World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

After the Slaughter: Political Lessons of the Balkan War

 

பாரிய மனிதப் படுகொலைகளின் பின்னர்:பால்கன் யுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்

 

நான்காம் அகிலத்தின் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின்பிரதம ஆசிரியரும், அமெரிக்கசோசலிச சமத்துவக் கட்சியின் தேசியசெயலாளரும் ஆன டேவிட் நோா்த்ஆல் எழுதப்பட்ட கட்டுரையின் இரண்டுபகுதியில் முதல் பகுதியை உலக சோசலிசவலைத் தளம் இங்கே வெளியிடுகிறது.

 

By David North
14 June 1999

 

Use this version to print

 

 

புதிய நூற்றாண்டின் திருப்பத்தில்

 

சேர்பியா, அமெரிக்க நேட்டோ தாக்குதலுக்கு இயைந்து போனமையானது இருபதாம்நூற்றாண்டின் இறுதியான மாபெரும்முலோபாய அனுபவங்களை ஒரு முடிவுக்குக்கொணர்கின்றது.&ஸீதீsஜீ; இதனது இரத்தம் தோய்ந்தமுடிவானது, இந்த நூற்றாண்டிற்கு ஒருதுன்பகரமான ஒத்த தன்மையின்பேறாக அளித்துள்ளது. இது சீன குத்துச்சண்டைக்காரர்களின் காலனித்துவ எதிர்ப்புகிளர்ச்சியை அடக்குவதுடன் ஆரம்பமாகியது.இந்த நூற்றாண்டு பால்கனை பெரும்ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஒரு புதியகாலனித்துவக் குட்டி அரசு அந்தஸ்துக்குகீழிறக்கும் ஒரு யுத்தத்தோடு நிறைவுபெறுகின்றது.

அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும்சேர்பியாவிலும் கொசோவாவிலும் ஏற்படுத்தியபேரழிவினை முழு அளவில் மதிப்பிடுவது தற்போதைக்கு கஷ்டமானது. சேர்பியர்களின் இராணுவதரப்பிலான மரணங்கள் 5000 என மதிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த இராணுவத்தினரின் எண்ணிக்கைஇதைவிட இரண்டு மடங்காகும் என எண்ணப்படுகின்றது. குறைந்தது 1500 பொதுமக்கள்கொல்லப்பட்டுள்ளனர். ஏறக்குறைய35000 தடவைகள் அமெரிக்க விமானப்படைவிமானங்கள் அதனது ஐரோப்பிய சகாக்களுடன் சேர்ந்து யூகோசலாவியாவின் பரந்தஅளவிலான தொழில்துறை மற்றும் சமூககட்டமைப்புக்களை நாசமாக்கியுள்ளன.நேட்டோ மதிப்பீட்டின்படி அந்நாட்டின்எண்ணெய் வளங்களில் 57 வீதமானவை சேதமாக்கப்பட்டுள்ளன அல்லது நாசமாக்கப்பட்டுள்ளன.ஏறக்குறைய சகல பெரும் வீதிகளும் புகையிரதப்பாதைகளும் பாலங்களும் பெருமளவுக்குகுண்டு வீச்சுக்கு உள்ளாகியுள்ளன. நவீனநகர்ப்புற மையங்கள் பெரிதும் தங்கியுள்ளமின்சார ட்ரான்ஸ்போமர்களும் மத்தியமின்சார நிலையங்களும் தண்ணீர் வடிகட்டும்நிலையங்களும் இன்று, குண்டு வீச்சுக்களுக்குமுன்னைய அவற்றின் இயலளபில் ஒரு துளிஅளவிலேயேஇயங்கிக் கொண்டுள்ளன. ஆலைகளும்வேலைத்தலங்களும் நாசமாக்கப்பட்டதன்

காரணமாக பல இலட்சக் கணக்கானதொழிலாளர்கள் வாழ்க்கை வசதிகளைஇழந்துள்ளனர். பல பெரும் மருத்துவமனைகள்குண்டுவீச்சினால் பாரிய சேதங்களுக்குஉள்ளாகியுள்ளன. 100000 மாணவர்கள் கல்விகற்ற பாடசாலைகள் ஒன்றில் சேதமடைந்துள்ளன அல்லது நாசமாக்கப்பட்டுள்ளன.

நேட்டோவினால் அழிக்கப்பட்டவற்றைதிரும்பக் கட்டி யெழுப்புவதற்கு 50 பில்லியன்டாலர்களுக்கும் 150 பில்லியன் டாலர்களுக்கும்இடையே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச எண்ணிக்கை கூட யூகோசலாவியாவில் இருக்கின்ற வளங்களுக்குப் பெரிதும்அப்பாற்பட்டவையாக உள்ளன. இந்தவருடத்தில் யூகோசலாவியாவின் மொத்ததேசிய உற்பத்தி 30 வீதத்தினால் வீழ்ச்சி காணும்என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்தஇரண்டு மாதங்களிலும் நுகர்வு செலவுமூன்றில் இரண்டு பங்கினால் வீழ்ச்சி கண்டுள்ளது.பொருளாதார ஆராய்ச்சியாளர்களின்கணிப்பின்படி வெளிநாட்டு உதவியில்லாதுயூகோசலாவியா 1989ல் அடைந்த அற்பசொற்ப பொருளாதார செழிப்புமட்டத்தை எட்டுவதற்கு கூட 45 ஆண்டுகள்தேவைப்படும்.

யூகோசலாவியாமீதான குண்டு வீச்சானது ஏகாதிபத்தியத்துக்கும்சிறிய நாடுகளுக்கும் இடையேயான நிஜஉறவுகளை அம்பலப்படுத்தியுள்ளது.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஹொப்சன்,லெனின், லக்சம்பேர்க், ஹில்பார்டிங் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பெரும் குற்றச்சாட்டுக்கள் சமகால பத்திரங்களை வாசிப்பது போல்உள்ளன. பொருளாதார ரீதியில் சிறிய நாடுகள்பெரும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் கடன்வழங்கும் ஏஜன்சிகளதும் நிதி அமைப்புக்களதும்கருணையில் தங்கியுள்ளன. அரசியல் யாதார்த்தத்தில் தமது சுதந்திர நலன்களை ஊர்ஜிதம் செய்யஎடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும்பேரழிவு நிறைந்த இராணுவப் பதிலடி தாக்குதல்ஆபத்தைக் கொணரும். சிறிய நாடுகள்அதிகரித்த வேகத்தில் அவற்றின் தேசிய இறைமைகளைந்து எறியப்படவும் வெளிநாட்டுஇராணுவ ஆக்கிரமிப்பினை ஏற்றுக் கொள்ளவும்அதன் ஆட்சி முறைக்கு இணங்கிப் போகவும்சொன்னவற்றை எல்லாம் நடைமுறையில்செய்யவும் தள்ளப்படுகின்றன. இவைமுக்கியமாக காலனித்துவ பண்பைக் கொண்டவை. 1940களின் கடைப்பகுதியிலும் 1950களிலும் 1960களிலும்இருந்துவந்த பழைய காலனித்துவ சாம்ராஜ்யங்கள் தகர்த்து எறியப்பட்டமையை சமகாலநிகழ்வுகளின் வெளிச்சத்தில் பார்க்கும்போதுஏகாதிபத்திய வரலாற்றில் பெருமளவுக்குஒரு தற்காலிக நிகழ்வாகவே கொள்ளவேண்டியுள்ளது.

யூகோசலாவியாமீதான தாக்குதலை ஒரு யுத்தத்தைக்காட்டிலும் ஒரு பெரும் மனிதப் படுகொலையாகவே பெரிதும் சரியான முறையில் வரைவிலக்கணம்செய்யமுடியும். ஒரு யுத்தம் எதிர்த் தாக்குதலைக் குறித்து நிற்கின்றது. அதில் இருதரப்பினரும்குறைந்தபட்சம் கணிசமான அளவு ஆபத்துக்குஉள்ளாக நேரிடுகின்றது. வரலாற்றில் என்றுமேபோட்டியிடும் சக்திகளுக்கிடையே ஒருஇராணுவ மோதுதலில் இவ்வளவு பெரும்சமத்துவமின்மை நிலவியது கிடையாது. போலந்து,ஒல்லாந்து, நோர்வே மீதான ஹிட்லரின்இரத்தம் தோய்ந்த ஒரு தலைப்பட்சமானதாக்குதல்களில் கூட ஜேர்மன் படைகள்கணிசமான அளவு ஆபத்துக்கு உள்ளாகின.அண்மைய யுத்தத்தில் அமெரிக்காவுக்குஅந்த இராணுவ ஆபத்து அம்சம் அடியோடுஇல்லாது போயுள்ளது. ஆகாயத்தில்தீர்க்கப்படும் ஒரு வேட்டுக்குக் கூடஒரு உயிரிழப்புத் தன்னும் இல்லாது நேட்டோவிமானிகளும் கணனி மயமாக்கப்பட்ட ஏவுகணைஏவும் திட்டத்தின் இயக்குனர்களும் யூகோசலவாக்கியாவுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியுள்ளனர்.

எதிர் எதிரான பக்கங்களுக்கு இடையேஇராணுவ வளங்களில் இத்தகைய சமபலமற்றநிலை இருந்து கொண்டிருப்பது இந்த யுத்தத்தின்ஒரு தீர்க்கமான பண்பாகும். இருபதாம்நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்திய சக்திகள்கொண்டிருந்த பொருளாதார வளங்கள்அவர்களின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தைஉத்தரவாதம் செய்தன. அது மேலாதிக்கம்கொண்ட இராணுவ சாதக நிலையாகமாற்றப்பட்டது. இந்த அனைத்துலகஅமைப்பினுள் அமெரிக்கா முக்கிய ஒடுக்கும்ஏகாதிபத்திய நாடாக தோன்றியுள்ளது.தன்னியக்க ஏவுகணைகளின் அரங்கில் தனதுதொழில் நுட்ப மேலாதிக்கத்தை பயன்படுத்திசண்டித்தனம் செய்யவும் அச்சுறுத்தவும்விரும்பினால் அதன் பாதையில் எதிர்ப்படும்சிறிய மற்றும் குறைந்த அபிவிருத்தி அடைந்தநாடுகளை தரைமட்டமாக்கும்.

இராணுவநிலைப்பாட்டில் இருந்து நோக்கும்போது அமெரிக்காவின் யுத்தத் தயாரிப்புஇயந்திரத்தின் பயங்கரமான இயலளபைஇந்த குண்டு வீச்சு பிரச்சாரம் எடுத்துக்காட்டியுள்ளது. இந்த அரசுக்கு ஆயுதங்களைவிநியோகிக்கும் ஒப்பந்தக்காரர்கள்தமது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டுள்ளனர்.பென்டகன் பாவித்து வந்த ஆயுதங்களுக்குப்பதிலாக புதிய ஆயுதங்களைக் கொள்வனவுசெய்யும்போது. அதனால் பெருக்கெடுக்கும்கொள்வனவுக் கட்டளைகளின் மூலம்கிடைக்கப்போகும் வருமானப் பெருக்கெடுப்பையிட்டு பெரும் எதிர் பார்ப்புக்களைகொண்டிருந்தனர். ஆனால் சேர்பியாஅடிபணிந்து போனமை அமெரிக்காவுக்குபெரும் இழப்புக்களைக் கொண்ட ஒருவெற்றியாகும். அமெரிக்கா பால்கனில்அதன் குறுங்கால இலக்குகளை அடைந்துள்ளது.ஆனால் இதனை ஒரு நீண்டகால பிரமாண்டமானஅரசியல் இழப்புக்கள் மூலமே அடைந்துள்ளது.யூகோசலாவியாவில் தான் ஏற்படுத்தியபேரழிவுகளை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகக் காட்டும் பெரும் பலத்த பிரச்சாரஇயக்கங்களுக்கு மத்தியிலும் அமெரிக்காதொடர்பான அனைத்துலக அபிப்பிராயம்ஈடு செய்ய முடியாத விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்துஉருவான அரசியல் குழப்ப நிலைமையின்கீழ் அமெரிக்காவின் பெருமை: இரண்டாம்உலக யுத்தத்தின் பின்னைய அதன் மகத்தானஆண்டுகளின் பின்னர் கண்டிராத அளவுக்குவளர்ச்சி கண்டது. அமெரிக்காவின், `ஜனநாயக``மனிதாபிமான` பாத்திரம் பற்றிய பிரமைகள்மிகுதியாயின.

