ரஷ்ய புரட்சியும்
முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

WSWS : Tamil : நூலகம
ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்
 
1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?
 
வரலாற்றின் நீண்ட 
நிழல்: மாஸ்கோ 
வழக்குகள்
, 
அமெரிக்க தாராளவாதம்
மற்றும்
 அமெரிக்காவில் 
அரசியல்
 சிந்தனையின் 
நெருக்கடி

 

அங்கே ஸ்ராலினிசத்திற்கு 
ஒரு
 மாற்றீடு இருந்ததா?

 

சோசலிசத்திற்கு தொழிற்சங்கங்கள் ஏன் குரோதமாக இருக்கின்றன
 
ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும், புரட்சியும்
 

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

 

லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்

 
 
 

Foreword to The Russian Revolution and the Unfinished Twentieth Century

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

முன்னுரை

By David North
1 August 2014

Use this version to printSend feedback

டேவிட் நோர்த்தின் வெளிவரவிருக்கும் புத்தகம்; ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் (416பக்கங்கள்; ISBN 978-1-893638-40-2), மெஹ்ரிங் நூலகத்தில் உங்கள் பிரதிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் ஆவார்.

* * * * * *

1914 ஆகஸ்ட்டில் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டானது அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஒரு தனித்துவமான காலகட்டம் என்பதில் வரலாற்றாளர்கள் மத்தியில் ஒரு பரந்த உடன்பாடு இருக்கின்றது. ஆனால் எப்பொழுது நூற்றாண்டு முடிவுற்றது அல்லது ஒரேயடியாய் முடிவுற்றிருக்கிறதா என்ற கேள்வியானது தீவிர விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றது. இந்த கருத்துமோதலானது, எடுத்துக்கொள்ளப்பட்ட 100 ஆண்டு காலப்பகுதியினை பொதுவாக கால அளவீடு செய்வது பற்றியதல்ல. 1900கள் முடிந்துவிட்டன நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பது தெளிவானதே. இரண்டாம் பத்தாண்டின் மத்தியில் இருப்பினும் இப்போதும்கூட, எமது உலகமானது இருபதாம் நூற்றாண்டின் ஈர்ப்புக்குரிய செல்வாக்கு எல்லைக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்கிறது. வரலாற்றாளர்கள் கடந்த நூற்றாண்டினை சினத்துடன் திரும்பிப்பார்ப்பார்களாயின், அதற்கான காரணம் மனிதகுலமானது அரசியல், பொருளாதாரம், மெய்யியல் மற்றும் கலைத்துறை செயற்களங்களில் கூட அதனது முடிவுசெய்யப்படாத கருத்துமோதல்களில் இன்னும் போராடிக் கொண்டிருப்பதேயாகும்.

அண்மைக்காலம் வரைக்கும், வரலாற்றாளர்கள் இருபதாம் நூற்றாண்டானது வெற்றிகரமானவகையில் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது என்று மிதமான அளவில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1989ல் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் முதலாளித்துவ வெற்றிவாத அலையை இயங்கும்படி செய்வித்ததுடன், அது சிறு எதிர்ப்புடன் உலகம் முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்களை சூழ்ந்தது. பேராசிரியர் குழாம், அண்மைய செய்தித்தாள் தலைப்புச்செய்திகள் மற்றும் ஆசிரியர் தலையங்க கட்டுரைகளுக்கு அணி பொருந்தும் வகையில் வரலாறு பற்றிய அதன் தத்துவங்களைக் கொண்டுவருவதற்கு விரைந்து மேற்சென்றது.

1989-91ன் நிகழ்வுகளுக்கு முன்னர், கல்விசார் நிபுணர்களின் பரந்த பெரும்பான்மையானது, கிட்டத்தட்ட இதுதான் சோசலிசம் என்று சமன் படுத்திப் பார்த்த சோவியத் ஒன்றியம் என்றென்றைக்கும் நீடித்திருக்கும் என அனுமானித்தனர். ஸ்ராலினிசம் பற்றிய லியோன் டரொட்ஸ்கியின் விமர்சன ஆய்வுடன் பரிச்சயப்பட்டவர்கள் கூட, கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் ஆட்சியானது சோவியத் தொழிலாள வர்க்கத்தால் தூக்கி எறியப்படாவிட்டால், அது தொழிலாளர் அரசைக் கலைத்துவிடும் மற்றும் முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுக்கும் என்ற அவரது முன்கணிப்பை, யதார்த்தபூர்வமற்ற மற்றும் ஸ்ராலின் வென்றடக்கிய அவரின் எதிரிகள், தமக்குத்தாமே நியாயம் கற்பிக்கும் புலம்பல் எனக் கருதினர்.

ஸ்ராலினிச ஆட்சிகள் தாமே கலைந்து கொண்டிருக்கையில், ஆயினும், பேராசிரியர்கள் மற்றும் சிந்தனைக்குழாமின் ஆய்வாளர்கள் அமெரிக்கா அதன் பனிப்போர் பகைவர்கள் மீது திரும்பப் பெறவியலாத வெற்றியை ஈட்டியிருப்பதோடுமட்டுமல்லாமல், முதலாளித்துவமானது அதனது சோசலிச நிரந்தர எதிரியை வரலாற்று சாத்தியங்களின் செல்வாக்கெல்லையிலிருந்து துடைத்து அழித்துவிட்டிருந்தது எனப் பறைசாற்றுவதற்கு அவசரப்பட்டனர். அந்த கணத்தின் உயிர்ப்பானது, National Interest என்ற இதழில், “வரலாற்றின் முடிவாஎன்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட, அமெரிக்காவின் சிந்தனைக் குழாமான Rand இன் ஆய்வாளர், பிரான்சிஸ் புக்குயாமா ஆல் எழுதப்பட்ட கட்டுரையில் அதன் முற்றமுழுதான வெளிப்பாட்டைக் கண்டது. அவர் எழுதினார்:

நாம் சாட்சியாய் இருக்கப்போவது வெறும் குளிர் யுத்தத்தின் முடிவுக்குமட்டுமல்ல, அல்லது போருக்குப் பிந்தைய வரலாற்றின் குறிப்பிட்ட காலப்பகுதியை கடந்து செல்லுதலுக்கு அல்ல, மாறாக வரலாற்றின் முடிவு என்றவாறாக ஆகும்: அதாவது, மனிதகுலத்தின் கருத்தியல் பரிணாமத்தினதும் மற்றும் மனிதத்தன்மையான அரசாங்கத்தின் முற்றுப்பெற்ற வடிவமாக மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தின் உலகமயம் என்பதன் இறுதிப்புள்ளியுமாகும். [1]

புக்குயாமாவிற்கு நேர்மையாக இருப்பதெனில், எதிர்காலம் தொல்லைகள் இல்லாததாகவும் அமைதிவாய்ந்ததாகவும் விளங்கும் என்று அவர் வாதிடவில்லை. ஆயினும், தாராண்மை முதலாளித்துவ ஜனநாயகம் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் முறையற்றவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மனிதகுலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமவளர்ச்சியின் அர்த்தத்தில், கடந்து செல்லப்படமுடியாத ஒரு நிறைவான முன்னுதாரணத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது, என்பதில் இனியும் ஒரு சந்தேகம் இருக்க முடியாது என்று அவர் வாதிடுகிறார். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பத்தகுந்த அறிவார்ந்த மற்றும் அரசியல் மாற்றீடு இல்லை என்ற பொருளில் வரலாறானது “முடிந்து” விட்டது என்கிறார். 1992இல் வெளியிடப்பட்ட புத்தகத்தில் அபிவிருத்திசெய்யும் அவரது வாதத்தில் புக்குயாமா எழுதுகிறார்:

நமது பாட்டனார் காலத்தில், விவேகம் உள்ள மக்கள் பலர் களிப்பூட்டும் சோசலிச எதிர்காலத்தை முன்கூட்டிப் பார்த்தனர், அதில் தனிச்சொத்துடைமையும் முதலாளித்துவமும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கும் மற்றும் அதில் அரசியலும் கூட ஏதோ ஒருவகையில் வெற்றிகொள்ளப்பட்டிருக்கும். இன்றோ, அதற்கு மாறாக, எமது சொந்த உலகைவிட மிகச்சிறந்ததாய் இருக்கும் உலகை அல்லது அடிப்படையில் ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவம் அல்லாத ஒரு எதிர்காலத்தை கற்பனை செய்வதில் தொல்லைகளை எதிர்கொள்கிறோம். அந்தக் கட்டமைப்பிற்குள்ளே, ஒருவேளை பல விஷயங்கள் முன்னேற்றம் அடையக்கூடும்தான்: வீடில்லாதோருக்கு வீடு வழங்க முடியும், சிறுபான்மையினருக்கும் பெண்களுக்குமான வாய்ப்பை உத்திரவாதப்படுத்த முடியும், போட்டியிடும் தன்மையை முன்னேற்றுவிக்க முடியும் மற்றும் புதிய வேலைகளை உருவாக்க முடியும். இதேபோல் நாங்கள் எமக்கு இப்போது தெரிந்த உலகத்தைவிட முக்கியமாக மோசமானதொரு எதிர்கால உலகத்தையும் கற்பனை செய்யமுடியும். அங்கு தேசிய, இன, அல்லது மத சகித்துக்கொள்ளாத்தன்மை திரும்பி வருவதையும் அல்லது நாம் யுத்தத்தால் சூழப்பட்ட நிலையும் அல்லது சுற்றுச்சூழல் சிதைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் எம்மால் இப்போது இருப்பதைவிட அடிப்படையில் வித்தியாசமான, அதேவேளை அதைவிட சிறந்த ஒரு உலகத்தை வரைந்துகொள்ளமுடியாது. ஏனைய மற்றும், மேலோட்டமாய் சிந்திக்கப்பெற்ற காலங்கள், தாங்கள்தான் சிறந்தவை என நினைத்தன, தாராளவாத ஜனநாயகத்தைவிட சிறந்ததாக இருந்திருக்கவேண்டியது என நாம் உணர்ந்த, மாற்றீடுகளை தேடுவதிலிருந்து, ஏதோஒருவகையில் நாங்கள் இந்த முடிவிற்கு வந்து சேர்ந்துவிட்டோம்.” [2]

புக்குயாமாவின் ஆய்வு முதலாளித்துவ அரசியல் வெற்றிவாதம் மற்றும் அதி மெய்யியல் அவநம்பிக்கைவாதம் இரண்டும் சேர்ந்ததாகும். புக்குயாமா புத்தகம் ஒவ்வொன்றுடனும் ஒரு புரொசாக் (மன அழுத்தத்திற்கான மருந்து -Prozac) எடுப்பதற்கான மருத்துவர் குறிப்பையும் சொருகுதல் வெளியீட்டாளருக்கு பொருத்தமுடையதாக இருக்கும். அனைத்துவிதமான உள்நோக்கங்கள் மற்றும் காரணங்களை பொறுத்தவரை, அதை அடையக்கூடியது நல்லது என்றால், மனிதகுலத்தின் எதிர்காலம் என்பது மிகவும் மங்கலாக இருக்கிறது. ஆனால் புக்குயாமாவின் கருதுகோள் எத்துணை யதார்த்தபூர்வமானது? ஹெகலிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றதாக அவர் கூறிக்கொண்டாலும் இயங்கியல் பற்றிய அவரது கிரகிப்பு மிகவும் மட்டுப்பட்டது. முதலாளித்துவமானது, மோதல் மற்றும் நெருக்கடியை  உருவாக்கிய உள்ளார்ந்த மற்றும் முழுமையாயப் பரவியுள்ள முரண்பாடுகளை ஒருவாறு  தீர்த்துவிட்டது மற்றும் வெற்றிகொண்டுவிட்டது என்று அது எடுத்துக்காட்டக்கூடும் என்றால், வரலாறு முடிந்துவிட்டது என்ற கூற்று அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். ஆனால், அத்தகைய ஆணித்தரமான முடிவை புக்குயாமா தவிர்த்தும்கூட விட்டார். முதலாளித்துவம் சமூக சமத்துவமின்மை மற்றும் அது உருவாக்கிய அதிருப்தியால் கொள்ளைநோயால் பீடிக்க்கப்பட்டுள்ளது என்று அவர் உறுதிப்படுத்துகிறார். “சரியற்ற எதிரெதிர் இயங்குமுறையை (அதாவது சமூக சமத்துவமின்மையை) உணர்தலுடன் ஏற்பட்ட அதிருப்தியின் சாத்தியமானது, முதலாளித்துவம் மற்றும் தாராண்மை ஜனநாயகத்திற்கு ஒரு மாற்றீடை இடதிலிருந்து[3] கண்டுகொள்ளும் முயற்சிக்கு மூலமாக அமையும் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார். வரலாற்றின் முடிவு பற்றிய புக்குயாமாவின் பிரகடனத்தில் பின் என்னதான் எஞ்சியுள்ளது?

