சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

The fight for the political independence of the working class in China

சீன தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம்

By James Cogan
8 May 2015

Use this version to printSend feedback

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஒழுஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் ஜேம்ஸ் கோகன் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.

அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பு”, அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால், சீனாவிற்கெதிரான யுத்தத்திற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களின் தயாரிப்பானது, மனித இனத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது.

வான்-கடல் போர் திட்டம்"(AirSea Battle concept) என்பதை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்த நாடுகளின் ஒவ்வொன்றினது இராணுவ படைகளும் ஆயுதமயமாக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு, பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வான்வழி குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைக் கொண்ட ஒரு "கண்மூடித்தனமான நடவடிக்கை", மற்றும் சீன பெருநிலத்திற்கு எதிராக இணையவழி மற்றும் "விண்வெளி-எதிர்" (counter-space) தாக்குதல்கள், அத்துடன் அதன் பொருளாதாரத்தை முடமாக்கவும் மற்றும் அதன் மக்களைப் பட்டினிபோடவும் ஒரு கடற்படை முற்றுகை நடத்துவது ஆகியவை அத்திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான தாக்குதல் இராணுவ நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள், செயற்கைகோள்கள், தொலைதொடர்பு அமைப்புமுறைகள் மற்றும் மின்சார வலைப்பின்னல்களை அழிக்க முனையும். மேலும் இந்நிகழ்முறையில், சீன நகரங்கள் நாசமாக்கப்பட்டு, கணக்கிட முடியாதளவிலான அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.

இதிலுள்ள முற்றிலும் பொறுப்பற்றத்தன்மை, அமெரிக்க மூலோபாய மற்றும் இராணுவ வட்டாரங்களில் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற பல்வேறு போர் ஆய்வறிக்கைகளில் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 1 அன்று பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய ஓர் ஆய்வறிக்கை வலியுறுத்துகையில், "சீன பெருநிலம் மீதான அணுஆயுதமற்ற தாக்குதல்கள் வடிவத்தில் தீவிரமாக இருந்தாலும் கூட, அவை தவிர்க்கமுடியாது ஒரு அணுஆயுத மோதலுக்கு இட்டுச்செல்லாது,” என்றது.

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இப்போது அதன் ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட அமெரிக்க ஆளும் மேற்தட்டு, அதன் இலக்குகளை அடைய அணுஆயுதப் போருக்கு துணியவும் தயாராக உள்ளது. சீனாவையும் மற்றும் அதன் பரந்த உழைப்பு வளங்களையும் அமெரிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தங்குதடையற்ற மேலாதிக்கத்திற்கு அடிபணிய செய்வதற்கான முனைவை வாஷிங்டன் நிறுத்தப்போவதில்லை.

போர் அபாயத்தை எதிர்கொள்கையில், சீனத் தொழிலாள வர்க்கம் அதன் விதியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியினது கரங்களில் ஒப்படைக்க முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகும். தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் அது இயல்பாகவே விரோதமாக உள்ளது, ஏனென்றால் அப்போராட்டம் அதன் சொந்த சடரீதியான நலன்களை மற்றும் அதன் ஆட்சியையே நேரடியாக அச்சுறுத்தும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாவோ சேதுங் தலைமையில் 1949 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அது சோவியத் ஒன்றியத்திலிருந்த அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சியை முன்மாதிரியாக கொண்ட ஓர் அரசை நிறுவியது. அது காலனித்துவ மிச்சசொச்சங்களை ஒழித்துவிடுவதாகவும், சீன மக்களைப் பின்தங்கிய நிலையிலிருந்து வெளியே கொண்டுவரப்போவதாகவும் கூறிக்கொண்டது.

ஆனால் அதற்கு மாறாக, “தனியொரு நாட்டில் சோசலிசம் எனும் ஸ்ராலினிச தத்துவத்தின் அடிப்படையில், மாவோயிசத்தின் தேசியவாத கொள்கைகள், வெறும் 23 ஆண்டுகளுக்குள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மாவோ நட்பு பாராட்டுவதற்கும் மற்றும் அதனையடுத்து முதலாளித்துவ மீட்சிக்கும் இட்டுச்சென்றன. டெங் சியாவோபிங் மற்றும் அவருக்குப் பின் வழிவந்தவர்களின் கீழ், சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவை அமெரிக்க மேலாதிக்க உலக ஒழுங்கிற்குள் ஒருங்கிணைக்கும் பொருட்டு வாஷிங்டனுக்கு ஒத்துழைத்தது.

