World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Right-wing victory in Spanish general election

ஸ்பானிய பொதுத் தேர்தலில் வலதுசாரி&ஸீதீsஜீ; வெற்றி

By Vicky Short
17 March 2000

Use this version to print

மார்ச்12 இல் நடந்த ஸ்பானிய பொதுத்தேர்தலில்வலதுசாரி மக்கள் கட்சி (Popular Party) அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளது.மக்கள் கட்சி (PP) பிரதம மந்திரி ஜோசேமரியா அஸ்னர் (யிஷீsங விணீக்ஷீணணீ கிக்ஷ்ஸீணீக்ஷீ) இனதும்உள்ளடங்கலாக, இவ் வெற்றியின் அளவுஇடைத் தேர்தலின் எதிர்பார்ப்பிற்கும்மேலாக சென்றுள்ளது.

காங்கிரசில்(பாராளுமன்றத்தில்) 350 இருக்க்ைகளில்183 இருக்கைகளை மக்கள் கட்சி வென்றுள்ளது.இது 1996 இல் ஸ்பானிய சோசலிச கட்சியை (PSOE) வெளியேற்றிய போது இருந்ததைவிட 27 ஆல் அதிகமாகும். நான்கு வருடங்களுக்குமுன்னர் இதனது வாக்குகளின் மொத்தஎண்ணிக்கை தற்போதய 38.79 வீதத்திற்குபதிலாக 44.54 வீதமாக இருந்தது. செனற்சபையில் மக்கள் கட்சி 15 இருக்கைகளைமேலும் அதிகப்படுத்தியுள்ளதுடன், அதனதுஅறுதிப் பெரும்பான்மை பலத்தை அதிகரித்துள்ளது. 1976 இல் பாசிச பிராங்கோ சர்வாதிகர (Fascist Francoite Dictatorship) ஆட்சி முடிவுக்கு வந்ததன்பின் பெரும்பான்மைப் பலத்துடன் வலதுசாரிகள் ஆட்சியை அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

சோசலிசக் கட்சி (PSOE) யினதும் இடதுசாரிக்கூட்டினதும் -United Left இழப்புக்களிலேயேமக்கள் கட்சியின் வெற்றி இருந்தது. சோசலிசக்கட்சி (PSOE) காங்கிரஸ்சில் 16 இருக்கைகளையும்(141 இலிருந்து 125 ஆக) அத்துடன் செனற் சபையிலிருந்து 20 இருக்கைகளையும் (81 இலிருந்து 61 ஆக)இழந்தது. 1979 இல் சோசலிசக் கட்சி (PSOE) 121 இருக்ககைகளை பெற்றிருந்தது.இதன் பின் இதுவே இதற்கு ஆகக் கூடியஇழப்பாகும். இதில் அது ஒன்றரை மில்லியன்வாக்குகளை இழந்துள்ளது.

பகல்11 மணியளவில் சோசலிசக் கட்சியினது புதியபொது செயலாளர் யிஷீணீஹீuணஸீ கிறீனீuஸீவீணீ தனதுஇராஜினாமாவை ஒப்படைத்தார்.இடதுசாரிக் கூட்டு (United Left) தேர்தலில்தலைகீழாக சரிந்துபோனதில் காங்கிரஸ்சில்அதன் இருக்கைளின் பங்கு 21 இலிருந்து 8 ஆககுறைந்துபோனது. இங்கு வாக்குகள்வீதாசாரப்படி பார்க்குமிடத்து 10.54 வீதத்திலிருந்து5.46 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

கத்தலன்,பஸ்க் (Catalan and Basque) என்னும் தேசியவாதகட்சிகள், முன்பு ஓரளவு குறைந்திருந்தாலும்பின்பு ஓரளவு அதிகரித்ததனால் தமது வாக்குகளைப் பேணிக்கொண்டன. ஆனால் முன்னயசிறுபான்மை மக்கள் கட்சி நிர்வாகத்தின்கூட்டுக்கள் என்ற முறையில் இரண்டுமேஅரசாங்கத்தின்மீது அவற்றின் செல்வாக்கைஇழந்தன. மொத்த வாக்களித்தோரின்எண்ணிக்கை 69.98 வீதமாக இருத்தது. இது1996 உடன் ஒப்பிடும்போது 7.4 வீதம் குறைவாகும்.