அமெரிக்க வரலாற்றாளர் மார்ட்டின் மாலியா (1924-2004), புக்குயாமாவின் தத்துவம் மறுக்கப்பட முடியாதது என்று புரிந்து கொண்டார். “பாசிசம்  மற்றும் கம்யூனிசம் இவை இரண்டினதும் பிரமைகளை  வெற்றிகொண்டுவிட்ட பின்னர், வரலாறானது இறுதியில் சந்தை ஜனநாயகம் என்ற பாதுகாப்பான துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது என்ற வெற்றிவாதப் பேச்சு” பற்றி அவர் எச்சரிக்கிறார். மாலியா, வரலாற்றின் முடிவு குறித்த “ஒரு பிந்தைய-மார்க்சிச (post-Marxist) கண்ணோட்டத்தின் செல்தகைமை பற்றி சந்தேகங்களை…”[4] வெளிப்படுத்துகின்றார். முதலாளித்துவமானது அதன் வரலாற்று பகைஉணர்வு கொண்ட முன்னறிகுறி காட்டும் தீமைகளில் இருந்து ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என்று அஞ்சுகிறார். “சோசலிச சிந்தனையானது சமத்துவமின்மை இருக்கும்வரை நிச்சயமாய் நம்மோடு இருக்கும், உண்மையில் அது மிக நீண்டகாலமானதாகும்இவ்வாறு, மாலியா வாதிடுகிறார், சோசலிச அபிலாஷைகளின் இருப்பினை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரே வழி, சோவியத் அனுபவத்தின் அடிப்படையில் சோசலிசம் இயங்காது என்பதை வலியுறுத்துவதாகும். இதுதான் சோவியத் துயரம் என்பதன் ஆய்வுப்பொருளாகும். 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்துபோனது 1917 அக்டோபர் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும். போல்ஷிவிக் கட்சி சாத்தியமற்றதொன்றை முயற்சி செய்தது: அதாவது முதலாளித்துவம் அல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு. இதுதான் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பேராபத்தான வரலாற்றுத் தவறாக இருந்தது.

முழுநிறைவான சோசலிசத்தின் தோல்வி என்பது முதலில் தவறான இடமான ரஷ்யாவில் அது முயற்சிக்கப்பட்டது என்பதிலிருந்து எழவில்லை, மாறாக சோசலிச கருத்துள் உள்ளிருந்தே எழுகிறது. இந்த தோல்விக்கான காரணம் முழு முதலாளித்துவம் அல்லாத்தன்மை என்ற வகையில் சோசலிசம் அதன் உள்ளியல்பிலேயே சாத்தியமற்றது என்பதாகும். [6]

இந்த விவாதம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படவில்லை, மற்றும் மாலியா அவரது புத்தகத்தை வினோதமான வகையில் இரு எண்ணங்கொண்டதாகவும் பிரச்சினைக்குரியதான குறிப்பைக் கொண்டதாகவும் முடித்தார். அவர் சோசலிசத்திற்கான ஒரு பரந்த புரட்சிகர இயக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியின் சாத்தியத்தை முன்னுணர்ந்தார்.

முன் எதிர்பார்த்திருந்திராத லெனினிச நிகழ்வுப்போக்கு முன் எதிர்பார்த்திராத 1914-1918 உலக நெருக்கடியின் காரணமாக தோன்றியது. ஒப்பிடக்கூடிய எந்த பூகோள நெருக்கடியும் செயலூக்கம் குன்றிய சோசலிச வேலைத்திட்டங்களை மீண்டும் ஒருமுறை சமரசத்திற்கிடங்கொடாத தீவிரத்தை நோக்கி செலுத்தும், அதன்விளைவாக முற்றுமுழுதான முடிவைப் பெறும்பொருட்டு முழு அதிகாரத்தையும் பெறுவதற்கு கவர்ச்சியூட்டும். [7]

புக்குயாமா “வரலாற்றின் முடிவு” சோசலிசத்தின் முடிவைக் குறிக்கும் என்று வாதிடுகையில், மாலியா முதலாளித்துவமல்லாத அமைப்பின் இலக்கு அடைவதற்கு சாத்தியமற்றதெனினும், சோசலிசமானது ஆதரவாளர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் என்று மௌனமாக ஒப்புக்கொள்கிறார். அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்திருந்த எரிக் ஹோப்ஸ்வாம் (1917-2012), புக்குயாமா மற்றும் மாலியா இருவரதும் வாதங்களைக் கடன்வாங்கி, புதுமை செய்து இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய தத்துவத்தை வடிவமைப்புச் செய்கிறார். அது பரந்த இடது தட்டின் மற்றும் முன்னாள் இடதுகளின் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும். ஹோப்ஸ்வாம் புக்குயாமாவின் இயங்காநிலை (metaphysical) ஊகங்களை ஏற்கும் அளவுக்கு மிக அறிவாற்றலைக் கொண்ட வரலாற்றாசிரியனாயும் அனுபவவாத வழிமுறையில் அளவுக்கதிகமாக மூழ்கியுள்ளவராயும் இருக்கிறார். அவர் புக்குயாமாவின் கருத்துருவை இன்னும் நிர்வகிக்கக்கூடிய விகிதாசாரத்தில் இங்குமங்கும் கத்தரித்து சீர்படுத்துகிறார். சோவியத் ஒன்றியத்தின் பொறிவு வரலாற்றின் முடிவு இல்லை என்றால், இருபதாம் நூற்றாண்டின் முடிவைக் குறிக்கிறது என்கிறார். The Age of Extremes (தீவிரங்களின் காலம்) என்னும் புத்தகத்தில், 1914ல் உலக யுத்தம் வெடித்ததற்கும் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்து போனதிற்கும் இடையிலான வருடங்கள் “குறுகிய இருபதாம் நூற்றாண்டின்” உட்கூறாய் அமைந்திருப்பதாக வாதிடுகிறார்.

நாம் இப்பொழுது மாறுபட்ட நிலையில் நோக்கக்கூடிய, அது வடிவமைத்த தெளிவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வரலாற்றுக் காலகட்டம் இப்பொழுது முடிந்துவிட்டிருக்கிறது..... 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் உள்ள உலக வரலாற்றின் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது மற்றும் புதிய ஒன்று தொடங்கிவிட்டது. அதுதான் இந்த நூற்றாண்டின் வரலாற்றாளர்களுக்கான அத்தியாவசியமான ஒரு புதிய தகவல்… [8]

1914 மற்றும் 1991க்கும் இடையில் விரியும் ஒரு “குறுகிய” எழுபத்தேழு ஆண்டு காலகட்டம் என்று ஹோப்ஸ்வாமால் காலவகைப்படுத்தப்பட்ட இருபதாம் நூற்றாண்டு, சிறிது உரத்த குரலில், போல்ஷிவிக்குகளின் புரட்சிகர செயல்திட்டம் மாலியாவால் நிராகரிக்கப்படுவதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்ததுடன் இருபதாம் நூற்றாண்டின் நாடகத்தில் திரைச்சீலையை அவிழ்த்துவிட்டதன் மூலம், ஹோப்ஸ்வாம் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஆரம்பித்த ஒரு புரட்சிகர சகாப்தம் முடிவுற்றது என பறைசாற்றுகிறார். 1914க்கும் 1991க்கும் இடையில் சோசலிசம் ஏதாவதொரு வடிவில் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடாகப் பார்க்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டம் 1991ல் எல்லாக்காலத்துக்குமாக முடிந்துவிட்டது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட புரட்சிகர சோசலிச செயற்திட்டம் தொடக்கம் முதலே ஒரு பிரமையாக இருந்திருக்கலாம் என்று ஹோப்ஸ்வாம் ஒரு சிறு சந்தேகத்தை விட்டுச்செல்கிறார். 1991ன் வெளிச்சத்தில், முக்கால் நூற்றாண்டுக்கு முன்னதாக போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றல், ஒரு துன்பகரமான பிழை என்று பார்க்கப்பட்டிருக்கக் கூடும். 1917ல் நிலை கொண்டிருந்த சூழ்நிலைகளில், போல்ஷிவிக் தலைவர்களின் முடிவுகளுக்கான அரசியல் நியாயப்படுத்தலை ஒருவர் கண்டுகொண்டாலும், அக்டோபர் புரட்சி அது வேறுபட்ட, முற்றிலும் தனித்துவமான மற்றும் மீண்டும் செய்யமுடியாத ஒரு நிகழ்ச்சி எனவும், அது வெளிவந்த சூழ்நிலையும் தனியியல்பானதாக இருப்பதால் இதற்கு எவ்விதமான தற்கால அரசியல் முக்கியத்துவமும் இல்லை என ஹோப்ஸ்வாம் வலியுறுத்துகின்றார்.

புக்குயாமாவும் ஹோப்ஸ்வாமும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை பற்றிய தங்களின் காலவகைப்படுத்தலின் மையத்தில் வைத்தனர். புக்குயாமாவை பொறுத்தவரை (சோவியத் ஒன்றியம்) கலைந்துபோனது “வரலாற்றின் முடிவைக் குறிக்கிறது. ஹோப்ஸ்வாமை பொறுத்தவரை அது “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” முடிவைக் குறிக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அவர்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் நிகழ்வாக விளங்கிய அக்டோபர் புரட்சியை ஏதோஒருவகை பின்னால் இருந்து அடித்து முன்னே அனுப்பும் உறுதிப்படுத்தலாக இருந்தது. ஆயினும், “வரலாற்றின் முடிவு” மற்றும் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” இந்த இரண்டு கருத்தோட்டங்களுமே, 1917ல் போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பத்தாண்டுகளில் பரிணாமம் அடைந்த சோவியத் அரசு பற்றியும் அக்டோபர் புரட்சியின் வரலாற்று அடித்தளங்கள் பற்றியுமான அடிப்படையில் தவறான கருத்துக்களை அடித்தளமாக கொண்டிருந்தன. புக்குயாமா வரலாற்று தற்செயல் நிகழ்வு பற்றிய தனித்துவமான பிரச்சினைகளுக்கு சிறிது கவனம் செலுத்தும் அருவமான கொள்கைப்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை, ஹோப்ஸ்வாம், முதலாவது உலக யுத்தத்தின் பிரதான பேரழிவுக்குரியதாக ரஷ்யா இருந்திராதாயின் அங்கு சோசலிசப் புரட்சி இடம்பெற்றிருந்திருக்காது என்ற வழமையான மேலெழுந்தவாரியான கருத்தை ஏற்கிறார். “பேரழிவான காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவ சமூக உடைவு இல்லை எனில், அங்கு அக்டோபர் புரட்சியும் இருந்திருக்காது சோவியத் ஒன்றியமும் இருந்திருக்காது” என அவர் எழுதினார்.

இது ஒருபொருள் சொல்லடுக்கே அன்றி ஒரு விளக்கம் அல்ல. ஹோப்ஸ்வாமால் தவிர்க்கப்படும் உண்மையான அறிவுஜீவித சவாலானது ஆழ்ந்து வேரூன்றிய, பூகோளத்தன்மை உடைய, இறுதியில் உலகப் போரிலும் மற்றும் சமூகபுரட்சியிலும் வெடித்த முரண்பாடுகளை அடையாளம் காணலாகும். மொத்தத்தில், பெரும் வல்லரசுகளின் வருடக் கணக்காக உக்கிரமடைந்துவரும் மோதல்கள், முதலாம் உலகயுத்தத்திற்கு முன்நிகழ்வாய் அமைந்திருந்தன. அக்டோபர் புரட்சிக்கு முந்திய பத்தாண்டுகளில் சோசலிசமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கமாக வெளிப்பட்டது. 1914க்கு முன்னர் சோசலிஸ்டுகள் முதலாளித்துவ சமூக அமைப்பின் உடைவை மட்டும் எதிர்பார்த்திருக்கவில்லை, மாறாக உடைவானது பேரழிவுகரமான ஐரோப்பிய அளவிலான மற்றும் உலக யுத்தத்தின் வடிவைக் கூட எடுக்க நேரும் என்றும் எச்சரித்தனர். அத்தகைய யுத்தமானது சோசலிச புரட்சிக்கான அத்தியாவசியமான ஒரு முன்நிபந்தனை என்ற வகையில் வரவேற்பதற்கு மாறாக, 1914க்கு முந்தைய கால மாபெரும் மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்திய இராணுவ வாதத்திற்கு எதிரான போராட்டத்தை தங்களின் அரசியல் வேலையின் மையப்புள்ளியாக வைத்தனர்.

