World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
Clinton visit to the Indian subcontinent sets a new strategic orientation

கிளின்டனின் இந்தியத் துணைக் கண்ட விஜயம்: புதிய மூலோபாய தயாரிப்புக்கான ஆயத்தம்

By Peter Symonds
23 March 2000

ஒரு அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் 1978ல் ஜிம்மி கார்ட்டர் முதற் தடவையாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் இன்று இடம்பெறும் பில் கிளின்டனின் விஜயம், பாகிஸ்தானுடன் கொண்டிருந்த குளிர்யுத்த காலக் கூட்டாளி என்ற வாஷிங்டனின் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதாக அமைந்துள்ளது. அத்தோடு இந்தியாவுடன் இன்னமும் தற்காலிகமானதாக இருந்து கொண்டுள்ள ஒரு புதிய மூலோபாய, பொருளாதார உறவை நோக்கி காலடி வைப்பதாகும்.

ஒரு விதத்தில் பார்க்குமிடத்து கிளின்டனின் சுற்றுப் பயணம்- பங்களாதேஷ் ஒரு நாள் பயணம் தவிர- ஐந்து நாட்கள் இந்தியாவில் கழிந்துள்ளது. இந்தியாவில் ஒரு மென்பொருள்(Software), கணினி தொழிற்துறைகளின் மையமாகத் துரித வளர்ச்சி கண்டுவரும் ஹைதராபாத் உட்பட ஐந்து நகரங்களுக்கு கிளின்டன் விஜயம் செய்தார். சனிக்கிழமை பாகிஸ்தானில் ஆக ஐந்து மணித்தியாலங்களை கழிப்பார். இந்தப் பயண ஏற்பாடுகளின் ஏற்றத்தாழ்வுகள் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் வாஷிங்டன் விடுத்துக்கொண்டுள்ள அரசியல் செய்திகளின் வேறுபட்ட தன்மையோடு பெரிதும் ஒத்து, இணைந்து செல்கின்றது.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் ஒரு கூட்டு "எதிர்காலநோக்கு" அறிக்கையில் கைச்சாத்திட்டார். அது "உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு" இடையேயான "ஒரு நெருக்கமானதும் பண்புரீதியானதுமான புதியஉறவைத்" தளிர்விடச் செய்யும் என உத்தரவாதமளித்தது. இந்தப் பத்திரம் "பல விதத்தில்" "21ம் நூற்றாண்டின் உலக சமாதானம், செழிப்பு, ஜனநாயகம், சுதந்திரத்தின் பேரிலான எமது ஒத்துழைப்பின் வெற்றியில் தங்கியுள்ளதாக" பிரகடனம் செய்கின்றது.

ஒரு தீவிர வலதுசாரி கூட்டான பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான ஒரு கூட்டரசாங்கத்துடனான வாஷிங்டனின் புதிய பங்குடமை, இந்து சோவினிச நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் உக்கிரமாக்கும் நோக்குடன் உருவானது. இதைக் கிளின்டனோ அல்லது அமெரிக்க வெகுஜனத் தொடர்புச் சாதனங்களோ குறிப்பிடவும் இல்லை; விமர்சனம் செய்யவும் இல்லை.

கிளின்டனின் இந்த இந்திய விஜயம் மேலும் முன்னேற்றம் காணும் விதத்தில் வாஷிங்டன் இந்தியாவுக்கு கணிசமான சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த விஜயம் பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1998 மே மாதத்தில் புதுடில்லி ஐந்து அணுவாயுதக் குண்டு வெடிப்புக்களில் ஈடுபட்டதன் காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சொற்பகாலத்தினுள் பாகிஸ்தானும் அத்தகைய அணுவாயுதப் பரிசோதனைகளில் இறங்கியது. அமெரிக்கா இந்த இரண்டு நாடுகளுக்கும் எதிராக பொருளாதார, தொழில்நுட்பத் தடைகளை விதித்ததோடு, இவ்விரு நாடுகளையும் ஒரு அணுவாயுத பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கையெழுத்திடும்படியும் நெருக்கியது. கடந்த ஒரு சில மாதங்களுள் கிளின்டன் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் சிலவற்றைத் தளர்த்தியதோடு மட்டுமன்றி இந்த அணுவாயுத பரிசோதனைத்தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் உடன்பாட்டை வாஜ்பாய் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வது அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் ஒரு முன்நிபந்தனை அல்ல என்பதையும் எடுத்துக் காட்டியது.

