World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Einige Lehren aus der Geschichte der iranischen Arbeiterbewegung

ஈரான் தொழிலாளவர்க்க இயக்கத்தின் வரலாற்றின் சில படிப்பினைகள்

By Justus Leicht
12. Juli 2000

Use this version to print

Fankfurt ல் இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் ஈரான் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றைப் பற்றிய ஓர் ஆய்வை மார்க்சிச அடித்தளத்தில் Justus Leicht என்பவர் எடுத்துக்கூறினார். அதை இங்கே பிரசுரிக்கிறோம்.

ஈரானில் இஸ்லாமிய அரசாங்கத்தின் நெருக்கடியானது கடந்த மாதத்தில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றத்துக்கான தேர்தலில், அவர்கள் தமது நம்பிக்கைக்குரியதும், வரையறைக்குட்பட்டதுமான சிலவேட்பாளர்களை நிறுத்திய போதிலும் ஒரு திட்டவட்டமான பரந்துபட்ட மக்கள் அபிப்பிராயம் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இருந்தது. ஒடுக்குமுறை, வறுமை, ஊழல் போன்ற நிலைமைகளினூடு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மிகவும் பரந்துபட்ட பெரும்பான்மை வாக்குகளால் காட்டாமி பிரதமராக தெரிவு செய்யப்பட்டாரே தவிர, அவர்கள் கூறிக்கொள்ள விரும்புவதுபோல் அவர் ஒரு ''சீர்திருத்தவாதி'' எனும் அரசியல் முன்னோக்கின் விருப்பின் மூலம் தெரிவுசெய்யப்படவில்லை. மேலும், இதனுடன் இணைந்தாற்போல் நடைபெற்ற தொடர்ச்சியான சிறிய, பெரிய வேலைநிறுத்தங்கள், மறியல்போராட்டங்கள், மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலங்கள் போன்றவையும் இதற்கு காரணமாகவிருந்தது.

மக்கள் மத்தியில் மிகக்குறைவான செல்வாக்கை வைத்திருக்கும் ''Hardliner'' ''தீவிரவாதிகள்'' அல்லது ''பழமைவாதிகள்'', நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பங்கையும் அதேபோன்று அரசு, நீதித்துறை, அரசாங்க தொலைக்காட்சி போன்றவற்றையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்த இவர்கள் இந்த தீவிரமான பிரச்சாரத்தின் மூலம் பதிலளித்தனர். அவையாவன; பல பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டும், ஒரு தொகை கைதுசெய்தல்கள், துணை இராணுவத் துருப்புக்கள் நடவடிக்கையில் இறக்கப்பட்டும், இஸ்ரேலின் உளவாளி எனும் ஒரு பொய்வழக்கின் கீழ் யூத எதிர்ப்புவாதம் கிளப்பப்பட்டும், மற்றும் போதைவஸ்து கடத்துவோர் எனும் பேரிலும், சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் எனவும் ஆப்கானிஸ்தானியருக்கு எதிரான வெளிநாட்டவர் எதிர்ப்பும் கிளப்பப்பட்டதும் ஆகும்.

இதற்கான ''சீர்திருத்தவாதிகளின்'' பதில் என்னவெனில், வலதுசாரி அழுத்தங்களை மிகவும் திட்டவட்டமான முறையில் நிராகரிப்பதே. 1988ன் இறுதியில் பிரசித்தி பெற்ற புத்திஜீவியான Darioush வினது போன்ற ''மாயமான கொலைத் தொடர்'' எனும் பின்னணியை கண்டுபிடிப்பது இவ் வருடத்தின் ஆரம்பத்தில் எந்தவித பயனுமற்று நிறுத்தப்பட்டது.