ஒர் பாரிய ஏகாதிபத்திய யுத்தமானது நெருங்கிவருகின்றது என்பது அதிகரித்த அளவில் காணக்கூடியதாகியபோதே, புரட்சிகரப் போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்து, சோசலிஸ்டுகள் அத்தகைய நிகழ்வின் மூலோபாய விளைபயன்களை கருத்தில்கொள்ள தலைப்பட்டனர். 1914க்கு முன்னரே மார்க்சிச சோசலிஸ்டுகள் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நெருக்கடியில் போரினதும் புரட்சியினதும் பொதுவான மூலத்தை உணர்ந்திருந்தனர். சோசலிச இயக்கத்திற்குள்ளே 1914க்கு முன்னரான விவாதங்களை புறந்தள்ளிவிட்டு, வரலாற்று தற்செயல் நிகழ்வு பிரச்சினையை பற்றிய ஹோப்ஸ்வாமின் மேலெழுந்தவாரியான கவனிப்பு, அக்டோபர் புரட்சியினை யுத்தத்தின் தற்செயலான மற்றும் ஒரு துணை விளைபொருளாக சித்தரிக்கிறது.

புக்குயாமா, ஹோப்ஸ்வாம் மற்றும் மாலியாவையும் நாம் சேர்க்க வேண்டும், இவர்களின் வாதங்களில் உள்ள சீரிய குறைபாடு, சோவியத் ஒன்றியத்தை அதன் வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் சோசலிசத்துடன் விமர்சனமற்றவகையில் அடையாளப்படுத்துதல் ஆகும். ஸ்ராலினிச ஆட்சியானது, அக்டோபர் புரட்சியின் மூலத் தீவினையில் இருந்து வந்த தவிர்க்க முடியாத வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோவியத் வரலாறு பற்றிய இந்த விதிப்பயன்வாத மற்றும் அதிதீர்மானிப்புவாத கண்ணோட்டமானது, ஸ்ராலினிசமல்லாத வளர்ச்சிப்போக்கின் சாத்தியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க மறுக்கிறது. ஹோப்ஸ்வாம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே ஸ்ராலினால் தலைமை தாங்கப்பட்ட, எழுந்துவந்து கொண்டிருந்த அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பாக நடந்த எதிர்த்தரப்பு போக்குகளின் போராட்டம் பற்றி, குறிப்பாக ட்ரொட்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட போக்கின் போராட்டம் பற்றி முற்றிலும் பாரபட்சமானதன்மையை வெளிப்படுத்தினார். ஸ்ராலின் ஆட்சிக்கு மாற்றீடுகளை, வரலாற்றின் உண்மை அல்லாத நிகழ்வுகளின் அடிப்படையிலான நியாயபூர்வமற்ற முயற்சியாக நிராகரிக்கிறார். எவ்வாறாயினும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே மோதல் தீவிரமடைந்து, இறுதியில் ஸ்ராலின் பிரிவு நிலைகொண்டது; அந்தக் கண்ணோட்டத்திலிருந்து ஸ்ராலினிசமானது, வரலாற்றாளரின் அவநம்பிக்கைவாத சொற்றொடரை மேற்கோள் காட்டுவதாயின், “ஒரேயொரு சாத்தியமாக” இருந்தது. 1923க்கும் 1927க்கும் இடையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினுள் எழுந்த போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் கூறியவை மற்றும் எழுதியவை எல்லாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு தொடர்பில்லாத ஒன்றாக இருந்தது. ஹோப்ஸ்வாமைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை இன்னும் சொல்லப்போனால் நேரடியாகக் கூறுவதாக இருந்தது. ஸ்ராலின் வென்றார். ட்ரொட்ஸ்கி தோற்றார். அதில் இருந்தது அவ்வளவுதான். வரலாற்றாளர்கள் வேறு எது நடந்திருக்கலாம் என்பது குறித்து தங்களின் அக்கறையைக் கொண்டிருக்கக்கூடாது.

ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடுகள் பற்றிய ஹோப்ஸ்வாமின் முன்கூட்டிய நிராகரிப்புக்கள் அரசியலில் மன்னிப்புக் கோரல் என்பதைவிடவும் சமரசத்திற்கு இடங்கொடாத வரலாற்றின் புறநிலைவாதத்தின் வெளிப்பாடு என்பதற்கும் மிகக் குறைவான வெளிப்பாடாகும். அவர் பக்கசார்பு இல்லாத மற்றும் தனித்துநிற்கும் விமர்சகராக இருந்ததில்லை. பிரிட்டிஷ் ஸ்ராலினிச இயக்கத்தில் அவர் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தபொழுது, ஹோப்ஸ்வாம் ரஷ்யப் புரட்சியின் வரலாறு மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாத்திரம் பற்றியும் சோவியத் அதிகாரத்துவ பொய்ம்மைப்படுத்தலுக்கு ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஹோப்ஸ்வாம், பொய்களை அடிப்படையாகக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் பற்றிய அதிகாரபூர்வ ஸ்ராலினிச வரலாற்றைத்தான் அவர் பற்றிப்பிடித்திருந்தார் என்பதை ஒளிவுமறைவின்றி ஒருபோதும் உறுதிப்படுத்தாத நிலையில், 2012ல் தொன்னூற்றைந்து வயதாக இருக்கும்பொழுது அவரது கல்லறைக்கு சென்றார்.

ஹோப்ஸ்வாமின்படி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, “தீவிரங்களின் காலத்தை” ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. 1917க்கு முன்னர் இருந்திருந்தவாறு, முதலாளித்துவமானது மீண்டும் “ஒரேயொரு சாத்தியமாக” இருந்தது. எதிர்காலத்தில் சில புள்ளிகளில் சமூகமானது வன்முறை கொண்ட பேரெழுச்சிகளை அனுபவிக்கும் என்பது விரும்பத்தகாததாக இல்லாதிருந்த அதேவேளை, பரந்த புரட்சிகர சோசலிச இயக்கம் மீண்டும் எழும் என்ற சந்தர்ப்பமும் அங்கு இல்லை.

ஹோப்ஸ்வாமின் விளக்கமானது, மனிதகுலமானது ஒரு இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டது மற்றும் அதன் சூழ்நிலை நம்பிக்கை அற்றதாகிவிட்டது என்ற முடிவுக்கு ஒரு வாசகரை இட்டுச்செல்கிறது. “நாம் எங்கு செல்கிறோம் என்பதே நமக்குத் தெரியாதுஎன தீவிரங்களின் காலம் என்பதின் இறுதியில் அவர் எழுதுகிறார். எதிர்காலத்திற்கான சாதகமான வழிகாட்டியாக விளங்கக் கூடிய கடந்த காலத்தின்  அனுபவத்தில் ஹோப்ஸ்வாம் ஒன்றையும் பார்க்கவில்லை. ஒன்றே ஒன்றில் மட்டும் அவர் நிச்சயமாய் இருந்தார்: அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சியானது எதிர்கால போராட்டங்களுக்கான ஒரு எடுத்துக்காட்டாகவோ அல்லது  வழிகாட்டியாகவோ சேவைசெய்திருக்கவும் முடியாது, இனி செய்யவும் முடியாது. “அந்த அடிப்படையில் நாம் மூன்றாவது ஆயிரமாண்டைக் கட்டி எழுப்ப முயற்சித்தால் நாம் தோல்வியுறுவோம்” என்று எழுதினார். மற்றும் அத்தோல்விக்கான விலை என்னவென்று, ஹோப்ஸ்வாமின் நீண்ட புத்தகத்தின் இறுதி வாக்கியத்தில் ”இருட்டாகும்” [10] என எழுதினார்.

இந்த தொகுதியில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் உரைகளும், பெரும்பாலான பகுதி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தை ஒரு இறுதியான முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்ற கூற்றுக்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். புக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” மற்றும் ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” இவற்றுக்கான எதிர்ப்பில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, நிச்சயமாய் மிக முக்கியத்துவம் உடைய நிகழ்வு எனினும், அது சோசலிசத்தின் அதிர்ச்சிமிக்க முடிவைக் குறிக்கவில்லை என்று நான் வாதிட்டேன். வரலாறு தொடரும். இருபதாம் நூற்றாண்டை போர்களையும் புரட்சியையும் எழச்செய்யும், முதலாளித்துவத்தின் உக்கிரமான நெருக்கடியின் சகாப்தம் என வரைவிலக்கணம் செய்யும்வரை, “முடிவுறாதது” என்று குணாதிசயப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும். அதாவது, இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதகுலம் எதிர்நோக்கிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளின் மையம், பிரதானமாக, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதிர்கொண்ட அதே முரண்பாடுகளாகும். அனைத்துவிதமான விஞ்ஞான முன்னேற்றங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள், அரசியல் எழுச்சிகள், சமூக மாற்றங்கள் இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு புதிரான வகையில் முடிவுறாத குறிப்புடன் முடிவுற்றது. நூற்றாண்டின் போராட்டங்களின் கீழே இருந்த மாபெரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஒன்று கூட முடிவார்ந்தவகையில் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலாவது உலக யுத்தம் முந்தியதாக நடந்தது மற்றும் உண்மையில் பால்கன்களில் உள்ள அரசுகளின் எல்லைகள் மீதான மோதல்களால்  தூண்டிவிடப்பட்டது. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவாலும் ஜேர்மனியாலும் தூண்டிவிடப்பட்ட யூகோஸ்லாவிய கலைப்பானது, அரசின் இறையாண்மை மற்றும் எல்லைகளை கண்டறிதல் தொடர்பாக இரத்தம் தோய்ந்த தசாப்தகால மோதலை முடுக்கிவிட்டது. 1914ல் தொடங்கிய முதலாவது உலக யுத்தம் சேர்பியாவில் உள்ள தேசியவாத ஆட்சி ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக இருந்ததால் அதனைத் தண்டிக்க ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு எடுத்த முடிவுடன் ஆரம்பமானது. எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் அஸ்தமனத்தின்போது, பால்கன்களில் எல்லைகளை ஏகாதிபத்திய மறு ஒழுங்கு செய்தலை சேர்பியா ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மீது ஈவிரக்கமற்றமுறையில் குண்டுகளை வீசியது.

இது ஏதோ (plus ηa change, plus c’est la mκme chose) அதிகமானவை மாற மாற, அதிகமானவை அதேபோன்று இருத்தல் என்பது பற்றியதல்ல. மாறாக, 2014 உலகத்தை 1914 உடன் இணைக்கும் அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளின் நீண்டகால தொடர்ந்து நீடித்தலுக்கு ஒரு உதாரணமாகும் மற்றும் இருபதாம் நூற்றாண்டை அதன் “முடிவுறாத” பண்புக்கு உரித்தாக்குகிறது.