சோசலிசக் கட்சியினது பொது செயலாளர்தனது கட்சி மோசமான நிலமைக்கு சென்றதற்கு வாக்காளர்களை மறைமுகமாக குற்றம்சாட்டிக் கேலிசெய்தார். அவரது இராஜினாமாஅறிக்கையில் Almunia, ''முற்போக்கின் சக்திகளானஇடது வாக்காளர்களை நாம் விரும்பியதுபோல் அணிதிரட்டுவதில் வெற்றிபெறத் தவறிவிட்டோம்.எப்படியிருந்தபோதும் அவர்களே சமுதாயத்தின் பெரும்பான்மையினர் என்பது உண்மையாகும்''எனக் குறிப்பிட்டார்.

அல்முனியா மேலும்கூறுகையில், ''சோசலிஸ்ட் கட்சி 1982 இலிருந்து1996 வரை ஸ்பெயினை ஆட்சிசெய்தது எனவும்நாம் ஆழமான சீர்திருத்தத்தினூடு செல்லவேண்டி இருக்கின்றது எனவும், ஸ்பானியஇடதும் முற்போக்கின் மேல் நம்பிக்கைகொண்ட சக்திகள் அனைத்தும் இருபத்தோராம் நூற்றாண்டை ஒரு புதிய திட்டமிடலுடனும்,புதிய கருத்தியலகளுடனும், புதிய மக்களுடனும்ஆரம்பித்து வைக்கவேண்டிய தேவையுள்ளது''என்றார்.

இடதுசாரிக் கூட்டின் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரான்ஸிஸ்கோ புருட்டோஸ் (Francisco Frutos) தனக்குரிய முறையில் இதேபோன்றதன்மையை வெளிப்படுத்திக்காட்டினார்.''கடினமான தோல்வி'' என அறியப்படும்ஒரு சுருக்கமான அறிக்கையில், இடதுசாரிக்கூட்டிற்கும் அதனுடன் தேர்தல்கூட்டில் இணைந்துள்ள சோசலிஸ்ட் கட்சிக்குமாக, '' இங்கே பொருளாதார, சமூக மற்றும்அரசியல் எண்ணங்களில் பழமைவாத இறுகல்நிலை காணப்படுகின்றது, இது எம்மை ஆழ்ந்துசிந்திக்கும்படி அழுத்துகின்றது'' எனக் குறிப்பிட்டார்.

சோசலிஸ்ட் கட்சி இன் எக்ஸ்ற்ரமதுரா (Extremadura) அதிபரான Rodriguez Ibarra திட்டமிடப்பட்டமறுஒழுங்குபடுத்தும் போக்கிற்குப் பின்னாலுள்ளஎண்ணத்தை தெளிவுபடுத்தினார். (முன்நாள் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரும்பிரதமருமான Felipe Gonzalez) இன் கருத்தைஇன்னொருவடிவில் வெளிப்படுத்துகையில் Rodriguez, ''சோசலிஸ்ட் கட்சி எம்மால் இன்னமும்அறிந்துகொள்ளப்படாத நலன்களையுள்ளஓர் மத்தியதர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.மேலும் அவர் இந்நத் தட்டினரைக்கவர்ந்திழுக்கும் வகையிலான புதிய அரசியல்மூலோபாயத்தை கண்டுபிடிப்பதனூடாககட்சியின் புனரமைப்பு நடந்தேறமுடியுமெனஇறுக்கமாய் அழுத்திக் கூறினார்''.

