சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : நினைவகம்

Memorial meeting pays tribute to Dave Hyland’s political struggle

நினைவஞ்சலிக் கூட்டம் டேவ் ஹைலண்டின் அரசியல் போராட்டத்திற்கு மரியாதை செலுத்துகிறது

By Robert Stevens
20 January 2014

use this version to printSend feedback

டிசம்பர் 8, 2013 அன்று தனது 66 வது வயதில் மரணமடைந்த பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலர் டேவ் ஹைலண்டிற்கு (காணவும் ”டேவிட் எட்வார்ட் ஹைலண்ட்: மார்ச் 7,1947 - டிசம்பர் 8,2013”) மரியாதை செய்கின்ற விதமாக ஜனவரி 18 அன்று பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு நினைவுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.


பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் கூட்டத்தில் உரையாற்றுகிறார்
.

ஷெஃபீல்டில் ஹில்டன் ஹோட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில் இருக்கைகள் நிரம்பிய பங்கேற்பு இருந்தது. இங்கிலாந்தின் தென்கரை முதல் ஸ்காட்லாந்து வரையிலும் பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit ) உறுப்பினர்கள் மற்றும் பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டம் சர்வதேசப் பார்வையாளர்களுக்கும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய பிற நாடுகளில் இருந்து பங்குபற்றியவர்கள் செவிமடுக்க வாய்ப்புக் கிட்டியது.

பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான பார்பரா சுலோட்டர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டேவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக நடைபெறும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக அவரது மனைவி தோழர் எய்லீனுக்கு சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த அத்தனை தோழர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாகஅவர் அன்புடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

டேவ் ஹைலண்டின் வாழ்க்கைசோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புகின்ற போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்ததாகும்என்று சுலோட்டர் தெரிவித்தார். ஆகவே எந்த அரசியல் போக்கிற்காக டேவ் தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருந்தாரோ அந்தப் போக்கின் முக்கியத்துவம் குறித்து இந்தக் கூட்டத்தில் அத்தியாவசியமாக நாம் பேசவிருக்கிறோம்என்று அவர் மேலும் கூறினார்.

WRP இன் அரசியல் சீரழிவு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான காட்டிக் கொடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக டேவிட் நோர்த்தும், வேர்க்கர்ஸ் லீக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய போராட்டம் என்ற ஒரு மிகப்பெரும் அரசியல் நிகழ்வால் டேவின் வாழ்க்கை வடிவம் பெற்றதுஎன்று பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான கிறிஸ் மார்ஸ்டன் விளக்கினார்.

WRP காட்டிக் கொடுப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முன்பாக டேவ் குறித்து தனக்கிருந்த பார்வை குறித்து மார்ஸ்டன் கூறுகையில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எத்தனை சிரமங்களை சந்தித்தாலும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை கையிலெடுத்துக் கொண்டிருந்த ஒரு தனித்துவமான மனிதராக நான் அவரைக் கண்டேன்என்றார்.

ஆனால் வெறுமனே ஒரு போர்க்குணம் மிக்க போராளி என்று கூறுவதற்கும் கூடுதலானவராக அவர் இருந்தார். அவர் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி. பிரிட்டன் தொழிலாள வர்க்கத்தின் கதி அல்லாமல், மாறாக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கதியே அவர் எப்போதும் கணக்கிலெடுப்பதும் அத்துடன் அவரை இயக்கியதாகவும் இருந்தது.

அவர் ஒருபோதும் தன்னை பிரிட்டிஷ் கட்சியின் அங்கத்தவராக கருதிக் கொண்டதில்லை - அப்படியெல்லாம் பலர் கருதி வந்த விடயம் பின்னால் தான் எனக்குத் தெரிந்தது - மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அங்கத்தவராகவே கண்டார்...

அதனால் தான், 1985 இல் டேவிட் நோர்த் அளித்த அரசியல் விமர்சனத்திற்கு டேவ் பதிலிறுத்தார் என்ற உண்மையில் தற்செயலானது எதுவுமில்லை. அவர் ஒரு உறுதிபடைத்த ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்தார், WRP பின்பற்றிய சந்தர்ப்பவாதப் பாதை குறித்த ஒரு உண்மையான ட்ரொட்ஸ்கிச விமர்சனம் என்று அவர் புரிந்து கொண்ட ஒன்றிற்கு அவர் பதிலிறுப்பு செய்தார்.

ஜேர்மன் PSG இன் தேசிய செயலரான உலி ரிப்பேர்ட் பேசும்போது, டேவ் உடனான தனது கடைசி சந்திப்பின் போது, தொழிலாளர்கள் மார்க்சிசத்தின் அடிப்படையில் தமது சொந்த புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவே சோசலிச நனவை அவர்கள் அபிவிருத்தி செய்ய முடியும் என்ற உண்மை குறித்துக் கலந்துரையாடியதாகக் கூறினார்.