கிளின்டன், இஸ்லாமாபாத்தில் ஒரு குறைந்த நேரம் தரித்துச் சென்றாலும் கூட பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் இது அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் ஒரு ஆய்வுக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானுடனான நீண்டகாலப் பிணைப்புக்களை தொடர்ந்தும் பராமரிக்க பாகிஸ்தானுக்கு கிளின்டன் விஜயம் செய்வது அவசியம் என சீ.ஐ.ஏ, பென்டகன் (Pentagon) அதிகாரிகள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்தே இந்த மாத ஆரம்பத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கிளின்டன் இஸ்லாமாபாத்தில் தங்கியிருக்கும் போது கடந்த அக்டோபரில் ஒரு இராணுவச் சதியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பாகிஸ்தானியத் தலைவர் ஜெனரால் முஷாராப்பினை பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு திரும்புமாறும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை குறிப்பாக பாகிஸ்தானிய பிராந்தியத்தில் இருந்து செயற்படும் காஷ்மீர் தீவிரவாதிகளை- அடக்கும் ஒரு காலஅட்டவணையை தயார் செய்யும்படியும் பகிரங்கமாகவே நெருக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது.

கிளின்டன், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை எதிர்த்த ஆளும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த விஜயம் பாகிஸ்தான் இராணுவ ஜுன்டாவை அங்கீகரிப்பதாக நோக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினார்கள். முஷாராப் ஆட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதில் இருந்து சகல வேலை நிறுத்தங்களையும் தடை செய்தது. அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்தது. அத்தோடு பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஷ் ஷரீப்புக்கும் அவரது பல உயர் மட்ட ஆதரவாளர்களுக்கும் எதிராக பயங்கரவாதம், விமானக் கடத்தல், கொலை முயற்சி போன்ற போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களை விசாரணைக்கு நிறுத்தியது. ஷெரீப் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என அரசு தரப்பு வாதிட்டுக் கொண்டுள்ளது.

இரு முக்கிய தரப்பினையும் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணும்படி ஊக்குவிக்கும் பொருட்டே கிளின்டனின் இஸ்லாமாபாத் விஜயம் இடம் பெறுவதாகக் காட்ட கிளின்டனின் உதவியாளர்கள் முயற்சிக்கின்றார்கள். கடந்த ஆண்டு பாகிஸ்தானிய ஆதரவு பிரிவினைவாதிகள் இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கார்கில் பிராந்தியத்தில் விரகி முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளைக் கைப்பற்றியதோடு, இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன. வேறு சிலர் முஷாராப் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேலாதிக்கம் கொண்ட ஒரு ஆட்சிக்கு எதிரானவர்களில் ஒரு முக்கியஸ்தர் என வாதிட்டனர்.

உண்மையில் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாகிஸ்தானில் மட்டும் அல்ல வேறு எங்கும் சரி இராணுவ சர்வாதிகாரம் அமெரிக்க நலன்களுடன் ஒத்துப் போகுமிடத்து அதை ஒரு போதும் வெறுத்து ஒதுக்கியது கிடையாது. வேறுபட்ட சூழ்நிலைகளின் கீழ் கிளின்டனின் கயிறுதிரிப்பு நடவடிக்கையானது, பாகிஸ்தானுடன் ஒரு "எதிர்கால நோக்கு" அறிக்கையில் கையொப்பமிடுவதை நியாயப்படுத்துவதிலும் இந்து அடிப்படைவாதத்தினை இந்தியாவில் வாந்தியெடுப்பதன் மூலம் கலகத் தடுப்பு சட்டத்தை பாரதீய ஜனதா கட்சியை கொண்டு இயற்றுவதிலும் பெரிதும் வல்லது. இந்தியாவுக்கு இராஜதந்திர பூச்செண்டும் பாகிஸ்தானுக்கு அரசியல் செங்கட்டித் துண்டும் வழங்கும் இன்றைய நிலைப்பாடு, ஜனநாயகம் அல்லது பிராந்திய சமாதானம் மீதான அக்கறையினால் அல்ல மாறாக மிகவும் அடிப்படையான பொருளாதார, மூலோபாய நலன்களால் நிர்ணயம் செய்யப்பட்டதாகும்.