இந்த தசாப்த காலத்தில்பெரும் மாற்றங்கள் இடம் பெற்றுவிட்டன.ஒரு பாதுகாப்பற்ற எதிரிக்கோ அல்லதுமற்றொரு எதிரிக்கோ எதிரான தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் (Cruisemissile) பெருவாரியான வெகுஜனங்களுக்கிடையே பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தத்தூண்டியுள்ளன. அமெரிக்கா தனது நலன்களைஅடையும் பொருட்டு எதையும் செய்யக்கூடிய ஒரு ஈவிரக்கமற்றதும் ஆபத்தானதுமானகுண்டனாக இனங்காணப்பட்டுள்ளது.சீனத் தூதரகத்தின் மீதான குண்டு வீச்சின் பின்னர்பீக்கிங் வீதிகளில் வெடித்த ஆத்திரமானது வெறுமனேசீன ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் பிரச்சாரத்தினதும்தூண்டுதலினதும் பெறுபேறாக உருவானவைஅல்ல.

மாறாக பெல்கிரேட்டில் இடம்பெறுபவை அடுத்து வரும் ஒரு சில வருடங்களில்பீக்கிங்கினுள்ளும் இடம்பெறலாம் என்பதைபரந்த அளவிலானோர் புரிந்து கொண்டதால்ஏற்பட்டதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்தந்திரம் கொண்ட பல பிரதிநிதிகள், அமெரிக்காவின்அனைத்துலக மதிப்பு சீரழிந்து போவதானதுஅத்துடன் ஒரு பாரதூரமான அரசியல்விலையையும் கொணரும் என அச்சுறுத்தினார்கள். நேட்டோவின் நிபந்தனைகளை மிலோசவிக்ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்திகள்வெளியானதைத் தொடர்ந்து ஏபிசி செய்திசேவையான `நைட் லைனில்` இடம் பெற்றஒரு வட்டமேசை கலந்துரையாடலில்பேசிய மாஜி இராஜாங்க செயலாளர்லோரன்ஸ் ஈகிள்பேர்க் தெரிவித்ததாவது:``ஆசனத்தில் இருந்து கொண்டு பொத்தானைஅழுத்தும் ஒரு குண்டனாக உலகின் ஏனையபகுதியினர் எம்மை நோக்கச் செய்துள்ளோம்.அங்கு பொது மக்கள் கொல்லப்படுகின்றார்கள். நாம் ஏவுகணை செலவைத் தவிர வேறொன்றையும் செலுத்தவில்லை. எதிர்வரும் வருடங்களில்உலகின் ஏனைய பகுதியினரைக் கையாளும்போது எம்மைச் சுற்றி வட்டமிடப் போகின்றது.``

நேட்டோ கூட்டில் உள்ளவர்களுக்குஇடையேயும், அமெரிக்காவின் அனைத்துலகஆவல்களையிட்டும் அதற்கு தேவையானதைப்பெற்று கொள்ள சகல விதி முறைகளையும்கையாளும் அதன் விருப்பத்தையிட்டும்ஒரு பதட்டம் நிலவுகின்றது. ஐரோப்பியஜனாதிபதிகளும் பிரதமர்களும் அமெரிக்காவின்எதிரில் விசுவாசமான முறையில் மண்டியிட்டுஉறுதியான நட்புறவை பகிரங்கமாகபிரகடனம் செய்து கொண்டுள்ளனர்.ஆனால் அந்தரங்கமான முறையில் தத்தமக்குஇடையே சி.ஐ.ஏ. அமைப்பினால் உளவுபார்க்கப்படாதது என எண்ணும் `பாதுகாப்பு` அறைகளினுள் அமெரிக்கா அடுத்த தாக்குதலைஎங்கு நடத்தப் போகின்றது? யாருக்குஎதிராக? என்பதையிட்டு ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் நலன்கள் அமெரிக்காவின்நலன்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? அது எப்போதுநடக்கும்? கடந்த ஆண்டின் டைம், நியூஸ்வீக்சஞ்சிகைகளின் முன்பக்க அட்டைகள் சதாம்ஹுசேனின் கோரத் தோற்றங்களைக்கொண்ட புகைப் படங்களுடன் வெளிவந்தன.இந்த ஆண்டு சுலபோடான் மிலோசவிக்கின்படங்கள் இடம்பெற்றன. அடுத்த வருடம்அவர் யாராக இருப்பார்? புதிய அனைத்துலகவில்லனாக சி.என்.என். தொடர்புச் சாதனம்பிரகடனம் செய்யப் போகும் புதிய நூற்றாண்டின் முதல் ஹிட்லர் யார்?

நேட்டோவின் ஒருமைப்பாட்டை பிரகடனம்செய்ததைக் காட்டிலும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது, யூகோஸ்லாவியா அடிபணிந்துபோன அதே நாளன்று ஐரோப்பியநாடுகளின் 15 தலைவர்கள் ஐரோப்பியயூனியனை ஒரு சுதந்திரமான இராணுவசக்தியாக பரிணாமம் செய்வோம் எனஅறிவித்ததேயாகும். அவர்கள் தமது உத்தியோகப் பூர்வமான அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டனர்: ``நேட்டோ அமைப்பின் நடவடிக்கைகளுக்குகுந்தகம் ஏற்படாத வகையில் அனைத்துலகநெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு(ஐரோப்பிய) யூனியனுக்கு கணிசமான அளவுஇராணுவப் படைகளின் உதவியுடன் கூடியதும்சுயேச்சையாக செயற்படக் கூடியவல்லமையையும் அவற்றை பயன்படுத்தும்,தீர்மானம் செய்யும் சாதனங்களையும்அங்ஙனம் செய்யும் தயார் நிலையையும்கொண்டிருக்க வேண்டும்.`` இந்த அறிக்கையின்பின்னணியில் ஐரோப்பிய முதலாளித்துவம்அமெரிக்காவுடன் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் - அதாவது உயிரைக் காக்கும் வல்லமையானதுதமது அனைத்துலக நலன்களைக் காப்பதில்வெற்றிகொள்ளக் கூடிய இராணுவ சக்தியைச்சார்ந்துள்ளது. புவியியல் அரசியல் மூலோபாயசாதகமான நிலைமைகளையும் பொருளாதார நலன்களையும் அடையும் பொருட்டுஇராணுவத்தை கையாளும் இயலளவைஅமெரிக்கா மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்பது ஐரோப்பிய முதலாளிவர்க்கத்திற்கு சகிக்கமுடியாத ஒன்றாகும்.யூகோசலாவியாவுக்கு எதிரான தாக்குதலைதொடர்ந்து பெரும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையேயான போட்டி ஒரு வெளிப்படையான இராணுவ கோலத்தை எடுத்துள்ளது.

1999-ம் ஆண்டின் பால்கன் யுத்தம் கடந்தகாலமனித நேயத்தின் முறிவை பிரதிநிதித்துவம் செய்தலில்இருந்து விடுபடுவதற்கு பதிலாக கடந்தகாலத்தின் பெரும் உயிராபத்தான பண்புகளைத் திரும்பவும் உயிர்பெற்றெழச் செய்வதைக்குறித்து நிற்கின்றது. அந்த இலட்சணம் என்ன?பெரும் வல்லரசுகள் மூலோபாய நலன்களுக்கான வேலை என்ற பெயரில் சிறிய நாடுகளுக்குஎதிராக பெருமளவிலான இராணுவ பலத்தின்அம்மணமான பிரயோகத்தை சட்டரீதியானமுறையில் நியாயப்படுத்துதல், தேசிய இறைமையின்அடிப்படைக் கொள்கையை சிடுமுஞ்சித்தனமாகமீறுதல், ஒரு புதிய உலக யுத்தத்திற்கு கணக்குப்போடும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயானகோபதாபங்களை மறுமலர்ச்சி பெறச்செய்வதை குறித்து நிற்கின்றது. இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதலை நீட்டிய ஏகாதிபத்திய பிசாசுகள்அனைத்துலக முதலாளித்துவத்தினால்ஓட்டிக் கலைக்கப்படவில்லை. மனித இனம்இருபத்தோராம் நூற்றாண்டினுள் நுழையும்நிலையிலும் அவை இன்னமும் அதை வட்டமிட்டுக்கொண்டுள்ளன.

 

வெகுஜனத் தொடர்புசாதனங்களும் யூகோசலாவியாவுக்குஎதிரான யுத்தமும்

 

சகல யுத்தங்களிலும்பிரச்சாரம் ஒரு தீர்க்கமான பாத்திரத்தைவகிக்கிறது. நாசிகளின் பிரச்சாரத் தலைவரானஜோசப் கோயபெல்ஸ் ஒரு முறை பின்வருமாறுகூறினார்: ``புதினப் பத்திரிகைகள் எனப்படுபவைஅரசாங்கத்துக்கு பிடித்த முறையில் இராகம்இசைக்கும் ஒரு மாபெரும் இசைச்சுருதிப் பலகை``என்றாா். ஆனால்இன்றைய பிரச்சாரம் இரண்டாம் உலகயுத்தத்தின் போது இருந்ததைக் காட்டிலும்நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குதொழில்நுட்ப ரீதியில் தீவிரம் கண்டுள்ளது; தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர, பொழுதுபோக்கு தொழில்களினால் கையாளப்படும்புத்தியை மழுங்கடிக்கச் செய்யும் சகலதொழில் நுட்பங்களும் ஒரு பிரமாண்டமானஇரசிகர்களுக்கு யுத்தத்தை ``சந்தைப்படுத்துகையில் படுமோசமான அயோக்கியத்தைகைவரப் பெறுகின்றன. இந்த முழு அயோக்கியத்தனமான வர்த்தகமும் பொதுமக்களைத்தடுமாறச் செய்யும் பொருட்டு கையாளக்கூடிய ஏதோ ஒரு மனவெழுச்சியை பலம்வாய்ந்த முறையில் திணிப்பதிலேயே தங்கியுள்ளது.1998-99ல் ஈராக்குக்கு எதிரான குண்டு வீச்சின்போதுபயன்படுத்தப்பட்ட வாக்கியம், ``பேரழிவுஆயுதங்கள்`` என்பதாகும். யூகோசலாவியாமீதான தாக்குதலுக்கு ஆதரவாக பொதுமக்கள் அபிப்பிராயத்தை அணிதிரட்டும் பால்கனின்சகல முரண்பாடுகளும், சிக்கல்களும்,சந்தேகங்களும் தினமும் வாந்தியெடுக்கப்பட்டுதனியொரு வாக்கியமாக கொணரப்பட்டது:``இனச் சுத்திகரிப்பு``. அமெரிக்க மற்றும்அனைத்துலக பொதுமக்கள் ஓயாதவிதத்தில் ஒரே உறுதியான செய்திக்குப்பலியாக்கப்பட்டனர்: யுத்தம் பரந்தளவிலானகொலைகளிற்கு முடிவு காண இடம்பெறுகின்றதுஎன்று கொசோவாவில் இருந்து அல்பேனியன்இனக்குழு அகதிகள் பெருமளவில் வெளியேறும்வீடியோ படங்கள் காட்டப்பட்டன.தமக்கு காட்டப்படுவதன் வரலாற்று,அரசியல், அடிப்படை சம்பந்தமாகபார்வையாளர்கள் முற்றிலும் இருட்டில்தள்ளப்பட்டனர். குண்டுவீச்சு ஆரம்பமாகும்வரை உலகின் ஏனைய பாகங்களில் அளவானமோதுதல்கள் இடம்பெறும் இடங்களுடன்ஒப்பிடுகையில் கொசோவாவில் உயிரிழப்புசார்பு ரீதியில் சிறிதானதென ஒதுக்கித் தள்ளப்பட்டது. சேர்பியன் இராணுவத்தினாலும் அரைஇராணுவ படைகளாலும் திட்டவட்டமாககொல்லப்பட்ட கொசோவிய அல்பேனியன்மக்களின் நிஜ எண்ணிக்கை 100,000 அல்லது 250,000ஆகும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக் களத்தினாலும் நேட்டோ பேச்சாளர்களாலும் காட்ட எடுக்கப்பட்ட முயற்சியைநிரூபிக்க எந்த விதமான ஆதாரமும் காட்டப்படவில்லை மற்றும் இவற்றுக்கும் யதார்த்தத்துக்கும்இடையே எது விதமான உறவும் கிடையாது.

