சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

War in the Middle East, imperialism and the lessons of the Egyptian Revolution

மத்திய கிழக்கில் போர், ஏகாதிபத்தியம் மற்றும் எகிப்திய புரட்சியின் படிப்பினைகள்

Johannes Stern
May 14th, 2015

Use this version to printSend feedback

இந்த உரையானது, மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் முன்னணி அங்கத்தவர் ஜோஹானஸ் ஸ்டெர்ன் வழங்கிய பேச்சின் உரைவடிவமாகும்.

போர் அலைகளும், ஒரு மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது என்பதே இந்த சர்வதேச மே தினக் கூட்டத்தின் மத்திய கருப்பொருளாகும். மத்திய கிழக்கில் இது மிகவும் வெளிப்படையாக தெரிவதுபோல் உலகின் வேறு எந்த பாகத்திலும் தெரியவில்லை. இது முதலாம் உலக போருக்கு முன்னர், வெடிஉலையாக இருந்த பால்கனின் சூழலை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றோ வன்முறை மற்றும் அழிவுக்கான சாத்தியப்பாடு அதனினும் மிக அதிகமாகி உள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அப்பிராந்தியம் தன்னைத்தானே ஒரு நிரந்தரமான போர் நிலைமையில் காண்கிறது. நாடுகள் முழுவதும் நாசமாக்கப்பட்டுள்ளன; மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது தான், “புதிய உலக ஒழுங்குஅல்லது அமெரிக்க சமாதானத்தினைஉருவாக்குவதற்காக, முதலாம் புஷ்ஷால் அறிவிக்கப்பட்ட, அமெரிக்க ஏகாதிபத்திய அபிலாஷைகளின் விளைபொருளாக உள்ளது. அது வெறுமனே தற்பெருமைக் கோளாறு அல்ல. “ஒழுங்கு”, “சமாதானம்என்பவற்றின் இடத்தில், குழப்பம், போர், அழிவு, இவை தான் மேலோங்கியுள்ளன.

செப்டம்பர் 11, 2001 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஒரு திருப்புமுனையாகும். அந்த சம்பவங்களின் பின்னணி ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவே இல்லை. எவ்வாறெனினும், வாஷிங்டன், நீண்ட காலத்துக்கு முன்னரே சிந்தித்திருந்த போர் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்என்ற பெயரின் கீழ் அதை பயன்படுத்திக் கொண்டது. 2001 இல், ஆப்கானிஸ்தான் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2003ல் ஈராக் மீது படையெடுக்கப்பட்டது. குவாண்டனாமோ, அபு கிரைப், “விரிவாக்கப்பட்ட விசாரணைகள்”, “நீரில் மூழ்கடித்தல்அல்லது கொலைகார ஆளில்லா விமானங்கள்போன்ற சொற்பதங்கள், இன்றோ ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத சித்திரவதைகள் மற்றும் படுகொலை உத்திகளுக்குரிய சொற்பிரயோகங்களாகி உள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்என்பது ஐரோப்பிய ஆளும் தட்டுக்கும் ஒரு மைல்கல்லாக இருந்தது. பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு தொடர்பாக ஓர் எச்சரிக்கையான போக்கை கடைப்பிடித்தன. ஆனால் அவை ஆப்கானிஸ்தான் போரை நிபந்தனையின்றி ஆதரித்தன. அவை நோட்டோவின் லிபிய போரிலும் மற்றும் சிரியாவில் இழிவான தலையீட்டிலும் ஒரு மையப் பாத்திரம் வகித்தன. இன்று எல்லா ஏகாதிபத்திய சக்திகளும், இயற்கை வளங்கள் நிறைந்த இந்தப் பிராந்தியத்தினை சதுரங்க மேடையில் பெரும் பந்தயமாக வைத்து ஆடுகின்றனர்.

அவை நேரடியாக அல்லது உள்ளூர் அடிவருடிகளை ஆயுதமேந்த செய்து, நிதியுதவிகள் வழங்கி தலையீடு செய்கின்றன. அதே சமயத்தில், அங்கே நேற்றைய நண்பர்கள்இன்றைய எதிரிகளாகின்றனர், இது மறுதலையாகவும் நடக்கிறது. மாஃபியாக்களுக்கு கௌரவப் பட்டம் அளிக்கப்படுகிறது”. ஏகாதிபத்தியவாதிகளுக்கு காட்டுத்தனமான சட்டம்” (law of the jungle) மட்டுமே தெரியும். அவர்கள் ஒவ்வொரு அழிவுகரமான தலையீட்டையும், அடுத்த போரை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்றனர். அவர்களது கொள்ளையடிக்கும் நலன்களை நிறைவேற்றி கொள்வதற்காக, மிகவும் வஞ்சகமான மற்றும் கொடூரமான வழிமுறைகளை நாடுகின்றனர்.

