சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : நினைவகம்

Letters on the death of Dave Hyland

டேவ் ஹைலண்ட் மரணத்தையொட்டி வந்த கடிதங்கள்

14 December 2013

Use this version to printSend feedback

டேவிட் எட்வார்ட் ஹைலண்ட் டிசம்பர் 8 அன்று இரவு காலமானார். பழைய தொழிலாளர் புரட்சிகரக் கட்சியில் (WRP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தனது ஆதரவை அறிவித்ததோடு அத்துடன், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கலைத்து விடுவதற்கு கட்சியின் தலைமையில் இருந்த கெர்ரி ஹீலி, கிளிஃப் ஸ்லாட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோர் செய்த முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கன்னைக்கு அவர் தலைமை கொடுத்திருந்தார். 1986 இல் ICFI இல் இருந்து WRP பிளவுபட்ட பின்னர் அவர் பிரிட்டிஷ் பிரிவின் தேசியச் செயலராக ஆனார். உடல்நிலை மோசமானதன் காரணத்தால் 1998 இல் அவர் ஓய்வு பெறும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருந்து வந்தார். (காணவும்: டேவிட் எட்வர்ட் ஹைலண்ட்: மார்ச் 7,1947 – டிசம்பர் 8, 2013

டேவ் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாக, ஏராளமான இரங்கல் கடிதங்கள் உலகெங்கிலும் இருந்து அவரது மனைவி எய்லீன் மற்றும் அவரது பிள்ளைகளான ஜூலி, டோனி, கிளேய்ர் மற்றும் பவுலா ஆகியோருக்கு வரத் தொடங்கின. சர்வதேச அளவில் அவர் தோழர்களிடம் எத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவை சாட்சியம் கூறுகின்றன.  

இங்கிலாந்தில் உள்ள டேவின் தோழர்கள் அனுப்பிய சில கடிதங்களை நாங்கள் கீழே பிரசுரம் செய்திருக்கிறோம்.

* * * * * *

அன்புள்ள எய்லீன்,

நேற்றிரவு தோழர் டேவ் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்த துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டேவ் இன்னும் குறைந்த காலமே உயிர்வாழப் போகிறார் என்பதை நீங்களும், டேவும் மற்றும் மொத்தக் குடும்பமும் கொஞ்ச காலமாகவே அறிந்து வைத்திருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். இவ்விடயத்தை டேவ் அபாரமான மனதைரியத்துடன் கையாண்டார். எப்படியிருந்தபோதிலும், நீங்கள் இத்தனை நெடுங்காலத்திற்கு நேசித்த அன்பு செலுத்திய ஒரு மனிதர் சுவாசத்தை நிறுத்தி விடுகின்ற ஒரு படுபயங்கரமான நிலைக்கு உங்களை எதுவொன்றும் தயாரித்து வைத்திருக்க முடியாது.

டேவ் கடைசி வரையிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் பக்கம் தொடர்ந்து போராடி வந்தார் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஆகச்சிறந்த விடயமாகும். ஜோனும் நானும் அவரைக் காண வந்து ஒரு சில வாரங்களே ஆகின்றன. நாங்கள் அங்கு செலவிட்ட நேரம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. எமது இயக்கத்தின் வரலாற்றின் முக்கியத்துவத்தின் மீதும், முன் வருகின்ற மற்றும் பெரும் எண்ணிக்கையில் வரவிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் புதிய அடுக்குகளை நான்காம் அகிலத்தின் போராட்டப் படிப்பினைகளில் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தின் மீதும் அந்த உரையாடலின் போது கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் டேவ் வலியுறுத்தினார்.

டேவ் தானே தேர்ந்தெடுத்த ஒரு காலத்தில் உயிர் துறந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஒரு அறுவைச்சிகிச்சை செய்து பார்க்கலாம் என்ற ஒரு தெரிவு இருந்தபோதும் அதை அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அது உங்கள் மீதும் எஞ்சிய குடும்பத்தார் மீதும் இன்னும் மேலதிகமான சுமையை வைக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.

தனது முதிர்ச்சியான வயதின் மொத்த வாழ்க்கையையுமே டேவ் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்காய் அர்ப்பணித்திருந்தார். அத்துடன் நாம் அனைவரும் அறிந்தது போல WRP ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் முக்கியமானதொரு வகிபாத்திரத்தை ஆற்றியிருந்தார். எமது இயக்கத்தில் அவர் மிகவும் மரியாதையானதொரு இடத்தில் வைக்கப்பட்டிருப்பார்.

உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார்க்கும் முழுமையான அனுதாபங்களுடன்

பார்பரா சுலோட்டர்

* * * * * *

அன்புள்ள எய்லீன்,

டேவ் இறந்த செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். அதுமுதலாக உங்களைக் குறித்த எண்ணங்களே எனக்கு.

டேவ் தனித்துவமானவராக இருந்தார் என்பதுடன் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் இருந்த மிகச் சிறந்த அம்சத்தின் அதாவது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்தும் அவற்றை எப்படி மாற்றுவது என்பது குறித்துமான ஒரு  ஆழமான புரிதலில் வேரூன்றியிருந்த ஒரு நல்லூக்கம் மற்றும் பக்குவ மனநிலையின் - உருவடிவமாக அவர் இருந்தார்.

அவர் இறுதி வரை கடுமையாகப் போராடினார். அத்தனை நாளிலும் நிபந்தனையின்றி நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது. அவரது வாழ்க்கை முழுவதிலுமே இதில் நீங்கள் ஒரு பெரும் பாத்திரத்தை ஆற்றியிருக்கிறீர்கள்.

