World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

India: the BJP-RSS nexus

Fascistic movement plays critical role inIndia's ruling coalition

இந்தியா:பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். பிணைப்பு

இந்திய ஆளும்கூட்டணியில் பாசிச இயக்கம் வகிக்கும் முக்கியமானபாத்திரம்.

By KeithJones
20 June 1998

Use this version to print

கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட அணுகுண்டுசோதனைகளின் விளைவாக மேற்கில் உள்ளமுதலாளித்துவ பத்திரிகைகள் இந்தியாவின்பக்கம் கவனத்தை திருப்பி உள்ளன. 956 கோடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில்அம்மக்களின் இன்னல்களும், துயரங்களும்அந்த ''முக்கியமான'' தினசரிகளின் பின்பக்கங்களில்கூட அரிதாகத்தான் குறிப்பிடப்படுகின்றது,இருந்தாலும் அனைத்து விவரணங்களிலும்இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் அரசியல்,சித்தாந்த உருவாக்கம் பற்றி மிகக் குறைவானவிஷயம் தான் கூறப்படுகின்றது.

`டைம்' (Time) சஞ்சிகையின்படி ''இந்திய கூட்டணிஅரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும்பங்காளியாக இருக்கும் பாரதீய ஜனதாக்கட்சி (பி.ஜே.பி) ஒரு இந்து தேசியவாத கட்சியாகும்.அது ஆட்சிக்கு வருவதற்காக ஒரு தொடரானசமரசங்களை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் ''பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்ஒரு குறிப்பிடத்தக்க, எளிமையான, புலமைமிகுந்தமிதவாதி'' ஆவார்.

யதார்த்தத்தில், நடப்பில்உள்ள முதலாளித்துவ அரசியல் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் கூட பி.ஜே.பி. ஒரு தீவிர வலதுசாரிகட்சியாகும். அது இந்து சோவினிசம், இராணுவவாதம், கம்யூனிச எதிர்ப்பு வாதம் போன்றவற்றிற்குஆதரவளிக்கின்றது. அதேவேளை தொழில்துறைஉரிமையாளர்களின் நலன்களை பாதுகாக்கின்றது. அதனுடைய வேராக இருப்பது ஒருவெகுஜன பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்(ஸி.ஷி.ஷி-ராஸ்திரிய சுவயம்சேவக் சங்) ஆகும். அது பலபத்தாண்டுகளாக வகுப்புவாத தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது.

1992-ல் அயோத்தியில் ஒரு இந்துக் கோவில்கட்டுவதற்காக பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இன்பிரச்சாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சவால்விட்டு ஒரு புகழ் பெற்ற மசூதியை இடித்துதரைமட்டமாக்குவதில் முடிவடைந்தது.இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கை இந்தியாவின்சுதந்திரத்தின் பிற்கால வரலாற்றில் மிகவும்அதிகப்படியான வகுப்புவாத இரத்தம்சிந்துதலுக்கு தூண்டுதல் அளித்தது.

அயோத்திபிரச்சாரத்தின் உடனடியான குறிக்கோள்இந்துக் கடவுளான இராமருக்கு ஒருகோவில் கட்டுவதாகும். ஆனால் பி.ஜே.பி.,ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் இணைக்கப்பட்ட விரிவான வலைப்பின்னல்களைக் கொண்டகுழுக்கள் மற்றும் மகாராஷ்டிராவைதளமாகக் கொண்ட இந்து பேரினவாதபாசிச அமைப்பான சிவசேனா இவற்றைப்பொருத்தவரையில், இராம இராஜ்யத்திற்கானஅணி திரட்டல் ஒரு தீவிரமான, ஆனால் இதுதெளிவற்றமுறையில் வரையறை செய்யப்பட்டஒரு இந்து இராஜ்யத்தை (அல்லது இந்துஆட்சியை) உருவாக்குவதற்காக இந்தியக்கொள்கையில் ஒருமாற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்துபேரினவாதிகைளைப் பொருத்தவரையில்இந்தியாவை ''ஒரு உண்மையான இந்துஅரசாக'' மாற்றுவது என்பது இந்தியாவின்கடந்த கால புகழ் என்று கூறப்படுவதைமீண்டும் புதுப்பித்துக்கொள்வதும் நவீனஉலகத்தில் அதனுடைய அந்தஸ்தை வல்லரசாகஉயர்த்துவதும் ஆகும்.

