளத்தின்மீது கற்களை விட்டு எறிந்தனர் மற்றும் தளத்திற்கு வெளியே இருந்த கப்பலுக்குச் செல்லும் பெரிய கலன்களையும் எரித்தனர்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் இரண்டு எதிர்ப்பாளர்கள் பொலிசுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டனர்; இது ஆயிரக்கணக்கான மக்கள் கராச்சி, பெஷாவர் மற்றும் சமான் நகரங்களில் அணிவகுத்துச் சென்றபோது நடந்தது. சில நூற்றுக்கணக்கானவர்கள் லாகூரில் அணிவகுத்தனர், மற்றும் ஆப்கானிய எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் உள்ள கீழ் டிர் மாவட்டத்திலும் அணிவகுத்தனர். அன்றைய நடவடிக்கைகளை இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நிறுத்தி வைத்தது.

கராச்சியில் எதிர்ப்பாளர் ஒருவர் பொலிசார் எதிர்ப்பாளர்களுடன் அவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கையில் மோதியபோது தலையில் சுடப்பட்டு இறந்து போனார். பொலிசார் பல டஜன் எதிர்ப்பாளர்களை கூட்டத்தில் பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுத் தாக்குதலை நடத்தி மோதல் ஏற்பட்டபோது, கைது செய்தனர்.

கீழ் டிர் மாவட்ட எதிர்ப்பாளர்கள் செய்தியாளர் மன்றம் ஒன்றிற்கும் அரசாங்கக் கட்டிடம் ஒன்றிற்கும் தீவைத்தனர்; உள்ளூர் பொலிஸ் நிலையத்தையும் சூழ்ந்து கொண்டனர்.  பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு எதிர்ப்பாளர் கொல்லப்பட்டனர், இருவர் காயமுற்றனர்.

வங்க தேசத்தில் அதிகாரிகள் இன்னும் எதிர்ப்புக்களைக் குறைக்க முற்படுகையில், எதிர்க்கட்சியான வங்க தேசியக் கட்சியை சேர்ந்த கலேடா ஜியா அமெரிக்காவை முஸ்லிம் விரோதப் படத்தைத் தடைசெய்யுமாறு கோரினார். வெள்ளியன்று கிட்டத்தட்ட 10,000 எதிர்ப்பாளர்கள் திரைப்படத்தை எதிர்த்து அணிவகுத்தனர்; இது தலைநகர் டாக்காவிலும் நடைபெற்றது; அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகள் எரிக்கப்பட்டன, ஜனாதிபதி பாரக் ஒபாமா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிய அடையாள அட்டைகள் கூட்டத்தில் ஏந்தப்பட்டிருந்தன.

ஞாயிறன்று கிட்டத்தட்ட 100,000 ஆடைத் தொழிலாளர்கள் டாக்காவிற்கு 20 கி.மீ. தெற்கே உள்ள நாராயண்கஞ்சில் வேலைநிறுத்தம் செய்து, குறைந்த பணி நேரம் மற்றும் அதிக ஊதியங்களைக் கோரினர். வங்கதேச ஆடைத்தயாரிப்புத் தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 முதல் 16 மணி நேரம் வரை உழைக்கின்றனர், ஆனால் 37 டாலர்தான் மாதம் ஒன்றிற்கு பெறுகின்றனர்; உலகிலேயே இது குறைந்த ஊதியங்களில் ஒன்றாகும். ஆலை ஒன்றில் ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டார் என்று வந்த வதந்திகளுக்கு இடையே தொழிலாளர்கள் டாக்காவையும் துறைமுக நகரான சிட்டகாங்கையும் தொடர்புபடுத்தும் நெடுஞ்சாலையை தடைக்கு உட்படுத்தி, பொலிஸ் நிலையங்களையும் தாக்கினர்.

