சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Mounting death toll as army deployed to end caste-based job agitation

இந்தியா: சாதி அடிப்படையிலான வேலைக்கான போராட்டத்தை இராணுவத்தை ஈடுபடுத்தி முடிவுக்குக் கொண்டு வருவதில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

By Sarath Kumara and Keith Jones 
23 February 2016

Use this version to printSend feedback

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான ஹரியானாவில் ஜாட் சாதி உட்பிரிவுக்கு சாதி அடிப்படையிலான வேலைவாய்ப்பு "இட ஒதுக்கீடு" (உடன்பாட்டு நடவடிக்கை) பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் 10,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் மற்றும் துணை ஆயுதக்குழுக்கள் உட்பட இந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டு குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.

அரசாங்கம், பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் ஹரியானாவின் ஜாட் சாதி பிரிவு வேலைவாய்ப்புகளை பெறுவதில் உரிய முன்னுரிமைகளை வழங்கிட அளித்த வாக்குறுதியினை இந்தியாவின் மத்திய மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்களை ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பா...) மீண்டும்  உறுதிப்படுத்திய பின்னரே, திங்களன்று ராஷ்டிரிய ஜாட் மகாசபை (National Jat Assembly), போராட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தது.

இருப்பினும், மாலை நேரத்தில் ஹரியானாவின் சில பகுதிகளில் போராட்டம் தொடர்ந்தது. மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் அகற்ற முயன்றபோது மேலும் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்திய பா... அரசாங்கம் முதலில் போராட்டத்திற்கு எதிராக இந்திய இராணுவத் துருப்புக்களை ஈடுபடுத்தியது. வார இறுதியில், ஆரம்ப பாதுகாப்பு ஒடுக்குமுறைக்கு பதிலடியாக போராட்டங்கள் மேலும் உக்கிரப்படுத்தப்பட்ட பின்னரே அது மிகப்பெரிய அளவில் இராணுவத் தலையீட்டை விரிவுபடுத்தியது.

சனிக்கிழமை அன்று, அருகில் உள்ள டெல்லிக்கு தேவையான 60 சதவீத தண்ணீரை வழங்கக்கூடிய முனாக் கால்வாயினை ஜாட் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி நீர் வரத்தினை திசை திருப்பிவிட்டனர். இதனால் சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகர்ப்புற பகுதியான டெல்லி தவிர்க்கமுடியாத தண்ணீர் பற்றாக்குறையினை எதிர்கொள்ள நேரிட்டது, மேலும் இதன் விளைவாக டெல்லி யூனியன் பிரதேச அரசாங்கம் தண்ணீர் பங்கீட்டிற்கும், அதனைத் தொடர்ந்து திங்களன்று நகரத்தின் பள்ளிகளை மூடுவதற்குமான அறிவிப்புகளை விடுவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலை மறியல்கள், மற்றும் சில தொழில் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றினால், ஹரியானா முழுவதிலும் மிக மோசமான சமூக-பொருளாதார வாழ்வியல் பாதிப்பையும் இப்போராட்டம் ஏற்படுத்தியது. உதிரிப்பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக, ஹரியானாவின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இயங்கிவரும் குர்கான்-மானேசர் தொழில்துறைப் பகுதி அதன் உற்பத்தியை குறைக்கும் அல்லது நிறுத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

எந்தவொரு சமூக எதிர்ப்பினையும் ஒடுக்க பொதுவாக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, வன்முறை மற்றும் மிருகத்தனம் நிறைந்த நடவடிக்கைகளின் மூலமாகவே இந்திய அரசாங்கம் மற்றும் ஆளும் பிரிவினர் பதில் அளித்து உள்ளனர். ரோடக், பிவானி, சோனிபட், பானிபட், ஜஜ்ஜார் மற்றும் ஹிசார் உட்பட்ட பிரதானமான, மக்கள் அதிகம் வசிக்கும் ஹரியானா பகுதிகள் முழுவதிலும் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு மற்றும் கண்டவுடன் சுடும் உத்தரவுகளுடன் இராணுவப் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஹரியானா போராட்டம் ஒரு தீவிர சமூக நெருக்கடியைப் பற்றி பேசுகிறது. 21 மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வேலைவாய்ப்புக்களையும், வளர்ச்சியையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழிகளை அளித்ததுடன், இந்தியா மீண்டும் "உயர் வளர்ச்சி" காணவேண்டும் என்பது போன்ற கூற்றுக்களையும் வெளியிட்டார். ஆனால் உண்மையில், இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து 14 மாதங்களாக வீழ்ச்சி கண்டுள்ளது, தொழில்துறை உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது, மற்றும் பல பத்து மில்லியன்களுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக உள்ளனர் என்ற நிலைதான் தற்போது உள்ளது. மேலும், பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த நிலை என்பது இல்லை, எப்போதும் பெருகிவரும் எண்ணிக்கையிலான பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் இதே நிலைதான் என்பதே உண்மை.