பி.ஜே.பி.-க்கும்ஆர்.எஸ்.எஸ்.-க்கும் இடையில் உள்ள பிணைப்புஅவை பகிர்ந்து கொள்ளும் குறிக்கோள்கள்மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றை கடந்துசெல்கின்றது. ஆர்.எஸ்.எஸ் இல் இயங்குபவர்கள்பி.ஜே.பி.ன் கட்சிஇயந்திரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், கட்சியின் தலைமைஅமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.இரண்டு பிரதான பி.ஜே.பி. தலைவர்களும்,தற்போதைய அரசாங்கத்தில் இரண்டுமுக்கிய பொறுப்புகளை வகித்துவருவோருமானஅடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் உள்நாட்டுஅமைச்சர் எல்.கே.அத்வானி ஆகியோர்ஆர்.எஸ்.எஸ். அங்கத்தவர்களாவர். கட்சித்தலைவராக அத்வானிக்கு பதிலாக நியமிக்கப்பட்ட குஷாபு தாக்கரே ஆர்.எஸ்.எஸ்.-ஸின் வாழ்நாள்உறுப்பினர் ஆவார். தற்போதைய கட்சியின்நிர்வாக குழுவில் இருப்போரில் 75%-க்கும்அதிகமானவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ஐ மூலமாகக்கொண்டவர்கள்.

 

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?

அதன் 70 வருடத்திற்கும் மேலான வாழ்வில்ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத கலவரங்கள்மற்றும் கடுமையான கம்யூனிச விரோதம்ஆகியவற்றுடன் தொடர்புடையதாகஇருந்து வருகிறது. இந்த அமைப்பு 1925-ல்நிறுவப்பட்டது. அது நாக்பூரில் உள்ள இந்துக்களை பாதுகாப்பதற்கு என்று அப்போதுகூறப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானமுதலாவது வெகுஜன அணி திரட்டல் (1920-1922ஒத்துழையாமை இயக்கம்) வீழ்ச்சி கண்டபின்னர், வகுப்புவாத கலவரத்தால்பீடிக்கப்பட்ட பல இந்திய நகரங்களுள்நாக்பூரும் ஒன்றாக இருந்தது. இரண்டுவருடங்களுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் உள்ளூர் இந்து மேல்தட்டினரின் விருப்பப்படி,அரசாங்க வேலைகளில் முஸ்லீம்கள் விகிதாசாரமற்ற பங்கினை கொண்டிருக்கின்றனர் என்றுகுற்றம்சாட்டி முஸ்லீம்களின் ஒரு ஊர்வலத்தைவிரட்டியடிக்க லத்தியை [குண்டாந்தடி]பயன்படுத்த பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றுவரையில் சுமார் 40 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்இன் க்ஷக்ஹாஸ்களில் [ஆச்சிரமங்களில்] மிக இளவயதினரை தினசரி தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், மற்றும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இன்மேல்அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்பணியும்படிகற்பிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அதனுடையஉறுப்பினர் எண்ணிக்கையை வெளியிடமறுக்கின்றது.ஆனால் அந்த ஷஹாக்காஸ்களில் பல லட்சக்கணக்கானவர்கள் பங்கெடுப்பதாக தெரிகிறது.ஆர்.எஸ்.எஸ். ஒரு விரிவான வலைப்பின்னலைக்கொண்ட இணைக்கப்பட்ட அமைப்புகளைமாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்மற்றும் மதசீடர்களுக்காக கட்டியுள்ளது.அவை உறுப்பினர்களை அணிதிரட்டுவதிலும், அவர்களுடைய உறுப்பினர்களின் சமூகபொருளாதார கஷ்டங்களையும் பரந்தளவில்கவனத்திற்க்கு எடுத்துக்கொள்கிறது.

அதனுடைய தோற்றத்திலிருந்து இன்றுவரையிலும்ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக உள் அமைப்பு பெரும்பான்மையாக நகர்ப்புற குட்டி முதலாளித்துவசேர்க்கையான மாணவர்கள், சிறிய வியாபாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலக எழுத்தாளர்கள், மேலாளர்களை கொண்டதாகஇருக்கின்றது. பி.ஜே.பி.-யுடன் சேர்ந்துஅது ஒரு தொழிற்சங்கப் பிரிவை 1950ல் உருவாக்கியது. ஆனால் அது 1980கள் வரை ஒரு சிறிய அலகாகவேஇருந்துவந்தது. இன்று பாரதீய மஸ்தூர்சங்கம் பெருமளவில் உடலுழைப்பற்றதொழிலாளர்களை[உத்தியோகத்தர்களை]கொண்ட 30 லட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களை கொண்டிருப்பதாக கூறுகின்றது. ஆர்.எஸ்.எஸ்.-ன்நகர்ப்புற குட்டி முதலாளித்துவத்தன்மைநாட்டுப்புறத்தில் அதன் சார்பு ரீதியானபலவீனத்தில் கோடிட்டுக் காட்டப்படுகின்றது.இந்திய ஜனத்தொகையில் 2/3ல் பகுதியினர்கிராமங்களில் இருந்தபொழுதிலும் அங்கேகுறிப்பிடக் கூடிய ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய விவசாய அமைப்பு கிடையாது.