இவ்இரண்டு அமைப்புகளும் வாக்குப் பதிவின்கடைசி நிமிடத்தில் தேர்தல் கூட்டை அமைத்ததன்மூலம் தமது தோல்வியான தலைவிதியைபின்வாங்குவதற்கு முயற்சி எடுத்தன. இடதுசாரிக் கூட்டு என்பது சோசலிஸ்ட்கட்சியை எதிர்பவர்களைக் கொண்ட,கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்படும்தேசியவாதிகளதும் மத்தியதர வர்க்கதீவிரவாதிகளதும் கூட்டாகும். அதனது மிருதுவானசீர்திருத்த கோரிக்கைகளான NATO விற்குஎதிர்ப்பு, கிழமைக்கு 35 மணித்தியால வேலைநேரத்தை சட்டமயமாக்கல், EU ன் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்க்கும்தனியார் மயமாக்கலுக்கும் எதிரானநிலைப்பாடு, அத்துடன் பஸ்க் பிரச்சனையில் ETA (பஸ்க் இனத்திற்கு ஸ்பெயினிடமிருந்து தனிநாடுகோரி வன்முறைமூலம் போரடும் பிரிவினைவாதஇயக்கம்) உள்ளடங்கலாக பேச்சுவார்த்தைமூலமாக தீர்வு காண்பதற்கு ஆதரவளித்தல்போன்றவை மூலமாக கவர்ந்து இழுக்கமுயன்றது. இதன் மூலம் கடந்த கோடைகாலஐரோப்பிய, மாநகர, சுயாட்சி தேர்தல்களில்கலந்துகொள்ளாதவர்களை அணிதிரட்டலாம்என முயன்றது. ஆனால் இதில் பாரிய தோல்வியடைந்தது.

தேர்தலில் ஏற்பட்ட பாரிய பின்னடைவுஇரண்டு கட்சிகளையும் ஆழமான நெருக்கடியினுள் மூழ்கடித்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியினது Aragon பிரதேசத்தின் அதிபரும் அதன் செனற்பிரதிநிதியுமான Juan Alberto Belloch, ''கட்சியினைமுற்று முழுதுமாக மீழ் புனரமைப்பதைஆரம்பிப்பதற்கு முதல் முன் நிபந்தனையாகசோசலிசக் கட்சியினது மற்றய எல்லாதலமை உறுப்பினரும் இராஜினாமா செய்யவேண்டும்'' என அழைப்புவிடுத்தார். கோறுனாபிரதேச ஆளுனர் திக்ஷீணீஸீநீவீsநீஷீ க்ஷிஊக்ஷ்ஹீuமீக்ஷ் ''ஸ்பெயினுக்கானஎமது திட்டமிடலை முழுவதுமாக மீழாய்வுசெய்து அதை தற்போதய நிலமைக்குபொருத்தமானதாக மாற்றி அமைக்கவேண்டும்'' என்றார். இடதுசாரிக்கூட்டின் பொருளாத ரீதியில் மோசமானகீழ்நிலையில் இருக்கின்றது. Europa Press என்னும்பத்திரிகையின் கூற்றுப்படி, அது ஏற்கனவேஅரச கொடுப்பனவிலிருந்து500,000ஐ இழந்துவிட்டது, அத்துடன் அது மேலும்பெரிய அளவில் கடன் நிலுவையிலுள்ளது.