பத்திரிகைத் தணிக்கையின் போதும், ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் தாக்கப்படும் போதும் ஜனாதிபதி காட்டாமி ''ஒழுங்கையும், சட்டத்தையும்'' பாதுகாக்கவேண்டும் என சலிப்படையாமல் கூறினார். புதிய பாராளுமன்றத்துக்கான அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக அயத்துல்லா கொமேனியின் (Ayatollah Khomeini) கல்லறையை நோக்கி புனிதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அங்கு உயிர்நீத்த இஸ்லாமியக் குடியரசின் தந்தைக்கு இந்த ''சீர்திருத்தவாதியால்' 'மரியாதை செலுத்தப்பட்டது.

தற்போது மாணவர்களின் பிரதிநிதிகளால் காட்டாமிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துச் செல்கின்றன. ஆரம்பம் முதலே நம்பிக்கை இழக்காமல் இருப்பதற்காக, புதிய பாராளுமன்றம் பத்திரிகைத் தடையை தளர்த்தல், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் காவல் படையினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கருதியது. ஆனால் இவ்வாறான அனைத்து சாத்தியமான போக்குகளும் கூட பழமைவாத ஆளுமைக்குக் கீழ் உள்ள பாதுகாப்பு சபையால் தடுக்கப்பட்டன. எனவே புதிய முரண்பாடுகளும், எதிர்ப்புக்களும் தவிர்க்கப்பட முடியாதது.

இருபதாம் நூற்றாண்டில் ஈரானின் தொழிலாளர்கள், விவசாயிகள், புத்திஜீவிகள் போன்றோரால் எதிர்நோக்கப்பட்ட அனைத்து கேள்விகளும், பிரச்சினைகளும் மறுபடியும் இப்போது தீவிரமாக முன்வந்துள்ளன. இதனால் ஈரான் தொழிலாள வர்க்க இயக்கத்தின் துன்பகரமான வரலாற்றுப் பாடத்தை பார்ப்பது இங்கு அவசியமாக இருக்கிறது. இதனூடு மட்டும் தான் ஓர் வழமான எதிர்காலத்திற்கான போராட்டத்தினை சாதகமாக்க முடியும்.

இருபதாம் நூற்றாண்டில் ஈரானின் வரலாறு மிகவும் திட்டவட்டமாக அங்கு நிலவிய விவசாயப் பிரச்சினைகள், மற்றும் வறுமை, அடக்குமுறை, பிற்போக்கு ஏகாதிபத்தியத்தின் ஆளுமை போன்றவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கிய அனைத்துவிதமான வேடதாரிகளும், இராணுவ உடை தரித்தோரும், அல்லது நீண்ட தாடியும், ஆன்மீக பலமும் கொண்ட மதகுருமார்களும் போன்ற இவ் அனைவரும் ஈரான் முதலாளித்துவத்தின் இயலாமையை நன்கு வெளிப்படுத்திக்காட்டினர். ஆனால் இதன் அர்த்தம் தேசிய முதலாளித்துவம் நாட்டின் அபிவிருத்திக்காகவோ அல்லது ஏகாதிபத்தியத்திடமிருந்து சுயாதீனத்தை பெற்றுக்கொள்ளும் விருப்பமோ அதற்குகிடையாது எனக் கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான முதலாளித்துவ வெளியீடுகளில், மதத்தினைப் பற்றிய கலந்துரையாடல்கள் தீவிரமடைந்திருந்ததுடன், மேலும் இதனுடன் நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிளவுகளும், அவற்றின் ஒடுக்கு முறைகளையும் எவ்வாறு வெற்றி கொள்வது என்பனவும் மேலோங்கியிருந்தன. 1906ல் இடம்பெற்ற ''அரசியல் சட்டங்களுக்கான புரட்சியில்'' (இது 1905ல் ரஷ்யாவில் இடம்பெற்ற புரட்சியின் காலத்துடன் ஒப்பிடக்கூடியது.) ஈரானின் முதலாளித்துவம் தனது புரட்சிகரமான முன்னெடுப்புக்களை பிரித்தானிய தூதுவராலயத்தில் ஒளித்துக்கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஷா (Schah) தனது அரசியல் அமைப்புச் சட்ட சீர்திருத்தங்களுடன் வெளியே வரும் வரைக்கும், இம் முதலாளித்துவ தலைவர்கள் பிரித்தானியரின் தோட்டத்திற்குள் இருந்து வெளியேவர நடுங்கினர்.