கொசோவா மோதுதல்களுக்கும்(ஹிட்லரின் மனிதப் பயங்கர) பெரும் கொலைகளுக்கும் இடையேயான ஒப்பீடு ஒழுக்கக்கேடானதாக விளங்கியது. உலக நீதிமன்றம்இறுதியாக அரசியல் ஊக்குவிப்பின் பேரில்மிலோசெவிக்குக்கு எதிராக குற்றப்பத்திரிகையைவெளியிட்ட வேளையில் அவர் உத்தியோகபூர்வமாக 391 மரணங்களுக்கு பொறுப்பாளியாக்கப்பட்டார். மிலோசெவிக் ஒரு மனிதாபிமானம்கொண்டவர் என எவரும் வாதிடமாட்டார்கள். ஆனால் அவர் இழைத்த மனிதப்

படுகொலைகளைக் காட்டிலும் அதிகமான கொலைகளைச்செய்தவர்கள் இருந்து கொண்டுள்ளனர்.நோபல் சமாதானப் பரிசை வெற்றிகொண்ட அமெரிக்காவின் ஹென்றி கீசிங்கரும்இதில் அடங்குவார். இந்த முழுப் பிரச்சாரஇயக்கமும் சிலவேளைகளில் அதனது வங்குரோத்தினாலும் பொய் புரளியினாலும் கவிழ்ந்துகொட்டும் நிலைக்குச் சென்றது. ஆனாலும்கிளின்டன் ஆட்சியாளர்களினால் முன்வைக்கப்பட்டஉத்தியோகபூர்வமான மனித நேயம்எனப்படுவதற்கு அப்பால் யுத்தத்துக்குவேறுகாரணங்கள் இருந்து வந்ததைஅமெரிக்க வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் யூகோசலாவியா மீதான குண்டுவீச்சைப்பற்றி தயங்கித் தயங்கி கேள்வி எழுப்பியவர்கள்கூட ஒப்புக் கொண்டது கிடையாது.

இந்த மோதுதலின் வரலாற்றுப் பின்னணியைஎந்த விதத்தில் தன்னும் ஆய்வு செய்ய வெகுஜனத்தொடர்புச் சாதனங்கள் முயற்சி செய்யவில்லை. சர்வதேச நாணய நிதியத்தினால் யூகோசலாவியா மீது திணிக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கைகளுக்கும் இனவாத பதட்டநிலைக்கும் இடையேயான உறவு பற்றியவிடயங்கள் பகிரங்கமான முறையில் கலந்துரையாடப்படவில்லை. அல்லது 1990களின் ஆரம்பகாலத்தில் சிறப்பாக சுலோவியன், குரோஷியன்,பொஸ்னியன் சுதந்திரத்தை அங்கீகரிப்பதுதொடர்பாக, பால்கனில் உள்நாட்டுயுத்தம் வெடிப்பதற்கு ஜேர்மன், அமெரிக்கன்கொள்கைகளின் பேரழிவு மிக்க பங்களிப்புக்கள்பற்றி எந்தவிதமான தீர்க்கமான மீளாய்வுசெய்யப்பட்டதும் கிடையாது. 1918ம் ஆண்டில்இருந்தே இருந்து வந்த ஒரு அரசானயூகோசலாவியா சடுதியாகக் கலைக்கப்பட்டதால் உருவான அரசியல். பொருளாதாரவிளைவுகள் சம்பந்தமாக வெறுப்படைவதற்குசேர்பியர்களுக்கு ஏதேனும் காரணங்கள்இருந்தனவா என்பது விவாதிக்கப்படவில்லை.ஒரு புறத்தில் குரோஷியா சுலோவினியோ,பொஸ்னியாவின் பிராந்திய ரீதியான கோரிக்கைகளுக்கும் இனக்குழுக் கொள்கைகளுக்கும் மறுபுறத்தில், இவை சம்பந்தமாக சேர்பியர்களுக்கும்இடையேயான மனப்பாங்கு தொடர்பாகஅமெரிக்காவுக்கும் மேற்கத்தைய வல்லரசுகளுக்கும்

இடையேயான துலாம்பரமானவேறுபாடுகள் தொடர்பாக எதுவிதமானவிளக்கமும் அளிக்கப்படவில்லை. உதாரணமாக,1995ல் குரோஷியா, கிரஜினா மாகாணத்தில்வாழ்ந்த சேர்பிய இனத்தவர்களைஅடித்துக் கலைத்து நடத்திய இனச் சுத்திகரிப்புக்கு அமெரிக்கா மும்முரமாக ஆதரவு அளித்தது.இதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை.

ஒரு பொது விதியாக சேர்பியன் அரசாங்கத்தின்நடவடிக்கைகளில் மிகவும் சிறிய அளவில் நியாயமானவை கூட வெகுஜனத் தொடர்புசாதனங்களால்நசுக்கப்பட்டன. நனவான முறையில்பொய்மை படுத்தப்பட்டதற்கானமிகவும் கேவலமான உதாரணமாக,ரம்புஜேயில் (Rambouillet) நடைபெற்றவை சம்பந்தமாக வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் நடந்துகொண்ட விதத்தைக்கொள்ளலாம். ரம்புஜேயில் ஒருஉடன்படிக்கையோ அல்லது பேரம்பேசலோ இடம் பெறாத போதிலும்அதன் செயற்பாட்டுடன் பரீட்சயமானவர்கள்அதைப் புரிந்து கொண்டு இருந்தார்கள்என்பதைக் கணக்கில் எடுக்காமலேயேமுதலில் சேர்பியர்கள் ரம்புஜேயில்உடன்படிக்கையை நிராகரித்தது பற்றிதொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்கள்.சேர்பியர்கள் பேரம் பேசப்படாதஒரு காலக் கெடுவையே நிராகரித்திருந்தார்கள்.

இன்னும் படுமோசமான நேர்மையீனம்என்னவெனில், அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய,வெகுஜனத் தொடர்பு சாதனங்கள்யூகோசலாவியா மீதான தாக்குதலுக்குஎதிரான பொதுஜன அபிப்பிராயத்துக்குதீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தீர்க்கமானதகவல்களை ஒழித்து மறைத்து வந்தனர்.இந்த ``உடன்படிக்கை`` நேட்டோ படைகள்கொசோவா ஊடாக மட்டுமல்லாதுயூகோசலாவியாவின் சகல பகுதிகள் ஊடாகவும்பயணம் செய்ய முடியும் என்பதை சேர்பியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உபபட்டியலும் இணைக்கப்பட்டதாகக்குறிப்பிடப்பட்டதை வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் அறிக்கை செய்யாது ஒதுக்கிவிட்டன. இந்தச் சரத்தின் முக்கியத்துவம்வருமாறு: அமெரிக்கா திட்டமிட்டு மிலோசெவிக்கை ஒரு காலக்கெடுவுடன் எதிர்கொண்டது.அவர் இதை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம்இல்லை என்பதை அறிந்து கொண்டிருந்தது.இந்தத் தகவல் இணையத்தில் ஒழுக்கெடுத்ததன்பின்னரும் கூட பொதுவில் வெகுஜனத் தொடர்புச்சாதனங்களால் இது புறக்கணிக்கப்பட்டது.இதனது ஜூன் 5 பதிப்பு வரை நியூயோக்டைம்ஸ் இறுதியாக அறிக்கை செய்ததோடுஒரு தீர்க்கமான இணைப்பைக் கூட மேற்கோளாகக் காட்டியிருந்தது.

கொசோவாவில்இருந்து சேர்பியப் படைகளை வாபஸ்பெறச்செய்ய மிலோசெவிக்கை இனங்காணச்செய்வதில் மிலோசெவிக்கைச் சந்திக்கச்சென்ற (ரஷ்ய பிரதிநிதி) வர்நோடிமினும் நேட்டோபிரதிநிதி அக்டிசாரிடியும் மேலே குறிப்பிட்டவிசேட இணைப்புக்களை நீக்க இணக்கம்கண்டமை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஏகாதிபத்தியமும் பால்கனும்

வெகுஜனத்தொடர்புச் சாதனங்கள் இனச் சுத்திகரிப்புயுத்தத்தில் தொங்கிக் கொள்வது உக்கிரம்கண்ட அளவுக்கு அது யூகோசலாவியாவுக்குஎதிரான தமது தாக்குதலைத் தொடுக்ககிளின்டன் ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுக்குகாரணமாக பெரிதும் தீர்ககமானதும்அத்தியாவசியமானதுமான காரணிகளைஆய்வு செய்வதற்கு குறுக்கே நின்று கொண்டன.துரதிர்ஷ்டமான முறையில் பால்கன் வரலாறுதொடர்பானதும் அனைத்துலக அரசியல்தொடர்பானதுமான அமெரிக்க கல்விசார்நிபுணர்கள், ஒரு சில மதிப்புக்குரிய விதிவிலக்கானவர்களை தவிர பிரச்சார இயக்கத்தை பகிரங்கமாகசவால் செய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. உண்மையில் அவர்கள் பால்கன் பிராந்தியத்தினுள்கணிசமான அளவு சடரீதியான நலன்கள்எதுவும் இல்லை என்ற கருத்துரையைதள்ளுபடி செய்துவிட்டு, அமெரிக்க அரசாங்கத்தின் மனித நேய பம்மாத்துக்கு ஒரு புத்திஜீவிநம்பகத் தன்மையை வழங்கினர்.

இந்தப்பிராந்தியம் தொடர்பாக செய்யும்ஒரு ஆழமற்ற ஆய்வு கூட இது பொய்யானதுஎன்பதை அம்பலப்படுத்தும். கொசோவாசந்தைப்படுத்தக் கூடிய வளங்களைப்பெருவாரியாகக் கொண்டுள்ளது. இறுதியில்இந்த விடயம் தொடர்பான தனது நீண்டகாலமெளனத்தை உடைத்துக்கொண்டு அமெரிக்கஇராஜாங்கத் திணைக்களத்தின் தூணானநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ``பரிசு: கொசோவாவின் பெறுமதி வாய்ந்த சுரங்கங்களையார் கட்டுப்படுத்துவது என்பதே விவகாரம்``என்ற தலைப்பில் 1999 ஜூன் 2ம் திகதி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

``கொசோவாவை பிரித்துஎடுப்பது சம்பந்தமாக ஒரு தொகைஉத்தியோகபூர்வமற்ற திட்டங்கள் வரையப்பட்டன. முக்கியமான வடக்கு சுரங்கப் பிராந்தியத்தையார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வியைசகலரும் எழுப்புகின்றனர். குண்டு வீச்சினால்புதிய உற்பத்தி புள்ளி விவரங்களை பெற்றுக்கொள்வது கடினமாகியுள்ளது. நிபுணர்களின்கூற்றுப்படி இந்த வளங்களுள் பெருந்தொகையான நிலக்கரி சுரங்கங்களும், நிக்கல், ஈயம்மற்றும் கனிப் பொருட்களும் அடங்கும்``என இக்கட்டுரை ஆரம்பித்திருந்தது.