இடதுசாரிக் கூட்டினால் உறுதிப்படுத்தப்பட்ட சோசலிக் கட்சியினது வேலைத்திட்டம்மக்கள் கட்சி (PP) யினுடையதாக பிரதிபலித்தது.இது ஒரு வியாபார சாா்பு கொள்கையின்அபிவிருத்தியாக இருந்தது. இதுவே 1996 இல்மக்கள் கட்சி இன் வருகைக்கு அனுமதியளித்தது.அதில் உழைப்புச் சந்தையை ஒழுங்குபடுத்துதல், அன்னிய முதலீட்டாளர்களை ஊக்கிவித்தல்,தனியார் மயப்படுத்தலும் சமூக சலுகைகள்கொடுப்பனவுகளை வெட்டுதலும், அத்துடன்கூடவே பணக்காரர்களுக்கு வருமானவரிக்குறைப்பும் தொழிலாளருக்கு உறுதியற்றவேலை என்பவற்றை உள்ளடக்கி இருந்தது. அண்மயில் வெளியான அவுஸ்திரேலிய வெளிநாட்டுஅமைச்சகத்தினதும் வியாபார அறிக்கையினதும்கூற்றுப்படி: ''12 மார்ச்சில் நடந்த ஸ்பெயின்நாட்டின் தேசிய தேர்தல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தைத் தரும் எதிர்பார்ப்புஎதனையும் தரவில்லை. அவதானிக்குமிடத்துசோசலிசக் கட்சியினதும் மக்கள் கட்சியினதும்நிகழ்ச்சி நிரல்கள் பெருமளவில் ஒன்றையொன்றுஒத்தவையாகவும் ஒரே விடையத்திற்கேமுன்னுரிமை அளிப்பவையுமாகவே காணப்படுகின்றன.''

கடந்த சோசலிசக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் மூலதனத்தின் இயக்கங்கள் தாராளமயப்படுத்தப் பட்டுள்ளன. 1994 இல் இதுதொழிலாளர் சீர்திருத்த சட்டத்தை அமுல்ப்படுத்தியது. 1997 ஏப்பிரலில் மக்கள் கட்சி, தொழிற்சங்கங்களிற்கும் முதலாளிகளுக்கும் இடையில்ஓரு உடன்படிக்கையை செய்ததன் மூலம்இதனை உறுதிப்படுத்தியது.

தேர்தலுக்குசிலநாட்களுக்கு முன்பாக, அண்ணளவாக100 அங்கத்தவர்கள் கலத்துகொண்ட,ஸ்பானிய தொழிலதிபர்கள் சங்கத்தால் (CEOE) மட்ரிட் (Madrid) நகரில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இரவு விருந்தொன்றில்கலந்துகொண்ட Almunia, அவர்களதுசெல்வாக்ககை ஈர்த்துக் கொள்வதற்காகஇடது-கூட்டணி உடன் தனது தேர்தல் கூட்டையிட்டுஅவர்கள் பயம் கொள்வதற்கு எதுவும்இல்லை எனக் கூறினார். மேலும் அவர்''இவ் இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலானஇவ் உடன்படிக்கை தெளிவானதாகவும், கடுமையான பொருளாதார திட்டங்களானவிலை ஏற்றம், பறற்றாக்குறை, நாட்டின்கடன்கள் (public debt), இதர..., (இவை ஐரோப்பியஉறுதிப்பாட்டு உடன்படிக்கையின் வேண்டுகோள்ஆகும்) விலகிவிடாததாகவும் இருக்குமெனவும்கூறினார். அவரது அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தும் படியான தொழிலதிபர்களின்வேண்டுதலுக்கிணங்க, அதற்கு Almunia பதிலளிக்கையில், ''சோசலிசக் கட்சி முதலாவதாக தனியார் மயப்படுத்தியது பின்பு பலதரப்பட்ட நிறுவனங்களுக்கிடையே போட்டிகளைஉருவாக்கியது'' என்றார்.

இதனது தற்போதய கொள்கையின் தன்மையை பார்த்தால்,அது இந்த மாற்றங்கள் சந்தேகத்திற்குஇடமில்லாதவாறு வலதுசாரியினரின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பாரியளவில் சந்தர்ப்பத்தைதிறந்துவிடுவதாக இருக்கும்.