அவ்வாறு கூறினாலும் இந்த ஜாட் இட ஒதுக்கீடு குறித்தப் போராட்டம் அரசியல் ரீதியிலான திவால்தன்மை மற்றும் பிற்போக்குத்தனம் ஆகிய இரண்டையும் குறிப்பதாகவே உள்ளது.

முதலாளித்துவ இலாப முறையினை ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டே இது கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய முதலாளித்துவம் உருவாக்கிய துயரத்தை மேலும் "சமத்துவமான" முறையில் பிரிக்க அரசாங்க வேலை வாய்ப்புக்களின் பற்றாக்குறை மற்றும் இடைநிலை கல்வி இடங்களை சாதி அடையாளங்களின் அடிப்படையில் நிரப்புதல் ஆகியவற்றை செய்ய முயற்சிக்கிறது என்பதற்கு மேலாக எதுவுமே இல்லை.

இதுபோன்ற சாதி அடிப்படையிலான போராட்டங்கள் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினை வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக, நவீன தாராளமய சீர்திருத்தங்களின் விளைவாக சிறிய மேற்தட்டினரின் செல்வம் மற்றும் வருமானம் உயர்ந்துவிட்டது. முதலாளித்துவத்திற்கு ஒரு சவாலாக, இல்லாமல் சமூக சீற்றத்தை திசை திருப்பிவிடுகிறது. பிற்போக்குத்தனமான சாதிய பிளவுகளை கிளறிவிட்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது.

பல தசாப்தங்களாக, இந்திய முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் கைக்கூலிகள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதே சிறந்தது எனக்கருதி சாதிய மற்றும் வகுப்புவாத பிரிவினைகளை சூழ்ச்சியுடன் தூண்டிவிட்டனர்.

இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ தலைமையினரால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டு, பின்பு காங்கிரஸ் கட்சித் தலைமையின்கீழ் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் அமைப்புடன் தேசிய முதலாளித்துவத்தால் இந்த சலுகை பெற்ற அடுக்கு, முதலாளித்துவ ஆட்சியின் ஒரு சமூக முட்டுத்தூணாக வேண்டுமென்றே பேணி வளர்க்கப்பட்டுவிட்டது. இவ்வாறு மிகுந்த வைராக்கியத்தோடு சாதிய அடையாளங்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவற்றைப் பயன்படுத்தி சலுகைகள் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

இதற்கிடையில், இந்தியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளுக்குப் பின்னர், நிலமற்ற மற்றும் கல்வி அறிவற்ற ஏழை மக்களிடையே தலித்துக்களின் பிரதிநிதித்துவம்  தொடர்ந்து மிகவும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளது.

ஆரம்பத்தில் தலித்துக்கள் மற்றும் இந்திய பழங்குடி மக்கள் வரைக்குமாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த இட ஒதுக்கீடு, 1989ல் இதர பிற்படுத்தப்பட்ட வர்க்கம் (OBC) என்று அழைக்கப்படும் பிற பாரம்பரியமான தாழ்த்தப்பட்ட சாதி பிரிவினருக்கு விரிவுபடுத்தப்பட்டது, அப்போது வி.பி.சிங் அரசாங்கம் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் மற்றும் உயர் கல்வி இடங்களில் 27 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வர்க்கத்திற்காக ஒதுக்கீடு செய்தது.

இதுபோன்ற இட ஒதுக்கீடு என்ற தவறான தர்க்கத்தின் காரணமாக, எண்ணிலடங்கா உட்ஜாதி பிரிவுகள், அல்லது அவர்களே சுயமாக அறிவித்துக்கொண்ட சாதி சங்கங்கள் மற்றும் தலைமைகள் இதர பிற்படுத்தப்பட்ட வர்க்கம் (OBC) என்ற அந்தஸ்தைக் கோருகின்றனர். இது சில, பாரம்பரியமாக தாழ்த்தப்பட்ட ஜாதி பிரிவுகளுடன் அடையாளம் காணப்பட்டவற்றையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த வருடம், இதேபோன்று படிதார் அல்லது படேல் என்ற சாதி பிரிவின் பேரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உலுக்கப்பட்டது.

தற்போது ஹரியானாவின் 29 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கிய சிறு விவசாயிகளின் ஒரு பாரம்பரிய இந்து-சீக்கிய உட்பிரிவான ஜாட் சாதி, அதேமாதிரியான மற்றொரு உட்பிரிவு குழுவாக உள்ளது.