இன்று, சீனா உலக முதலாளித்துவத்தின் பிரதான மலிவு உழைப்பு உற்பத்திமேடையாக விளங்குகிறது. இத்துடன் நாடு கடந்த பெரு நிறுவனங்களுக்கும், அதேபோல பெரிதும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டங்களில் இருந்து எழுந்த புதிய சீன முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பரந்த இலாபத்திற்கான மூலவளமாக அது மாறியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்ட சீன முதலாளித்துவவாதிகள், பெரும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர். அங்கே உள்ள 1.35 பில்லியன் மக்கள் தொகையில், சுமார் 450 பில்லியனர்கள் உள்ளனர், 60,000க்கும் அதிகமான தனிநபர்கள் 200 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக தனிப்பட்ட செல்வம் வைத்திருப்பதாகவும், 2.5 மில்லியன் பேர் அமெரிக்க டாலர் மில்லியனர்களாக இருப்பதாகவும் பெருமைகொள்கின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்மாறாக, சுமார் 400 மில்லியன் மக்கள், குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், வறுமையில் உள்ளனர். அத்துடன் நூறு மில்லியன் கணக்கான தொழிற்துறைசார் தொழிலாளர்களும் மற்றும் புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் என்று அழைக்கப்படுவோரும் தொடர்ந்து குறைவூதியங்கள் மற்றும் கடுமையான நிலைமைகளில் வாழ்கின்றனர். பூகோள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணச்சுருக்கம் (deflation) மோசமடைகையில், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், பரந்த வேலைவாய்ப்பின்மையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்த நிலைமைகளை இன்னமும் சீனத் தனிப்பண்புகளுள்ள சோசலிசம்என்றே குறிப்பிடுகிறது.

விமானம் தாங்கி கப்பல்கள், அணுஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகப்பல்கள் மற்றும் தென்சீனக் கடலின் செயற்கை தீவுகளில் விமான தளங்களைக் கட்டுதல் என இவை, அமெரிக்க போர்வெறியர்களைப் பீதியூட்டும் என்ற வீண் நம்பிக்கையில், வாஷிங்டனின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, பெய்ஜிங் சீன இராணுவத்தைப் பலப்படுத்துவதில் நூறு பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி வருகிறது. இதற்கிடையே அது ரஷ்யாவுடன் முன்பினும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஐரோப்பிய விரோதிகளுடன் உறவுகளை நெருக்கமாக்க அழைப்புவிட்டு வருகிறது.

சீன சந்தைகளை மேலாதிக்கம் செய்வதன் மீது பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையே கசப்பான பதட்டங்கள் வளர்ந்து வருகின்றன. இது, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியன வாஷிங்டனுக்கு பணிய மறுத்து, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கியில் சேர்வதென எடுத்த முடிவுகளில் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவும் ஜப்பானும் கடந்த வாரங்களில் சீனாவிற்கெதிரான அவற்றின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை உக்கிரப்படுத்திக் கொண்டு, அவற்றின் இராணுவ கூட்டை விரிவுபடுத்துவதன் மூலமாக விடையிறுப்பு காட்டியுள்ளன.

இராணுவ மோதல் அபாயம் அதிகரிக்கையில் மற்றும் உள்நாட்டில் வர்க்க பகைமைகள் வளர்கையில், போரைத் தடுப்பதற்கான மற்றும் அவர்களது சமூக மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்குமான போராட்டத்தில், சீனத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஒரே கூட்டாளிகளான அமெரிக்க, ஜப்பான், ஆசிய மற்றும் உலக தொழிலாளர்களை பிரிக்கும் பொருட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாதம், அமெரிக்க-எதிர்ப்புணர்வு மற்றும் ஜப்பானிய-விரோத தேசபற்று ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.

சீனத் தொழிலாள வர்க்கம், 1911 முதல் 1949 வரை சீன மக்களால் நடத்தப்பட்ட, பெரும் முக்கியத்துவம் கொண்ட புரட்சிகரப் போராட்டங்கள் மற்றும் 1989இல் தியனென்மென் சதுக்க படுகொலையில் போய் முடிந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சீனத் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவங்கள் உட்பட, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மூலோபாய படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.

சீன முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டுவதே சீனாவில் இன்றுள்ள பணியாகும். இதில் குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் உள்ளடங்குவர், ஏதோவொரு வடிவத்தில் தாராளவாத ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கும் மற்றும் சமாதானத்திற்கு உத்தரவாதம் வழங்கும் ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்வதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழுத்தமளிக்க முடியுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

1989 ஜூனில், மாணவர் தலைமைக்கும் மற்றும் அவர்களது எதிர்ப்புபோராட்ட முன்னோக்குக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்தமை, பெய்ஜிங்கிலும் மற்றும் அந்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இருந்த பாரிய இயக்கத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவியது.

திபெத்திலும், சின்ஜியாங் (Xinjiang) மற்றும் சீனாவின் ஏனைய பிராந்தியங்களிலும் தேசிய சுயநிர்ணயம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு பிற்போக்குத்தனமாக வக்காலத்துவாங்குபவர்களைத் தொழிலாள வர்க்கம் உறுதியாய் எதிர்க்க வேண்டும். அவர்கள், நாட்டை குழப்பம் மற்றும் உள்நாட்டு போரில் மூழ்கடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதுடன், தலையீடு செய்வதற்கு சாக்குப்போக்குகளை வழங்கி, “மனிதாபிமான ஏகாதிபத்தியம் என்றழைக்கப்படுவதற்கு அரசியல் முகவர்களாக சேவை செய்கின்றனர்.

உலக சோசலிச புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க, சீனாவில் உள்ள தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினருடன் இணைவதில் தான் அவர்களுக்குரிய முன்னோக்கிய பாதை உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவதன் மூலமாக மட்டுமே போரைத் தடுக்க முடியும்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை முன்னேறிய சீனத் தொழிலாளர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்வதும், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சீனப் பகுதியை நிறுவுவதுமே இந்த முன்னோக்கின் முக்கிய பகுதியாகும்.