World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

European Union to investigate US-run satellite spy network
France launches independent probe into Echelon

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் உளவறியும் செய்மதி வலையமைப்பை புலன்விசாரணை செய்கின்றது

Echelon தொடர்பாக பிரான்சு சுயாதீன விசாரணையை ஆரம்பித்துள்ளது

By Chris marsden
10 July 2000

Use this version to print

அமெரிக்கா Echelon என அழைக்கப்படும் உளவு பார்க்கும் கருவியை தனது ஐரோப்பிய போட்டியாளருக்கு எதிராக அமெரிக்க நிறுவனங்களின் வியாபார முன்னேற்றங்களை வெற்றிகொள்ள பாவித்துள்ளது என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்றம் வாக்களித்துள்ளது.

Echelon பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா போன்றவற்றுடன் இணைந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் [NSA] கட்டுப்படுத்தப்படும் பாரிய உளவுபார்க்கும் செய்மதியாகும். Echelon வலையமைப்பு சகல தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல், வானொலிச் செய்திகளை இடைமறிக்க[ஒட்டுக்கேட்க] கூடியது. இது ஒரு தொகை சங்கேத சொற்களையும், செய்தி வடிவங்களையும் கொண்ட குரலை அடையாளம் காணக்கூடிய சக்திவாய்ந்த கணனிகளை பிரயோகிக்கின்றது.

இவ் வலைப்பின்னல்களின் தனியார், அரசியல் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் குறித்து ஐரோப்பிய அரசுகள் அரிதாகவே ஏற்றுக்கொள்கின்றன. எல்லோரும் ஒரேமாதிரியான இவ்வாறான மற்றவர்களின் விடயங்களில் தலையீடு செய்கின்றனர். Echelon ஒருவருட ஆய்வினை மேற்கொண்டு அமெரிக்க வலையமைப்பு ஐரோப்பிய வர்த்தக, கைத்தொழிலின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றதா என்பது தொடர்பான அறிக்கையை வழங்ககூடியது.

ஐரோப்பிய பாராளுமன்றம் மார்ச் மாதத்திலேயே முதல்தடவையாக இது தொடர்பாக விசாரித்தது. பாராளுமன்ற குழுவினால் விசாரிக்கப்பட்டு, பிரித்தானிய ஆய்வாளரும் பத்திரிகையாளருமான Duncan Cambell ஆல் எழுதப்பட்ட அறிக்கையில் Echelon வலையமைப்பு இருதடவை ஐரோப்பிய போட்டியாளருக்கு எதிராக அமெரிக்க நிறுவனங்கள் முன்னணி நிலையை அடைய உதவியதற்கான சாட்சியங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Cambel இன் அறிக்கை 1994 இல் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க போயிங் [Boeing] விமான விற்பனைக்கு எதிராக பிரான்சின் தலைமையிலான ஐரோப்பிய எயார் பஸ்[Airbus ] இன் முயற்சி தொடர்பாக குறிப்பிட்டது. பின்னர் CIA இன் தலைவரான James Woolsey எயார் பஸ்[Airbus ] இன் 6பில்லியன்$ பெறுமதியான சவுதிஅராபியாவுடனான விற்பனையை Echelon இனை பாவித்து தோற்கடித்துவிட்டதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் நிறுவனமான Thomson உம் பிரேசிலுடனான ராடார் [Radar] ஒப்பந்தமொன்றை இழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. Microsoft, IBM, மற்றும் குறிப்பிடத்தக்க" பாரிய மைக்ரோ chip செய்யும் அமெரிக்க நிறுவனமும்" தகவல்களை இடைமறித்தலுக்கான முக்கிய உற்பத்தி பகுதிகளை வழங்குவதாக Cambel குறிப்பிட்டார்.