இந்திய அரசியல் வாழ்க்கையில் விளையாடுவதற்கு, சாதிக்கு, கிடைத்துள்ள களம் மற்றும் சாதிய மற்றும் வகுப்புவாத வழிகளின் ஊடாக சமூக சீற்றங்களை முறைப்படுத்துவதில் காணப்படும் முதலாளித்துவத்தின் திறமையானது, இந்திய ஸ்ராலினிச கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். போன்ற கட்சிகளின் குற்றவியல் பாத்திரத்துடன் பிணைந்து கிடக்கிறது.

பல தசாப்தங்களாக, அவர்கள் வர்க்கப் போராட்டங்களை முறையாக ஒடுக்கினர் மற்றும் பல்வேறு மத மற்றும் சாதிய அடிப்படையிலான கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தனர். அதேவேளையில், இட ஒதுக்கீடுகள் "முற்போக்கு" என்றும் தனியார் துறை உட்பட அவற்றை நீடிப்பதற்கும் ஆதரவு அளித்தனர்.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மத்தியில் சந்தை-சார்பு சீர்திருத்தங்களை பின்பற்றிவந்த அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு ஸ்ராலினிஸ்ட்கள் முட்டுக்கொடுத்து நிறுத்தி இருந்தனர், அதேசமயம் அவர்கள் ஆட்சி அமைத்த மாநிலங்களில் அவர்களே "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகள் என விவரித்தவற்றை செயல்படுத்தினர்.

சமீபத்திய வருடங்களில் ஹரியானா வெடிப்புத்தன்மை கொண்ட தொழிலாளர் போராட்டங்களின் தளமாக இருந்து வந்துள்ளது, அதில் மாருதி-சுசூகி மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் நடைபெற்றவையும் உட்படும், அவை குறைந்த ஊதியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு எதிராக வெடித்தன. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற் சங்கங்கள் இந்தப் போராட்டங்களை பல்வேறு வழிகளில் தனிமைபடுத்திக் காட்டிக் கொடுத்தனர்.

ஜாட் சாதி உயர் அடுக்கின் ஒரு பிரிவு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டில் ஒரு பங்கை அவர்களது சாதி பிரிவினர் பெற்றுப் பயனடைய வெகு காலமாக போராடி வருகின்றனர்.

அவர்களுடைய பிரச்சாரம் ஒரு புதிய உத்வேகத்தை எப்போது பெற்றது என்றால் அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம், வாக்குகளைப் பெறுவதற்கு துணைபோகின்ற முயற்சியாக, இந்தியாவின் 2014 பொது தேர்தலுக்கு சற்று முன்னதாக ஹரியானா மற்றும் வட இந்தியா முழுவதிலும் இருக்கும் ஜாட் சாதிப் பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் என்ற அந்தஸ்தை வழங்கியது.

அதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை தள்ளுபடி செய்தது, மேலும் ஜாட் சாதிப் பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கான சாதிய மற்றும் சமூக பொருளாதார நிபந்தனைகளுக்கு பொருந்தியதாக இல்லை என்று கூறிய முந்தைய தீர்ப்பை உறுதிப்படுத்தியது.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சி (Indian National Lok Dal) ஆகிய கட்சிகளின் மறைமுக தூண்டுதல்களின் பேரில்தான் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது தெரிகிறது, அது பா...வின் தேய்வில் ஒரு அரசியல் வளர்ச்சியை உருவாக்கும் பொருட்டாகும்.

ஜாட் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் மற்றும் பா...வின் மத்திய மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்களுக்கு இடையில் நேற்று அடையப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், மத்திய அரசாங்கம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்து ஜாட் இட ஓதுக்கீடு விவகாரம் குறித்து "விரிவான அறிக்கை" ஒன்றினை தயார் செய்திட உள்ளது. மேலும் பா... மாநில அரசாங்கம் "மாநிலத்தில் ஜாட் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க" மாநில சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்ற உள்ளது.