ஆனால் இத்தகைய வளங்களைக் கொண்டிருந்ததுதான் யுத்தத்துக்கான போதிய காரணமாவிட்டதாக&ஸீதீsஜீ; எண்ணிவிட முடியாது. தாக்குதலுக்குஇலக்கான நாட்டினுள் ஏதோ சில மூலப்பொருட்கள் இருப்பது மட்டும் யுத்தத்துக்கானகாரணமாகிவிட்டதாக கொள்வது சிக்கலானமுலோபாய மாறிகளை (Strategic Variables) தேவைக்கு அதிகமாக இலகுபடுத்துவதாகஇருக்கும். எவ்வாறெனினும் சடநலன்களுக்கானகருத்துப்பாடு ஒரு தொழிலினது அல்லதுதொழில் தொகுதியின் உடனடி நிதி நலன்களுக்குஅப்பால் செல்கின்றது. ஏகாதிபத்திய நாடுகளின்நிதி, தொழில் பிரமுகர்கள் தமது சடநலன்களைஅனைத்துலக புவிசார் அரசியல் கணிப்புக்களின்கட்டுமானத்தின் உள்ளேயே தீர்மானிக்கின்றனர்.தட்டிப் பறித்துக் கொள்ளக் கூடிய வளங்கள்சம்பந்தப்பட்ட விதத்தில் நிஜமான பெறுமதியற்றநிலத்துண்டு என்றாலும் அதன் புவிசார்அமைவின் காரணமாக அல்லது அனைத்துலகஅரசியல் உறவுகள், பொறுப்புக்கள்காரணமாக மாற்றமடையும் காரணிகளினாலோ அளவிடமுடியாத பெறுமானங்களைக்கொண்ட ஒரு மூலோபாய சொத்தாகநோக்கக் கூடிய ஒரு நிலைமை தோன்றக்கூடும். முக்கியமாக பெரும் கற்பாறைகளைக்கொண்ட ஜிப்ரால்டர் அத்தகைய வகையிலானசொத்துக்களைக் கொண்டது. அத்தகையஅசாதாரணமான நிஜ மதிப்பைக் கொண்டவேறு பிராந்தியங்களும் உள்ளன. குறிப்பாகபாரசீக வளைகுடா போன்ற இவற்றைதமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளஎகாதிபத்திய வல்லரசுகள் எதுவும் செய்யலாம்.

பால்கன் எண்ணெய் சமுத்திரத்தில் மிதக்கவில்லை, அல்லது அது வெறும் சதுப்பு நிலமும்அல்ல. ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிஅரசியலில் ஒரு மூலோபாய முக்கியத்துவம்வாய்ந்ததாக இது உள்ளமை ஒரு நிலையானகாரணியாக விளங்குகின்றது. அதனது புவியியல்அமைவு காரணமாக என்றாலும் கூட,ஒன்றில் மேற்கு ஐரோப்பா கிழக்கு நோக்கிசெல்வதற்கான ஒரு தீர்க்கமான மையமாகஅல்லது தெற்கே ரூஷ்யாவினதும் (பின்னர்சோவியத் யூனியனதும்) விரிவாக்கத்துக்குஎதிரான ஒரு எல்லைக் காவல் பகுதி என்றவிதத்திலும் பால்கன் அனைத்துலக சமபலநிலையை ஏற்படுத்துவதில் ஒரு தீர்க்கமானபாத்திரத்தை வகித்தது. பால்கனில் இடம்பெற்றசம்பவங்கள் முதலாம் உலக யுத்தத்தைவெடிக்கச் செய்தது. ஏனெனில் 1914 ஜூலையில்சேர்பியாவுக்கு ஆஸ்திரியா - ஹங்கேரியினால்விடுக்கப்பட்ட காலக்கெடுவானது (85வருடங்களின் பின்னர் அமெரிக்கா நோட்டோகாலக் கெடுவின் நிழல்) பெரும் ஐரோப்பியஅரசுகளுக்கு இடையேயான உறுதியற்றசமபல நிலையை ஈடாட்டம் காணச்செய்ய அச்சுறுத்தியது.

இருபதாம்நூற்றாண்டு பூராவும் பால்கன் சம்பந்தமானஅமெரிக்காவின் மனப்பாங்கு பரந்தளவிலானஅனைத்துலக கணிப்புக்களின் மூலமே நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. முதலாம் உலகயுத்த காலத்தில் ஜனாதிபதி வூட்ரோ வில்சனின்தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சார்பானதீர்மானமானது பால்கன் மக்களின் தேசியஅபிலாசைகளை ஆஸ்திரிய ஹங்கேரிய முடியரசுக்குஎதிராக பயன்படுத்தும் பக்கச் சார்பானஉந்துதலால் தள்ளப்பட்டவை. உலகயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கானஒரு அடிப்படையாக வில்சனால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற 14 அம்சங்களில் ஒன்றுசேர்பியாவின் உரிமைகளுக்காக நின்று வந்தது.இது கடற்பிராந்தியத்துக்கான உரிமையையும்உள்ளடக்கி இருந்தது. (இது இப்போதுஅமெரிக்கா ஊக்குவித்து வரும் மொன்டனிக்ரின்பிரிவினைவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.) இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின்பின்னர் மார்ஷல் டிட்டோ தலைமயிலானபுதிய பெல்கிரேட் ஆட்சியாளர்கள் தொடர்பான அமெரிக்க கொள்கையைத் தீர்மானம்செய்வதில் சோவியத் யூனியனுடனான மோசமான எதிர்ப்புகள் ஒரு தீர்க்கமான காரணியாகவிளங்கின. 1948ல் ஸ்டாலினுக்கும் டிட்டோவுக்கும்இடையேயான ஒரு மோசமான மோதுதலானது, உலக விவகாரங்களில் யூகோசலாவியாவின்பாத்திரத்தை மதிப்பீடு செய்யும் வாஷிங்டனின்நடவடிக்கையில் பெரும் தாக்கத்தைஏற்படுத்துவதாக விளங்கியது. சோவியத்யூனியன் ஆட்டிரியாட்டிக் கடலின் ஊடாகமத்திய தரைக் கடல் பிராந்தியத்தினுள்(இதன் மூலம் தெற்கு ஐரோப்பாவினுள்ளும்மத்திய கிழக்கினுள்ளும்) விஸ்தரிப்பு நடவடிக்கைகளில்ஈடுபடுவதற்கு டிட்டோ ஆட்சியை ஒருதடையாக கருதி, அமெரிக்கா யூகோசலாவியாவின் ஐக்கியத்திற்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குமாக வக்காலத்து வாங்கி வந்தது.

சோவியத்யூனியன் கலைக்கப்பட்டமையானது பெல்கிரேட்டுடனான வாஷிங்டன் உறவுகளை மாற்றம்அடையச் செய்தது. சோவியத் விஸ்தரிப்புஅச்சுறுத்தல் இல்லாத ஒரு நிலையில் அமெரிக்காஒரு ஒன்றிணைக்கப்பட்ட யூகோசலாவியஅரசுக்காக வக்காலத்து வாங்கும்அவசியம் மேலும் இருந்து கொண்டிருப்பதாககாணவில்லை. அமெரிக்கக் கொள்கைகள்ஒரு தொகைப் புதிய அக்கறைக்குறியவிடயங்களைப் பிரதிபலித்தன. முதலாளித்துவசந்தைக் கொள்கைகளின் அடிப்படையில்முன்னைய சோவியத் யூனியனதும் கிழக்குஐரோப்பிய ஸ்டாலினிச ஆட்சிகளதும்

பொருளாதாரங்களை துரிதமாக புனரமைப்பு செய்வதில்அக்கறை காட்டின. ஆரம்பத்தில் சிறிதுதயக்கத்தின் பின்னர், அமெரிக்க கொள்கைத்திட்டமிடலாளர்கள் சோவியத் பாணியிலானஅதிகாரத்துவ ரீதியில் நெறிப்படுத்தப்பட்டபொருளாதாரங்களில் பெரும் பாத்திரம்வகித்த பழைய மையப்படுத்தப்பட்டஅரச அமைப்பை உடைத்து எறிவதன்மூலம் பொருளாதார தேசியமய ஒழிப்புக்கும்மேற்கத்தைய மூலதனத்தின் ஊடுருவலுக்கும்வாய்ப்பளிக்கும் என்ற கருத்துக்கு ஆதரவு

நல்கினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய ஐரோப்பிய சகாக்களும் யூகோசலாவிய பெடரேசனின் ஒருமைப்பாட்டை உடைத்து எறியும் கூச்சலில் இறங்கினர்.இது பெரிதும் இலகுவான விதத்தில் பழையபெடரேசனின் குடியரசுகளை உத்தியோகபூர்வமான முறையில் சுலோவினியா, குரோஷியா,பொஸ்னியாவுடன் தொடங்கி சுதந்திரமானஇறைமை கொண்ட அரசுகளாக அங்கீகரித்தது.இந்தக் கொள்கையின் பெறுபேறுகள்பேரழிவு மிக்கதாக இருந்தது. பால்கன்பிரச்சினையில் ஒரு பெரும் நிபுணரான பேராசிரியர்ராஜூ ஜி.சி. தோமஸ்

சுட்டிக்காட்டியுள்ளதுபோல்:

``சுலோவினியாவும் குரோஷியாவும்தன்னிச்சையான முறையில் சுதந்திரப்பிரகடனம் செய்து கொள்வதற்கு முன்னரும்அவை ஜேர்மனியினாலும் வத்திக்கானாலும்அதைத் தொடர்ந்து ஐரோப்பாவின்ஏனைய நாடுகளும் அமெரிக்காவும்அதை அங்கீகரித்தற்கு முன்னர் யூகோசலாவியாவில் பிரமாண்டமான உயிர்க் கொலைகள்இடம் பெறவில்லை. பொஸ்னியா அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னதாக பொஸ்னியாவில் பெருமளவிலானகொலைகள் இடம் பெறவில்லை. பழையயூகோசலாவிய அரசை கட்டிக் காத்திருந்தால் சகல கெடுதிகளும் குறைவானதாகஇருந்திருக்கும் என்பதை நிரூபித்திருக்கும்.பிரச்சினைகள் அங்கீகாரம் அல்லது அங்கீகாரத்துக்கான நெருக்குவாரத்துடனேயே ஆரம்பமாகின. முன்னைய யூகோசலாவியா அதனது

அயல்நாடுகளுக்கு எதிரான `ஆக்கிரமிப்பில்`ஈடுபட்டது கிடையாது. உண்மையில் யூகோசலாவியாவிலான நிஜ `ஆக்கிரமிப்பு` மேற்கத்தையநாடுகள் சுலோவினியாவையும் குரோஷியாவையும் அங்கீகரித்ததுடனேயே ஆரம்பமாகின.1918 டிசம்பரில் இருந்து சுயாதீனமான முறையில்உருவாக்கப்பட்டு இருந்து வந்த இருஅரசின் பிராந்திய ஒருமைப்பாடு துடைத்துஎறியப்பட்டது. 1991ல் புதிய அரசுகளை அங்கீகரிக்கும் கொள்கையானது நீண்ட காலமாகஇருந்து வந்த இறைமை கொண்ட சுதந்திரஅரசுகளை ஒழித்துக்கட்டும் ஒரு விதிமுறையைவழங்கியது. பல செல்வந்த, பலம்வாய்ந்தஅரசுகள் இந்த அங்கீகாரக் கொள்கையின்ஊடாக ஒரு இறைமை கொண்ட சுதந்திரஅரசை இதற்கு வெளியே தள்ளி வைக்கத்தீர்மானம் செய்யுமிடத்து இந்த அரசுதன்னைக் காத்துக் கொள்வது எப்படி?இந்த உருவிலான அனைத்துலக அரசஒழிப்பை தடை செய்யவோ, காக்கவோமுடியாது. உண்மையில் ஜேர்மனியின் தலைமையில்மேற்கத்தைய நாடுகளும் பின்னர் அமெரிக்காவும் அரச அங்கீகாரக் கொள்கையின்(!)ஊடாக யூகோசலாவியாவைத் துண்டாடின.``