அத்தனை சிக்கல்களுக்கும் எதிராகப் போராடுவதற்கான விருப்பம், உண்மையைப் பேசுவது, விடயங்களை உள்ளபடி உரைப்பது இவை தான் டேவ் என்றவுடன் எங்கள் நினைவில் வருவனவாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாய், அனைத்துலகக் குழுவின் பக்கமாய் நின்று ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டருக்கு எதிராக அவர் கையிலெடுத்த துணிச்சல்மிக்க போராட்டத்திற்காகவும், அத்துடன் ICFI இன் வரலாற்று முன்னோக்கின் மீது அவர் அளித்த முக்கியத்துவத்திற்காகவும் டேவ் நினைவில் நிற்பார்.

டேவ் கிளையில் இருந்தாரென்றால் சில சமயங்களில் நான் அச்சப்பட்டதும் கூட உண்டு என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அவரது அரசியல் பங்களிப்பும் கூட்டுழைப்பும் எனக்கு எப்போதும் பெரும் ஊக்கத்தை அளித்து வந்திருக்கின்றன என்பதோடு மிகவும் சிரமமான நிலைமைகளின் கீழும் கூட எழுதுவதற்கு அவர் கொண்டிருந்த தீர்மானகரமான உறுதி என்னைப் பிரமிக்கச் செய்திருக்கிறது.

இச்சமயம் விடயங்கள் மிகவும் வலிமிகுந்ததாகவும் உணர்வறச் செய்வதாகவும் இருக்கும் என்பதை நான் அறிவேன். கொஞ்ச காலம் சென்ற பின்னர் தான் இது குறையும்.  

டேவின் சளைக்காத மன உறுதி உங்களிலும், அதேபோல ஜூலி, டோனி, கிளேர் மற்றும் பவுலாவிலும் உயிர்வாழ்கிறது.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களுடன்

கொலீன்

* * * * * *

எய்லீன் மற்றும் குடும்பத்தார்க்கு,

டேவ் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

செய்தி கேட்டதும் பெரும் துயரமடைந்தேன். ஒரு சில வாரங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்து பேசியபோது அவர் முழு உற்சாகத்துடன் மன உறுதியுடன் இருந்ததாகவே எனக்குப் பட்டது.

1980களில் முன்னிலைக்கு வந்த டேவ், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சர்வதேசியவாதக் கோட்பாடுகளுக்குத் திரும்பவும் WRP இன் தேசியவாதச் சீரழிவுடன் முறித்துக் கொள்வதற்கும் அனைத்துலகக் குழு விடுத்த அழைப்பிற்கான பதிலிறுப்பாக இத்தகையதொரு வலிமையான தலைமையை அளித்தது குறித்து நாங்கள் பெருமிதமும் நன்றியுணர்வும் கொள்கிறோம்.

எங்களில் அநேகரும் WRP (I)யும் மற்றும் அதன்பின் ICPயும் ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்முறையின் ஊடாகவே டேவை அறிந்து கொண்டோம்.

கட்சியானது வரலாறு அதற்கு அமைத்துத் தந்திருக்கும் கடமைகளை ஆற்றுமளவுக்கு உயர்ந்தெழுந்தாக வேண்டும் என்ற முழுத் தீர்மானமான உறுதியைக் கடைப்பிடிப்பதில் ஹீலி ஒரு மார்க்சிஸ்டாக இருந்தபோது கொண்டிருந்த மகத்தான குணாம்சங்களில் சிலவற்றை டேவும் கொண்டிருந்தார் என்றே நான் நம்புகிறேன்

டேவ் தேசியச் செயலராக இருந்த சமயத்தில் இடப்பட்ட ஸ்தூலமான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பெற்ற முன்னேற்றங்கள் குறித்து அவர் சரியானமுறையில் பெருமிதம் கொண்டிருந்தார் என்றும் நான் நம்புகிறேன்.

முதலில் WRP தலைவர்களின் ஓடுகாலித்தனத்தினாலும் அதன்பின் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதனால் உருவான நிலைமைகளிலும் ஒரு பிரம்மாண்டமான குழப்பம் நிலவிவந்ததொரு காலகட்டத்தில் டேவ் தலைமை கொடுத்ததால் தான் பிரிட்டன் தோழர்கள் அவர்கள் இன்றிருக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த அர்த்தத்தில், டேவின் ஒரு துகள் எங்கள் எல்லோரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்களுடன்,

டோனி ஜே

* * * * * *

அன்புள்ள எய்லீன், ஜூலி, டோனி, கிளேர், பவுலா மற்றும் குடும்பத்தார்க்கு,

எனது ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். டேவிட் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் துயர் கொண்டிருக்கிறேன்.

இது போன்ற ஒன்று நடந்து விடலாம் என்பது நாம் சிந்தித்திருந்தது தான் என்றபோதிலும், அவர் ஒரு மகத்தான போராளி, தனது வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகரமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்பதால் முடிவில் அவரே வெற்றி பெறுவார் என்பதே எப்போதும் உங்களது நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் சில நாட்களுக்கு முன்பாக அவருடன் தொலைபேசியில் பேசியபோது இந்த முறை அவர் வெல்லப் போவதில்லை என்பது எனக்கு உள்ளூர உணரக் கூடியதாக இருந்தது. ஆனால் அவர் ஒருபோதும் தனது நம்பிக்கையையும் அரசியல் உறுதிப்பாட்டையும் இழக்கவில்லை. தான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தக மதிப்புரை குறித்து என்னிடம் சொல்லிக் கொண்டிருந்ததோடு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தார். அவர் தனது தீரம், துணிச்சல் மற்றும் மரியாதையை தனது இறுதித் தருணம் வரையிலும் சுமந்து வந்திருந்தார் என்பது நம்புவதற்கும் கடினமானது. நோயின் மீளாத்துன்பத்தில் இருந்து அவர் விடுபட்டிருக்கிறார் என்பது ஒரு சிறு ஆறுதல்.

கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு குறித்தும், அதிலும் குறிப்பாக WRP ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் தலைமை கொடுத்தது குறித்தும் அவர்களால் பிரிட்டனில் ICFI பிரிவு அழிந்து விடக்கூடாது என்பதில் அவர் காட்டிய தீர்மானமான உறுதி குறித்தும், நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் அவர் என்றென்றும் நிலைத்து நிற்பார் என்பதோடு சோசலிசப் போராளிகளின் வருங்கால தலைமுறைகளுக்கான ஒரு உதாரணமாகத் திகழ்வார்.

அன்புடனும் அனுதாபங்களுடனும்,

விக்கி

* * * * * *

அன்புள்ள எய்லீன்,

டேவ் இறந்து விட்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்து சட்டென்று மீள இயலவில்லை

இந்த துயரகரமான நேரத்தில் உங்களுக்கும் உங்களது குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முள் ஒருவரை நாம் இழக்கும்போது அது எத்தனை பெரிய சோகமானது என்பது நாம் அறிந்ததே. ஆயினும் நாம் இந்த உலகத்தில் எடுத்துக் கொண் இடத்தையும் காலத்தையும் அளவிடுவதற்கு நாம் நமது குடும்பத்திற்குச் செலவிட்ட அன்பு மற்றும் அக்கறை, தொழிலாள வர்க்கத்தை விடுதலை செய்வதிலும் அவர்தம் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், மற்றும் விஞ்ஞானத்திலிலும் கலாச்சாரத்திலும் நடந்த மாபெரும் சாதனைகளை மானுடத்தின் சேவையில் பொருத்திப் பார்க்க பாடுபடுவதிலும் நாம் செய்திருக்கும் பங்களிப்பு இவற்றை விட பெரிய அளவுகோல் இல்லை.

நனவு பெறும் தொழிலாளர்களுக்கு இதுதான் பெரும்பாலும் நிகழ்கிறது. மிக சிக்கலான நிலைமைகளின் கீழ் தியாகம் மற்றும் போராட்டம் என்பதே எப்போதும் இதன் அர்த்தமாக இருக்கிறது.

டேவ் மற்றும் அவரது வாழ்க்கைக்கு கிறிஸ் அளித்த இரங்கற்செய்தி நெகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. எனது வாழ்க்கையிலும், அத்துடன் இன்னும் பலரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்றில் டேவ் அளித்த தலைமையானது எனது நினைவில் என்றென்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

டேவ், உங்களுக்கும் உங்களது, எய்லீனுக்கும் மிகுந்த மரியாதையுடன்,

காத் 

* * * * * *

அன்புள்ள எய்லீன்,

நேற்றிரவு டேவின் மரணம் குறித்த செய்தி கேட்டு பெரும் துயரமுற்றேன்.

WRP உடைவின் போதும் ICP ஸ்தாபகத்தின் போதும் அவர் ஆற்றிய அதிமுக்கியமான பொறுமைமிக்க பாத்திரத்தை குறித்து மற்றவர்கள் பேசுவார்கள்.

ஆனால் எனக்கு டேவின் ஞாபகம் 1978 வரை இழுத்துச் செல்கிறது. அப்போது நான் WRP இல் இணைந்து கொஞ்சகாலமே ஆகியிருந்த நிலையில் வீல்ட்ஸ்டோன் தேர்தலில் டேவின் தேர்தல் முகவராக செயல்பட்டேன். ஆவேசமானவரும் மரியாதைக்குரியவருமான இந்த கோடாக் தொழிலாளர்தலைவர் பொதுக்கூட்டங்களிலும் மற்றும் பெருவீதிகளிலும் உறுதிபட அதேசமயத்தில் சுவாரஸ்யத்துடன் பேசியதை நான் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அத்தகைய வகையில் ஒரு முழுமையான மற்றும் முன்னுதாரணமான வாழ்க்கையை நடத்தி விட்டு, இறுதி ஆண்டுகளில் மிகவும் முடக்கப்பட்ட நிலையில் தன்னைக் காணும் போது டேவ் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை கற்பனை செய்ய இயலவில்லை. ஆனால் கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது கூட அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் விரிவடையும் செல்வாக்கு குறித்தும் அதற்காக எழுதுவதற்கு அவர் கொண்டிருக்கும் தீர்மானகரமான உறுதி குறித்துமான தனது நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அப்படியே மாறாது வைத்திருந்தார்.

டேவ் யார் அவர் என்ன செய்தார் என்பது குறித்து இப்போது வெகுசிலர் தான் அறியக் கூடும் என்கிறபோதிலும் வருங்காலத்தில் மில்லியன்கணக்கான மக்கள் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் குறித்து அறிந்து கொள்வார்கள்.