எனினும், இது அநேகமாக ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கும். முதலில், எந்தவொரு பா... அரசாங்கங்களும் ஜாட் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது பற்றி விளக்கவில்லை. ஜாட் சாதி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதால், குறிப்பிடத்தக்க வகையில் பங்கு குறைவு எதுவும் நிகழுமோ என்ற விதத்திலும், 27 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பங்குகளில் "வலுவிழப்பு" ஏற்படுமோ எனவும் கருதி மற்ற ஜாதி பிரிவினர் அநேகமாக தீவிரமாக எதிர்ப்பர். ஏற்கனவே தற்போதைய ஆர்ப்பாட்டத்தின்போது, ஹரியானாவின் ஒரு பா... பாராளுமன்ற உறுப்பினர், ராஜ்குமார் சைனி, ஜாட் பிரிவினரை "நேரடி நடவடிக்கை" மூலம் எதிர்கொள்ள 100,000 பேர் கொண்ட ".பி.சி.படைப் பிரிவு" ஒன்றை உருவாக்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

"கடந்த வருடம் போராடிய குஜராத் மாநில படிதார் (படேல்) பிரிவினர் அல்லது இந்த வருடம் போராடும் ஹரியானாவின் ஜாட் எதுவாயினும், ஒப்பீட்டு அளவில் போதிய செல்வ வளமுள்ள சமூகங்களாக இருக்கும் நிலையில்...." அவர்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளின் விரிவாக்கம் கோரப்படுவதை எதிர்க்கும் அதேவேளையில் ஆளும் உயர்மட்ட பிரிவின் பார்வையினை விளக்கும் விதமாக, திங்களன்று ஹிந்து பத்திரிக்கை ஒரு தலையங்கம் வெளியிட்டது, அது சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை பாதுகாக்கவும் செய்கிறது

"ஜாட் பிரிவினர்" அது தொடர்ந்து கூறுகையில் "ஹரியானாவில், ஒப்பீட்டு அளவில் சொந்த நில உடமை உள்ள செழிப்பான சமூகமாகவும்.... சமூக ஏணியில் உயர்ந்த நிலையிலும் உள்ளனர்" என்றது.

தற்போதைய இந்தியாவில், சாதி ஒரு சமூக பொருளாதார வகையறா என்று சாதிப்பதன் மூலம், பிற்போக்குவாத சாதிய அரசியலை வளர்த்துவிடும் நோக்கத்துடனேயே இதுபோன்ற அறிக்கைகள் இருக்கின்றன. உண்மையில் ஜாட் பிரிவு என்பது, மற்ற அனைத்து சாதிப் பிரிவுகளைப் போன்றே, பல்வேறு வர்க்கங்கள் மற்றும் மாறுபட்ட மற்றும் எதிர்க்கும் வர்க்கங்களிலிருந்து வந்த மக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜாட் உயர்மட்டத்தினர் செல்வந்தர்களாகவும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவும் மற்றும் ஜாட் மகாசபை போன்ற அமைப்புக்களை நடத்துபவர்களாகவும் இருக்கும் அதேவேளையில், அதே சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான சிறு விவசாயிகள் விலைவாசி உயர்வு, மானிய குறைப்பு மற்றும் நில அபகரிப்பு போன்றவற்றின் காரணமாக கசக்கி பிழியப்படுகின்றனர். பத்திரிகை செய்திகளை பொறுத்தவரையில், ஹரியானாவின் 10 சதவீத ஜாட் பிரிவு விவசாயிகள் நிலமற்றவர்களாக உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்கள், குர்கான் மானேசர் தொழில்துறைப் பகுதியில் கடந்த இரண்டு தசாப்தங்களாக முளைத்து வளர்ச்சி அடைந்துள்ள, பூகோள அளவில் இணைக்கப்பட்ட வாகன உற்பத்தித் துறையில் பணிபுரிகின்றனர்.

ஜாதிப் பின்னணி எதுவாக இருப்பினும், ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர் மதிப்பி்ற்கு குறைவான வருவாயிலேயே வாழ்வினை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முக்கால்வாசி மக்கள் தொகை உட்பட பெரும்பான்மை இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு எதையும் செய்துவிடவில்லை. ஆனால், முதலாளித்துவத்திற்கு இது ஒரு மிக அவசியமான கருவியாக உள்ளது, சாதி பிளவுகளை வலுப்படுத்தும் ஒரு வழியாக உள்ளது. சமூக எதிர்ப்பை திசை திருப்பவும் மற்றும் முதலாளித்துவ சுரண்டலை நீடித்து நிலைத்து இருக்கச் செய்வதற்கும் அவற்றை பயன்படுத்தப் படுகின்றன.

சாதிய ஒடுக்குமுறையை ஒழிப்பது என்பது, இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியின் அனைத்து விதமான முற்றுப்பெறாத தீர்மானங்களையும் போலவே தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணி திரட்டுவதன் மூலமாகவே சாத்தியப்படுத்த முடியும், இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு தலைமை தாங்கி. அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் உயர்தர பொது சேவைகள் அளிப்பதற்காக, சோசலிச வழிகளில் சமூக மறு ஒழுங்கமைப்பினை உருவாக்க வேண்டும்.