ஒப்பீட்டு நோக்கும் வகையில், இருபதாம் நூற்றாண்டின் விடியலில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடியவர்களுக்கு 1800 உலகம் எப்படி அமைந்திருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். 1800கள் நெருங்கி வந்தபொழுது, நெப்போலிய போர்கள்  (1800–15) வரலாற்றின் மண்டலத்தில் இருந்து பின்னோக்கி மறைந்து போய்விட்டிருந்ததன. பிரெஞ்சுப் புரட்சி, ஒஸ்டர்லிட்ஸ் மற்றும் வாட்டர்லூ சண்டைகள் 1900களில் வாழ்ந்தவர்களுக்கு மிகவேறுபட்ட காலத்தின் வீரம்மிக்க போராட்டங்களாக தோன்றின. ரோபேஸ்பியர், டன்டோன் மற்றும் நெப்போலியன் ஆகியவர்கள் தொடர்ந்தும் அவர்களை ஈர்க்கக்கூடியவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் 1900 உலகிலிருந்து தொலைவில், இன்னொரு காலப் பகுதியில் மற்றும் வரலாற்று இடத்தின் உருவங்களாக இருந்தனர். நிச்சயமாக, உலகவரலாற்றில் அவர்களது தாக்கம் நிலைத்து நிற்கும்தான். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரசியல் உலகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் அடிப்படை ரீதியாக மற்றும் திடீரென்று உருமாறத் தொடங்கிவிட்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிந்தைய அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சியினால் விரைவுபடுத்தப்பட்ட  முதலாளித்துவ ஜனநாயக நிகழ்வுப்போக்குகள் மற்றும் தேசிய அரசை வலுப்படுத்துதல் என்பன, பெரும்பாலும் முடிவடைந்திருந்தன. தொழிற்புரட்சியானது முன்னேறிய நாடுகளில் சமூகப் பொருளாதார கட்டமைப்புக்களை மாற்றி இருந்தன. நிலப்பிரபுக்களுக்கும் எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான பழைய மோதல் தொழிற்துறை முதலாளித்துவத்தின் விரைந்த வளர்ச்சி மற்றும் தோன்றிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தின் புது வகை வர்க்கப் போராட்டத்தால் உருமாறின. பிந்தைய பதினெட்டாம் நாற்றாண்டின் மாபெரும் போராடங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த பொதுவான ஜனநாயக சொற்றொடர்கள் போதுமான அளவு இல்லாதிருந்தமை, 1848 புரட்சிகளால் துன்பகரமான வகையில் வெளிப்படையானது. மனிதனின் உரிமைகள் (The Rights of Man) என்ற புத்தகம் பழைய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளின் மொழியில் எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது, புதிய பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் மொழியில் எழுதப்பட்டது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், அரசியலானது, ஒரு உயர்ந்தளவில் ஒன்றோடு ஒன்று  பிணக்கப்பட்டிருந்த உலக பொருளாதாரத்தின் அபிவிருத்தியின் அடிப்படையில் முற்றிலும்  பூகோளத்தன்மையை பெற்றிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அரசுகளின் அமைப்புமுறை, கடுமையான நெருக்கடியின் கீழ்வந்தது. அது உலக மேலாதிக்கத்திற்காக சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகளின் மத்தியில் அதிகரித்த அளவில் கசப்பான போராட்ட வடிவத்தை எடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டின்பொழுது, “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லானது பொதுவான வழக்கத்தில் நுழைந்தது. முதலாவது உலக யுத்தத்தின் வெடிப்புக்கு இட்டுச்சென்ற வருடங்களில், இந்த புதிய நிகழ்வுப்போக்கின் பொருளாதார அடித்தளங்கள் மற்றும் அதன் சமூக மற்றும் அரசியல் விளைபயன்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. 1902ல் பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஜே.ஏ.ஹாப்சன் ஏகாதிபத்தியம் என தலைப்பிடப்பட்ட ஒரு நூலை எழுதினார். அதில், “ஏகாதிபத்தியத்தின்  பொருளாதார ஆணிவேர், அவற்றின் உபரி பொருட்கள் மற்றும் உபரி மூலதனம் இவற்றுக்காக, பொதுநலன்களப் பலியிட்டு பொது சக்திகளால் தனியார் சந்தைகளைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவுமான ஒழுங்கமைக்கப்பட்ட பலம் வாய்ந்த தொழில் துறை மற்றும் நிதிநலன்களின் வேட்கையாகும்”. [11] என வாதிட்டார். 1910ல் ஆஸ்திரிய சமூக ஜனநாயக கொள்கை வகுப்பாளர் ருடோல்வ் ஹில்பெர்டிங், அவரது நிதி மூலதனம் என்ற புத்தகத்தில், ஏகாதிபத்தியத்தின் உள்ளார்ந்த ஜனநாயகவிரோத மற்றும் வன்முறை கொண்ட பண்பை மட்டுமல்லாமல் அதன் புரட்சிகர தாக்கங்களுக்குள்ளும் கூட கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்:

ஏகாதிபத்தியத்தின் கொள்கையில் வெளிப்படுத்தப்படுவதுபோல், முதலாளித்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளே பாட்டாளி வர்க்கத்தை சுயாதீனமான வர்க்க அரசியல் பாதைக்குள் அத்தியாவசியமாகவே வழிநடத்தும், அது முதலாளித்துவம் இறுதியாய் தூக்கிவீசப்படுவதில்தான் முடியும். தலையிடாக்கொள்கை இன் கோட்பாடுகள் மேலாதிக்கம் செய்யும் வரை, மற்றும் பொருளாதார விஷயங்களில் அரசின் தலையீடு இருக்கும்வரை, அதேபோல வர்க்க மேலாதிக்கத்தை ஒழுங்குபடுத்தல் என்ற வகையில் அரசின் பண்பு இருக்கும்வரை, அவை மறைக்கப்படும்வரை, அதற்கு ஒரு அரசியல் போராட்டத்திற்கான தேவையை ஊக்குவிப்பதற்கான ஒரு ஒப்பீட்டளவில் முதிர்ச்சியடைந்த மட்டத்திலான புரிந்துகொள்ளல் தேவைப்படுகிறது, மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி அரசியல் இலக்குக்கான, அதாவது அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான அவசியம் தேவைப்படுகிறது. அப்பொழுது, தலையீடு இல்லாத, வழிவழிமரபிலானதான, இங்கிலாந்தில், சுயாதீனமான அரசியல் நடவடிக்கையின் தோற்றம் அந்த அளவுக்கு கடினமானதாக இருந்தது என்பது தற்செயலானதல்ல. ஆனால் இது தற்போது மாறிவருகிறது. முதலாளித்துவ வர்க்கமானது அரசு சாதனத்தை ஒளிவுமறைவற்ற, நேரான மற்றும் வெளிப்படையான வழியில் உடைமையாக்கிக் கொள்கிறது, மற்றும் அதனை ஒவ்வொரு தொழிலாளிக்கும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதனை சுரண்டும் நலன்களுக்கான ஒரு கருவியாக செய்கிறது. பாட்டாளி வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்படுவது, தனது சொந்த மிக உடனடியான தனிப்பட்ட நலன் என்று அவர்கள் இப்பொழுது கட்டாயம் அடையாளம் கண்டாகவேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தால் அரசு வெளிப்படையாக கைப்பற்றப்படுவது ஒவ்வொரு பாட்டாளியையும் அதன் சொந்த சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழியாக அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கான முயற்சிக்கு நேரடியாக நிர்பந்திக்கிறது. [12]

1916ல், உலகயுத்தமானது அதன் மூன்றாவது ஆண்டில் நுழைந்தபொழுது ஏகாதிபத்தியம் பற்றிய பண்பிடலை லெனின் மணிச்சுருக்கமாக வழங்கினார்:

தடையிலாப் போட்டியானது ஏகபோகத்தால் பதிலீடு செய்யப்படுவது, அடிப்படை பொருளாதார இயல்பு, ஏகாதிபத்தியத்தின் முக்கிய சாராம்சமாகும்.

......அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பின்னர் ஆசியாவில், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக ஏகாதிபத்தியமானது 1898-1914ல்  இறுதி வடிவத்தை எடுத்தது. ஸ்பானிய அமெரிக்க யுத்தம் (1898), ஆங்கிலோ-போயர் யுத்தம் (1899-1902), ரஷ்ய-ஜப்பானிய யுத்தம் (1904-1905) மற்றும் 1900ல் ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆகியன உலகவரலாற்றின் புதிய சகாப்தத்தில் முதன்மையான வரலாற்றுக் குறியீடுகளாகும்.

… முதலாளித்துவத்தின் சிதைவானது குத்தகைதாரர்களின் பெரும் அடுக்கை உருவாக்கல், “வட்டி வருவாய் சீட்டுக்களை சேர்த்துவைப்பதன் மூலம் வாழும் முதலாளிகளை உருவாக்கல், .... மூலதனத்தை ஏற்றுமதி செய்வதில் ஒட்டுண்ணித்தனம் உயர்ந்த அளவுக்கு எழுவது.... அதன் வழி முழுவதும் அரசியல் பிற்போக்கு ஆகியன ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பாகும். பெரிய அளவில் ஊழலும் லஞ்சமும் மற்றும் எல்லாவகையான மோசடிகளும் .... கையளவே ஆன “பெரும்” வல்லரசுகளால் ஒடுக்கப்பட்ட தேசங்கள் சுரண்டப்படுதல்...”[13]

1915ல் எழுதப்பட்ட போரும் அகிலமும் என்பதில் ட்ரொட்ஸ்கி இந்த மோதலை

தேசம் மற்றும் அரசின் அரசியல் வடிவத்திற்கு எதிரான உற்பத்தி சக்திகளின் ஒரு கிளர்ச்சி என்று அடையாளப்படுத்துகிறார். அதன் பொருள் தேசிய அரசு ஒரு சுயாதீனமான பொருளாதார அலகு என்றவகையில் பொறிந்துபோதல் ஆகும்.

.......யுத்தமானது தேசிய அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டதை பறைசாற்றுகிறது. இருப்பினும் அதேவேளை அது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியையும் பறைசாற்றுகிறது. தேசிய அரசின் மூலம் முதலாளித்துவமானது உலகப்பொருளாதார அமைப்பு ஒட்டுமொத்தத்தையும் புரட்சிகரமயப்படுத்தியது. அது முழு உலகத்தையும் பெரும்வல்லரசுகளின் ஒருசிலவராட்சிகளுக்கு மத்தியில் பங்குபோட்டது. சிறு நாடுகள் இப்பெரு வல்லரசுகளை சார்ந்திருக்கும் குழுக்களாக சேர்ந்தன, அவைகளுக்கு இடையிலான பகைமை கொண்ட போட்டியில் இவை, வாழ்க்கையை நடத்தவேண்டி பெரிய ஒன்றைச்சார்ந்திருந்தன. முதலாளித்துவ அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால அபிவிருத்தி என்பதன் அர்த்தம் புதிய மற்றும் என்றும் புதிய சுரண்டலுக்கான புதிய துறைகளுக்கான இடைநிறுத்தம் இல்லாத போராட்டமாகும். அந்த சுரண்டலானது ஒரேயொரு மற்றும் அதே மூலவளமான பூமியில் இருந்துதான் பெறப்பட்டாக வேண்டும். இராணுவவாதப் பதாகையின் கீழ் பொருளாதார பகைமைப் போட்டியானது, திருடல் மற்றும் அழித்தல் ஆகியவற்றால் இணைந்துகொள்ளப்படுகிறது. இவை மனிதப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகின்றன. உலக உற்பத்தியானது, தேசிய மற்றும் அரசு பிரிவுகளினால் உண்டுபண்ணப்பட்ட குழப்பத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்புக்கு எதிராகவும் கலகம் செய்கின்றன. அம்முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கள் காட்டுமிராண்டித்தனமான ஒழுங்கற்றவையாகவும் பெருங்குழப்பமுடையனவாகவும் மாறுகின்றன. [14]

இந்த எழுத்துக்களில் நிகழ்கால சர்வதேச புவிசார் அரசியலின் வார்த்தைகளையும் சொற்பதங்களையும் நாம் எதிர்கொள்கின்றோம். அவற்றுள் விளக்கப்படுகின்ற உலகம் நாம் இன்னும் நம்முடைய சொந்தம் என்று உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அது முதலாளித்துவத்தின், ஒரு சிலவராட்சியின் செல்வந்தத்தட்டின், தங்களின் பூகோள நலனகளை நாடுகின்ற பெரும் பகாசுர நிறுவனங்களின் மற்றும் தன்முனைப்பு ஆட்சிகளின் உலகமாகும். இந்தப் படைப்புக்கள் யுத்தங்களும் புரட்சிகளும் நிறைந்த, இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும், இந்த சகாப்தத்தின் விடியலின்பொழுது எழுதப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் மோதல் கொண்ட கருத்துருக்கள் தற்போதைய நிலை பற்றிய நமது புரிதலுக்கான மற்றும் எதிர்காலத்திற்கான நமது எதிர்பார்ப்புக்களுக்கான நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருந்தன. “வரலாற்றின் முடிவு” பற்றிய விவாதப் பொருள், விலகுவதையும் திருப்தியையும் முறைமை உடையதாக்குகிறது. “குறுகிய இருபதாம் நூற்றாண்டு”, அதன் தவிர்க்கவியலா தோல்வி மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தின் இறுதி திராணியின்மை பற்றிய விளக்கத்துடன் சேர்ந்து, முதலாளித்துவ உலகத்தில், அது நாகரிகம் இருத்தலையே அச்சுறுத்தக்கூடிய அழிவை நோக்கி மாற்றவியலா வகையில் நகருகின்ற போதிலும் கூட – அது பரந்த மக்களின் எதிர்ப்பு எது எழுந்தாலும் அதை நசுக்குவதற்காக எப்போதும் போதுமான சக்தியை உடைமையாக கொள்ளும் நிலையிலும் கூட, நம்பிக்கையின்மை தொடர்பான இருத்தலியல் மனோபாவத்தை முன்னிலைப்படுத்துகிறது.