இந்தியாவில் முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலமான காஷ்மீரில் ஸ்ரீநகரில் திரைப்படத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்; அங்கு 15,000 முஸ்லிம்கள் வெள்ளியன்று எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க கொடிகளை எதிர்த்து, ஒபாமாவை ஒரு பயங்கரவாதி என்றும் கண்டித்தனர். அமெரிக்க தூதரகம் இப்பகுதிக்கு பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க குடிமக்களுக்கு அது கொடுத்த அறிவுரையை மீண்டும் வலியுறுத்தியது.

எதிர்ப்புக்கள் தென்கிழக்கு ஆசியாவிலும் பரவின. இந்தோனிசியாவில் நூற்றுக்கணக்கான பொலிசார் ஜாகர்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஒபாமாவின் உருவத்தை எரித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதினர்; இது உலகிலேயே அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு ஆகும். மெடன், பாண்டுங் மற்றும் சோலோ ஆகிய நகரங்களிலும் மோதல்கள் ஏற்பட்டன என்று தகவல்கள் வந்துள்ளன.

கிட்டத்தட்ட 3,000 எதிர்ப்பாளர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை தெற்கு பிலிப்பினோ நகரமான மரவியில் எரித்தனர். தலைநகரான பாங்காக்கில் முஸ்லிம்கள் எதிர்ப்புக்களை நடத்தலாம் என்று வந்த வதந்திகளுக்கு இடையே அமெரிக்கா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் அவற்றின் தூதரகங்களை தாய்லாந்தில் மூடின; இது அந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு ஆகும்; இங்கு ஏராளமான CIA சிறைகள் உள்ளன.

மத்திய கிழக்கில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யேமனின் தலைநகரான சானாவில் எதிர்ப்புக்களை தொடர்ந்து, அமெரிக்கத் தூதர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரினர். கடந்த வாரம், எதிர்ப்பாளர்கள் யேமனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கினர்; அங்கு அமெரிக்கா, ஒரு பினாமிப் போரை ஜனாதிபதி அப்த் ரப்போ மன்சூர் எல்-ஹடியின் ஆட்சிக்கு ஆதரவாக நடத்துகிறது. அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் யேமனில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளன. வாஷிங்டன் செப்டம்பர் மாதம் முழுவதும் தூதரகச் சேவைகள் இல்லை என்று நிறுத்திவிட்டது.

லெபனானில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஹெஸ்பொல்லா என்னும் ஷியைட் மக்கள் அமைப்பு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்துச் சஎன்றனர். ஹெஸ்பொல்லா தலைவர் ஷேக் ஹாசன் நஸ்ரல்லா இஸ்லாமிய விரோத வீடியோவைக் கண்டித்து அமெரிக்காவையும் குறைகூறினார்; அமெரிக்கா இப்பிராந்தியத்தில் குறுங்குழு வாத அழுத்தங்களை, சுன்னித் தலைமை பினாமிப் போரை சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக நடத்துவதின் மூலம் எரியூட்டியுள்ளது; மேலும் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயும் பிளவுகளை விதைக்கிறது.

இதைத்தொடர்ந்து ஞாயிறன்று சிரிய எல்லைக்கு அருகே இருக்கும் துருக்கிய நகரமான அன்டக்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.

இந்த எதிர்ப்புக்களை, மத உணர்வு உந்துதல் பெற்றவை அல்லது மத்திய கிழக்கின் மரபார்ந்த தன்மையினால் உந்துதல் பெற்றவை என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் சித்தரிப்பது பிற்போக்குத்தனமானதும் மற்றும் அவற்றின் சுயதிருப்திப்படல்களுக்குத்தான் உதவும். இந்த எதிர்ப்புக்கள், வாஷிங்டனின் போர்களுக்கு பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பை பிரதிபலிக்கின்றன; வாஷிங்டன் பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதில் மேற்கொண்டுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதைக் கண்டிக்கின்றன; இப்பிராந்தியத்தை ஒரு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பாகச் சுரண்டுவதை எதிர்க்கின்றன.