சிஐஏ மற்றும் ஏனைய மேற்கத்திய புலனாய்வுதுறையினர், லிபியாவிலும் சிரியாவிலும், மௌம்மர் கடாபி மற்றும் பஷர் அல் அசாத்தின் ஆட்சிகளைத் தூக்கி வீசுவதற்காக, வகுப்புவாத போர்களைத் தூண்டிவிட்டுள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம், அவை அல் கொய்தா மற்றும் ஏனைய தீவிர இஸ்லாமிய ஆயுத குழுக்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. இந்த இஸ்லாமிய குழுக்களில் இருந்து தான் பின்னர் ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிக் அரசு (ISIS) தோன்றியது. ISIS இன் குற்றங்கள் இப்போது, கூடுதலான நேரடி இராணுவ தலையீட்டிற்கு ஏகாதிபத்தியத்தால் ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாம் அரசு அசாத் அரசாங்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அண்மைய காலம் வரை சிரியாவில் இஸ்லாமிய கழுத்தறுப்புவாதிகளை மேற்கத்தைய ஊடகங்கள் மிகைப்படுத்தியதை தொழிலாளர்கள் மறந்துவிட்டது போல் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். !

இத்தகைய போர்கள் ஒவ்வொன்றும் பொய்மைபடுத்தல்கள் மற்றும் பொருத்தமற்ற பொய்களால் நியாயப்படுத்தப்பட்டன. போர்கள் எந்தளவிற்கு நீடிக்கிறதோ, அதற்கான பிரச்சாரமும் அந்தளவிற்கு மிகவும் நேர்மையற்றதாக மாறிவிடுகிறது. ஈராக்கில் பேரழிவுகர ஆயுதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் பெண்களின் விடுதலை என்பதில் தொடங்கி, லிபியா மற்றும் சிரியாவில் மனிதாபிமானதலையீடுகள் வரை அது தொடர்ந்தது. ஏமனின் சமீபத்திய போரில், ஏதேனுமொரு சாக்குபோக்கும் கூட முற்றிலும் இல்லாமல் மேற்கத்தைய சக்திகள் அதை முன்னெடுத்தன. அவற்றின் அப்பிராந்திய பிற்போக்குத்தனமான கூட்டாளிகளின் உதவியுடன், அனைத்திற்கும் மேலாக சவூதி முடியாட்சி மற்றும் எகிப்தில் அல்-சிசி ஆட்சியின் உதவியுடன் அவை மீண்டுமொருமுறை ஓர் ஆதரவற்ற நாட்டை இடிபாடுகளாக மற்றும் சாம்பலாக ஆக்கி வருகின்றன.

கடந்த கோடையில் காசாவில் அமெரிக்க-ஆதரவிலான இஸ்ரேல் போரால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அழிப்பை, ஏமன் அழிப்பு நினைவுபடுத்துகிறது. உலகின் மிகப்பெரிய அந்த திறந்தவெளி சிறைச்சாலையின் (காசா பகுதியின்) ஏறத்தாழ ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் நாசமாக்கப்பட்டுள்ளது. அதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 2,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.      

ஏகாதிபத்தியவாதிகளின் மனிதாபிமானவாய்வீச்சுக்களை அம்பலப்படுத்த வேண்டியதே இல்லை. புறநிலை உண்மைகளும் போரின் அழிவுகரமான பாதிப்புகளுமே ஏற்கனவே அதைச் செய்துவிட்டன. ஆனால் என்ன கேள்வி முன்நிற்கிறது: அண்மித்தளவில் 25 ஆண்டுகளாக ஏன் ஏறத்தாழ இடைவிடாத போர் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செய்கிறது? இதற்கான பதில் மிகத் தெளிவானது: அமெரிக்கா மற்றும் முன்னணி ஐரோப்பிய காலனித்துவ சக்திகள், என்ன விலை கொடுத்தாவது, வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அப்பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், சுரண்டுவதற்கும் விரும்புகின்றன. அவற்றின் பிரதான இலக்கு எண்ணெயேயாகும்!

தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதுதான் அவற்றின் நோக்கங்களில் மிகமுக்கியமானதாகும். அது துனிஷியா மற்றும் எகிப்திய புரட்சிகளில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. 2011 தொடக்கத்தில் தொழிலாள வர்க்கம் தலை நிமிர்த்தி, ஏகாதிபத்தியத்தின் இரண்டு கொடூர சேவகர்களான பென் அலி மற்றும் முபாரக்கை பதவி இறக்கிய பின்னர் தான், ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடு உக்கிரமடைந்தது.

ஏகாதிபத்திய சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைக் கண்டு ஆச்சரியமடைந்ததைப் போலவே அதைக் கண்டு பீதியடைந்தன. புவியியல்ரீதியில் துனிஷியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்துள்ள லிபியாவில் நடந்த போரில், அவை மேற்கிற்கு-சார்பான கைப்பாவை ஆட்சி ஒன்றை நிறுவவும் மற்றும், இன மற்றும் குறுங்குழுவாத அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் ஒரு வாய்ப்பைக் கண்டன. அதே நோக்கத்தை அவை சிரியாவிலும் முன்னெடுத்தன.