பொருளாதாரக் கணிப்பீடுகள்

கிளின்டனின் விஜயத்துக்கான முக்கிய காரணி, அமெரிக்கக் கூட்டுத்தாபனங்களுக்கு இந்தியத் துணைக் கண்டத்தின்- குறிப்பாக இந்தியா- வளர்ச்சிகாணும் பொருளாதார முக்கியத்துவமேயாகும். ஒரு அமெரிக்க ஜனாதிபதி முதற் தடவையாக பங்களாதேசுக்கு ஒரு குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டதன் முக்கிய காரணம், அந்நாட்டில் இருந்துகொண்டுள்ள கணிசமான எரிவாயு துறையில் அமெரிக்க முதலீடுகளைப் பற்றிக் கலந்துரையாடுவதேயாகும். கிளின்டன் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பங்களாதேசுக்கான அமெரிக்க உதவித் திட்டத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்தார். இது மிகவும் கேவலமான 97 மில்லியன் டாலர் உணவுப் பொருள் உதவியையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. உலகின் வறிய நாடுகளில் ஒன்றான பங்களாதேசுக்கு இத்தொகை தலைக்கு 1 டாலருக்கும் குறைவானதாகும்.

இவற்றுக்கு பின்னணியில் இயற்கை வாயுவை ஏற்றுமதி செய்வதை அனுமதிக்க பங்களாதேஷ் அரசாங்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றன. அமெரிக்க வலுவள செயலாளர் பில் றிச்சாட்சன் உட்பட்ட அமெரிக்க அதிகாரிகள் இதற்கான சம்மட்டி அடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்க எண்ணெய் கம்பனிகள் தமது முதலீட்டை பங்களாதேஷில் ஏற்கனவே அதிகரித்துள்ளனர். 1996ல் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களாக விளங்கிய இந்த முதலீடு இன்று 700 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது 'டைம்'சஞ்சிகையின் தகவல்களின்படி அமெரிக்க வலுத் திணைக்களம் 15 பில்லியன் டாலர்களுக்கும் 20 பில்லியன் டாலர்களுக்கும் இடையேயான முதலீட்டுத் திட்டங்களுக்கான வாய்ப்புகள் தென் ஆசியாவில்- முக்கியமாக இந்தியாவில்- இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனா தொடர்பாகக் காட்டப்பட்ட அக்கறைக்கு சமமான விடயங்கள் இன்று இந்தியா சம்பந்தமாக அனைத்துலக நிதி வட்டாரங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 1990 களில் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் சுமார் 6 வீதம் ஆகும் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி வந்துள்ளனர். விரிவடைந்து வரும் மத்தியதர வர்க்கத்தின் எண்ணிக்கை 30 மில்லியனுக்கும் 180 மில்லியனுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டது. ஏற்றுமதிக் கைத்தொழிலும் வளர்ச்சி கண்டு வந்தது.

இந்தியாவுக்கான மாஜி அமெரிக்கத் தூதுவர் பிராங் வைஸ்னர் 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகையில் பெரும் ஆர்வத்துடன் எழுதிய கட்டுரையில் எதிர்வரும் ஆண்டில் இந்தியாவில் மின் வலு உற்பத்திச் சாதனங்களுக்காக 250 பில்லியன் டாலர்களும் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கென 100 பில்லியன் டாலர்களும் செலவழிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். "நாம் முன்னேறிச் செல்லுகையில் ஒரு வசதி வாய்ப்பான அந்தஸ்தை சிருஷ்டித்துக் கொள்ளும் விடயங்களில் முன்னெடுத்துச் செல்லும் சில சக்தியைப் பெறுவதற்கு அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் வேரூன்றுவதற்கு இந்த விஜயம் ஒர் பயங்கரமான சந்தர்ப்பமாகும்" என அவர் குறிப்பிட்டார். அத்தோடு அமெரிக்கக் கூட்டுத்தாபனங்கள் முதலீட்டுக்கு சாத்தியமான பிராந்தியங்களாக மருந்து வகைகள், விமானத்தள கருவிகள், உணவு தயாரிப்பு எரிவாயு, எண்ணெய் உட்பட்ட சுரங்கத்தொழில், பொறியியல் கருவிகள், விளையாட்டுப் பொருட்களில் கண்வைத்துள்ளன.