அமெரிக்காவிற்கு எதிராக மக்கள் சீற்றம் வெளிப்படுவது மற்றும் ஜனாதிபதி ஒபாமாவை பற்றிய ஆழ்ந்த ஏமாற்றம் (தன்னுடைய பதவிக்காலத்தின் முற்பகுதியில் அவர் ஒரு புதிய, அடக்குமுறை குறைந்த அமெரிக்கக் கொள்கையை மத்திய கிழக்கில் செயல்படுத்த இருப்பதாக உறுதியளித்திருந்தார்) ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஆண்டு காலத்தில், ஒபாமாவின் வெளியுறவுக் கொளைகையின் பிற்போக்குத்தன்மை இப்பிராந்தியம் முழுவதும் பரந்த முறையில் உணரப்பட்டுள்ளது.

இவருடைய நிர்வாகம் ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது; இவையோ ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கிய உயிர்களைப் பறித்தன, பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட போர் ஆகும். குவாண்டநாமோ குடாவில் காலவரையற்று காவலில் இருத்துவதையும் சிறையிலுள்ளவர்களை சித்திரவதை செய்வதையும் ஒபாமா தொடர்ந்து, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ட்ரோன் தாக்குதல்களையும் விரிவுபடுத்தி ஆயிரக்கணக்கான இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போதைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வாஷிங்டனின் பிரதிபலிப்பு, கடந்த ஆண்டு எகிப்து மற்றும் துனீசியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரங்களுக்கு எதிரான புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு பதிலிறுப்பாக, அது ஜனநாயகம் மனித உரிமைகள் ஆகியவற்றின் பெயரில் நடத்திய போர்களின் அடித்தளத்தில் இருக்கும் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது லிபியாவிலும் சிரியாவிலும் மக்கள் எதிர்ப்புக்களை அடக்குவதை நிறுத்த என்று கூறி போர்களுக்கு ஏற்பாடு செய்தபின், இப்பொழுது வாஷிங்டன் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்க வேண்டும் என்று கோருகிறது.

இப்போர்களே பிற்போக்குத்தன சுன்னி இஸ்லாமியப் போராளிகள், பயங்கரவாதக் குழுக்கள் என அல் குவேடாவுடன் தொடர்புடையவறைறிற்கு வாஷிங்டன் கொடுக்கும் ஆதரவைத் தளமாகக் கொண்டவை ஆகும். இக்கொள்கை இப்பொழுது அமெரிக்காவிற்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெங்காசியில் லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் இறப்பு மற்றும் மூன்று அமெரிக்கர்கள் கொலைசெய்யப்பட்ட தாக்குதல் அமெரிக்கத் தூதரகத்தில் நடத்தப்பட்டது இஸ்லாமியவாதக் குழுவான அன்சர் அல்ஷரியாவினால் நிகழ்த்தப்பட்டது எனத் தோன்றுகிறது. அதுவும் அதே போன்ற ஆயுதமேந்திய குழுக்களும் அமெரிக்கப் போர் மற்றும் கர்னல் முயம்மர் கடாபி அகற்றப்பட்டது ஆகியவற்றால் தூண்டப்பெற்ற சமூகப் பெரும் குழப்பங்களுக்கு இடையே தடையற்றுச் செயல்படுகின்றன.

அதிகரித்து வரும் வெகுஜன போராட்டங்கள் மற்றும் அமெரிக்க நலன்கள்மீது மத்திய கிழக்கில் அதுவே வளர்த்துவிட்ட வலதுசாரி சக்திகள் நடத்தும் தாக்குதல் இவற்றிற்கு இடையே, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் இப்பிராந்தியத்தில் இனி எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய விவாதம் பெருகியுள்ளது. வெளியுறவுக் கொள்கை நடைமுறைக்குள் சிலர், வாஷிங்டன் ஜனாதிபதி அசாத்துடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம், ஏனெனில் அவர் அல்குவேடா வகையிலான அமெரிக்கா அவருக்கு எதிராக ஆதரவைக் கொடுக்கும் அமைப்புக்களை விட சிரியாவில் ஒழுங்கை நிலைநிறுத்துவார் என்று பரிந்துரைக்கின்றனர்.