Aznar ஒர்பழைய Falangist ஆவார். இவரது தந்தையார்பிராங்கோ (Franco) வின் ஆட்சியில் ஒரு அதிகாரத்துவ அதிகாரியாகவும் பிராங்கோவின் நெருங்கியசினேகிதனுமாய் இருந்தார். கத்தோலிக்கபழமைவாதியான (conservative's patriarch) பிராங்கோவின் முன்னை நாள் அமச்சர் Manuel Fraga Iribarne கட்சியின் தலைமையை எடுப்பதற்கு முன்னர்இவர் சிணீstவீறீறீணீ-லிமீரஸீ மாநிலத்தின் தலைவராகஇருந்தார். 1993 பொதுத் தேர்தலில் இவரால்சோசலிசக் கட்சியின் தலைவர் திமீறீவீஜீமீ நிஷீஸீக்ஷ்ஊறீமீக்ஷ் ற்கு எதிராக வெற்றிகரமாகச் செயற்படமுடியாமல் போனது.

Aznar மக்கள் கட்சியைபிரங்கோவின் காலகட்டத்தின் வரலாற்றுவேர்களில் இருந்து தூரவிலக்க முயல்வதுடன், பிரித்தானியபிரதமரான ரொனி பிளேயரால் ஆரம்பித்துவைத்த ஐரோப்பிய "மூன்றாவது பாதை"இன் தீவிர ஆதரவாளரும் ஆவார். ஆனால்சோசலிசக் கட்சியின் வலதுசாரி வேலைத்திட்டம் Aznar ரை கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் நம்பிக்கைக்குரியவராகவும்சட்டபூர்வமானவராகவும், முழு ஸ்பானியமக்களின் பிரதிநிதியாகவும் கருதவைத்துள்ளது.

Aznar க்கு கடந்த 4வருட பொருளாதாரவளர்ச்சி மட்டுமல்ல, பங்கு சந்தையினதுஇலாபத்தினாலும், வரி வெட்டுக்களாலும்இலாபமடைந்தோரிலிருந்தும் அன்னியப்படாமலிருக்கும் பயத்தில், அரசாங்கத்தின் கடுமையானநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதொழிலாள வர்க்கத்தின் உணர்வுகளின்சார்பில் பேசுவதற்க்கு ஒருவரும் இல்லாததும்சாதகமாக இருந்தது. சோசலிச, கம்யூனிஸ்ட்கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்களினால்உருவாக்கப்பட்ட "சமூக உடன்படிக்கை"மூலமாக Union General de Trabajadores (UGT) the ComisionesObreras (CCOO) என்ற இரு தொழிற்சங்கங்களும்குறைந்த சம்பளத்தை வைத்திருக்கவும்,சமூக ஸ்திரத்தை பாதுகாக்கவும் உதவின.

இரண்டு மக்கள் கட்சி இராணுவ உத்தியோகத்தர்களையும், சோசலிசக் கட்சி தலைவர்ஒருவரையும் அவரது மெய்பாதுகாவலனையும் பலிகொண்ட பஸ்க் பிரிவினைவாத இயக்கத்தின்குண்டுத்தாக்குதல்களை நிராகரிப்பதும் Aznar க்கு "பயங்கரவாதத்திற்க்கு எதிரானவர்"என்ற புகழை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்வெற்றிகள் எதிரொலிக்கையிலும், தேர்தல்முடிவுகள் வெளிவந்த முதல் மணித்தியாலத்தில் Aznar மிகவும் அவதானமாக இருந்தார்.அவரது முதலாவது உரையில் "ஸ்பானியசமூகத்தின் சகல பிரிவினருடனும் அதனதுஅரசியல் குழுக்களுடனும் திறந்த, நிரந்தரபேச்சுவார்த்தை என்பது எமது அணுகுமுறையில்ஒன்றாக இருக்கும்" என குறிப்பிட்டார்.