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” எனும் கருத்துரு குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவியின் ஒரு வரலாற்று சார்பற்ற அவநம்பிக்கைவாதத்தை நிராகரிக்கிறது. “முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” தொடர்ந்து தீர்க்கப்படாத மோதல்களின் மத்தியில் மனிதசமுதாயத்தை நிறுவுகிறது. ஆகஸ்ட் 1914ல் ஆரம்பமான பூகோள நெருக்கடியின் வெளிப்பாடு இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டி இருக்கிறது. மனிதகுலம் எதிர்கொள்கின்ற வரலாற்று மாற்றீடுகள், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், முதலாவது உலக யுத்தத்தின் மத்தியில் ரோசா லுக்சம்பேர்க்கால் இனம் காணப்பட்டன: “ஒன்றில் ஏகாதிபத்தியத்தின் வெற்றி மற்றும் அனைத்துவிதமான கலாச்சாரங்களையும் அழித்தல், மற்றும் புராதன ரோமில் போல மக்களை இல்லாமற்செய்தல், பாழிடமாக்கல், சீரழித்தல், பரந்த அளவு கல்லறைகளைத் தோற்றுவித்தல்; அல்லது, சோசலிசத்தின் வெற்றி, அதாவது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் நனவான போராட்டம்.” [15] மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, நம்பிக்கையின்மை பற்றி நிலவும்நிலைமையை வலியுறுத்தும் வகையறாக்களுக்கு வரலாற்று சாத்தியங்கள் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான மதிப்பிடல்களில் இடம் இல்லை. அவற்றின் அனைத்துவிதமான சிக்கல்களிலும், சமூகப் பொருளாதார முரண்பாடுகளை ஆளுமை செய்யும் விதியின் உருமாற்றங்களின் விளக்கிக்காட்டல்கள் புரிந்துகொள்ளப்பட முடியும் (புரிந்துகொள்ளப்பட்டாக வேண்டும்) மற்றும் அதன்மீது  செயல்பட முடியும் என்று, நாம் நிலவும் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் “முடிவுறாத” தன்மையை பற்றிய புரிந்துகொள்ளலானது, அதன் வரலாற்றை பற்றி படிப்பதன் மீது பெரும் முக்கியத்துவத்தை வைக்கின்றது. கடந்தகாலத்தின் எழுச்சிகள்  மற்றும் போராட்டங்கள் முக்கியமான மூலோபாய அனுபவங்களாகப் பார்க்கப்பட வேண்டும். அந்த அனுபவங்களின் படிப்பினைகள் சர்வதேச சோசலிச இயக்கத்தால் நன்றாக உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டாக வேண்டும்.

சோவியத் ஒன்றியம் பொறிந்துபோனதன் முக்கியத்துவம் பற்றிய முரண்பாடான விளக்கங்கள் வடிவப்படுத்தியதன் பின்னரில் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்டன. அவற்றுள் எது காலத்தின் சோதனையில் நின்றுபிடித்திருக்கிறது? புக்குயாமாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் கலைந்து போனதன் பின்னரான காலத்தில், வரலாறானது வலுவிழந்துபோகும் அடையாளத்தைக் காட்டவில்லை. அவரது முக்கியமான வாதங்களுள் ஒன்று “வரலாற்றின் முடிவு” யுத்தங்கள் அடிக்கடி நிகழுந்தன்மையில் ஒரு வீழ்ச்சியால் பண்பிடப்படும். ஹியூம், காண்ட், மற்றும் சும்பெட்டர் பற்றி படித்த குறிப்புக்களுடன், தாராளவாத ஜனநாயகம் அமைதியானது என்று வாதிடுகிறார். “பின்னர் வரும் வாதத்தில்” அவர் வருவதுரைப்பதாவது, “தாராளவாத ஜனநாயகமானது வலுச்சண்டைக்கு போவதற்கும் வன்முறைக்குப் போவதற்குமான மனிதனின் இயற்கையான உட்தூண்டல்களைக் கட்டுப்படுத்தும் என்று அந்த அளவுக்கு இல்லை, மாறாக உட்தூண்டல்கள் தம்மை அடிப்படை ரீதியாகவே உருமாற்றியிருக்கிறது மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான நோக்கத்தை அகற்றிவிட்டது.” [16]

திருவாளர். புக்குயாமா கோளாறான படிகக்கல்லால் ஆன பந்தை உற்று நோக்குகிறார். சோவியத் உலகுக்குப் பிந்தைய உலக அமைதியை Rand அமைப்பின் கல்விமான் புக்குயாமா கற்பனைசெய்தவாறு, அமெரிக்காவானது உலகின் மேலாதிக்க சக்தியான அதன் நிலைக்கு ஒரு புதிய போட்டியாளர் தோன்றுவதை அனுமதிக்காது என்று அது பறைசாற்றுகிறது. இந்த புதிய மூலோபாய கொள்கை வழிக்கு அமெரிக்க புவிசார் அரசியலின் ஒரு அத்தியாவசிய கருவியாக யுத்தத்தை உண்மையில் ஸ்தாபனமயப்படுத்தல் தேவைப்படுகிறது. அதன்படி, 1990கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரே வெடிப்பைக் கண்டது. இந்த தசாப்தம் ஈராக்கிற்குள் முதலில் நுழைவதில் தொடங்கி சேர்பியாவிற்கு எதிராக கொடூரமாக குண்டுகளை வீசுவதுடன் முடிந்தது.

அதன் தெளிவற்ற மூலகாரணம் மற்றும் நிறைவேற்றல் ஒருபோதும் போதுமான அளவுக்கு விளக்கப்படாத, 9/11 துயரமானது, ஒருபோதும் முடிவுறாத மற்றும் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்படும் “பயங்கரத்தின் மீதான யுத்தத்தை” அறிவிப்பதற்கு புஷ் நிர்வாகத்தால் பற்றிக்கொள்ளப்பட்டது. ஒபாமாவின் கீழ், “பயங்கரவாதிகளுக்கான” வெறிபிடித்த வேட்டையானது, முழுக்கோளத்தையும் வான்வெளியையும் கூட அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியமான அரங்காக மாற்றி இருக்கின்ற, கட்டுப்படுத்தப்படாத புவிசார் அரசியலின் வேட்கையுடன் ஒன்றிணைந்துள்ளது. சோவியத்திற்குப் பிந்தைய ஏகாதிபத்திய இராணுவவாத வெடிப்பால் உருவாக்கப்பட்ட குழப்பங்களின் கொடூரமான மனித விலையானது, இன்றைய உலகில் (ஜூலை 2014) அகதிகளின் எண்ணிக்கை ஐம்பது மில்லியன்களை தாண்டிவிட்டது என்ற உண்மையால் சுட்டிக்காட்டப்படுகிறது. இது இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதின் பின்னரான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். [17] மத்திய ஆசியா ஊடாக வாஷிங்டனின் கொலைசெய்யப்படும் அட்டூழியங்களின் பிரதான இலக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை மொத்த அகதிகளின் எண்ணிக்கையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோரைக் கொண்டுள்ளது.

புக்குயாமா தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியை அறிவித்த பின்னர் இருந்து, அது எங்கேயும், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்பது மேலும் மேலும் வெளிப்படையாகி இருக்கிறது. அமெரிக்க அரசானது என்றும் அதிகமான ஈவிரக்கமற்ற ஒரு கட்டுக்கடங்காத கடற்பூதத்தின் தன்மையை எடுக்கிறது. உரிமைகள் மசோதா ஒரு வெற்றுருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கமானது அதன் குடிமக்களின் மீது ஆதிக்கத்தை வலியுறுத்துகிறது, அவர்களை உளவுபார்ப்பது மற்றும் அவர்களது வாழ்வின் மிகத்தனிப்பட்ட அம்சங்கள் பற்றிய தகவலைத்திரட்டுவது மட்டுமல்லாமல், சட்ட அணுகுமுறை எதுவுமில்லாமல் அவர்களைக் கொல்லவும்கூட மேலாண்மையை உறுதிப்படுத்துகிறது. இது ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்தில் உண்மையில் எண்ணிப்பார்க்க முடியாததாக இருந்திருக்கிறது. எரிக் ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதைப் பொறுத்தவரை அதன் அறிவுஜீவித உள்ளடக்கத்தின் வாழ்வு அதன் ஆசிரியர் கற்பனை செய்து பார்த்திருக்கக்கூடிய சாத்தியத்தை விடவும் குறுகியது என நிரூபிக்கப்பட்டுவிட்டது. புதிய இருபத்தோராம் நூற்றாண்டானது தொடங்குவதற்கு முன்னரே அது 1900களின் வரலாற்றுப் பிரச்சினைகளால் முன்னரே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையாகியுள்ளது. அதிகமான தொலைதூர கடந்த காலத்திற்குள் செல்வதிலிருந்து விலகி, இருபதாம் நூற்றாண்டானது பெரும் கடன்களை கொண்ட பண்பைப் பெற்றிருக்கிறது, இதனை எப்படித் தீர்ப்பது என்பது ஒருவருக்கும் தெரியாது.

* * * * * *

இந்த செலுத்தப்படாத கடன், தற்போதைய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப வரலாற்றை திருத்தலுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் வடிவத்தில் வட்டியை வலிந்து கேட்கின்றது. வரலாற்றை கையாளுதல் அல்லது, அவற்றின் சரியான பெயரில் அழைப்பதெனில், “போலி வரலாறு” ஆளும் செல்வந்தத்தட்டுக்களின் நிதி மற்றும் அரசியல் நலன்களுக்கு என்றுமிராத அளவு முழுமுட்டாள்த்தனமான வகையில் கீழ்ப்பட்டுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்கும் பிரச்சாரத்துக்கும் இடையிலான வேறுபாடு திட்டமிட்டமுறையில் தடமில்லாமல் அழிக்கப்பட்டுள்ளது.

வரலாறு, பிரச்சாரமாக தரந்தாழ்த்தப்பட்டதன் விளைபொருள் இருபதாம் நூற்றாண்டு தொடர்பான இன்னொரு அணுகுமுறையை உருவாக்குவதாகியுள்ளது. “வரலாற்றின் முடிவு” மற்றும் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” “புனைந்துருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டுக்கு” வழிவகுத்துக்கொண்டிருக்கிறது. இந்த பள்ளியின் படைப்பானது வரலாற்று பதிவுகளை நசுக்குதல், திரித்தல் மற்றும் முற்றுமுழுதாக பொய்மைப்படுத்துதல் ஆகும். இந்த செயற்திட்டத்தின் இலக்கு இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மிகமோசமான குற்றங்களை மூடிமறைத்தலும் சட்டரீதியானதாக காட்டுவதும், அதற்கு நேர்மாறாக, சர்வதேச சோசலிச இயக்கத்தின் முழுப்போராட்டத்தையும் குற்றமாய் மற்றும் தார்மீக ரீதியில் முறைமையற்றதாயும் காட்டுவதாகும்.