சோவியத் யூனியன் கலைக்கப்பட்டமையால்ஏற்பட்ட அனைத்துலக மூலோபாயத்தாக்கங்கள் யூகோசலாவிய பெடரேசனைகாலைப்பதற்கான மற்றொரு ஊக்குவிப்புக்கான காரணத்தை அமெரிக்காவுக்கும்நேட்டோவுக்கும் வழங்கின. சோவியத்யூனியனின் வீழ்ச்சியினால் உருவாக்கப்பட்டஅதிகார வெற்றிடத்தைச் சுரண்டிக் கொள்வதில்அமெரிக்கா ஆர்வம் காட்டியது. தனதுஅதிகாரத்தை கிழக்கு நோக்கித் திட்டமிடுவதில்பழைய சோவியத் யூனியனின் புதிதாகச்சுதந்திரமடைந்த மத்திய ஆசியக் குடியரசுகளில்உள்ள பரந்த எண்ணெய், இயற்கை வாயுவளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது முக்கியமாக விளங்கியது. இந்தப் புதிய புவிசார்அரசியல் சுற்றாடலினுள் பால்கன் ஒருதவிர்க்க முடியாத மூலோபாய முக்கியத்துவம்பெற்றது. ஏகாதிபத்திய அதிகாரத்தைத்திட்டமிடுவதிலும் குறிப்பாக மத்திய ஆசியாவைநோக்கியதாக அமெரிக்கா அதை நடைமுறைக்கிடுவதிலும் ஒரு மூலோபாய முக்கியத்துவம்வாய்ந்ததாகியது. இங்குதான் அமெரிக்காவுக்கும் மிலோசேவிக் ஆட்சியாளர்களுக்கும்இடையேயான மோதுதலின் இறுதி மூலம்இருந்து கொண்டுள்ளது. உண்மையில் மிலோசேவிக்யூகோசலாவியாவில் ஒரு சந்தைப் பொருளாதாரத்தை ஸ்தாபிதம் செய்வதையோஅல்லது அதற்காக பெரும் ஏகாதிபத்தியவல்லரசுகளுடனான நடைமுறை உறவுகளைவிஸ்தரிப்பை எதிர்த்ததும் கிடையாது. மிலோசேவிக்கின்ஆரம்ப எதிர்பார்ப்புக்களுக்கு முரணானமுறையில் யூகோசலாவிய பெடரேசன்கலைக்கப்பட்டமை சேர்பியாவுக்குவாய்ப்பற்ற நிலைமைகளை உருவாக்கியது.

பால்கன் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியக்கொள்கைகள் சேர்பியாவை பலவீனமாக்கியதோடு பழைய பெடரேசனின் பல்வேறுபகுதிகளிலும் வாழ்ந்த முழு சேர்பியன் மக்களையும் ஆபத்துக்குள்ளாக்கிய மோசடியானஇரட்டைவேடம் என்பதை அங்கீகரிக்கும்பொருட்டு மிலோசேவிக்கின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு காட்டுவது அவசியம் அல்ல. ``இனச்சுத்திகரிப்பு`` எனப் பின்னர் அழைக்கப்பட்டதைஉள்ளடக்கிய குரோஷிய, பொஸ்னிய முஸ்லீம்இராணுவத்தின் நடவடிக்கைகள் முறையானதேசிய சுய பாதுகாப்பு நடவடிக்கைகளாகக்காண்பிக்கப்பட்டதோடு, சேர்பிய இனத்தவர்களின் அத்தகைய நடவடிக்கைகளைச்சகிக்க முடியாத அளவுக்கு அனைத்துலகஒழுங்குமுறையை மீறியதாகவும் பெருமளவுக்குநோக்கப்பட்டது. யூகோசலாவியாகலைக்கப்பட்டதன் தர்க்கவியல் புதியஅரச அமைப்பினுள் தனது தேசிய நலன்களைக்காக்க சேர்பியாவினால் எடுக்கப்பட்டசகல நடவடிக்கைகளையும் தீங்குடையதாகஆக்கியுள்ளது. சுலோவீனியாவும் குரோஷியாவும்பொஸ்னியாவும் அங்கீகரிக்கப்பட்டமையானதுயூகோசலாவியன் இராணுவத்தை ஏகாதிபத்திய``அனைத்துலக சமூகத்தின்`` கண்களின் எதிரில்புதிதாகச் சுதந்திரம் பெற்ற அரசுகளின்இறைமையையும் சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதாக உருமாற்றம் அடையச் செய்தது.பழைய கட்டமைப்பு அரசுகளில் எஞ்சியிருந்தவற்றின் பிராந்தியங்களுக்கு வெளியில் இருந்த சேர்பியன்சிறுபான்மையினரின் நடவடிக்கைகள் அவ்வாறேயூகோசலாவிய ஆக்கிரமிப்பு நடிவடிக்கைகளாக நோக்கப்பட்டது. பால்கன் குடாநாட்டைத்துண்டாடுவதன் பெறுபேறுகளையிட்டுசேர்பியன் வெறுப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய இலக்குகளுக்குத் தடையாகஇருக்கும் வரை, அது வாஷிங்டனின் கோபத்தைத்தூண்டி, சேர்பியாவுக்கு மறக்க முடியாதஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும்என்ற முடிவுக்கு வரத் தூண்டியது.

 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளரீதியானகுமுறலும் இரண்டாவது ``அமெரிக்க நூற்றாண்டும்``

 

யூகோசலாவியா மீதான தாக்குதல்நேட்டோவின் கூட்டுப்படைகளால் தொடுக்கப்பட்டது. ஆனாலும் யுத்தத்தை திட்டமிடுவதும்நடைமுறைக்கிடுவதும் அமெரிக்கத் தொழிலாகவிளங்கியது. பிரதமர் டொனி பிளேயர், ஓரளவுக்குசிரிப்புக்கிடமான முறையில் மார்க்கிரெட்தட்ச்சரை ஆள்மாறாட்டம் செய்துகொள்ள எடுத்த முயற்சி கூட, வெறும்சொல் அர்த்தத்தில் அமெரிக்காவைஇந்த யுத்தத்தில் ஆணையிடுபவராக விளங்கியதுஎன்பதை மூடிமறைக்க முடியாது போய்விட்டது. மார்ச் 24ம் திகதி யூகோசலாவியாவுக்குஎதிராக முதலாவது ஏவுகணைத் தாக்குதலில்ஈடுபட்டமை ஒருவருட காலத்துக்கும்குறைவான காலப்பகுதியில் அமெரிக்காஅந்நிய நாட்டில் குண்டுவீச்சை நடாத்தியநான்காவது தடவையாகும். இந்தவருடத்தின் ஆரம்பத்தில் சதாம் ஹ ூசேனின்``பேரழிவு நிறைந்த ஆயுதம்`` எனப்பட்டதற்குஎதிரான கொடூரமான ஈராக் எதிர்ப்புகுண்டுவீச்சு பிரச்சாரத்தில் கிளின்டன் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். உண்மையில் இப்போதுஈராக் மீதான குண்டுவீச்சு ஒரு நிரந்தரமானதும்அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின்வழக்கமானதுமான ஒரு

அம்சமாகிவிட்டது.கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் இராணுவநடவடிக்கைகளின் சாதனைகள், ஆச்சரியத்துக்கும் பயங்கரத்துக்கும் உரிய ஒரு புறநிலையானகாரணத்தைக் கொண்டுள்ளன. சரியானசமாதனத்துக்கான விருப்பை பிரகடனம்செய்து கொள்ளும் ஒரு நாடு, எப்பொழுதுபார்த்தாலும் அமெரிக்காவின் எல்லைகளுக்குஅப்பால் ஒன்று அல்லது மற்றொருஇராணுவ நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகஈடுபட்டுக் கொண்டுள்ளது. தரைத்தாக்குதலில்அல்லது குண்டுவீச்சில் அல்லது இவை இரண்டிலும்ஆறுக்கும் குறையாத மாபெரும் ஆக்கிரமிப்புக்களை அது நடத்தியுள்ளது. பனாமா (1989),பாரசீக வளைகுடா (1990-91), சோமாலியா(1992-93), பொஸ்னியா (1995), பாரசீக வளைகுடா11 (1999) கொசோவா யூகோசலாவியா(1999) இதற்கு மேலதிகமாக ஒரு தொகைஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.ஹெயிட்டி (1994), பொஸ்னியா (1995), மசிடோனியா(1995) கடந்த தசாப்தத்தில் அமெரிக்கஇராணுவ நடவடிக்கைகளின் நேரடியானஅல்லது மறைமுக பெறுபேறாக பல்லாயிரக்கணக்கானோர் உயிர்களை இழந்துள்ளனர்.அமெரிக்க அரசாங்கமும் வெகுஜனத்தொடர்புச் சாதனங்களும் இந்த ஒவ்வொருசம்பவங்களையும் கருணைமிக்க சமாதானநடவடிக்கைகளாக காண்பித்து வந்தன.யதார்த்தத்தில் அவை அதிகரித்துவரும்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவரீதியிலான பண்பின் புறநிலை வெளிப்பாடுகளாகும்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கும் 1990கள் பூராவும்அமெரிக்கா கடைப்பிடித்த அனைத்துலகநிகழ்ச்சி நிரலின் கர்வத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையே ஒரு நிச்சயமானதும்மறுக்க முடியாததுமான தொடர்புஇருந்து கொண்டுள்ளது. அமெரிக்க ஆளும்தரப்பில் கணிசமான பகுதியினர், அமெரிக்காவைஎதிர்த்து நின்று பிடிக்கக் கூடிய எந்த ஒருஎதிரியும் இல்லா நிலைமையானது இராணுவபலத்தின் பயன்பாட்டின் ஊடாக வரலாற்றில்முன்னொருபோதும் இல்லாத ஒரு நிலைமையைவழங்கும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தனர்.இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னைய``அமெரிக்க நூற்றாண்டு`` கனவுகள் சோவியத்யூனியனின் இருப்பினால் ஏற்படுத்தப்பட்டதாக்கங்களினால் அமெரிக்காவின் பூகோளரீதியான ஆவல்கள் மனமுடைந்து போகச்செய்யப்பட்டது போலல்லாது, வாஷிங்டன்கொள்கை வகுப்பாளர்களும் நாடுபூராவும் உள்ள கல்விசார் சிந்தனையாளர்களும் மேலாதிக்கம் படைத்த இராணுவ பலம்21ம் நூற்றாண்டு அமெரிக்காவை சிருஷ்டிக்கும்என வாதிடுகின்றார்கள். வெளிவாரி நெருக்குவாரங்களினாலோ அல்லது கணிசமான அளவுஉள்நாட்டு எதிர்ப்புக்களினாலோ தடைப்பட்டுவிடாமல் அமெரிக்கன் ட்ரான்ஸ்நாஷனல்கூட்டுத்தாபனங்களால் அர்த்தப்படுத்தப்பட்டு, மேலாதிக்கம் செய்யப்படும். உலகபொருளாதாரத்தை சந்தைக் கொள்கைகளின் அடிப்படையில் மீளமைப்பு செய்வதன்மூலம் சகல தடைக்கற்களையும் அகற்றுவதேஅமெரிக்க பயணத்தின் நோக்கமாகும்.