உங்களுக்கும், ஜூலி, டோனி, மற்றும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது ஆறுதல்மொழிகள் உரித்தாகட்டும்

போல் எஸ்

* * * * * *

எய்லீன் மற்றும் டேவ் தொடர்பான அனைவருக்கும்

நேற்று டேவ் இறந்த செய்தி கேட்டு நானும் மார்க்கும் துயரடைந்தோம் என்பதோடு அச்சமயத்தில் உங்களைக் குறித்தே எங்களது நினைவலைகள் இருந்தன.

நாங்கள் டேவை ஓரிருமுறை தான் சந்தித்திருப்போம் என்கிறபோதிலும், இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்றில் அவராற்றியிருக்கும் பங்களிப்பானது அவரது கோட்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாகப் பேசுகின்றது. SEPக்கு தனது ஆயுள்முழுவதிலும் அவரளித்திருந்த உறுதிப்பாடானது புதிய மற்றும் பழைய உறுப்பினர்களால் எப்போதும் நினைவுகூரப்படுவதாக இருக்கும்.

டேவை சந்தித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஜூலி மற்றும் டோனி மூலமாக மட்டுமல்லாது, இங்கிலாந்து SEP இன் அடித்தளங்களைக் கற்று டேவின் துணிச்சலான மற்றும் கோட்பாடான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தலைப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரின் மூலமாகவும் அவரது பாரம்பரியம் கட்சிக்குள்ளாக நீடித்து வாழும். இந்தக் கடினமான நேரத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள உங்களால் இயலும் என நாங்கள் நம்புகிறோம்.

உங்கள் அனைவருக்கும் எங்களது அன்பும் அக்கறையும் உரித்தாகட்டும்.

கெல்லி மற்றும் மார்க்


* * * * * *

டேவ் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாக, ஏராளமான இரங்கல் கடிதங்கள் உலகெங்கிலும் இருந்து அவரது மனைவி எய்லீன் மற்றும் அவரது பிள்ளைகளான ஜூலி, டோனி, கிளேய்ர் மற்றும் பவுலா ஆகியோருக்கு வரத் துவங்கின. சர்வதேச அளவில் அவர் தோழர்களிடம் எத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவை சாட்சியம் கூறுகின்றன.

 

டேவின் சர்வதேச தோழர்கள் அனுப்பிய கடிதங்களில் இருந்து சிலவற்றை கீழே பிரசுரிக்கிறோம்.

 

அன்புள்ள எய்லீன்,

அன்புள்ள ஜூலி, டோனி, பவுலா மற்றும் கிளேர்,

அன்புள்ள SEP தோழர்களே,

நாம் ஒரு மாமனிதரை, நண்பரை மற்றும் தோழரை இழந்து நிற்கிறோம்.

தொழிலாள வர்க்கத்தின் தன்னம்பிக்கை, மன உறுதி, புரட்சிகரப் புத்துணர்வு மற்றும் தீர்மானமான உறுதி என வரவிருக்கும் சமூக அபிவிருத்திகளில் மாபெரும் முக்கியத்துவம் கொண்டவையாக நிரூபணமாகவிருக்கும் ஒன்றின் உருவடிவமாய் டேவ் திகழ்ந்தார்

அவரை ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சென்று பார்த்தபோது, அவரது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது தெளிவானது. ஆயினும், மனிதகுலத்தின் சோசலிச வருங்காலத்திலும் நமது சர்வதேசக் கட்சியின் அரசியல் வலிமையிலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையில் கொஞ்சமும் தொய்வு இருக்கவில்லை.

1985 அக்டோபரில் WRP உடனான பிளவின் போதான பரபரப்பான மற்றும் முன்னுதாரணமான நாட்கள் குறித்தும், டேவிட் நோர்த்தை தொடர்பு கொள்ள டேவ் எடுத்த முன்முயற்சி குறித்தும் நாங்கள் பேசினோம். எங்கள் இருவருக்குமே, WRP தலைமையின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் என்பது ஒருவகை அரசியல் மறுபிறப்பாகவும் ஒரு நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நட்பின் ஆரம்பமாகவும் இருந்தது

எழுபதுகளில் தனது அரசியல் வேலையைத் தொடங்கியதில் இருந்தே தான் ஒரு சர்வதேசியவாதி தான் என்றும், தன்னை எப்போதும் ஒரு உலகக் கட்சியின் அங்கத்தவராகவே புரிந்து கொண்டிருந்ததாகவும் கூறிய டேவ், ஆனால் WRP பிளவின் போது தான் ஜேர்மனி பயணத்திற்காக  முதன்முறையாக இங்கிலாந்தை விட்டு வெளியே செல்வதற்கே அவருக்கு சந்தர்ப்பம் வாய்த்ததை கூறியபோது நாங்கள் வாய்விட்டு சிரித்தோம். அப்போது எஸென் நகரத்தைத் தேடி ஐரோப்பாவின் பாதியை சுற்றி சுமார் ஒரு வாரம் அவர் செலவிட்டிருந்தார்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய கடினமான ஆண்டுகள் குறித்தும், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் அகிலத்தைக் கட்டுவதில் நாங்கள் எங்கள் வேலையில் கண்டிருந்த பெரும் முன்னேற்றங்கள் குறித்தும் நாங்கள் பேசினோம். அவரது நோயின் கடுமையையும் தாண்டி டேவ் எத்தனை விபரங்களை அறிந்து வைத்திருந்தார் என்பதை அறிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. WSWS இல் வந்த அத்தனை முக்கியமான கட்டுரைகளும் அவருக்குத் தெரிந்திருந்தது என்பதோடு உலகம் புரட்சிக் கருவுற்றிருக்கிறது என்று அவர் அறிவித்தார். முதலாளித்துவ நெருக்கடி முக்கியமான வர்க்கப் போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிரான நமது போராட்டம் தொழிலாளர்களிடம் இருந்து மேலும் மேலும் ஆதரவைப் பெறும் என்பதிலும் அவர் முழு உறுதி கொண்டிருந்தார்.