எங்களைப் பொறுத்தவரை, விடயம் தீர்மானகரமானதுஎன்றார் ரிப்பேர்ட். நாங்கள் இருவருமே தொழிற்சாலைத் தொழிலாளர்கள்; வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் எங்களுக்கு அனுபவங்கள் உண்டு. ஒரு வேலைநிறுத்தத்தின் போது தாங்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்து நிற்கிறோம் என்றதான மிகத் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்யும் திறன் தொழிலாளர்களுக்கு இருந்ததை நாங்கள் அறிவோம். போராட்டத்தில் கிளர்ச்சி செய்யும் மனோநிலையும் கூட தொழிலாளர்களிடையே அபிவிருத்தியுற முடியும்...

ஆனால் போர்க்குணத்தின் மிகத் தீவிரமான வடிவங்களும் கூட முதலாளித்துவ நனவின் கட்டமைப்புக்குள்ளாகவே முடக்கி வைக்கப்பட்டிருந்தன. சோசலிசப் புரிதலுக்கும் சோசலிச நனவுக்கும் அத்தனை பக்கத்தில் இருந்துமான சர்வதேசிய அரசியல் அறிவும் மிக ஆழமான வரலாற்றுக் கேள்விகள் குறித்த ஒரு புரிதலும் அவசியமாக இருந்தன.”

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் இக்கூட்டத்திற்கு ஒரு உரையை பதிவுசெய்து அனுப்பியிருந்தார். 1985 இல் WRP உடைவின் போது டேவ் ஹைலண்ட் ஆற்றிய பாத்திரத்தை அவர் நினைவுகூர்ந்தார். அச்சமயத்தில் தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உருவானது.

ட்ரொட்ஸ்கி,சிந்தனையின் உருவடிவம்பெறும் சக்தி’ குறித்து பல முறை குறிப்பிட்டிருக்கிறார்” என்று அவர் கூறினார். “WRPக்குள்ளாக தோழர் டேவ் நடத்திய போராட்டத்தில் அந்தக் கருத்தாக்கம் உருவடிவம் பெற்றதை நான் கண்டேன்”.

மனத்தளர்வின்றி டேவ் போராடிய ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம் தான் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் அவருக்கு மிகப்பெரும் வலுவைக் கொடுத்தது. அந்த வேலைத்திட்டம் அவரை பற்றிக் கொண்டதைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் தலைமையைப் பற்றிக் கொள்கின்ற முன்னோக்காக மாறும்போது, பாட்டாளி வர்க்கம் இப்பூமிப் பந்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த இயலாத ஒரு மகத்தான சக்தியாக மாறும்.”

ட்ரொட்ஸ்கிசத்தை WRP மறுதலித்தமைக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த்  தலைமை கொடுத்திருந்தார். சனியன்று மாலை, அவர் அந்தப் போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் அதில் டேவ் ஹைலண்டின் பாத்திரம் குறித்துமான ஒரு விரிவான அறிக்கையை வழங்கினார்.

முடக்குவாதத்திற்கு (rheumatoid arthritis) எதிரான ஹைலண்டின் நெடிய போராட்டம் குறித்துக் கூறிய நோர்த் கூறினார்: “டேவ் தனது நோயின் வலிகள் அத்தனையையும் சுய-கழிவிரக்கத்தின் சுவடே இல்லாமல் சகித்துக் கொண்டார். வாழ்க்கை மீதான தனது நம்பிக்கையையும் காதலையும் அவர் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். பல பேருக்கு, நாட்பட்ட வியாதியின் அனுபவமானது கைதுறப்புகளுக்கும், புத்திஜீவித்தனரீதியான ஒதுங்கிக் கொள்ளல்களுக்கும் மற்றும் உணர்வுபூர்வமான பின்னிழுப்புகளுக்கும் இட்டுச் செல்கிறது. ஆனால் டேவ் விடயத்தில் அவ்வாறு நடக்கவில்லை. சென்ற நவம்பரில் டேவிடம் நான் பேசும்போது அதுதான் எங்களது கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்பது எங்கள் இருவருக்குமே தெரிந்திருந்தது. பலருக்கு விநோதமாக தோன்றலாம், ஆனால் அந்த விவாதம் கொஞ்சம் கூட வருத்தம் கலந்ததாக இல்லை. டேவ் எப்போதும் போல உலகுடன் இணைத்துக் கொண்டிருந்தார், சர்வதேச சோசலிசத்தின் பொருட்டான தனது அரசியல் உறுதிப்பாடு குறித்து உணர்வுபூர்வமாக இருந்தார், அத்துடன் நடந்து கொண்டிருந்த விடயங்களில் மிகவும் ஆர்வம் காட்டினார்.”