இன்று செய்ய வேண்டியது அமெரிக்காஇராணுவ பலத்தைப் பயன்படுத்த எந்தவிதமான அதி எச்சரிக்கைக்கும் இடமளிக்காதுஇருப்பதேயாகும் என அவர்கள் வாதிடுகின்றார்கள். நியூயோர்க் டைம்ஸ் (Newyork Times) தோமஸ் பிரைட்மன் யூகோசலாவியாவுக்குஎதிரான யுத்தத்தின் வெடிப்பின் பின்னர்இதைச் சுருக்கமான முறையில் குறிப்பிடுவதுபோல்: சந்தையின் புதையுண்ட கையானதுமுஷ்டியில்லாமல் செயற்படாது. எப் 15ஐநிர்மாணித்தவரான மக்டொனால்ட்டக்ளஸ் (கம்பனி) இல்லாமல் மக்டொனால்ட்செழிப்படைய முடியாது. சிலிகன் பள்ளத்தாக்குதொழில்நுட்பத்துக்காக உலகத்தைபாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளமூடி மறைக்கப்பட்ட முஷ்டி அமெரிக்கவிமானப் படையும் கடற்படையும் கடலில்வலம்வரும் படைகளுமேயாகும். அமெரிக்கர்கடமையில் ஈடுபட்டிராமல் தொழில்நுட்பம்கொண்ட ஒரு அமெரிக்கா இருக்க முடியாது.``

 

 

யுத்தத்தின் எதிர்காலமும் ஆயுத நெறிப்படுத்தப்பட்ட வழிபாடும்

 

இந்த முன்னோக்குசாந்தமான முறையிலும் விரிவான முறையிலும்விளக்கப்படுவதை யுத்தத்தின் எதிர்காலம் (The Future of War) என்ற பெயரில் ஜோர்ஜ்சினாலும்மெரிடிக் பிரைட்மனாலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட நூலில் கண்டுகொள்ள முடியும். இவர்கள்இருவரும் மூலோபாய வர்த்தக உளவுச்சேவையில் நிபுணர்கள். பிரைட்மனின் அடிப்படைவாதம். அமெரிக்கா வசம் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்கள் அந்நாட்டுக்குஎவ்வளவு அதிக அளவிலான இராணுவ மேலாதிக்கத்தை வழங்கியுள்ளது என்றால், அது பலதசாப்தங்களுக்கு அல்லது எதிர்வரும்நூற்றாண்டுகளுக்கு அமெரிக்காவின் இராணுவமேலாதிக்கத்தை ஊர்ஜிதம் செய்யும்என்பதேயாகும். அவர்கள் எழுதுவதாவது:

``யுத்தம் அனைத்துலக அமைப்பை நிர்ணயம்செய்வதும் அதன் மீது மேலாதிக்கம் செய்வதும்தொடர்ந்தும் இடம்பெறுவதோடுயுத்தம் நடாத்தப்படும் முறையானதுஒரு பிரமாண்டமான மாற்றத்துக்குஉள்ளாகி வருகின்றது. அது அமெரிக்க அதிகாரத்தைப் பெருமளவுக்கு அபிவிருத்தி பெறச் செய்யும். உண்மையில் 21ம் நூற்றாண்டானது அமெரிக்கஅரசுகளின் மேலாதிக்கத்தினாலும் உறுதியானசக்தியினாலும் நிர்ணயம் செய்யப்படும். அமெரிக்க அதிகாரத்தின் எழுச்சியானதுவெறுமனே 500 ஆண்டுகளாக நீண்டு செல்லும்ஒரு பூகோள ரீதியான அமைப்பின் மற்றொருதருணம் அன்று. ஆனால் உண்மையில் புதியதொருபூகோளரீதியான அமைப்பைத் திறந்துவைப்பதாக விளங்கும் என நாம் வாதிடுகின்றோம். நாம் ஐரோப்பாவைச் சுற்றிச்சுழலும் உலகத்தினுள் அல்லாது அது வடஅமெரிக்காவைச் சுற்றிச் சுழலும் ஒருபுதிய உலகினால் பதிலீடு செய்யப்படும்ஒரு ஆழமான புதிய சகாப்தத்தினுள் இருந்துகொண்டுள்ளோம்.`` (வலியுறுத்தல் செய்யப்பட்டது)

பிரைட்மனுக்கு இணங்க இந்த பூகோளஅதிகாரத்தின் உலக வரலாற்றுப் பெயர்ச்சியானது 1991ம் ஆண்டின் வளைகுடா யுத்தத்தின்மூலம் பிரகடனம் செய்யப்பட்டது. (``ஒப்பரேசன் டெசேட்``) ``பாலைவனத் தாக்குதல்``புயலின் காலப்பகுதியில் அசாதாரணமானவைஇடம்பெற்றுவிட்டதாக`` அவர்கள் பிரகடனம்செய்கிறார்கள். ``வெற்றியின் ஒரு பக்கச்சார்பான தன்மையானது ஈராக் இராணுவத்துக்கு பெரும் பேரழிவை உருவாக்கியதோடுஅமெரிக்காவின் தரப்பில் விரல்விட்டு எண்ணக்கூடியசில உயிர்ச் சேதங்களுக்கே முகம் கொடுத்ததுஎன்பது இராணுவ அதிகாரத்தின் பண்புரீதியான மாற்றத்தைக் சுட்டிக் காட்டுகின்றது.``அமெரிக்காவின் வெற்றிக்கான முக்கிய காரணம்,தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களைக்கையாண்டதேயாகும். இவை சரியானமுறையில் இலக்கைச் சென்றடையும்ஏவுகணைகளைக் கையாண்டதேயாகும்.இவை புவியீர்ப்பு விதிகளினாலும் பீரங்கிக் குண்டுகளினாலும் பயணத் திசையை கட்டுப்படுத்திக் கொள்வனஅல்ல. இவை பயணத் திசையை சரி செய்துகொண்டு, தமது இலக்குகளைச் சென்றடையும்சக்தி படைத்தவை. சரியான விதத்தில் நெறிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள் யுத்தத்தின் புள்ளிவிவரஅடிப்படைகளை மாற்றம் காணச் செய்துவிட்டன. அத்துடன் அரசியல், இராணுவ அதிகாரம்இரண்டினதும் கணிப்பு முறைகளையும்மாற்றம் காணச்செய்துள்ளன. சரியானவிதத்தில் நெறிப்படுத்தப்பட்ட ஏவுகணைகளின்தோற்றமானது ஒரு புதிய அமெரிக்கஆதிக்கம் கொண்ட வரலாற்று சகாப்தத்தின்ஆரம்பத்தைக் குறித்து நிற்கின்றது. முடிவுரையாகப் பிரைட்மன் கூறுவதாவது:

``இருபத்தோராம்நூற்றாண்டு அமெரிக்க நூற்றாண்டாகவிளங்கும். இது ஒரு வினோதமான கூற்றாகவும்தோன்றலாம். ஏனெனில் பொதுவில் இருபதாம்நூற்றாண்டே அமெரிக்க நூற்றாண்டாகஏற்றுக் கொள்ளப்பட்டதேயாகும்.அதன் நிறைவுடன் அமெரிக்க மேலாதிக்கம்ஒரு முடிவுக்கு வருவதாகக் கொள்ளப்பட்டது.ஆனால் அமெரிக்கத் தலையீடு முதலாம்உலக யுத்தத்தின் விளைவுகளை தீர்மானம்செய்த இடத்தில் இருந்து இன்று வரை,ஒரு வெறும் முகவுரையாக மட்டுமேவிளங்கியது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்கசக்தியின் மேலோட்டமான வடிவம் மட்டும்தெரியக் கூடியதாக இருந்தது. அது பூரணஉருவெடுக்காத எப்போதும் இடைமருவுபிரச்சினைகளாலும் சிறிய சவால்களாலும்ஸ்புட்னிக், வியட்னாம், ஈரான், ஜப்பான்முதலானவற்றால் மூடிமறைக்கப்பட்டது.நினைவுபடுத்திப் பார்க்கும்போது அமெரிக்காவின் அவலட்சணங்களும் தோல்விகளும் இளம்பருவ தள்ளாட்டத்தைப் போல் தற்காலிகமுக்கியத்துவம் கொண்டதாகவும் முக்கியத்துவம்அற்றதாகவும் விளங்கியது என்பது தெளிவு``

திட்டவட்டமாக நெறிப்படுத்தப்பட்டஆயுதங்களின் வரலாற்று தாக்கங்கள்பற்றிய பிரைட்மனின் மதிப்பீட்டின் செல்லுபடியானதன்மை ஒரு புறம் இருக்க, அவர்களின்கருத்துக்கள் அமெரிக்காவில் உள்ள ஒருகணிசமான அளவு கொள்கை வகுப்பாளர்தட்டினரின் சிந்தனையைப் பிரதிபலிப்பதுஒரு குறிப்பிடத்தக்க புறநிலை முக்கியத்துவம்வாய்ந்தது. கெட்ட கருத்துக்கள் கொண்டவர்களின் காலம் காலடி எடுத்து வைத்துள்ளதுஎன்பதைவிட ஆபத்தானது வேறொன்றும்கிடையாது. யூகோசலாவியாவை ``கீழ்ப்படிஅல்லது அழிந்து போ`` என்ற இரண்டில்ஒன்றை தெரிவு செய்யும்படி நிர்ப்பந்திக்கவைக்கச் செய்யும் தீர்மானத்தின் மூலம்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்

மூலோபாயவாதிகள், திட்டவட்டமான முறையில் நெறிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் யுத்தத்தை சக்தி வாய்ந்ததாகவும் நின்றுபிடிக்கக் கூடியதாகவும் குறைந்தஆபத்து விதிமுறைகளைக் கொண்ட பாதையைதிறந்து விட்டுள்ளதாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இராணுவ பலம் வரலாற்றில் ஒருதீர்க்கமான காரணியாகும் என்பது ஒன்றும்புதியது அல்ல. இராணுவ சக்தியானது வரலாற்றில்தீர்க்கமான காரணி என்ற கருத்து அரிதாகத்தான் புதியதாக இருக்கமுடியும். ஆனால் தத்துவார்த்த ரீதியாக பரிசீலித்தால் அது வரலாற்றுநிகழ்வு போக்கில் உண்மையான விளைவுஉண்டாக்குகிற உறவுமுறைகள் பற்றியஒரு கொச்சையான மற்றும் எளிமையானகருத்துருவை வெளிப்படுத்துகின்றது. யுத்தத்தின்அரசியலும் ஆயுதங்களின் தொழில்நுட்பமும்வரலாற்றில் முக்கியமான காரணிகள் அல்ல.யதார்த்தத்தில் இவை இரண்டுமே மிகவும்சாராம்சமான சமூக பொருளாதாரகாரணிகளிலிருந்து தோன்றுவதுடன் இறுதியில்அவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒருபுதிய ஆயுத அமைப்பின் அறிமுகம் நிச்சயமாகஒரு அல்லது மற்றொரு யுத்தத்தின் அல்லதுசூழ்நிலைமைகள் சார்ந்து ஒரு போரின்முடிவில் கூட செல்வாக்கு செலுத்த முடியும்.ஆனால் வரலாற்றில் பரந்த அகல் வெளியில்அது ஒரு இரண்டாம் படியான மற்றும்தற்செயலான காரணியாக உள்ளது.அமெரிக்கா தற்போது ஆயுத தொழில்துறையில்``சாதகமான போட்டித்திறனை`` மகிழ்வுடன்அனுபவிக்கிறது. ஆனால் இந்த சாதக நிலையோஅல்லது இந்த தொழில்துறையின் உற்பத்திபொருட்களோ உலக ஆதிக்கத்தைஉத்தரவாதம் செய்யமுடியாது. அதன்ஆயுதங்களின் நுணுக்கம் இருந்தபோதிலும்உலக முதலாளித்துவ விவகாரங்களில் அமெரிக்காவின் நிதி-தொழில்துறை அடித்தளத்தின் தனிமேம்பாடுடைய பாத்திரம் 50 வருடங்களுக்கு முன்புஇருந்ததைவிட மிகவும் குறைந்தளவு முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. உலக உற்பத்தியில்அதன் பங்கு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன் சர்வதேச வர்த்தக நிதிப்பற்றாக்குறைஒவ்வொரு மாதமும் பில்லியன் டாலர்களில்அதிகரிக்கிறது. துல்லியமாக - குறி வைக்கும்போர்தளவாடங்களின் வெறி ஈடுபாட்டைகோடிட்டு காட்டும் கருத்துரு ஒருஅபாயகரமான மயக்கமாகும் - அதாவதுஆயுத தொழில்நுட்பத் துறையில் மேம்பாட்டுநிலை வகிப்பது தேசிய பலத்தின் இப்படியானமிகவும் அடிப்படையான பொருளாதாரசுட்டெண்களை சரியீடு செய்ய முடியும்என்பதாகும். மேலும், அவற்றின் வெடிக்கும்சக்தி அனைத்தும் இருந்தபோதிலும் நிதி,உற்பத்தி மற்றும் தேடித்தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைத்தல் மற்றும் இதர ``கடுமையான``குண்டுகள் முதலாளித்துவ சந்தை விதிகளுக்குகீழ்ப்படிந்தவையாகவும் மற்றும் அதன்முரண்பாடுகளின் தயவிலும் உள்ளது. இப்படியானஆயுதங்களின் உற்பத்தியில் அசாதாரணசெலவு சம்பந்தப்பட்டுள்ளது. மற்றும்நினைவில் கொள்ள வேண்டியது அவற்றின்உபயோகம் செல்வத்தை உருவாக்குவதுடன்சம்பந்தப்படவில்லை. ஆனால் இன்னும்சரியாகச் சொன்னால் அதன் அழிவுடன்சம்பந்தப்பட்டதாகும். வரவிருக்கும்பல வருடங்களுக்கு உற்பத்தி உழைப்பினால்உருவாக்கப்பட்ட செல்வமானது பால்கன்களில் வெடிக்கப்பட்ட குண்டுகளை செய்வதற்குதிரண்டு போன கடன்களை அடைப்பதற்குசெலவழிக்க பயன்படுத்தப்படும்.