 

ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்து ராஜ்யமும்

ஆர்.எஸ்.எஸ். முதல் முதலாக இந்திய துணைக்கண்டத்தின் 1947 பிரிவினையின்போது எழுந்தபயங்கரமான வகுப்புவாத வன்முறையின்போது ஒரு வெகுஜன அமைப்பாக தோன்றியது.1948 ஜனவரியில் காந்தியை கொலை செய்தஎன்.வி.கோட்சே ஒரு முன்னைய ஆர்.எஸ்.எஸ்.காரியாளனும் ஒரு கடுமையான இந்துதேசியவாதியுமாவான். கொலைநடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்குமுன்னர் ஆர்.எஸ்.எஸ். காந்தியை முஸ்லீம்களைபாதுகாக்க பரிந்துபேச முற்படுகிறார்என்று கூறி தொடர்ந்து இழிவுபடுத்தியது.

காந்தியின் கொலையை தொடர்ந்துஆர்.எஸ்.எஸ். சுமார் இரண்டு வருடங்கள்தடை செய்யப்பட்டது. அந்த அமைப்புஎப்பொழுதுமே காந்தி கொலையுடன்எந்த தொடர்பும் இல்லை என்று கடுமையாகமறுத்து வந்தபோதும், அது கோட்சேமீதுள்ள அதன் அனுதாபத்தை மறைக்கமுடியாமல் கஷ்டப்பட்டது. தற்போதையஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங்கின்வார்த்தைகளின்படி கோட்சேயின் ''நோக்கம்நல்லதாக இருந்தது ஆனால் தவறானவழிமுறையை பயன்படுத்தினார்''.

ஆர்.எஸ்.எஸ்.-ன்சித்தாந்தமான இந்து ராஜ்யம் - அதாவதுஇந்தியா இந்துக்களின் தேசம் மற்றும்இந்துக்கள் தான் தேசத்தை உள்ளடக்கியவர்களாக இருக்கிறார்கள் என்பது - காங்கிரஸ்கட்சியின் தலைமையினால் விரிவாக்கப்பட்டஅனைத்து இந்தியர்களும் அவர்களதுமதம், இனக்குழு அல்லது ஜாதி எதுவாகஇருந்தபொழுதிலும் அவர்கள் சமமானஉரிமைகளை கொண்ட குடிமக்கள் என்ற மிதவாத ஜனநாயக வேலைத்திட்டத்திற்குஎதிராக அபிவிருத்தி செய்யப்பட்டது.

பலசமயங்களில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதனுடன்தொடர்புடைய அமைப்புகளும் குறிப்பாகபி.ஜே.பி. இந்து பற்றிய மாறுபட்ட அர்த்தங்களைசுட்டிக்காட்டி அவர்களது வகுப்பு வாதத்திற்குபோர்வை போர்த்த முயற்சிக்கின்றார்கள்.(இந்து என்பது இந்தியன் என்பதுடன் தொடர்பற்ற ஒரு சொல்லாகும்- அது தொடக்கத்தில்சிந்து நதியின் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த அனைவரையும் குறிப்பதாக இருந்தது) ஆனால் இந்துராஜ்யத்தின் பிரதான சித்தாந்தவாதிகளானஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் எம்.எஸ்.கோல்வால்க்கர் மற்றும் பி.டி.சர்வாக்கர் (அதே சிந்தனையுடைய வகுப்புவாத அரசியல் கட்சியான இந்துமகாசபையின் தலைவர்) ஆகியோர் அவர்களதுஎழுத்துக்களிலும் சொற்பொழிவுகளிலும்முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்து தேசத்தில்அன்னிய குழுக்களாவர் எனவும், பெரும்பான்மையினர் சகித்து கொள்ளும் அளவிற்க்கே அவர்கள்உரிமைகளை அனுபவிக்க முடியும் என்பதைதெளிவாக்கியுள்ளார்கள்.