வலதுசாரி வரலாற்று திருத்தல்வாதத்தின் இந்த நடைமுறைப்படுத்தலில், 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சியானது இருபதாம் நூற்றாண்டின் பிரதான குற்றமாகவும், இருபதாம் நூற்றாண்டின் குறிப்பாக ஹிட்லரின் நாஜி ஆட்சி மற்றும் இனஅழிப்பு உள்ளடங்கலான அடுத்தடுத்த பயங்கரங்கள் எல்லாம் தவிர்க்கவியலாதததாகவும் மற்றும் சட்டபூர்வமானதாகவும் அப்புரட்சியிலிருந்து தொடர்ந்து வந்ததாக காட்டப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு முன்னர், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய அத்தகைய ஒரு பூதாகர உருத்திரிப்புக்கள், குறிப்பாக ஜேர்மனியில், அறிவார்ந்த வகையில் சட்டபூர்வமற்றதாகவும் இழிவுக்குத் தகுதியானதாகவும் கருதப்பட்டிருக்கக்கூடும்.

1980களின் நடுப்பகுதி மற்றும் 1990களின் ஆரம்பத்தில், ஜேர்மனி ஆனது ஒரு புகழ்பெற்ற Historikerstreit —“வரலாற்றாளர்களின் மோதல்” காட்சி ஆக இருந்தது. இது வரலாற்றாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட ஆல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையால் தூண்டிவிடப்பட்டது. நாஜி ஆட்சியின் குற்றங்கள், அக்டோபர் புரட்சி, 1918-21 ரஷ்ய உள்நாட்டுப் போர் மற்றும் சோவியத் போல்ஷிவிசத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு புரிந்து கொள்ளக்கூடிய பதிலிறுப்பாக பார்க்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார். மூன்றாம் குடியரசு பற்றிய அனுதாபத்துடன்கூடிய மறுமதிப்பீட்டிற்கான அழைப்பில், “ரஷ்யப்புரட்சியின் பொழுது இடம்பெற்ற பூண்டோடு அழித்த நடவடிக்கைகளுக்கு அச்சம்கொண்ட பதில் நடவடிக்கையாக” நாஜி நடவடிக்கைகள் இருந்தன என்று நோல்ட்ட எழுதினார். நோல்ட்ட தொடர்ந்தார்: “மூன்றாம் குடியரசை அரக்கத்தனமாக சித்திரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மூன்றாம் குடியரசு எல்லா மனிதசமூகத்தையும் மறுக்கும்பொழுது நாம் அரக்கத்தனம் பற்றிப் பேசலாம், மனிதசமூகம் என்ற அந்த வார்த்தை எல்லாம் மனிதத்தன்மை என்பது முடிவானது என்று எளிதாக அர்த்தப்படுத்துவதுடன், மற்றும் இதன்படி ஒன்றில் அனைவரும் நல்லவர்கள் இல்லை அல்லது அனைவரும் கெட்டவர்களும் இல்லை, அனைவரும் வெளிறிய தோல்நிறத்தை கொண்டவர்களும் இல்லை அனைவரும் கறுத்த தோலை கொண்டவர்களும் இல்லை”. [18]

நோல்ட்டவின் எழுத்துக்கள், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், ஹிட்லரையும் மூன்றாம் குடியரசையும் பாதுகாக்க குவிக்கப்பட்ட ஜேர்மன் உயர்கல்வியியல் அமைப்பின் ஒரு உறுப்பினரால் எடுக்கப்பட்ட மிகவும் வெளிப்படையான முயற்சியைக் குறிக்கிறது. 1939ல் சியோனிச உலக காங்கிரசின் தலைவரான சைய்ம் வைய்ஸ்மான், யூதர்கள் பிரிட்டனுடன் சேர்ந்து ஜேர்மனிக்கு எதிராகப் போராட வேண்டும் [19] என்று அறிவித்தார் என்பதன் அடிப்படையில் ஐரோப்பிய யூதர்கள் கொடூரமாக நடத்தப்பட்டதை நோல்ட்ட நியாயப்படுத்தவும் கூட செய்தார். 1992ல் எழுதப்பட்ட மார்ட்டின் ஹெய்டெகரின் மிகவும் பெரிதளவிலான மனப்பாங்கு கொண்ட சுயசரிதையில்,  அம்மெய்யியலாரின் யூத எதிர்ப்பு மற்றும் நாஜிசத்தை அவர் அரவணைத்துக் கொண்டதை நோல்ட்ட சரிஎன்கிறார். “கம்யூனிசத்துடன் ஒப்பிடும்பொழுது தேசிய சோசலிசத்தின் ஜேர்மன் புரட்சியானது, அதன் இலக்குகளில்... சொற்ப அளவானதாயினும் கூட, ஜேர்மனின் கௌரவத்தை மீட்டல் மற்றும் உரிமைகளின் சமத்துவத்தை நிலைநாட்டல் — இவற்றில் தன்னடக்கமானது — மற்றும் அதன் வழிமுறைகளில் மிதவாதப்போக்கு உடையது.” [20]

நோல்ட்டவின் எழுத்துக்கள் ஜேர்மன் மற்றும் அமெரிக்க கல்வித்துறை சார்ந்த சமூகத்தில் கொள்கைசார்ந்த எதிர்ப்பைக் கண்டது. நாஜிசத்தின் சார்பில் வரலாற்று ரீதியாக வருத்தம் தெரிவிப்பதில் ஈடுபட்டுள்ளவராக அவர் குற்றம் சாட்டப்பட்டார் மற்றும் ஒரு அறிஞர் என்ற வகையில் அவரது புகழ் சிதறுண்டுபோனது. ஆயினும், இன்று, நோல்ட்டவின் நட்சத்திரம் உதயமாகி இருக்கிறது. இப்பொழுது அவருக்கு தொன்னூறு வயதாகிறது. இறுதியில் அவரது காலம் வந்துவிட்டது என்று ஒரு தீர்க்கதரிசியாக அவர் புகழப்படுகிறார். ஜேர்மனியில் மிகவும் பரந்த அளவில் விநியோகமாகும் செய்தி இதழான Der Spiegel பிப்ரவரி 14, 2014 இதழில், வெளியான முகப்புக் கட்டுரையில் நோல்ட்டவின் கருத்துக்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக அது கூறியது. ஸ்ராலினின் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஹிட்லரின் குற்றங்களின் அளவு குறைந்தே தோன்றுகிறது என்று Der Spiegel வலியுறுத்துகிறது. Der Spiegel இதழால் பேட்டி எடுக்கப்பட்ட வரலாற்றாளர்களுள், பேர்லினுள் உள்ள கௌரவமிக்க ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகள் துறையின் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி (Jφrg Baberowski) யும் ஒருவர். நோல்ட்டேயின் கருத்துகளுடன் எப்போதும் ஒத்துப்போகும்  பாபெரோவ்ஸ்கி, பின்வருமாறு அறிவிக்கிறார்: “ஹிட்லர் மற்றவர்க்கு ஊறுவிளைவிக்கும் மனநிலைதிரிந்தவர் அல்ல, மற்றும் அவர் இரக்கமற்றவரும் அல்ல. அவர் யூதர்களை பூண்டோடு அழிப்பதைப்பற்றி தன்னுடைய மேசையில் யாரும் பேசுவதை விரும்பாதவர்.” [21]  மூன்றாவது குடியரசின் குற்றங்களின் வித்தியாசமான தன்மையையும் அதன் அளவினையும்  குறைத்துக்காட்டும் நோல்ட்டவின் முயற்சிகளை நியாயப்படுத்தி, “வரலாற்று ரீதியாக பேசினால் அவர் சரிதான்” [22] என்று பாபெரோவ்ஸ்கி கூறுகிறார்.

எது தொடர்பாக நோல்ட்ட சரியாக இருந்தார்? Der Spiegel ஆல் பேட்டி எடுக்கப்பட்ட நோல்ட்ட, பிரிட்டன் மற்றும் போலந்தின் விட்டுக்கொடுக்காத தன்மையால் ஹிட்லர் போருக்குச்செல்லும்படி தள்ளப்பட்டார் என்று கூறுகிறார். நோல்ட்ட, “யூதர்களுக்கு அவர்களின் ‘சொந்த குலாக்கின் பங்கை’, காரணங்கூறுவதை வலியுறுத்துகிறார். “ஏனென்றால் சில போல்ஷிவிக்குகள் யூதர்களாக இருந்தனர். இந்த தர்க்கத்தின் படி, யூதர்கள் குறைந்தபட்சம் பகுதி அளவேனும் அவுஸ்விட்ச் (Auschwitz) க்கு பொறுப்பாயிருந்தனர். நோல்ட்டவின் வெளிப்படையான கூற்றால் ஏதோஒரு வகையில் வியப்படைந்த Der Spiegel, அவரது நிலைப்பாடு “யூத எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதமாக இருந்துவருகிறது” [23] என்று உறுதிப்படுத்தியது. Der Spiegel இன் விமர்சனம் அந்த மட்டுக்குத்தான் இருந்தது. மேலும் நோல்ட்ட மற்றும் பாபெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் உண்மையில் எந்த பொது எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை. நோல்ட்ட மற்றும் பாபெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் பெரும்பாலும் சவால்செய்யப்படவில்லை என்ற உண்மையானது அறிவுஜீவிதபோக்கு மட்டுமல்ல அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. கடந்த வருடத்தின்பொழுது, ஜேர்மன் இராணுவ வாதத்தை புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் ஆதரவைக் கட்டி எழுப்பும் தீர்மானகரமான அரசியல் பிரச்சாரம் இருந்திருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கால் முன்னெடுக்கப்பட்டு, முன்னணி பத்திரிகைகள், ஜேர்மன் மக்கள் தங்களின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதிவாதத்தை கடந்து ஜேர்மனியானது தனது எல்லைகளுக்கும் அப்பால் இராணுவ நடவடிக்கைகள் தேவைப்படுகின்ற முறைமையான பெரும்வல்லரசின் நலன்களைக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கவேண்டும் என்று கோரின.

குறிப்பிடத்தக்கவகையில், “உரிய இடத்தை” ஜேர்மனி மீண்டும் பெறுவதற்கான அழைப்புக்களின் புத்துயிர்ப்பானது முன்னரே நிலைநாட்டப்பட்ட வரலாற்று ஒருமித்த கருத்தை —வரலாற்றாளர்  பிரிட்ஸ் பிஷ்ஷரின் தகர்த்தெரிகின்ற மற்றும் மிக்க புரிதிறன் உள்ள ஆய்வான முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் குறிக்கோள்கள் (Griff nach der Weltmacht) வெளியிடப்பட்ட 1961 காலப்பகுதிக்கு திரும்பிச்சென்றால் – 1914ல் உலக யுத்தம் வெடித்ததற்கு பிரதான பொறுப்பு இரண்டாம் கெய்சர் வில்ஹெல்ம்மின் முடியாட்சி என்ற கருத்தை செல்வாக்கிழக்கச்செய்யும் முயற்சிகளுடன் இணைந்துகொள்கிறது. 1999ல் இறந்த பிஷ்ஷர், ஒரு அறிஞர் என்ற வகையில் அவரது மறைவிற்குப் பின் தரப்படுகின்ற புகழை அழிக்கும் நோக்கம்கொண்ட தொடர்ந்த தாக்குதல்களின் இலக்காக இப்பொழுது ஆகி இருக்கிறார்.

உக்ரேனில் நிலவிக்கொண்டிருக்கும் நெருக்கடி, நிகழ்கால புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு வரலாற்றை கீழ்ப்படுத்துவதன் ஒரு எடுத்துக்காட்டாகும். பாசிச அமைப்புக்கள் பிரதான பங்காற்றிய பிப்ரவரி 2014 வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஒரு ஜனநாயகப் புரட்சி என்று சந்தைப்படுத்தப்படுவது வரலாற்றுச்சான்றை படுமோசமான பொய்ம்மைப்படுத்தலால் எளிதாக்கப்படுகிறது. இந்த நிகழ்வானது இந்த தொகுதியில் உள்ள கடைசிக்கு முந்தைய கட்டுரையின் கருப்பொருளாகும்.