நோர்த் தொடர்ந்தார்: “தனது வாழ்க்கையின் பிரதான பாதை குறித்த எந்த வருத்தமும் தனக்கு இல்லை என்று டேவ் என்னிடம் கூறினார். 1970களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைவதற்கு அவர் எடுத்த முடிவானது, ஒரு வர்க்க நனவுமிக்க தொழிலாளியாக அந்த சகாப்தத்தின் மாபெரும் சமூகப் போராட்டங்களில் இருந்து அவர் தேற்றம் செய்து கொண்ட அரசியல் முடிவுகளில் இருந்து, அத்தியாவசியமாக உருவாகியெழுந்திருந்தது. 1985 இல் WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கான தனது எதிர்ப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை அடிப்படையாய்க் கொண்டு வடிவமைத்துக் கொண்டது தான் தனது வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்று அவர் கருதினார். அவரது வாழ்க்கை முடிவை நெருங்கிக் கொண்டிருந்ததொரு சமயத்தில், டேவ் உலக சோசலிச வலைத் தளத்தின் அபிவிருத்தியில் தனக்கிருந்த பெருமிதத்தையும் தான் அழியாதவொரு பங்களிப்பைச் செய்திருந்த ஒரு இயக்கத்தின் வருங்காலத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொண்டார்.”

ICFI ஐப் பாதுகாத்து டேவ் ஹைலண்ட் எடுத்த நிலைப்பாட்டையும் அப்போது என்ன பணயத்தில் இருந்தது என்பது குறித்தும் பேசிய நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கிற்கு ஹைலண்ட் விவாதம் கோரி தொலைபேசியில் அழைத்துப் பேசிய 20வது ஆண்டுதினத்தை ஒட்டி 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று அவர் ஹைலண்டுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் இருந்து மேற்கோள் காட்டினார்.

பிரிட்டிஷ் அமைப்பிற்குள்ளாக ஒவ்வொரு சமயத்திலும் எழுந்திருந்த பல்வேறு எதிர்ப்புப் போக்குகளில் இருந்து ஆழமான தனித்ததொரு விதத்தில், ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோரது கன்னைத் தலைமைக்கு எதிரான போராட்டமானது அனைத்துலகக் குழுவின் அரசியல் ஒழுங்கின் கீழும் ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும் பல்தரப்பட்ட பப்லோவாத திருத்தல்வாத வடிவங்களுக்கு எதிராகவும் நான்காம் அகிலம் நடத்திய நெடியதொரு போராட்டத்தின் மூலோபாயப் படிப்பினைகளின் அடிப்படையிலும் மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.”

பண்டாவும் சுலோட்டரும் சமமான சீரழிவு என்ற தமது அவலட்சணமான மற்றும் சுய-நலமான தத்துவத்தைக் கொண்டு அனைத்துலகக் குழுவின் வரலாற்றை சிறுமைப்படுத்த முனைந்ததை நீங்கள் திட்டவட்டமாக நிராகரித்ததானது பிரிட்டிஷ் பிரிவுக்குள் இருந்த ஆகச்சிறந்த கூறுகளை சர்வதேசியவாதப் பதாகைக்கு வென்றெடுப்பதை சாத்தியமாக்கியது. பழைய WRP இன் தேசிய சந்தர்ப்பவாதக் கன்னைகள் அத்தனையையும் அனைத்துலகக் குழு தீர்மானகரமாக வென்று காட்டியதில் இது ஒரு மிகப்பெரும் மட்டத்திற்குப் பங்களிப்பு செய்திருந்தது.”

நினைவுக் கூட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு, டேவ் ஹைலண்டின் வாழ்க்கை மற்றும் 1985 இல் ICFIக்கு ஆதரவாக அவர் ஆற்றிய மிக முக்கியமான பாத்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை செய்த ஒரு புகைப்படக் கண்காட்சியை காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது

உரையாற்றியவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆண்டில் பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைகளுக்கு உதவியாக 50,000 பவுண்டுகள் அபிவிருத்தி நிதியை தொடங்கி வைப்பதாக கிறிஸ் மார்ஸ்டன் அறிவித்தார். இந்த விண்ணப்பத்திற்கு அபார ஆதரவு கிட்டியது. நன்கொடை மற்றும் வாக்குறுதிகளில் 9,000 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டது. இணையவழி திரட்டப்பட்ட 1,000 பவுண்டுகளுக்கும் அதிகமான சர்வதேச நன்கொடையும் இதில் அடங்கும்.

சர்வதேசிய கீதம் பாடப்பட்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.