கோல்வால்கர்மற்றும் சர்வாக்கர் இருவருமே நாஜிஜேர்மனியிலிருந்து நேரடியாக புத்துணர்ச்சியைபெற்றுக் கொள்கின்றனர். கோல்வால்கர்எழுதுகிறார், ''வேருக்குள் செல்லக்கூடியவேறுபாடுகளைக் கொண்ட இனங்கள்மற்றும் கலாச்சாரங்கள் ஒரு ஐக்கியப்பட்டமுழுமைக்குள் உள் சேர்க்கப்படுவதுசாத்தியமற்ற ஒன்றாகும்''என்பதைஜேர்மனி காட்டுகின்றது - இது இந்துஸ்தானில்நாம் கற்றுக் கொள்வதற்கும் பலன்பெறுவதற்குமான ஒரு நல்ல பாடமாகும்.

இந்திய பிரதமர் அடல் வாஜ்பாயியும் உள்நாட்டுஅமைச்சர் அத்வானியும் அவர்களதுசகாவான சிவசேனா தலைவர் பால்தக்கரேபோலன்றி ஹிட்லரை பாராட்டுவதிலிருந்துவிலகி நிற்கின்றனர். அவர்கள் இந்தியாவில் உள்ள12 கோடி முஸ்லீம்கள் அவர்களாகவேதேசியமயப்படுத்திக் கொள்ளவேண்டும்என்று வலியுறுத்துகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஒரு மெல்லிதான முதலாளித்துவஎதிர்ப்பு தன்மையை கொண்டிருக்கின்றன.அவர்கள் முதலாளித்துவ அல்லது மேற்கத்தையசமூகத்தை அதன் தனிநபர்வாதத்திற்காகவும்,கூட்டுணர்வின் சிதைவு குறித்தும் கண்டனம்செய்கின்றனர். ஆனால் அவர்கள் தனிச்சொத்துடைமையையும், லாபஅமைப்பையும்உயர்த்திப்பிடிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். எப்பொழுதுமே தன்னை ஒரு அரசியல் அமைப்பாகஅல்லாமல் கலாச்சார தேசிய இயக்கமாகவே விவரித்துள்ளது. இது சக்தி வாய்ந்த அரசியல்எதிர்ப்பாளர்களுடன் நேரிடை மோதலிலிருந்துதவிப்பதற்கான வார்த்தை பிரயோகமாகும்.பாரம்பரிய முதலாளித்துவ அரசியல் மற்றும்வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும்மேலாக ஒரு ''தேசிய'' நலன் இருப்பதாககூறி அரசியல் இழிவுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.இன் மறைமுகமான பாசிச சிந்தாந்தத்தின்மையமாக உள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.எதேச்சதிகார பாணியில் தன்னை இந்துதேசத்தின் கருவாக கருதுகின்றது.

ஜனநாயம்என்பது தேசத்தின் அமைதியை மற்றும்நல்லிணக்கத்தை இடையூறு செய்வதற்கும்சமூக மோதலை ஊக்குவிப்பதற்காகவும்தான் இருக்கிறது என்று கூறி கோல்வால்கர்அதனை ஏளனம் செய்கிறார். அதே சமயம்ஜாதி அமைப்பின் மிக அருவருப்பான தன்மைகள்களையப்படுமாயின், அது ஒரு கூட்டானசமூகத்தை உருவாக்குவதற்கான மாதிரியாகும்என்று அதனை பாராட்டுகின்றார். இதேவேளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.-யின் அரசியலானதுஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு ஆதரவானது என்பதை அதன் தலைமைஅவ்வப்போது உறுதிசெய்தது.

எவ்வாறாயினும் அயோத்திக்கான அணித்திரட்டலானதுஇந்திய குடியரசின் முதலாளித்துவ ஜனநாயகஅமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.-இன் அர்ப்பணம்பற்றிய அளவீடாக எடுக்கப்படவேண்டும்.அத்வானியும் உத்திரப்பிரதேசத்தில் பி.ஜே.பி.முதல்அமைச்சரும் மசூதி மீது கைவைக்கப்படமாட்டாது என்கிற வாக்குறுதிகளை இந்தியஉச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய போதிலும்அந்த பிரமாண்டமான ஆத்திரமூட்டல்ஒரு வகுப்புவாத படுகொலையில் முடிவடைந்தது.