* * * * * *

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பொய்ம்மைப்படுத்தல்கள் மற்றும் திரித்தல்கள் இவற்றுக்கெதிராக வரலாற்று உண்மையை பாதுகாப்பதற்கு கடந்த இருபது ஆண்டுகளாக  அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட சான்றின் ஒரு பகுதியை இந்த தொகுதி கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்காகத்தான் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நன்கு தயாரிக்கப்பட்டது. 1923ல் இடது எதிர்ப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இருந்து, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பொய்களுக்கு எதிராக அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தையும் வரலாற்று சான்றையும் பேணும்படி நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கு எதிரான அதிகாரத்துவ பிற்போக்கானது, ட்ரொட்ஸ்கியை லெனினது கடும் எதிரியாய் சித்தரிக்கும் நோக்கத்துடன் ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளே எழுந்த 1917க்கு முந்தைய கன்னைப் போராட்டங்களை திரித்தலுடன் 1920களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தது. பின்னர், ட்ரொட்ஸ்கியின் அரசியல் நிலைப்பாடு அவரை ரஷ்ய விவசாயிகளின் கொடூரமான எதிரியாகக் காட்டுவதற்கு தவறாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. 1927ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டதன் பின்னர் மற்றும் 1929ல் சோவியத் ஒன்றியத்திலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் சோவியத் வரலாற்றில் ஒவ்வொரு நிகழ்வும் ஸ்ராலினிச ஆட்சியின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப பொய்மைப்படுத்தப்பட்டது. சேர்ஜி ஐஸன்ஸ்டைன் கூட தனது சிறந்த படைப்பான 1927ல் எழுதப்பட்ட உலகைக் குலுக்கிய பத்து நாட்களில், ட்ரொட்ஸ்கியின் உருவம் எதுவும் இல்லாத அளவுக்கு மீள்வெட்டு செய்ய வேண்டி இருந்தது. உண்மையில் அந்த மனிதர்தான் பெட்ரோகிராட்டில் 1917 அக்டோபர் எழுச்சியை ஒழுங்கு செய்தவரும் அதற்குத் தலைமை தாங்கியவருமாவார்.

ட்ரொட்ஸ்கியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும், அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை மறுப்பதற்குமாக 1920களின் பொய்களும் மற்றும் பொய்மைப்படுத்தல்களும் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச்சென்ற, கம்யூனிஸ்ட் அகிலத்தை அமைத்த மற்றும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய மார்க்சிஸ்டுகளின் தலைமுறையை பெரிய அளவில் களையெடுப்பு செய்வதற்கு, போலியான சட்டரீதியான மூடுதிரையாக நடத்தப்பட்ட போலி மாஸ்கோ விசாரணைகளுக்குள் 1930இல் பெருகிப் பரவின. ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, வரலாறு பற்றிய பொய்கள் அரசியல் பிற்போக்கினை கருத்தியலால் உறுதியாக்கும் ஒரு முக்கிய பங்காக சேவைசெய்தன. நீதிமன்ற போலி வழக்குகளாயினும் அரசு மற்றும் செய்தி ஊடக பிரச்சாரமாயினும், கொள்கையற்ற குட்டிமுதலாளித்துவ கல்வியாளர்களால் வரலாற்றுச் சான்றுகள் திரிக்கப்படலோ ஆயினும் அவற்றின் நோக்கம், ஆளும் செல்வந்த தட்டுக்களின் குற்றங்களை நியாயப்படுத்துவதும், மக்கள் கருத்தை தடம் விலகச்செய்வது, முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சக்தி மிக்க மற்றும் புரட்சிகர போராட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படும் அறிவு மற்றும் தகவல்களைக் கிடைக்கவிடாமல் செய்வதுமாகும். இவ்வாறு வரலாற்று பொய்ம்மைப்படுத்தல்களுக்கு எதிரான போராட்டமானது, அரசியல் வேலையின் விருப்பத்தேர்வோ அல்லது இரண்டாந்தரமானதோ இல்லை. சிறப்பாக அக்டோபர் புரட்சி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தின் அனுபவங்கள் இவற்றை இணைக்கும் வரலாற்று உண்மையை பேணுவது என்பது தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவின் மறுமலர்ச்சிக்கு அவசியமானதாகும்.

சோவியத் ஒன்றியத்தின் இறுதிக் காலங்களில் ரஷ்யப் புரட்சியின் வரலாறு பற்றி நாடு முழுவதும் பொதுவான அக்கறையின் ஒரு எழுச்சி இருந்தது. ஒடுக்குமுறையின் பல பத்தாண்டுகாலத்திற்கு பின்னர், ட்ரொட்ஸ்கி பற்றிய கட்டுரைகளும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும் பரவலாக காணக் கிடைக்கலாயின. இந்த அபிவிருத்தியானது சோவியத் தலைமைக்குள்ளே ஒரு கவலையை எழுப்பியது. சந்தைப் பொருளாதாரத்திற்கு திரும்புவதுதான் ஒரே முன்னேறும் வழி என்று பொது மக்களை நம்பவைக்க விழைந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தொடர்ந்த முதலாளித்துவ சார்பு நோக்குநிலைக்கு மாறாக, ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டமும் அதிகாரத்துவ ஆட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீடு சாத்தியமாக இருந்தது எனபதைத் தெளிவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை எடுத்துச்செல்வதில் கிரெம்ளினின் முக்கிய நோக்கங்களின் மத்தியில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே ஒரு சோசலிச முன்னோக்கு புத்துயிர்ப்பு பெறுவதை முன்கூட்டியே முறியடிப்பதாக இருந்தது. இவ்வாறு, கலைப்பானது வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தலுடன் சேர்ந்து, சோவியத் ஒன்றியமானது ஆரம்பத்தில் இருந்தே எதிர்காலம் இல்லா நிறுவனமாக இருந்தது என்ற கூற்றை மையப்படுத்தி இருந்தது. இந்த புதிய “சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்ம்மைப்படுத்தல் பள்ளி”யின் தோற்றம், புக்குயாமா, மாலியா மற்றும் ஹோப்ஸ்வாம் எழுத்துக்களைப் போல அதே வளைவரைகோட்டில் நகருகிறது. இவ்வனைத்துப் படைப்புக்களும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அக்டோபர் புரட்சியிலிருந்தே தவிர்க்கமுடியாத தொடர்ச்சி என்றும் மற்றும் வேறு எந்த விளைவுகளுமே சாத்தியமில்லை என்ற அடிப்படை செய்தியை நம்பவைப்பதாகும். ஸ்ராலினிசம் என்பது, அக்டோபர் புரட்சியின் நெறிபிறழ்ந்த ஒன்று அல்ல மாறாக அதன் அவசியமான விளைபயன் என்பதாகும். அங்கு மாற்றீடு எதுவும் இருக்கவில்லை.

“முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்ற கருத்துருவின் அபிவிருத்தியில், இந்தப் புத்தகத்தில் உள்ள உரைகளும், கட்டுரைகளும், அங்கு ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்று இருந்தது என்று வரலாற்றுச்சான்று முடிவாய் மெய்ப்பித்திருந்தது என்பதை வலியுறுத்தியுள்ளது. எதிர்நிகழ்வுகள் வரலாற்றில் ஸ்ராலினிசத்திற்கு  மாற்றீடுகள் இருந்தன என்ற எந்த கருதிப்பார்த்தல்களும் அர்த்தமற்ற மற்றும் முறைமை அற்ற செயற்பாடு என்ற ஹோப்ஸ்வாமின் கூற்றை நான் சவால்செய்திருக்கிறேன். “வரலாறு என்ன நிகழ்ந்தது என்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டாக வேண்டும்” என அவர் எழுதினார், “ஏனையவை ஊகம் தான்.” [24]

இந்த குறிப்பட்ட பகுதியில் கவனம் செலுத்துமாறு நான் அழைக்கிறேன், ஏனெனில் இது, சோவியத் ஒன்றியம் பற்றிய பரந்த அளவினதான மற்றும் நயவஞ்சகத்தனமான அணுகுமுறைக்கு முன்மாதிரியாக இருக்கின்றது. ஹோப்ஸ்வாம் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பொய்மைப்படுத்தலில் தங்கியிருக்கவில்லை. ஹோப்ஸ்வாமின் வரலாற்று உண்மைகளுக்கு எதிரான பாவங்கள், முக்கியமான உண்மைகளை மறைப்பதிலும் மற்றும் முழுமையற்ற குறிப்புக்களையும் முன்வைப்பதிலும் இருக்கின்றது. ஹோப்ஸ்வாமின் தவிர்த்தல்கள் வரலாற்றை திரிபுபடுத்துதலுக்கு பங்களிக்கின்றன.

பெரும்பாலான உரைகள் மற்றும் கட்டுரைகளில், துரதிரஷ்டவசமாக தவிர்த்தல்களுடன் மட்டுமல்லாமல் வரலாற்று உண்மைகளை அப்பட்டமாக திரித்தல்களுடனும் கவனிக்கும்படி நான் நிர்பந்திக்கப்பட்டேன். என்னால் உதவமுடியாத நேரங்களும் இருந்தன, ஆனால் தங்களைத்தாங்களே வரலாற்றாளர்கள் என்று அழைத்துக்கொள்ளும், உண்மை அற்றது என விளக்கப்படக்கூடிய தாள் அறிக்கைகளை வைக்கக்கூடிய, மற்றும் இதன் மூலம் தங்களின் அறிவார்ந்த நேர்மையற்றதன்மை பற்றிய ஆதாரத்தை வருங்கால சந்த்திகளுக்கு விட்டுச்செல்லும் சில தனிநபர்கள் பற்றி ஆச்சரியப்பட்டேன்.

பொய்ம்மைப்படுத்தல் நடைமுறையானது பின்நவீனத்துவத்தின் பல்வேறு பள்ளிகளின் செல்வாக்கால் சாதகமாக இருந்தது. வரலாற்றை எழுதுவதன் மீதும் ஆய்வு செய்வதன் மீதும் அதன் திரண்டு வளரும் பாதிப்பு என்பது அழிவுகரமானதை தவிர ஒன்றுமில்லை. மெய்யியலில் இந்த பின்னடைவிற்கும் வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தலுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு மிகைபடக் கூறமுடியாதது. பேராசிரியர் பாபெரோவ்ஸ்கியின் எழுத்துக்களை மீண்டும் குறிப்பிடுவோம். இவர் பேராசிரியர் மிஷேல் ஃபூக்கோவின் மாணவராவார். அவர் தனது வரலாற்றின் பொருள் [Der Sinn der Geschichte] என்றதில் தனது படைப்பை வழிநடத்திய வழிமுறையியல் பற்றி விவரிப்பதாவது:

யதார்த்தத்தில் வரலாற்றாளர் கடந்தகாலத்தோடு ஒன்றும் செய்வதற்கில்லை, மாறாக அதன்பொருள்விளக்கத்தோடுதான் அவரின் பணியுள்ளது. தாம் அழைக்கும் யதார்த்தம் என்பதை கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வார்த்தைகளில் இருந்து தனிமைப்படுத்த முடியாது. அது உருவாக்கும் நனவிலிருந்து பிரிந்து அங்கு யதார்த்தம் என்பது இல்லை. ஆவணங்களின் வழியாக எம்மை வந்தடையும் நிகழ்வுகளை மீளுருவமைத்துக்கொள்வதன் மூலம் ரஷ்யப் புரட்சி உண்மையில் என்னவாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்துருவிலிருந்து நாம் நம்மைக் கட்டாயம் விடுவித்துக்கொள்ள வேண்டும். அதன் பிரதிநிதித்துவம் இல்லாமல் அங்கு யதார்த்தம் என்பது இல்லை. வரலாற்றாளராக இருத்தல் என்பதன் அர்த்தம், ரோஜே சார்த்தியேரின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதெனில், பிரதிநிதித்துவங்களின் அரங்கை ஆய்வு செய்வதாகும். [25]  [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]

பாபெரோவ்ஸ்கி கருத்துவாத ஆன்மீக நித்தியவாதத்தின் [solipsism] மிக அதிதீவிர அளவை தூண்டுகிறார் —சிந்தனையிலிருந்த பிரிந்து அதற்கு அப்பால் வெளியே யதார்த்தம் அங்கு இல்லை என்பது— இது புறநிலை ரீதியாக நிலவிய கடந்தகாலத்தின் உண்மையான மீள்கட்டமைப்பாக வரலாற்றுத் தொகுப்பை மறுப்பதை முறைமைப்படுத்துவதற்கு ஆகும். வரலாறு அகநிலைக் கட்டமைப்பாக மட்டுமே நிலவுகிறது என்று அவர் நமக்கு கூறுகிறார். அவை ஒருமுறை உண்மையில் நிலவியது என்றவகையில் சமூக, பொரளாதார மற்றும் அரசியல் நிலைமைகளைத் துல்லியமாகத் தீட்டும் புறநிலை ரீதியான வரலாற்று உண்மை அங்கு இல்லை. அந்தவகையான வரலாற்று யதார்த்தம் என்பதில் பாபெரோவ்ஸ்கிக்கு அக்கறை எதுவும் இல்லை. பாபெரோவ்ஸ்கி அறிவிக்கிறார்: “வரலாற்றாளனால் நிர்மாணிக்கப்படும் வளாகத்திற்குள் வரலாறு சேவை செய்யுமானால் அது உண்மையாக இருக்கிறது.” [26] இந்த வரலாற்றின் அடித்தளத்தை அகற்றும் வேலையான மோசடியான விளக்கங்களை எழுதுவது, உதாரணமாக ஹிட்லரின் குற்றகரமான ஆட்சியை புனருத்தாரணம் செய்வது போன்ற அகநிலைரீதியாக சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு சேவைசெய்யும். ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட போன்ற சக்திகளுடன் பேராசிரியர் பாபெரோவ்ஸ்கி சேர்ந்தது தற்செயலானது ஒன்றும் அல்ல.