போலி இடது வாதங்களுடன், வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை மறுகாலனித்துவமாக்குவதற்கு ஒரு மூடிமறைப்பை வழங்க முயற்சித்த, பரந்தளவிலான குட்டி முதலாளித்துவ கட்சிகள் மற்றும் கல்வியாளர்களின் ஆதரவும் ஏகாதிபத்தியங்களுக்கு கிடைத்தது. லிபியாவில், நேட்டோ நடத்திய பரவலான குண்டுத் தாக்குதலை (carpet-bombing) அவை ஒரு மனிதாபிமானநடவடிக்கையாக வாதிட்டன. சிரியாவில், இஸ்லாமிய போராளிகள் குழுக்களின் அட்டூழியங்களை, அவை ஜனநாயகத்துக்கான புரட்சிகரப் போராட்டமாகசித்தரித்தன.

ஏகாதிபத்தியம் எனும் அவரது நூலில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் எழுதினார்: “ஏகாதிபத்தியத்தின் சாத்தியங்கள் பற்றிய பொதுவான உத்வேகமானது அதைப் பாதுகாப்பதற்கான வெறியும் மற்றும் அதை சிறப்பான வர்ணங்களால் பூசிமெழுகளுகுவதுமாகும் .இவை அந்த அக்காலகட்டங்களின் அறிகுறிகளாகும்.” எகிப்திய புரட்சிக்கு ஒட்டுமொத்த தாராளவாத மற்றும் போலி-இடது பிரிவினரின் பிரதிபலிப்பை ஒருவரால் இப்போது போல் சிறப்பாக எப்போதும் கணக்கிட முடியாது.

எகிப்திய பாரிய போராட்டங்களுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் பெரும் உத்வேகத்துடன் செயலாற்றியது. வறுமை, சமத்துவமின்மை மீதும், கல்வி, வீட்டுத்துறை, மருத்துவ பராமரிப்புகளில் வெட்டு ஆகியவற்றின் மீதும் நிலவும் இஸ்ரேலிய மக்கள் கோபம், 2011 இல் நூறு ஆயிரக் கணக்கானவர்களின் பாரிய போராட்டங்களுக்கு இட்டுச் சென்றதும் அதில் உள்ளடங்கும்.

ஆனால் வசதி படைத்த மத்தியதட்டு வர்க்கமும் அதன் அரசியல் அமைப்புகளும் எகிப்தின் புரட்சிகர நிகழ்வுகளால் ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாயின. அவை ஆரம்பத்தில் முபாரக்கிற்கு எதிரான எதிர்ப்புகளை ஆதரித்த போதிலும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் முதலாளித்துவ அரசிற்கும் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் ஓர் அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது என்பதை உணர்ந்த போது, பீதியுடன் பின்வாங்கின.

புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அவை எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவதொரு கன்னைக்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்க முயற்சித்தன. அது 2013 ஜூனில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான அவற்றின் எதிர்ப்புரட்சிகர பிரச்சாரத்தில் உச்சகட்டத்தை அடைந்தது. அதை அவை எரிச்சலூட்டும் விதத்தில் இரண்டாவது புரட்சியாககொண்டாடின.

என்னவொரு வெட்கக்கேடு!

அல்-சிசி ஆட்சி புரட்சியின் பண்புருவமல்ல, மாறாக அது இரத்தக்களரி மிக்க எதிர்ப்புரட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது குறைந்தபட்சம் 3,000 பேரைக் கொன்றுள்ளதுடன், பத்து ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துள்ளது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

எகிப்திய புரட்சியின் துன்பகரமான அனுபவங்கள், புரட்சிகரத் தலைமையின் தீர்க்கமான முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. எகிப்தில், ஒரு சர்வதேச சோசலிச முன்நோக்குக்காக போராடும் புரட்சிகர கட்சி ஒன்று இல்லை என்பதைத் தவிர, புரட்சிக்கு அவசியமான எல்லா நிலைமைகளும் இருந்தன. இந்த வெகுஜன எழுச்சிகளால் சர்வாதிகாரிகளை கவிழ்க்கவும் அரசியல் தட்டுக்களை நிலைகுலைய செய்யவும் முடிந்தது. ஆனால் அவர்களால் இராணுவத்தை தூக்கிவீசி, முதலாளித்துவ சுரண்டலுக்கும் மற்றும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட மற்றும் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க முடியாமல் போனது.

எகிப்திலும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் அரசியல் படிப்பினைகளை எடுக்க வேண்டும். ஏகாதிபத்தியம், யூத-எதிர்ப்புவாதம் மற்றும் அரபு முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அப்பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் எல்லா தொழிலாளர்களையும்யூதர்கள் மற்றும் அரேபியர்களை ஒரேபோலஐக்கியப்படுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த முன்னோக்கின் அடிப்படையில் தான், மத்திய கிழக்கு மக்களால் அப்பிராந்திய சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கியெறிவதற்குரிய புரட்சியை மீண்டும் பற்றவைக்க முடியும் என்பதோடு, போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.