ஆர்.எஸ்.எஸ்.-யின் ஜனநாயக விரோதநெறிமுறைகள் அதன் இனவாத சித்தாந்தத்தில்மட்டுமல்லாமல் அதன் அமைப்பு வழிமுறைகளிலும் கூட வெளிப்படுகின்றது. அந்த அமைப்புயாவருக்கும் மேலான ஒரு தலைவரினால்(சர்சங்சலாக்) தலைமை தாங்கப்படுகிறது.அவர் அவருடைய முன்னோடியானவரால்வாழ்நாள் முழுவதற்குமாக நியமிக்கப்படுகிறார். மற்றய தலைமைப்பதவிகளும் நியமனம்மூலமாக தீர்மானிக்கப்படுகின்றன.

அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்.-இன் வன்முறை பிரதானமாகமுஸ்லீம்கள் மற்றும் முன்னைய தீண்டத்தகாதவர்கள் மீது குறிவைக்கப்பட்டிருந்தாலும் வெறித்தனமான கம்யூனிச எதிர்ப்புவாதம் அதன் சிந்தாத்தின்மையமாக இருந்து வந்துள்ளது. 1948ல் ஆர்.எஸ்.எஸ்.-ன் மீது விதிக்கப்பட்ட தடையைநீக்கும்படி அப்போதைய இந்திய பிரதமர்ஜவஹர்லால் நேருவிடம் விண்ணப்பித்த கோல்வால்கர் எழுதியதாவது ''ஆர்.எஸ்.எஸ். கலைக்கப்பட்டிருக்கின்றது, விவேகமான இளைஞர்கள் வேகமாககம்யூனிசத்தின் பொறிகளுக்குள் வீழ்கின்றார்கள், இதனை சக்திவாய்ந்த முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றான ஆர்.எஸ்.எஸ். அங்கே இல்லை''.

 

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய தேசிய காங்கிரஸின்(இ.தே.கா) பிரதான தலைவர்களானகாந்தியும் நேருவும் பொதுவாக மதசோவனிசத்தையும் முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்ஐயும் கடுமையாக எதிர்த்தார்கள்.குறிப்பாக 1930களில் நேரு வகுப்புவாதம்பாசிசத்தின் ஒரு வடிவம் என்று ஆய்வுசெய்தார். காந்தி ''ஆர்.எஸ்.எஸ். சர்வாதிகாரகண்ணோட்டம் கொண்ட ஒரு வகுப்புவாதஅமைப்பு'' என்று அதனை வரையறைசெய்தார்.

எவ்வாறுஇருந்தபொழுதிலும்இ.தே.கா. வகுப்புவாதத்தை எதிர்த்துபோராட திராணியற்றது என்று நிரூபித்து,அது இறுதியில் இந்திய பிரிவினைக்கு ஒத்துழைத்தது.காந்தி வெகுஜனங்களுக்கான அவரதுஅழைப்புகளில் இந்துவாசகங்களை பயன்படுத்தினார். நேரு பிரிட்டிஷ்சாரால் உருவாக்கப்பட்டஅரசு இயந்திரத்தினை எடுத்துக்கொள்வதன்மூலமாக மேல் இருந்து இந்தியாவைஒன்றுபடுத்த தேர்ந்தெடுத்தார். அவர்கள்இருவருமே தொழிலாளர் விவசாயிகளின்வர்க்க நலன்களின் அடித்தளத்தில் அதாவதுஇந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களை அவர்களதுநிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரானபோராட்டத்தில் ஒன்றுபடுத்துவதற்க்குவேண்டுகோள் விடுவதன் மூலமாக கீழிருந்துஇந்தியாவை ஒன்றுபடுத்தும் போராட்டத்தின்பின்விளைவுகள் பற்றி அஞ்சினார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்து மகாசபையின் முன்னையதலைவர்களில் ஒருவரான எஸ்.பி.முக்கர்ஜிகாங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரவைக்குள் வரும்படி வரவேற்க்கப்பட்டார்.காங்கிரசின் தலைவரும் தீவிரமான கம்யூனிசஎதிர்ப்பாளருமான நேருவின் உள்நாட்டுஅமைச்சர் வல்லபாய் பட்டேல் காங்கிரசினுள் ஆர்.எஸ்.எஸ்.-ஐ கொண்டுவர சதிசெய்தார்.எவ்வாறாயினும் காந்தியின் கொலை பட்டேலின்திட்டங்களை வெட்டியது. மற்றும் இதுநேருவிற்க்கு ஆளும் வர்க்க அரசியலின்பிரதான நீரோட்டத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ தனிமைபடுத்த உதவியது.