ஆனால் இந்தியாவில் வளர்ச்சி கண்டுவரும் கணினி மென்பெருள் தொழில்நுட்ப தொழிற்துறைக்கான பெரும் விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை அடிப்படையாகக் கொண்டுள்ள உயர் தொழில் நுட்பக் கம்பனிகள் நாட்டின் பிரமாண்டமான பட்டதாரித் தடாகத்தினைச் சுரண்டிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. கணினி நிகழ்ச்சித் திட்டத்தில் உக்கிரமான வேலையின் உழைப்பை வழங்குவதற்காக இவர்களுக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்களின் சகாக்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் ஒரு துளியே வழங்கப்படுகிறது. மக்கின்சி அன்ட் கம்பனியின்- ஒரு முகாமையியல் ஆலோசனை நிறுவனம்- அறிக்கையின் படி இந்தத் தசாப்தத்தின் முடிவில் இந்திய மென்பொருள் தொழிற்துறை 87 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கக் கூடியதாக உள்ளதோடு 2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

பிரித்தானியாவில் வெளியிடப்படும் எக்கோனமிஸ்ட் (Economist) சஞ்சிகையில் வெளியான "யானையும் சப்பை மூஞ்சி நாயும்" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாவது: "பூஜ்யம் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக இந்தியா உடனடியாக விற்பனை செய்யக் கூடிய ஒரு உற்பத்திப் பொருளையும் அதனை விற்பனை செய்வதன் மூலம் இலாபத்தை ஈட்டிக் கொள்ளவும் முடிந்துள்ளது. இவை எல்லாம் இந்தியாவை உலகின் ஏனைய பாகத்துடன்- சிறப்பாக புதிய முறையில் அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளவும் செய்துள்ளது. மென்பொருள் (Soft ware) ஏற்றுமதிகள் ஒரு ஆண்டுக்கு 50 சத வீதம் வளர்ச்சி கண்டுவருவதோடு அவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகம் அமெரிக்காவுக்குச் செல்கின்றது. இவற்றில் பெரும் பகுதி தற்காலிக வேலை வீசா (Visa)வின் அடிப்படையில் இந்தியர்களால் பழுது பார்க்கப்படுகிறது. இந்தியா இதில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுகின்றது. அத்தோடு திரு.கிளின்டன் அதனை அதிகரிப்பார் எனவும் எதிர்பார்க்கின்றது. இந்திய கம்பனிகள் அமெரிக்கப் பங்குமுதல் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகரித்த முறையில் செல்வந்த சமூகமாகிவரும் இந்திய அமெரிக்கர்கள் இந்தியாவின் சார்பில் தாம் சுவீகரித்துக் கொண்ட நாட்டில் ஆதரவு திரட்டி வருவதோடு தமது தேசிய நிலத்தில் முதலீடும் செய்து கொண்டுள்ளார்கள். இந்திய மூளையை ஒரு பூகோளரீதியில் ஏலமிடும் யுத்தமும் வெடித்துள்ளது."

அமெரிக்க நிர்வாகம், வாஜ்பாய் அரசாங்கத்தை இந்தியாவில் கட்டித் தழுவிக் கொண்டமையானது அமெரிக்க கூட்டுத்தாபனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிய பிரச்சாரம் நீண்ட தூரம் சென்றுள்ளதைக் காட்டுகின்றது. இந்தியாவிலும் அனைத்துலக ரீதியிலும் ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பகுதியினர் கம்பனி முதலீட்டாளர்கள் கோரிவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த சாதனம் இந்து சோவினிச பாரதீய ஜனதா கட்சியினரே எனக் கணக்குப் போட்டுக் கொண்டுள்ளனர். இது அரசுடமைக் தொழிற்துறைகளை தனியுடமையாக்குதல், நாட்டின் வரையறுக்கப்பட்ட சமூக சேவைகளையும் உதவி மானியங்களையும் வெட்டித் தள்ளுதல், வர்த்தக, முதலீட்டுத் தடைகளை அகற்றுதல் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. 1990களில் நடைமுறைக்கிடப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதேச நாணய நிதியமும் மற்றும் நிதி நிறுவனங்களும் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தப் போக்கினை தொடர்ந்தும் உக்கிரமாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

'எக்கோனமிஸ்ட்' (Economist) சஞ்சிகை அமெரிக்காவும் ஏனைய சக்திகளும் பாரதீய ஜனதா கட்சியின் இந்து தீவிரவாதத்தையிட்டு சட்டை செய்யாமல் விடுவதன் பின்னணியில் உள்ள காரணிகளையிட்டு ஜாடை காட்டின. இது குறிப்பிட்டதாவது: 1991ல் இருந்து இந்தியா "தனது பொருளாதாரத்தை உலக வர்த்தகத்துக்கு திறந்து விட்டுள்ளதோடு, தனியார்மயமாக்கத்தையும் ஆரம்பித்தது. ஆயினும் இந்த இரு அம்சமும் பெரிதும் மெதுவாக இடம்பெற்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சியின் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான கூட்டரசாங்கம், உண்மையில் இந்தப் போக்கை விரைவுபடுத்தியது. இந்து தேசியவாதக் கட்சி ஒரு அன்நியர் எதிர்ப்பு கோடுகளைக் கொண்டிருந்த போதிலும் சுதந்திரத்துக்கு பின்னைய 50 வருட காலத்தில் இந்திய அரசியலில் மேலாதிக்கம் கொண்டிருந்த எதிர்க் கட்சியான காங்கிரசைக் காட்டிலும் வர்த்தகர்களுடன் நட்புறவு கொண்டிருந்ததோடு கம்யூனிசத்துக்குப் பெரிதும் எதிர்ப்புக் காட்டியது. இந்நாட்களில் இந்தியா பொருளாதார சபைகளில் அதிகரித்த அளவில் பெரிதும் மதிப்புடன் கணிக்கப்படுகின்றது. உலக வர்த்தக அமைப்பில் (WTO) புதிய பொருளாதார, வர்த்தகப் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் இந்தியாவும் அமெரிக்காவும் தாம் ஒரே புறத்தில் நின்று கொண்டதைக் கண்டன."