எதிர்கால தலைமுறையானது, “முதலாளித்துவ சிந்தனையின் அடித்தளத்தில்” [27] இருந்து தேடுகையில் குலைந்துபோன கருத்துருக்களுடன் வேலைசெய்யும்  ஜோன் பிரான்சுவா லியோதார்ட்ரிச்சார்ட் ரோர்ட்டி மற்றும் ஃபூக்கோ போன்ற மெய்யியல்வாத பிற்போக்காளர்கள், இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலும் இருபத்தோராவது நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலும் அத்தகைய சரியான காரணமற்ற மற்றும் ஆபத்தான செல்வாக்கைத் திணிக்க எப்படி வந்தனர் என்பதை புரிந்துகொள்வதற்கு போராடும். மெய்யியல்வாத பிரச்சினைகளுடன் அலசும் இந்த தொகுதியில் உள்ள உரைகளும் கட்டுரைகளும், பின்நவீனத்துவ கொள்ளைநோயின் அரசியல் மற்றும் சமூக அவலத்தைப் புரிந்துகொள்வதற்கு எதிர்கால அறிஞர்களுக்கு உதவுமானால் நான் மிகவும் மகிழ்வேன்.

இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்படும் அரசியல் அணுகுமுறை நாம் வாழுகின்ற காலம் மற்றும் கருப்பொருள் இரண்டிற்கும் பொருத்தமுடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன். வரலாறானது ஒரு யுத்தகளமாக ஆகி இருக்கிறது. இறந்துபோன அனைத்து தலைமுறைகளதும் மரபானது வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளைகளின்மீது ஒரு பேயுரு போல வருத்துகிறது” [28] என்று மார்க்ஸ் எழுதினார். புதிய நூற்றாண்டுக்கான பதினைந்து ஆண்டுகளில், அரசியல்வாதிகளும் சரி வரலாற்றாளர்களும் சரி கடைசி ஒன்றின் பேரச்சங்களில் இருந்து தம்மை விடுவித்துகொள்ள முடியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் என்றும் அதிகரித்துவரும் மோதல்களும் நெருக்கடிகளும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மீதான சர்ச்சைகளில் மாட்டிக்கொள்கின்றன. தற்கால அரசியல் போராட்டங்கள் வரலாற்றுப் பிரச்சினைகளை தூண்டுகிறபோது, இந்த பிரச்சினைகள் மேலும் மேலும் அரசியல் சிந்தனைகளால் வெளிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றன. கடந்த காலமானது, இந்நாளைய அரசியல் பிற்போக்கின் நலனில் பொய்மைப்படுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின், மிகப் பளிச்சிடும் பொய்ம்மைப்படுத்தல்களில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது அம்பலப்படுத்துவதன் மூலம், இந்த நூலானது எதிர்காலப் புரட்சிகரப் போராட்டங்களில் ஒரு ஆயுதமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என்பது இதன் ஆசிரியரின் நம்பிக்கை ஆகும்.

* * * * * *

இந்த நூலில் விஷயங்கள் காலவரிசைப்பட்டியலின் படி, சில விலக்குகளுடன் மட்டும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது இரு பத்தாண்டுகாலம் மீதான வரலாற்று பிரச்சினைகள் மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பரிணாமத்தை பின்பற்றுவதற்கு வாசகரை அனுமதிக்கும். இயல்பான தொகுக்கும் முறையின் ஒரு பகுதியாக, அவர்கள் கேட்ட அரங்கிலிருந்து இடம்பெற்ற உரைகளின் அடிக்கடி மிகைப்படும் பகுதிகளை அவர்கள் வாசிக்கும் அச்சிட்ட பக்கத்திற்கு எளிதாக்குவதற்கு தேவைப்படும் அழகியல் மாற்றங்களை நான் செய்திருக்கிறேன்.

இந்த உரைகளும் கட்டுரைகளும் சர்வதேச ரீதியாகவும் அமெரிக்காவிற்குள்ளும் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உள்ள சகசிந்தனையாளர்களுடனும் தோழர்களுடனும் நான் பெற்ற ஆழ்ந்த ஒத்துழைப்பின் விளைவுகளைப் பிரதிபலிக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் [Partei fόr Soziale Gleichheit]  தேசிய செயலாளரான உல்ரிச் ரிப்பேர்ட்டுடன், நாற்பதாண்டுகள் நெருங்கிய கால அளவு ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் துன்பகரமான மற்றும் சித்திரவதைசெய்யப்பட்ட வரலாறு தொடர்பாக கலந்துரையாடல் மற்றும் வேலைகளை செய்திருக்கிறேன். Frederick S. Choate இடமிருந்து பெற்ற உதவியை நான் பெரிதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். ரஷ்யா மற்றும் சோவியத் பற்றிய அவரது அறிவு, நான் பல்லாண்டுகாலம் பெற்ற ஒரு அறிவுஜீவித வளமாகும். மெஹ்ரிங் நூலகத்தின் ஆசிரியர் குழுவிற்கு, முற்றிலும் வேறு வேறான பகுதிகளில் இருந்து ஒருங்கிசைந்த மற்றும் முறையாக குறிப்புரைக்கப்பட்ட தொகுதியை ஒன்றிணைக்க பொறுப்பேற்றிருந்த Jeannie Cooper மற்றும் Heather Jowsey ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த தொகுதியில் உள்ள உரைகள் மற்றும் கட்டுரைகள் அவை திருத்த வரைவுப் படிகளாக இருந்து இறுதி வடிவத்திற்கு முன்னேறுகையில், அவற்றில் பலவற்றைக் கவனம் எடுத்து மீள்பார்வை செய்ததற்காக ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் லின்டா தெனென்பௌமிற்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன்.

இறுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வேலையின் அபிவிருத்தியில் காலம்கடந்த சோவியத் வரலாற்றாளரும் சமூகவியலாளருமான வாடிம் ரொகோவினால் ஆற்றப்பட்ட பங்கைக் கவனமெடுக்குமாறு நான் அழைத்தாக வேண்டும். 1993 பிப்ரவரியில் கியேவ் நகரில் முதன்முறையாக நாங்கள் சந்தித்தோம். 1923க்கும் 1927க்கும் இடையில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக இடது எதிர்ப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தின், மாற்றீடு இருந்ததா? என்று தலைப்பிடப்பட்ட ஆய்வை அண்மையில் அவர் முடித்திருந்தார். அங்கும் மாஸ்கோவிலும் அவருடன் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக அவர், “சோவியத்திற்கு பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் பள்ளிக்கு எதிராக சர்வதேச எதிர்த்தாக்குதலை” அபிவிருத்தி செய்வதில் அனைத்துலகக் குழுவுடன் வேலை செய்வதற்கு முடிவெடுத்தார். 1994ல் மரணத்தை விளைவிக்கும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இருப்பினும், அனைத்துலகக் குழுவால் உலகமெங்கும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் அவர் உரை ஆற்றினார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம் பற்றிய வாடிமின் ஆய்வானது ஏழு தொகுதிகளாக வளர்ந்தது. 1991க்குப் பின்னர், இன்றைய நாள்வரை சோவியத் ஒன்றியம் பற்றி, அதாவது வரலாற்று இலக்கியத்தின் இந்த அற்புத படைப்புக்கு நடையிலும் கருத்தாழத்திலும் நிகராக இன்னொரு நூல் எழுதப்படவில்லை.

1998, ஜனவரியில் நான் இறுதியாக வாடிமுடன் மேடையை பகிர்ந்து கொண்டேன். சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பள்ளியில் உரையாற்றுவதற்காக அவர் தனது துணைவியார் காலியாவுடன் ஆஸ்திரேலிய சிட்னிக்கு பயணித்தார். அவரது உரையின் முடிவில், வாடிம் அவரது வரலாற்றுப் படைப்பின் இறுதித் தொகுதியை அனைத்துலகக் குழுவிற்கு அர்ப்பணிப்பதாக கூறினார். எட்டு மாதங்கள் கழித்து 1998 செப்டம்பர் 18 அன்று வாடிம் அவரது அறுபத்தோராம் வயதில் மாஸ்கோவில் காலமானார். வரலாற்று உண்மைக்காகப் போராடிய இந்தப் போராளியின் நினைவுக்கு நான் இந்த தொகுதியை அர்ப்பணிக்கிறேன்.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இன்றே மெஹ்ரிங் நூலகத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

Footnotes:

1 The National Interest 19 (Summer 1989), p. 3. [back]

2 Francis Fukuyama, The End of History and the Last Man (New York: The Free Press, 1992), p. 46. [back]

3 Ibid., p. 299. [back]

4 Martin Malia, The Soviet Tragedy (New York: The Free Press, 1994), p. 514. [back]

5 Ibid. [back]

6 Ibid., p. 225. [back]

7 Ibid., p. 520. [back]

8 Eric Hobsbawm, The Age of Extremes (New York: Pantheon Books, 1994), p. 5. [back]

9 Ibid., p. 8. [back]

10 Ibid., p. 585. [back]

11 J.A. Hobson, Imperialism: A Study (Cambridge: Cambridge University Press, 2010), p. 113. [back]

12 Rudolf Hilferding, Finance Capital (London: Routledge & Kegan Paul, 1981), p. 368. [back]

13 V.I. Lenin, Collected Works, Volume 23 (Moscow: Progress Publishers, 1964), pp. 105–106. [back]

14 Leon Trotsky, The War and the International (Colombo: A Young Socialist Publication, June 1971), pp. vii-viii. [back]

15 Rosa Luxemburg, The Junius Pamphlet (Colombo: Young Socialist Pamphlet, undated), p. 17. [back]

16 The End of History and the Last Man, p. 263. [back]

17 Available: http://www.bbc.com/news/world-27921938 [back]

18 “Between Historical Legend and Revisionism? The Third Reich in the Perspective of 1980,” by Ernst Nolte in Forever In the Shadow of Hitler?, James Knowlton, ed., Truett Cates, tr. (Amherst, NY: Humanity Books, 1993), pp. 14–15. [back]

19 Cited by Geoffrey Eley in “Nazism, Politics and the Image of the Past: Thoughts on the West German Historikerstreit 1986–1987,” Past and Present, No. 121, November, 1988, p. 175. [back]

20 Martin Heidegger: Politik und Geschichte im Leben und Denken by Ernst Nolte, cited in a review by Richard Wolin, The American Historical Review Volume 98, No. 4, Oct. 1993, p. 1278. [back]

21 Available: http://www.spiegel.de/international/world/questions-of-culpability-in-wwi-still-divide-german-historians-a-953173.html [back]

22 Ibid. [back]

23 Ibid. [back]

24 Eric Hobsbawm, On History (London: Weidenfeld & Nicolson, 1997), p. 249. [back]

25 Jφrg Baberowski, Der Sinn der Geschichte: Geschichtstheorien von Hegel bis Foucault (Munchen: C.H. Beck, 2005), (translation by D. North), p. 22. [back]

26 Ibid., p. 9. [back]

27 The phrase was coined by G.V. Plekhanov. [back]

28 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 11 (New York: International Publishers, 1979), p. 103. [back]