 

ஆர்.எஸ்.எஸ்.-ன்மறுமலர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின்முன்னுள்ள பணிகளும்

ஆர்.எஸ்.எஸ். ஒருசக்திவாய்ந்த அரசியல் சக்தியாக தோற்றம்எடுத்திருப்பது, இந்தியாவின் நிலப்பிரப்புத்துவபாரம்பரியத்தையும் காலனித்துவ கடந்தகாலத்தையும் வெற்றிகண்டு அதன் பல்வேறுமக்களை உண்மையான ஜனநாயகரீதியாகஐக்கியப்படுத்த இந்திய முதலாளித்துவம்இயல்பாகவே திராணியற்றது என்பதற்கானசாசனமாக திகழ்கின்றது. உண்மையில் இந்தியக்குடியரசின் வரலாறானது வளர்ச்சியடையும்சமூக சமத்துவமின்மை, வகுப்புவாதஅரசியலின் தொடர்ச்சியான அதிகரிப்பும்,ஜாதிமயமாகுதல் மற்றும் பிராந்தியமயமாகும்குணாம்சத்தை கொண்டதாக இருந்துவந்துள்ளது. தற்போது நிலவும் பெரும் வேலையின்மை,வறுமை, நோய், கல்வியின்மை போன்றவற்றிற்குஒரு முற்போக்கான தீர்வை வழங்கமுடியாதமுதலாளித்துவம் மக்களுடைய வெறுப்புகளைஒரு பிற்போக்கான திசையில் திருப்புவதற்கானஒரு வழியாக மிகவும் பின்னோக்கிச் செல்லும்சித்தாந்தங்களை முன்வைக்கிறது.

பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றமானது, இந்தியமுதலாளித்துவம் 1991 வரையில் அடிப்படையாககொண்டிருந்த தேசியவாத பொருளாதாரமூலோபாயத்தின் வீழ்ச்சி மற்றும் அந்தமூலோபாயத்துடன் தொடர்புடையதாகஇருந்த காங்கிரசை மையமாகக் கொண்டஅரசியல் அமைப்பின் வீழ்ச்சியினதும் மற்றும்பரந்தளவிலான சுதந்திரமான தொழிலாளவர்க்க மாற்றீடு இல்லாமையினாலும் உருவாக்கப்பட்ட கூர்மையான நெருக்கடியின் விளைவாகும்.வரலாற்று ரீதியாக இந்திய தொழிலாளவர்க்கம் ஆசியாவில் மிகவும் போர்குணம்மிக்கவைகளில் ஒன்றாகும். அதன் தற்போதையசெயல் இழந்த நிலைமைக்கு தொழிலாளவர்க்கத்தை முற்போக்கான முதலாளித்துவபிரிவுகள் என்று அழைக்கப்படுவனவற்றுக்குதிட்டமிட்டவகையில் கீழ்ப்படியச் செய்தஸ்ராலினிசக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புகளின்விளைவாகும்.

1980களின் பிற்பாதியில் பி.ஜே.பி.யானதுஅதன் முதலாளித்துவ போட்டியாளர்கள்வகுப்புவாதம் மற்றும் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பக்கம் திரும்பியதைநன்றாக பயன்படுத்தக் கூடியதாகஇருந்தது. அது இறக்குமதி கட்டுப்பாடுகள்தளர்த்துவது மற்றும் மேற்கத்திய நுகர்வுப்பொருள்களுக்கு அதிகப்படியாக திறந்துவிடுவதுபோன்ற மத்தியதர வர்க்கப் பிரிவுகளின்கோரிக்கைக்கு குரல் கொடுப்ப தன்மூலமாக கணிசமான அளவு ஆதரவையும்வென்றெடுத்தது. அதே சமயம் ஆர்.எஸ்.எஸ்.பொதுச்சேவைகள் சரியான முறையில்இல்லாதததை பயன்படுத்தி அதனுடையசெல்வாக்கை பாடசாலைகள் மற்றும்சமூக சேவை அமைப்புகளின் வலைப்பின்னல்ஊடாக விரிவுபடுத்தியது.

1991க்குப் பின்னர்இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுமற்றும் உலக முதலாளித்துவ சந்தையைநோக்கி மிகவும் வெளிப்படையாகவும்நேரிடையாகவும் இந்தியப் பொருளாதாரம்மறுசீரமைப்பு செய்யப்பட்டது ஆகியவைஇந்திய குட்டி முதலாளித்துவத்தின் மத்தியில்முரண்பட்ட தாக்கங்களை உருவாக்கின.அது மேலும் சலுகைகளுக்கான விருப்பத்தைதூண்டியதுடன், அதே சமயம் பொருளாதாரமாற்றத்தின் வேகம் மற்றும் திசை பற்றியஅதன் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியதுடன்அதனுடைய மேற்கத்திய சகபாடிகள்தொடர்பாக அதற்கு இருந்த தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தியது.