கிளின்டன் இந்தியாவின் சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதிய பொருளாதார மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தைக் காட்டிலும் மேலும் அதிக அளவில் முன் செல்ல வேண்டும் என நெருக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. மும்பாயில் கடந்த நவம்பரில் இடம் பெற்ற ஒரு அமெரிக்க முதலீட்டு உச்சி மாநாட்டில் சுப் (Chubb) கூட்டுத்தாபனத்தின் அதிபரும் அமெரிக்க- இந்திய வர்த்தக சபைத் தலைவருமான டீன் ஓ ஹரே, மேலாய முதலீட்டு உறவுகளுக்கு இரு முக்கிய தடைகள் இருந்து கொண்டுள்ளதாக அதாவது: உடன்படிக்கைகளின் புனிதத்துக்கு மரியாதைகாட்டாமையும் "பொருளாதார சீர்திருத்தங்களின் மெதுவான பயணமும்" என மிகவும் அவதானத்துடன் குறிப்பிட்டார்.

'எக்னோமிஸ்ட்' சஞ்சிகை மேலும் குறிப்பிட்டதாவது: "...இந்தியப் பொருளாதாரம் அதனது இன்றைய சாதனைகளைக் காட்டிலும் பெரிதும் அதிர்ச்சி தரும் இயலளபைக் கொண்டுள்ளது. கொள்வனவு சக்தியின் அடிப்படையில் இது உலகின் ஐந்தாவது பெரும் பொருளாதாரமாக இருந்த போதிலும் இது உலக வர்த்தகத்தில் 1 வீதத்துக்கு குறைவாகவே கொண்டுள்ளது. 1998ல் வெளியீட்டு முதலீட்டில் 2.5 பில்லியன் டாலர்களுக்கு குறைவான தொகையையே ஈர்த்துக் கொண்டுள்ளது. இது சீனாவின் இருபதில் ஒரு பங்காகும். எந்த ஒரு வேறு தனி ஒரு நாட்டைக் காட்டிலும் அமெரிக்கா இந்தியாவில் ஒரு பெரிய பொருளாதாரக் கழு மரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தகம் காய்ந்து போகும் நிலையில் பற்றாக் குறையானதாகவே கணக்கில் கொள்ளப்படும்."

மூலோபாய மறு தகவமைவு

கிளின்டன் இந்தியாவில் இருப்பது வெறுமனே பொருளாதார வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக மட்டும் அல்ல. எவ்வாறெனினும் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான மூலோபாய உறவுகளுக்கான சாத்தியங்களைத் தெரிந்து கொள்ளவே இருந்து கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வெளியான "இன்டர்நஷனல் ஹொரால்ட் றிபியூன்" (International Herald tribune) "அடிக்கடி சச்சரவிட்டுக் கொண்ட அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே பக்கத்துக்கு வந்துள்ளன." என்ற தலைப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மடலின் ஆல்பிரைட் சுட்டிக்காட்டிய விடயங்கள் வெளியாகிருந்தன. அதில் கிளின்டனின் இந்திய விஜயத்துக்கு பின்னணியில் இருந்துகொண்டுள்ள அமெரிக்கக் கணிப்புக்களில் சில மறைமுகமான விதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. குளிர் யுத்த காலத்தில் பெரும் பகுதியில் இந்தியாவுடன் இருந்து வந்த பகைமையான உறவுகளைச் சுற்றிவளைத்துக் குறிப்பிட்டதன் பின்னர் மடலின் ஆல்பிரைட் தெரிவித்துள்ளதாவது: "எவ்வாறெனினும் இன்று பரஸ்பரம் நம்பிக்கையீனம் மாற்றமடையத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் எமது இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் இடையே எப்போதும் ஒரு விதமான இயற்கையற்றதும் வருந்தத்தக்கதுமான உறவுகள் இருந்து வந்ததையிட்டு உணரத் தொடங்கியுள்ளன."