பெருமாட்டி அல்பிரைட் அவ்வாறானநுட்பநுணுக்கங்கள் பற்றி தன்னை தொந்தரவுசெய்து கொள்வாரோ என்று நாம்சந்தேகப்படுகிறோம். உண்மையில் ஆயுததொழில் நுட்பங்களின் ``அற்புதங்களுடன்``கொண்டுள்ள மோகம் மற்றும் அவைவாக்குறுதி அளிக்கும் ``அதிசயங்கள்`` ஆளும்மேல் தட்டினர் மத்தியில் பொதுவானதாகும்,அவர்கள் அவர்களுக்கு தெரிந்தோஅல்லது தெரியாமலோ ஒரு வரலாற்றுமுட்டுச்சந்தை வந்தடைந்துள்ளனர்.சர்வதேச மற்றும் உள்நாட்டு சமூகபொருளாதார முரண்பாடுகளின் ஒருசிக்கலான அணிவகுப்பினால் குழப்பமடைந்துபோயுள்ள அவர்கள் அந்த முரண்பாடுகளைஅரிதாகத்தான் புரிந்துகொள்கின்றனர்மற்றும் அதற்கு அங்கே வழக்கமானதீர்வு எதுவும் கிடையாது, அவர்கள் ஆயுதங்களிலும்யுத்தத்திலும் பிரச்சனைகளுக்கு ஊடாகஉடைத்துச் செல்லும் அவர்களது பாதையின்ஒரு வழிவகையை காண்கின்றனர்.

நடைமுறைஅரசியல் உறவுகள் என்ற பட்டகைக்குஊடாக பார்க்கின்ற போது துல்லியமாக- குறிவைக்கும் ஆயுத தளவாடங்கள் மீதுள்ளநிலையான நம்பிக்கை ஆபத்தானதாகவும்அசட்டையானதாகவும் தோன்றுகிறது.வரலாற்றின் எந்த ஒரு காலப்பகுதியும்இப்படியான ஒரு வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டதில்லை. ஒவ்வொருமுன்னேற்றமும், எவ்வளவுதான் கண்ணுக்குவிருந்தாக இருந்தாலும் அது உருவரைமாதிரி மற்றும் செயல் நிறைவேற்றத்தில்மிகவும் அசாதாரணமான கண்டுபிடிப்புகளினால்தீவிரமான விஞ்சிய நிலையை அடைவதற்கானபடிநிலையை உருவாக்குகிறது. தொடர்புமற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றங்கள், துல்லியமாக குறிவைக்கும்ஆயுத தளவாடங்கள் அடிப்படையாககொண்டிருக்கும் மூலாதாரமான அறிவுமற்றும் திறமைகள் ஏறுக்குறைய தீவிரமாகவிரவிப் பரவுதலை உத்தரவாதம் செய்யும்.பின்னோக்கி 1945-ல் இரண்டாம் உலக யுத்தத்தின்இறுதியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ``அமெரிக்கநூற்றாண்டின்`` இராணுவ அடித்தளமாகஅமெரிக்காவின் அணுசக்தி ஏகபோகம்அமையும் என்று ஜானதிபதி ட்ருமனும் அவரதுசகாக்களும் நம்பினார்கள் - அது ஐந்துவருடங்களுக்கும் குறைவாகத்தான்நீடித்தது. புதிய ஆயுதங்களின் தொழில்நுட்பம்அமெரிக்காவின்

தனிப்பட்ட சொத்தாகஇருக்கும் என்று நம்புவதற்கான காரணம்எதுவும் கிடையாது. ஆனால் துல்லியமாககுறிவைக்கும் ஆயுத தளவாடங்களின் வளர்ச்சியில்அமெரிக்கா அதன் தலைமையை நிலைநிறுத்தக்கூடியதாக இருந்தாலும் கூட இது அடுத்தபத்தாண்டு யுத்தங்கள் 1990களில் இருந்ததைபோல் அமெரிக்கர்கள் இரத்தம் சிந்தாததாக இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை.அமெரிக்காவினால் செய்யப்பட்ட அட்டூழியங்கள் தவிர்க்கமுடியாதபடி ஒரு குறிப்பிடத்தக்கபதில் தாக்குதலை தயார்செய்வதற்குதாம் அச்சுறுத்தப்படுவதாக கருதும்தேசங்களின் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தும். துல்லியமாக குறிவைக்கும் ஆயுத தளவாடங்களின்தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதுஅல்லது வாங்குவதற்கான செலவுகள்தடையாக இருக்கக்கூடிய விஷயங்களில்கூட, மலிவான ஆனால் மிகவும் கொல்லக்கூடியஇரசாயன, உயிரியல் மற்றும் அணு மாற்றீடுகள்கூட கண்டுபிடிக்கப்படும் என்பதையும்நாம் சேர்த்துச் சொல்லலாம்.இப்படியானஅனைத்து மாற்றீடுகளின் போதுமானகுவியல்களை ரஷ்யா ஏற்கனவே கொண்டுள்ளது.சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நிச்சயமாகஇஸ்ரேலும் கூட கணிசமான கொல்லக்கூடிய ஆயுத படைக்கலச் சாலைகளைகொண்டுள்ளன.

உயர் தொழில்நுட்பஆயுதத் துறையில் அமெரிக்காவுடன் போட்டியிடுவதற்கு பொருளாதார ரீதியாக பின் தங்கியநாடுகளின் வளங்கள் போதுமானதாகஇல்லாவிட்டாலும், ஐரோப்பா மற்றும்ஜப்பானின் வளங்கள் போதுமானதாகஉள்ளன. அமெரிக்காவுடன் விரோதத்தைசுட்டிக்காட்டாத பதங்களில் அவர்களதுஅறிக்கைகளை கூனிக்குறுக்குவதில் அவர்கள்ஜாக்கிரதையாக இருந்தபோதிலும்ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பியயூனியனின் இராணுவ செலவை கணிசமானஅளவு அதிகப்படுத்த வேண்டிய தேவையைவலியுறுத்துகின்றனர். ``அமெரிக்காவில் ஐரோப்பா சார்ந்திருப்பது அசெளகரியமாக அம்பலமாகிஉள்ளது`` என்று ஜூன் 5-இல் பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது. ஐரோப்பிய யூனியன் அதன்சொந்த இராணுவ செயல்திட்டத்தைவளர்க்கும் திட்டத்தின் ``அவசரத்தை``வலியுறுத்தி பைனான்சியல் டைம்ஸ் கூறியதாவது: ``ஐரோப்பா அமெரிக்காவின்ஏவுகணைக்கு ஏவுகணையையும் போர்விமானத்துக்கு போர்விமானத்தையும் ஈடுசெய்யும்குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும்என்பதல்ல. ஆனால் அமெரிக்காவுடன்ஒரு தாழ்ந்த உறவில் இல்லாமல் குறைந்தபட்சம் பக்கம் பக்கமாக நின்று செயலாற்றக்கூடியதை உறுதி செய்யும் தொழில்நுட்பம்,தொழில்துறை தளம் மற்றும் தேர்ச்சிபெற்ற இராணுவ திறமைகள் இருக்கவேண்டும்.`` (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)

 

எதிர்காலத்துக்கு திரும்புதல்: 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்

 

இருபதாம் நூற்றாண்டின்முதல்பாதியானது உலக வரலாற்றில்மனித வாழ்க்கை மிகவும் பயங்கரமானமுறையில் விரயம் செய்யப்பட்டதை கண்டது.முதலாவது உலக யுத்தம் (1914-18) மற்றும்இரண்டாம் உலகயுத்தத்தின் போது(1939-45) 10 கோடிக்கும் அதிகமான மக்கள்கொல்லப்பட்டதாக கணிப்பிப்பட்டுள்ளது.அந்த காலத்து மகத்தான புரட்சிகரமார்க்சிஸ்டுகள் விளக்கியவாறு இப்படியானயுத்தங்களின் தோற்றுவாய்கள் உலகமுதலாளித்துவத்தின் அடிப்படையானமுரண்பாடுகளில்தான் இருக்கின்றன - உற்பத்திசாதனங்களின் தனி உடமையை அடிப்படையாகக் கொண்ட சாராம்சத்தில் அராஜகதன்மையுடைய ஒரு சந்தை பொருளாதாரத்துக்கும் மற்றும் புறநிலையாக சமூகத்தன்மையுடைய நிகழ்வுப் போக்கிற்குஇடையிலும்; உயர்ந்த அளவில் ஒருங்கிணைந்தஉலக பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவவர்க்க ஆட்சி வரலாற்று ரீதியாக வேரூன்றிஇருக்கும் தேசிய அரசு அமைப்புக்கும்இடையிலான முரண்பாடுகளில் ஆகும். வேறுபட்டஏகாதிபத்திய நாடுகளிலுள்ள ஆளும் வர்க்கங்களுக்கு இடையில் சந்தைகள், கச்சா பொருட்கள்மற்றும் சார்புடைய மூலோபாய நலன்களுக்காக நடக்கும் மோதல்களினால் உலகயுத்தங்கள் நேரடியாக தூண்டிவிடப்படுகின்றன.

இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து அமெரிக்காமுதன்மையான முதலாளித்துவ சக்தியாகதோன்றியது. ஜேர்மனி, இத்தாலி மற்றும்ஜப்பான் ஆகியன முறியடிக்கப்பட்டன.இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் யுத்த செலவினால்பாழாக்கப்பட்டன. பழைய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைகள் மறைந்துபோகவில்லை, ஆனால் அவை அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான கெடுபிடியுத்த மோதலின் முன் கட்டுப்படுத்தப்பட்டுஇருந்தன.