1920ல் ஷா அரசாங்கம் 1917ன் அக்டோபர் புரட்சியின் தாக்கங்களினூடு பாரிய சமூகக்கொந்தளிப்புக்கு முகம்கொடுத்தது. இதை அடக்குவதற்கு முதலாளித்துவத்தின் அரசியல் தலைவர்கள் 1921ல் றேஸா கான் பாலேவி (Reza Khan Pahlevi) என்பவரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடனான ஒரு இராணுவ சதியின் மூலம் பதவிக்கு கொண்டு வந்தனர். பின்னால் இவர் 1925ல் தானாகவே ஒரு முடிசூடா மன்னராக சிம்மாசனத்தில் ஏறிக்கொண்டனர்.

றேஸா கானுக்கும், துருக்கியில் நவீன முதலாளித்துவத்தின் ஸ்தாபகருமான முஸ்தபா கேமால் அற்றாரூக் (Mustafa Kemal Atatürk) க்கும் இடையேயான அரசியலில் கணிசமான உடன்பாடுகள் உண்டு. இவர்கள் இருவரும் ''இடது'', ''ஏகாதிபத்திய எதிர்ப்பு'' போன்ற கவர்ச்சிகரமான வார்த்தை ஜாலங்களை ஆரம்பத்தில் பாவிக்கவில்லை. இவர்கள் இருவரும் 20களின் நடுப்பகுதியில் ஸ்ராலினிசத்தின் சோவியத் அரசாங்கத்தால் ''புரட்சிகரமான தலைவர்கள்'' என புகழப்பட்டனர். இருவரும் பிரபுத்துவ, மதவாத பிற்போக்குத்தனத்தின் இடிபாடுகளிலிருந்து தமது நாட்டை பாதுகாக்க அரசின் உதவியுடன் முதலாளித்துவ அபிவிருத்திக்கான பொருளாதாரத்தை கொண்டுவரவும் முயற்சி செய்தனர்.

இவ்வாறான முயற்சிகள் விரைவில் சில பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தன. அதாவது சமுதாயத்திற்கான பொருளாதாரத்தை அமைப்பதில் அதன் பிரதான பங்காளியான தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் உடமையாளனுக்கும், உடமையற்றவனுக்கும் இடையேயான வர்க்க முரண்பாடு நகரத்திலும், கிராமத்திலுமாக வளர்ச்சியுற்றது. இச் சமூக கொந்தளிப்பு எனும் வெடிகுண்டைக் கட்டுப்படுத்த சமுதாயத்தின் பழைய பாரம்பரிய அடக்குமுறை நிலைக்கு ஆளும் வர்க்கம் திரும்பிச் சென்றது. இவ்வாறான முறைகளில்தான் மக்கள் தொகையில் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு எதிரான அடக்குமுறைகள் கையாளப்பட்டன.

ஆன்மீக பலத்தின் ஆட்சியிலிருந்தும், நிலவுடமையாளரின் பிடியிலிருந்தும் முறித்துக்கொண்டு, மதவாதிகளிடமிருந்து கிராமத்தை விடுவிப்பதற்குப் பதிலாக அவ்விடத்தில் பழைய வடிவிலான அடக்கு முறையையும், இனவாதத்தையும் நடைமுறைப்படுத்தியது. றேசா கானும் கேமாலை போல் இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சியின் கீழ் சுயாதீனமான தொழிலாள வர்க்க, விவசாய இயக்கங்களை தடைசெய்ததைப் போன்று இவ்வாறான அடக்குமுறை வடிவங்களை பிரயோகித்துக் கொண்டனர். மேலும் இதே போன்று பாரசீயத்துக்கான ஓர் பெயராக ''ஈரான்'' என தெரிவுசெய்யப்பட்டது, இது ஆரிய வம்சத்தை ''ஓர் உயர்ந்ததாக உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததும் ஓர் தற்செயலான நிகழ்வு அல்ல. ''ஆரிய வம்சத்தின் சூரியன்'' என இதற்கு அர்த்தமற்ற வேறு ஓர் பெயரும் உண்டு.