இந்தக் குளிர் யுத்த காலப் பகுதியில் இந்தப் பிராந்தியம் தொடர்பான அமெரிக்கக் கொள்கை பாகிஸ்தான் பக்கம் 'சாய்ந்து' போய்க் கிடந்தது. பாகிஸ்தானில் பெரிதும் நிலவி வந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு வாஷிங்டன் இந்தியாவுக்கு எதிராக இராஜதந்திர, இராணுவ, நிதி உதவிகளை வழங்கி வந்தது. இந்தியா கூட்டுச்சேரா நாடுகளின் அணி எனப்படுவதன் ஒரு பாகமாக இருந்த போதிலும் மாஜி சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1980 களில் அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொண்டிருந்த உறவுகள் மேலும் பலம் கண்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சோவியத் ஆட்சியாளர்களுக்கு எதிரான தமது யுத்தத்தில் சீ.ஐ.ஏ (CIA) இந்நாட்டினை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்கு நிதியீட்டம் செய்வதற்கும் பயிற்சியளிப்பதற்குமான ஒரு தளமாக்கிக் கொண்டன.

ஆனால் சோவியத்யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தப் பிராந்தியம் தொடர்பான அமெரிக்க மூலோபாயம் மாற்றம்கண்டது. பிரமாண்டமான அளவில் எண்ணெய், இயற்கை வாயு, கனிப் பொருள் வளங்களை சுரண்டிக் கொள்வதற்கு அமெரிக்ககூட்டுத்தாபனங்கள் ஐரோப்பாவுடனும் மற்றும் போட்டியாளர்களுடனும் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில் தானே ஆதரவு வழங்கி அணிதிரட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் தனது நலன்களுக்கு ஒரு ஆபத்தாக இருந்து கொண்டுள்ளதாக இன்று அமெரிக்கா கணித்துக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, சவூதி அரேபியாவின் கோடீஸ்வரரான ஒஸாமா பின் லேடனுக்குத் தொடர்ந்தும் புகலிடம் கொடுத்து வருவதற்கு எதிராக ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த ஒஸாமா பின் லேடன் கென்யாவிலும் தன்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டு வீச்சு நடாத்த ஏற்பாடு செய்தவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தளங்களைக் கொண்டுள்ள- ஈடாட்டம் கண்ட மத்திய ஆசிய குடியரசுகளின் பல ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுக்களின் நடவடிக்கைகளையிட்டும் கவலை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் கார்கில் தகராறின் போது கிளின்டன் இந்தியாவுக்கு ஒரு அப்பட்டமான பூர்வாங்க அரசியல் ஆதரவை வழங்கினார். இந்தியப் பிராந்தியத்தில் இருந்து கொண்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதை வாபஸ் பெறும்படி நவாஷ் ஷெரிபின் பாகிஸ்தானிய அரசாங்கத்தை நெருக்கினார். எவ்வாறெனினும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் சில காலமாக இடம் பெற்று வந்துள்ளன. 1998ம் ஆண்டின் அணுவாயுத பரிசோதனை நடவடிக்கைளைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதட்ட நிலையைத் தணிக்கும் போர்வையில் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ஸ்ரொப் டல்பொட்டுக்கும் இந்திய வெளிநாட்டு அமைச்சர் ஜஸ்வந் சிங்குக்கும், இந்திய- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயும் முன்னொருபோதும் இல்லாத அளவிலான நீண்ட எட்டுச் சுற்று "மூலோபாய பேச்சுவார்த்தைகள்" இடம் பெற்றுள்ளன. கார்கில் மோதுதல்களின் பின்னர் அமெரிக்க, இந்திய உளவுச் சேவையினர் "பயங்கரவாதத்தை எதிர்க்கும்" பேரில் மிகவும் நெருக்கமாக சேர்ந்து செயற்படத் தொடங்கினர்.