ஒரு அடி கூட தன்னால் காலை எடுத்து வைக்க முடியாமல் நீண்டநாட்களாய் சக்கரநாற்காலியில் சிறைப்பட்டிருந்த போதிலும், நான் மிகவும் நம்பிக்கையோடு இருப்பவன் என்று அவர் கூறியபோது நான் நெகிழ்ந்து போனேன்.

நாங்கள் இருவரும் கட்டித்தழுவி விடைகொடுத்தபோது, அது தான் கடைசி விடைகொடுப்பாக இருக்கப் போகிறது என்பது எங்கள் இருவருக்குமே உணர முடிந்தது. அந்த சமயத்தில் பேசுவது எங்கள் இருவருக்குமே கடினமான ஒன்றாக இருந்தது என்ற நிலையில், டேவ் அமைதியாகக் கூறினார், என்னைப் பொறுத்தவரை இனிவரும் எதுவொன்றுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எனது கட்சிக்கும் வர்க்கத்திற்குமான எனது புரட்சிகரக் கடமையை ஆற்றியிருப்பதாகவே உணர்கிறேன். 

அவர் கூறியது சரியே. நமது இயக்கத்தின் முழு வரலாறும் வருங்காலத்தில் எழுதப்படும்போது, அதில் டேவுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். WRP உடனான உடைவின் போதும் அதனையடுத்து வந்த ஆண்டுகளிலுமான அதிமுக்கியமானதொரு காலகட்டத்தில் அவர் மிக முக்கியமானதொரு பாத்திரத்தை ஆற்றினார். அவருடைய நாசகரமான நோய் இல்லாவிட்டால், இன்றும் கூட அவர் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான நமது போராட்டத்தில் முன்னிலை வகித்திருப்பார்

எய்லீனின் அன்பும் ஆதரவும் டேவின் வலிமைக்கு முக்கியமான தூண் போல் இருந்தது. அவர் டேவுக்கு அத்தகைய அற்புதமான வகையில் உறுதுணையாக இருந்து வந்தார். எய்லீன், கடந்த தசாப்தங்களில் நீங்கள் வெறுமனே அவரது வாழ்க்கைத் துணையாக மட்டும் இருக்கவில்லை, அவரது செவிலியாக, அவசரகால மருத்துவராக, செயலாளராக மற்றும் குடும்ப மேலாளராகவும் இருந்து வந்திருக்கிறீர்கள். டேவ் தனது குடும்பத்தை இதயபூர்வமாக நேசித்ததுடன் அவர்கள் குறித்து மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தார்.

டேவ் காலத்திற்கு முந்தி மரணமடைந்ததற்கு நாங்கள் துக்கம் அனுசரிக்கிறோம். அவர் என்றென்றும் எங்களது நினைவுகளில் வாழ்வார் என்பதோடு வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கும் முன்னுதாரண மனிதராக தொடர்ந்து திகழ்வார்.

அக்கறையுடன்,

உலி ரிப்பேர்ட், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர்

* * * * * *

அன்புள்ள எய்லீன், ஜூலி மற்றும் டோனி,

தோழர் டேவின் மரணம் தொடர்பான எனது ஆழ்ந்த இரங்கல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, டேவின் மிகக் கடினமான இறுதி ஆண்டுகளில் அவருக்கு உதவியாக இருப்பதில் எய்லீன் காட்டியிருக்கும் வலிமைக்கும் தீரத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.

டேவ் போல மன உறுதியான உற்சாகமான ஒரு தோழருக்கு இத்தகைய ஒரு கொடிய நோய் வரக் கூடாது என்பதே எவரொருவரின் எண்ணமாக இருக்கும். அவரது வாழ்வுக்காலம் குறுகியதாகியிருந்தாலும் அது முழுக்க முழுக்க இலக்குடையதாக இருந்தது என்பதே ஒரே மன ஆறுதலாகும்.

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த மிகச் சிறந்த கூறின் பிரதிநிதியாக அவர் இருந்தார். WRP ஒரு புரட்சிகர ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக இருந்த போது அதில் இணைந்திருந்த அவர், அக்கட்சியில் நடுத்தர வர்க்க கூறுகள் மேலோங்கி அக்கூறுகள் கட்சியை அழிப்பதற்காக அத்தனை வகை அகநிலை அதிருப்திகளையும் வருத்தங்களையும் ஒன்றுசேர்த்துக் கொண்டிருந்த போது, டேவ் தனது கோட்பாடுகளுக்கு விசுவாசமாக அனைத்துலகக் குழுவை நோக்கித் திரும்பினார். அவ்வாறு செய்ததன் மூலம் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை அவர் பாதுகாத்தார். இந்த சமயத்தில் தான் எனக்கு அவர் குறித்த அறிமுகம் கிட்டியது என்பதால் இவ்விடயத்தில் அவர் நினைவு எப்போதும் வரும்.    