 

1991-ல் சோவியத் யூனியனின்வீழ்ச்சியானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலானமோதல்கள் மீதான அரசியல் கட்டுப்பாடுகளை அகற்றியது. அமெரிக்கா, ஐரோப்பாமற்றும் ஜப்பானின் போட்டி அபிலாசைகளைஎன்றென்றுமாக சமாதான முறையில்சமரசப்படுத்த முடியாது. வியாபாரஉலகமானது கடுமை தனியாத இரக்கமற்றபோட்டியை கொண்ட ஒன்றாகும்.இன்று ஒரு அல்லது மற்றொரு காரணத்துக்காக ஒரு திட்டத்தில் ஒத்துழைப்பது அவசியம்என்று கருதும் பல் கூட்டு கம்பனிகள், நிலைமைகளை பொறுத்து நாளை ஒன்றின் குரல்வளையைமற்றொன்று பிடிப்பதாக இருக்கும்.உலகளவில் பல்கூட்டு கம்பனிகளுக்கு இடையிலானகடுமையான போட்டியானது -நிலைபேறுடைய (bellum omnium contra omnes) அனைத்துக்கும் எதிரானஒவ்வொன்றின் யுத்தம் - இறுதியில் அதன்மிகவும் வளர்ச்சி கண்ட மற்றும் கொல்லக்கூடியவெளிப்பாட்டினை வெளிப்படையானஇராணுவ மோதலில் காண்கிறது.

உற்பத்திநிகழ்வுப் போக்குகளின் பூகோள ஒருங்கிணைப்பானது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலானமோதலை குறைக்கவில்லை ஆனால்முரண்பாடு உண்மையாக, அதனை அதிகரிக்கிறது.பிரைட்மன் சரியாக ஒரு தடவை எழுதியவாறு:``பொருளாதார ஒத்துழைப்பு பொருளாதார ரீதியான ஒன்றில் ஒன்று சார்ந்திருத்தலைதூண்டுகிறது. ஒன்றிலொன்று சார்ந்திருத்தல்பிணக்குகளைத் தூண்டுகிறது. பொருளாதாரசாதக நிலையை தேடுதல் ஒரு மிக மோசமானவிளையாட்டாகும் அது தேசங்கள் மூர்க்கமானநடவடிக்கைகளை மேற்கொள்ளும்படிதூண்டுகிறது, இந்த உண்மை வரலாற்றுரீதியாக நிரூபிக்கக் கூடியதாகும்.``

1990-களின்போது இராணுவ மோதல்களின் அதிகப்படியான அடுக்கு நிகழ்வு, அண்மித்து வரும் சர்வதேசமோதலுக்கான ஒரு புறநிலையானஅறிகுறியாகும். முதலாவது மற்றும் இரண்டாவதுஉலக யுத்தம் இரண்டுக்கும் முன்னதாகஒரு தொடராக உள்ளூர் மற்றும் பிராந்தியமோதல்கள் ஏற்பட்டன. சோவியத்யூனியனின் வீழ்ச்சியினால் முதலாளித்துவ ஊடுருவலுக்காக திறக்கப்பட்ட பிராந்தியங்களுக்குள்பெரும் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின்செல்வாக்கை விரிவாக்க முயற்சிக்கும்போது அவற்றுக்கு இடையில் மோதல்கள்உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.கஸ்பியன் மற்றும் கொக்காசியன் பிராந்தியங்களிலுள்ள எண்ணெயிலிருந்து கிடைக்கும் கொள்ளைச்செல்வத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகதவிர்க்கமுடியாதபடி எழுவது போன்ற- பெரும் சச்சரவுகளில் பணயமாக இருப்பதுஉலக அதிகாரம் மற்றும் பதவி போன்றவாழ்வா சாவா பிரச்சினைகளாகும்.அப்படியான பிரச்சினைகள், அவற்றின் இயல்பானதன்மையின் காரணமாக, சமாதானமானதீர்வுகளுக்கு இடம் கொடுக்காது. ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான போக்கு ஒரு புதியஉலக யுத்தத்தின் திசையில் இரக்கமின்றி நகர்கின்றது.

 

பால்கன் குடாநாட்டு யுத்தமும் அமெரிக்கப்பொதுஜன அபிப்பராயமும்

 

யுத்தத்துக்காகப் பொதுஜன ஆதரவை உற்பத்திசெய்ய ஊடகங்கள் எல்லா முயற்சிகளைச்செய்தும் மக்கள் தொகையின் பெரும்பான்மையினரான அமெரிக்க தொழிலாளவர்க்கத்தினரின் போக்கு என்னவோதெட்டத் தெளிவாக மங்கியே காணப்படுகின்றது.நிச்சயமாக போருக்கான எதிர்ப்புகுறிப்பிடத்தக்கதாக வெளிப்பாடாகவில்லை.ஆனால் அதேவேளை யூகோசலாவியாவுக்குஎதிரான தாக்குதலுக்கு மக்கள் ஆதரவுபோதியளவு வெளிப்படவும் இல்லை. வெகுஜனத்தொடர்புச் சாதனக்காரர்களினால்நிதானமற்ற முறையில் வெளிப்படுத்திய போருக்காக வெளிப்படுத்திய உற்சாகத்துக்கு முரணாகஉழைக்கும் வர்க்கத்தினரின் உணர்வுகள்கலக்கமும் பீதியும் கொண்டிருந்தன. போர்என்பது மக்கள் விரும்பும் ஒரு கதைப்பொருளாக இருக்கவில்லை. தங்களுக்குஅதைப்பற்றி விளங்கிக் கொள்ள முடியவில்லைஎன்பதே அவர்கள் போரைப் பற்றிக்கேட்கும் போது கொடுத்த பதிலாகும்.``இனச்சுத்திகரிப்பு`` பற்றி கேட்டறிந்து கொண்டதை அவர்கள் வெறுத்தனர். வெகுஜனத்தொடர்புச் சாதனக்காரர்களினால்நம்பும்படி செய்வதிலும் பார்க்க கொசோவாவுக்குள்ளும் அதேவேளை பழைய யூகோசலாவியா முழுவதினுள்ளும் நடந்த சண்டைக்கானகாரணம் மிகவும் சிக்கலானது என அவர்கள்சந்தேகப்பட்டனர். தேசப்பற்று உணர்வுகளைத் தட்டியெழுப்புவதை விடுத்து, மோதலின்சமனற்ற தன்மையும் அமெரிக்கக் குண்டுவீச்சின்விளைவுகளும் பெரும் பகுதி மக்களின் மத்தியில்காணப்பட்ட தவிப்புக்குக் காரணமாகஅமைந்தன. அமெரிக்கக் குண்டு வீச்சினால்ஏற்பட்ட அழிவுகள். மரணங்கள் சம்பந்தமானசெய்திகளை வெகுஜனத் தொடர்புச்சாதனக்காரர்களின் ஒத்துழைப்புடன்கட்டுப்படுத்த கிளின்டன் நிர்வாகம் எடுத்தமுதலாவது கொடூரமான நடவடிக்கைகள்இக்கணிப்பை ஊர்ஜிதம் செய்வதாக அமைகின்றது.நேட்டோ குண்டுவீச்சினால் ஏற்பட்டமோசமான சிவிலியன் அழிவுகள் சம்பந்தமானகாட்சிகளை பெல்கிரேட்டிலுள்ள பிரதானதொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியதன்பின்னரே அதை அழிப்பதற்கான தீர்மானம்எடுக்கப்பட்டது. அந்த இரத்தக் கறைபடிந்தநிகழ்ச்சியைத் தொடர்ந்து வந்த வாரங்களில்யூகோசலாவியா மீது நடத்தப்பட்டதீவிர குண்டுவீச்சு விளைவுகள் உடனுக்குடன்அமெரிக்க நிருபர்களால் படமாக்கப்பட்டுஒளிபரப்புவது எல்லாமே நின்றுபோய்விட்டது.மிதவாத நேர்மையுள்ளம் கொண்டஒரு வேளை கடைசி சீ.என்.என்.நிருபராகஅங்கு இருந்திருக்கக் கூடிய பிரண்ட்சேட்லரின்தொலைக்காட்சி அறிக்கை முடிவுக்குக்கொணரப்பட்டது. சேர்பிய மக்களுக்குஎதிரான ``பேரழிவுகளை உண்டுபண்ணும்ஆயுதங்கள்``. கிளஸ்டர் குண்டுகளின் உபயோகம்பற்றி மக்கள் நன்கு தெரிந்து கொள்வதைகிளின்டன் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

யூகோசலாவியாவில் அமெரிக்க உயிர்கள்ஆபத்தில் மாட்டிக் கொள்ளச் செய்யப்படுவதை பொதுமக்கள் கண்டிப்பாக எதிர்க்கின்றார்கள் என்னும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியஅமெரிக்காவின் நம்பிக்கை, மக்களின் மனோநிலைபற்றி கிளின்டன் நிர்வாகத்தின் கணிப்பைக் காட்டும்மிக முக்கியமான குறிகாட்டி. உண்மையாகவேஅமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு இழப்புஏற்படாத வரை இன்னொரு நாட்டுமக்களின் உயிர்களைக் கொன்றுதள்ளுவதற்குஆயத்தமாக இருக்கும். ஒரு நாட்டுமக்களின் மனோநிலை பற்றி போதித்தல்ஒன்றும் புதுமையானது அல்ல. என்னவாகஇருந்த போதிலும், சிறிதளவாயினும் மக்களின்தியாகத்தைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளமுடியாத யுத்தமொன்று மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது என எந்த அரசும் உரிமைகோரமுடியாது. வியட்நாம் யுத்தத்துக்கு மக்களின்கருத்து நேர் எதிரானதாகக் கிளம்புவதற்குமுன், 25000க்கு மேற்பட்ட அமெரிக்கப் படையாட்கள் கொல்லப்பட்டு இருந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து இருந்தனர்.பொதுஜன அபிப்பராயம் போன்றசிக்கலானதும் முரண்பாடுகள் கொண்டதுமானநிகழ்வுகளை ``புரட்சிகர`` மொழியில் முதிர்ச்சியற்றவிதத்தில் வியாக்கியானம் செய்வதில் விடாப்பிடியும்பகுப்பாய்வுடன் கலைச் சொற்களைக்கையாண்டு மயங்க வைக்கும் குணமும்கொண்ட நடிப்புத் தீவிரவாதத்தைவிடஅரசியல் ரீதியாக நுனிப்புல் மேயும் புத்திஜீவியரீதியில் வறட்சியான தன்மை வேறு கிடையாது.யூகோசலாவியா மீது இடம்பெற்ற குண்டுவீச்சுத்தாக்குதலுக்கு எதிராக அரசியல் உணர்வுடன்காட்டிய எதிர்ப்புடன் முழுக் குண்டுவீச்சுத்தாக்குதல் நடவடிக்கையின் போதும்காட்டிய பலவீனமான ஒப்புதல் மனநிலையைஒன்றாகக் கருதுவது ஒருவரைத் தவறாகவழிநடத்தவும் தம்மைத் தாமே ஏமாற்றவும்செய்யும். எனினும் தற்போதைய பொதுமக்கள் மனநிலையின் குழம்பிய போக்கில் இருந்துசோர்ந்து விடுவதும் உழைக்கும் வர்க்கத்தின்அரசியல் வழிகாட்டலின் மாற்றத்துக்கானதேவையை உதாசீனம் செய்வதும் முன்னர்கூறியதிலும் பார்க்க எந்த வகையிலும் பிழைகுறைந்தது அல்ல. மேலோட்டமானநம்பிக்கை அல்லது நம்பிக்கையீனம் என்பவற்றைவிட பால்கன் யுத்தத்துக்கு வெவ்வேறுசமூகத்தட்டின் பதிலை பக்குவப்படுத்தியவர்க்க உறவுகளை ஆராய்வது முக்கியமானதாகும்.

 

தொடரும்்.....