கிளின்டனின் இந்திய விஜயத்தின் மூலோபாய விவகாரங்களை மூடி மறைப்பதில் அமெரிக்கா கவனமாக இருந்து கொண்டுள்ளது. அது இந்திய பக்கம் 'சாய்ந்து' கொண்டுள்ளதாக காட்டிக் கொள்வதை சுட்டிக் காட்டுகின்றது. ஆல்பிரைட் தனது கட்டுரையில் அமெரிக்காவின் "முதலாவது பாதுகாப்பு விவகாரமாக" இந்தியாவின் அணுவாயுத உற்பத்திக் குதம் இருந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெரிதும் சிரமத்துடன் "அமெரிக்கா இந்தியாவின் ஏவுகணைகளையோ அல்லது அணுவாயுதங்களையோ ஒரு நேரடி அச்சுறுத்தலாக கருதவில்லை எனச் சுட்டிக் காட்டுவதோடு முடிந்த மட்டும் சாத்தியமான அளவில்இந்தியா தனது பாதுகாப்பு அவசியங்களை பெரிதும் பெருக்கிக் கொள்ளக் கூடாது என்பதையிட்டே அக்கறை காட்டுகின்றோம்" என்றுள்ளார்.

கிளின்டனின் இந்திய விஜயத்தின் போது இந்தியா அணுவாயுத உற்பத்தித் தடை ஒப்பந்தத்தில் (CTBT) கைச்சாத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தவில்லை என்ற உண்மையும் சேர்ந்து கொண்டுள்ளது. இந்திய ஆளும் வட்டாரங்களில் இச் செய்தி அணுவாயுதங்களைக் கொண்ட இந்தியாவுக்கான ஒரு மறைமுகமான அங்கீகாரமாக அர்த்தம் செய்யப்பட்டுள்ளது. கார்கிலில் இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் இந்தியக் கமிட்டியின் தலைவரான எல்.சுப்பிரமணியம் அப்பட்டமாகத் தெரிவித்ததாவது: "அணுவாயுத சோதனைகளின் இரண்டு வருடங்களின் பின்னர் இடம் பெறும் இந்த விடயம் ஒரு விடயத்தை குறித்து நிற்கின்றது. அணுவாயுத மேலாதிக்கம் கொண்டவர்களின் கூப்பாட்டுக் கோரிக்கைகளுக்கு பணிந்து போக இந்தியா எதுவும் செய்யாததோடு அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார். சகலவிதமான கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்குப் பதிலாக அமெரிக்கா யதார்த்தத்தை அங்கீகரிக்கின்றது."

காஷ்மீர் சம்பந்தப்பட்ட முக்கிய விவகாரத்திலும் கூட அமெரிக்கா இந்தியாவின் திசையில் சாய்ந்து கொண்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை. ஆதலால் இந்தியா அனைத்துலக மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ளாது என்ற இந்திய அரசாங்கத்தின் நீண்டகால வலியுறுத்தலுக்கு இணங்கிப் போகும் விதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சச்சரவில் தனிப்பட்ட ரீதியில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களையும் கிளின்டன் தள்ளிபோட்டுள்ளார். மேலும் 1971ம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொணர பாகிஸ்தானுக்கும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான காஷ்மீருக்கும் இடையே ஸ்தாபிதம் செய்யப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of control- LOC) மதித்து நடக்க வேண்டும் எனவும் ஆல்பிரைட் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆல்பிரைட்டின் அறிக்கையை இராஜதந்திர பாஷையில் மொழி பெயர்க்குமிடத்து பாகிஸ்தானில் இருந்து ஜம்மு, காஷ்மீருக்குள் ஊடுருவிக் கொண்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாத போராளிகளுக்கு எதிராக விடுக்கப்பட்டதாகும்.

கிளின்டன் தனது இந்திய விஜயத்துக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்தை "உலகின் மிகவும் பயங்கரமான இடமாக" வருணித்திருந்தார். பிராந்தியத்தில் பதட்ட நிலையை தணிப்பதையும் ஒரு நீண்ட சமாதானத்தை- குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே- ஸ்தாபிதம்செய்வதையும் இலக்காகக் கொண்ட சாதனமாக தமது பயணத்தை கிளின்டன் காட்டிக் கொண்டார். பாரதீய ஜனதா கட்சியின் தீவிரவாதிகளின் ஆட்சி இடம்பெறும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து கொண்டுள்ளதை நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவை சமாதானத்துக்கு இட்டுச் செல்வதற்கு மாறாக ஏற்கனவே உலகின் ஈடாட்டம் கண்ட பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டை மேலும் குழப்பியடிப்பதாக விளங்கும்.