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான இழப்புக்கு எனது அனுதாபங்கள் உரித்தாகட்டும். இதனை நேரில் தெரிவிப்பதற்கும் விரைவில் சந்தர்ப்பம் கிட்டும் என்று நம்புகிறேன்

பீட்டர் சுவார்ஸ், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்

* * * * * *

அன்புள்ள ஜூலி,

தோழர் டேவ் ஹைலண்டின் மரணம் குறித்து இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி ஆழ்ந்த துயரம் கொள்கிறது

அவர் கொஞ்சகாலமாகவே உடல்நலமின்றி இருந்தார் என்பது நாங்கள் அறிந்ததே என்கிறபோதிலும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னேற்றத்தில் தனது மதிப்புமிகுந்த அரசியல் பங்களிப்பை தொடர்ந்து அளிக்கும் வகையில் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கையாக இருந்தது படுத்தபடுக்கையாய் இருந்தபோதும் அவர் கட்டுரைகள் எழுதினார் என்பதோடு, SEP (UK) இன் ஸ்தாபக காங்கிரசில் தீரத்துடன் பங்கேற்று பங்களிப்பு செய்து ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் உத்வேகம் அளித்தார் என்பதையும் நாங்கள் அறிந்தோம்.

1985-86 இல் WRP இன் தேசியவாத சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக தோழர் டேவிட் நோர்த்தும் வேர்க்கர்ஸ் லீக்கும் தலைமை கொடுத்த ஒரு போராட்டத்தில் ICFI பெரும்பான்மையின் பக்கம் நிற்பதிலும், சோசலிச சர்வதேசியவாதத்தின் வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கும் டேவ் வெளிப்படுத்திய மன உறுதியையும் தீர்மானத்தையும் கூட அது எங்களுக்கு நினைவூட்டியது.

அவரது நினைவுகள் எங்கள் இயக்கத்தில் எப்போதும் நிலைத்திருக்கும்.

டேவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் SEP (UK) இன் அங்கத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன்,

விஜே டயஸ், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலர்

* * * * * *

அன்புடன் தோழர் கிறிஸ்,

தோழர் டேவ் ஹைலண்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் தோழர்களுக்கு SEP (ஆஸ்திரேலியா) தேசியக் குழுவின் சார்பாகவும் மற்றும் அனைத்து SEP அங்கத்தவர்களின் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1985-86 இல் WRP தேசியவாத சந்தர்ப்பவாதிகளுடனான பிளவின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்திற்கான வெற்றிகரமான போராட்டத்தில் தோழர் ஹைலண்ட் மறுக்கவியலாத ஒரு பாத்திரத்தை ஆற்றியிருந்தார்.

WRP தலைமையின் பல ஆண்டுகால சந்தர்ப்பவாத அரசியலால் உருவாக்கப்பட்ட மாபெரும் குழப்பம் மற்றும் நோக்குநிலை பிறழலான சூழலுக்கு மத்தியில், டேவ், பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு ஒரு அழிக்கமுடியாத பங்களிப்பைச் செய்திருந்தார்.

அந்த சமயத்தில் எமது இயக்கத்தின் கோட்பாடுகளை பாதுகாக்க பாறாங்கல் உறுதியுடன் அவர் நின்றதை அப்போராட்ட சமயத்தில் நானே கண்கூடாகக் கண்டேன்.

தனது இறுதி ஆண்டுகளில், தனது வாழ்வையே இறுதியில் எடுத்துக்கொள்ளவிருந்த நோய்க்கு முகம் கொடுத்திருந்த நிலையிலும் தோழர் டேவ் ஹைலண்ட் அதே உறுதியுடனும் தீரத்துடனும் இருந்தார். நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான நோக்கத்தை முன்னெடுக்க தனது சக்திக்கு இயன்ற அனைத்தையும் அவர் செய்து கொண்டிருந்தார்.

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் எமது சர்வதேச இயக்கத்தின் ஒரு ஆகச்சிறந்த பிரதிநிதியாக அவர் வரலாற்றில் தனது முத்திரையை பதித்துச் சென்றிருக்கிறார்.

தோழர் டேவ் மறைந்து விட்டார். நாம் அவரது இழப்பை நிச்சயம் உணர்வோம். ஆயினும் இனி வருபவர்களுக்கான ஒரு அடித்தளத்தை அமைப்பதற்கு அவர் உதவிச் சென்றிருக்கிறார். நமது நினைவுகளில் அவர் வாழ்வார்.

புரட்சிகர இரங்கல்களுடன்,

நிக் பீம்ஸ், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர்

* * * * * *

அன்புள்ள  ஜூலி,

உங்களது அன்புத் தந்தையும் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஆகச்சிறந்த பிரதிநிதிகளில் ஒருவருமான டேவ் மறைந்ததை ஒட்டி உங்கள் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டேவின் நோய்நிலையின் தன்மை அவர் உயிர்வாழ்வதைத் தொடர அனுமதிக்கவில்லை என்பது நீங்கள் அறிந்தது தான் என்றபோதும் நீங்கள் இப்போது எத்தகைய ஒரு அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருப்பீர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான சோசலிச வருங்காலத்திற்குமான ஒரு சமரசமற்ற போராளி இப்போது உயிரோடு இல்லை என்பதை சீரணிக்க எனக்கும் மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் நண்பர்களிடையே மட்டுமன்றி, அனைத்துலகக் குழுவின் வருங்காலமே பணயத்தில் இருந்த ஒரு சமயத்தில் சர்வதேசியவாதத்தை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய துணிச்சலானதும் அதிமுக்கியமானதுமான பாத்திரத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் வருங்காலத் தலைமுறைகளாலும் அவர் நினைவுகூரப்படுவார்.  