50களின் ஆரம்பத்தில் ஜனாதிபதியாக இருந்த மொகமட் மொசாடெக் (Mohamed Mossadeg) ஆல், ஆங்கில- ஈரானிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தேசியமயமாக்கப்பட்ட சம்பவம் அந்நேரத்தில் புகழ்பெற்றிருந்தது, எனினும் இதை ஒரு நல்ல விடயம் எனக் குறிப்பிட முடியாது. வெறுக்கத்தக்க இவ் எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் இந் நடவடிக்கை பாரிய உற்சாகத்தை கொடுத்தது. மொசாடேக், மக்களின் இவ் உற்சாகத்தை கணக்கில் எடுக்காமல் பிரித்தானியாவுக்கு எதிராக வாஷிங்டனின் ஆதரவை நாடினார். அதாவது, ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்கு எதிராக மற்றுமொரு ஏகாதிபத்தியத்தின் தயவை நாடும் விளையாட்டில் இவர் இறங்கினார்.

அமெரிக்கா, லண்டனுக்கு மொசாடேக்கை எதிர்ப்பதென உறுதியளித்தது. அதற்கான காரணம் யாதெனில், றூடே (Tudeh) எனும் ஈரானிய - மொஸ்கோ ஸ்ராலினிச சார்பு கட்சிக்குப் பின்னால் மக்கள் ஆதரவுவலுப் பெற்றிருந்தது ஆகும். மேலும் இக்கட்சி அந்நேரத்தில் மொசாடேக்கின் ''தேசியமுன்னணி'' யைக் காட்டிலும் பாரிய மக்களை தன் பின்னால் அணிவகுத்திருந்தது.

முதலாவது சதியின் விளைவாக, ஷா நாட்டை விட்டோடியதும் றூடேயின் ஆதரவாளர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்துடன் இறங்கி அரச சிலைகளை உடைத்தெறிந்தனர். மோசாடேக் மறுபடியும் அமெரிக்காவின் உதவியை நாடி மக்களை இராணுவ அடக்குமுறையினூடு அழித்தொழிப்பதற்கான ''உபாயத்தை'' கேட்டார். இதுதான் அவருக்கிருந்த ஒரேயொரு அடிப்படைக் கொள்கையாகும். இறுதியாக இராணுவமும், ஷாவும் இந்நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக நிறைவேற்றி முடித்தனர். இதற்கான காரணம், ற்றூடேக் கட்சியானது தேசிய முன்னணியின் ஒரு ''பரந்த ஐக்கியம்'' எனும் அரிய சந்தர்ப்பத்தை நிராகரித்ததினூடு ஷாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களை தயார்செய்வதையும் கைவிட்டது. இவ் ஆச்சரியமான சதிக்குப் பின்னால் அமெரிக்காவின் CIA உளவாளிகள் ஷாவை மறுபடியும் ஈரானுக்குள் கொண்டுவரவும், சில சாதனைகளைப் படைக்கவும் முடிந்தது.

1953ல் நடைபெற்ற ஷாவின் சதியிலும், அதற்குப் பின்னரும் சமய மதக்குருக்களால் இது ஆதரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷாவினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கான போட்டியில் அதன் தேசியப் பொருளாதாரத்தின் நவீனமயப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமூக மற்றும் ஆன்மீகத் துறையில் அடித்தளமிட்டிருந்த இதுவரையிலான பொருளாதாரத்தை அச்சுறுத்தியது. அதாவது பஸார் (சந்தை) எனக் கூறிக்கொள்பவையும், பாரம்பரியமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளும் இச் சர்வதேசப் போட்டிக்கு முன்னால் விவசாயிகளைப் போன்று மிகவும் மெதுவான வளர்ச்சியையே கொண்டிருக்க வேண்டியிருந்தது. இவர்கள் பின்னால் தமது வருமானத்திற்காக நகரங்களுக்கு படையெடுத்தனர்.