1993,1994 இல் அமெரிக்க உளவுச்சேவை Raytheon, Boeing, Huges Network Systems உள்ளடங்கலான அமெரிக்க நிறுவங்கள் 16.5பில்லியன்$ பெறுமதியான கடல்கடந்த ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள உதவியதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. இவ்வருட மே மாதத்தில் கிளின்டனுடைய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க நிறுவனங்கள் கடல் கடந்த ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள உளவுச்சேவை உதவிசெய்ததற்கான, முக்கியமாக CIA காங்கிரசுக்கு எழுதிய கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவை அமெரிக்கா எவ்வாறு வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுடன் நியாயமற்ற போட்டியில் ஈடுபட்டிருந்ததற்கான சாட்சியங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பலர் Echelon இன் உளவுநடவடிக்கைகளில் பிரித்தானியாவின் பங்கு தொடர்பாக முறையிட்டுள்ளனர். மிகப்பெரிய தகவல் சேகரிக்கும் நிலையம் இங்கிலாந்தின் வடயோக்ஷயர் [North Yorkshire] மாநிலத்திலுள்ள மென்வித் கில் [Menwith Hill] இலுள்ள அமெரிக்க இராணுவத்தளமாகும். இது மேரிலாந்திலுள்ள [Maryland] போர்ட் மெட் [Fort Mead] இல் அமைந்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு சேவையின் தலைமையகத்துடனும், பிரித்தானியாவின் GCHQ உள்ளடங்கலான உலகத்தின் ஏனைய அவதான நிலையங்களுடனும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய உளவு,பாதுகாப்பு பொதுபரிசோதகரான Bill Blick அவுஸ்திரேலிய Defence Signals Directorate இவ் அலை அமைப்பின் ஒருபகுதி என பி.பி.சி க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Cambel இன் கருத்தின்படி 1947ம் ஆண்டு உலகின் வித்தியாசமான பகுதிகளை கடல்கடந்து வேவுபார்ப்பதற்காக ஆங்கிலம் பேசும் நாடுகளால் உருவாக்கப்பட்ட UKUSA என்ற இரகசிய உடன்படிக்கையே Echelon இற்கான மூலமாகும். இதில் பிரித்தானியாவிற்கான பகுதி ஆபிரிக்கா, ஐரோப்பா, முன்னைய சோவியத் யூனியனின் யூரல் மலைவரையிலான கிழக்குப்பிரதேசமாகும். கனடாவிற்கு பூமத்திய ரேகையின் வடக்கு பகுதியும், துருவப்பிரதேசமும் ஆகும். அவுஸ்திரேலியா மத்திய, தென்பசிபிக் பிரதேசங்களை கவனித்துக்கொண்டது. நோர்வே, டென்மார்க், ஜேர்மனி, துருக்கி போன்ற ஏனைய நாடுகள் அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் பின்னர் உளவு உடன்படிக்கைகளை செய்து கொண்டன.

தேசிய பாதுகாப்பு சேவையிலிருந்து விலகிய இருவர் 1960 செப்ரம்பர் 6ம் திகதி பத்திரிகையாளர் மகாநாட்டில் "நாங்கள் தேசிய பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்ததால் அமெரிக்கா தனது கூட்டுநாடுகளுட்பட 40 நாடுகளில் தொலைத்தொடர்புகளை அறிந்துகொண்டது எமக்கு தெரியும். ஒட்டுக்கேட்கும் தளங்களுள்ள நாடுகளுட்பட அநேகமாக அனைத்து நாடுகளினதும் சங்கேதமொழி செய்தி, சாதாரண செய்திகள் அவதானிக்கப்பட்டன" என கூறினர்.

அமெரிக்காவிற்கு எதிரான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இம்முயற்சி பிரான்சின் வலியுறுத்தலால் முன்கொண்டுவரப்பட்டது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அறிவித்தலின் முன் யூலை 4ம் திகதி பிரான்சு அரசு வழக்குத்தொடுனர் Pierre Dintilhac, Echelon பிரான்சின் தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றதா என்பது தொடர்பாக ஆரம்ப விசாரணை செய்யவுள்ளதாக அறிவித்தார். அவர் பிரான்சின் உளவு சேவையான DST இற்கு Echelon இனை மதிப்பீடு செய்யமாறு உத்தரவிட்டார். Echelon "நாட்டின் முக்கிய நலன்களுக்கு பாதிப்புவிளைவிப்பதாக இருப்பதாக" DST கண்டுபிடிக்குமானால் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1995ம் ஆண்டு Echelon இன் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக இருந்ததாக கூறி பிரான்சு CIA இன் பாரிஸ் பொறுப்பாளர் உட்பட 5 அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றியது. 1999இல் பிரான்சு பிரதமர் ஜொஸ்பன் செய்தி ஒட்டுக்கேட்டலை தவிர்ப்பதற்காக தனியார் நிறுவனங்களையும், தனிநபர்களினதும் தொலைதொடர்புகளை சங்கேதமொழி முறையில் செய்ய அதிகாரமளித்தார். கடந்த அக்டோபரிலேயே பிரான்சு Echelon வர்த்தக உளவுபார்க்க பாவிக்கப்படுவதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. இவ்வருட பெப்ரவரியில் நீதி அமைச்சர் Elisabeth Guigou அமெரிக்க உளவு அமைப்பு "பொருளாதார உளவு பார்ப்பதாக" மாற்றப்பட்டுவிட்டதாக கூறினார். பல பிரான்சு நிறுவனங்களும், தனியார்களும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சேவை சட்டத்திற்கு மாறாக உளவுபார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், பாரிசிலுள்ள சட்டநிறுவனமான Jean Pierre Millet அமெரிக்க நீதிமன்றத்தில் தனியார் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