அவர் நினைவுக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆழ்ந்த அன்புடன்,

லிண்டா டெனின்பாம், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்

* * * * * *

அன்புள்ள எய்லீன், ஜூலி மற்றும் டோனி,

டேவின் மரணச் செய்தி கேட்டு பெரும் துயரடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் அத்துடன் அவரது தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்த விழைகிறேன்.

1987 இல் ஜேர்மனியில் நடந்த கட்சியின் ஒரு கோடை முகாமில் நான் டேவைச் சந்தித்தேன். இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் சுதந்திரப் போராளிகளின் சிந்தனையில் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த முதலாளித்துவ தேசியவாத கருத்தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிதேடிக் கொண்டிருந்த இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த ஒரு குழுவின் ஒரு பகுதியாக அப்போது நான் இருந்தேன்.

WRP சீரழிவுக்கும் தமிழ் போராட்டத்திற்கும் இடையிலான உறவை நாங்கள் அறிய விரும்பினோம். WRP இல் ஹீலி, பண்டா மற்றும் ஸ்லாட்டரின் சீரழிந்த தலைமையில் இருந்து முறித்துக் கொண்டு ICFI இன் பக்கம் நின்றதானது இலங்கையில் எங்களது அனுபவங்களைப் புரிந்து கொள்வதில் எத்தனை முக்கியத்துவமானது என்பதையும், முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு WRP தகவமைத்துக் கொண்ட ஒரு நாசகரமான அரசியல் எப்படி எங்களுக்கு ஏராளமான துன்பங்களை உருவாக்கித் தந்திருந்தது என்பதையும் அவரால் மிகத் தெளிவாக விளக்குவதற்கு முடிந்தது

ஒரு சர்வதேசிய முன்னோக்கு குறித்த பிரச்சினை என்பது எங்களுக்குப் புதியதாக இருந்தது. ஒரு சர்வதேசிய வழியில் நாங்கள் சிந்தித்திருக்கவில்லை.

LSSP குறித்தும் பப்லோவாதத்துடன் அது கொண்டிருந்த உறவையும் குறித்துப் பேசிய அவர், WRP இன் சீரழிவானது LTTE இன் தத்துவாசிரியரான பாலசிங்கம் போன்ற முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு ஆதரவளித்ததன் மூலம்  எப்படி இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறைக்கும் அழிவை உண்டாக்கியிருந்தது என்பதை எடுத்துக் காட்டினார்.

சர்வதேசிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக மாறுவதில் எங்களுக்கு அவர் உதவினார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் போராடுவதிலும், காலனித்துவ நாடுகளில் இருந்தான புலம்பெயர்ந்த மக்களுடன் பிரிட்டனில் வேலைசெய்ததிலும் பிரிட்டிஷ் தோழர்களுக்கு இருந்த அனுபவம் எங்களது சூழ்நிலை குறித்து ஒரு சிறப்பான உணர்திறனை அவர்களுக்கு அளித்திருந்தது என்று நான் நினைக்கிறேன். டேவ், அவருடன் விக்கி மற்றும் பார்பரா போன்ற ஒத்த தோழர்கள், எங்களுடன் அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்லாது எங்களது புலம்பெயர் வாழ்க்கைச் சூழல் குறித்தும் பேசுவார்கள்.

உடல்நலம் குன்றத் தொடங்கி அவர் ஒரு கைத்தடியின் துணையுடன் நடக்க நேர்ந்த நிலையின் சமயத்திலும் அவர் எப்போதும் என்னுடனும் பிற தமிழ் தோழர்களுடனும் அருகில் வந்து பேசுவார். அவர் எங்களை ஒருபோதும் மறந்ததில்லை. எப்போதும் மிகத் தீவிரமான சிந்தனை கொண்டவராக இருந்தார்

இந்தக் கடினமான நேரத்தைக் கடப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டிருப்பதைப் போல டேவின் போராட்டத்தைத் தொடர்வதற்கும் உங்களுக்கு வலிமை கிட்டட்டும்.

அன்பான அக்கறைகளுடன்,

ஞானா

* * * * * *

அன்புள்ள ஜூலி,

உங்கள் தந்தை இறந்த செய்தியை இப்போது தான் கிறிஸ் மூலமாக அறிந்தேன். பெரும் துயரமாக உணர்கிறேன். அவரைத் தெரிந்தவர்களுக்கும், அல்லது அவரது பிந்தைய காலங்களில் அவர் எழுதிய அருமையான கட்டுரைகளைப் படித்தவர்களுக்கும் கூட இதே உணர்வு தான் இருக்கும். அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியில் அவர் ஒரு தனித்துவமான ஆளுமையாக இருந்தார் என்பதோடு WRP சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் விலைமதிப்பிட முடியாத ஒரு பாத்திரத்தை அவர் ஆற்றினார்

பார்ன்ஸ்லியில் மற்றும் பிறவெங்கிலும் – WRP ஆவணங்களில் வேலை செய்தது, அவருடன் ஷெஃபீல்டில் இருந்து இலண்டனுக்கு வாகனத்தில் பயணம் செய்தது, ஒரு இளைஞராக நாட் கிங் கோல் அவர் மீது செலுத்தியிருந்த தாக்கம் குறித்தும் வெகுஜன இசை மீதான அவரது காதல் குறித்தும் பேசியது என அவரது நீண்ட கால நினைவுகள் எப்போதும் என் நினைவில் இருக்கும். அவரை மீண்டும் காணவே எப்போதும் நான் நம்பிக்கை கொண்டு வந்திருக்கிறேன்.