நவீனமயப்படுத்தல், நாட்டை வளம்மிக்க தொழில் மயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் அறுபதுகளின் ஆரம்பத்தில் நடைபெற்றன.இது ''வெள்ளைப்புரட்சி'' என அழைக்கப்பட்டது. இது ஷாவின் ஒரு சிறிய கும்பல் (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள முதலாளிகளும் சில நிலச் சொந்தக்காரர்களும்) தமது செல்வத்தை பெருக்கிக்கொள்ள உதவியது. இம் முதலாளித்துவக் கும்பல் ஈரானை உலகப் பொருளாதாரத்துடன் இணைத்ததானது தனது சவக்குழியை தானே வெட்டிக்கொள்ள வழியமைத்தது. அதாவது நகரப் பாட்டாளி வர்க்கம் எழுபதுகளின் நடுப்பகுதி வரைக்கும் வேகமாக வளர்ச்சியுற்றது.

இங்கு கொமேனியின் அரசியல் பலத்தையோ அன்றி அவருடைய தொலை நோக்கையோ இது காட்டவில்லை. மாறாக இந்த தேசியவாத அரசியலை முன்னெடுத்த ஸ்ராலினிசத்துக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் இதனால்தான் ஷாவை தொழிலாள வர்க்கமும் ஏழை விவசாயிகளும் தூக்கியெறியாமல் முல்லாக்கள், பஸார் வர்த்தகர்கள் போன்றவர்களின் துணையோடுதான் கணக்குத் தீர்த்திருந்தது. மேலும் இதனுடன் தொடர்புபட்ட விதத்தில், றூடே- கட்சியும், மக்கள் மொஜாடீனும் (Volks mojahedin) அந்நேரத்தில் ''இஸ்லாமிய சோசலிசம்'' கொமேனி ஓர் ''ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்'' போன்ற கோசங்களினூடு பானிசாரை (BaniSadr) ''இஸ்லாமிய ஈரான் குடியரசின்'' முதலாவது பிரதமரென இக்கட்சி ஆதரித்ததை நினைவு கூருவது மிகவும் பொருத்தமானது.

கொமேனி தேசிய முதலாளித்துவத்தின் ஓர் பிரதிநிதி.அந்நேரத்தில் பல ஆயிரக்கணக்கான இடதுசாரிகள் இவரால் கொலைசெய்யப்பட்டனர். ஒவ்வொரு சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைகளும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. மற்றும் குர்டிஷ் (Kurden) மக்களின் மாநில சுயாட்சி மோசமாக ஒடுக்கப்பட்டது. வங்கிகளும், நாட்டின் பிரதான தொழில் வருமானத்தைக் கொண்டிருக்கும் எண்ணெய் கம்பனிகளும் இவரால் தேசிய மயமாக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை வெளியுலகத்துடன் வெட்டியும், செல்வந்தரின் தொழிற்கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு விரிவான கட்டுமானமும் அமைக்கப்பட்டது.

எப்படியிருந்தபோதும் ஈரானின் தேசிய பொருளாதார அபிவிருத்தியின் வளர்ச்சியும் கூட உலகச் சந்தையின் தொழில்நுட்ப, மற்றும் சந்தைப்படுத்துதலுடனேயே நெருக்கமாக இணைந்திருக்க வேண்டியிருந்தது. எனவே இது இஸ்லாமியக் குடியரசின் முதலாவது வருடத்திற்குள்ளேயே அதன் ஆளும் கும்பலுக்குள் பொருளாதார அரசியலைப்பற்றியும், அதை சர்வதேச மூலதனத்துக்கு திறந்துவிடுவதில் அரசு வகிக்கும் பாத்திரம் தொடர்பாகவும் பலமான முரண்பாடுகள் கிளம்பின.

ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் இச்சச்சரவுகள் ஒரு இடைக்காலத்திற்கு மூடி மறைக்கப்பட்டாலும், மறுபக்கத்தில் இப்பிரச்சினை நாட்டில் ஒரு மிகவும் மோசமான இரத்த பெருக்கெடுப்பு வேகத்திற்கு உயர்ந்து சென்றது.

இங்கு பூகோளமயமான முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்திற்கு முன்னால் அறவே சாத்தியமற்ற ஒரு தேசிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் ஈரானிய முதலாளித்துவ வாதிகளின் பலவீனம் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. 1982ல், ஈரான் ஒரு பலவந்தமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை, தனது பாதுகாப்புக்கான வெற்றியெனக் கூறிக்கொண்டு நடாத்தியது. இதைச் செய்வதற்காக அது ''அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு'' மற்றும் ''சியோனிய எதிர்ப்பு'' போன்ற பாசாங்கிற்கு கீழ் அதே அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் இணைந்த ஒரு இரகசியமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. (இது பின்னர் ''ஈரான் சம்பந்தமான எதிர்- விவகாரம்'' ''Iran-Contra-Affäre'' என அம்பலப்படுத்தப்பட்டது.) இதேமாதிரியான இங்கும்- அங்குமான ஈரானின் வெளிநாட்டு அரசியல் அந்நேரத்தில் கொமேனி முதல் இன்றுவரை முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று அரசாங்கம் இவ்வாறான குழப்பநிலையில் இருப்பதற்கான மத்தியபுள்ளி மேற்கூறப்பட்ட பேரழிவுகளிலேயே தங்கியிருந்தன. நாடு வங்குரோத்தடைவதற்கான காரணம் யாதெனில், அது மேலும் மேலும் உலகப்பொருளாதாரத்திலிருந்து அந்நியப்பட்டுச் செல்வதேயாகும். இவ் அந்நியப்படுதலிருந்து தலைதப்ப காட்டாமி ஏகாதிபத்தியத்தினதும், அதனது சர்வதேச நிதிமூலதனத்தின் கள்வர்களுக்கும் திறந்துவிடப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரத்தை முழுமையாக கொள்ளையடிக்கும் சர்வதேச முதலாளித்துவ மூலதனத்திற்கு திறந்துவிட முயல்கின்றார். இது அவருடைய எதிராளிகாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களின் மீது ஒரு தீர்க்ககரமான தாக்குதலாக இருப்பது மட்டுமின்றி வருமானங்களைப் பெற்றுவந்தோர், சலுகைகளைப் பெற்றுவந்த மதகுருமாரில் ஒரு கணிசமான தட்டினர் மற்றும் ''மாபியாவின் ஆட்சி'' எனப்பெயர் பெற்ற பஸார்- வர்த்தகர்கள் இவர்கள் அனைவரினதும் சமூக நிலமைகளையும் தாக்குதலுக்குள்ளாக்கும். இவ்வாறான சமூக முரண்பாடுகள் ''தீவிரவாதியான'' இச் ''சீர்திருத்தவாதத்தின்'' தலைவருக்கும் இது தமது முரண்பாடுகளுக்கு காரணமென்பதும், அடிமட்டத்திலிருக்கும் மக்களினது எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதும் நன்றாகத் தெரியும்.

ஈரானின் தொழிலாளர்களும், மாணவர்களும் இவ் அரசியல் விளைவுகளை விளங்கிக்கொள்ளல் அவசியம். இதிலிருந்து மீள்வதற்கான ஓர் முற்போக்கான வழியென்பது, ஓர் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் முடிவுகட்ட மத்திய கிழக்கில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும், மதங்களும் ஒன்றுபடவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.