இந்தியா பாகிஸ்தான் தொடர்பாகவும் அப்பிராந்தியம் பூராவும் பெரிதும் உக்கிரமான நிலைப்பாட்டை வகிக்க வேண்டும் என்பது தொடர்பாக புதுடில்லியில் இடம் பெறும் பேச்சுவார்த்தையின் அறிகுறிகளை சுப்பிரமணியத்தின் கருத்துக் காட்டிக் கொண்டுள்ளது. உண்மையில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்புச் செலவீனங்களை 28 சதவீதத்தினால் அதிகரிக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் "வறையறுக்கப்பட்ட யுத்த" சித்தாந்தத்தை விற்பனைக்கு விடப் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் யுத்தத்தில் ஈடுபடும் அல்லது அணுவாயுதங்களைக் கையாளாமல் முழு அளவிலான பாரம்பரிய யுத்தத்தில் ஈடுபடும் ஆபத்தை இக்கருத்துக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதும் இந்தியாவுடன் நீண்டகால எல்லைப் பிரச்சினையைக் கொண்டுள்ளதுமான சீனாவுக்கு எதிராக ஒரு அணுவாயுத இந்தியாவை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்ற பெரிதும் ஆபத்தான கருத்துக்கும் வாஷிங்டனில் வரவேற்புக் கிடைத்துள்ளது. 'இக்கனோமிஸ்ட்' சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரை மேற்சொன்ன கருத்தைச் சுட்டிக் காட்டிக் கூறியதாவது: இந்திய, அமெரிக்க நலன்களுக்கு இடையேயான இடைவெளி குறுகிக் கொண்டு போவது இரண்டாவது முக்கிய விடயமாகும். அது இந்த விஜயத்தில் அப்பட்டமாகக் குறிப்பிடப்படாது போகலாம் அது இதுதான்: "சில மூலோபாயவாதிகள் இந்தியாவை சீனாவுக்கு சமபலமானதாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.உலகம் இந்தியா கிட்டத்தட்ட சீனாவுக்கு சமமான சனத்தொகையை கொண்டுள்ளதை உலகம் அவதானிக்க தொடங்கியுள்ளது. அத்தோடு பெரிதும் தீவிரம் இல்லாத அரசாங்க முறைகளையும் கொண்டுள்ளது. தனது அயலவரைப் பற்றி திட்டமும் இல்லாதுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சீன இராஜாளிகள் இரு பெரும் ஜனநாயகங்களுக்கும் இடையேயான ஒரு "மூலோபாய பங்குடமை" பற்றி கனவு காண்கின்றன."

அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ "தமது நட்புக்கள் ஒரு சீன எதிர்ப்பு அச்சிலான ஒரு தொடக்கமாக நோக்கப்படுவதை" விரும்பவில்லை என இக்கட்டுரை குறிப்பிட்ட போதிலும் "புரூங்கிங்ஸ் இன்ஸ்ரிரியூட்டின்" றிச்சாட் ஹாஸ், 'வாஷிங்டன் திங் டாங்' (Washington think- Tank) போன்றவை அமெரிக்காவும் இந்தியாவும்; ஆசியா அத்தோடு சீனா சம்பந்தமான ஒரு அணுகுமுறைக்கு இணக்கம் காணுமா என்பதையிட்டு ஆச்சரியம் தெரிவித்துள்ளன. சிலவேளை இணக்கம் காணாது போகலாம். இருப்பினும் சீனா எதிர்ப்புக் காட்டுமானால் இன்றைய உறவுகள் நாளைய கூட்டுக்களாக மாறலாம். கிளின்டனுக்கும் வாஜ்பாய்க்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் சரியான தன்மையை கணக்கில் எடுக்காது போனாலும் அமெரிக்காவுடனான ஒரு நெருங்கிய உறவானது அமெரிக்காவை பிராந்தியத்தினுள் ஒரு பெரிதும் உக்கிரமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தள்ளும். கிளின்டன் இஸ்லாமாபாத்திலும் தரித்துச் சென்றமை அமெரிக்கா கட்டவிழ்த்து விடும் எதையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு ஒரு பின்னணியாக இருந்து கொண்டுள்ளது. இந்தக் கணிப்பில் சந்தேகம் கிடையாது. உத்தரவாதம் இல்லாததும் பெரிதும் ஈடாட்டம் கண்டதுமான காலப்பகுதியில் முடிவுக்கு வந்த குளிர் யுத்தத்தைக் கடைப்பிடிப்பதை தொடர்ந்தது. அமெரிக்கா தனது சகல முட்டைகளையும் ஒரே பொதியில் போட்டு வைக்க விரும்பவில்லை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒவ்வொரு காலை வைப்பதன் மூலம் ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக தூண்டி விட முடிந்துள்ளதான இந்த விளையாட்டு பேராபத்து நிறைந்ததாகும்.