எங்களின் நினைவுகள் உங்களுடன் இருக்கின்றன என்பதை நெல்லியும் நானும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

பில் வான்கென்

* * * * * *

அன்புள்ள ஜூலி,

டேவ் மரணச் செய்தி இப்போது தான் தெரிந்தது. உங்களைப் பற்றியும் டோனி மற்றும் எய்லீனைப் பற்றியும் எனக்கு சிந்தனைகள் ஓடுகின்றன. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக டேவ் நடத்திய பல தசாப்த காலப் போராட்டத்தின் போது ஏராளமான தோழர்களின் வாழ்க்கையை அவர் தொட்டிருக்கிறார், அந்தத் தோழர்களுக்கும் இதே உணர்வுகள் தான் இருக்கும்

அவர் ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு மிகச்சிறந்த பிரதிநிதியாகவும் அனைத்துலகக் குழுவினால் வென்றெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையின் பிரதிநிதியாகவும் இருந்தார். WRP மூழ்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாதம் என்கிற சதுப்புக்குழியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை அவர் கண்டுபிடித்தமை ஒருபோதும் மறக்கப்படவியலாத ஒரு அபிவிருத்தியாகும். அவரது தலைமையின் கீழ் தான் தொழிலாள வர்க்கக் காரியாளர்களின் பெரும்பான்மையினரும் பிரிட்டனில் கட்சியின் மிகச்சிறந்த கூறுகளும் நமது சொந்த இயக்கத்திற்குள்ளாக பப்லோவாதம் மறுஎழுச்சி காண்பதற்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்திற்கு வென்றெடுக்கப்பட்டார்கள்

இதுதான் ICFIக்குள்ளாக சந்தர்ப்பவாதத்துடன் இறுதியாகக் கணக்குத் தீர்க்கப்பட்டு, பப்லோவாதத்திற்கு எதிரான சுமார் 35 ஆண்டுகால போராட்டம் வெற்றிகரமாக நிறைவுபெறுவதை சாத்தியமாக்கியது. அனைத்துலகக் குழுவின் கதியே அந்தரத்தில் தொங்கிய இந்த தீர்மானகரமானதொரு தருணத்தில் பிரிட்டனில் தோழர்களின் ஆதரவை IC வெல்ல முடிந்தமையானது பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வாழ்க்கையை அச்சுறுத்தும் நோயில் பிழைக்க போராடிக் கொண்டிருந்த நிலையிலும் சமீபத்திய வருடங்களில் டேவ் பங்களிப்பு செய்தமையானது, இந்த ஆரம்ப கட்ட பயிற்சியின் விளைபொருளாகும். அத்துடன் அவர் எப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் என்பதையும் இது எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

தனிப்பட்ட வகையில், சென்ற ஆண்டில் டேவ் மற்றும் எய்லீனைச் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிட்டியதற்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது அரசியல் வேலைகளை விவாதிக்கவும் டேவின் தணியாத உற்சாகத்தையும் உறுதிப்பாட்டையும் காணவும் வாய்ப்பு கிட்டியதானது எந்தவொரு உணர்ச்சிபூர்வமான காரணங்களுக்காய் அல்லாமல் அது மார்க்சிசத்தின் சக்தியை மிகவும் ஸ்தூலமான நெகிழ்ச்சியான வகையில் எடுத்துக்காட்டுவதாக இருந்தது என்ற காரணத்திற்காக மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும்

உங்களின் தோழர்,

ஃபிரெட் எம்

* * * * * *

அன்புள்ள ஜூலி மற்றும் டோனி

உங்கள் தந்தை டேவ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அச்சமயத்தில் உடனிருந்த டேவ் N, நிக், லிண்டா, மற்றும் செரில் ஆகிய அனைவருக்கும் அவரை நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் அவரது குணநலன் மற்றும் ஆளுமையின் வலிமைகள் குறித்துப் பேசினர்.  

கிறிஸ் தயாரித்திருந்த இரங்கற்செய்தி, SEP இன் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தில் நாங்கள் சரியான வகையில் முக்கியத்துவம் கொடுத்திருந்த ட்ரொட்ஸ்கிசம் மற்றும் அனைத்துலக் குழுவைப் பாதுகாத்தல் என்பதில் அவர் ஆற்றிய மிக முக்கியமான பாத்திரத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. அத்துடன் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக அவரது தனிநபர் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்குள்ளான ஒரு நெகிழ வைக்கும் உட்பார்வையாகவும் அது இருக்கிறது. சமீப வருடங்களில் டேவ் எழுதிய கட்டுரைகள் ICFIக்கு அவர் வழங்கிய செறிவான பங்களிப்பினைத் தொடர்ந்தன என்பதோடு அக்கட்டுரைகளுக்கு ஆய்வு செய்து கொண்டிருந்த தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர் ஆரோக்கியம் குன்றியிருந்தார் என்பது என்னைப் பொறுத்தவரை அந்தக் கட்டுரைகளை மேலும் சக்திவாய்ந்தவைகளாகக் காட்டுகிறது. டேவ் ஒரு அற்புதமான மனிதர்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும், அத்துடன் பிரிட்டனிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் டேவின் தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இச்சமயத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்

மிகுந்த அக்கறையுடன்,

ஜேம்ஸ் கோகன்