இந்திய குட்டி முதலாளித்துவம் அதன் எதிர்காலம்பற்றி ஆர்வம் உடையதாகவும் அதன்தற்போதைய நிமைமைபற்றி தளர்வுற்றும்இருக்கையில், வல்லமை கொண்ட இந்துஎன்ற கடந்தகால கட்டுக்கதையில்ஆறுதல் அடைகின்றது. ஆர்.எஸ்.எஸ்.-னால்ஊக்குவிக்கப்பட்ட புத்திஜீவிகள் அநேகமாகஅனைத்து நவீன கண்டுப்பிடிப்புகளும் வேதங்களில்முற்கூட்டியேகூறப்பட்டுள்ளது என்றுவாதிடுகின்றனர். மற்றும் சிறுபான்மையினர்,முன்பு தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுவோர் மற்றும் உழைப்பவர்களுக்கு எதிராகதாக்குதல் நடத்துவதிலும் ஆறுதல் பெறுகின்றனர். இந்து ராஜ்யமானது கவலைப்படுகின்றகுட்டி முதலாளித்துவ தட்டுகளுக்கு ஒருதீவிரமான ஆனால் ஒரு ஒழுங்கான மாற்றத்தைஅதாவது அது இந்தியாவை ஏகாதிபத்தியத்தின்ஆதிக்கத்திற்கு கீழ்ப்படுத்தாமல் மேற்கின்அனைத்து நுகர்வுப்பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்யப் போவதாகபிரமையை வழங்குகின்றது.

 

கடுமையான நெருக்கடியில் உள்ள அரசாங்கம்

பி.ஜே.பி. தலமையிலான அரசாங்கம் ஒருகடுமையான நெருக்கடியில் உள்ள ஆட்சியாகும்.பாரளுமன்றத்தில் அதன் பெரும்பான்மைதாள் போன்று மெல்லியதாகும். அதுபல்வேறு மாநில அரசாங்கங்களைகலைப்பதற்கு அரசியல் அமைப்பின் அவசரசட்டங்களை பயன்படுத்தும்படி மத்தியஅரசாங்கத்திடம் கிளர்ச்சி செய்யும் கட்சிகளில்தங்கியிருக்கின்றது. மேலும் ஆசிய பொருளாதாரநெருக்கடியானது இந்திய பொருளாதாரத்தின்மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மூன்று மாதங்களே பதவியில் இருக்கையில்பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர்கள்அயோத்தி மற்றும் முக்கியமான விஷயங்கள்தொடர்பாக மீண்டும் மீண்டும் முரண்பட்டஅறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.கேள்விக்கு இடமின்றி இதில் ஒரு திட்டம் இருக்கின்றது.பி.ஜே.பி. தலைவர்களைப் பொருத்தவரையில்அவர்கள் ஆளும் கூட்டணியை ஒன்றாகவைத்திருக்க முயற்சிப்பதுடன், ஆர்.எஸ்.எஸ்இனதும் பி.ஜே.பி இனதும் உயர் அங்கத்தவர்களைஉள்ளடக்கிய தீவிர இந்து இனவாதிகள் மீதானவிசுவாசத்தையும் பராமரிக்க முயல்கின்றனர்.

ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் இற்க்கு இடையேயான முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதவை.அந்த இரு அமைப்புகளும் மிக நெருக்கமாகபிணைக்கப்பட்டிருந்தாலும் கூட அவைஒன்றல்ல. பி.ஜே.பி.யும் அதற்கு முன்னோடியானஜனசங்கமும் எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸ்.அல்லாத பகுதியினரையும் அதாவது இளவரசர்கள், பழைய ஜமீன்தார்கள் (நிலப்பிரப்புத்துவநில உடமையாளர்கள்), காங்கிரசிலிருந்துவிலகியவர்கள், மற்றும் ஆளும்வர்க்கத்தின்வட்டங்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது.பாராளுமன்றத்தில் பி.ஜே.பி.-இன் பாத்திரமும்,இப்பொழுது அரசாங்கத்தில் அதன்பாத்திரம் பி.ஜே.பி. தலமையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரியாளர்களுக்கு அவர்களின் தாய்அமைப்புகளிலிருந்து சுதந்திரமான சக்திக்கானஒரு தளத்தை வழங்கியுள்ளது. மற்றும்அது அவர்களை இந்தியாவின் மிகப்பெரும்தொழில் அதிபர்களின் நிதி மற்றும் அரசியல்ஆதரவிலும் அதிகப்படியாக சார்ந்திருக்கும்படியாகவும் உருவாக்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.-இல் அதிகம் பிரசாரம்செய்யப்பட்ட கட்டுப்பாடுஇருந்தபொழுதிலும் ஆர்.எஸ்.எஸ். அதன்இயல்பான தன்மையின் காரணமாகஸ்திரமின்றி இருக்கின்றது. அது ஒரு கூட்டிசைவானசமூகப்பொருளாதார வேலைத்திட்டத்தைஅடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.ஆனால் குட்டி முதலாளித்துவத்தின் முரண்பட்டமற்றும் நிலையில்லாத உணர்வுகளிலும், வெறுப்புக்கோளாறுகளிலும் தான் தங்கியிருக்கிறது.ஆர்.எஸ்.எஸ். அதன் குட்டி முதலாளித்துவபகுதியினரின் உண்மையான தேவைகளைதிருப்திபடுத்த முடியாமல் வெளித்தோற்றத்திற்க்குரிய, வகுப்புவாத, வாய் சவடால் மற்றும்வன்முறை அரசியலில் ஈடுபடவேண்டியதாகஇருக்கின்றது. நீண்ட காலப்போக்கில் வாஜ்பாயிஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமைதாங்கினாலும் சரி அல்லது ஒரு பெரும்பான்மையான பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு தலைமைவகித்தாலும் சரி அவரின் குட்டி முதலாளித்துவஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை அதிருப்தியடையசெய்யத்தான் முடியும்

எவ்வாறாயினும்தீவிரமான வலதுசாரி அபாயம் அதன் சொந்தபிரச்சனைகளினாலேயே வீழ்ச்சி அடையும்என்று முடிவுக்கு வருவதைவிட தொழிலாளவர்க்கத்திற்க்கு அபாயகரமானது வேறொன்றுமில்லை. பி.ஜே.பி. அதன் ஆதரவாளர்களை அதிகாரத்துவம் மற்றும் அரசின் ஒடுக்குமுறை படைகளின்தலைமை பதவிகளில் புகுத்த அரசாங்கஎந்திரத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாட்டைபயன்படுத்தும். இந்திய கப்பல் படையின்முன்னைய தலைவர் அட்மிரல் ஜே.ஜி.நட்கர்ணிசமீபத்தில் கீழ்க்கண்டவாறு எச்சரித்தார்:''இந்துத்துவாவிற்கான (இந்து ராஜ்யத்திற்குமறுபெயர்) ஆதரவு சந்தேகப்பட்டதைவிட மிகவும் பரந்தளவில் உயர் அதிகாரிகள்மத்தியில் இருக்கிறது''.

மிகமுக்கியமாக பிரதானமாக பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பின்னால் இருப்பதுபெரும் முதலாளித்துவமாகும். வாஜ்பாயிஅரசாங்கத்தின் இறுதி முடிவு எதுவாகஇருப்பினும், ஆளும் வர்க்கமானது சமூகசேவைகளை வெட்டுவது, தனியார் மயப்படுத்துவது மற்றும் நிலக்கட்டுப்பாட்டுகளைஅகற்றுவது போன்றவற்றின் மூலமாகஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இருக்கும்அனைத்து தடைகளையும் தகர்க்க முன்னோக்கிச் செல்லும். அதனால் விளையும் அமைதியின்மையைகட்டுப்படுத்தவும் திசைதிருப்பபும் அதுஜாதிவாதம், வகுப்புவாதம் மற்றும்எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களைபயன்படுத்தும்.

ஒரு அழிவை தவிர்க்கவேண்டுமாயின் இந்திய தொழிலாள வர்க்கம் ஒருபுதிய பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.அது ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாகஒழுங்கமைத்துக்கொண்டு தொழிலாளர்விவசாயிகள் அரசாங்கத்திற்கான ஒருஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும். தேசிய முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப்போராட்டத்தில்தொழிலாளர்கள் அவர்களின் பின்னால்விவசாயிகளையும் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ தட்டுக்களையும் அணிதிரட்டி, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான இந்திய மக்களின்போராட்டத்துடன் சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் போராட்டத்தை ஒன்றிணைக்கவேண்டும்.