Echelon தொடர்பான இழுபறிகளும், இதில் பிரான்சு முக்கிய பங்குவகிப்பதும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அதிகரித்துவரும் அரசில், இராணுவ முரண்பாடுகளின் வெளிப்பாடாகும். பிரான்சு நீண்டகாலமாகவே ஐரோப்பா தீவிர அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்க வேண்டுமென கூறிவருகின்றது. யூன் 8ம் திகதி பிரான்சும் ஜேர்மனியும் ஐரோப்பிய உளவு செய்மதி அமைப்பையும், நேட்டோவிலிருந்து சுதந்திரமான பாதுகாப்பு தகமையை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட திட்டத்தின் ஒர் பாகமாக அமெரிக்க C-130 விமானங்களுக்கு பதிலாக எயார் பஸ் இனது ஐரோப்பிய இராணுவ போக்குவரத்து அமைப்பையும் உருவாக்க இணங்கியுள்ளன.

கடந்த மாதம் பிரான்சு ஜனாதிபதி சிராக் ஜேர்மன் பாராளுமன்றத்தில் பேசுகையில் "உலக போட்டியில் பலமுள்ளதாகமாற" ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பிய பொருளாதார, அரசியல், இராணுவ கூட்டின் மூலம் நிதானமாக முன்னேறவேண்டும் என அழைப்பு விட்டார். இதே நாள் வார்ஷோவில் "உலக ஜனநாயகத்தை" முன்னெடுக்கவென அழைப்புவிடப்பட்ட சர்வதேச மாநாடு ஒன்றில் பிரான்சு பகிரங்கமாக அமெரிக்காவுடன் மோதிக்கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட "வார்ஷோ பிரகடனம்" என்பதில், இவ் அறிக்கையை "ஜனநாயக நாடுகள் ஒரு குழுவாக இயங்குவதற்கான இராஜதந்திர அடைமானம்" எனவே கருதலாம் எனக்கூறி இத்துடன் பிரான்சால் உடன்படமுடியாது என மறுத்துவிட்டது.

பிரான்சினதும் ஐரோப்பிய கூட்டமைப்பினதும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அமெரிக்காவின் பதில் யுத்தவெறி கொண்டதாக இருந்தது. CIA இன் தலைவரான George Tenet "அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. அவர்கள் ஆராய்கின்றார்களா அல்லது எங்கு அவர்கள் முறையிடப்போகின்றார்கள்? என கூறியுள்ளார். இராஜாங்க திணைக்கள பேச்சாளரான Richard Boucher "அமெரிக்க வர்த்தகத்தை முன்கொண்டு செல்ல இரகசிய செய்திகளை சேகரித்தோம் என்ற கருத்து பிழையானது" என தெரிவித்தார்.

மார்ச் மாதம் இவ்விடயம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முதல் தடைவையாக விவாதிக்கப்படுகையில் Cambel ஆல் வர்த்தக உளவுக்கு பொறுப்பு என குற்றம்சாட்டப்பட்ட CIA இன் முன்னைய தலைவரான Woolsey ஐரோப்பிய தொலைத்தொடர்புகளை அமெரிக்கா அவதானித்ததை உறுதிப்படுத்தினார். அவர் இது ஐரோப்பிய நிறுவனங்களின் கைலஞ்சம் வாங்குவதை அவதானிக்கவே செய்யப்பட்டது என்றார். மேலும்"நாங்கள் கடந்த காலத்தில் அதற்காகவே உளவுபார்த்தோம். அமெரிக்க அரசாங்கம் கைலஞ்சத்தை உளவுபார்க்க இதை தொடரும் என நான் எதிர்பார்க்கிறேன் எனவும், ஐரோப்பிய நிறுவனங்கள் கைலஞ்சம் தொடர்பாக தேசிய கலாச்சாரத்தை கொண்டுள்ளன எனவும் உலகத்தில் பாரிய சர்வதேச ஒப்பந்தங்களுக்கு கைலஞ்சம் வழங்குவதின் முக்கிய குற்றவாளிகளுமாவர்" என குறிப்பிட்டுள்ளார்.