மக்கள் கட்சி அரசாங்கம் ஐரோப்பியஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுயுரோ ஒற்றை நாணயத்தில் இணையத்தயாராகிக்கொண்டிக்கும் வேளையிலும்ஒரு ஸ்திரமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்கஇருக்கிறது. சமூக ஜனநாயக வாதிகள்,தொழிற்சங்கம், தேசிய வாதிகளுடனானஒரு கூட்டுக்கு போவதன் மூலம் தீவிரமான ஒடுக்குமுறை நடவடிக்க்ைகளுக்கு எதிரானசமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகளைஅன்சார் அடக்க முயல்வார். தேர்தலின்பின்னர் முதலாளிகள் சங்கம் பொருளாதாரத்தில் தாராளாமயத்தையும், தனியார்மயப்டுத்தலையும், கட்டுப்பாட்டை தளர்த்தலையும்கேட்டுக்கொண்டதுடன் கூலியைக் கட்டுப்படுத்தல் மற்றும் சமூக மானியங்களை அழித்தலையும்பிரேரித்தன.

இந்த வருடம் பணவீக்கசுட்டெண் 3 வீதத்தை அடைந்ததுடன்- இதில்1 வீதத்திற்கு மேல் ஐரோப்பிய நாடுகளுக்காகஐரோப்பிய மத்திய வங்கியால் நிர்ப்பந்திக்கப்பட்டதாகும். இந்த ஏற்றம் அதிக கூலிக்கானகோரிக்கையை எழுப்பியது. கடந்த இரண்டுவருடங்களில் சராசரி கூலி வீதம் 2 வீதமாகவேஅதிகரித்திருந்தது. இந்த குறைவான எண்ணிக்கைவீதத்தை கடைப்பிடித்தற்காக சர்வதேசநாணய நிதியம் தொழிற்சங்கங்களின் "பொறுப்பான தன்மையை" பாராட்டியது.

ஆசியபசுபிக் பிராந்தியத்துடனான அதனது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார உறவால்ஸ்பெயின் ஆசிய பொருளாதார நெருக்கடியால்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை.அத்துடன் அது பரந்த அளவில் ஐரோப்பியசமூக கொடுப்பனவு நிதியை பங்கிட்டு கொண்டது.1994-99 இடையில் அடிக்கான கட்டுமானநிதியாக 32 பில்லியனை ECU பெற்றுக்கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலின்பேரில், மேலும் சமூக மானிய செலவுகள்,முதியோர் ஓய்வூதியம், வருமான வரியைகுறைத்தல், சுரங்கத் தொழில்- பாதுகாப்பு-இரும்பு மற்றும் கப்பல் கட்டுமானதொழிற்சாலைகளுக்கான உதவிமானியங்களைவெட்டவும் தேசியமயமான விமான போக்குவரத்து, இரயில்வே துறை மற்றும் மொனோபோலிதொலைக்காட்சி நிறுவனமான RTVE யை தனியார் மயப்படுத்தும் படி Aznar கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஸ்பெயினின் வேலையின்மையின் வீதம் ஐரோப்பாவிலேஉயர்ந்ததாக இருப்பதுடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் அது 16 வீதமாகும். ஸ்பெயினில்சில பகுதிகளில் குறிப்பாக காதிஸ் (Cadiz) இன்தென்பகுதியில் இருக்கும் நகரத்தில் இளைஞர்களின்வேலையின்மை எண்ணிக்கை 45 வீதமாகும்.கடந்த நான்கு வருடங்களில் 1.4 மில்லியன்தொழில்களை அரசாங்கம் உருவாக்கியிருப்பதாக அறிவித்தபோதும் அவைகளில் அனேகமானவேலைகள் பகுதிநேர அல்லது (CasualPositions) சாதாரண வேலைகள் தான்.இதில் பரந்த அளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தான் தென்பகுதிகளில் அடிமைத்தனமானவேலை நிபந்தனைகளின் கீழ் வேலை செய்துவருகிறார்கள்.

ஸ்பானிய குடும்பங்களின்வறுமை நிலைமையானது 17.5 வீதமாக இருக்கிறது.தனியாகவும் குடும்பத்துடனும் இருக்கும்பெண்கள் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்படியான குடும்பங்கள்கால்வாசியினர் கொடூரமான வறுமையானநிலைமைகளுக்குள்ளே தான் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுள் அதிகமாககிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தான்உயர்ந்த விகிதத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.