இவ்வகையில் நியூயோர்க் டைம்ஸ்  திங்களன்று எழுதியது: கொந்தளிப்பு பெரும் திகைப்பைத் தீவிரப்படுத்திவிட்டது.... அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் திரு அசாத்தை வீழ்த்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா? அவரோ இப்பிராந்தியத்தில் மத சார்பற்ற சர்வாதிகாரகளில் கடைசி நபர் ஆவார்; அவருடை ஆட்சி, எவ்வளவு அடக்குமுறையைக் கொண்டிருந்தாலும் வெகுஜனத் திருப்தி செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. சிரியாவில் அமெரிக்காவின் பினாமிப் போரைத் தொடர்வதற்கு ஆதரவு தரும் வெளியுறவுக் கொள்கை வல்லுனர்களையும் டைம்ஸ்  மேற்கோளிட்டுள்ளது.

ஆனால் அது Centre for American Progress உடைய Brian Katulis ஐயும் மேற்கோளிட்டுள்ளது. அவர் கூறுவதாவது: இந்நிகழ்வுகள் மக்களை இன்னும் சிந்திக்க வைக்கும்; ஏனெனில் ஏற்கனவே நம் உளவுத்துறை அமைப்புக்கள் நமக்கு சிரிய எதிர்த்தரப்பினரிடையேநாம் ஆதரவு கொடுக்கிறோம் எனக் கூறப்படுபவர்கள்சிலர் அல்குவேடாவுடன் பிணைந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

இந்த விவாதம் வாஷிங்டன் அடக்குமுறை ஆட்சிகளுக்குக் காட்டுவதாகக் கூறப்படும் எதிர்ப்பில் இருக்கும் இழிந்த பாசாங்குத்தனத்தைத்தான் அம்பலப்படுத்துகிறது; அதேபோல் மொத்தத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் குற்றவியல் தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. மனித உரிமைகள், ஜனநாயகம், குடிமக்களைக் காப்பாற்றுதல் என்று கூறப்படுபவை அனைத்தும் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை அடையும் நவகாலனித்துவ கொள்கையை மறைக்கும் போலிக் காரணங்கள் ஆகும்; இப்பிராந்தியத்தின் எரிசக்தி வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர விரும்புகிறது.

சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டார் போன்ற அடக்குமுறை ஆட்சிகள் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கு என நடத்தப்படும் போராட்டத்தில் நட்பு கொண்டவையா, அல்லது சிரியா, ஈரான் போன்றவை எதிரியா என்பது அதன் வணிக மற்றும் பூகோள ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாஷிங்டன் கொண்டுள்ள அதன் வணிக, பூகோள-மூலோபாய நலன்களைப் பொறுத்தே இருக்கும். ஒரு காலத்தில் நட்பு நாடுகள் என்னும் நீண்ட பட்டியலே உள்ளது; அதில் சதாம் ஹுசைன், முயம்மர் கடாபி போன்றோர் இருந்தனர்; அவர்கள் பின்னர் கொடுங்கோல் ஆட்சியர் என்று சித்திரிக்கப்பட்ட அழிக்கப்படுவதற்கு இலக்காயினர்.

மத்திய கிழக்கில் உள்ள சர்வாதிகாரங்களை, வாஷங்டன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புக் காட்டும் அமைப்புக்களுக்கு எதிராகப் பயன்படுத்த முற்றிலும் ஏற்கத்தக்க கருவிகள் என்றுதான் காண்கிறது. அதேவேளை தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு அல் குவேடா உட்பட அதி பிற்போக்குத்தன சக்திகளுடன் உடன்பாடுகளைக் காண அது தயாராக உள்ளது.